Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் அழகிய தேடல் நான்.....01

Advertisement

niranjana subramani

Well-known member
Member
Hi friends,

வெற்றிகரமா என்னோட ரெண்டாவது கதையை முடிச்சுட்டு மூணாவது கதையை ஆரம்பிச்சுட்டேன். இது வரைக்கும் support பண்ணுன உங்களுக்கும் admin mamக்கும் முதல்ல நன்றி சொல்லிக்குறேன்.

"
உன் அழகிய தேடல் நான்" இந்த கதை ரொம்ப தெரிஞ்ச கதை களம் தான் ரொம்ப பெரிய twist இருக்காது. அப்புறம் சோகம் இருக்காது. காமெடி பேருல எதாவது இருக்கும்ன்னு நினைக்குறேன் .அப்புறம் hero and heroine name சொல்லிடுறேன் .

அழகம்மாள் & ஜெக நந்தன்

மிச்சத்தை கதைல பார்க்கலாம் friends.

எப்பவும் போல உங்க கருத்துக்களை சொல்லிடுங்க அது மட்டும் தான் எழுதக்கூடிய ஆர்வத்தை குடுக்குது friends . அப்புறம் இந்த 2022 ல ஆரம்பிக்குறதையாவது ஒழுங்கா update குடுக்கணும்ன்னு வேண்டிக்கிட்டு கதைக்குள்ள போல வாங்கோ.


உன் அழகிய தேடல் நான்......01


அழகி……01

“ அடியே அழகு லாரிக்காரன் வந்துருக்காண்டி. அப்புறம் அவன் போனதும் லாபோ திபோன்னு கத்துவ ஏன் என்னாண்ட சொல்லலைன்னு” என அந்த தெருவின் மினி ஸ்பீக்கர் முனியம்மாள் கத்த

“ இந்தாக்கா வந்துட்டேன் அதுக்கேன் காத்தால எகிறுற???” என அழகு என அழைக்கப்படும் அழகம்மாள் அவளின் வீட்டில் இருந்து இரண்டு சிறிய பிளாஸ்டிக் குடத்துடன் வெளியே வர

“ பின்ன இன்னா நீ பிடிக்குற இந்த சின்ன குடத்துக்கு ரெண்டுமணிநேர கத்துவ வண்டிக்காரனை. அதான் உன்னைய கூப்பிட்டேன்” என மீண்டும் தன் வெண்கல குரலால் கத்திய முனியம்மாவை கண்டு ஒன்னும் சொல்லாது தண்ணீர் பிடிக்க சென்றுவிட்டாள் அழகம்மாள்.

முனியம்மா நாற்பத்தி ஐந்து வயது பெண். பார்ப்பதற்கு கனத்த சரீரமும் சற்றே சராசரி உயரத்தை விட உயரம் குறைவாக மாநிறத்துடன் விபூதி ஒற்றை பட்டையாக நெற்றியில் எப்போதும் இருக்கும். முனியம்மாவிற்கு திருமணம் ஆகி ஒரே ஆண்டில் வெளி நாட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்த கணவன் நெஞ்சுவலியில் இறந்துவிட,

இங்கு சென்னையில் இட்லி கடை வைத்திருந்தவர் கணவனின் இறப்புக்கு பின் கிடைத்த பணத்தை கொண்டும் கை இருப்பும் கொண்டும் இந்த கம்பம் நகரில் ஒரு குளியலைறை ஒட்டிய ஹால் சமையலறை ஒரு சிறு அறை என ஐந்து காம்பௌண்ட் வீடுகளை கட்டி,

அதில் ஒரு வீட்டில் அவர் குடி இருக்க மற்ற நான்கு வீட்டையும் மாதம் ஐயாயிரத்திற்கு வாடகைக்கு விட்டு காலத்தை தள்ளுகிறார். அவரின் இந்த நான்கு வீட்டில் ஒரு வீட்டில்தான் அழகம்மாள் குடி இருப்பது.

அழகம்மாள் வயது இருபத்தி ஒன்னு நிரம்பிய பெண் இரு வருடங்களுக்கு முன் சென்னையில் இருந்த சேரி பகுதியில் இருந்து புறநகர் பகுதியில் இருந்த இந்த கம்பன் தெருவிற்கு குடிவந்தவள்.
இவளை பற்றியும் இவளின் தோற்றம் பற்றியும் கதையின் போக்கில் அறியலாம்.

அழகம்மாள் வேகமாக தண்ணீரை பிடித்துவிட்டு காலை உணவான கேப்பங்கூழை குடித்துவிட்டு மதியத்திற்கு தயிர் சாதமும் கருவாடையும் எடுத்துக்கொண்டு வான ஊதா நிற டாப்சும் அடர் நீல நிற ஓவர் கோட்டும் பேண்டும் கொண்ட சீருடை சுடிதாரை அணிந்துகொண்டு வேலைக்கு செல்ல வேகமாக முனியம்மாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள்.

அதே நேரம் பக்கத்தில் இருந்த பெண்கள் வாசலில் அமர்ந்து கொண்டு,

“ ஏண்டி வடிவு இந்த கூத்த பார்த்தியா??”

“ என்ன செண்பாக்கா??”

“ இந்த அழகம்மாள் பிள்ளைக்கு என்னன்ட்டுதான் இந்த பெயரை வசங்களோன்னு எனக்கு சந்தேகமா இருக்குடி”

“ ஆமாக்கா ஆளும் மூஞ்சியும் அவ கலரு”

“ அதை சொல்லு தொட்டு போட்டு வகிசுக்கலாம்போல”

“ அட !!!.....கலரை விடுக்கா..... இந்த வயசுலயே கண்ணுக்கிட்ட மூக்குகிட்ட எல்லாம் ஒரே சுருக்கம் பார்த்து ரெண்டு நிமிஷம் பேச முடியாது”

“ ஹ்ம்ம் ஆமா வடிவு இதுல ஆயி அப்பன் இல்லாம தனியா வேற இருக்குது. யாரு இதுக்கு கல்யாணம் பண்ணிவைச்சு என்ன…..” என செண்பா கூறிக்கொண்டிருக்கையில்

“ ஏண்டிகளா உங்க வாயிக்கே கல்யாணம் ஆகி பிள்ளைகுட்டிக ஆகல. அவளுக்கு கல்யாணம் ஆகாதா?. நீங்க ரெண்டு பேரும் பெரிய உலக அழகிக இதுல அடுத்தவள சொல்ல வந்துட்டாள்க .

உனக்கு மூஞ்சில மூக்கே இல்ல. உனக்கு மூக்கு மட்டும்தான் இருக்கு. நீங்க எல்லாம் எதுக்கு அடுத்தவள பத்தி பேசுறீங்க. ஏண்டி என்ன கலருல இருந்தாலும் கண்ணுதான் பார்க்கும் வாய்த்தான் பேசும் காதுதான் கேட்கும் இதுல என்னத்த குறை கண்டுபிடிச்சுட்டீங்க.

உங்களுக்கு ஒன்னு பிடிக்கல நல்ல இல்லனா அதை உங்களுக்கு சரியா ரசிக்க தெரியலைன்னு அர்த்தம்.
போங்கடி போங்க போய் புருசனுக்கு பொங்கி போடுற வேலைய பாருங்க. வந்துட்டாளுங்க காலைல புறணி பேசுறதுக்குன்னு” என முனியம்மா கத்த வேகமாக வீட்டிற்குள் போய்விட்டனர் அந்த பெண்கள்.

அழகம்மாள் கம்பன் தெருவில் இருந்து கால்மணி நேர தூரத்தில் இருக்கும் நந்தன் டெக்ஸ்டைலில் வேலை செய்கிறாள். அவளின் வெளிப்புற அழகுக்கு அந்த கடையின் துணி மூட்டை அடுக்கி வைத்திருக்கும் குடோனில் தான் வேலை.

இரண்டு வருடமாக அதாவது அவளின் பத்தொன்பது வயதில் இருந்து அங்குதான் வேலை. குடோனில் நுழைந்த அழகம்மாள் தான் கொண்டுவந்த சாப்பாட்டு பையை அங்கு அவளின் இடத்தில வைத்துவிட்டு துணிகளை தர
வாரியாக பிரிக்க ஆரம்பித்தாள்.

“ வாம்மா அழகு….” என கூப்பிட்ட்ட supervisor மாணிக்கத்தை கண்டு

“ வணக்கம்ணா……” என கூறிய அழகம்மாளிடம்

“ என்ன இன்னைக்கு லேட்டா வந்துருக்க??”

“ அட இன்னைக்கு செவ்வாய் கிழமைல தண்ணிக்காரன் வந்தான் அதன் அதுல லேட்டா ஆகிடுச்சுன்னே”

“ அது சரி பெரிய சார் நாளைக்கு குடோனுக்கு வராரு எல்லாம் சரியாய் இருக்க என்னனு பார்க்க. அதனால இன்னைக்கு கொஞ்சம் வேலை அதிகம் இருக்கு பார்த்துக்க நாளைக்கும் சாயங்காலம் லேட்டா தான் போற மாதிரி இருக்கும்."

" சரிங்கண்ணா நா போய் மடமடன்னு வேலையை பார்க்குறேன்” என கூறிவிட்டு அழகம்மாள் வேலையை பார்க்க சென்றுவிட்டாள்.

பின் வேலை முடிந்து மதியம் இரண்டரை மணி அளவில் மதிய உணவை சாப்பிட ஆரம்பிக்கும் வேலையில் அழகம்மாளின் பக்கத்தில் ஒரு அறுபது வயதுடைய ஒருவர் அமர்ந்தார். அவரை கண்ட அழகம்மாள்,

“ என்ன ஜேம்ஸ் தாத்தா காலையில இருந்து ஆளை பார்க்க முடியல ஒரே வேலை போல”

“ ஹ்ம்ம் ஆமா அழகு நாளைக்கு பெரிய சார் வராருல அதான் வேலை கொஞ்சம் ஜாஸ்தி” என கூறியவர்

“ ஏன் பிள்ளை நாளைக்கு வர சார்கிட்ட எப்பிடியாவது கெஞ்சி கேட்டு நீ கடைல வேற எதாவது வேலை இருந்தா பாரேன்” என கூற

“ ஏன் தாத்தா நான் இங்க இருக்குறது பிடிக்கலையாக்கும்??”

“ அட இவ ஒருத்தி எதுக்கு சொல்றோம்ன்னு யோசிக்குறது இல்ல. இங்க பாரு இங்க குடோனில் வேலை பாற்குறவங்க எல்லாம் அதிகபட்சம் ஆம்பளைங்க மிச்சம் இருக்குற அஞ்சாறு பொம்பளைங்க எல்லாம் அம்பது அறுவது வயசானவங்க. நீ மட்டும்தான் சின்ன பொண்ணு.

உனக்கு என்ன தலை எழுத்து இங்க வந்து இந்த குடோன்ல கஷ்டப்படணும்னு. மூட்டையை தூக்கி பிரிச்சுன்னு கஷ்டப்படுற. ரெண்டுவருஷமா வேற வேலை தேடிக்கொன்னு சொல்றேன் கேட்க மாட்டேன்கிற. அதான் நாளைக்கு சார்கிட்ட கேளுன்னு சொல்றேன். இங்கையாவது வேற வேலை கிடைக்கும்ல” என ஜேம்ஸ் தாத்தா கூற என்றும் போல் இன்றும் அவரின் அக்கறையில் புன்னைகைத்துக்கொண்டே

“ தாத்தா நான் விரும்பித்தான் இங்க வேலைக்கு சேர்ந்தேன் . வேலை பார்க்கறதுக்கு கஷ்டமா இருந்தாலும் இப்படி எந்த பிரச்சனையும் இல்லாம ரிலாக்ஸாக இந்த வேலை செய்ய புடிச்சுருக்கு. அதோட இந்த முகத்துக்கு கடைல வேலை கிடைக்காது. வேணும்ன்னா குடோனில் பார்ன்னு சொல்லித்தான் சேர்த்தாங்க. இப்போ போய் மாத்த முடியுமா அது தப்பு” என கூறி உண்டுவிட்டு தனது வேலை தொடந்தாள்.

அன்றைய பொழுது கழிந்து எப்பொழுதும் வீட்டிற்கு செல்லும் நேரமான மாலை நான்கு மணியைவிட சற்றே ஒரு மணி நேரம் கடந்து வீட்டிற்கு சென்றாள் அழகம்மாள்.

அவளை கண்ட முனியம்மாள்,

“ இன்னா பிள்ள இன்னைக்கு இம்மூட்டு நேர செண்டு வர??” என கேட்க

“ அதுவாக்கா நாளைக்கு முதலாளி வரராம் அதான் இன்னைக்கு வேலை கொஞ்சம் அதிகம். நாளைக்கும் இந்நேரம் ஆகிடும் வரதுக்கு” என பதில் கூறிக்கொண்டு வீட்டின் கதவை திறந்துகொண்டு சென்ற அழகி கதவை அடைத்துக்கொண்டாள். அதனை கண்ட முனியம்மாள்,

“ அப்படி இன்னாத்த இந்த வீட்டுக்குள்ள வச்சுருக்கோ தெரியலை. எப்போ பார்த்தாலும் பூட்டி பூட்டி வச்சுக்குது”
என புலம்பிக்கொண்டு அவரும் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

வீட்டிற்குள் சென்ற அழகு தண்ணீரை குடித்துவிட்டு தனது சீருடையை மாற்றி, இலகுவான உடைக்கு மாறிவிட்டு தனது போனில் பாடலை ஒலிக்கவிட்டு இரவு உணவு தயார் செய்ய ஆரம்பித்தாள். ஒரு அரைமணி நேரத்தில் ரவை உப்புமாவும் மறுநாள் காலைக்கு சோளகஞ்சியும் வைத்துவிட்டு வீட்டை சுத்தம் செய்தாள்.

அந்த வீடு ஒரு சமையல் அறை ஒரு ஹாலுடன் ஒரு படுக்கை அறையும் கழிப்பறை குளியல் அறை என எல்லாம் உள்ளடக்கியது. ஆனால் ஹாலும் அறையும் பத்துக்கு பத்துக்கு அளவில் கட்டப்பட்டது. வீட்டை சுத்தம் செய்தவுடன் துணியை துவைத்து ஹாலில் கட்டப்பட்டிருந்த கொடியில் காயப்போட்டுவிட்டு சாப்பிட அமர மணி எட்டாகிருந்தது.

பின் உணவை உண்டுவிட்டு எட்டரைபோல படுக்கை அறையில் பாயை விரித்து படுக்கை தயார் செய்துவிட்டு அலமாரியில் இருந்து ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியும் டிஷு paper யும் சிறு மருந்து குப்பியும் பஞ்சையும் எடுத்துக்கொண்டு படுக்கையில் அமர்ந்து சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

கண்ணாடியில் தனது முகத்தை ரெண்டு நிமிடம் பார்த்த அழகி தன் பற்களை நறநறவென கடித்துக்கொண்டு,

“ யோவ் கிழவா!!..... நீ என்ன பண்ணிவச்சியோ தெரியலயா ??.... ஆனா நீ செத்த பிறகு என்னைய நல்ல பண்ணுறாங்கய்யா. எல்லாம் உன்னாலதான் எனக்கு இன்னைக்கு இந்த நிலைமை. இப்போ மட்டும் நீ என் கையிலகிடைச்ச மறுக்க உன்னைய murder பண்ணிடுவேன்” என எப்பொழுதும் போல் திட்டிக்கொண்டே அவளின் நேர் எதிரே சுவற்றில் மாட்டப்பட்டிருந்த ஒரு என்பது வயது மதிக்க தக்க ஒரு பெரியவரின் போட்டோவை பார்த்த அழகு

“ ஹ்ம்ம் உன்னைய திட்டி என்ன செய்ய எல்லாம் என் தலை எழுத்து. எப்படியாவது நான் நினைச்ச மாதிரி நடந்துடுச்சு. அப்புறம் இந்த கஷ்டம் எல்லாம் இல்லாம நான் நிம்மதியா இருப்பேன்” என கூறிக்கொண்டு,

சிறு குப்பியில் இருந்த மருந்தை பஞ்சினால் எடுத்து கண் மற்றும் மூக்கிற்கு பக்கத்தில் இருந்த சிறு சிறு சுருக்கங்களை துடைத்துவிட்டு பின் டிஷு பேப்பரை கொண்டு நன்றாக முகத்தை துடைத்துக்கொண்டு பின் கண்ணாடியை நோக்கினாள்.

துரு துரு கண்களும் எடுப்பான நாசியும் செவ்விதழும் சற்றே உப்பிய கன்னங்களும் சிரிக்கும் போதும் அந்த கன்னங்களில் விழும் கன்னக்குழியும் என மாநிறத்துக்கு சற்றே கூடுதல் நிறத்துடன் பார்ப்போரை ஒரு முறை நின்று திரும்பி பார்க்க வைக்கும் அழகுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் அழகம்மாள் என்கிற அழகி.......




அழகான ராட்சசியே………
அடி நெஞ்சில் குதிக்கிறியே………
முட்டாசு வார்த்தயிலே……..
பட்டாசு வெடிக்கிறியே……….
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே…..



plz drop ur comments friends .....
 
Top