அத்தியாயம் 18
அமுதனின் கண்கள் தெறித்துவிடும் அளவுக்கு இருந்தது. இந்த நம்பிக்கை துரோகத்தை அவனின் மனதால் சுத்தமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்கும் மேலாக அவனின் அருகில் இருந்த தேவகியால் நடந்த நிகழ்விலிருந்து வெளிவர இயலவில்லை சுத்தமாக.
நடந்த சம்பவங்கள் கண்முன்னே இன்னும் இருப்பதாய் தோன்ற அவரின் உயிர்க் கூடு காலியாவதைப் போல் உணர்ந்தார்.
அத்தனை அசிங்கமான ஒரு நிகழ்வை அவர் சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை.
தன் மகனின் தோளில் கரத்தை வைத்து அழுத்தியவர், "அமுதா..." என்றார் மெல்லமாக.
தன் தாயின் கரத்தில் தன் கரத்தை வைத்து அழுத்தியவன்,
"அம்மா, என்னால கொஞ்சமும் நம்பவே முடியலைம்மா. என் பொண்டாட்டியை நான் ரொம்பவே நம்பினேன்மா, ஆனா அவ இப்படி இருப்பான்னு நான் கொஞ்சமும் நினைக்கலைம்மா..." என்றவன் தாயின் தோளில் சாய்ந்து கத்தி கதறித் தீர்த்தான்.
"இது நீ பண்ணத் தப்புக்குத் தண்டனை அமுதா. எந்தப் பாவமும் பண்ணாத ஒரு பச்சை மண்ணை எத்தனை அவமானப்படுத்தியிருப்ப. அவளோட காதலை எத்தனை ஏளனமா பேசியிருப்பீங்க நீயும் உன் பாட்டியும். ஆனா இப்போ உன்னோட காதல் இப்படி அழிஞ்சி போறதுக்கா இத்தனை ஆடம்பரம் அகம்பாவம்! என்னால முடியலை அமுதா.
ஒரு பையனோட வாழ்க்கையை இன்னொரு பையனே அழிக்கிறானே நான் என்னத்தை சொல்லுவேன்? கடவுளே இதுக்கு நான் மலடியாவே இருந்துருக்கலாமே..." என்று கதறித் தீர்த்தார்.
ஆம், அங்கே நிகிதாவுடன் இருந்தது அவரின் இன்னொரு மகன் அகிலன் தான்.
அமுதனும் தேவகியும் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
அவர்கள் இருவரும் பார்த்ததைக் கண்ட அகிலன் அதில் சற்றும் அதிராமல் தன் உடையை அணிந்து கொண்டு அங்கிருந்து வெளியே வந்தவனின் கன்னத்தில் பளாரென அறைந்தார் தேவகி.
"ச்சீ! நீயெல்லாம் என் பையன்னு சொல்லிக்கவே நாக்கு கூசுது. அவ உன்னோட அண்ணி. அண்ணிங்கிறவ அம்மாவுக்குச் சமானம். ஆனா நீ அவளோடவே சஞ்சாரத்துல இருக்குற. நீயெல்லாம் மனுசனாடா? உன்னை இப்படியா நான் வளர்த்தேன். நீ அமைதியா இருக்குறப்போ எல்லாம் நான் எத்தனை சந்தோஷப்பட்டிருக்கேன் தெரியுமா! என் மூத்த பையன் தான் தறுதலையா போயிட்டான். என் ரெண்டாவது பையன் என்னோட கௌரவத்தைக் காப்பாத்துவான்னு நினைச்சேன். ஆனா நீ இப்படி அசிங்கமா வந்து நிக்கறியே நாயே..." என்றவருக்கு மகனின் இந்தச் செயலைக் கொஞ்சமும் ஜீரணிக்க முடியவில்லை.
சொந்த அண்ணியை, அம்மா ஸ்தானத்தில் இருப்பவளுடன் இப்படி இருப்பான் என்று கொஞ்சமும் அவரால் தாங்க முடியவில்லை.
தன் சட்டையிலிருந்து அவரின் கைகளை எடுத்துத் தள்ளிவிட்டவன் அவரின் அழுகையை அலட்சியமாய் எடுத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
அவனின் இந்தக் குணத்தைப் பார்த்து தாயும் மகனும் அதிர்ந்துவிட்டனர்.
இதுவரை இந்தக் குடும்பத்தில் அவனால் எந்தப் பிரச்சனையும் யாருக்கும் எப்போதும் வந்ததில்லை.
அவனின் எப்போதுமே தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவனின் மற்றொரு முகம் யாரும் அறியாதது.
அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் கதறிக் கொண்டிருந்த தாயுள்ளம் அப்படியே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்தார்.
இத்தனை நடந்த பின்பும் நிகிதா மட்டும் கீழே வரவேயில்லை.
ஒரே நாளில் மனைவியின் துரோகமும், தம்பியின் மற்றொரு முகம் என அடுத்தடுத்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் நின்றிருந்தவனின் முன்னே, தாயும் நெஞ்சைத் தாங்கியபடி விழுந்ததை அதிர்ச்சியுடன் பார்த்தவன் தன் நிலையைப் பின்னே தள்ளிவிட்டு தாயைச் சென்று தாங்கிப் பிடித்தவன் அவரை தன் கையில் அள்ளித் தூக்கியபடி காருக்கு ஓடினான்.
அவன் தேவகியை காரில் ஏற்றும் சமயம் தான் அலுவலகத்திற்குச் சென்றிருந்த வாசுதேவனும், உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த சௌந்திரமும் வந்தனர்.
தேவகியின் நிலையைப் பார்த்து வாசுதேவனின் உள்ளம் துடிக்க வேகமாய் அமுதனின் அருகே வந்தவர் அவனின் சட்டையைப் பிடித்து,
"ஏய்! என் தேவியை என்னடா பண்ண? அவளுக்கு என்னாச்சு அமுதா? ஏன்டா இப்படி இருக்கா?" என்று மகனின் சட்டையைப் பிடித்துக் கேட்டார் மனைவியின் நிலையைக் காண முடியாமல்.
"அப்பா, அம்மா மயங்கிட்டாங்கப்பா. வாங்கப்பா, சீக்கிரம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலாம்பா..." என்றான் தன் வலியை மறைத்து.
மகனின் முகமாற்றத்தைக் காண முடியாமல் மனைவியின் நிலை தடுக்க, மகனுடன் மனைவியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர்.
அவர்களுடன் சௌந்திரமும் உடன் சென்றார்.
என்ன தான் பிடிக்காத மருமகளாய் இருந்தாலும்கூட இத்தனை நாளாய் தன்னை நன்றாகக் கவனித்துக் கொண்டவள் இன்று இப்படி இருப்பது அவரின் மனதையும் வருத்தியது.
***
"ஹேய் நந்து! சீக்கிரம் வாடி இன்னும் எவ்வளவு நேரம் தான் கிளம்புவ?" என்றபடி கத்தி அழைத்துக் கொண்டிருந்தாள் சிவா.
அழகான பிரிண்டட் சில்க் சேலையை உடம்பில் சுற்றியிருந்தவள் தேவதை போல் இருந்தாள்.
"ஹான்... இதோ வந்துட்டேன்டி. உன்னை என்னதான்டி பண்றது, கிளம்பி வர வேணாமா என்ன?" என்று பேசியபடி வந்தவள் அவளைப் பார்த்து அசந்து நின்று தான் போனாள்.
"ஹேய் சிவா! இந்தப் புடவை ஏதுடி உனக்கு? அவ்வளவு அழகா இருக்குடி. ஆமா இந்த மாதிரி புடவை உன்கிட்ட இல்லையே... நீ எப்போ எடுத்த?" என்றாள் விழி விரித்து.
"இது அவங்க எடுத்துக் கொடுத்ததுடி. நான் அவங்களை முழு மனசா ஏத்துக்கும் போது இதை கட்டிக்கச் சொன்னாங்க. எனக்கு என்னவோ இன்னைக்கு கட்டிக்கணும்னு தோணுச்சு. ஏன்னு தெரியலை மனசெல்லாம் ஒரே பாரமா இருக்குடி..." என்றாள் சோகமாக.
"ஏய்! என்னாச்சு சிவா? இப்போதானேடி நல்லா பேசுன. இப்போ அதுக்குள்ள உனக்கு என்னாச்சு?" என்றாள் பதற்றமாக.
"இல்லை நந்து, எனக்கு எதுவும் ஆகலை. ஆனா மனசுல ஏதோ இனம்புரியா தவிப்பு. அதை எப்படி சொல்றதுன்னு எனக்குத் தெரியலை. ஆனா இந்தப் புடவை கட்டினதுக்கு அப்புறம் தான் நான் கொஞ்சம் நல்லாருக்கேன். சரி, நேரமாகுது வா போலாம்..." என்று தோழியிடம் தன் மனதைக் கூறியவள் அவளுடன் வீட்டிலிருந்து வெளியே வந்தாள்.
அங்கே ருத்ரன் அனுப்பிய கார் நிற்க இருவரும் ஏறி அமர்ந்தனர்.
கோவிலில் காலடி எடுத்து வைத்தவளின் மனம் ஏனோ அவனைத் தேடியது.
'தேவ், என்னவோ உங்க நினைப்பாவே இருக்கு. இந்த நிமிஷம் என் முன்னாடி இருப்பீங்களா?' என்ற வேண்டுதல் அவனுக்குக் கேட்க வேண்டுமே!
இங்கே தனது இடத்தில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தவனின் இதயம் தன்னவளைத் தேடி ஓடியது.
"யாழிம்மா, என்னை நினைக்கிறியாடி? ஏன் நீ என்னை தேடுற மாறி எனக்கு தோணுது? இல்லை யாழ், எதுவும் தப்பா நடக்காது" என்று வேண்டியபடி தன் அலைபேசியை எடுத்து அவளுக்கு அழைக்க நினைத்தவன் அவள் கோவில் செல்வதாகக் கூறியது நினைவு வர,
"ஏன் அவளை சர்ப்ரைஸ் தரக் கோவிலுக்குப் போகக்கூடாது? ஆனா இன்னும் கொஞ்ச நேரத்துல மீட்டிங் இருக்கே. ஆனா அவளோட இருக்கணும்னு தோணுதே. இப்போ என்ன பண்ண?" என்று ஒரு நொடி யோசித்தவன் அடுத்த நொடியே அங்கிருந்த தனது உதவியாளரிடம் மீட்டிங்கை கேன்சல் செய்யச் சொல்லிவிட்டு தனக்கு உடமையானவளைத் தேடி ஓடினான்.
***
"டேய் அமுதா! தேவிக்கு என்னடா ஆச்சு? ஏன்டா இப்படி இருக்கா?" என்று இதுவரை பத்து முறையாவது வாசுதேவன் கேட்டிருப்பார்.
ஆனால் அதற்குப் பதில் சொல்லாமல் தன் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி அமர்ந்திருந்தவனின் வதனமோ அவமானத்தில் சிவந்திருந்தது.
"டேய் அமுதா! என்னடா இப்படி பிடிச்சு வச்ச பிள்ளையார் மாறி உட்காந்து இருக்க? உன் அப்பன் கேக்குறான் இல்ல... என்ன நடந்துச்சுன்னு சொல்லுடா..." என்றார் சௌந்திரம்.
ஏனோ அமுதனின் மௌனம் இருவருக்கும் பயத்தைக் கொடுத்தது.
அவனோ நடந்ததை இன்னமும் ஜீரணிக்க முடியாமல் தவித்திருந்தான். யாரிடமாவது மனது விட்டுப் பேசினால் நிம்மதியாக இருக்கும் என்று எண்ணினாலும் இந்தச் சூழல் அதற்கு மேலும் இடம் தராது என்பதை அறிந்தவன் அமைதியை கடைப்பிடித்தான்.
அப்போது தான் தேவகியை சோதித்த மருத்துவர் கதவைத் திறந்து வெளியே வர அவரிடம் இருவரும் வேகமாய் சென்றனர்.
வாசுதேவனோ, "டாக்டர், என்னோட மனைவி இப்போ எப்படி இருக்காங்க?" என்றார் பதற்றமாக.
"இப்போ ஓகே தான் சார். ஆனா எதுவோ பலமான அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக் வந்துருக்கு. என்ன நடந்திருந்தாலும் பரவாயில்லை இனி அவங்களுக்கு அதிர்ச்சி தர எந்தத் தகவலையும் சொல்லாதீங்க. இருபத்தி நாலு மணி நேரம் ஐசியூ வில இருக்கிறது நல்லது. அப்புறம் நார்மல் வார்டுக்கு மாறினதுக்கு அப்புறம் எல்லாரும் போய் பாக்கலாம். இப்போ நீங்க மட்டும் உங்க மனைவியைப் பாத்துட்டு வாங்க சார்..." என்று சொல்லியவர் அங்கிருந்து சென்றார்.
வேகமாய் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தவர் தன்னவள் இருக்கும் நிலையைப் பார்த்து கண்களில் ரத்தக் கண்ணீர் தான் வந்தது.
ஒரே நாளில் ஓய்ந்து போன அவரின் தோற்றம் அவரின் நெஞ்சை அசைத்துப் பார்த்தது.
மெல்ல நடந்து அவரின் அருகே சென்று அமர்ந்தவர் அவரின் கையை பிடித்தபடி,
"தேவிம்மா... என்னடா ஆச்சு உனக்கு? ஒரே நாள்ல இப்படி இருக்கியேடி..." என்றவருக்கு அதற்கு மேலும் அங்கே இருக்க முடியாமல் மனைவியின் நிலை அவரை அச்சுறுத்த வேகமாய் எழுந்து வெளியே வந்தார்.
"அப்பா, அம்மா எப்படி இருக்காங்க?" என்று வாசுதேவனை பார்த்துக் கேட்டான் அமுதன்.
அவனைப் பார்த்தவர் ஆத்திரம் தலைக்கேற அவனின் கன்னத்தில் பளீரென அறைவிட்டார்.
"என் தேவிக்கு என்னடா நடந்துச்சு? நீதான் ஏதோ பண்ணியிருக்க... சொல்லுடா, என்னடா நடந்துச்சு? எத்தனை முறை கேட்டும் இப்படி நீ அமைதியா இருக்கிறதைப் பார்த்து சந்தேகம் தான்டா வருது" என்றார் ஆத்திரமாய்.
அவரின் ஆத்திரம் அப்போதும் தீராமல் இன்னும் இரண்டு கன்னத்திலும் மாறி மாறி அறைந்தார்.
அத்தனை அறைகளையும் வாங்கிக் கொண்டு செத்த பிணமாய் நின்றிருந்தான் அமுதன்.
அதே நேரம் கோவிலின் அனைத்து இடங்களிலும் தன்னவளைத் தேடிய ருத்ரன் அவள் எங்கேயும் இல்லாமல் இருக்கச் சற்று தடுமாறினான்.
ஆனால் அடுத்த நொடியே வெறிகொண்ட வேங்கையாய் தன்னவளை தேடிச் சென்றான்.
அவள் எங்கேயோ? யார் அவளைக் கடத்தியது?
அடுத்த பாகத்தில் பார்க்கலாம் செல்லம்ஸ்.
தீபம் ஏற்றும்...