Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னோடு கைகோர்க்க 9

Advertisement

Divya sathi

Tamil Novel Writer
The Writers Crew
உன்னோடு கைகோர்க்க 9
வீடு செல்லும்வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை.கேட்டை திறந்து உள்ளே சென்று வண்டியை நிறுத்தினான்.சம்யுக்தா இறங்கி வேகமாக வீட்டிற்குள் சொல்லபோனாள்.இவள் வாசற்படியில் கால் வைப்பதற்குள் "நில்லுடி அங்கேயே ", என்று கத்தினார் பாரவ்தி.

ஒரு நிமிடம் உடல் தூக்கிப்போட பயந்து பார்வையை நிமிர்த்தினாள் சம்யுக்தா.அப்படியே நின்றாள் அந்த இடத்தில்.அவள் அருகில் வந்த பார்வதி "நீயெல்லம் என்ன பொண்ணுடி..யாராச்சும் கிடைப்பாங்களானு சுத்திட்டு இருப்பியா..எவ்ளோ தைரியம் இருந்தா என் பையன் கூடையே வெளிய போவ", என்று அவளை அசிங்கப்படுத்தியவர் அவளை அடிக்க கை ஓங்கினார்.

சம்யுக்தா இருந்த மனநிலையில் அவள் பயந்து கீழே குனிய ஓங்கிய அவர் கையை பிடித்து தடுத்து இருந்தான் கண்ணன்.தன் மேல் அடி விழாமல் போக யார் தடுத்தது என்று அவள் நிமிர்ந்து பார்க்க கண்ணன் தான் அங்கு சிவந்த கண்களுடன் ஆக்ரோஷமாக பார்வதியை பார்த்துக்கொண்டு இருந்தான்.

"அத்த இதுக்குமேல அவளை பற்றி எதனா சொன்னிங்க..நான் உங்களை பேசவேண்டிய நிலை வரும்..ஜாக்கிரதை", என்று எச்சரித்தான்.

"நீ உள்ள போ ", என்று சம்யுக்தாவை பார்த்து சொன்னான்..அவளும் வேகமாக உள்ள சென்றுவிட்டாள்.

"இனி ஒருதரம் இப்படி நடந்துக்கிட்டிங்க என்ன பண்ணுவேன்னு தெரியாது", என்று எச்சரித்து சென்றான்.

அவன் சென்றதும் தாயின் அருகில் வந்த தருண் "இது உங்களுக்கு தேவை தான மாம்..எந்த பொன்னையும் இப்படி பேசாதீங்க..என்னாளனு நெனைக்கிற அப்போ எனக்கே அசிங்கமா இருக்கு..ச்சய்.."என்று காலை தரையில் உடைத்துவிட்டு சென்றுவிட்டான்.

பெரியவர்கள் அனைவரும் வயலுகு சென்றிருக்க பார்வதி தப்பித்தோம் என்று தன் அறைக்கு சென்றுவிட்டார்.சம்யுக்தா கண்ணனை வளைக்க பார்க்கிறாள் என்று நினைத்து இருந்தேன்.. இப்பொழுது என்ன என்றால் என் மகனிடமே அவள் வேலையை காட்டுகிறாள்.அதுவும் வந்த அன்றே..இவள் எவ்வளவு பெரிய காரிய காரியாக இருப்பாள் என்று புல்ம்பிக்கொண்டு இருந்தார்.

அந்த கண்ணன் பையன் வேற இவளுக்காக இவ்ளோ வரிஞ்சி கட்டிக்கிட்டு வரான்.எதுவும் சரியா படல.இதுக்கு ஒரு முடிவு கட்டணும் என்று தூங்கி கொண்டு இருந்த தன் மகள் வைஷுவை பார்த்தார்.

சம்யுக்தாவினால் இன்று நடந்த எதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அருவியை பார்த்ததும் சுற்றத்தை மறந்து நனைந்து கால் வழுக்கி கடைசியில் அவன் கைகளில் மயங்கி என்று நினைக்க நினைக்க அவள் மீதே அவளுக்கு வெறுப்பாய் இருந்தது.கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.இதில் பார்வதியின் தகாத பேச்சுக்கள் வேறு அவளை இன்னும் வாட்டியது. மனம் அலைக்கடலாய் கொதித்துக்கொண்டு இருந்தது.

தன் மனதில் இருப்பவனை நினைத்து கோவம் கொண்டாள்.எல்லாம் இவனால் வந்தது.என் வாழ்வில் ஏன் வந்தான்.அவனுக்காக வீட்டை விட்டு வந்து இங்கே இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கிறேன்.அந்தம்மா என்ன எப்படில்லாம் பேசிடுச்சு.என் அம்மா இதெல்லாம் கேட்டா எவ்வளவு வறுத்த பாடுவாங்க.வீட்டின் ஞாபகம் வேறு வர இன்னும் வருந்தினாள்.

மாடிக்கு வந்த கண்ணன் அவள் அறைக்கு செல்ல நினைத்து ஒரு அடி வைத்தவன் பின் இந்த சூழ்நிலையில் வேண்டாம் என்று மனதை மாற்றி தன் அறைக்கு சென்றுவிட்டான்.

சம்யுக்தா வருந்துவாளோ என்று அவளை பார்க்க தருண் அவள் அறைக்கு சென்றான்.ஆனால் அவளோ தரையில் சுருண்டு படுத்தபடி உறங்கி இருந்தாள்.ஒரு நிமிடம் நின்று அவளை பார்த்தவன் சத்தம் எழுப்பாமல் வெளியே சென்றுவிட்டான்.

வயலுக்கு சென்று இருந்த அனைவரும் வந்துவிட்டனர்.தாரா தங்கள் அறைக்கு சென்று சம்யுதவை பார்க்க சென்றாள்.சம்யுக்தா துங்கிக்கொண்டு இருப்பதை பார்த்து "சதா..சதா..என்ன இந்த நேரம் தூங்கிட்டு இருக்க.. எழுஞ்சிரு",என்று அவளை எழுப்பினாள்.

யாரோ அழைப்பதுபோல் இருக்க கண்களை திறந்தாள் சம்யுக்தா..அருகில் தாராவை பார்த்ததும் சிறு முறுவலுடன் "எப்போ வந்த தாரா ", என்றாள்.

"இப்போ தான்..சரி வா..போய் டீ குடிச்சிட்டு வரலாம்", என்றாள்.

"இரு முகம் கழுவிட்டு வரேன் ", என்று எழுந்து பாத்ரூமிர்க்கு சென்றாள்.

இவர்கள் கீழே வரும்பொழுது அனைவரும் கூடத்தில் தான் இருந்தனர்.. ஏதோ முக்கியமாக பேசிக்கொண்டு இருந்தனர்.தாராவும் சம்யுக்தவும் அமைதியாக வந்து நின்றனர்.

"என்ன கண்ணா சொல்ற..புரோக்கர வர சொல்லுவோமா", என்று ஜனார்த்தனன் கேட்டுக்கொண்டு இருந்தார்.

"சரி தாத்தா..நாளைக்கு வர சொல்லுங்க பாப்போம் ", என்றான்.

"ஆமாப்பா..நாளைக்கு எல்லரும் வீட்ல தான இருப்போம்..வர சொல்லிடுங்க", என்று தயாநிதியும் சொன்னார்.

கோதி பாட்டி தான யோசனையில் இருந்தார்.துளசிக்கு மிகவும் சந்தோஷம்.தன் மகளின் வாழ்வு நலமாக அமைய கடவுளை வேண்டினார்.

இவர்கள் பேசிக்கொண்டு இருக்க தருண் சம்யுக்தாவை பார்த்து எழுந்து கோவமாக வெளியே செல்வதை யோசனையாக சம்யுக்தா பார்த்தாள்.அவள் யோசனையை களைத்த தாரா"வா டீ குடிக்கலாம்", என்று அழைத்து சென்றாள்.

"நாளைக்கு வர சொல்லுங்க தாத்தா பாக்கலாம் ", என்று கண்ணனும் வெளியே சென்றுவிட்டான்.

ஜனார்த்தனன் தன் அறைக்கு சென்றுவிட்டார்.கோதை பாட்டி அவர் பின்னே சென்றுவிட்டார்.தயாநிதி துளசியிடம் ஏதோ பேசிக்கொண்டு இருக்க சம்யுக்தவும் தாராவும் டிவி முன் அமர்ந்து பாடலை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

சிறிது நேரம் சென்ற பின் இரவு உணவு செய்ய துளசி சமயலறைக்கு செல்ல தாராவும் சென்றாள்.சம்யுக்தாவும் உடன் செல்ல "நீ எதுவும் வேலை செய்ய கூடாது சதா..நானும் அம்மாவும் பத்துப்போம்..நீ போ ", என்றாள் தாரா.

"நா ஹெல்ப் பண்றேன் தாரா.. அதுனால என்ன ".

"நாங்க ரெண்டு பேர் இருக்கோம்..நீ வேற எதுக்கு..ஒன்னும் வேண்டாம்..போ".

"சம்யுக்தா நீ போமா..உனக்கு வேலை வச்சிட்டோம்னு என் பையன் வந்து சண்டை போடுவான்.விருந்தாளியை வேலை செய்ய சொல்றியானு".

அவர் அப்படி சொல்லவும் நம்மால் எதற்கு அவர்கள் திட்டு வாங்க வேண்டும் என்று அவளும் சென்றுவிட்டாள்.என்ன செய்வது என்று தெராயாமல் வெளியே வந்தவள் ரோஜா தோட்டத்திற்கு சென்றாள்.

மாலை மயங்கும் வேலையில் மஞ்சள் நிற பூவின் அழகு இன்னும் பன்மடங்காக தெரிந்த்தது.அதை ரசித்துக்கொண்டே அங்கே அமர்ந்தாள்.வெகு நேரம் கண்களை முடி அதை ரசித்துக்கொண்டு இருந்தவளை "எல்லோ ரோஸ் ", என்ற தருணின் குரல் கலைத்தது.

அவளை அழைத்தவன் அவள் அருகில் வந்து அமர்ந்தான்.அவனை பார்த்து மென்மையாக புன்னகை புரிந்தாள்.

"எப்பவும் ரோஜா கூட தான ", என்றான்.

அதற்கும் மென்மையாக ஒரு முறுவல் அவளிடத்தில்.

"பேச கூடாதுனு டிசைட் பண்ணிட்டியா ", என்றான் உள்ளே போன குரலில்.

"மாம் பேசுனதுக்கு நா மன்னிப்பு கேக்கறேன்..சாரி பட் பேசாம மட்டும் இருக்காதா எல்லோ ரோஸ்.. ப்ளீஸ்..", என்று தன் காதை பிடித்து மன்னிப்பு கேட்டான்.

சிறுப்பிள்ளை போல அவன் செயல் இருக்க அதை பார்த்ததும் சம்யுக்தாவிற்கு சிரிப்பு தாங்க வில்லை.அவள் சிரிப்பதை பார்த்தவன் மனம் லேசானது.

"நீங்க என்ன பண்ணுவீங்க அவங்க பேசுனதுக்கு.நா பீல் பண்ணல..கவலை படாதீங்க", என்றாள்.

"நான் தான வரேன்னு சொன்னேன் கோவிலுக்கு..உன்மேல் என்ன தப்பு".

"அதுனால என்ன இப்போ..விடுங்க பாத்துக்கலாம் ".

"இப்போ தான் ரிலாக்ஸ இருக்கு ", என்றான்.

"உங்க உதடு தான் சொல்லுது.. மனசு வேற என்னமோ சொல்ற மாரி தோணுதே".

"அப்படியா..உனக்கு மனச படிக்க தெரியுமா".

"எல்லாரோடதும் இல்லை..எனக்கு புடிச்சவங்க மனச படிப்பேன் ".

"அப்போ உனக்கு என்ன பிடிக்குமா", அவன் ஆச்சர்யமாக வினவினான்.

"பிடிக்கும் ", அவள் ஒற்றை சொல் அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

"எனக்கும் உன்னை பிடிக்கும்", என்றான்.

அவனை பார்த்து மென்மையாக சிரித்தாள்.

"பிடிச்சவங்ககிட்ட மனசு விட்டு பேசலாமே ", என்றாள்.

"பேசிட்டு தான இருக்கேன் ".

"மனசுல ஒளிச்சி வச்சி இருக்கீங்லே..அத பத்தி பேசலாமே", என்றாள் அவனின் முகத்தை பார்த்துகொண்டே.

அவளை அச்சயமாய் பார்த்தவன்.."ஹ்ம்ம்..பேசலாமே", என்றான் சிறு புன்னகையுடன்.

"நீங்க தான் சொல்லணும்", என்றாள்.

"என்ன சொல்லணும் ", தெரியாதது போல் கேட்டான்.

"லவ்வை பற்றி ", என்றாள்.

அவன் இன்னும் ஆச்சர்யமாக அவளை பார்த்து "எல்லோ ரோஸ் ", என்றான்.

"சொல்லுங்க சீக்கிரமா ", என்றாள்.

"ஹ்ம்ம்..எனக்கு கூட லவ் லான் வரும்னு நிஜமா நான் நம்பவே இல்லை..அப்படியே ஜாலியா எந்த கவலையும் இல்லாம போய்ட்டு இருந்தேன்.இப்போ இப்படி வந்து மாட்டிட்டு முழிக்கிறேன்", என்று கவலையாக சொன்னான்.

அதைக்கேட்டு அவள் வாய் விட்டு சிரித்தாள். அவள் சிரிப்பதைப் பார்த்து முறைத்தவன் " நீ எல்லாம் சிரிக்கிற அளவுக்கு நான் ஆயிட்டேன்... காலக் கொடுமை",என்று தலையில் அடித்துக் கொண்டான்.

வெகுநேரமாக இவர்கள் பேசிக்கொண்டிருப்பதை தூரத்தில் நின்று கண்ணன் பார்த்துக் கொண்டிருந்தான். சம்யுக்தா அவனுடன் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருப்பதை அவனால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த அவர்கள் அருகில் சென்றான்.

இவன் அருகில் செல்லவும் சம்யுக்தா தருணிடம்"அப்போ லவ்னு ஒதுக்கிரிங்க அப்படி தானே", என்று கேட்டாள்.

தருண் பதில் சொல்லும் முன் கண்ணன் தங்கள் அருகில் நிற்பதை கவனித்தான்.

கண்ணனைப் பார்த்ததும் "ஹே வாங்க மச்சான் வந்ததிலிருந்து பேசவே முடியலை...வாங்க இப்படி வந்து உட்காருங்க...கொஞ்ச நேரம் ஜாலியா பேசிட்டு இருக்கலாம்", என்று சொன்னான்.

ஆனால் கண்ணனின் பார்வை முழுவதும் சம்யுக்தாவின் மீதே இருந்தது..அவளும் அவனை தான் பார்த்துகொண்டு இருந்தாள்..அவன் பார்க்கும் பார்வையை அவளால் பொறுக்க முடியவில்லை.. உடனே அங்கிருந்து எழுந்து விட்டாள்.. அவளுடன் தருணம் எழுந்துவிட்டான்.

கண்ணனின் பார்வை சம்யுக்தாவை குற்றம்சாட்டுவது போலவே இருந்தது...அவன் கோபமாக அவளை முறைத்துக் கொண்டு நின்றான்...ஏதோ அவள் பெரிய குற்றம் செய்தது போல்..

" என்ன மச்சான் அப்படி பார்த்துட்டு இருக்கீங்க", என்று கண்ணனிடம் தருண் கேட்டான்.

அவன் கேட்ட பின்புதான் தன்னை உணர்ந்தவன் அவனிடம் ஒன்றும் இல்லை என்றான்.

" சரி வாங்க உட்கார்ந்து பேசலாம்...சம்யுக்தா நீ ஏன் எழுந்த..பேசிட்டு இருக்கலாம் ஜாலியா கொஞ்ச நேரம்", என்றான் தருண்.

" இல்ல எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நாளைக்கு பார்கலாம்...நான் வீட்டுக்கு போறேன்.. நீங்க பேசிட்டு இருங்க", என்றாள்.

" மனசு விட்டு பேச சொன்ன.. நான் லவ்னு சொன்ன அப்புறம் யாருன்னு கேட்காம போற",என்றான்.

இதைக் கேட்டதும் கண்ணன் முகம் ரௌத்திரமானது. சம்யுக்தா கண்ணனை பார்த்தாள். அவனைப் பார்த்து என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சம்யுக்தா முழித்துக் கொண்டிருக்க..

" இவ்வளவு நேரம் அப்படி வாய் பேசிட்டு இருந்த...இப்ப என்ன ஆச்சு ஏன் அமைதியா இருக்க", என்றான் கிண்டலுடன்.

" இல்ல ஒன்னும் இல்ல நான் நாளைக்கு கேட்டுக்குறேன் அது யாருன்னு", என்று அவள் திக்கி திக்கி சொல்ல.

" என்ன பத்தி இவ்வளவு தெரிஞ்சு இருக்கு அப்போ அது யாரென்று கண்டிப்பா உனக்கு தெரிஞ்சி இருக்குமே..", என்றான் தருண்.

இவர்கள் மறைமுகமாக பேசிக்கொள்ளும் பேச்சு கண்ணனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை..இதை பொறுத்துக் கொள்ளாமல் சம்யுக்தாவை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான்... அதை பார்த்து அவள் உடனே தருணிடம்"நாளைக்கு பார்க்கலாம்", என்று சொல்லி விட்டு அவன் பதிலுக்கு காத்திராமல் வீட்டை நோக்கி ஓடினாள்.

போகும் அவளையே முறைத்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணன். ஆனால் தருண் அவளை பார்த்து சிரித்துக் கொண்டு நின்றான். தன் கண் பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்ற கண்ணன் உடனே திரும்பி தருணை பார்த்தான். அவன் அவளைப் பார்த்து சிரிப்பதை பார்த்து " ஏன் சிரிக்கிற"என்று கேட்டான் கண்ணன்.

" சம்யுக்தாவை பார்த்து சிரிக்கிறேன்", என்றான்.

"அதான் ஏன்னு கேட்டேன் ", என்று பல்லை கடித்துக்கொண்டு கேட்டான் கண்ணன்.

" ஷி இஸ் சாம்திங் ஸ்பெஷல்", என்று புன்னகையுடன் சொன்னான் தருண்.

இதைக் கேட்டதும் கண்ணனுக்கு பயங்கர கோவம் வந்துவிட்டது..."சரி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு...அவசரமா போகணும்...அப்பறமா பார்க்கலாம்...", என்று சொல்லிவிட்டு வீட்டை நோக்கி சென்றான் சம்யுக்தாவை தேடி.
 
Top