அத்தியாயம் 19
மயக்கத்தில் இருந்தவளின் முன்னே வந்து நின்றவன் தன் பக்கத்தில் இருந்த ஆளுக்கு அவளை எழுப்பும்படி கட்டளைப் பிறப்பித்தான்.
அந்தத் தடிமாட்டு தாண்டவராயனும்கூட அவளின் மேல் தண்ணீரைத் தெளிக்கக் கண்களைச் சுருக்கியபடி மெல்ல எழுந்தாள் பெண்ணவள். சுற்றியும் தன் பார்வையைத் திருப்பிப் பார்க்க அது ஓர் இருட்டான இடமாய் இருந்தது.
சற்று நேரத்தில் முகத்தில் ஒரு பதற்றம் வந்து போகச் சுற்றியும் ஒரு முறை பார்க்க அங்கே சில ஆண்களும் அவளும் மட்டும் இருக்கத் தன் தோழியைத் தேடியவளின் கண்களுக்கு அவள் இருப்பதாக சுத்தமாய் தெரியவில்லை.
"நந்து..." என்றழைத்தாள் பதற்றமாய்.
"பார்றா! கண் விழிச்ச உடனே தோழியோட நினைவு போல. ஆனா பாரு இப்போ உன்னோட தோழியோட உயிர் உன் கையில தான் இருக்கு. என்ன பண்ணலாம் சொல்லு?" என்றான் முகத்தை மறைத்திருந்த அவன்.
அவனைப் பார்த்துப் பயந்தவள், "யார் நீ? எங்களை எதுக்காக கடத்தி வச்சிருக்க? அவளை விட்டுடு..." என்றாள் அவனிடம் அழுதபடியே.
"நான் யாருன்னு தெரிஞ்சிட்டு நீ என்னடி பண்ணப் போற? இப்போ நான் சொல்றதை நீ கேட்கணும். உனக்கு வேற வழியே இல்லை" என்றாள் நக்கலாய்.
"நான் என்ன பண்ணனும் சொல்லு. ஆனா அவளை விட்டுடு. நீ என்ன சொன்னாலும் நான் கேட்குறேன். என் நந்தினியை விட்டுடு... உன்னைக் கையெடுத்து கும்பிடறேன்" என்றாள் கையெடுத்து அவனை வணங்கியபடி.
"சரி, உங்க ரெண்டு பேரையும் நான் உயிரோட விட்டுடறேன். ஆனா எனக்கு அந்த பென்டிரைவ் வேணும்" என்றான் அழுத்தமாக.
அவன் கேட்டது புரியாமல் அவனைப் பார்த்தவள், "எனக்குப் புரியலை நீ என்ன கேட்கிறேன்னு? எந்த பென்டிரைவ்... நீ எப்போ என்கிட்ட கொடுத்த?" என்றாள் குழப்பமாய்.
"ஏய் என்னடி என்கிட்டேயே விளையாடுறியா? அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நடந்தது மறந்துடுச்சா என்ன?" என்றான் கோபமாய்.
"அஞ்சு வருஷத்துக்கு முன்னேயா, நீ என்ன சொல்ற? எனக்கு எதுவும் தெரியலை, ப்ளீஸ் என்னை விட்டுடு. என் நந்து எங்கே சொல்லுடா?" என்று கத்தினாள்.
அவள் கத்தியதில் ஆத்திரம் அடைந்த அவன் அவளின் முடியைப் பற்றி இழுத்து அவளை அடிக்க துவங்கினான்.
தன் ஆத்திரம் தீரும் வரை அடித்தவனின் வலிமையைத் தாங்க முடியாத பெண்மனம் அப்படியே மயங்கிச் சரிந்தது.
அவள் மயங்கவும் அவள் மேல் ஆத்திரம் கொண்டவன் அவளை அப்படியே பிடித்து சுவரில் தள்ளினான்.
அவன் தள்ளியதில் பின் மண்டை நன்றாக அடிபட்டு விட பெண்ணவளின் பின்னே இருந்து உதிரத்துளிகள் சிந்த ஆரம்பிக்க அப்படியே மயங்கிச் சரிந்தாள்.
***
"பாஸ்.." என்றான் உடல் நடுங்க சந்தோஷ்.
"ஆதவனை வரச் சொல்லு சந்தோஷ். இன்னும் அரை மணி நேரத்துல அவன் இங்கே இருக்கணும்" என்றான் கம்பீரமாக.
அடுத்த அரைமணியில் காக்கி உடையில் ருத்ராவின் முன்னே நின்றான் ஆதவன்.
ஆதவன் அவனின் அத்தை மகன். எப்போது உறவுகளை வெறுத்தானோ அன்றிலிருந்து இன்று வரை யாரிடமும் அவன் உறவு கொண்டாடவில்லை. அனைவரையும் தள்ளி வைத்தவன் இன்று தன்னவளுக்கு ஓர் ஆபத்து என்றதும் அழைத்துவிட்டான்.
அவன் அதிகாரத்தில் இருப்பவன். நிச்சயம் தன்னவளை மீட்க அவனின் உதவியும் வேண்டும் என்று எண்ணினான்.
"சொல்லுங்க மாமா, நீங்க வரச் சொன்னதா சந்தோஷ் சொன்னாங்க" என்றான் உறவுமுறை அழைப்புடன்.
"இதோ பாரு, உன்கிட்ட நான் உறவு முறையைச் சொல்லி உறவைப் புதுப்பிக்கச் சொல்லி வரச் சொல்லலை. என்னோட வருங்கால மனைவியைக் காணலை. நீ இந்த சிட்டியோட புது கமிஷனர். அந்தப் பதவியைத் தான் நான் மதிக்கிறேன். அதனால என்னை சார்னு கூப்பிட்டுப் பழகு. இப்போ என் யாழினி இருக்கிற இடம் தெரியும் அங்கே போலாம்" என்றான் ருத்ரா கட்டளையாய்.
அதைக் கேட்ட ஆதவனின் முகமே மாறிப்போனது.
"சரிங்க சார், அவங்க எங்கே இருக்காங்கன்னு எப்படி டிரேஸ் அவுட் பண்றது? அதுக்கு எதாவது ஆப்ஷன் இருந்தா சொல்லுங்க. நான் அவங்களை காப்பாத்தி கூட்டிட்டு வரேன்" என்றான் அவன்.
அவன் கூறியதைக் கேட்டுச் சிரித்த ருத்ராவோ,
"நீ அவளை காப்பாத்த வேணாம். என்கிட்ட இருந்து அவங்களை காப்பாத்திக்கோ. என் யாழினி மேல கையை வச்சவனை நான் உயிரோட விடப்போறதில்லை..." என்றவன் அவனை ஒரு பார்வை பார்த்தான்.
பதிலுக்கு அவனும் எதிர்பார்வை பார்த்தான்.
"பாஸ்! டிரேஸ் பண்ணியாச்சு. கிளம்பலாம் பாஸ்" என்றான் சந்தோஷ் சந்தோஷமாய்.
ருத்ரா பதிலுக்கு ஆதவனையும் ஒரு பார்வை பார்க்க அவனும் தலையாட்ட மூவரும் யாழினியையும், நந்தினியையும் தேடிச் சென்றனர்.
***
சற்று நேரத்தில் கண்விழித்த தேவகி தன் முன்னே இருந்த தன்னவனைக் கண்டு கண்கள் கலங்க,
"என்னங்க..." என்றழைத்தார்.
மனைவியின் குரல் கேட்ட அடுத்த நொடியே அவரின் அருகே அமர்ந்து அவரின் வதனத்தைத் தன் கைகளில் ஏந்தி,
"தேவி என்னம்மா ஆச்சு உனக்கு? உன்னை அப்படி பாத்ததுல இருந்து என் உயிரே என்கிட்ட இல்லைடி..." என்றார் தன்னவள் தலையை வருடியபடி.
காலங்கள் எத்தனை கடந்தால் தான் என்ன? இதோ அன்பும் காதலும் என்றும் மாறாதிருக்கும் வரம் வேண்டுமே! அந்த வரம் தேவிகாவிற்கு கிடைத்திருக்கிறது.
தன்னவனின் கைகளில் தன் கையை வைத்துக் கொண்டவளின் கண்கள் கலங்கிப் போக அவரை பார்த்தபடியே இருந்தவர்,
"என்னங்க..." என்றாள் குரல் தழுதழுக்க.
"என்னம்மா..." என்றார் மென்மையாக.
"நாம ரொம்பவே தப்பு பண்ணிட்டோம்ங்க. என்னோட வளர்ப்பில தப்பாயிடுச்சு. நம்ம பையனைப் பார்த்தா எனக்கு அசிங்கமா இருக்குங்க. என்னால தாங்க முடியலைங்க இந்த அசிங்கத்தை..." என்றார் மனம் வருந்தி.
"என்னாச்சு தேவி, அமுதன் அப்படி என்ன பண்ணான்?" என்றார் ஒன்றும் புரியாமல்.
"நான் அமுதனைப் பத்தி பேசலைங்க. அகிலனை பத்திப் பேசுனேன்" என்றவருக்குத் தன் கணவரிடம் எப்படி அதைத் தன் வாயால் சொல்வது இந்த அசிங்கத்தை என்று புரியாமல் தடுமாறினார்.
அப்போது அங்கே வந்த அமுதன், "அம்மா, நீங்க ரெஸ்ட் எடுங்க. இப்போ எதுவும் பேச வேணாம். நீங்க முதல்ல சரியாகி வாங்க அப்புறம் பேசலாம்" என்றான் தாய் வருந்துவதைத் தாங்க முடியாமல்.
"அமுதா, என்னை மன்னிச்சிடுப்பா. உன் வாழ்க்கையே ஒன்னுமில்லாமல் ஆகிடுச்சு. என்னால இதைத் தாங்க முடியலைடா..." என்றார் மகனின் வாழ்க்கையை நினைத்து.
"அம்மா விடுங்க, இதெல்லாம் நான் பண்ணப் பாவத்துக்கு உண்டான தண்டனை. நீங்கச் சொன்னது சரி தான்ம்மா. நான் சிவாவை பண்ண டார்ச்சருக்கு எனக்கு கிடைச்ச தண்டனை. அப்பா, நீங்க அம்மாவை பாத்துக்கோங்க... எனக்கு வீட்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு. நான் போயிட்டு வந்துடறேன்" என்றவன் கோபத்துடன் அங்கிருந்து சென்றான்.
"என்னாச்சு தேவி, ரெண்டு பேரும் அப்படி என்ன விஷயத்தை என்கிட்டே இருந்து மறைக்கிறீங்க?" என்றார் வாசுதேவன்.
"என்னங்க, இந்த அகிலனை நாம தப்பா வளர்த்துட்டோம். அண்ணியும் இன்னொரு அம்மான்னு உணராம அண்ணியோட தப்பான உறவு வச்சிருக்கான்ங்க. என்னால இதைத் தாங்க முடியலைங்க. என் கண்ணால அந்த அசிங்கத்தை பாத்த நொடியில இருந்து என் உயிரே எனக்கு பாரமா இருக்குங்க..." என்றவர் வீட்டில் நடந்ததை அனைத்தையும் கணவரிடம் சொல்லிவிட, அதைக் கேட்ட வாசுதேவனால் சுத்தமாக இதை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
ஏனென்றால் அந்த உண்மையைச் சொல்வது அவரின் சரிபாதியாயிற்றே!
"தேவி, நீ சொல்றது எல்லாம் உண்மையா? நம்ம அகிலனா? அவன் யாருகிட்டேயும் அதிகம் பேசமாட்டானேடி..." என்றார் மனைவியின் வார்த்தையில் தோன்றிய அதிர்ச்சியை உள்வாங்கி.
"நானும் அப்படித்தாங்க நினைச்சேன். ஆனா அவன் இத்தனை மோசமானவனா இருப்பான்னு நான் கொஞ்சமும் நினைக்கவே இல்லைங்க" என்றார் தன்னவனின் மார்பில் சாய்ந்தபடி.
"நம்மோட பசங்க இத்தனை மோசமா இருப்பாங்கன்னு நான் கொஞ்சமும் நினைக்கவே இல்லை தேவி. ஆனா பாரு நம்மோட விதியில் இதெல்லாம் நடக்கணும்னு இருக்குல்ல! என்னவோ என் மனசே தாங்கலைடி... நம்மோட வளர்ப்பை இப்படி மோசமா ஆகிட்டாங்களேன்னு மனசு ரொம்பவே வலிக்குது தேவி..." என்றவரின் கண்களிலும் வலி கண்ணீரின் சுவடுகளாய்.
***
இங்கே வீட்டிற்கு வந்த அமுதனின் முன்பு நின்றிருந்தார் அவனின் மாமனார் மார்த்தாண்டம்.
அவரைப் பார்த்தவன் தன் வீட்டு வேலைக்காரியிடம் திரும்பி, " மேல ரூம்ல நிகிதா இருக்கா… போய் அழைச்சிட்டு வாங்க..." என்றான் எங்கோ பார்த்தபடி.
அவள் சென்ற பின்பு அவனிடம் திரும்பிய மார்த்தாண்டமோ,
"மாப்பிள்ளை, எதுக்காக என்னை இங்கே வரச் சொன்னீங்க? அவ உங்களோட பொண்டாட்டி நீங்க ஒரு வார்த்தை சத்தம் போட்டுக் கூப்பிட்டா அவ வரப்போறா. ஆனா நீங்க வேலைக்காரியை விட்டு கூட்டிட்டு வரச் சொல்றீங்க. அதுமட்டும் இல்லை உங்க முகமும் சரியில்லை..." என்றார் அவனின் மாமனார்.
"இல்லை உங்க பொண்ணு வரட்டும். உங்ககிட்ட கொஞ்சம் பேசணும், அதுக்காகத்தான் வரச் சொன்னேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அவளும் வரட்டும்" என்றவனின் முகம் இறுகிப் போய்க் கிடந்தது.
தன்னுடைய மாப்பிள்ளையின் முகத்தை வைத்தே எதுவோ சரியில்லை என்று உணர்ந்த நிகிதாவின் தந்தை மார்த்தாண்டாமோ தனது பார்வையை கூர்மையாக்கினார் கொண்டார்.
சற்று நேரத்தில் கீழே வந்த நிகிதாவோ அங்கே இருந்த தன் தந்தையை நிச்சயமாய் எதிர்பார்க்கவில்லை.
அவளோ தன் கணவனின் முகத்தைப் பார்க்க முடியாமல் தந்தை எதற்காக இங்கே வந்திருக்கிறார் என்று தெரியாமல் பதற்றத்துடன் வந்தாள்.
ஏனோ அவனுக்கு அவளைப் பார்க்கவே சுத்தமாய் பிடிக்கவில்லை.
அவளின் அழகான வதனத்தைக் கண்டு தேவதையாய் அவளை நினைத்தவனுக்கு இன்று அவளின் அரக்க முகத்தைக் கண்டு கூனிக் குறுகிப் போய் நின்றான்.
இந்தச் சமூகத்தின் கோட்பாட்டைப் பொறுத்தமட்டில் ஓர் ஆண் தவறு செய்தால் அதைச் சுலபமாக ஏற்றுக் கொள்ளும் சமுதாயம் அதே ஒரு பெண் தவறு செய்தால் அவளை இழிவுபடுத்துவதே வாடிக்கையாகும்.
அமுதனைப் பொறுத்தவரை அவனின் முதல் காதல் என்றால் நிகிதா தான். ஏன் அதற்கு முன் சிவயாழினி இங்கே இருந்தாலும்கூட அவளை அவனுக்குச் சுத்தமாய் பிடிக்காது.
சிறுவயதில் இருந்தே சௌந்திரம் சொல்லிச் சொல்லி வளர்த்த விஷவிதை அவனின் ஆழ்மனதில் வேரூன்றிக் கிடக்க, அது உயிர் பெற்று உயிரும் உணர்வும் உள்ளவளை விஷ வார்த்தைகளால் வேட்டையாடினான்.
என்ன அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால் அவளை விட்டு விலகி இருந்திருக்கலாம். ஆனால் அவளைக் காயப்படுத்துவதே அவனின் நோக்கமாய் இருந்ததால் அதைச் சரியாகச் செய்தான்.
ஆனால் இன்று அதே விஷம் அவனின் வாழ்க்கையையும் அஸ்தமித்தது.
ஒரு பெருமூச்சுடன் தன் மாமனாரைப் பார்த்தவன்,
"உங்க பொண்ணை உங்க வீட்டுக்கே கூட்டிட்டு போயிடுங்க. அவளுக்குப் பொருத்தமானவன் நானில்லை, கூடிய சீக்கிரமே டைவர்ஸ் நோட்டீஸ் உங்க வீடு தேடி வரும்" என்றான் உண்மையை மறைத்து.
அதைக் கேட்டு மார்த்தாண்டம் அதிர்ந்தார் என்றால் நிகிதாவோ நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள்.
ஆனால் அவள் அறியவில்லை இந்த வாழ்க்கை அத்தனை எளிதானது அல்ல என்று.
அடுத்த பாகத்தில் பார்க்கலாம் செல்லம்ஸ்.
தீபம் ஏற்றும்...