Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனை கொடுத்து.. உயிர் கொடுத்தாய்.. - 1

Advertisement

உனை கொடுத்து.. உயிர் கொடுத்தாய்.. - 1


உத்திர பிரதேசம்
ஆக்ரா

நண்பகல்....

மதிய வேளையாக இருந்தாலும்... உத்திர பிரதேச மாநிலத்தின் குளு குளு பருவக் காலம் என்பதால் சூரிய தேவனும்... அவரின் சுட்டெரிக்கும் கதிரின் வெப்பத்தை கொடுக்காமல்... வெளிச்சத்தை மட்டுமே அளித்தார்...

அது ஒரு பாழடைந்த இரும்பு குடோன்....

அங்கே ஒரு பதினைந்து பேர் கொண்ட குழு ஒன்று கூடி இருந்தது... அனைவரும்.... தங்களுக்குள் பேசி.... நின்றுக் கொண்டு இருந்தனர்...

சில நிமிடங்களில்... அங்கே ஒரு ஐம்பது வயது தோற்றம் கொண்ட ஒருவரும்... அவரின் பக்கத்தில் ஒரு இளைஞனும்... அவருடன் பேசியபடி... வந்து கொண்டு இருந்தனர்...

பின்னர்... கூட வந்த இளைஞனும் அந்த கூட்டத்துடன் சேர்ந்து நின்றான்...

"ஹாய் யங் மேன்ஸ்..."

"ஹலோ சார்..." என்றனர் அங்கிருந்த அனைவரும்...

"உளவு துறையிடம் இருந்து நமக்கு மெயில் வந்து இருக்கு..."

"தெரியும் சார்..."

"நீங்கள் எல்லோருமே திறமையான போலிஸ் ஆபிசர்ஸ்... பட்... இரண்டு வருஷமா நீங்கள் உங்க வேலையை ரிசைன் பண்ணிட்டீங்க... இட்ஸ் அ சீக்ரெட் மிஷன்..."

"இட்ஸ் ட்ரூ சார்...,"

"கைஸ்... நாம ரெண்டு வருஷமா பார்த்துட்டு இருக்கும் கோகெயின் ஸ்மக்ளிங் (cocaine smuggling) கேஸ்..."

"எஸ் சார்..." என்றனர்...

அந்த இளைஞன்... "இது வெறும் போதை பொருள் கடத்தல் மட்டும் இல்ல சார்... போதைக்கு அடிமையான நபர்களின் உறுப்பை... அவங்களுக்கே தெரியாமல் எடுத்து... அதையும் விற்று கேவலமாக பணம் சம்பாதிக்குறாங்க சார்..." என்றான் அவன்

"யூர் கரெக்ட் எழில்வேந்தன்... இப்ப அவங்க லக்கோவில் இருப்பதா நமக்கு தகவல் கிடைத்து இருக்கு...." என்று சொல்லி புன்னகைத்தார் தாமஸ்...

"இன்னைக்கு அந்த ஸ்மக்ளிங் குரூப்பையும் இந்த கூட்டத்தின் நாயகன் பவனீஷையும்.... நாம கட்டாயம் பிடிச்சே ஆகணும்..." என்று உறுதியுடன் சொன்னார்....

அனைவரும்.... "எஸ் சார்..." என்றனர் அதே உறுதியுடன்....

"இது நமக்கு ரொம்பவே சவாலான ஒரு விஷயம் தான் யங் மேன்ஸ்... பட் நீங்க முடிப்பீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு..."

"எஸ் சார்..."

"எழில்..."

"சொல்லுங்க சார்..."

"டீம்மை நீதான் அங்க கைட் பண்ணனும்..."

"சார்... பட்..."

"டேய்... இதுக்கு... இந்த கேஸுல்.... நான் தலைமை பொறுப்பில் இருந்தாலும்... உன்னால மட்டும் தான் இந்த கேஸ் இவ்வளவு முன்னேற்றம் அடைந்து இருக்கு... சோ... யூ டிசர்வ் திஸ் எழில்..."

"ஆமா எழில்... தாமஸ் சார் சொல்வது உண்மை தான்... சார் சொல்றதுக்கு ஓகே சொல்லு... " என்றான் இனியவன்...

இந்த முடிவை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்...

"ஓகே சார்... நான் பாத்துக்கிறேன்" என்று சொன்னான் எழில்...

தாமஸும் அந்த பதிலை ஒரு தலை அசைப்புடன் ஏற்றுக் கொண்டார்...

"ஓகே பாய்ஸ்... யூ மே ஆல்... கோ நவ்..."

"தேங்க் யூ சார்..." என்று சொல்லி அனைவரும் தாமஸிடம் இருந்து விடைபெற்றனர்...

எழில் வேந்தன் மற்றவர்களுக்கு சில உத்தரவுகளை சொல்லி விட்டு....

பின்னர்... அனைவரிடமும்.. மாலை லக்கோவிற்கு செல்ல ஆயத்தமாய் இருக்கும் படி சொல்லி விட்டு.... எழிலும் இனியனும் கிளம்பினர்....

"இனியா..."

"சொல்லு எழில் "

"இன்னைக்கு அந்த குரூப் நம்ம கிட்ட வசமா சிக்கிட்டாங்கடா..."

"ம்ம் ஆமா எழில்.... கண்டிப்பா பிடிச்சே ஆகணும்....."

"ஆனால்... இனியா... நீ என் கூட வரீயே... என்னால போய் பிடிக்க முடியும்..."என்று சொல்லி சிரித்தான் எழில்...

"அடேய் மச்சி... என்னடா இப்படி சொல்ற..."

"சரி... சரி வா..‌. மூஞ்சிய ஒழுங்கா வச்சிட்டு வாடா... அந்த காட்டுக்கு சீக்கிரம் போகலாம்..." என்று சமாதானம் செய்தான் எழில்...

பின்னர்... இவர்கள் இருவரும் தங்கி இருக்கும் அறைக்கு சென்று... தேவையான பொருள்களை.... முக்கியமாக பிஸ்டலை.... எல்லாம் எடுத்து கொண்டு... ரூமை காலி செய்து லக்னோவிற்கு கிளம்பினர்.... எழிலும்... இனியனும்...‌

(எழில்வேந்தனை பற்றிய சிறு குறிப்பு....

எழில்வேந்தன் வயது 29.... அப்பா பெயர்... சிலம்பரசன்... இவர் ஒரு விவசாயி... அம்மா பெயர்... ராதா... இவன் பிறக்கும் போதே ராதா இறந்து விட்டார்...

எழில் வேந்தன் இப்பொழுது சிபிஐ (CBI) ரகசிய பிரிவில் வேலை செய்கிறான்....

இரு வருடங்களுக்கு முன்பு....

அவனுடைய கடின உழைப்பின்... திறமையின் பலனாக... அசிஸ்டென்ட் கமிஷனராக இருந்தவன்...

இந்த கும்பலை பிடிப்பதற்காக தான் அனைவருக்கும் தெரியும் படி வேலையை ரீசைன் செய்து விட்டு... பின்னர்... ரகசியமாக இதில் இணைந்து கொண்டான் எழில்...)

உத்திர பிரதேசம்...
லக்னோ...

லக்னோவின் கடுங்குளிரால்... நீல நிற வானம் கூட... கரிய நிற கம்பளியை குளிருக்கு இதமாய்... உடல் முழுவதுமாக போர்த்திக் கொண்டது போல... காட்சி தந்தது அந்த நிசப்தமான இராக்காலம் (இரவு)...

அந்த இடம் முழுவதுமே... இரவின் காரிருளால் சூழப்பட்டு இருந்தது... அதில் ஒற்றை திலகமாய் ஜொலித்தது.... பௌர்ணமியின் முழுநிலா... நட்சத்திர கூட்டம் எல்லாம் எங்கோ சென்று ஒளிந்து கொண்டது போல... எதுவுமே கண்ணில் படவில்லை...

போதாதற்கு இந்த பனி வேறு மிதமாக பெய்து கொண்டிருந்தது...

குக்ரெயில் ரிசர்வ் காடு...

பசுமையான இயற்கை அழகை கொண்ட நிலப்பரப்பு... காலையில் மிகவும் அழகாக இருக்கும் இந்த இடம் தான் இரவில் பயத்தையும் தரக்கூடிய இடமாக இருக்கிறது...

அங்கு தான் சென்று கொண்டு இருந்தார்கள் எழிலும் இனியனும்... மற்றும் அனைவரும்....

"எல்லாரும் ஒன்றாக போக வேண்டாம்... இரண்டு இரண்டு பேரா பிரிஞ்சி போவோம்.... அப்ப தான் நமக்கு சேஃப்டி...."

"ஓகே எழில்.... நாங்க அப்படியே போறோம்..." என்று சொல்லி அனைவரும் இரண்டு இரண்டு நபர்களாக பிரிந்து சென்றனர்....

எழிலும் இனியனும் ஒன்றாக சேர்ந்து போய் கொண்டு இருந்தனர்....

அரை மணி நேரம் நடந்து கொண்டே இருந்தனர் இருவரும்..‌‌...

அப்போது தான் அவர்களுக்கு ஏதோ வித்தியாசமான சத்தம் ஒன்று கேட்டது...

**************

எப்படி இருக்குன்னு சொல்லுங்க செல்லம்ஸ் ?????

உங்கள் கருத்துக்களை கமெண்ட் பெட்டியில் சொல்லிட்டு போயிடுங்க செல்லம்ஸ் ????????

Urs....
Kani ??
 
Top