Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிகார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 18.2

Advertisement


திருவிழா நல்லபடியாக முடிந்தது, தென்றலுக்கு தான் கவலையாக இருந்தது. திருவிழா முடிந்தவுடன் சங்கவி கிளம்பிவிட, தனுஷை திருவிழாவில் பார்த்தது தான் அதற்கடுத்து அவனை பார்க்க முடியவில்லை.




அவளது பெரியம்மா, பெரியப்பா ஊருக்கு கிளம்ப அவளையும் சேர்த்து தயாராக சொன்னார்கள். ஆனால் அவளுக்கு தனுஷ் இல்லாத அந்த ஊருக்கு போக பிடிக்கவில்லை. மனம் இல்லாம பெட்டியில் துணிகளை அடுக்கி கொண்டிருந்த போது தான் தனுஷ் அவளுக்கு போன் செய்தான்.




‘சொல்லுங்க, தனுஷ்...’



“என்ன டி கவலையா பேசுற...” அவளது குரலில் வித்யாசத்தை உடனே கண்டுபிடித்தான்.



‘ஊருக்கு கிளம்ப சொன்னாங்க பெரியம்மா, பெரியப்பா அதான் துணி அடுக்கிட்டு இருந்தேன்.’



“எதுக்கு ஊருக்கு போற... இன்னும் ஒரு வாரத்துல கௌசி கல்யாணம் இருக்கு. அதுகடுத்து நம்ம கல்யாணத்துக்கு தேதி குறிச்சுடுவாங்க.” என அவன் சொல்ல


‘என்கிட்ட சொல்லி என்ன ஆக போகுது... உங்க மாமானார், மாமியார்கிட்ட சொல்லுங்க.’



”நான் பேசுறேன்... ஒழுங்க உன் துணியை பெட்டியில அடுக்காத.” அவன் சொல்ல, அவள் அடுக்குவதை பாதியில் நிறுத்தினாள்.



‘எப்படி பேச போறீங்க.’



“அது எல்லாம் தாத்தா, பாட்டி பார்த்துப்பாங்க.”



‘ம்ம்... சரிங்க.’



“சாப்பிட்டயா...” என முதல் முறையாக அவன் விசாரிக்க, அவளுக்கு வானத்தில் பறக்காத குறை தான்.



‘ம்ம்... சாப்பிட்டேன், நீங்க’



“இன்னும், இல்லை...” அவன் குரலில் வேறு மாதிரி ஒலிக்க அவளுக்கு என்னவோ போல் ஆகியது.




’உங்களை பார்க்க முடியுமா.’ அவள் உடனே கேட்க



“ம்ம்... என யோசித்தவன், அவளை வீட்டின் பின்புறம் உள்ள வாழை தோப்புக்கு வரசொன்னான்.




அவன், அவளுக்காக காத்திருக்க, அவளும் வந்தாள். கையில் கூடையுடன். அவன் கண்களோ திகைப்பாக அவளை பார்க்க. அவளோ, நிலா வெளிச்சம் இருந்தாலும் பாதையில் நடக்க சிரம்மாக இருந்தது.




“என்ன இது... கூடையில என்ன இருக்கு.”



‘இப்படி வந்து உக்காருங்க... என அவனை அமர வைத்தவள், அவன் முன் இலை போட்டு, வீட்டில் சமைத்தை உணவுகளை, பரிமாறி அவள் சோற்று கவளத்தை கையில் எடுத்து, அவனது வாயின் அருகில் கொண்டு சென்றால் கொஞ்சம் பயத்துடன். ஏன்னென்றால் ஒரு முறை அவனுக்கு இனிப்பு வகையான கேசரியை ஊட்டிவிட சென்றவள், அதை அவன் தட்டிவிட அவள் தான் பயந்து போனால், அன்று அவன் பேசிய வார்த்தையை இன்று அவளால் மறக்க முடியாது.




“அவனோ, மனதில் அவள் ஊட்டி விட்டால் நன்றாக இருக்குமே என தான் நினைத்தான் ஆனால், இப்படி அவள் வரசொல்லி அவன் நினைத்ததை செய்வாள் என துளியும் அவன் நினைக்கவில்லை.”




‘இப்பவும் தட்டிவிடாதீங்க... ப்ளீஸ், நீங்க சாப்பிடலைனு சொன்ன உடனே, எனக்கு கஷ்டமா போச்சு. அதான், உங்களை வரசொல்லி...’ என அவள் பாதி சொல்லிகொண்டிருக்கும் போதே.




”ஊட்டி விடு தென்றல்.” அவன் சொல்ல, அவனுக்கு ஊட்டிவிட்டாள்.




’அவள் கொண்டு வந்த உணவு முழுக்க காலியானது. அவள் கையை கழுவி, கொண்டு வந்த பாத்திரத்தை எடுத்து வைத்துவிட்டு அவனைப்பார்த்தாள்’



“நான் கிளம்புறேங்க.”



‘பத்திரமா போயிடுவேல... இல்லை நான் வரட்டுமா’



“பயப்படாதீங்க நான் போயிடுவேன்... நீங்க நிம்மதியாக தூங்குங்க.” அவள் சொல்லிவிட்டு செல்ல, அவனோ அன்று மிகவும் மகிழ்ச்சியில் இருந்தான்.
முடிவாக தென்றல் ஊருக்கு போவது நிறுத்தப்பட்டுள்ளது. அதுவும் நாதன், மேகலையின் சொல்படி.



***********************



“அந்த மண்டபமே சொந்தம், பந்தங்களுடன் நிறைந்து காட்சியளித்தது. மேகலையும், நாதனும் திருமணத்திற்க்கு வந்தவர்களிடம் பேசிகொண்டிருந்தனர். வாசலில் சேது, லதா, ராஜேஷ், லக்‌ஷ்மியும் கல்யாணத்திற்க்கு வந்தவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தனர்.”




‘மணமகன் அறையில், கௌதமை ரெடி செய்துகொண்டிருந்தான் வருண். ‘அண்ணா, இந்த வாட்ச் கட்டுங்க உங்களுக்காக நான் வாங்கிட்டு வந்தேன். ரொம்ப எக்பென்ஸிவ்.’ என அவன் சொல்லிகொண்டே கௌதமின் கையில் கட்டிவிட்டான்.



“கௌதம் ரெடியா, ஐயர் உன்னை அழைச்சிட்டு வரசொன்னாங்க.”




‘மச்சான் நம்ம வீட்டு மாப்பிள்ளை ரெடி...’ வருண் சொல்ல, சிவா (தனுஷ்) அழைத்துகொண்டு சென்றான்.





“மண மேடையில் அவனை அமர வைத்துவிட்டு செல்ல. வருண் அவன் பக்கத்தில் நின்றுகொண்டான்.



‘மணமகள் அறையில், அகல்யா, லாவன்யா கௌசியை ரெடி செய்ய, பார்கவி சோகமாக அமர்ந்திருந்தாள். அவளது அலங்காரமும் கொஞ்சம் குறைவாக தான் இருந்தது.’




“கவி ஏன் இப்படி சோகமா இருக்க, இன்னைக்கு நம்ம வீட்டுல கல்யாணம் இப்படி இருந்தா எல்லாரும் உன்னை தான் திட்டுவாங்க.’’




“ஹேய் விசயம் தெரியாத, அவளோட ஆள், ப்ரவீன் மாமா, கௌதம் மாமா கல்யாணத்துக்கு வரலை அதான் இவ சோகமா இருக்கா.” லாவன்யா சொல்ல
‘அண்ணா, தான் ஏற்கனவே சொல்லிருந்தாங்களே கவி கௌதம் அண்ணா கல்யாணத்துக்கு வந்தாலும் தான் வருவேனு. இப்போ நீ சோகமா இருந்தா அவங்களுக்கு தான் கஷ்ட்டமா இருக்கும்.’



“என் கவலை எனக்கு தான தெரியும். அவங்களை எவ்வளவு மிஸ் பண்ணுறேனு எனக்கு தான் தெரியும்.”




‘இப்படி என் கல்யாணத்துல சோகமா இருந்தா எனக்கு பிடிக்காது கவி. ப்ளீஸ் எனக்காக சந்தோஷமா இரு... ப்ரவீன் மாமா நாளைக்கு வந்தருவாங்க.’ என கௌசியும் அவளை சமாதானம் செய்தாள்.




கௌசியை அழைத்துகொண்டு மணமேடைக்கு சென்றார்கள் அகல்யா, லாவன்யா, கவி. கடவுளின் ஆசீர்வதமும், சொந்த் பந்தங்களின் ஆசீர்வாதமும் சேர்ந்து, கௌதமின் கையில் ஐயர் தாலியை எடுத்துகொடுக்க, கௌதம் அதை வாங்கி கௌசியின் கழுத்தில் மூன்று முடிச்சுடன் கட்டிமுடித்தான்.




நாதன் குடும்பம் முழுவதும் மேடையில் தான் இருந்தது. சிவாவை தவிர. அவனோ, பந்தியில் சொந்தங்களை கவனித்துகொண்டிருந்தான்.
தென்றலின் குடும்பமும் வந்திருந்தார்கள், அவர்களை பார்த்ததும், நாதனும் மேகலையும் அவர்களுடன் பேசிகொண்டிருந்தனர். மற்றவர்களுக்கு, தென்றலின் குடும்பத்தையும், தென்றலையும் அறிமுகம் செய்து வைத்தார்கள்.



பெரியவர்களின் காலில் அவள் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கிக்கொண்டாள். கல்யாணத்திற்க்கு கூட்டம் எல்லாம் குறைந்ததும், குடும்பங்கள் எல்லாம் அமர்ந்து பேச நேரம் கிடைத்தது.



தென்றல், மணமக்களுக்கு அழகான பரிசை வழங்கினால். அவர்களிடமும் அவளது வாழ்த்துகளை சொல்லி மேடையைவிட்டு கீழ் இறங்கும் போது வந்துவிட்டான் அவளது காதலன்.




“சிறியவர்களுக்கு தெரியாது தென்றல் தான் சிவாவிர்க்கு பார்த்திருக்கும் பெண் என்பது கௌசியை தவிர. ‘எங்க போற, வா... நானும் அவங்களுக்கு இன்னும் வாழ்த்து சொல்லலை.’ என அவள் பேசுவதற்க்கு இடம் கொடுக்காமல் இவன் அழைத்து சென்றுவிட்டான்.




‘தென்றல் இவங்க தான் எங்க வீட்டு மாப்பிள்ளை கௌதம். இவ என் தங்கை, இவன் வருண், இவங்க லாவன்யா, அகல்யா, பார்கவி.’ என் அறிமுகப்படுத்த




”வணக்கம் அண்ணா, கௌதமிற்க்கு சொல்ல, மற்றவர்களுக்கு ஹாய்... ஹாய்..” என்றாள்



‘இவ தென்றல் என் மனைவியாக போறவ.’ கண்ணில் அவன் நேசத்தை சேர்த்து அவர்களுக்கு அறிமுகப்படுத்தினான். சிறியவர்களோ, ஹூர்ர்ரேரே... மச்சான் உங்க கண்ணுல இவ்வளவு காதலா. என வருணும்.




‘அண்ணா, அண்ணி சூப்பர்...’ என லவன்யாவும், கவியும் சொல்ல.



”உங்களுக்கு தென்றல் கிடைச்சது அதிர்ஷ்ட்டம் தான் மாமா.” என அகல்யா சொல்ல.



‘அனைவரும், அவர்களை அடுத்த புது பெண் மாப்பிள்ளையாக்கி கலாய்த்துக்கொண்டிருந்தனர்.



“நான் தான் அதிர்ஷ்ட்டக்காரி, எனக்கு அவங்க கிடைச்சத்துக்கு.” அவனை எங்கயும் விட்டுக்கொடுக்காமல் அவள் பேச.



‘பாரு டா... என்ன உங்க ஆளுக்கு இப்போவே சப்போர்ட்டா. என லாவன்யா கேட்க

”சின்ன புன்னகையுடன் தென்றல், சிவா (தனுஷ்) பார்த்தாள்.”



‘அவனுக்குமே கொஞ்சம் அதிகமாக இருந்தது. யாரிடமும் தென்றலை அறிமுகப்படுத்தியது இல்லை. அதனால் அவன், அனைவரையும் சங்கடமாக பார்த்தான்.




மணமக்களையும், வீட்டினரையும், வீட்டிற்க்கு அனுப்பிவிட்டு அவன் மட்டும் தேங்கி இருந்தான். மற்ற வேலைகளை பார்ப்பதற்க்கு.


எல்லாம் சடங்கும், சம்பிரதாயமும் முடிந்து கௌசி, கௌதமின் வீட்டிற்க்கு சென்றாள். அவளுடன் மொத்த குடும்பமும் செல்ல. தனுஷ் மட்டும் வேலை இருப்பதாக காட்டிகொண்டு வீட்டிலேயே இருந்தான்.



இன்று நடந்த திருமணத்தை அவன் நினைத்து பார்க்கையில் அவனுக்கும் சீக்கிரமாக தென்றல் என் வாழ்வில் வந்தால் நன்றாக இருக்குமே என்று தான்.
அவளிடம் அவன் பேசுவது என்றால் அது அவர்களின் கல்யாண பேச்சு தான், அப்போது தான் அவளுடன் சண்டை போட்டது நியாபகத்திற்க்கு வந்தது, அது மட்டுமா நினைவுக்கு வந்தது அதனுடன் சேர்த்து தான் ஏன் சிவாவின் இடத்து வந்தது என நினைவும் சேர்ந்து வந்தது.




அன்று ஞாயிறு...


‘எங்க டா இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட... வர வர நீ வீட்டுல தங்குறது இல்லை. அப்படி என்ன சார்க்கு ஊர் சுத்துற வேலை.’ அவனது அக்கா, அவனிடம் கேட்க.



“நீயும், மாமாவும் தான் அடிக்கடி வெளிய போறீங்க அதை நான் கேட்டேனா.”



’டேய் நான் கல்யாணம் ஆனாவ, என் புருஷன் கூட நான் வெளிய போவேன் உனக்கு என்ன.’


“உன்கிட்ட சொல்ல முடியாது போ... உன் மாமாவ கவனி. என்னை கவனிச்சு உனக்கு என்ன ஆக போகுது.” அக்காவிடம் தென்றலை பற்றி இப்போது கூறினால் அடுத்த நிமிடம் அவளின் வீட்டு வாசலில் பெண் கேட்க நின்றுவிடுவாள் அதனால் அவளிடம் அதை மறைத்தான்.





‘அவளை சர்ச்சுக்கு வரசொல்லியவன், அவளுக்கு முன் வந்து காத்திருந்தான்.



அவளோ, சங்கவியுடன் ஆட்டோவில் இறங்கி நடந்து வந்துகொண்டிருந்தாள்.’




“நீ பேசிட்டு வா... நான் அங்க இருக்கேன்” என ஒரு மரத்தடியை காட்டினாள் சங்கவி.



‘சாரிங்க வந்து ரொம்ப நேரம் ஆச்சா.’




“இல்லை இப்போ தான் வந்தேன்.”




‘உன் அப்பாக்கிட்ட எப்போ பேச போற... நம்ம கல்யாணம் சீக்கிரம் நடந்தா நல்லா இருக்கும்.’




“பேசனும்... அப்பா, இன்னும் இரண்டு நாளுல என்னை பார்க்க வராங்க, அப்போ பேசுறேன்.” அவள் மெதுவாக சொன்னாள்




‘இது எல்லாம் சரிப்பட்டு வராது... வா கல்யாணம் பண்ணிக்கலாம், அடுத்து வீட்டுல சொல்லிக்கலாம்.’ கடையில் துணி வாங்க போகலாம் என்பது போல் அவன் சொல்ல, அவளுக்கு தான் திகைப்பாக இருந்தது.




‘என்னங்க இப்படி சொல்லுறீங்க...’




“நீ எப்போ உன் அப்பாக்கிட்ட சொல்லி அவரோட சம்மதம் கிடைச்சு... இப்படி சொல்லியே நீ இரண்டு மாசம் ஆச்சு. நீ உன் அப்பாக்கிட்ட பேசுற மாதிரி தெரியலை. அதான் சொன்னேன் வா கல்யாணம் பண்ணிக்கலாம்னு.”



‘இரண்டு மாசம் தானே ஆச்சு... இரண்டு வருஷம் ஆகலையே.’ அவளும் தன்மையாக சொல்ல




“ஓ... மேடம்க்கு இன்னும் என்னை இரண்டு வருஷம் உங்க பின்னாடி சுத்தவிடலாமுனு நினைச்சுட்டு இருக்கீங்களா.”




‘சின்னா திருத்தம், நான் தான் உங்க பின்னாடி சுத்திட்டு இருக்கேன்.’




“அப்போ இனி என் பின்னாடி சுத்தாத... நான் கிளம்புறேன்” அவளிடம் மீண்டும் ஒரு சண்டை போட்டுவிட்டு கிளம்பிவிட்டான்.





அவளுக்கு தான் அழுகையாக வந்தது... இப்படி வந்த உடன் சண்டை போட்டுவிட்டு செல்வதற்க்கு தான் என்னை வர வைத்தானா என்று தோன்றியது.



சங்கவி, தென்றலுக்கு ஆறுதல் கூறி அவளை அழைத்து சென்றாள்.
அதற்கடுத்து ஒரு வாரம் அவன் அவளிடம் பேசவில்லை. வேலையின் ட்ரைனிங்காக பெங்களூர் சென்றுவிட்டான். என சுந்தர் மூலம் தகவல் பறந்தது தென்றலுக்கு.
அவளும், அவனுக்கு விடாமல் மெசேஜ்,போன் செய்ய அவனோ, அதை கண்டுகொள்ளாமல் இருந்தான். அவன் மனதில் கொஞ்சம் விட்டு பிடித்தால் தான் அவள் நம் வழிக்கு வருவாள் என அவன் எண்ணினான்.




ஆனால், அதுவோ வேறு வழியில் சென்றது. அவன் பெங்களூரில் இருந்து அவனது காரில் வந்துகொண்டிருந்த பொழுது தான், அடிப்பட்ட ஒருவரின் குரல் அந்த இரவு நேரத்தில் துள்ளியமாக கேட்டது அவனுக்கு.


அவனோ , காரை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த சாலையில் இரங்கி வலது பக்கம் திரும்பி பார்த்தான் ஆனால் அங்கு யாரும் இல்லை. இடது பக்கம் திரும்பி பார்த்தான் சாலையின் ஓரத்தில் சூட்கேஸூம், பெண்கள் அணியும் ஹேண்ட் பேக்கும் இருந்தது. அந்த சூட்கேஸ் இருந்த இடத்தை நோக்கி சென்றான்.


தொடரும்……..





 

Advertisement

Top