Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உண்மை காதல் மறந்து போகுமா பகுதி 1

Advertisement

kavi nila

Active member
Member
வணக்கம் நண்பர்களே, இது ஒரு சாதாரண காதல் கதை தான். படித்து விட்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். தங்கள் ஆதரவை எதிர் நோக்கி,

காதல் 1


சென்னை, தமிழகத்தின் தலைநகரம். பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக சென்னையின் கலாச்சாரம் விளங்குகிறது. நவீனமும் பாரம்பரியமும் இங்கு கலந்து காணப்படுகிறது. நூறு ரூபாயில் ஒரு நாளை கழிக்கும் மக்களும் இங்கு உள்ளனர். கோடியை தாண்டியும் செலவு செய்யும் மக்களையும் கொண்ட கலப்பு தான் சென்னை. பெருகும் மக்கள் தொகையை போல வாகன நெரிசல் இன்றியமையாத ஒன்றாகும்.

சாலையில் வாகனங்கள் எறும்பை போல் மெதுவாக செல்ல, இந்த நெரிசலை எல்லாம் கடந்து ஒரு கார் வேகமாக சென்று ஒரு மாளிகையின் முன் நின்றது. சென்னையில் இப்படி ஒரு இடமா என்று வியக்கும் அளவுக்கு அமைதியாகவும் காற்றோட்டமாகவும் இருந்தது.

காரில் இருந்து தன் பெற்றோர்களுடன் இறங்கினான் சந்தோஷ். சந்தோஷ், 28 வயது ஆறடி உயரம் அலை அலையான கேசம் பரந்த நெற்றி கூர்மையான கண்கள் அழுத்தமான இதழ்கள் அதில் அப்பப்போ சின்ன புன்னகை, என பார்ப்பவரை தன் பக்கம் இழுக்கும் அழகன். எஸ். எஸ். கன்ஸ்ட்ரக்ஷன் எம்.டி. தந்தையின் தொழிலை திறம்பட தன் முயற்சியால் நல்ல நிலையில் வைத்துக் கொள்பவன்.

சந்தோஷ்யின் பெற்றோர் அந்த மாளிகையையும் அங்கு உள்ள ஆள் பலம் எல்லாத்தையும் பார்த்து மிரண்டே விட்டனர். இருக்காதா சிவாவின் கோட்டைக்கு வந்துள்ளனர். சிவா என்ற பெயரை கேட்டாலே ஸ்டேட் மினிஸ்டரில் இருந்து சென்டரல் மினிஸ்டர் வரை எல்லாருக்கும் பயம்.

சரவணன், “டேய் தம்பி இது ரொம்ப பெரிய இடமா தெரியுது. நமக்கு செட்டாகுடா”, என

“ப்பா.. ப்ளீஸ் எனக்கும் கொஞ்ச பயமா தான் இருக்கு. ஆனா என்னால் அவள் இல்லாமல் இருக்க முடியாது. வாங்கப்பா.. எனக்காக ஒரே ஒரு முறை”, என தந்தையை பாவமாக பார்த்தான்.

தன் ஆசை மகனுக்காக தன் பயத்தை விட்டுவிட்டு உள்ளே சென்றார்கள்.

காமாட்சி சிவாவின் தாய் , அவர்களை பார்த்து யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே வந்தவர்களை உட்கார வைத்தார்.

சரவணன், “வணக்கங்க.. நான் சரவணன் இது என் மனைவி. இவன் என்னோட மகன்”, என அறிமுகப் படுத்த, வணக்கம், என கைகளை கூப்பினார்.

பின் "அண்ணா.. உங்களை அண்ணானு கூப்பிடலாம்" என அவரை பார்க்க,

"கண்டிப்பா ம்மா.. நாங்க வந்த விசயத்தை முதலில் சொல்லிடுறேன் மா.. என் பையன் உங்க பொன்னை விரும்புறான்", என காமாட்சி அதிர்ச்சியாக அனைவரையும் பார்த்தார்.

அவர் மேல பேசும் முன் மாடியில் இருந்து சிவா கீழே வந்தாள். சிவாயை பார்த்ததும் அனைவரும் எழுந்து நின்றனர். அனைவரின் முன்பும் வந்து உட்கார சொல்லி விட்டு அமர்ந்தாள்.

சிவா 26 வயதே ஆன புயல். எதற்கும் பயப்பட தெரியாதவள். நேர்த்தியான உடை செதுக்கிய நெற்றி, வில் போன்ற புருவம் கூர்மையான கண்கள் பார்பவரை எளிதில் எடை போட்டு விடும். சிவந்த செர்ரி போன்ற இதழ்கள் ஆனால் சிரிப்பை மட்டும் காண முடியாது. வசிகரமான முகம் பார்ப்பவரை தன் பக்கம் இழுத்துவிடும். தந்தையின் இழப்பிற்கு பின் ஆண் வாரிசு இல்லாத சொத்தை பறிக்க பார்த்த பல குள்ளநரிகளிடம் இருந்து இந்த சொத்தை பாதுகாத்தவள்.

“ஹாலோ மிஸ்டர் சந்தோஷ்.. சந்தோஷ் அதான உங்க பெயர்”, என அவனை பார்க்க அவனும் குழப்பத்துடன் ஆமாம் என தலையை ஆட்டினான்.

"ம்ம்.. குட். எனக்கு எப்படி தெரியும் பார்க்கிறிங்களா.. உங்களை மட்டும் இல்ல உங்க அப்பா அம்மா அண்ட் உங்களுக்கு ஒரு தம்பி இருக்கார். அம் ஐ கரெக்ட்" என

"உங்களுக்கு எப்படி தெரியும்" என கேட்டான்.

“நீங்க எப்ப என் தங்கச்சி லைஃப்குள்ள வந்திங்களோ அப்பவே உங்களை பற்றி மொத்த விசயமும் தெரியும்” என சொல்லிவிட்டு தன் தாயை பார்த்து,

"ம்மா.. ரித்விக்காவை கூப்பிடுங்க"என

'சொல்லுங்க க்கா..' என்று வந்த ரித்விக்கா அங்கு உள்ள சந்தோஷ் குடும்பத்தை பார்த்து அதிர்ந்து தன் தமக்கையை பார்த்தாள்.

'க்கா..' என தன் தமக்கையை பயத்துடன் பார்த்தாள்,

"இங்கு பார் ரித்து.. எனக்கு உன் சந்தோஷம் தான் முக்கியம். உன் சந்தோஷம் இந்த சந்தோஷ் கிட்ட தான் இருக்குனா எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனா ஒரு கன்டிசன்" என சந்தோஷை பார்க்க,

"நீங்க இரண்டு பேரும் லவ் பண்றீங்க. ரையிட் அப்ப எனக்கு ப்ரூ பண்ணுங்க. உங்க லவ் எவ்வளோ ஸ்டாங்னு" அனைவரும் அவளை பார்த்தனர். "லுக்.. நான் ஓன்னும் லவ்க்கு எதிரியெல்லாம் கிடையாது. எனக்கு என் தங்கச்சி கடைசி வரைக்கும் சந்தோசமா இருக்கனும். அதான் எனக்கு வேண்டும். அடுத்த வாரம் திங்கள் கிழமையில் இருந்து சரியா ஆறு மாசம் என் தங்கச்சியை பார்க்க கூடாது பேச கூடாது மெசேஜ் கூட பண்ண கூடாது. ஆறு மாசம் கழிச்சு வாங்க. அப்பவும் என் தங்கச்சி மேல இப்ப இருக்கிற இதே லவ் இருந்த சொல்லுங்க. கண்டிப்பா நான் உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன். புரியுதா" என மிரட்டல் தோனில் கேட்க,

தானாக தலையை ஆட்டினான் சந்தோஷ்.

“ரித்து இது உனக்கும் தான். அடுத்த ஆறு மாசத்திற்கு நீ டெல்லி போகிற ஓகே”, என அவளின் முடிவை சொல்லிவிட்டு “ம்மா.. எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. நான் கிளம்புறேன். இவங்களை எல்லாம் சாப்பிட சொல்லுங்க”, என்றுவிட்டு சென்றாள்.

அவள் சென்றதும் ரித்து, அப்பாடா என சந்தோஷ் பக்கத்தில் உள்ள சோபாவில் அமர்ந்தாள்.

"சாரி ஆண்ட்டி, சாரி ஆங்கிள் அக்கா அப்படி தான். தப்பா நினைச்சிக்காதிங்க"என ரித்து தன் அக்காவிற்காக மன்னிப்பு கேட்க

"ஆமாங்க. தப்பா நினைக்காதிங்க" என காமாட்சியும் கேட்க

சரவணன், “பரவலைமா நான் தப்பா நினைக்கலை. இப்ப புரியுது அவங்க பெயரை கேட்டு ஏன் இப்படி பயப்பறாங்னு. என்னமா மிரட்றாங்க. சின்ன வயசிலே இவ்வளவு பொறுப்பா கம்பனியை நல்லா பாத்துக்கிறாங்க. என்ன ஒரு பார்வை..... கண்ணிலே மிரட்றாங்க”

ரித்துவையும் காமாட்சியை பார்த்துக் கொண்டே “எனக்கே அவங்க கிட்ட பேச பயமா இருக்கு. நீங்க எப்படி தினமும் அவங்க கூடவே இருக்கிங்க”, என தன் சந்தேகத்தை கேட்டான் சந்தோஷ்.

“சிவாக்கா அப்படி தான். பேசும் போது அவங்களுக்கும் நமக்கும் சமந்தமே இல்லாதா மாதிரி மிரட்டுறா மாதிரி தான் பேசுவாங்க. ஆனா மனசில் நிறைய பாசம் இருக்கும். எங்க இரண்டு பேருக்கும் என்ன வேண்டும்னு நாங்க சொல்லுறத்துக்கு முன்னே அவளுக்கு தெரிஞ்சிடும். ஏன்னு தெரியலை அக்காவுக்கு லவ் மேல நம்பிக்கை இல்லை போல”.

காமட்சி, "வாங்க எல்லாரும் சாப்பிட்டே பேசலாம்", என அழைக்க அனைவரும் சாப்பிட்டு கிளம்ப தயாராகினர்.

சந்தோஷ் ரித்து இருவரும் மாடியில் தனியாக பேசிக் கொண்டுயிருந்தனர். "ரித்துகுட்டி ஆறு மாசம் என்ன பண்ண போகிற",

"அக்கா எதாவது பிளான் பண்ணிருப்பாங்க, நீயும் இந்த ஆறு மாசம் நல்ல பிள்ளையா இரு. அக்கா கண்டுக்காத மாதிரி தான் இருக்கும். ஆனால் 24 மணி நேரமும் நீ என்ன பண்ணாலும் அவளுக்கு தெரிஞ்சிடும். பார்த்து இருந்துக்கோ" என

"சரிடி நான் பார்த்திக்கிறேன். இப்ப என்னை கவனிச்சா நல்லாயிருக்கும்" என

"என்னடா.... பேச்சே சரியில்லயே.. பார்வை கூட மாறுதே. என்னடா விசயம்"

"ஒன்றுமில்லை குட்டிமா.. ஆறு மாசம் உன்னை பார்க்காமல் இருக்கனும்ல கொஞ்சம் மாமனை அதுவரைக்கும் தாங்கிறா மாதிரி கவனிச்சா நல்லாயிருக்கும்", என அவளை கட்டிக் கொண்டே கேட்டான்.

"இதை என் அக்கா கிட்ட சொன்னா என்ன நடக்கும்னு தெரியுமா மிஸ்டர்", என அவனை கேள்வியாக பார்க்க

"அம்மா தாயே.. எனக்கு எதுமே வேண்டாம். ஆறு மாசம் தானே.. பார்த்துக்கலாம். அதுக்கு அப்புறம் ஆறுபது வருசம் நீ என் கூட தான் இருக்கனும். அதை நியாபகம் வைச்சிக்கோ", என அவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தத்தை வைத்துவிட்டு தன் வீட்டுக்கு சென்றான்.

இரவு தன் வீட்டில் தனியாக இருக்கும் தன் தம்பிக்கு இந்த விசயத்தை கூற வேண்டும் என நினைத்து கால் செய்தான். ரிங் போக முதல் தடவை எடுக்கவில்லை.

பிரகாஷ், வீட்டின் செல்ல பிள்ளை. ஆதனால் அவன் கேட்ட உடன் வெளிநாடு சென்று படிக்க அனுமதி கிடைத்தது. இப்போழுது லன்டனில் உள்ள நம்பர் ஓன் கம்பனியில் பணிப்புரிகிறான். நாட்டுற்கு திரும்ப மனமில்லாமல் அங்கே உள்ளான்.

பின் மீண்டும் முயற்சி செய்யும் போது முதல் ரிங்கிலே எடுக்கப்பட்டது.

"ஹாய் ப்ரோ....." என உற்சாகமாக சொல்ல

"ஹாய் தம்பி..... எப்படி இருக்க", என பல்லாயிரக்கணக்கு தொலைவில் இருக்கும் தன் தம்பி பிரகாஷ் இடம் பேசினான்.

"என்ன ப்ரோ நேற்று தானே பேசனே அதுக்குள்ள எப்படி இருக்கனு கேட்கிற",

"என்ன இருந்தாலும் நேரில் பார்க்கிறா மாதிரி வருமாடா. உன்னை பார்த்தே நாலு வருசம் மேல ஆக போகுது. எப்ப கூப்பிட்டாலும் வேலையிருக்குனு தான் சொல்லுற. எப்படா இங்க வருவ" என தன் ஆசை தம்பியை காணாத ஏக்கத்தில் கேட்டான்.

"உனக்கு எப்போ கல்யாணம் மட்டும் சொல்லு நான் இங்க இருக்கிற வேலையை ரிசைன் பண்ணிட்டு வரேன். ஆமா அண்ணி வீட்டுக்கு போய் பேசப் போறேன்னு சொன்னியே என்ன ஆச்சு",

"அதை ஏன்டா கேட்கிற. ரித்துவோட அக்கா எனக்கு டெஸ்டு வச்சியிருக்காடா",

"வாவ்! என்ன டெஸ்டு ப்ரோ" என கேட்க "இன்னும் ஆறு மாசத்திற்கு நான் ரித்துகிட்ட பேசக் கூடாது பார்க்க கூடாதாம். அப்படி இருந்தால் அவங்களே கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்", என அங்கே நடந்தது அனைத்தையும் கூறினான்.

"ஹா..ஹா..ஹா.. போடா வைச்சாங்களா பெரிய ஆப்பா.. தினமும் எனக்கு கால் பண்ணி ரித்து இப்படி சொன்ன அப்படி சொன்னனு என்னை வெறுப்பேத்துவேல எனக்கு ஒரு ஆறு மாசம் நிம்மதி. யாருடா அந்த பொண்ணு ரொம்ப வித்தியாசமா இருக்காங்க",

"டேய்.. அவங்க பொண்ணே இல்லைடா.. ஒரு டெரரானவங்க டா. அவங்க பெயரை சொன்னாலே எல்லாருக்கும் அவ்வளோ பயம். அவளை யாருமே பார்த்ததே இல்லை. நானே இன்னைக்கு தான் முதல் தடவை பார்த்தேன். உன் வேலையை எல்லாம் அவங்க கிட்ட செல்லாதுடா"

"சரி எப்படி இருந்தாலும் உன் கல்யாணத்திற்கு ஆறு மாசம் இருக்கு. சோ நான் அதுக்குள்ள இங்க இருக்கிற வேலையை முடிச்சிறேன். அதுக்கு அப்புறம் உங்க கூட தான் இருக்க போறேன். ஆமா அந்த பொண்ணு பெயர் என்னடா"

"சொன்ன கேட்க மாட்ட நீ அந்த பொண்ணுகிட்ட அடி தான் வாங்க போற. அவங்க பெயர் சிவா டா. சரிடா நான் ரித்துகிட்ட பேசறேன். இன்னும் இரண்டு நாள் தான். அதுக்கு அப்புறம் ஆறு மாசம் கழிச்சு தான் பேச முடியும். பாய் டா", என அவன் போனை வைக்க,

இங்கு பிரகாஷ், “சிவா.. இந்த பெயரை சொல்லும் போதே எதோ பண்ணுதே" என நினைத்துக் கொண்டே தூங்க சென்றான்.

தொடரும்
நிலா ❤
 
Last edited:
உங்களுடைய "உண்மைக் காதல்
மாறிப் போகுமா"-ங்கிற அழகான
அருமையான லவ்லி நாவலை
மீண்டும் இங்கே படிக்கத் தந்ததற்கு
ரொம்பவே சந்தோஷம்,
கவி நிலா டியர்
 
Top