அத்தியாயம் 17
"நிகிதா, நைட் எனக்கு நீ ஜூஸ் தானே கொடுத்த... ஆனா அதைக் குடிச்சதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சுன்னு எனக்கு ஒன்னுமே தெரியலையே..." என்றான் அமுதன் தன் மனைவியிடம்.
"அதுதான் எனக்கும் புரியலை அமுதா. அந்த ஜூஸை நீ குடிச்சதுக்கு அப்புறம் உனக்குச் சுத்தமா சுயநினைவே இல்லை. உன்னைக் கஷ்டப்பட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதுக்கு நான் பட்டபாடு எனக்குத் தான் தெரியும். இங்கே வந்ததும் வீட்ல ஆயிரம் கேள்வி கேக்குறாங்க. நானும் பதிலுக்கு அவங்ககிட்ட கோபமா கத்திட்டேன் அமுதா." என்றாள் வராத கண்ணீரைத் துடைத்தபடி.
அவள் கூறியதைக் கேட்டவனுக்கு அங்கே ஏதேனும் மாறியிருக்கலாம் என்ற யோசனை வந்ததே தவிர மறந்தும் தன் மனைவியை அவன் சந்தேகிக்கவில்லை.
அவன் யோசனையில் இருக்க அவளோ அவனுக்குத் தெரியாமல் சிரித்துக் கொண்டாள்.
காதலித்து திருமணம் செய்தவள் ஏன் அவனை ஏமாற்றுகிறாள்?
தன் அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த ருத்ராவின் அலைபேசி அடிக்க யாரென்று பார்க்காமல் அதை எடுத்து காதுக்குக் கொடுத்தவன்,
"ஹலோ..." என்றான்.
அந்தப் பக்கத்திலிருந்து சற்று நேரம் எந்த விதமான சத்தமும் வராமல் போக மீண்டும், "ஹலோ..." என்றான்.
"ஹலோ..." என்று அந்தப் பக்கம் வந்த குரலில் ஆடவனோ அதிசயமாய் தன் அலைபேசியைக் காதை விட்டு எடுத்துப் பார்த்தவன் அவளின் அலைபேசி எண் தான் என அறிந்ததும் மகிழ்ச்சியாய் அதைக் காதுக்குக் கொடுத்தவன்,
"ஹேய் யாழி, நீயா இது! என்னோட நம்பர் எப்படித் தெரியும்?" என்றான் சந்தோஷமாய்.
அவனின் குரலில் உள்ள குதூகலத்தை வைத்தே தன் குரல் கேட்டு எத்தனை சந்தோஷமாய் இருக்கிறான் என்பதை உணர்ந்தவளின் வதனத்தில் புன்னகை வந்து போனது.
"அது வந்து... சந்தோஷ் அண்ணா கொடுத்தாங்க சார். அவருகிட்ட வாங்குனேன்" என்று தத்திப் பேசும் மழலையாய் பேசினாள்.
"சொல்லும்மா, திடீர்னு நம்பர் வாங்கி கால் பண்ற அளவுக்கு என்ன எமர்ஜென்சி? நான் மார்னிங் வரும்போது கூட நீ எதுவும் சொல்லலையேம்மா..." என்றான் உல்லாசமாய்.
ஏனோ அவளுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் அவன் வாழ்வில் இன்றியமையாத பொக்கிஷமாய்.
"அது வந்து... எனக்குக் கோவிலுக்கு போகணும் போல இருக்குது. இங்கே கேட்டா நந்து உங்ககிட்ட கேட்டுப் போகச் சொன்னா. நானும் அவளும் போயிட்டு வரவா?" என்றாள் அமைதியாய்.
"இப்போ தானேம்மா உன் உடம்பு கொஞ்சம் சரியாகியிருக்கு. இப்போ வெளியே போனா உன்னோட உடம்பு ஒத்துக்குமா என்ன?" என்றான் அக்கறையாய்.
"இல்லை, இன்னைக்கு வெள்ளிக்கிழமை. நான் எப்பவும் அம்மன் கோவிலுக்குப் போவேன். அதுதான் போலாமான்னு உங்ககிட்ட கேட்டேன்." என்றாள் மென்மையாக.
"ஓ! அப்படியா சரி. நீ இப்பவே போகணுமா என்ன?" என்றான் கேள்வியாய்.
"இப்போ இல்லைங்க, ஈவ்னிங் தான் போகணும். இன்னைக்கு ஈவ்னிங் உங்களுக்கு மீட்டிங்னு சந்தோஷ் அண்ணா சொன்னாங்க. அதுதான் இப்பவே கேட்கக் கூப்பிட்டேன்" என்றாள் மெல்லமாய்.
தான் எந்த வகையிலும் அவனுக்கு இடைஞ்சலாய் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறாள். அதனால் தான் தன் வேலையைக் கூடத் தானே செய்து கொள்ள வேண்டும் என்று அவனிடம் அனுமதி மட்டுமே கேட்கிறாள்.
அதைப் புரிந்தவன் மெல்லச் சிரித்தபடி, "சரிம்மா, நந்தினியோட போயிட்டு வா. ஆனா நீ கார்ல தான் போகணும் சரியா? நான் கார் ரெடி பண்றேன்" என்றான் மெல்லிய புன்னகையுடன்.
"இல்லைங்க நான் ஆட்டோவில போயிக்குறேனே..." என்றாள் அவளும் பதிலுக்காய்.
"நோ பேபி, நீ கார்ல போற மாறி இருந்தா போ, இல்லையா வீட்லேயே இரு. என்ன டீலா?" என்றான் அவளுடன் வாயடித்தபடி.
"சரி, கார்லேயே போறேன்" என்றாள் மென்மையாக.
"தட்ஸ் மை கேர்ள்..." என்றான் அவளைப் பாராட்டியபடி.
"சரிங்க, நான் வைக்குறேன்" என்று வைக்கப் போனவளை,
"ஏய் யாழி! ஒரு நிமிஷம்..." என்று நிறுத்தியவன் தன் இதழை அலைபேசியின் ஓரத்தில் ஒத்தி எடுத்தான்.
அவனின் முத்தச் சத்தத்தில் பெண்ணவளின் தேகம் செங்கொழுந்தாய் சிவந்து தான் போனது.
"இப்போ வச்சிடு பேபி..." என்றாள் உல்லாசமாய்.
ஏனோ இந்தக் காதல் படுத்தும்பாடு இத்தனை விந்தையாகவா உள்ளது. ஆடவனின் உள்ளமோ பெண்மானைச் சுற்றி வர பெண்ணவளின் உள்ளமோ அவனின் காதலை முழுவதும் ஏற்க முடியாமல் மன தோரம் வந்து தங்கிச் செல்லும் அலையாய் ஒரு குரல் அவளைத் தடுத்து நிறுத்துகிறது.
அந்தக் குரலின் தாக்கம் என்று அவளுள் அடங்கிப் போகுமோ அன்று தான் ருத்ராவின் காதல் அவளின் ஆழ்மனதின் அலைகளில் தங்கிப் போகும்.
எதை எதையோ நினைத்து யோசித்தபடி இருந்தவளின் அருகே வந்த நந்தினி,
"சிவா, என்னாச்சு சார்கிட்ட பேசுனியா ஈவ்னிங் கோவிலுக்குப் போறதுக்கு..." என்றாள் அவளையே பார்த்தபடி.
"ம்ம்... கேட்டேன் நந்து. முதல்ல மறுத்தாரு, அப்புறம் கார்ல போயிட்டு வரச் சொன்னாருடி. அவரே காரையும் அனுப்பி வைக்கிறாராம்டி..." என்றாள் எங்கோ பார்த்தபடி.
"அது சரி, அதுக்கு நீ ஏன் எங்கேயோ பாக்குற? என்னாச்சுடி உன் முகம் இப்படி இருக்கு?" என்றாள் தோழியின் வதனத்தைப் பார்த்தபடி.
"என்னால முடியலைடி. ஏதோ அவரை ஏமாத்தறோம்னு மனசு கிடந்து தவிக்குது. அதுமட்டும் இல்லை மனசோட ஆழமா வெள்ளந்தியா ஒரு குரல் இன்னமும் எனக்குள்ள ஒலிச்சிட்டு இருக்குடி. ரொம்பவே பயமா இருக்குடி. நான் தப்பான பொண்ணோன்னு எனக்குச் சந்தேகமா இருக்குடி" என்றாள் பயந்த விழிகளுடன்.
"சிவா, நீ ரொம்பவே யோசிக்குறேன்னு நினைக்குறேன். அப்படிலாம் எதுவும் இல்லைடி. இதோ பாரு உனக்குள்ள இருக்கிற பிரமையைத் தான் அப்படி நீ கற்பனை பண்ணிட்டு இருக்கேடி" என்றாள் சமாதானமாய்.
ஆனால் அதில் சிவயாழினியோ கொஞ்சமும் சமாதானம் ஆனது போல் தெரியவில்லை. இன்னும் எங்கோ ஓர் உந்துதல் ஏதோ ஓர் இடத்தில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் இத்தனை நேரம் தனக்குச் சமாதானம் சொல்லும் தன் தோழியின் மனதை வதைக்க விரும்பாமல் மெல்லச் சிரித்தவள் அங்கிருந்து தனக்கென கொடுக்கப்பட்ட அறைக்குச் சென்றாள்.
போகும் தன் தோழியை மனவருத்தத்தோடு பார்த்திருந்தாள் பெண்ணவள்.
'கடவுளே! என் சிவாவுக்கு எல்லாமே நல்லதா நடக்கணும். அவளோட மனசு மாறியே அவளோட வாழ்க்கையும் சந்தோஷமா மாறணும். ருத்ரா சாரை பார்த்ததும் எனக்கு நம்பிக்கை வந்துருச்சு. என் தோழியோட வாழ்க்கை நிச்சயம் நல்லபடியா அமையும். அதுக்கு நீதான் நல்ல வழியைக் கொடுக்கணும்' என்றபடி மனம் உருகக் கடவுளை வேண்டியவள் கீழே சென்றாள்.
***
"பாஸ், இந்த வீடியோவை பாருங்களேன். இது அந்தக் காட்டுப்பகுதியில் இருந்து கிடைச்சது. ஆனா நாம தேடிட்டு இருக்குற கருப்பு ஆடு இன்னும் வெளியே வரலை. அதுக்கு நானும் எத்தனையோ முறை வலைவிரிச்சிப் பார்த்துட்டேன். ஆனா கொஞ்சமும் அவன் சிக்கலை." என்றான் ஒரு காணொளியை ருத்ராவிடம் காட்டியபடி.
சந்தோஷ் காட்டிய காணொளியைப் பார்த்த ருத்ராவின் ஐம்புலன்களும் ஆத்திரத்தில் துடிக்கத் தான் செய்தது.
"வேணாம் சந்தோஷ், இனி நீ எதையும் செய்யாதே. அந்தக் கருப்பு ஆட்டுக்கு நான் வலை விரிச்சி வச்சிருக்கேன். நிச்சயம் அது சிக்கும். அதுக்கு நான் போட்ட தூண்டிலோட பவர் அப்படி! நீ கொஞ்சம் வேடிக்கை மட்டும் பாரு சந்தோஷ்." என்றான் அர்த்தமான புன்னகையுடன்.
"எனக்குப் புரியலை பாஸ்..." என்றான் சந்தோஷ் ஒன்றும் அறியாத முகபாவத்துடன்.
"ஆமா சந்தோஷ், அவனைப் பிடிக்க இன்னைக்கு நான் என் உயிரைப் பணயமா வச்சிருக்கேன். ஆனா எனக்கு நல்லா தெரியும் என் உயிரையும் நான் காப்பாத்திப்பேன். அவ்வளவு சீக்கிரம் விடமாட்டேன்." என்றவனின் குரலில் இருந்த அழுத்தமே அவன் எதையோ திட்டமிட்டுவிட்டான் என்பதை உணர்த்தியது.
அதைக் கண்டவன், "ஓகே பாஸ்..." என்றபடி அங்கிருந்து சென்றான்.
தன் முன்னே இருந்த டைமரைப் பார்த்தவன் அது ஒவ்வொரு முறை நகரும் போதும் அவனின் மனதில் அடங்கி உறங்கிக் கொண்டிருந்த சூறாவளி புயலாய் உருமாறிக் கொண்டிருந்தது.
"என்கிட்ட இருந்து அவ்வளவு சீக்கிரம் நீ தப்பிச்சிட முடியும்னு நினைச்சியா? நிச்சயம் அதுக்கு வாய்ப்பே இல்லை. அன்னைக்கு நீ செஞ்ச ஒரு செயல் இன்னைக்கு உன்னைப் பழி தீர்க்கக் காத்திருக்கு" என்றான் வாய்விட்டு.
யாரை அவன் பழி வாங்கப் போகின்றானோ?
***
"இப்போ எதுக்கு டார்லிங் என்னை வரச் சொன்னே?" என்று தன் எதிரே இருந்தவனின் கைகளில் பாகாய் உருகியபடி கேட்டாள் நிகிதா.
"வாட் பேபி! நீ இன்னும் ஏன் அங்கே இருக்க பேபி? உனக்காக நான் காத்திருக்கேன்னு உனக்குத் தெரியுதா இல்லையா பேபி..." என்றவனின் கரங்கள் அவளின் ஆடையின் உள்ளே நுழைந்தது.
ஆனால் அவளோ அதைத் தடுக்காமல் அவனின் கைகளில் குழைந்தபடி,
"நான் என்ன டார்லிங் பண்றது? அவனை லவ் பண்ணித் தொலைச்சி என் வீட்டு ஆளுங்க முன்னாடி கல்யாணமும் பண்ணிக்கிட்டேனே. அதுக்கு பின்னாடி தானே டார்லிங் நீ வந்தே..." என்றாள் அவனை அணைத்துப் பிடித்தபடி.
"நீ அதுக்கு பின்னாடி தானே பேபி என் கண்ணுல சிக்குன. உன்னை அப்படிப் பார்த்த நொடியில இருந்து இப்போ வரைக்கும் நான் நானாவே இல்லை தெரியுமா! உன்னை நான் ஏன் அங்கே இருக்க வேணாம்னு சொல்றேன்னு உனக்குத் தெரியும் இல்லை பேபி?" என்றவனின் உதடுகள் அவளின் முதுகில் ஊர்வலம் போயின.
"போ டார்லிங்! ஆமா, உனக்கு என்ன இந்த நேரத்துல என்னோட நினைப்பு இங்கேயே வரச் சொல்லியிருக்க?" என்றாள் அவனைக் கட்டி அணைத்தபடி.
"அது ஒன்னும் இல்லை பேபி. ரொம்ப நாளா என்கிட்ட இருந்து தப்பிச்சி போன வேட்டை மான் ஒன்னு இன்னைக்கு என் கைக்குக் கிடைக்கப் போகுது. அதை என்ன பண்ணலாம்னு யோசனையில் இருந்தேனா உடம்பு சூடு ஏறி போயிடுச்சு. அந்தச் சூட்டைத் தணிக்க நீ வேணும்னு தோணுச்சு, அதுதான் பேபி வரச் சொன்னேன். ஏன் நான் வரச் சொன்னது தப்பா என்ன?" என்றவனின் கரங்கள் மெல்ல அவளின் ஆடையைக் கலைத்துக் கொண்டிருந்தது.
"என்ன டார்லிங் இப்படி சொல்லிட்ட? நீ எந்த நேரத்துல கூப்பிட்டாலும் நான் வருவேனே..." என்றவளை மெல்ல மெல்லத் தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தான் ஆடவன்.
அதற்கு மேலும் அந்த அறையில் கேட்டது அவர்களின் முனகல் சத்தம் மட்டும்தான்.
இவர்களின் நெருக்கத்தைக் கண்ட இரண்டு உருவங்கள் அதிர்ச்சியில் சிலையாய் நின்றுவிட்டன.
அவர்கள் யாரோ?
அதே நேரம் தோழியுடன் கோவிலுக்கு வந்த சிவாவையும், நந்தினியையும் கடத்தினார்கள்.
யார் அவர்களைக் கடத்தியது? அடுத்த பாகத்தில் பார்க்கலாம் செல்லம்ஸ்.
தீபம் ஏற்றும்...