Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிகார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 17

Advertisement

இளந்தென்றலோடு ஒரு கவிதை 17

”வாங்க... வாங்க... என்ன ஊரு பெரியவங்க எல்லாம் வந்திருக்கீங்க.” நாதனும், மேகலையும் கேட்க.




‘அய்யா உங்களுக்கே தெரியும்... அடுத்த வாரம் எங்க ஊரு முத்தலாபுரம், முத்தாலம்மன் கோவில் திருவிழா. அதுக்கான அழைப்பும், பத்திரிக்கையும் கொண்டுவந்திருக்கோம். எங்க அழைப்ப ஏற்று நீங்களும், உங்க குடும்பம் முழுவதும் இந்த திருவிழாவுல கலந்துக்கனும்.’ என அவர்களின் கையில் தாம்பூழம் பழம், மற்றும் பத்திரிக்கையும், வஸ்திரமும் வைத்து அவர்களை அழைத்தனர்.





“நீங்க சொல்லலைனாலும், பொண்ணு கொடுத்த ஊருல நடக்குற திருவிழாவுக்கு எங்க குடும்பமும் வரமாய இருக்கும்.” மேகலை சொன்னார்.



‘அய்யா குடும்பம் மட்டும் இல்லைனா எங்க ஊருல ஒத்த சாமிகூட கும்பிட முடியாம போயிருக்கும். நீங்க மட்டும் உங்க ஊரு சாமிய எங்களுக்கு செஞ்சு கொடுக்கலைனா நாங்களும், எங்க ஊரு மக்களும் இன்னேரம் பிச்சை எடுத்திட்டு இருப்போம்.’




“என்னங்க, நீங்க பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு. கடவுள் எல்லாருக்கு பொது தான். அது எனக்கும், உனக்குனு, பிரிக்க கூடாது.” என மேகலை சொல்ல.




‘சரிங்கம்மா... இனி நாங்க பேச்சுல கூட பிரிச்சு பேச மாட்டோம். மறக்காம நீங்க நம்ம ஊருல நடக்குற திருவிழாவுல குடும்பத்தோட கலந்துக்கனும். இந்த முறை யாருக்கு பரிவட்டம் கட்டனும் சொல்லிட்டேங்கனா அதுக்கான சம்பிரதாயம் செய்ய சரியா இருக்கும்.’ கூட்டத்தில் உள்ள தலைவர் கேட்க.





“மேகலையோ யோசிக்காமல், ‘என் பேரனுக்கு இந்த முறை பரிவட்டம் கட்டனும். என் குலம் தழைக்க இனி அவன் தான் முன் நிக்கனும்.’ சொல்லிவிட, நாதனுக்கோ அதிர்சியாக இருந்தது.
அனைவரும் முன் எதுவும் பேசமுடியாமல் அமைதியாக இருந்தார். வந்திருந்த அனைவரும் திருவிழாவுக்கு அழைத்துவிட்டு சென்றுவிட்டனர்.




பெரியவர்கள் பேசிகொண்டிருந்ததை கேட்ட பார்வதியோ மகிழ்சியில் இருந்தார். ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஊர் திருவிழாவில், நாதன், செல்வராஜ், சேது என மூவருக்கு கட்டும் பரிவட்டத்தை இம்முறை தன் பிள்ளைக்கு கட்ட போகிறார்கள் என சொன்னதும் அவருக்கு மகிழ்சியாக இருந்தது.





சாப்பாடு மேஜையில் வந்தமர்ந்த சிவாவின் அருகில் சென்றார், ‘என்ன சாப்பிடுற சிவா...’



“என்ன இருக்கோ, அதை கொடுங்கம்மா.”



‘உனக்கு பூரி, செஞ்சுருக்கேன்... அம்மா ஊட்டிவிடவா.’





“இல்லைம்மா, நானே சாப்பிட்டுகிறேன்.” அவன் தயங்க




‘அம்மா, கையால நீ சாப்பிட்டு மூனு வருஷம் ஆச்சுப்பா. இன்னைக்கு ஒரு நாள் அம்மா ஊட்டிவிடுறேன்.’ அவனின் மறுப்பை காதில் வாங்கிகொள்ளாமல் தட்டில் பூரியை குருமாவில் நனைத்து அவனுக்கு ஊட்டிவிட்டார்.





”அவரின் பாசத்தை நான் ஏமாற்றுகிறேன், இது அவருக்கு நான் செய்யும் துரோகம். ஆனால் என் அம்மா இப்பொழுது இருந்திருந்தால் இப்படி தான் எனக்கு உணவு ஊட்டிவிட்டு இருப்பார். என அப்பொழுது அவன் நினைத்துகொண்டான். அது மட்டுமில்லாமல் அவனின் கண்ணீல் இருந்து முதல் முறையாக தன்னை பெறாத தாய், பெறாத மகனுக்கு ஊட்டிவிட்டது கண்ணீர் வந்துவிட்டது.



‘என்னப்பா, ரொம்ப காரமா... அம்மா சமையல் செஞ்சது உனக்கு பிடிக்கலையா.’ கவலையாக கேட்க.



“அய்யோ, இல்லமா... ரொம்ப நாள் கழிச்சு ஊட்டிவிட்டதுல கண்ணீர் வந்துருச்சு.” மனதை மறையாமல் சொல்லினான்



’என்ன அம்மாவும், பிள்ளையும் அப்படி கொஞ்சிகிறீங்க. அண்ணாவுக்கு மட்டும் தான் ஊட்டுவியாம்மா. நான் உன் மகள் இல்லையா.’ பொய் கோவத்துடன் கௌசி கேட்க




“என் மகனே இப்போ தான் என்கிட்ட சாப்பிடுறான். அது உனக்கு பொறுக்காதா, இந்தா உனக்கு ஒரு வாய்.” என அவளுக்கும் ஊட்டிவிட்டார்.




’நல்லா ஊட்டிவிடு பார்வதி, அடுத்து உன் பிள்ளை, அவன் பொண்டாட்டி கையில தான் சாப்பிடுவான். நீயும் உன் அம்மாகிட்ட நல்லா செல்லம் கொஞ்சிக்க கௌசி அடுத்து உன் புருஷன் தான் உனக்கு ஊட்டிவிடுவான். அப்போ எல்லாம் அம்மாவ தேடாதீங்க.” என அவர்களின் பாசம் கண்டு நக்கல் அடித்துகொண்டிருந்தார் மேகலை
அவனுக்கு மனைவி என்றதும் தான் நினைவு வந்தது தென்றலை. ஒரு முறை இப்படி தான் அவள் அவனுக்காக கொண்டுவந்திருந்த உணவை அவள் ஊட்டிவிட செல்ல அவனோ, அதை தடுத்துவிட்டான். அது இப்பொழுது நினைவுக்கு வந்தது.




*********



அவன் சொன்ன நேரத்திற்க்கு பதினைந்து நிமிடம் முன்னதாகவே தென்றல் வந்துவிட்டாள். ஆனால் அவன் தான் வரவில்லை, அவனுக்கு மெசேஜ், போன் என அனைத்திற்க்கும் அவள் முயற்சி செய்துவிட்டாள் ஆனால் அதற்கான பலனோ பூஜ்ஜியம் தான். வெகு நேரம் காக்கவைத்துவிட்டு ஒருவழியாக வந்து சேர்ந்தான்.




‘என்ன ரொம்ப நேரம் ஆச்சா வந்து.’ அவன் கூலாக கேட்க



“இப்போ தான் வந்தேன்...” அவனுக்கு பதில் சொல்ல.




‘உன் அப்பாகிட்ட பேசிட்டயா... என்ன சொன்னாங்க. நம்ம கல்யாணத்தை கொஞ்சம் சீக்கிரம் வச்சுக்கலாம். அப்புறம் கல்யாணம் முடிஞ்ச உடனே நாம...’ அவன் சொல்லிக்போகையில்,



“ஸ்டாப்... ஸ்டாப்... ஸ்டாப்... ஏன் இவ்வளவு வேகம். நான் இன்னும் என் அப்பாக்கிட்ட பேசலை, அதுவுமில்லாம என் படிப்பு இன்னும் முடியலை. நீங்க என்னான கல்யாணம், அதுகடுத்து நம்ம ஹனிமூனு பேசிகொண்டே போறீங்க.” அவள் சொல்லிவிட்டு அவனை பார்க்க.
அவனோ அவள் முகத்தை பார்த்துகொண்டிருந்தான். எதுவும் பேசாமல் இருந்தான்.




“என் அப்பாக்கிட்ட இப்போ பேச முடியாது. அவரு வேலையில பிஸியா இருக்காரு, என்னை பார்க்க கூட வர்ரது அவ்வளவா இல்லை.”



‘முடிவா என்ன சொல்லுற.’




“என் படிப்பு முடியட்டும். என் அப்பாகிட்ட பேசுறதுக்கு நான் மனசளவுல நான் தயாரா இருக்கனும்.” அவனிடம் சொல்லிவிட்டு அவன் முகத்தை பார்த்தாள்.




என்ன அமைதியா இருக்காங்க... இன்னேரம் என்மேல கோவம் பட்டுருப்பாங்களே. மனதில் நினைத்ததை அவனிடமே கேட்க.



’எதாவாது சொல்லுங்க ஏன் அமைதியா இருக்கீங்க.’





“சீக்கிரம் உன் அப்பாகிட்ட பேசு. நம்ம கல்யாணம் சீக்கிரம் நடக்கனும் நான் எதிர்பார்க்குறேன். கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் படிப்பு என்னால ஸ்டாப் ஆகாது அதை புரிஞ்சுக்கோ.”



‘ம்... ம்... சரிங்க’.



“நான் கிளம்புறேன், ஆபீஸ்ல வேலை இருக்கும்.” அவனின் பைக் சாவியை எடுத்துகொண்டு அவன் கிளம்பிவிட்டான்.


ஆனால் அவளோ, அவன் போய் அரைமணி நேரம் ஆகியும் அவள் அந்த காஃபி ஷாப்பில் அமர்ந்திருந்தாள்.



***************



’தென்றல் எழுந்திரும்மா... அத்தைங்க ரெண்டு பேரும் உன்னை கேட்டுட்டு இருக்காங்க.’ என நிர்மலா தூங்கிகொண்டிருந்தவளை எழுப்ப.




மெதுவாக கண்களை திறந்தவள், அவளது அன்னையின் படத்தை பார்த்த பின் அவளது பெரியாம்மை பார்த்தாள். ‘எதுக்கு பெரியாம்மா, பாட்டிங்க என்னை தேடுறாங்க.’




”கோவில் திருவிழாவுக்கு கம்பச்சையான் ஊண்டிட்டாங்க. அந்த கம்பச்சையனுக்கு மஞ்சள் தண்ணீர் ஊத்தினா நீ நினைச்சது நடக்கும், நம்ம குடும்பத்துக்கும் நல்லதுனு சொன்னாங்க. அதான் உன்னை எழுப்பி குளிச்சுட்டு, கோவிலுக்கு மஞ்சள் தண்ணீர் கொண்டு போக சொல்ல வந்தேன்.”




‘ம்ம்... சரிங்க பெரியம்மா.’




அவர்களின் பாட்டியின் ஊருக்கு நேற்று மாலையில் தான் வந்தார்கள். அதிலும் தினகரன் புதிதாக ஆரம்பித்த தொழிலில் காரணமாக வெளியூர் சென்றுவிட்டதால் அவர் மட்டும் திருவிழாவின் முதல் நாள் வருவதாக சொல்லிவிட்டார். தினகரனை தவிர மற்ற மூவரும் கோவில் திருவிழாவுக்காக வந்திருந்தனர்.



‘குளித்து முடித்து, சுடிதாரில் கீழ் இறங்கி வந்தாள் தென்றல். ‘வாம்மா, தென்றல்... புது இடம் தூக்கம் அவ்வளவா வந்திருக்காது. ஆனா போக போக பழகிடும்மா.’ அவளை பக்கதில் அமர்த்திகொண்டு பேசினார்.


“சீக்கிரம் பழகிடுவேன் அப்பாயி...”



‘உன் பெரியம்மா உன்கிட்ட சொன்னாளா, கோவிலுக்கு மஞ்சள் நீர் எடுத்து போகனும்னு.’



“சொன்னாங்க அப்பாயி... அதுக்கு தான் குளிச்சிட்டு வந்தேன், போகலாம”.



‘அவளை மேல் இருந்து கீழாக பார்த்தவர். ‘தென்றல் இது கிராமம், இங்க இப்படி எல்லாம் சுடிதார் போடகூடாது. தாவணி சட்டை தான் போடனும், இல்லையா சேலை கட்டனும். அப்போ தான் இன்னார் குடும்பத்து பொண்ணு வெளியூர்ல படிச்சாலும், நம்ம கிராமத்துக்கு ஏத்தாப்புல சேலை காட்டிருக்குனு சொல்லுவாங்க. அது தான் நம்ம குடும்பத்துக்கு மரியாதை.’




“நிர்மலா, மர பிரோவுல தென்றலுக்கு நானும், கற்பகமும் எடுத்த சேலை, அப்புறம் தாவணி சட்டையும் இருக்கும். அப்படியே சுதாவோட நகை, நம்ம பரம்பரை நகையும் எடுத்து போட்டு அலங்கரிச்சு அழைச்சுட்டு வா.” மருமகளிடம் சொல்லிவிட்டார்.



அவளும் பாட்டிகள் சொன்னதை சரியாக செய்தாள். உடையாக பட்டு தாவணியில் தென்றல் அழகாக இருக்க , அதனுடன் நகையும் அவளின் அழகை கூட்ட பார்ப்பதற்க்கு மிகவும் அழகாக இருந்தாள். அவளின் இரு பாட்டிமார்களும் அவளின் அழகை பார்த்து வியந்துபோனார்கள்.



“திருவிழாவுல நாம கும்பிடுறது பெண் தெய்வமா இருந்தாலும், அந்த பெண் தெய்வத்துக்கு கணவன் இருப்பாங்க. ஒரு பொண்ணு அம்மா, அப்பாவுக்கு அடுத்து உலகமுனு நினைக்குறது அவளை தொட்டு தாலிக்கட்டுன புருஷன தான். அதே மாதிரி தான் பெண் தெய்வமான முத்தாலம்மனோட கணவனா இந்த கம்பச்சையன் இருக்காங்க. இந்த கம்பச்சையான் இருந்தா முத்தாலம்மா மகிழ்சியா இருப்பாங்களா. அந்த மகிழ்ச்சியோட பலனா தான் நம்ம ஊரு விவசாயமும், மக்களுக்கு எந்த வித தீங்கும் ஏற்படாம பார்த்துக்கனும் அவ நினைப்பாளாம். இந்த கம்பச்சையன் ஊண்டி, அம்மாவோட ஐயாவுக்கு கன்னி பொண்ணுங்க மஞ்சள் நீர் ஊத்தி வழிப்பாட்டா, அவங்களுக்கு நல்லா திருமண வாழ்க்கை அமையும், அடுத்த திருவிழாவுல கல்யாணமாகி இருப்பாங்களாம். என் சுசீலாவும், கற்பகமும் தென்றலிடம் கோவில் திருவிழா பற்றியும், அதன் வரலாறையும் கூறி அவளின் மனதில் உள்ள குழப்பங்களை தீர்த்து வைக்க தான் அவளை கோவிலுக்கு அனுப்பி வைத்தனர்.




மஞ்சள் நீருடன் அவள் கோவிலின் உள்ளே நுழைய. அவளை பார்த்தவர்கள் எல்லாம் அவர்களுக்குள்ளேயே அவளை ரசித்துகொண்டும், பேசி சென்றனர். இளைஞர் பட்டாளம் முழுவது புதிதாக ஊருக்கு வந்துள்ள தென்றலை பார்த்து சைட் அடித்துகொண்டிருந்தனர்.



அவள் மனதில், ‘ நீங்க எல்லாம் சைட் அடிச்சு என்ன பிரயோஜனம் என்னை ரசிக்கவேண்டியவனும், சைட் அடிக்க வேண்டியனும், இந்த உடையில என்னை பார்த்து அழகாக இருக்கனு சொல்லகூட அவங்க என் பக்கத்துல இல்லை.’ நினைத்துகொண்டு அந்த கம்பத்திற்க்கு அவள் மட்டுமின்றி அந்த ஊரில் உள்ள கன்னி பெண்கள் அனைவரும் கொண்டு வந்திருந்த மஞ்சள் நீரை ஊற்றினார்கள்.



‘என் தனுஷூக்கு எந்த விதமான பிரச்சனையும் வரக்கூடாது. அவரு நல்லா இருக்கனும், எனக்கும், அவருக்கும் நல்லபடியா கல்யாணம் ஆகனும். முடிஞ்சா அவரை நான் நேர்ல பார்க்கனும், அவரை பார்த்தா தான் என் மனசுல இருக்குற கவலை போகும். கடவுளே, நீங்க எப்பவும் அவருக்கு துணையாக இருக்கனும்.’




அவள் மஞ்சள் நீர் ஊற்றிவிட்டு, கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து முடிக்கும் போது அவளது கண்ணில் தனுஷ் விழுந்துவிட்டான். அவளுக்கு அதிர்சியாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. அவள், அவனின் அருகே செல்லும் போது, கௌசி அவனிடம் பேசிகொண்டே கோவிலைவிட்டு இருவரும் வெளியேறினார்கள்.




‘அவங்களும் இந்த கிராமத்துல தான் இருக்காங்களா. அப்போ அந்த பொண்ணு யாரு...’ அவள் யோசிக்க, அந்த பெண்ணுடன் அவன் செல்வதை அவள் நொடிபொழுது தவறாக நினைக்கவில்லை. ஆனால் அந்த பெண் யார்... அவளுடன் ஏன் செல்லவேண்டும் என தான் அவள் யோசித்தாள். உடை முழுவதும் வேறுபட்டிறுக்க, முகத்தில் தாடி மலிக்கப்பட்டிருக்க, அவளின் காதலன் தனுஷ் வேறொருவாக இருந்தான்.




‘தந்தையுடன் தொழில் கணக்குகளை சரிப்பார்த்துகொண்டிருந்த தனுஷ்க்கு, தென்றல் போன் செய்தாள்.’



”போனில் டிஸ்ப்ளேவில் தென்றலின் படத்துடன் போன்கால் வந்திருக்க. அருகில் இருந்த செல்வராஜ், அவனை பார்த்து ‘முக்கியமான போன் அஹா இருக்கும் எடுத்து பேசுப்பா’ என அவர் சொல்லிவிட்டு எழுந்து செல்ல. அவன் யோசனையுடன் அதை அட்டென் செய்தான்.”




‘என்கிட்ட நீங்க மறைக்குறீங்க... இன்னைக்கு உங்களை முத்தாலம்மன் கோவில்ல பார்த்தேன் அதுவும் ஒரு பொண்ணுகூட.’ எடுத்து எடுப்பில் அவள் பேச



“என்மேல சந்தேகப்படுறீயா தென்றல்.”




‘சந்தேகமா இருந்தா, இன்னேரம் யாரு அந்த பொண்ணு, உங்களுக்கு, அவளுக்கு என்ன சம்மந்தமுனு கேட்டுருப்பேன்.’



“உங்க பாட்டியோட வீட்டு அட்ரெஸ் கொடு நான் நேர்ல வரேன்.” அவன் கேட்க



‘ம்ம்... சரி...’ அவளின் பாட்டியின் முகவரியை கொடுத்தாள்.



“நான் அவங்களை பார்க்க வரேனு சொல்லு.”



‘கோவமா...’



“ஆமா... நான் எப்படி இருக்கேனு கேக்காம இருக்க. ஊருக்கு வந்துட்டேனு நீ சொல்லவும் இல்லை. இன்னைக்கு இப்படி ஒரு கேள்வி கேக்குற.”



‘வீட்டுக்கு வாங்க பேசலாம்... போன்ல பேசுனா என்மேல இன்னும் கோவமா இருப்பீங்க’



“ம்ம்...” கோவத்துடன் சொல்லிவிட்டு வைத்தான்.



காலையில் தோட்டத்துக்கு செல்ல இருந்தவனை பார்வதி தான் கௌசியை கோவிலுக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். அவனும், கௌசியை திருவிழா நடக்கும் கோவிலுக்கு அழைத்துசென்றான். அவளை கோவிலில் வாசலில் இறக்கிவிட்டு அவன் நின்றுகொண்டான். கௌசி தான் அவனை வற்புறுத்தி கோவிலுக்குள் அழைத்துசென்றாள்.




“அவனுக்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது. இதுவரையிலும், அக்காவுடன் மட்டுமே வெளியில் சென்றுருக்கிருறான் தவிர வேற யாருடனும் அவன் செல்லவில்லை. ஏன், தென்றலுடன் கூட அவன் வெளியே சென்றது இல்லை. இப்படியாக இருக்க, கௌசியுடன் அவன் வெளிய செல்ல அவனுக்கு தயக்கமாக இருந்தது, என்ன தான் தங்கை என்றாலும் அவளுடன் அவன் இன்னும் அண்ணாக ஒன்றவில்லை.”
‘அண்ணா, போகலாமா...’ என்று வந்தவளை, ‘போகலாம்’ என அவனும் அழைத்துகொண்டு சென்றான்.

தொடரும்……….



 
Top