Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிகார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 24

இளந்தென்றலோடு ஒரு கவிதை 24பொருளை உருட்டும் சத்ததில் கண் விழித்தாள் வித்யா. யாரது இந்த நேரத்தில் சத்தம் எழுப்பிக் கொண்டிருப்பது என தூக்கம் கலைந்து எழுந்தாள். விதுரனோ, கம்பெனியில் முடிக்க வேண்டிய வேலையை நேற்று பாதியில் விட்டு விட்டு வந்ததால் அதை இன்று கண்டிப்பாக முடித்துகொடுக்க வேண்டும். அதற்க்கு தான் அங்கும் இங்குமாய் அலைந்து ஃபைல் டாக்குமெண்டை எடுத்து சரியாக வைத்துகொண்டிருந்தான்.விதுரன் ஆஃபீஸ்க்கு ரெடியாக இருப்பதை பார்த்த வித்யாவோ கட்டிலில் சாய்ந்து படுத்துகொண்டு அவனையே பார்த்துகொண்டிருந்தால். அவள் தன்னை கவனிக்கிறாள் என்ற நினைவே இல்லாமல் அவனின் வேலை சம்மந்தப்பட்டவையை எடுத்து வைத்தவனின் நினைவு ஏதோ ஒரு ஃபைல் தவறவிட்டோமோ என்ற நிலையில் யோசனை செய்தான்.”சார்... காஃபி கொண்டு வந்திருக்கேன்” என புனிதாவின் குரலில் அவன், அறையின் கதவை திறந்து வாங்கிகொண்டு,
“புனிதா, மார்னிங்க் டிபன் எனக்கு வேண்டாம், வித்யாவுக்கு மட்டும் என்ன வேனும் கேட்டு செய்து கொடுங்க. அப்புறம் எனக்கு மதிய உணவும் வேண்டாம். ஈவ்னிங் வர்ரதுக்கு தாமதம் ஆனலும் ஆகலாம். அதனால் அவளுக்கு பிடிச்சதை செய்துகொடுங்க, அவகூடவே நேரம் செலவழிங்க... அவளை தனியா விடாதீங்க.”
“சரிங்க சார்.” அவள் சொல்லிகொண்டு சென்று விட. காஃபி ட்ரேயை வாங்கி கொண்டு அமர்ந்தான். தனது காஃபியை அவன் எடுத்து ஒவ்வொரு மிடறாக அவன் குடிக்க. அவளோ, “அப்படி என்ன சார்க்கு முக்கியமான வேலை சாப்பிடகூட முடியாத அளவுக்கு.” அவள் நினைக்க
”அவன் சாப்பிட்ட என்ன, சாப்பிடமா இருந்தா உனக்கென்ன... நீ தான் அவனை பழிவாங்கிட்டு இருக்கேயே.” என அவளது இன்னொரு மனம் எடுத்துரைக்க.
“ஆமல இவன் சாப்பிட்ட எனக்கென்ன சாப்பிடாம இருந்த எனக்கென்ன நல்ல பட்னி கிடக்கட்டனும்...”
“நான் ஆஃபீஸ் கிளம்புறேன்... பார்த்துக்கோ. தேவையினா இந்த நம்பர்க்கு கால் பண்ணு, கீழ லேண்ட் லைன் இருக்கு.”
“நீயே எனக்கு தேவையில்லை, இதுல என்ன தேவைக்கு உனக்கு நான் கால் பண்ணுவேனு நினைக்குற.”


இப்படி காலையிலேயே அவளிடம் பேச்சு வாங்குவது தனக்கு தேவை தான்... இதற்க்கு மேலும் இவளிடம் பேசி மனதில் அடி வாங்குவதைவிட பேசாமல் கபெனிக்கு சென்று முடிக்க வேண்டிய வேலை பார்க்கலாம். அவன் நினைத்துகொண்டு அவளிடம் எதுவும் பேசாமல் ஆஃபீஸ் கிளம்பிய படி அறையைவிட்டு வெளியேறினான்.
புனிதாவிடம் மீண்டும் ஒரு முறை அவளை பார்த்துகொள்ள வேண்டும் என சொல்லிவிட்டு காரில் ஏறி அவன் ஆஃபீஸ்றிக்கு கிளம்பினான்.
கார் ஓட்டிகொண்டிருந்தவன் மனம் மிகவும் லேசாக இருந்தது. காலையில் கண் விழிக்கையில் தன் மீது போர்வையும், தலையிக்கு அடியில் தலையனையும் இருந்ததை குழப்பமாக பார்த்தான். இரவில் அவள் எனக்கு தூங்குவதற்க்கு எதையும் கொடுக்கவில்லையே. பின் எப்படி போர்வை, தலையனை வந்தது. என அவன் சிந்திக்க, அவளை தவிர வேறு யார் இதை அவனுக்கு செய்ய போவது. முடிவில் உறுதி செய்துகொண்டு புன்னகையுடன் குளியல் அறைக்கு சென்றான்.
அவன் தயார் ஆகும் வரையிலும் அவள் எழுந்திரிக்க வில்லை. அவளை பார்த்துகொண்டே தன் சிகை அலங்காரமும், கையில் வாட்சும் கட்டிகொண்டே முன் இருந்த கண்ணாடி வழியே ரசித்தான்.“தேடி தேடி உன்னை காதலித்தேன்... உன் பெயரை தவிர வேறெதுவும் எனக்கு தெரியவில்லை. ஆனால் உன்னை மாற்றானுக்கு விட்டுகொடுக்க முடியாததால் தானே நான் அப்படி ஒரு காரியம் செய்தது. இதை என்று தான் நீ புரிந்துகொள்வாயோ. அன்று உன்னை என் தாய் தந்தையிடம் முறையாக அழைத்து செல்வேன்.” மனதில் அவளிடம் பேசுவது போல பேசினான்.கார் சரியாக அவனது இடத்தில் வந்து நிற்க, அதே நேரம் ராமும் அவன் பின்னயே அவனது பைக்கை நிறுத்தினான்.“என்ன மச்சான்... ரொம்ப சந்தோஷமா இருக்க போல” ராம் கேள்வியாக கேட்க.
“அதில என்ன சந்தேகம் சந்தோஷமா தான் இருக்கேன். முதல் முறையா என் வித்யாவோட மனசு எனக்கு புரிய ஆரம்பிச்சிருக்கு.”
“அப்போ சரி... இனி சம்சாரம் மின்னசாரத்தை போல இருக்க போகுதுனு சொல்லு.”
“உனகேன் டா பொறாமை... அப்போ நீ ரோகினைய மின்சாரமுனு சொல்லுற. இரு தங்கச்சிகிட்ட போட்டுகொடுக்கிறேன் அப்போ தான் நீ ஒழுங்க பேசுவ.”
”ஏன் டா... ஏன்... நான் நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா.” வடிவேலு பாணியில் அவன் கேட்க
“அப்போ ஒழுங்க ஆஃபீஸ் வேலைய பார்க்கலாம் வா.” அவனை இழுத்துகொண்டு உள்ளே சென்றான்.
காலையில் எழுந்தது முதல் விசலாட்சியின் மனம் சோர்ந்து இருந்தது. மகன் இன்னேரம் எழுந்திரிப்பானோ, சாப்பிடுருப்பானோ ஒழுங்கா சாப்பிடானா இல்லையா... இரவு முழுவது தூங்குனானோ இல்லை வேலை வேலைனு அலைஞ்சானோ. என யோசனையில் மூழ்கி இருந்தவரை அழைத்தா விஸ்வநாதன்.
“இந்தாங்க காஃபி... இன்னைக்கு ஆஃபீஸ் லேட்டா கிளம்புறீங்களா.”
”ஆமா... விசலாட்சி மீட்டிங்க் நேத்தே முடிஞ்சதே. அதான் இன்னைக்கு லேட்டா போகலாம் நினைச்சேன். ஏன் மா... வேற எதாவது என்கிட்ட பேசனுமா.”
”ஆமாங்க... சுதா அண்ணி நம்ம பையனுக்கு ஒரு வரன் கொண்டு வந்திருக்காங்க.” சுதா சொல்லிசென்றவை எல்லாம் அவரிடம் சொல்லி முடித்தார்.
“ரொம்ப நல்ல விசயம் தானே... நேத்தே ஏன் என்கிட்ட சொல்லலை.”
“நீங்களே களைப்பா வந்தீங்க அதனால் தான் கொஞ்சம் தாமதமா சொல்லலாம் நினைச்சேன். ஆனா...”
”என்ன ம்மா... அந்த வரன் உனக்கு பிடிச்சிருக்கா...”
“இல்லைங்க... நம்ம பையன் மனசுல ஏதோ ஓடுது... அதை என்னனு கண்டுபிடிக்கனும். அவனுக்கு இந்த வரன் பிடிக்கலைனா என்ன பண்ணுறது. நாமலா பேசி முடிவு செய்யகூடாது அவன்கிட்ட ஒரு வார்த்தை பேசி பார்க்கலாம்”
“சரிம்மா... அவனுக்கு பிடிச்சா தான் இந்த கல்யாணம் நடக்கும். அதுக்கு முன்னாடி அவன் மனசுல என்ன இருக்குனு அவனே சொல்லட்டும். நாமா அவனை வற்புறத்த கூடாது.”“ம்ம் சரிங்க....”
“உங்களுக்கு என்ன சமையல் பிடிக்கும்னு சொல்லுங்கம்மா நான் செய்து தரேன்.” என புனிதா தோட்டத்தில் நின்றிருந்த வித்யாவிடம் கேட்க.விரக்தியாக சிரித்துகொண்டே “இங்க எல்லாம் எனக்கு பிடிச்சா நடக்குது, இதுல எனக்கு பிடிச்ச சமையல் செய்யுறேனு வந்து என்கிட்ட கேக்குற.”
“அம்மா நான் ஒன்னே ஒன்னு சொல்லுறேன்... சக மனுஷியா நீங்க என்னை நினைச்சா நான் சொல்லுறதை காது கொடுத்து கேட்ப்பீங்களா.”
“என்ன... சொல்லு”“என்ன தான் பிடிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அவர் தான் உங்க புருஷன்... ’இடையில் பேச வந்தவளை’ கோவம் படாதீங்கம்மா. இது என்னைக்கு மாறாது... எவ்வளவோ கல்யாணம் பிடிச்சு நடந்தாலும் அது நிலைக்காம போயிருக்கு. ஆனா சார் உங்களை எவ்வளவு காதலிக்குறானு எனக்கு தெரியாது. அவரோட காதலை நீங்க புரிஞ்சுக்க வேண்டாம். யார் யார்கிட்டயோ மன பாரத்தை சொல்லுறோம், அதே மாதிரி உங்க மனசுல என்ன நினைக்குறீங்க அவர்கிட்ட வெளிப்படையா சொல்லுங்க, அவர்கிட்டயும் கேளுங்க. பதில் தெரிந்தா உங்க இரண்டு பேருக்கும் இடையில இருக்க பிரச்சனை சரியாகும். உங்களை கட்டாயாப்படுத்தி அவர் கல்யாணம் செய்திருந்தாலும், அவர் பக்கம் ஏதாவது ஒரு காரணம் இருக்கும் கேளுங்க... இல்லை அவர பேச வையுங்க. ஒருத்தர் ஒருத்தர் மனம்விட்டு பேசுனா தீராத பிரச்சனை கூட தீர்ந்திடும்மா..
மனசு முழுக்க வெறுப்ப வைச்சுகிட்ட ஒருத்தர்கூட என்னைக்கும் வாழ முடியாது. காதல்ல தோத்து போறவங்க கூட இது தான் காரணம் சொல்லி விலகிடுவாங்க. வாழவே ஆராம்பிக்காத நீங்க ஏன் வெறுப்ப சுமக்கனும். ஒன்னும் அவர்கிட்ட மனசுவிட்டு பேசுங்க, இல்லை அவர வெளிப்படையா பேச வையுங்கம்மா.”
”அவர் வீட்டுக்கே என்ன விஸ்வநாதன் ஐயாவோட பரம்பரையில இவர் தான் மூத்தவர். எவ்வளவு பெரிய பணக்காரர் தெரியுமா? ஆனா அதுக்கு எனக்கு சம்மந்தம் இல்லைனு மாதிரி அவர் வேற கம்பெனில வேற ஒருத்தனுக்கு கீழ வேலை பார்க்குறார். ஆயிரம் தொழிலாளிக்கு சம்பளம் கொடுக்குறவரு இவரு. ஆனா அப்பா சொத்துல நான் சமம்மா வேலை பார்க்கமாட்டேனு சொல்லி வெளிய வேலை பார்க்குறாரு. அப்படி இருக்குறவரு உங்களை கண்டிப்பா உயிருக்கு உயிரா காதலிச்சுப்பாரு. ஏதோ எனக்கு தெரிந்ததை சொன்னேன்... நீங்க அதை ஏத்துகிறது ஏத்துக்காதது உங்க விருப்பம்.”புனிதா பேசி சென்றது அவளுக்குள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு சென்றது போல இருக்கிறது. தோட்டத்தில் அமர்ந்தாள், மொட்டை மாடியின் நிழல் ஊஞ்சலில் அமர்ந்தாள், அவர்களது அறையின் பால்கனி ஊஞ்சலில் கூட அமர்ந்து யோசித்துப்பார்த்தாள் புனிதா சொல்லி சென்றதை.
முடியும் தருவாயில் இருந்த ப்ராஜெக்ட்டை சக்ஸசாக முடித்துகொடுத்துவிட்டு. அனைவரின் முன் அதை முறையாக விவரித்துகொண்டிருந்தான். அவனின் இந்த ப்ராஜெக்ட்டில் புதிதாக ஒப்பந்தம் ஆகிருந்த கம்பெனியின் முதலாளி அவனது ப்ராஜெக்ட்டில் வியந்து போனார். அடுத்த ப்ராஜெக்ட்டும் இந்த கம்பெனியே செய்துகொடுக்க வேண்டும் என மற்றொரு ஒப்பந்தமும் உடனே போடப்பட்டது அவனின் முன்னினலையில்.
ப்ராஜெக்ட் வெற்றி பெற்றதில் அனைவரும் அவனையும், அவனின் டீம்மையும் வாழ்த்தி சென்றார்கள். அந்த நேரத்தில் தான் அவனது தந்தை அழைத்தார்.
“அப்பா என் ப்ராஜெக்ட் வெற்றியடைந்துவிட்டது... எனது மூன்றான் வெற்றி இது. உங்களுக்கு சொல்ல தான் நினைத்தேன் நீங்களே அழைத்துவிட்டீர்கள் அப்பா.”
“ரொம்ப சந்தோஷம் விதுரா... அப்போ இன்னைகே நீ நேரா வீட்டுக்கு வந்திரு.”
“சரிங்க அப்பா... ஆனா வேலை இருந்தால் தாமதம் ஆகும்.”
“வேலை முடித்து எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை நேரே வீட்டுக்கு வந்திவிடு விதுரா. அம்மா உன்னை காணமல் தேடுகிறாள், சரியாக சாப்பிடுவது இல்லை.” தாயை பற்றி சொன்னால் அவனால் வராமல் இருக்க முடியாது.
“நான் வரேன் ப்பா...” அவனின் ஒற்றை பதிலில் அவர் அழைப்பை கட் செய்தார்.
என்ன செய்வது இன்று நான் வித்யாவுடன் இருக்கவா? இல்லை அம்மாவுடம் இருக்காவா? மூன்று நாட்கள் ஆனது அம்மாவையும், அப்பாவையும் பார்த்து... போனில் மட்டுமே பேசிகொண்டிருக்கிறேன். வித்யாவிடம் சொல்லிவிட்டு போகலாமா இல்லை, சொல்லாமல் போகலாமா. என அவன் யோசிக்க
“மச்சான், கங்க்ட்ராட்ஸ் டா விதுரா... உன் ப்ராஜெக்ட் பார்த்து அந்த கம்பெனிகாரன் வாய பொழந்து பார்க்குறான். எனக்கு தெரியும் நீ கண்டிப்ப ஜெயிப்பனு.” நண்பனை கட்டி தழுவி வெற்றியை கொண்டாடினான்.
“அப்பா வீட்டுக்கு வர்ச்சொல்லுரார் டா ராம்.”
“போடா... அதுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்...”

இவனுக்கு விசயமே தெரியாதே... இவனிடம் எப்படி வித்யாவுக்கும், எனக்கு நடக்கு தண்டனையை பற்றி எப்படி சொல்லுவது. என்ன தான் நண்பனாக இருந்தாலும் இதை அவனிடம் சொல்லுவது தவறு.
“என்ன யோசிக்குற... விட்டுக்கு சீக்கிரம் போயிட்டு வித்யாவோட போய் தங்கு. அவ தனியா இருப்பா, என்ன தான் புனிதா, துணைக்கு இருந்தாலும் அவளும் உன்னை தேடுவா, சண்டை போடுறாதுகாவது.” நண்பனின் மனது எதை நினைக்கிறது என்று சரியாக கணித்து சொன்னானோ இல்லையோ, ஆனால் நீ வித்யாவுடன் இருப்பதே நல்லது என்ற மாதிரி சொல்லிசென்றான் ராம்.
அவனை பார்த்து இன்றுடன் மூன்று நாட்கள் ஆகிவிட்டது. உறங்கும் போது வருவான், விழித்த பின் கண் முன்னே இருப்பதில்லை. புனிதா தான் ரொம்ப பெரிய ப்ராஜெக்ட்னு சார் போன்ல பேசிட்டு இருந்தார்னு சொல்லிட்டு போன. ஆனா அவன் என் கண்ணுல படாத அளவுக்கு முக்கியமான வேலையா இருக்குமோ. அவளும் யோசித்தாள், “என்ன ம்மா ஜூஸை குடிக்காம அப்படியே வச்சிருக்கீங்க.”
“இதோ குடிக்குறேன்...” யோசனையில் இருந்த் மீண்டவாளாய் அவள் பதற.
“அம்மா, இன்னைக்கு வெள்ளிகிழமை பூ வாங்கி தொடுத்தேன். கொஞ்சம் திரும்புங்க நான் தலையில வச்சுவிடுரேன்.” அவளின் பதிலை எதிர்பார்க்காமல் அவளின் தலையில் பூவை அதிகமாக வைத்துவிட்டாள்.
“இப்போ தான் அழகாக இருக்கீங்க...”
“இன்னைக்கு வெள்ளிகிழமையா புனிதா...””ஆமா அம்மா... ஏன்”
”இங்க அம்பாள் சந்நிதி எதுவும் இருக்கா..”“நம்ம வீட்டுக்கு பக்கத்துல ஒரு கோவில் இருக்கும்மா.”“நாம போகலாம் நீ ரெடியா இரு சரியா” அவளிடம் சொல்லிவிட்டு சென்றாள்.
”என்னாச்சு கண்ணா, ஏன் இவ்வளவு நாள் வீட்டுக்கே வரமா இருந்திருக்க. வேலை இருந்தாளும், நீ அதெல்லாம் முடிஞ்ச பின்னாடி வீட்டுக்கு வருவா. ஆனா இந்த மூன்று நாளா உன்னை பார்க்கா இந்த அம்மா தவிச்சுட்டேன் கண்ணா. உன் மனசுல வேற எதாவது இருந்தா சொல்லுப்பா...”
“அம்மா... அப்படியெல்லாம் இல்லை... வேலை தான் அதிகமா இருந்தது. நானும் உங்களை பார்க்க முடியுமா தவிச்சேன்... ஆனா வேலையில கவனமா இருந்தா தான நல்லபடியா முடிச்சுகொடுக்க முடியும் அதனால் தான் ம்மா.”“விதுரா இனி அங்க வேலை பார்த்தது போது... ஒரு நல்லா நாளா பார்த்து என் கம்பெனில பொறுப்பு ஏற்றுக்கோ. இதுவரை நான் பொருத்திருந்தது போதும். ராம் உன்னோடவே வேலைப்பார்க்கட்டும், அவனையும் வேலையை ரிஷைன் பண்ண சொல்லு.” விஸ்வநாதன் சொல்ல.இதென்ன புது அதிர்சியா இருக்கு, அந்த கம்பெனில வேலை பார்த்தா தான் என்னால இரண்டு வேளையாவது வித்யாவ பார்த்துட்டு வரமுடியும். அப்பாகூட கம்பெனி பொறுப்பு ஏத்துக்கிட்டா அவளை பார்க்க கூட போக முடியாது. புது சோதனையா இருக்கே... என்ன பண்ணுறது.“அப்பா, நினைச்ச உடனே எல்லாம் வேலையை ரிஷைன் பண்ண முடியாது ப்பா. இப்போ எனக்கு புது ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கு என் முயற்சில. என் கம்பெனி எம்.டி என் வேலை பார்த்து புது பிராஜெக்ட் என்னால தான் கிடைச்சதுனு என்னை தலையில தூக்கி வச்சு கொண்டாட குறை மட்டும் தான். இதையே என் நம்பிக்கையோடு அடுத்த ப்ராஜெக்ட்டையும் நல்லபடியா முடிச்சுகொடுக்கனும் ப்பா. அதனால கம்பெனி பொறுப்பை இப்போதைக்கு என்னால ஏத்துக்க முடியாது.”
“என்ன கண்ணா, அப்பாவும் இன்னும் எவ்வளவு நாள் தான் ஓடுவாறு. அவரும் கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டாமா... நீ இப்படியே தள்ளி போட்டுட்டே போனா அப்பா பாவம் கண்ணா.”“அம்மா, உங்க மனசு புரியுது... ஆனா, என் முயற்சில நான் என்னைக்கும் தோற்க்க கூடாதும்மா. இன்னும் கொஞ்சம் நாள் தான் அடுத்து நானே அப்பா என்ன சொல்லுறாறோ அப்படியே நான் கேட்க்குறேன் ப்ராமிஷ் ம்மா.” தாயின் கையை பிடித்துகொண்டு பேசியவனை விஸ்வநாதன் இன்னும் பெருமை கொள்ள பார்த்தார்.தோட்டத்தில் பெஞ்சில் அமர்ந்திருந்த ராமை பார்த்தவாறு அமர்ந்தாள் ரோகினி. “என்ன இன்னைக்கு உங்க ஜாக்கிங் ஜான்சிய பார்க்க போகலையா... இப்படி உட்கார்ந்திருக்கீங்க.”“எங்க ரோகிமா... அவளோட புருஷன் தினமும் வர்ரான் அவகூடவே ஜாக்கிங். அதான் இன்னைக்கு நான் போகலை, நாளைக்கு எப்படியும் வரமாட்டான் அப்போ போய் பார்த்துகிறேன் நான்.”“அது என்ன நாளைக்கு வரமாட்டான்...புரியல”“நாளைக்கு தான் சண்டேல அப்போ வீட்டுல அவன் சமையல் தானா அப்போ அவன் வரமாட்டான்ல.”
“உங்களை திருத்த முடியாது... போயும் போயும் உங்களை கல்யாணம்
பண்ணிக்கிட்டேனே. என்ன சொல்லனும்... அமெரிக்கா மாப்பிள்ளை, கனடா மாப்பிள்ளை, லண்டன் மாப்பிள்ளைனு என் அப்பா வெளிநாட்டுல இருந்தெல்லா எனக்கு மாப்பிள்ளை பார்த்தாரு. என் கிரகம் உங்களை தான் கட்டிக்கிட்டா கட்டுவேனு சொல்லி அடம்பிடிச்சு கட்டுனேன் தேவை தான் எனக்கு.” கோவை சரளா போல புலம்ப”என்ன ரோகிமா இப்படி சொல்லிட்ட, உன்னை வெளிநாட்டுக்கு கடத்தவா உன் பின்னாடியே சுத்தி காதலிச்சேன்.” அவன் காதலை எடுத்துவிட“போதும்... உங்க காதல் கதை எல்லாம். ஏன் டல்லா இருக்கீங்க, என்னாச்சு... கம்பெனில கூட உங்க ப்ராஜெக்ட சக்‌ஷஸ் புல்லா முடிஞ்சதுனு சொன்னீங்க. அப்புறம் என்ன?””அது... ஒன்னுமில்ல... ரோகிமா.. விதுரன் பற்றி தான் கொஞ்சம் மூளையில ஓடிட்டு இருந்தது.”“என்ன விதுரன் அண்ணாவுக்கு...””கல்யாணம் பண்ணா வர்ர பிரச்சனை தான்... அவனுக்கு இப்போ வந்திருக்கு.”“என்ன... கல்யாணமா...விதுரன் அண்ணாவுக்கா... எப்போ நடந்தது... எங்க நடந்து...”ஆராம்பம் முதல் நேற்று வரை நடந்த அனைத்தையும் சொல்லிமுடித்துவிட்டு ரோகினியை பார்த்தவன் பயந்து தான் போனான்.“ஏய்... ஏன் டி உன் முகம் மாறுது...”“என்ன காரியம் பண்ணிருக்கீங்கனு உங்களுக்கு தெரியுமா. இது மட்டும் பவானிகு தெரிஞ்சா அந்த பொண்ணு கழுத்துல இருக்க தாலியை கழட்டி விதுரன் கையில கொடுத்துட்டு அவளை அவங்க அப்பா, அம்மாகிட்ட விட்டு வந்திருவா.”“தெரியும்... ஆனா பவானிக்கு தெரியாது விதுரனுக்கு கல்யாணம் ஆனது.”“அப்போ, அங்கில், ஆண்டிக்கு?”


“தெரியாது...”


“ம்கும்... விருப்பம் இல்லாத பொண்ண கல்யாணம் செய்து. அவளை யாருக்கும் தெரியாம ஒளிச்சு வச்சீருக்கீங்க. அந்த பொண்ணு அம்மா, அப்பா வந்து கேட்ட என்ன சொல்லுவீங்க.””அவன் பார்த்துப்பான்... அவனுக்கா சமாளிக்க தெரியாது.”“நான் பவானிக்கிட்ட சொல்லுரேன்.””போய் சொல்லு... விதுரன் கஷ்ட்டப்படுறதை நீயும் பார்க்கனும்மானா சொல்லு.”“பாவம் இல்லையா அந்த பொண்ணு.”“என் நண்பன் பாவம் இல்லையா... அவன் உயிருக்கு உயிரா காதலிச்ச பொண்ண எப்படி அவன் அடுத்தவனுக்கு கொடுக்க முடியும்.”“சரி... ஆனா, அந்த பொண்ணோட மனசு என்னாகும் உங்களுக்கு தெரியுமா. தேவையில்லாம வெறுப்பு, பழிய சுமக்கும் விதுரன் அண்ணா மேல.”“விதுரன் காதலை கண்டிப்பா அந்த பொண்ணு புரிஞ்சுப்பா. அப்போ பழியும் இருக்காது, வெறுப்பும் இருக்காது.”“எல்லா கேள்விக்கு நீங்க பதில் சொல்லலாம். ஆனா, அந்த பொண்ணுக்கு விதுரன் அண்ணா தான் பதில் சொல்லனும்.” சொல்லிவிட்டு எழுந்து உள்ளே சென்றாள்.”கடவுளின் முன் அனைவரும் அடிமைகள் தான்... அதில் நல்லவன் கெட்டவன் என யாரும் பிரிக்க முடியாது. அது போலவே சாமியின் சன்னநிதியில் அவள் மனம் உருக வேண்டினாள். கண்களில் கண்ணீர் வடிவதைகூட பொருட்படுத்தாமல் வேண்டியவளின் முன் கற்பூரத்தட்டை காட்டியபடி நின்றிருந்தார் பூசாரி.“என்ன குழந்தை... ஏன் இந்த கண்ணீர்... அம்பாளிட்ட கண்ணீர் விடுற அளவுக்கு உன் கஷ்ட்டம் பெரிசா என்ன.” அவர் சொல்ல


“வேண்டியவளின், கண்கள் திறந்து தன் முன் நீட்டப்பட்ட கற்பூரத்தட்டை பார்த்து கண்ணீல் ஒத்திக்கொண்டாள்.”


“எவ்வளவு துன்பம் வந்தாலும், அது உனக்கான சோதனைனு நினைச்சுக்கோ. புதுசா கல்யாணம் ஆனா பொண்ணு இப்படி அழக்கூடாது குழந்தை. இந்த குங்குமம் நெற்றிக்கும், தாலிக்கும் இட்டுக்கோ... இந்த பிரசாத்தை உன் ஆம்படையானுக்கு கொடு, அவரும் உன் துணைக்கு இருப்பாரு.” என அவர் சொல்லிவிட்டு சென்றார்.


கோவிலின் தூணில் சாய்ந்திருந்தவளின் மனம் ஒவ்வொரு வெள்ளியிலும் தாய், தந்தையருடன் செல்லும் வழக்கம் உள்ளது. அதன் நினைவு தான் இன்றும் தாய், தந்தையரை தான் பார்க்கவும் முடியவில்லை. கோவிலுக்காவது சென்று வரலாம் என்று தான் புனிதாவை அழைத்துகொண்டு சென்றாள்.புனிதாவும் அவளுடனே அமைதியாக இருந்தாள். ஒரளவிற்க்கு தான் அவளாலும் பேச முடியும், அதற்க்கு மேல் பேசினால் அதிக உரிமையை எடுத்துகொள்வது போல் தோன்றிவிடும் அதனால் தான் அமைதியாக இருந்தாள்.“அம்ம, சார் வீட்டுக்கு இன்னேரம் வந்திருப்பாங்க... நாமா போக சரியா இருக்கும் வாங்க கிளம்பலாம்.”வித்யாவை அழைக்க.


“ம்ம்.. போகலாம்...”


கோவிலை மீண்டும் ஒரு முறை சுற்றி வந்த போது அங்கிருந்த மரத்தில், தொட்டில் கட்டியும், சிலர் மஞ்சள் கயிறில் மஞ்சள் வைத்து அதை மரத்தில் கட்டியபடி வேண்டிகொண்டிருந்தனர். அதை பார்த்த புனிதா, “அம்மா, ஒரு ரெண்டு நிமிஷம் இதோ வந்திரேன்”. என சொல்லியபடி அந்த இடத்துக்கு சென்றாள்.புனிதாவையே பார்த்துகொண்டே அந்த இடத்திற்க்கு வந்தாள் வித்யா... புனிதா தான் கட்டியிருந்த சேலையின் முந்தானை கிழித்து, மரத்தொட்டிலை வாங்கி சேலையின் சிறு துணியை அந்த தொட்டிலில் சேர்த்து கட்டி, மரத்தில் தான் நினைத்ததி வேண்டிகொண்டே அந்த தொட்டிலை கட்டினாள்.


”வாங்க ம்மா போகலாம்.”


”புனிதா ஏன் தொட்டில் கட்டுன... உனக்கு இப்போ தானா கல்யாணம் ஆச்சு. ஆனா கல்யாணம் ஆகி வருஷம் ஆனாவங்களும், குழந்தை இல்லாதவங்களும் தான இந்த வேண்டுதல் செய்யனும்”.“எப்போ ஆனா என்ன ம்மா... சீக்கிரம் குழந்தை வரம் கிடைச்சா, என் வீட்டுக்காரோட அம்மா, அப்பா எங்களை ஏத்துப்பாங்க குழந்தைக்காக. அதான் நானும் வேண்டுதல் வைச்சுட்டு வந்தேன்.”


“வீட்டை எதிர்த்து உங்க கல்யாணம் அவசியமா புனிதா?””ஆமா அம்மா... ஏன்னா, நான் படிக்க உதவுனது மட்டுமில்லாம, எனக்கு வயிறா மூனு வேளை உணவு கொடுத்து, என் பாதுகாப்புக்கு என்னை ஹாஸ்ட்டல தங்க வைச்சு, என்னை கண்ணுக்கு கண்ணா பார்த்துக்கிட்ட என் வீட்டுக்காருக்காக தான் இந்த வேண்டுதல் ம்மா. அவங்க அம்மா, அப்பா என்னை எவ்வள்வு கொடுமை செய்தாலும் பொருத்து போககூட நான் தயார் ஆனா அவருக்கு பொருக்க முடியாது ம்மா. அதனால் தான் என்னை அவங்க சம்மதம் இல்லாம கல்யாணம் செய்தாங்க...”


“அப்போ உங்க... உங்க...” அவள் தயங்க“இன்னும் வாழ்க்கையை வாழ ஆராம்பிக்கலை ம்மா. எப்போ அவங்க அப்பா, அம்மா எங்களை ஏத்துகிறாங்களோ அப்போ தொடங்களாம் சொல்லிட்டாங்க. ஆனாலும் என் மனசுல சின்ன ஆசை, குழந்தை வந்தா ஏத்துப்பாங்கனு.” புனிதா கண்ணீரை துடைத்துகொண்டே சொன்னாள்“கண்டிப்பா உங்களை ஏத்துப்பாங்கா... கவலைப்படாத வா போகலாம்”.


மற்றவளுக்கு ஆறுதல் கூறும் இவளின் கதை இப்போது அந்தரத்தில் தொங்குது. ஆனால் புனிதாவை போல் ஏன் இவள் மனம் மட்டும் இன்னும் விதுரன் பக்கம் இருந்து யோசிக்க முடியவில்லை.தொடரும்………….

 
Advertisement

Advertisement

Top