Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிகார்த்தி ‘ இளந்தென்றலோடு ஒரு கவிதை 19

Advertisement

இளந்தென்றலோடு ஒரு கவிதை 19

‘அனைவரும் அந்த ஐசியு வார்டில் முன் சோர்வும், கவலையுமாக இருந்தார்கள். யாருக்கு யார் ஆறுதல் சொல்லுவது என தெரியாமல் இருந்தார்கள். செல்வராஜோ தன் மனைவி எப்போது கண்விழிப்பாள் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்.’
மற்றவர்களோ, பார்வதி நன்றாக இருக்கிறார் என எப்போது மருத்துவர் சொல்லுவார் என்று எதிர்பார்த்தனர். அவர்கள் எதிர்ப்பார்த்தது போல் மருத்துவர் அந்த அறையில் இருந்து வெளிவந்தார்.



“டாக்டர் என் மனைவிக்கு...”



‘இப்போ அவங்க நல்லா இருக்காங்க... ஆனா அவங்களுக்கு மறுபடியும் இதே மாதிரி நடக்கமா பார்த்துக்கோங்க.’



“நாங்க போய் பார்க்கலாம டாக்டர்...”



‘ஒவ்வொருத்தரா போங்க. அவங்களை ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ண வேண்டாம்னு சொல்லுங்க.’



“முதலில் செல்வராஜூம், மேகலையும் சென்றனர். ‘ஆத்தா பார்வதி, நல்லா இருக்கியாம்மா...’ மேகலை மெல்லிய விசும்பலுடன் நலம் விசாரிக்க. ‘ பார்வதி, இப்போ எப்படி இருக்கும்மா... நான் பயந்துட்டேன் பார்வதி... ஒரு நிமிஷம் நீ என்னை விட்டு போயிடு...’ அவர் அடுத்த வார்த்தை என்ன பேசிருப்பாரோ, அதற்க்குள் பார்வதி அவரின் வாயில் கை வைத்து ‘வேண்டாம்’ என்பது போல் தலையசைத்தார்.




‘அவர்களுக்கு பின் ஒவ்வொருவராக பார்வதியை நலம் விசாரித்துவிட்டு சென்றனர். செவிலியரோ, பார்வதிக்கு கொஞ்சம் ஒய்வு வேண்டும் என சொல்லி சென்றார். லதா, லக்‌ஷ்மியை மட்டும் பார்வதிக்கு துணைக்கு வைத்துவிட்டு மற்றவர்கள் வீட்டிற்க்கு சென்றனர்.’





வீட்டில் அனைவரும் ஒய்வு எடுக்க, மேகலை மட்டும் ஹாலில் சாய்வு நாற்காலியில் படுத்திருந்தார். அப்பொழுது,




‘ஐய்யா,... ஐய்யா...’ என அழைத்தப்படி அந்த ஊரின் ஜோசியர் வந்தார்.



‘வாங்க ஜோசியரே... என்ன இந்த பக்கம்...’




“வணக்கம் அம்மா, ஐயா... இல்லைங்கிளா அம்மாவும், பார்வதி அம்மா என்கிட்ட ஜாதகம் பார்க்க வந்தாங்க. நம்ம தம்பியோட ஜாதகப்படி எப்போ நிச்சயமும், கல்யாணமும் வைச்சுக்கலாமுனு. ஆனா, ராகு காலத்துல ஜாதகம் பார்க்க முடியாது, அதனலா நாளைக்கு காலையில இந்த நேரத்துக்கு வர சொல்லிருந்தேன்.”




‘அவங்களும், வந்தாங்க... ஆனா அம்மா எனக்கு எப்படி சொல்லுறதுனு தான் தெரியலை...’




“என்ன ஜோசியரே ஏன் இந்த தயக்கம் என்னனு சொல்லுங்க.”




‘அம்மா, நம்ம தம்பி ஜாதக்கத்த பார்த்த போது ஒரு விஷயம் தெரிஞ்சது... தம்பியோட ஜாதகப்படி, இன்நேரம் தம்பி உயிரோடு இருக்க வாய்பில்லைனு தான் ஜாதகம் சொல்லுது. தம்பி இறந்து கிட்ட தட்ட நாள் கணக்கு, மாச கணக்கு ஆகிருக்கும் அம்மா.’ என உண்மையை போட்டு உடைத்தார்





மேகலைக்கோ, அதிர்சியாக இருந்தது... பேரன் தன் வீட்டில் உயிரோடு இருக்க. இந்த ஜோசியர் சிவா உயிரோடு இல்லை என்று சொல்லுகிறாரே. அப்போது என் வீட்டில் இருப்பவன் யார்?. அதுவும் என் பேரன் போலவே இருக்கிறவன் யார்? என அவர் யோசனைக்கு செல்ல.




’ அம்மா, இதை பார்வதி அம்மாகிட்ட எப்படி சொல்லுறதுனு தான் தவிச்சுட்டு இருந்தேன். அப்போ தான் பார்வதி அம்மாவுக்கு மயக்கம் வந்து மருத்துவமனையில சேர்த்திருக்கிறதா சொன்னாங்க.’





’ஆனா, அம்மா நம்ம வீட்டுல இப்போ நம்ம தம்பி உயிரோடு இருக்காங்க. ஆனா ஜாதகத்துல இப்படி சொல்லுது. என் முப்பது வருஷ ஜாதக கணிப்பில நான் பொய் சொன்னது இல்லைம்மா... இந்த ஜாதகப்படி நான் இப்போ உங்ககிட்ட சொன்னது எல்லாம் உண்மை.’




“ஜோசியரே...” என மேகலை ஏதோ சொல்ல போக.



‘அம்மா, என்னையும் உங்களையும் தவிர இந்த விஷயம் யார் காதுக்கும் போகாது என் தொழில் மேல சத்தியம்.’ என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார்.
ஆனால், மேகலையோ, அதிர்ச்சியாகவும், குழப்பமாகவும், அமர்ந்திருந்தார். ஏதோ நடக்கின்றது நம் வீட்டில், சிவா உயிரோடு இல்லை என்றால் இப்பொழுது என் வீட்டில் இஉர்ப்பவன் யார், அவனுக்கும் என் பேரனுக்கு என்ன சம்மந்தம். அப்போது தான் நாதன் மேகலையிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. ‘நம்ம பேரன் சிவா மாறி இருக்குற மாதிரி இருக்கு மேகலை’ என்ற சொல்லே சுற்றி வர.


அவருக்கு மேலும் குழப்பமாக இருந்தது, அந்த குழப்பத்திலேயே இருந்தவர், நேரடியாக நாதனிடம் இதை பற்றி கேட்க சென்றார்.



*******************



இங்க யாராச்சும் இருக்கீங்களா... ஹலோ... இங்க யாராவது இருக்கீங்களா... என அந்த அடர்ந்த காட்டில் தனுஷ் கத்திகொண்டிருக்க. அவனுக்கு பதில் சொல்ல ஒரு ஜிவன் மட்டுமே கையில் உயிரை பிடித்து வைத்திருந்தது.




‘இ...ங்...க... வா...ங்…க... பிளீஸ்.’ அந்த குரலை கேட்டதும் அவன் எங்கிருந்து வருகிறது என ஒவ்வொரு பக்கமும் தேட ஆராம்பித்தான்.




‘இ..ங்..க இருக்கேன்... என அவன் தேடுதலை பார்த்து அவனின் வலது பக்கம் இருந்து அவனுக்கு, அவளின் இருப்பை தெரிவித்தாள்.’




’அவன் திரும்பி பார்த்தவன் கண்ணுக்கு ஒரு நிமிடம் அதிர்ந்து அவசரமாக அந்த பெணுக்கு உதவி செய்ய ஆரம்பித்தான். ‘என்னாச்சு... ஏன் இப்படி முகம் எல்லாம் ரத்தமா இருக்கு. வாங்க ஹாஸ்பிட்டல் போகலாம்.’ என அவலை தூக்க முயல



“அவனின் சட்டை பிடித்து, அவள் காட்டிய திசையை அவன் பார்த்தான். அங்கோ, இன்னொருவன் கழுத்தறுக்கப்பட்டு, முதுகிலும், வயிற்றிலும் கத்தியால் குத்தப்பட்டு கிடந்தான். அவளை, கீழே விட்டுவிட்டு, அவனின் பக்கம் போனான் தனுஷ். அவனை தூக்கியபடி அவளின் அருகே வந்தவன், அவளின் அருகே படுக்க வைத்தான்.”





தன் அருகே உயிர்றறு கிடந்த காதலனை பார்த்தாள் தரணிதா. அவளுக்கு, சிவா உயிருடன் இல்லை என்பது புரிந்தாலும், மனது கேட்கவில்லை. இந்த நிமிடம் அவன் எழுந்துவிட மாட்டானா என அவள் நப்பாசைகொள்ள. ஆனால் அவன் தான் இறந்து இரண்டு மணி நேரம் ஆகிவிட்டதே.




“தனுஷ்க்கோ, அந்த இரவின் வெளிச்சத்தில் இரந்தவன் முகம் அவ்வளவாக தெரியவில்லை. ஏன், அவளுக்குமே அவனது முகம் அவ்வளவாக தெரிவில்லை.”
ஒரு வழியாக அவளையும், அவளின் காதலனையும் சிட்டி ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்தாகிவிட்டது. அவன் கொண்டு வந்து சேர்த்ததும், அவர்களுக்குக்காக, அவனே கையெழுத்திட்டான் அவர்களின் சிகிச்சை ஆராம்பமானது.




இரண்டு மணி நேரம் சிகிச்சை முடிய, மருத்துவர்கள் வெளியே வந்தனர். அவனை நோக்கி வந்த மருத்துவர் அவனிடம் ‘உங்க சொந்தம் பந்தம் யாரவது இருந்தாங்கனா சொல்லிடுங்க. ஏன்னா, அந்த பொண்ணு அவளோட இறுதி கட்டத்துக்கு நெருங்கிட்டு இருக்கா. அப்புறம் அந்த பையன் இறந்து மூனு மணி நேரம் ஆகிருச்சு.’ அவர் சொல்லியதும், அவன் எங்க யாரிடம் சொல்லுவது என தெரியாமல் அமர்ந்துவிட்டான்.



என்ன செய்வது, இவர்களின் சொந்தம் யார் என்று எனக்கு தெரியாது, அப்படி இருக்க யாரிடம் சொல்லியனுப்பவது. என ஒரு நிமிடம் யோசத்தவனின் முன் வந்தாள் ஒரு செவிலிப்பெண், ‘ சார், இந்தாங்க இறந்த பேஷண்டோட எல்லா பொருள்களும் இருக்கு, அப்புறம் இன்னொரு பேஷண்டோட பொருள் கரெக்டா இருக்கானு பாருங்க சார்’ என அவனிடம் ஒப்படைத்துவிட்டு சென்றாள்.




தனுஷோ, அதில் ஏதாவது அவர்களுக்கு உதவுமாறு பொருள் இருக்கா என்று பார்க்கலாம் என அவன் நினைத்து தேட, அவன் தேடியது கிடைத்தது. ஒரு செல் போன், அதில் ஒபன் செய்து கடைசியாக கால் செய்த நம்பரை பார்த்தான், அந்த எண்ணுக்கு கால் செய்தான்.




‘சிவா, இங்க எல்லாமே தயரா இருக்கு, நீ பயப்படாம வா. உனக்காக நான் காத்திட்டு இருக்கேன் சிவா.’ என தனுஷை பேசவிடாமல் கௌதம் பேசினான்.
‘ஹலோ, கௌதம் நான் சிவா இல்லை... தனுஷ்’, என அவனின் விபரம் சொல்லி, கௌதம்க்கு புரியும் படி எடுத்து சொல்லி, அவனை உடனடியாக கிளம்பி வரும் படி கூறினான்.



அவன் போன் பேசி முடித்ததும், வேகமாக அவன் அருகே ஒரு செவிலி பெண் வந்தாள், ‘ சார் அந்த பொண்ணு கண் முழிச்சுட்டாங்க ஏதோ பேர் சொல்லி கூப்பிடுறாங்க, வாங்க சார்.’ என அவனை அழைத்துகொண்டு சென்றாள்
’அவளின் அருகே சென்றவன் அவளை எப்படி அழைப்பது என தெரியாமல் பார்த்துகொண்டு இருந்தான். ஆனால், அவளோ, அவன் வருவதை உணர்ந்தார் போல் அவள் கண் முழிக்க, ‘சி..வா.., அவங்களை சும்மா வி...டா..த.., மு... த்... து...வே.. ல..வ...ன்..., அவன் தான் எல்லா த.. ப்..பு’ என அவள் திக்கி திணறி சொல்ல.


“அவளின் திணறலை பார்த்தவன் ‘உங்க ஃப்ரண்ட் கௌதம்கிட்ட சொல்லியாச்சு, இப்போ வந்திருவாங்க… கவலைப்பாடதீங்க.” என அவன் சொல்ல
‘அவளோ, அவன் கையை பிடித்து கொண்டு, அவனை அருகே இழுத்தாள், ஒரு கையில் தனது கழுத்தில் போட்டிருந்த செயினை கழட்டி, அவன் கையில் கொடுத்தாள்.’
அவளின் செயலில் புரியாமல், அவன் அதை கையில் வாங்கிகொண்டு அவளின் முகத்தை பார்க்க, அவளோ, அவனின் கையை பிடித்தபடியே கடைசி நிமிடத்தில் தன் உயிரைவிட்டாள்.



‘அவனோ, அவளின் அசையாத பார்வையில் அவள் உயிர் இப்பொழுது அவளது உடம்பில் இல்லை என்று உணர்ந்துகொண்டான். அவனது ஒரு கை அவளது கையிலும், மறு கையில், அவள் கொடுத்த செயின் இருந்தது.’
கௌதம் வந்த பின் அவனிடம் அவள் கொடுத்த செயின் மற்ற பொருள்களை எல்லாம் அவனிடம் கொடுத்துவிட்டு எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டான். கௌதமோ, தனுஷை பார்த்ததும், கொஞ்சம் ஆச்சர்யப்பட்டு, அடுத்து அவன் சிவா, தரணித்தாவை எங்கு பார்த்தான், என தனுஷ் முதலில் இருந்து சொன்னான், அவன் சொல்லிதை முழுதாய் கேட்டுகொண்டும், கடைசியாய், சிவாவும், தரணிதாவும் இறந்ததை அறிந்துகொண்டு துடித்துப்போன்னான்.




தனுஷ், அந்த இடத்தைவிட்டு சென்றபின் என்ன நடந்தது என அவனுக்கு தெரியாது. அடுத்த ஒரு வாரம் கழித்து தனுஷின் முகவரியை கொண்டு, தனுஷை தேடி வந்தார்கள் செல்வராஜூம், கௌதமும், வந்தார்கள்.
தென்றலை பற்றி நினைத்துப்பார்த்தவன், வேறு எதற்கோ நினைவுகள் போவது அவனுக்கு பிடிக்கவில்லை. தான் சிவாவின் இடத்துக்கு வந்தது தற்காலிகம் தான் ஆனால் எப்பொழுது மற்றவர்களுக்கு தான் சிவா அல்ல, வேறு ஒருவன் என தெரியவந்தாலும் ஏற்பட போகும் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என தெரியாமல் அவன் மட்டுமல்ல அவர்களும் தவித்துகொண்டிருந்தார்கள்.



**************


தேவி இப்படி அழுதுட்டே இருந்தா உன் தம்பி, போன் அட்டென் பண்ணிருவானா... கொஞ்சம் ரிலாக்‌ஷா இருமா. நானும் அவனுக்கு இரண்டு நாளா போன், மெசேஜ் பண்ணிட்டேன் இருக்கேன் ஆனா அவன் எடுக்கலை. அதுவுமில்லாம அவன் உங்க கிராமத்துக்கே போகலைனு அங்க இருக்குற என் பெரியப்பா சொன்னாங்க.” என் தனுஷின் மாமாவான சூர்யா மனைவியை சமதானம் செய்ய



‘அப்போ என் தம்பி எங்க தான் இருக்கான், ஊருக்கும் போகலை, வேற எங்க தான் போயிருக்கான். எனக்கு என் தம்பி வேணுங்க, அவன் ஒழுங்கா சாப்பிட்டானா, இல்லையானு தெரியாம இருக்கேன்.’ அழுதுகொண்டே தம்பியை பற்றி கவலைபட



’சரிம்மா, அழுகாத உன் தம்பி வந்திருவான், அவன் ஆஃபிஸ்க்கு போய் நான் விசாரிச்சுட்டு வரேன். அங்க யாராச்சுக்கும், தனுஷ் எங்க இருக்கானு தெரிஞ்சா நாமா அவனை பார்க்க போகலாம்.’ மனைவியை சமதானம் செய்தான்.



*************




”ஆமா, மேகலை நம்ம வீட்டுல இருக்குற தம்பி நம்ம பேரன் சிவா இல்லை. நம்ம சிவா இறந்துட்டான், அவனோட இடத்துல தான் இப்போ இந்த தம்பி சிவாவ நடிச்சிட்டு இருக்கான். எனக்கு இந்த உண்மை கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரியும்.” என நாதன் மேகலையிடம் உண்மையை மறைக்காமல் கூறினார்.



‘மேகலையோ, அதிர்ச்சியாக நாதனை பார்க்க. அவரோ சிவாவை பற்றிய அனைத்து உண்மைகளும் சொன்னார். நான் உன்கிட்ட மறைக்க காரணம் நம்ம குடும்பத்தோட சந்தோஷம் எந்தவிததிலும் உடைஞ்சு போயிடக்கூடாதுனு தான் நான் மறைச்சேன். எனக்கு மட்டுமில்ல நம்ம பையன் செல்வராஜூக்கும், கௌதமுக்கும் இந்த விஷயம் தெரியும்.’



’’எல்லாரும், என்கிட்ட மறைச்சுட்டீங்க... அப்போ இந்த பையன் நம்ம பேரன் இல்லையா? அய்யோ... என் மனசு கேக்கமாட்டேங்குது... அப்போ பார்வதிக்கு இந்த உண்மை தெரிஞ்சா அவ இன்னும் நொருங்கி போயிருவா. அவளுக்கு மட்டுமா, இந்த குடும்பமே நொருங்கிரும்.” என சொல்லிகொண்டு அழுக ஆராம்பித்தார்.




”நம்ம கையில எதுவும் இல்லை மேகலை, இந்த உண்மையை நீ நம்ம குடும்பத்துல இருக்குற எல்லாருகிட்டயும் சொன்னாலும் நல்லது தான். ஆனா நம்ம மருமகளை நினைச்சு பாரு, இப்போ வந்திருக்க மைல்ட் அட்டாக் இன்னொரு முறை வந்திட்டா, மருமகளை காப்பாத்தா முடியாது. இனி உன் விருப்பம் மேகலை, ஆனால்...’’ என அவர் நிறுத்த



‘மேகலையோ என்ன என்பது போல் பார்க்க...’


‘’நம்ம குடும்பத்தை நாம இழக்க வேண்டியது வரும். அது மட்டுமில்ல, அந்த பையனோட பாசம் நமக்கு கொஞ்ச நாள் கிடைச்சாலும், ஏதோ நம்ம பேரன் சிவாவோட இருப்பு நம்ம கூட இருந்த மாதிரி எனக்கு உணர்வு இருந்தது.’’ என அவர் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்



மேகலைக்கு தான் குழப்பமாக இருந்தது, என்ன செய்வது. இறந்த பேரனை பற்றி நினைப்பதா? இல்லை சிவாவை போல் இருக்கின்றவனை நினைப்பதா? இல்லை சிவாவின் மரணம் பற்றி யாருக்கும் தெரியாமல் மறைப்பதா? எல்லாம் பக்கமும் திரும்பினால் அடைத்த கதவு போல் இருந்தது அவரது யோசனை.



*********

’’அவசியம் நீ ஊருக்கு போகனுமா?’’ என தனுஷ், தென்றலிடம் கடைசியாக கேட்க.
அப்பாகூட கொஞ்ச நாள் இருந்திட்டு வரேன். அவரோட நான் இருந்தது கொஞ்ச வருஷம் தான் அதுவும் அம்மா இருந்தப்போ. இப்போ நமக்கு கல்யாணம் ஆகிருச்சுனா அவரோட இருக்குற நேரம் கிடைக்காமலும் போகலாம். அதான் அப்பாகூட கொஞ்ச நாள் இருந்திட்டு வரேன்.



‘’ அவனுக்கு, அவள் சொல்லியது சரி என பட்டாலும், அவளை பிரிவது, அவனுக்கும் உள்க்குள் வருத்தமாக தான் இருந்தது ஆனால் அவள் முன் காட்டவில்லை.’’


‘சரி, பார்த்து போயிட்டு வா... நானும் இரண்டு நாள் ஊருக்கு போகலாம் நினைக்குறேன். ஆபீஸ்ல லீவ் சொன்னது முடிய போகுது, அப்படியே அக்காவ பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன்.’ அவன் சொல்ல.



“சரிங்க போயிட்டு வாங்க, ஊருக்கு போகும் போது எனக்கு கால் பண்ணுங்க.”
‘ம்ம்... சரி...’



தொடரும்………..






 
Top