Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிகார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 30.2 இறுதி பகுதி

சரியாக அந்த நேரத்தில் அவர்கள் அறையின் கதவு தட்டப்பட, எழுந்து சென்று கதவை திறந்தாள்.


“என்ன ம்மா குளிச்சிட்டியா... இந்த உனக்கும், கண்ணாவுக்கு காஃபி எடுத்துட்டு வந்தேன். கண்ணன எழுப்பிவிட்டு குளிக்க சொல்லு, அப்படியே காஃபி கொடும்மா.”“சரிங்க அத்தை..” அவர் கையில் இருந்ததை வாங்கி கொண்டு உள்ளே சென்றாள்.காஃபியை ட்ரேவை டீபாயின் மீது வைத்துவிட்டு அவள் நிமிர அவன் எழுந்திரிக்க சரியாக இருந்தது.“குளிச்சிட்டு வா.. வாங்க.. காஃபி குடிக்க.” அவள் தயங்கி அழைக்க“அது ஒன்னு தான் குறை... எனக்கு காஃபி வேண்டாம்… நீ குடி, நான் குளிச்சிட்டு வரேன்..”அவன் பேச்சில் அவள் அதிரவில்லை, சரி என தலையசைத்துவிட்டு அவள் காஃபியை எடுத்துகொண்டு பால்கனியில் நின்று நிதானமாக குடித்தாள்.இருவரும் ரெடியாகி கீழே ஒன்றாக வந்தனர். பாதி விருந்தினர் சென்றிருந்த நிலையில் சுதா மட்டும் விசலாட்சியுடன் இருந்தார். வித்யா கீழே வந்தவள் சாமியறையில் விளக்கேற்றி, கடவுளை வணங்கிவிட்டு விசலாட்சி இருக்கும் சமையல் அறைக்கு சென்றாள்.”வாம்ம்... டிபன் ரெடி.. நீ ஸ்வீட் மட்டும் பண்ணு.. முதல் முறை செய்ய போற அதான் ஸ்வீட்ல இருந்து ஆரம்பிக்கனும்.” என சொல்ல அவளுக் ரவா கேசரி செய்ய ஆரம்பித்தாள்.ஜோடியாக அமர வைத்து விசலாட்சியும், சுதாவும் பரிமாறினர். உண்டதும் விதுரன்,


“ம்மா.. வெளியே போயிட்டு வரேன்..”“சரி கண்ணா, கொஞ்சம் சீக்கிரம் வந்திரு.”“ம்ம்.. நான் வரேன்” அவளிடம் எங்கோ பார்த்துகொண்டு சொல்லிவிட்டு அவன் சென்றான்.தன்னிடம் தான் அவன் சொல்லிவிட்டு சென்றானா என்ற ரீதியில் அவள் இருக்க, அவன் கிளம்பிவிட்டான்.சுதாவும், விசலாட்சியும் வித்யாவுக்கு அந்த வீட்டின் பரம்பரியத்தையும், அவர்கள் முன்னோர்களின் வாழ்க்கை முறைகளையும் சொல்லினர். அதை கேட்டு அவள் ஆச்சர்யமாகவும், வியப்பாகவும் பார்த்தாள்.விஸ்வநாதனின், விசலாட்சியின் காதல் கல்யாணமும், அவர்கள் எப்படி இந்த வாழ்க்கையில் முன்னேறி வந்தனர் என்பதையும் சுதா சொல்ல அதையும் அவள் வியப்பாக கேட்டாள்.“எப்படி அத்தை அந்த நிலைமையிலும் மாமாவை விட்டுகொடுக்காம காதலிக்க முடிஞ்சது உங்களால. க்ரேட் உங்க காதல், அப்போ மாமா உங்களை வெறுத்திருப்பாங்க.”“ம்ம்.. ரொம்ப ... ஆனா அவர் எந்த நிலையில இருந்தாலும் நான் வேணும். அவர் திட்டுனாலும், வெறுத்தாலும் நான் ஒதுங்கி போககூடாதுனு நினைப்பாரு. என்கிட்ட தான காட்ட முடியும் அவரோட ,கோவம், வெறுப்பு, இதெல்லாம் வேற யார்க்கிட்ட அவர் காட்ட முடியும். வாழ்க்கையில எந்த சூழ்நிலையிலையும் நான் அவரை விட்டுறக்கூடாதுனு எனக்குள்ள ஒரு வெறி, அது தான் எங்க காதல். அவர் என்னை திட்டுனாலும், வெறுத்தாலும், அடுத்த நிமிஷம் என் மடியில சாஞ்சு அவர் தூங்கலைனா அவருக்கு தூக்கம் வராது.”“ரொம்ப அழகான காதல் உங்களது அத்தை..”“ம்ம்.. அதே மாதிரி தான் என் மகனும் உன்மேல அதைவிட காதல் வச்சிருக்கான். அதை நீ புரிஞ்சுக்க வேணாம் உணர்ந்தா போதும் வித்யா.” அவர் சொல்லிவிட்டு சென்றார்.வீட்டின் டெலிபோன் பெல் அடிக்க, விசலாட்சி அதை எடுத்து காது கொடுத்தார். அந்த பக்கம் என்ன செய்தி சொல்லப்பட்டதோ...“என்ன... எப்படி.. என்னங்க..” அவர் கத்திய கத்தில் வித்யா, சுதா மேலிருந்து கீழ் இறங்கி வந்தனர்.“என்ன.. விசலாட்சி.. என்னாச்சு..”“நம்ம கண்ணா.. நம்ம கண்ணாவுக்கு ஆக்ஸிடண்டுனு சொல்லுறாங்க.” அவர் சொல்லி மயக்கம் போட வித்யா அதிர்ச்சியானாள், விஸ்வநாதன் மனைவியை தாங்கி சோபாவில் படுக்க வைத்து மீண்டும் மகனின் போனிற்க்கு கால் செய்தார்.அனைவரும் விரைந்து மருத்துவமனைக்கு சென்றனர். வித்யாவோ அழுதுகொண்டே விசலாட்சியின் பின் சென்றாள்.“இங்க விதுரன் ஆக்ஸிடன் கேஸ்” என விஸ்வநாதன் விசாரிக்க“ஓ.. அதுவா வலது பக்கம் திரும்பினா இரண்டாவது ப்ளோர்.”அனைவரும் அந்த தளத்திற்க்கு சென்ற போது சட்டையில் ரத்த கறையுடன் ஒருவன் நின்றிருந்தான். அவனின் அருகில் சென்று,


“என் பையன் விதுரன்..”“நீங்க அவரோட அப்பாவா..”“ஆமா..”“சின்ன விபத்து தான் சார் கையிலையும் அடி கொஞ்சம் பலமா இருக்கு.”“அய்யோ கண்ணா, சின்ன அடிக்கே அவனுக்கு வலிக்குமே.. இப்படி அடி பலாம இருந்தா அவன் தாங்க மாட்டானே என் கண்ணா.” விசலாட்சி அழுது புலம்ப“விசலாட்சி கொஞ்சம் உன் அழுகையை நிறுத்து.. நம்ம பையனுக்கு எதுவும் இல்லை.””அம்மா, உங்க பையனுக்கு எதுவும் ஆகாது.. இன்னும் கொஞ்ச நேரத்துல டாக்டர் வந்திருவாங்க.. அவங்ககிட்ட விசாரிக்கலாம்.” விசலாட்சியை சமாதான செய்தான் அந்த புதியவன்.அவன் சொன்னது போல் மருத்துவர் வெளியே வர, அவரை சூழ்ந்துகொண்ட விதுரனின் குடும்பம்,”டாக்டர் என் மகனுக்கு” என ஆரம்பித்த விசலாட்சியிடம்“ஒரு பயமும் வேண்டாம், அவருக்கு அடி எதுவும் பலமா விழலை.. இப்போ மயக்கத்துல இருக்காங்க.. இன்னும் கொஞ்சம் நேரத்துல கண் முழிச்சதும் நீங்க பார்க்கலாம்.” அவர் சொல்லிவிட்டு சென்றார்.“எப்படி அடிப்பட்டது தம்பி என் மகனுக்கு” என விஸ்வநாதன் கேட்க“சார் , அவர் காரை எடுக்க ரோட்டுக்கு வந்தாரு எதிர் வாக்குல லாரி ஒன்னு பிரேக் பிடிக்காம ஹாரன் அடிச்சிட்டு வந்திருக்கு அதை அவர் கவனிக்கலை, நான் தான் அவரை பிடிச்சி இழுக்கும் போது சரியா அவர் கார்ல லாரி மோதி கார் கதவு தனியா பறந்து வந்து அவர் மேல விழுந்திருச்சு.. அடுத்து அவரு மயக்கமாய்ட்டாரு நான் தான் ஹாஸ்ப்பிட்டல் வந்து சேர்த்துவிட்டேன் அப்படியே அவர் போன்ல மை ஹோம்னு நம்பர் இருந்தது அதை பார்த்து தான் உங்களுக்கு கால் பண்ணேன் சார்.” அவன் விளக்கு கூறினான்.”ரொம்ப நன்றி தம்பி, கடவுள் உருவுல என் மகனை காப்பாத்துனதுக்கு.” என விசலாட்சி கையெடுத்து கும்பிட“என்ன ம்மா என்னை போய்.. உதவி தான் செய்தேன்.. அதுக்கு என் அம்மா வயசுல இருக்க நீங்க என்கிட்ட கையெடுத்து கும்பிட எல்லாம் கூடாது. நான் கிளம்புறேன் சார்.” அவர்களிடம் இருந்து விடைபெற்றான்ஒரு மணி நேரம் கழித்து கண் விழித்தவனை சுற்றி அனைவரும் சூழ்ந்து கொண்டு அவனிடம் பேசிகொண்டிருந்தனர். வித்யா மட்டும் ஒரு ஓரத்தில் அவனை பார்த்துகொண்டு நின்றிருந்தாள். அவள் மனதில் தான் வந்த அடுத்த நாளே இப்படி ஒரு சம்பவமா என அவள் நினைக்க. அவள் ஓரத்தில் நிற்பதை பார்த்து அவன் அவளை பார்க்க, அவள் அவனுக்கு அடிப்பட்ட கையை பார்த்துகொண்டிருந்தாள்.விஷ்யம் அறிந்து அனைவரும் விதுரனை பார்க்க வந்துவிட்டனர். அனவரும் அவனை நலம் விசாரிக்க, அவன் இருந்த அறையில் ஓரத்திலே வித்யா இருந்தாள் அவன் அருகில் கூட அவள் போகவில்லை. அதை யாரும் கவனிக்கவில்லை.பவானி, ராம் என அவர்கள் பங்குக்கு வந்து அவனை பார்த்துவிட்டு சென்றனர். அப்பொழுது கூட அவள் அவன் அருகில் வரவில்லை. ஒரு வழியாக விசலாட்சி விதுரனுக்கு துணைக்கு வித்யாவை இருக்க சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பினார்கள்.”வித்யா.. ஏன் இப்படி அங்கயே நிக்குற..”“இல்லை.. நான் இங்கயே நிக்குறேன்... இல்லனா உங்களுக்கு எதாவது ஆகிடும்..”“ச்சீ லூசு... என் பக்கத்துல வா வித்யா..”


“இல்லை வேண்டாம்..””நீ வரலைனா நான் இறங்கி நடந்து வந்திருவேன்.. ஏற்கனவே எனக்கு கால்ல அடிபட்டு இருக்கு.”அவனை கெஞ்சவிடாமல் அவன் அருகில் அவள் சென்றாள் அவனின் அருகில் அமர்ந்து கொண்டாள்.“என்ன உன்னால தான் இப்படி எனக்கு ஆச்சுனு நினைச்சிட்டு இருக்கியா.” அவளின் நினைப்பை சரியாக கணித்தான்.“ம்ம்..”“என்மேல தான் தப்பு, நான் தான் கவனிக்கலை.. அதை புரிஞ்சுக்கோ.. ”“ஐம் சாரி.. என் கோவம் தான் உங்களை இப்படி செய்யுது.. நீங்க சொல்லுற மாதிரி நானே உங்களைவிட்டு விலகுறேன்.”“ம்ம்.. விலகி என்ன செய்ய போற.. இந்த ஊரைவிட்டு எங்க போவ.”“எங்கயாவது போவேன்.. நீங்க நல்லா இருக்கனும்.”“இதே வாய் தான் நான் நல்லா இருக்கமாட்டேனு சொல்லுச்சு.. எனக்கு தண்டனையெல்லாம் கொடுத்துச்சு. புனிதாகிட்ட என்னைபத்தி திட்டுச்சு.”“அப்போ உங்களை பிடிக்கலை….”“இப்போ?””பிடிக்கலை தான்.. ஆனா என் கணவனா உங்களை ஏத்துக்க நான் தயராகிட்டேன்.. உங்க காதல் எனக்கு தெரியுது.. ஆனா என்னால காதலிக்க முடியுமானு தெரியலை... ஆனா உங்களைவிட்டு பிரிய முடியாது மட்டும் எனக்கு புரியுது.”“ம்ம்.. இதெல்லாம் நான் கல்யாணம் செய்யுறப்போ சொல்லிருந்தா நல்லா இருக்கும்.. இப்போ சொல்லி..”“நேத்து என்கிட்ட என்ன சொன்னேனு நியாபகம் இருக்கா” என அவன் கேட்கநேற்றைய இரவில்.“மனசுக்கு பிடிச்சு உங்களை ஏத்துக்கலை… ஆனா உங்க கையால தாலி வாங்குன பின்னாடி அதை கழட்டி கொடுக்க எனக்கு மனசு வரலை... இப்போ நான் இந்த கட்டில்ல உங்களுக்காக படுத்தா என் உடம்ப மட்டும் தான் நீங்க தொட முடியும், என் மனசை இல்லை...” அவள் பேசிகொண்டிருக்கையிலே அவன், அவளை கைநீட்டி அடித்துவிட்டான்.“என்ன சொன்ன, கேவலம் உன் உடம்புக்கா... பைத்தியகாரி.. அது வேனும்னா நான் வேற பொண்ணுகிட்ட போயிருப்பேன்.. எனக்கு தேவை உன் காதல், என் காதலை நீ புரிஞ்சுக்கனும் அது மட்டும் தான். ஆனா நீ.. ச்சீ.. உன்னையெல்லாம் காதலிச்சதே தப்புனு உணர வச்சுட்ட.. இனி என் காதல் உனக்கு இல்லை.. எல்லார் முன்னாடியும் கல்யாணம் செய்தாலும் இந்த ரூம்ல நீ வேற, நான் வேற நியாகபகம் வச்சுக்கோ.” அவனை கோவபடுத்திவிட்டு அவள் நன்றாக தூங்கினால். ஆனால் அவனோ தூங்காமல் விழித்திருந்தான் விடியல் வரை.”அப்படி பேசுனா நீங்க என்னைவிட்டு போக மாட்டீங்கனு நினைச்சேன்.. ஆனா இப்படி ஆகும் நினைக்கலையே.”“சரி நீ காதலிக்க வேண்டாம்.. நான் காதலிக்குறேன்.. என் காதலை ஏத்துப்பியா..” மருத்துவமனையில் முதல் முதலாக அவளிடம் காதலை சொல்ல“யோசிக்குறேன்.. காதலிக்க.. ஆனா உங்க மனைவியா என்னைக்கு நான் உங்களைவிட்டு போகமாட்டேன்.” அவனின் கரத்தில் தன் கரத்தை வைத்து அவள் சம்மதம் சொன்னாள்.“உங்களுக்கு எப்படி தெரியும் புனிதாகிட்ட நான் பேசுனது. ஆமா புனிதா எங்க ஆளையே காணோம்.”“நான் கேட்க்கலை, அவங்க தான் சொன்னாங்க... இப்போ அவங்க மாமியார் வீட்டுல இருக்காங்க..” புனிதா பற்றி கூறினான்.அப்போது தான் வித்யா யோசித்தால் அன்று புனிதா கோவிலில் செய்த செய்கையில் இன்று அதற்கான பலன் கிட்டியது போல்.அவன் காதலை கட்டயமாக சொல்லி, கல்யாணம் செய்தாலும். அவளை எந்த நிலைக்கு அவன் வற்புறுத்தவில்லை. புரிதலான காதல் விசலாட்சியின் வார்த்தையிலும், கண்ணிலும் இருப்பதை உணர்ந்து அவளும் இப்படி தான் என்னை காதல் செய்ய வேண்டும் என நினைக்கும் மனம் அனைவருக்கும் இருக்கும். அதே போல் அதான் விதுரனும் நினைத்தான்.அவன் செய்த செயலில் தவறு இருந்தாலும் அவன் தவறானவன் இல்லையே. அவன் காதல் மட்டுமே என்னிடம் வேண்டினான். புரிதலில் காதல் அதிகம் இருக்கும் அதே போல் தான் அவன் காதலில் புரிதல் அதிகமாக இருந்தது. அவளுக்கும் புரிந்தது, விதுரன் மீது காதல் இனி மலர ஆரம்பம் ஆகும்..“என்ன யோசிக்குற..”“உடனே அம்பாள் கோவிலுக்கு போகனும்.” அவள் சொல்ல“எதுக்கு”“நான் வேண்டுதல் வைக்கனும்” என புனிதாவின் வேண்டுதலை கூறினாள்“உன்னை.. இன்னும் நான் உன்னை காதலிக்க ஆரம்பிக்கலையாம் இதுல வேண்டுதல் வைக்க போற.”“அப்போ இனி காதலிக்கனுமா...” அவளின் அதிர்ச்சியே முதலில் இருந்து ஆரம்பமா என்பது போல் இருந்தது.“ஆமா..” அவளின் அதிர்ச்சியை பார்த்து அவன் மகிழ்சியாக பார்த்துகொண்டிருந்தான்.”முதல்ல வேண்டுதல், அடுத்து காதல், அடுத்து நம்ம வாழ்க்கை.”“நோ... என் காதல் அடுத்து வேண்டுதல்.” அவன் சொல்ல“நான் அத்தைகிட்டயே பேசிக்கிறேன்..”


”போ.. என் அம்மாவும் எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க..”


“இப்போ அத்தை என் கட்சி... போங்க போய் அத்தைகிட்டயே கேளுங்க.” அவளும் சொல்லஇருவரும் சண்டை போட்டுகொண்டு அவர்களின் காதலை ஆரம்பித்தனர். இனி அவர்களின் வாழ்க்கை என்றும் காதலுடனும், மகிழ்சியுடனும் இருக்கும்..முற்றும்…..

 
Advertisement

Advertisement

Top