Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் - 4

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் - 4
தம்பி இவங்க பார்வதி,சமையல் பார்த்துகிறாங்க. காலை,மதியம் சமைச்சிட்டு போவாங்க. நைட் ஒட்டல் தான் நமக்கு. சரி வாங்க தம்பி சாப்பிட.
“தாத்தா “ சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தான் ரவி.
“தாத்தா கடையை திறந்திட்டேன். இப்ப நீங்க கிளம்பலாம். “
தாத்தா யாரு இவரு,
நம்ம மானேஜர் ரவி.
வாசு தம்பி, இவன் ரவி ,படிக்க வசதியில்ல, ஊரு சின்ன கிராமம் ,பாப்பா தான் படிக்க வெக்கது . +1 படிக்கிறான். ஹாஸ்டல தங்கியிருக்கான், சனி,ஞாயிறு வருவான். சரி தம்பீ நான் கடைக்கு கிளம்புறேன்“
“அக்கா என்ன பண்ணற“ ரவி மித்ரா பக்கத்தில் உட்கார்ந்தான்.
வாசு ,நீங்க ரவியோட ரூம்ம ஷேர் பண்ணிக்கோ.
என்னது , பெட்ல ச்சுச்சு போற பசங்க கூட ஷேர் பண்ண மாட்டேன்.
அக்கா நானும் வயசான பீஸ்கூட ஷேர் பண்ண மாட்டேன். மூஞ்ச பாரு எப்படி இருக்கு சொல்லி மூஞ்சீயை திருப்பிக்கொண்டான் ரவீ.
யாரு நான் வயசான பீஸ்ஸா,சொல்லி ரவி தலையில் கொட்டு வைத்தான் வாசு.
அக்கா இவன் என் தலையில் அடிக்கிறான்.
ஏய் வாசு ஏன் சின்னபுள்ளயை அடிக்கிற, நீ வாடா ,தலையை தடவி விட்டாள் மித்ரா.
சின்னபுள்ள , ம்ம் இனிமே உன்ன சின்னா தான் கூப்பிடுவேன்.
“அப்ப நான் உன்ன வாசுனு கூப்பிடுவேன் ஓகேவா. “
ஓகே, நோ ப்ராபளம். வாசுவும், சின்னாவும் ஐபை கொடுத்துக்கொண்டார்கள். நான் ரூமூக்கு போறேன், ரவி மாடி ஏறினான்.
“வாசு பாரும்மாகிட்ட மரியாதையா நடந்துக்கோ, எனக்கு அம்மா மாதிரி , நான் போய் ரெடியாட்டு வரேன்“ ரூமிற்குள் சென்றாள் மித்ரா.

பார்வதியை பார்த்து வாசு,
“என்ன ஓரே லுக்கு, இனிமே நான்தான் பாஸ் உங்க எல்லாருக்கும்“
“அப்ப உள்ளே போறங்களே அவங்க“
“அவங்க இந்த பாஸ்க்கு பாஸ் புரியுதா. “
“புரியுது பாஸ்“.
குட், என்ன ப்ரேக்பாஸ்ட் இன்னிக்கு.
“இட்லி , சட்னி. “
சட்னியா , இந்த சிக்கன், மட்டன் இல்லையா , அதேல்லாம் உனக்கு சமைக்க தெரியாதா பாரு . முறைக்காதே நான் உன்ன ஷார்டா , ஸ்வீட்டா கூப்பிறேன். ம்ம்ம்.
“ஏன்டா வாழுனும் வாழுது உயர்ப்பு இல்லாமல் இந்த மித்ரா பொண்ணு, ருசிச்சு சாப்புடாது . இன்னும் பத்து நாளுல கல்யாணம் சொல்லிகாரு அவங்க சித்தப்பா , என்ன நடக்க போதோ“ சொல்லி பெருமூச்சு விட்டாள் பார்வதி.
அதற்குள் மித்ரா ரூமை திறந்து வெளியே வந்தாள் . இருவரும் அவளை பார்த்தனர். ஸ்கை புளூ குர்தி , ஓயிட் லெங்கிங்ஸ், தலையில் ஓரு கேட்சர் போட்டு மூடியை விரித்து விட்டிருந்தாள். தேவதை மாதிரி இருக்கா பாரும்மா.
“ஆமாம் வாசு“ . திரும்பி என்ன சொன்ன என்றாள் பார்வதி.
“ஓண்ணு சொல்லிலே. “
பாருமா, டிபன் எடுத்து வைங்க , வா வாசு சாப்பிடலாம்.
டைனிங் டேபிள் மேல் தட்டை வைத்து பரிமாறினாள் பார்வதி.
மித்ராம்மா ,நான் ஊட்டிவிடுறேன் ,சொல்லி இட்டலியை சட்னியில் தொட்டு ஊட்ட ஆரம்பித்தாள்.
மித்ரா எனக்கு , சட்னியே பிடிக்கல நாளிலிருந்து நான்- வெஜ் செய்ய சொல்றீயா.

“சட்னியே பிடிக்கல சொல்லிட்டு சட்னியை வைச்சு இட்லியை
தொட்டு சாப்பிடுது.இத்தோடு 8வது இட்லி. “

மித்ரா சிரிக்க .
“வளர பையன பார்த்து கண்ணு வைக்காதே பாரு. “
ஏற்கனவே நீ எக்ஸ்டர லார்ஜ் , மித்ராவுக்கு ஊட்டிக் கொண்டே சொன்னாள் ,அம்மா கீரை சத்ததை கேட்டு ஊட்டிக் கொண்டிருப்பதை விட்டு வெளியே
வந்தாள் பார்வதி.
இங்கே மித்ரா ஆ என வாயை திறக்க வாசு இட்லியை எடுத்து
ஊட்ட ஆரம்பித்தான் .தீடிரென்று ஸ்ஸ் சொல்லி கையை கடிச்சிட்டா மெல்ல மூனங்கினான். சாரி பாரும்மா தெரியாத பல் பட்டுச்சு ,தண்ணீர் குடித்தாள் மித்ரா .
வெளியேருந்து பார்த்துக்கொண்டிருந்தாள் பார்வதி ,நல்ல ஜோடி பொருத்தம் , கடவுள் என்ன நினைக்கிறாறோ?
சாப்பிட்டு கையை கழுவினான் வாசு.

மித்ரா எங்க இருக்கு கார்?
காரா எதுக்கு ?
உன்ன கடைக்கு கூட்டிட்டு போக தான்.
அதுக்கு எதுக்கு கார் ,இந்தா சாவி வெளில இருக்குப்பார் ஸ்கூட்டி அதுல தான் போறோம்.
என்னது ஸ்கூட்டிக்கு ட்ரைவரா?
 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
Last edited:
ஹா ஹா ஹா
ஸ்கூட்டிக்கு டிரைவரா?
இதெல்லாம் ரொம்ப ரொம்ப அநியாயம், மித்ரா டியர்
 
Top