அத்தியாயம் 15
"பாட்டி..." என்றான் அதிர்ச்சியாய் கன்னத்தில் கை வைத்தபடி.
ஆம், அமுதனை அடித்தது சௌந்திரமே தான்.
"என்னடா பாட்டி, ராத்திரி நீ பண்ணிட்டு வந்த வேலைக்கு உன்னைக் கொன்னே போட்டிருக்கணும். ஆனா உன்னை அடியோட விட்டேன்னு சந்தோஷப்படு அமுதா..." என்றார் ஆத்திரமாய்.
"பாட்டி, நான் அப்படி என்ன தப்பு செஞ்சேன்னு இப்படி திட்றீங்க?" என்றான் விடாமல் அதே ஆத்திரத்துடன்.
"என்ன செஞ்சியா? அப்போ ராத்திரி நடந்த எதுவும் உனக்குத் தெரியாதா? ஏன் உன் பொண்டாட்டியைக் கேக்க வேண்டியது தானே... உன்னை இங்கே அனுப்பிட்டு அவ அங்கே என்னடா பண்றா? உன்னை அந்தக் கோலத்துல பாக்குறதுக்காடா இத்தனை வருஷமா இப்படிப் பொத்திப் பொத்தி வச்சி இருந்தேன்..." என்றார் ஆத்திரம் சற்றும் குறையாமல்.
"அய்யோ பாட்டி! நீ கேக்குற எதுவும் எனக்குப் புரியலை..." என்றவனுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.
"என்னடா இன்னும் புரியலை? நைட் நீ குடிச்சிட்டு வந்ததும் இல்லாம உன் பொண்டாட்டி எப்படி வந்து பேசுனா தெரியுமா அமுதா?" என்றார் கோபத்துடன்.
அவர் சொன்னதைக் கேட்டவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. 'என்ன இது நான் குடிச்சிட்டு வந்தேனா? நான் குடிக்கவே இல்லையே. ஜூஸ்னு தானே சொன்னா அதைத் தானே குடிச்சேன்' என்றவனுக்கு நடந்த எதுவும் சுத்தமாய் விளங்கவில்லை.
ஆனால் வீட்டில் இருக்கும் அனைவரின் முகமும் சௌந்திரம் சொன்னது கதையல்ல என்பதை உணர்த்தியது.
"பாட்டி, நிச்சயம் நைட் குடிக்கலை பாட்டி. நான் இதுவரைக்கும் குடிச்சது இல்லை. அது உங்களுக்கே நல்லா தெரியுமில்ல... அம்மா நீங்களாவது நம்புங்களேன். நான் குடிக்கலைம்மா, அப்பா..." என்று அனைவரிடமும் கெஞ்சினான்.
ஆனால் அவனின் வார்த்தையை யாரும் காது கொடுத்துக் கேட்கவில்லை.
தாயும் தந்தையும் அவனைப் பார்த்து முறைத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட சௌந்திரமும் புலம்பியபடியே அங்கிருந்து சென்றார்.
அனைவரும் சென்ற பின்பு தலையில் கை வைத்து அப்படியே அமர்ந்தவனுக்கு இரவு நடந்தது துளியும் தெரியவில்லை.
'அப்படி என்னதான் நடந்துச்சு? இல்லையே நான் டிரிங்ஸ் இருக்குற பக்கம்கூடப் போகலையே. நைட் நிகிதாதானே ஜூஸ்னு சொல்லி ஒரு டிரிங்க் கொடுத்தா, ஆனா அது ஃப்ரெஷ் ஜூஸ் தானே...' என்று யோசித்தவனுக்கு நடந்த எதுவும் தெரியவில்லை.
யாரிடமும் எதுவும் கேட்கப் பிடிக்காமல் அப்படியே தன் அறைக்குச் சென்றான்.
அங்கே இன்னும் தூங்கிக் கொண்டிருந்த நிகிதா தான் தெரிந்தாள். அதைப் பார்த்தவன் முதலில் அதிர்ந்து தான் போனான்.
'நாம இங்கேயிருந்து போகும்போது இவ ரூம்லேயே இல்லையே... இப்போ எப்படி வந்தா...' என்று தனக்குள் யோசித்தவன்,
'ஒரு வேளை ரெஸ்ட் ரூம் போயிருப்பா. நாம தான் வேற எங்கேயும் பாக்காம தலைவலிக்குதுன்னு கீழே போனோமே...' என்று தனக்குத் தானே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிக் கொண்டான்.
'நிகி கிட்ட கேட்டா தெரியும் நைட் என்ன நடந்துச்சுன்னு...' என்று ஒரு நொடி யோசித்தவன் மெல்ல அவளருகே சென்று அவளின் தோளில் கை வைத்து அவளை எழுப்பினான்.
"நிகி கொஞ்சம் எழுந்திரு" என்றான் அவளின் தோளைத் தட்டியபடி.
ஆனால் அவளோ தூக்கம் சற்றும் விலகாமலே அவனின் கையைத் தட்டி விட்டவள், "போ டார்லிங், எனக்குத் தூக்கமா வருது. நைட் பூரா நீ விடவே இல்லை..." என்றபடி புலம்பினாள்.
அவளின் புலம்பலைக் கேட்டவன் முதலில் அதிர்ந்து பின்பு தெளிந்தான்.
"ஓ காட்! அப்போ எனக்குச் சுயநினைவு இல்லாமலே எல்லாம் முடிஞ்சிடுச்சா... கொஞ்சமாவது சுயநினைவு இருந்திருக்கலாம். சாரி நிகி, ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன் போல... நல்லா தூங்கி எழுந்து வா நிகி" என்றவன் அங்கிருந்து சென்று குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.
அவன் குளியல் அறைக்குள் புகுந்த அடுத்த நொடியே தன் இமை திறந்து எழுந்தவள் அவனைப் பார்த்து எள்ளலாய் சிரித்தாள்.
"பாருடா! அப்படியே நம்பிட்டே... ஆனா நான் எதிர்பார்த்த அளவு எதுவும் நடக்கலை. இட்ஸ் ஓகே, இன்னைக்கு இது போதும். மீதியைச் சீக்கிரமே பாத்துக்கலாம்" என்றவள் அப்படியே மீண்டும் படுத்து தலையணையைக் கட்டிப்பிடித்துப் படுத்து உண்மையாகவே தூங்கிப் போனாள்.
***
சிவா நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் நேரம் நந்தினி அறையை விட்டு வெளியே வந்தாள்.
அங்கே ஹாலில் அமர்ந்து தன் மடிக்கணினியில் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரா.
அவனருகில் சென்றவள், "சார், நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா?" என்றாள் சிரித்தபடி.
தன் முன்னே குரல் கேட்டு நிமிர்ந்து அவளைப் பார்த்தவன் மெல்லப் புன்னகைத்துத் தன் கணினியைக் கீழே வைத்து விட்டு,
"என்னாச்சு, உன் ஃப்ரண்டை விட்டுட்டு வெளியே வந்துருக்க?" என்றான் அவளைப் பார்த்து.
"அவ டேப்லட் போட்டதுல தூங்கிட்டு இருக்கா சார். அதுதான் நான் டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு வெளியே வந்தேன்" என்றாள் பதிலாக.
"ம்ம்... சரி நீ இப்படி உட்காரு. ஆமா உன்னோட பேரென்ன?" என்றான் கேள்வியாய்.
அதற்கு அவளோ அவனை முறைத்துப் பார்த்தபடி,
"ம்ம்... நந்தினி..." என்றாள் அழுத்தமாக.
"எது ம்ம் நந்தினியா? அப்படி ஒரு பேர் இருக்கா என்ன?" என்றான் கொஞ்சமும் சிரிக்காமல்.
"சார், என் பேர் நந்தினி" என்றாள் இன்னும் கோபமாக.
"ம்ம்... ஓகே நந்தினி. ஆமா உங்க வீட்ல யாரெல்லாம் இருக்கீங்க?" என்றான் அவளைப் பார்த்து.
ஏனோ அவளிடம் பேசும்போதும் அவளிடம் வாயாடும் போதும் அவன் இயல்பாய் இருப்பதைப் போல் உணர்கிறான்.
"நானும் எங்க அம்மாவும் மட்டும் தான் சார்" என்றாள் அவளும் அவனுக்கு நிகராக.
"உங்க அப்பா..." என்றான் அவளின் வதனத்தைப் பார்த்து.
"சாரி சார், எனக்கு அப்பா இல்லை. நான் சின்ன வயசுல இருந்தப்பவே அப்பா இறந்துட்டாரு. இப்போ எனக்கு என் அம்மாவும் என் சிவாவும் தான் சார் உலகம்" என்றாள் புன்னகை கொஞ்சமும் குறையாமல்.
அவளிடம் கொஞ்சமும் வருத்தமும் இல்லை. என் அப்பாவிற்கு நிகராக என் அம்மாவும் என் தோழியும் இருக்கிறார்கள் என்ற புன்னகை அவளின் வதனத்தில்.
அதை உணர்ந்தவனும் கூட அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.
"சரி, நான் உனக்கு ஒரு வேலை சொல்லுவேன் செய்வியா?" என்றான் அவளைப் பார்த்து.
"சொல்லுங்க சார், நான் என்ன செய்யணும்?" என்றாள் மகிழ்ச்சியாக.
"பெருசா ஒன்னும் இல்லை. எனக்கும் உன் தோழிக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கணும்" என்றான் பட்டென்று.
"அதுக்கென்ன சார் கண்டிப்பா செஞ்சுடலாம்" என்று சொன்ன பின்பு தான் அவன் கூறிய செய்தியைச் செவிமடுத்தாள்.
அதிர்ச்சியாய் அவனைப் பார்த்தவள், "இப்போ நீங்க என்ன சொன்னீங்க?" என்றாள் படபடப்பாக.
"நீ என்ன உன் காதால கேட்டியோ அதைத் தான் கேட்டேன்" என்றான் தெளிவாக.
"இல்ல, நீங்க விளையாடலையே? அவ ஏற்கனவே நொந்து போயிருக்கா. நீங்க ரணத்தைத் திரும்பவும் அதிகரிச்சிற மாட்டீங்களே?" என்றாள் படபடப்பாக.
'எத்தனை பெரிய கோடீஸ்வரன்! அவனா என் சிவாவை கல்யாணம் செய்து கொள்ளக் கேட்பது!' என்ற நினைத்தவளுக்குச் சுத்தமாய் பூமி வேலை நிறுத்தம் செய்தது போல் உணர்ந்தாள்.
"இதோ பாரு நந்தினி, எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு. சோ நான் அவளைக் கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்படறேன். எனக்கு எங்க வீட்ல பெரியவங்க யாருமில்லை. அவளுக்கும் யாருமில்லை. நாங்க ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா இருந்துக்குறோமே..." என்றவனின் வார்த்தையிலிருந்த தெளிவு அவளுக்குச் சற்று நம்பிக்கையை ஊட்டியது.
"நிச்சயமா என் சிவாவை நல்லபடியா சந்தோஷமா வச்சிப்பீங்களா?" என்றவள் அவனுக்கு என்ன முடிவு சொல்வது என்று ஒன்றும் புரியாமல் கேள்வியைக் கேட்டாள்.
"உன் மேல சத்தியம் பண்ணட்டுமா? நிச்சயம் அவளோட சந்தோஷமா வாழுவேன். அவளோட நிம்மதி என்னோட நிம்மதி! போதுமா?" என்று அவளுக்கு உறுதியளித்தான்.
அதைக் கேட்டவளுக்கு மனம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கத் தன் கைகளை எடுத்து அவனைப் பார்த்து வணங்கியவள்,
"ரொம்ப சந்தோஷம் சார். என் சிவா ஒரு குழந்தை மாதிரி சார். அவ யாரையும் காயப்படுத்தி பார்க்கமாட்டா, ஆனா அவளைக் காயப்படுத்துற உறவுகள் தான் இங்கே அதிகமா இருக்கு. எனக்கு ரொம்ப சந்தோஷம் சார். இனி நானும் என் அம்மாவும் ரொம்பவே நிம்மதியா இருப்போம் சார். இதை நான் இப்பவே என் சிவாகிட்ட சொல்லணும் சார். அவ கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவா. அவளையும் நேசிக்க ஒரு ஜீவன்னு அவ திரும்பவும் பழையபடி மாறுவா சார்..." என்றாள் சந்தோஷமாய்.
அதைக் கேட்டவன் சிரித்தபடி, "நீ நினைக்கிற மாறி உன் தோழி உடனே ஒத்துக்கமாட்டா. என்னைவிட உனக்குத் தான் அவளைப்பத்தி நல்லா தெரியும். அவ இப்போ இருக்குற நிலையில யாரையும் நம்பமாட்டா. அதுக்கு முதல்ல அவ மனசை மாத்தணும். அதுக்கு அவளோட வாழ்க்கையில் என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியணும்" என்றான் இறுதியாக.
"ஆமா, நீங்க சொல்றதும் சரி தான். அவ வாழ்க்கையில் நடந்தது அவளோட எதிரிக்குக்கூட நடக்கக்கூடாது சார்" என்றாள் சோகமாக.
"அப்படி அவளோட வாழ்க்கையில் என்ன தான் நடந்துச்சு? அவளோட அப்பா அம்மா இல்லைன்னு தெரியும். ஆனா இப்போ என்னாச்சு? இத்தனை வருஷமா அவளோட அத்தை வீடு தானே அவளைத் தாங்குச்சு, இப்போ எதுக்கு அவங்க இவளை வெறுத்து ஒதுக்குனாங்க?" என்றான் கேள்வியாய்.
அவனின் கேள்வியை வைத்து அவனைப் பார்த்தவள்,
"இதெல்லாம் எப்படி உங்களுக்குத் தெரியும்? சிவா என்னைத் தவிர வேற யாருகிட்டேயும் தன்னோட குடும்ப விஷயத்தை பகிர்ந்துக்க மாட்டாளே சார். அப்போ உங்களுக்கு மட்டும் எப்படி தெரிஞ்சுது?" என்றான் ஆராய்ச்சியான பார்வையுடன்.
"உங்க ரெண்டு பேரோட டீடெயிலும் எனக்குத் தெரியும். அதுமட்டும் இல்லாம இப்போ நீங்க படிச்ச காலேஜ் அது என்னோடதுன்னு தெரியுமில்ல..." என்றான் சிரித்தபடி.
"ம்ம்... தெரியும். ஆனா நாங்க எங்க குடும்ப விஷயங்களை காலேஜ்ல எந்த இடத்துலேயும் சொல்லலையே..." என்றாள் ஒன்றும் புரியாமல்.
அதைக் கேட்டுச் சிரித்தவன் அவளைப் பார்த்து,
"நீங்க உங்களோட சொந்தப் பணத்துல படிக்கலை. ஒரு டிரஸ்ட் மூலமா படிச்சீங்க. உங்களோட ஸ்பான்சர் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?" என்றான் புரியாத புதிராக.
அவளோ அவனைப் பார்த்து மெல்லத் தலையாட்டியபடி, "இல்லை" என்றாள்.
"உங்களோட ஸ்பான்சர் நான் தான். ஆனா எனக்கே தெரியாது நேத்து வரைக்கும். ஒரு சந்தேகம் இருந்துச்சு. அது உன் ஃப்ரெண்ட்கிட்ட நேத்து பேசுனதுல புரிஞ்சுது" என்றான் பொறுமையாக.
அதைக் கேட்டு அதிர்ந்தவள் அதிர்ச்சியாய் அவனைப் பார்க்க, அவன் கூறியதைக் கேட்டு இன்னொரு ஜீவனும் உயிர் நடுங்கப் பயத்தில் உறைந்திருந்தது.
அது யாரோ? அடுத்த பாகத்தில் பார்க்கலாம் செல்லம்ஸ்.
தீபம் ஏற்றும்...