Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிகார்த்தி ‘ இளந்தென்றலோடு ஒரு கவிதை 16

Advertisement

இளந்தென்றலோடு ஒரு கவிதை 16

“என்ன டி எக்‌ஷாம் எப்படி எழுதுன...” என சங்கவி, தேர்வு முடித்து வந்த தென்றலை பார்த்து கேட்க.
‘ஏதோ... எழுதுனே..., நீ எப்படி எழுதிருக்க’



சேம் டி... ஆனா பாஸ் பண்ணுற அளவுக்கு எழுதிருக்கேன். அவளும் சேர்ந்து கொண்டே பேசிகொண்டே கல்லூரியின் பேருந்து நிறுத்ததிற்க்கு வந்து சேர்ந்தார்கள்.





‘ஊருக்கு கிளம்புறேன் டி... ஊருல திருவிழா நடக்குது. நீயும் வரியா சங்கவி.’ அவளையும் அழைக்க.





“ நானா... அப்பாக்கிட்ட கேக்கனும்... அவரு ஓகே சொல்லிட்டா நான் வரேன். எந்த ஊரு திருவிழா டி”





‘முத்தலாமன் கோவில் திருவிழா டி... ரொம்ப விசேஷ்மா இருக்கும் டி. ஊரு பேரு முத்தலாபுரம் ஊரு டி’ தென்றல் சொல்ல.





நான் அப்பாகிட்ட கேட்டு உனக்கு மெசேஜ் சொல்லுறேன் டி. எங்க உன் ஆள காணோம், இன்னேரம் நீயே போய் பார்க்கனும் அடம்பிடிச்சிருப்பியே. சங்கவி, தனுஷை பற்றி கேட்க.






’அவரு கிராமத்துல இருக்கேனு சொன்னாங்க. இன்னும் அவரு வேலை முடியலை போல. அப்போ அப்போ நான் போன், மெசேஜ் பண்ணுவேன், அவங்களும் ஃப்ரியா இருந்தா போன் பண்ணுவாங்க.’ அவனை பற்றி பேசினாலே என்ன செய்து கொண்டு இருக்கிறானோ என்று தான் யோசிக்க தோன்றியது.






”ஹாய் சிஸ்டர், எப்படி இருக்கீங்க.” அவர்களுக்கு முன் பைக்கில் வந்து நின்றான் சுந்தர்





‘அண்ணா, எப்படி இருக்கீங்க. நான் நல்லா இருக்கேன்’ தென்றல் அவனை நலம் விசாரிக்க. சங்கவியோ அவர்கள் இருவரையுமே வேடிக்கை பார்த்துகொண்டிருந்தாள்.






நான் ரொம்ப நல்லா இருக்கேன் சிஸ்டர். எப்படி போகுது காலேஜ் லைப்.




‘இன்னையோட காலேஜ் ஃலைப் முடிஞ்சது அண்ணா. உங்களுக்கு எப்படி போகுது ஆபிஸ் ஃலைப்’.





போகுது சிஸ்டர், வேலை முடிஞ்சா வீடு. வீடு விட்டா ஆபிஸ்னு போகுது சிஸ்டர், தனுஷ் இருந்தாலும் எனக்கு நேரம் போகும். இப்போ அவனும் ஒரு வாரம் தான் லீவ்னு சொன்னவன், அந்த லீவ் அஹ் எக்ஸ்டன் பன்ணிருக்கான். என்ன ஏதுனு, அவன்கிட்ட கேட்டா எதுவும் சொல்ல மாட்டாறான் சிஸ்டர். உங்களுக்கு எதுவும் தெரியுமா சிஸ்.’ அவளிடம் கேட்க





’என்ன சொல்லுறீங்க அண்ணா, ஒரு வாரம் லீவ்னு சொல்லி, இப்போ அந்த லீவ் அஹ் எக்ஸ்டன் பண்ணிருக்காங்களா?’





‘ஆமா சிஸ்டர்...’




”என்கிட்ட எதுவும் சொல்லலை அண்ணா. அப்படியே நான் கேட்டாலும், அவங்க சொல்லவும் மாட்டாங்க. இப்போகூட என் வீட்டுல எங்க காதல் பத்தி சொல்லி மேரேஜ் பண்ணுறத்துக்கு பர்மிஷன் வாங்கியாச்சு. ஆனா, அவங்க கிராமத்துல இருக்கேன், கொஞ்ச நாள் டைம் கொடு வீட்டுல பேசிட்டு சொல்லுறேனு சொல்லுறாங்க.”




‘அப்படியா சிஸ்டர் ரொம்ப சந்தோஷம். சரி சிஸ்டர் வேற எதுவும் சொன்னா எனக்கு சொல்லுங்க. முக்கியமான ப்ராஜெக்ட் வந்திருக்கு, இது அவன் எதிர்பார்த்த ஆஃபர். அதை பத்தி கொஞ்சம் அவன்கிட்ட பேசனும். நானும் அவன் கிட்ட பேசுனா உங்ககிட்ட சொல்லுறேன் சிஸ்டர்.’





“ சரிங்கண்னா... ட்ரை பண்ணுறேன்.” தென்றலிடம் பேசிவிட்டு அவன் விடைபெற்று சென்றுவிட்டான்.




தென்றல் மனதில் பல யோசனைகள். ஒரு வாரம் லீவ் சொல்லிட்டு, அந்த லீவ் அஹ் எக்‌ஷ்டன் பண்ணுற அளவுக்கு அப்படி என்னாச்சு. கிராமத்தில் இருந்து அவன், அவளிடம் பேசிய பொழுதுகளை நினைத்துப்பார்த்தான். ஒரு சமயம் கோவமாகவும், ஒரு சமயம் கொஞ்சமே பாசமாகவும் பேசியது.






’தென்றல், சுந்தர் சொல்லுறத வச்சு பார்த்தா உன் ஆளுக்கு ஏதோ பிரச்சனைனு மட்டும் தெரியுது. அவருக்கு அக்கா மட்டும் தானு சொன்னாரு, ஆனா இப்போ ஏன் கிராமத்துக்கு போகனும், அப்படியே போனாலும் ஒரு வாரம் திரும்பி வரவேண்டியவரு, இரண்டு மாசம் இருக்க வேண்டிய காரணம் என்ன.’ சங்கவியும் சேர்த்து சொல்ல, தென்றலின் மனதில் பல குழப்பங்கள்.




**************
ஏன் அகல்யா, சிவா அண்ணாவ கல்யாணம் செய்ய விருப்பம் இல்லைனு சொன்னா. கவி கேட்க
அந்த ரகசியம் தான் யாருக்கும் இன்னும் வரைக்கு தெரியலையே. லாவன்யா சொல்ல
அகல்யா யாரையாவது விரும்புறாலோ? கௌசி வினாவ



அப்படி இருந்த எல்லார் முன்னாடியும் சொல்லிருக்கமாட்டாளா கௌசி. என ப்ரவீன் பதில் சொல்ல.





இப்படி நமக்குள்ள கேள்வி கேட்டு பதில் சொல்லிட்டுருந்த குழப்பமாகும். அதனால் அவகிட்டயே கேட்கலாம் அவ நம்மகிட்ட கண்டிப்பா மறைக்காம உண்மைய சொல்லுவா. என வருண் கூற.






ஆமா, அகல்யாகிட்ட கேட்கலாம்... ஆனா அவ நம்மகிட்ட பதில் சொல்லலனா என்ன பண்ணலாம் என மறுபடியும் கவி ஆரம்பிக்க.





கண்டிப்பா நம்மகிட்ட மறைக்கமாட்டா சொல்லுவா. லாவன்யா உறுதியாக சொல்ல. அனைவரும் மாடியில் இருந்து அகல்யாவை பார்ப்பதற்க்கு அவளது அறைக்கு சென்றனர்.






அனைவரும் தன்னை தேடி வந்திருப்பது அவளுக்கு பயத்தை கொடுத்தாலும், அவர்களிடம் எந்த உண்மையும் அவள் மறைத்ததில்லை.





‘எல்லாருக்கும், நான் ஏன் சிவா மாமாவ கல்யாணம் பண்ண விருப்பம் இல்லைனு சொன்னதுக்கு காரணம் தெரியனும் அவ்வளவு தான.’ அவர்களின் முகம் இந்த கேள்வியை தாங்கி வந்திருப்பது அவளுக்கு தெரியாமலா இருக்கும்.





ஆமா... அகல் ஏன் அப்படி சொன்ன. லவன்யா கேட்க





‘தாத்தா, தான் என்கிட்ட சிவாவ கல்யாணம் செய்ய விருப்பம் இல்லைனு சொல்ல சொன்னாங்க.’ அவள் சொல்ல.





என்னது தாத்தாவா... என அனைவரும் அதிர்ச்சியாக இருக்க, அவள் பேச ஆரம்பித்தாள்.



‘கோவிலுக்கு போயிட்டு வந்தபின்னாடி, நம்ம குடும்பத்து பெரியவங்க எல்லாரும், எனக்கும், சிவா மாமாக்கும் நடக்குற கல்யாணத்தை பேசினாங்க. தாத்தா, என்கிட்ட அன்னைக்கு ராத்திரி சிவாவ, கல்யாணம் பண்ண விருப்பம் இல்லைனு சொல்ல சொன்னாங்க.’





ஏன் சொல்ல சொன்னாரு கேட்டியா அகல்யா. என ப்ரவீன் கேட்க.




‘இல்லை அண்ணா... என்கிட்ட இதை மட்டும் எல்லார் முன்னாடியும் சொல்லிடுமானு சொல்லிட்டு போயிட்டாரு. எனக்குமே சிவாவ மாமாவ கல்யாணம் செய்ய உண்மையா விருப்பம் இல்லை. சிவாவ மாமாவே என்னை கல்யாணம் செய்ய விருப்பம் இருந்ததை சொல்லிருந்தாலும் நான் விருப்பம் இல்லைனு தான் சொல்லிருப்பேன்.’





கௌசி நிச்சயம் முடிஞ்சது, சிவா மாமா என்கிட்ட தாங்க்ஸ் சொன்னாங்க. நான் எதுக்குனு கேக்குறதுக்குள்ள அவங்களுக்கு போன் வந்திருச்சு. அடுத்து நான் அவங்களை பார்த்து பேசலை. அகல்யா சொல்லி முடித்தாள்
அம்மா, ஊருக்கு கிளம்புற நேரம் வந்திருச்சு... நான் ஊருக்கு போயிட்டு கல்யாணத்து இரண்டு வாரம் இருக்குற மாதிரி கிளம்பி வரோம். பசங்களுக்கு படிக்குற நேரம், அப்புறம் தேர்வுனு சொன்னாங்க. நாங்க மாலையில கிளம்புறோம். என சேது சொல்ல





நாங்களும் கிளம்புறோம் அத்தை... வேலை எல்லாம் அப்படியே இருக்கு கல்யாணத்துக்கு செய்யவேண்டிய வேலைகளும் பார்க்கனும். அப்படியே எங்க தொழிலையை நாங்க பார்க்கனும். என ராஜேஷூம், பிராபகரனும் சொல்ல.





சிறிவர்களுக்கு தான் முகம் கவலையாக போனது. இந்த ஒரு வாரம் எப்படி இருந்தது, அருகருகே அவரவர் ஜோடிகளை யாருக்கு தெரியாமல் சைட் அடித்துகொண்டும், பேசிகொண்டும் இருந்த நாளை அவர்கள் மறக்க முடியாதே.






இதில் அதிகம் கவலையானது கவி தான். ப்ரவீன் வேலையின் காரணம் மும்பை செல்வதால் அவள் தான் அவனிடம் பேச முடியாமல், பார்க்க முடியாமல் தவித்து போவாள். கௌசியின் கல்யாணத்துக்கு கூட அவன் வருவது குறைவு தான் என அவன் பேசிகொண்டிருந்த போது அவள் எதர்ச்சையாக கேட்டுவிட்டாள்.
ப்ரவீனுக்குமே அந்த வருத்தம் இருந்தது. ஆனால் கவியிடம் சொன்னால் அவள் அதற்க்குமேல் வருத்தம் கொள்வாள். அதனால் தான் அவளிடம் அந்த ஒன்றை மறைத்தான், எப்படியாவது கௌதம், கௌசியின் கல்யாணத்திற்க்கு வருவதற்க்கு முயற்சி செய்தாவது அவளுக்காக வரவேண்டும் என முடிவெடுத்துகொண்டான்.





இரண்டு காரில் சேதுவின் குடும்பம், மற்றும் பிரபாகரன் ராஜேஷின் குடும்பமும் ஊருக்கு கிளம்பியது. கௌசியிடம், கௌதம் ‘ஊருக்கு போயிட்டு உனக்கு போன் பண்ணுறேன்.’ என் சொல்லிவிட்டு சென்றான்.




***************


சிவாவுக்கு இப்பொழுது தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அனைவரும் இருந்தாலும், ஒரு பக்கம் பயமாக இருந்தது. ஆனால் மூன்று குடும்பம் ஊருக்கு கிளம்பியதில் அவனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.



‘நிம்மதியாக இருந்தவனை அவனது கைப்பேசி கலைத்தது. யார் என்று பார்த்தவன் சின்ன புன்னகையுடன் போனை அட்டென் செய்தான்.’




“சொல்லுங்க மேடம் எக்‌ஷம் எப்ப்டி பண்ணுனேங்க.”



‘ம்ம்... நல்லா எழுதிருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க.’




“எனக்கென்ன நான் நல்லா இருக்கேன். அப்புறம் உங்க வீட்டுல என்ன சொன்னாங்க நம்ம கல்யாணத்தை கொஞ்சம் தள்ளி போடுறதை பத்தி.”




‘உங்க பிரச்சனை முடியட்டும் சொல்லிருக்காங்க. இப்போ நான் ஊருக்கு வந்திருக்கேன் என் பாட்டியோட ஊரு முத்தலாபுரம் கிராமம்’





“அவனுக்கோ, அங்கயா? அந்த ஊருக்கா வந்திருக்க” அவன் திகைப்பாக கேட்க.





‘ஆமா... அங்க தான் இருக்கேன் ஊரு திருவிழா.’ அவள், அவனுக்கு பதில் சொன்னாலும், அவனின் பேச்சில் இருந்த அதிர்ச்சியை சரியாக கண்டுகொண்டாள்.





”சரி...”




‘தனுஷ், நீங்க என்கிட்ட எதாவது மறைக்குறீங்களா, எதாவது உங்களுக்கு பிரச்சனையா.’



”ஏன் கேக்குற... நான் என்ன உன்கிட்ட மறைக்க போறேன்.”



‘சுந்தர் அண்ணாவ பார்த்தேன், அவங்க நீங்க லீவ் எக்‌ஷ்டன் பண்ணிருக்கீங்கனு சொன்னாங்க.’ அவள், சுந்தர் பேசியதி சொல்ல.




“ஓ... சரி... உன்கிட்ட நான் எதாவது மறைச்சா அது என் சொந்த விஷயம் தென்றல், அதை பத்தி உனக்கு தெரிய வேண்டாம்.” அவளிடம் கோவம் கொள்ளாமல் அவளுக்கு புரியும்படி பேசினான்.




‘சரிங்க...’ என பேச்சை முடித்தாள்.



சிவா... சிவா... என்ன பண்ணுறப்பா, என பார்வதி அவனின் அறைக்கதவை தட்ட.



“இதோ வரேன்ம்மா... சரி தென்றல் நான் அப்புறம் பேசுறேன். அவளிடம் அவசரமாக பேசிவிட்டு வைத்தான்.”
என்ன சிவானு கூப்பிடுறாங்க... இவங்க பேரு தனுஷ் தானே. இவரும் வரேன்மானு சொல்லுறாங்க, ஒரு வேலை கிராமத்துல இருக்க ஒன்னுவிட்ட பெரியாம்மவ தான் இவரு அம்மானு கூப்பிடுறாரோ. அப்படி இருந்தாலும் யாரவது அம்மானு கூப்பிடுவாங்களா... பெரியம்மா தானா கூப்பிடுவாங்க. அவனது போனில் கேட்ட குரலையும், அவர் தனுஷை அழைத்த விதமும் தென்றலுக்கு இன்னும் குழத்தை ஏற்படுத்திகொண்டே இருந்தது.





**************



அவனிடம் வீராப்பாக தந்தையிடம் பேசிவிட்டு அவனுக்கு பதில் சொல்கிறேன் என சொல்லிவிட்டாச்சு. ஆனால் தன்னை பார்க்க கூட தனது தந்தை வரமாட்டார் என அவனுக்கு தெரியாதே. இதை எப்படி அவனிடம் சொல்லுவது, பெரியாப்பாவிடமும், பெரியம்மாவிடமும் அவளின் காதலை சொல்லிவிடலாம் தான், அவர்களும் ஒத்துகொண்டு, பெரியவர்களிடமும் சம்மதம் வாங்கி கொடுத்துவிடுவார்கள் தான் ஆனால் தனது தந்தையிடம் எப்படி சொல்லுவது என்று தான் தெரியவில்லை.





யோசனையில் இருந்தவளை கலைத்தது அவளது கைப்பேசி தான், அழைத்தது அவளது தோழி சங்கவி.



‘சொல்லு சங்கவி, உடம்புக்கு எப்படி இருக்கு’



‘இப்போ பரவாயில்ல டி... காலேஜ்ல முக்கியமான சப்ஜெக்ட் எடுத்தாங்களா, அதுக்கான நோட்ஸ் கொடு டி.’




“நாளைக்கு காலேஜ் வந்து வாங்கிக்கோ”.




‘சரி, நீ ஏன் டல்லா பேசுறா. உன் ஆளு திட்டிட்டானா.’




“ஒன்னுமில்லை டி, வீட்டுல அவங்களுக்கும் எனக்கும் கல்யாணம் பேச்சை எப்படி ஆரம்பிக்குறதுனு தெரியாம இருக்கேன். அதை பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன்.”




‘கல்யாணம் வரை போயிட்டானா... அப்போ சரி.’




இருவரும் பேசிகொண்டிருக்கும் போதே தனுஷ், தென்றலுக்கு அழைக்க. போனில் பீப் சத்தம் கேட்டு தென்றல் பார்த்துவிட்டு, சங்கவியிடம் அப்புறம் பேசுவதாக சொல்லிவிட்டு, அவனுக்கு அழைத்தாள்.



‘சொல்லுங்க எதுக்கு போன் பண்ணிருந்தீங்க.’




“சங்கவிக்கிட்ட பேசிட்டு இருந்தியா.”




”ஆமாங்க... இன்னைக்கு காலேஜ் அவ வரலை அதான், நோட்ஸ் பத்தி கேட்டுட்டு இருந்தா.”




‘சரி... நாளைக்கு உன் காலேஜ் பக்கத்துல இருக்க ஹோட்டலுக்கு வந்திரு.’




”ம்ம்... சரி”




என்ன ஒரு வார்த்தையில பதில் சொல்லுறா. இன்னும் கோவம் போகலையா அவளுக்கு. அவன் மனதில் நினைக்க.




‘வேற எதாவது சொல்லனுமா’ அவள் கேட்க.




“ஏன், சங்கவிக்கிட்ட பேசனுமா? இல்லை, என்கிட்ட பேச பிடிக்கலையா?”




‘உங்ககிட்ட பேச பிடிக்கலைனு நான் எப்போ சொன்னேன். நீங்க என்கிட்ட ஒட்டாத மாதிரி பேசுறீங்க. நான் ஏதாவது காதல் வசனம் பேசிட்டா, அப்புறம் உங்களுக்கு கோவம் வந்திரும்.’




“என்னை கோவப்படுத்தாத மாதிரி பேசு, நானும் உன்கிட்ட பேசுறேன்.”




‘ம்ம்ம்... இதெல்லாம் நல்லா பேசுறீங்க.’




“சரி, நாளைக்கு மீட் பண்ணலாம்...”இதற்க்கு மேல் பேசினால் மறுபடியும் ஆரம்பித்துவிடுவாள் என அவன் போனை வைத்துவிட. அவளுக்கு , ஏன் தான் மனது கோவத்திலும், காதலிலும் அவன் பக்கமே நிற்க்கிறது என தெரியவில்லை. தலையிலேயே அவளது போனை வைத்து அடித்துகொண்டாள்.”




‘தலையில் அடித்துகொண்டிருந்த போனில் மெசேஜ் வந்ததுக்கான சத்தம் கேட்க. வேகமாக ஓபன் செய்து பார்த்தாள் ‘எதையும் நினைக்காம, ஒழுங்க என்னை மீட் பண்ணுறதுக்கு சூப்பர் ட்ரெஸ் போட்டு வா. குட் நைட் தென்றல்’ என அவன் அனுப்பிருக்க.




சிரித்துகொண்டே, அவனுக்கு பதில் மெசேஜ் அனுப்பிவிட்டு உறங்கி போனாள்.




தொடரும்………….
 

Advertisement

Top