Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-9

Advertisement

praveenraj

Well-known member
Member
உண்ட மயக்கம் இதமானப் பாடல்கள் நீண்ட நாட்கள் கழித்து கொஞ்சம் மனம் விட்டுப் பேசிச் சிரித்தது போன்ற காரணங்களால் வண்டி காலியான சாலைகளிலும் மெதுவாகவே சென்றது. வண்டியை அபார்ட்மெண்ட் வாசலில் நுழைத்தவன் சிரித்த வாட்ச்மேனைப் பார்த்து சற்று கையை அசைத்துவிட்டு வர மீண்டும் குழந்தைகள் அங்கே கூட்டமாக விளையாடுவதையே பார்த்தவன் வண்டியின் ஜன்னலைத் திறக்க காற்றோடு அக்குழந்தைகளின் கூச்சலும் அவளின் செவியைத் தீண்ட உறங்கியபடி இருந்தவள் கண்விழித்து,"அதுக்குள்ள வந்தாச்சா செழி?" என்றவளுக்கு,

"தாயி டைம் 04 .30. நான் எவ்வளவு மெதுவா வந்தேன் தெரியுமா?" என்றவன் அக்குழந்தைகளின் அருகில் வண்டியை நிறுத்த, விஜித் தான்,"அங்கிள் எங்க போயிட்டிங்க? உங்களைத் தேடி ரொம்ப நேரமா ஒருத்தர் வெய்ட் பண்ணிட்டு இருக்காரு... சீக்கிரம் போங்க... உங்களுக்குத் திரும்ப திரும்ப கால் பண்ணிட்டே இருந்தாராம், ஆனா லைன் கிடைக்கவேயில்லையாம்" என்று சொன்னான் விஜித். விஜித் செழியனின் எதிர் பிளாட்டில் இருக்கும் பையன்.

"யாருனு கேட்டயா விஜித்?"

"இல்ல அங்கிள், ஆனா அவரை நான் உங்ககூட பலதடவை பார்த்திருக்கேன்" என்றதும் அவன் யோசித்து,"தேங்க்ஸ் விஜி..." என்று சொல்லி வண்டியை பார்க்கிங் லாட்டில் நிறுத்தி யோசிக்க,

ஆதிரா தான்,"வா டா இப்படி யோசிக்கறதுக்கு நேரா போயே பார்த்திடலாம்..." என்று சொல்லி இருவரும் லிப்ட் ஏற போக அதுவோ கரெண்ட் இல்லாத காரணமாக நிறுத்திவைக்கப் பட அவர்கள் படியை ஏற நினைக்க அப்போது வந்த செக்கூரிட்டி, "சார் நில்லுங்க லிப்ட் ஆன் பண்றேன்..." என்றதும் ஆதிரா கேள்வியாகப் பார்க்க,

"ஞாயிறு ஆனா போதும், இந்தப் பசங்க சும்மா சும்மா லிப்ட் மேலையும் கீழையும் போகவிட்டு விளையாடி நம்மள டார்ச்சர் பண்ணிடுவானுங்க. அதுக்குத் தான் நிறுத்தி வைத்திருக்கேன்..." என்று சொல்லி ஆன் செய்ய ஏனோ இருவரும் சிரித்துவிட்டு லிப்ட் ஏறி போக அங்கே தூரமாக நின்ற பாலாஜியைப் பார்த்ததும்,"டேய் பாலாஜி!" என்று கூவியபடியே செழியன் அவனை நெருங்க,

"எங்க போயிட்டிங்க? போன் என்னாச்சி? அம்மா வேற 10 வாட்டிக்கும் மேல கால் பண்ணிட்டாங்களாம்..." என்று சொல்லி,"நானும் ஒருமணிநேரத்துக்கு மேல இங்க நிக்கறேன்..." என்றதும்,

"என்னடா சொல்ற? அம்மாக்கு என்ன?" என்று பயத்தில் அவன் வினவ,

"அம்மாக்கு ஒண்ணுமில்ல..."

"ஐயோ அப்போ இனியாக்கு?" என்றதும் அவன் முறைக்க,

"டேய் புரியாம பேசாத... போன் தண்ணில விழுந்துடுச்சி. அதுனால தான் கழட்டி வெச்சிருக்கேன்..." என்ற செழியனுக்கு தன் அன்னை வேறு தன்னை மாப்பிள்ளை வீட்டில் பேசச் சொன்னது அப்போது தான் ஞாபகம் வந்தது. அதுவாக இருக்குமோ என்று யோசிக்க அப்போது ஆதிரா அவர்களையே கேள்வியாய்ப் பார்த்தாள்.

"ஆதி இந்தா சாவி... கதவைத் திற" என்றதும் அவளையே பார்த்தவன்,"அண்ணா இது ஜெகநாதன் ஐயா பொண்ணு..." என்று இழுக்க,

"நானே தான்..." என்று அவள் சிரிக்க,"ஆனா நீ? எனக்கு உன்னைப் பார்த்த ஞாபகம்..." என்று ஆதி இழுக்க,

"அக்கா நான் தண்டபாணி அவங்க பையன். சுகன்யாவோட அண்ணன்..." என்றதும் புரிந்தவளாய்,"நீதானா டா? சுக்கு எப்படி இருக்கா? சாரி டா சட்டுனு ஞாபகம் வரல..."

"ஆமா நீங்க எப்படி இங்க? அமெரிக்கால தானே?" என்று அவன் இழுக்க,

"டேய் என்ன அதிங்கபிரசங்கித் தனமா பேசுற?" என்று செழியன் சொல்ல,"ஐயோ அண்ணா... இல்லனா சும்மா தான் கேட்டேன்... சாரிக்கா சும்மா தான் கேட்டேன்..."

"பரவாயில்ல வா..." என்று சொல்லி அவள் அவனுக்குக் குடிக்க எதாவது தர உள்ளே செல்ல,

இவனோ அவனிடமே போன் வாங்கி தன் அன்னையை அழைத்து,"அம்மா சொல்லுங்க என்ன ஆச்சி?" என்றதும் அவர்கள் இருவரும் செழியனையே பார்க்க, அவன் தான் திருதிருவென முழித்து நின்றான். இவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்து,

"என்னமா சொல்ற? அதான் சொன்னேனே? நீ சொல்ல வேண்டியது தானே?"

"......."

"அப்போ போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டியது தானே? அங்க போய் ஒரு கம்பளைண்ட் பண்ணியிருக்கலாமில்ல? அப்படியும் இல்லைனா எனக்கு எதுவும் தெரியாது நேராக அங்க போய் அவனையே கேளுங்கன்னு சொல்லவேண்டியது தானே?" என்று தன் இயல்புக்கு மீறி சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தவனை அதிர்ச்சியாகப் பார்த்தான் பாலாஜி.

"..........."

"சரி பயப்படாத... நான் வரேன். என்ன பண்ணிடுவாங்கனு பார்க்கலாம்... அரசியல்வாதின்னா பெரிய கொம்பா என்ன?"

"இனியா தான் ரொம்பவும் பயந்துட்டா செழியா..."

"ஐயோ போன் தண்ணில விழுந்துடுச்சி மா... அதுதான் அதை வீட்டுல வெச்சிட்டு ஃப்ரண்ட் ட்ரீட் வேற அதுனால் நானும் அவளும் வெளிய போயிட்டோம். இப்போதான் வரோம். வந்ததுமே பாலாஜியைப் பார்த்துட்டு உனக்கு போன் பண்ணிட்டேன்..."

"சரிம்மா நீ பயப்படாத திரும்ப வந்தானுங்கன்னா என் பையன் வரானாம். எதுனாலும் அவன்கிட்டயே பேசிக்கோங்கன்னு சொல்லு. புரியுதா?"

"நீ மட்டுமா?"

"அவளும் தான். அதெப்படி அவளை விட்டுட்டு வரமுடியும்? நீ பயப்படாத நான் பார்த்துக்கறேன்..."

"சரிடா..."

"அம்மா?"

"சொல்லு..."

"இனி கிட்ட போனை கொடுங்க..."

"டேய் அவ ரொம்ப பயந்துட்டா டா..."

"சரி போன் கொடுங்க நான் பேசிக்குறேன்..."

"ஹலோ அண்ணா..." என்ற அவள் குரல் உடைய,

"குட்டி பாப்பு, தைரியமா இருக்கனும். அண்ணன் வந்துடறேன். சரியா? இன்னும் 3 மணிநேரத்துக்குள்ள நான் அங்க இருப்பேன். நீ தான் தைரியமா இருக்கனும். நீ பயந்தா அம்மாவும் பயப்படுவாங்க இல்ல? நீ சின்ன பொண்ணா என்ன? சரியா? திரும்ப யாருவந்தாலும் அண்ணா வராங்கனு சொல்லு... சரியா?"

"ஹ்ம்ம்..."

"இன்னும் 2 மாசத்துல கல்யாணம் ஆகப்போகுது நீ இன்னமும் சின்ன புள்ள மாதிரி பயந்துட்டு இருக்கலாமா? அப்படியா அப்பா நம்மை வளத்தாங்க? தப்பு நம்ம மேல இல்லாத வரை யாருக்குமே நாம பயப்படவேணாம். பயப்படக் கூடாது..."

"இல்லண்ணா அவங்க நிறைய பேரு..."

"அண்ணா வந்துடறேன் சரியா? தைரியமா இரு..."

"சரி அண்ணா..."

"இன்னும் 2 - 2 .30 மணிநேரத்துல அங்க இருப்பேன்..." என்றவனை ஆதிராவும் பாலாஜியும் அதிர்ச்சியாகப் பார்த்தனர். அவன் முகத்தில் நிறைய குழப்பம் அதையும் மீறி அவன் முகத்தில் ஒரு படபடப்பு தென்பட பேசி முடித்தவன் அப்படியே அந்த சோபாவில் அமர்ந்து கண்களை மூடி யோசித்தான். கொஞ்ச நிசப்தம் அங்கே ஆட்கொள்ள...

"என்னாச்சுண்ணா?ஏதும் பிரச்சனையா?" என்றவனைப் பார்த்து தலையை மறுப்பாக ஆட்ட,

"என்ன செழி போலீஸ், அரசியல்வாதின்னு எல்லாம் பேசுனா? என்ன ப்ரோப்லேம்?"

"டேய் நீ ஃபிரீ தானே இன்னைக்கு?" என்ற கேள்வி அவன் யோசிக்க அவனின் பதிலைக் கூட எதிர்பாராது,"சரி வா ஊருக்குப் போலாம். ஆதிரா, நீயும் ரெடி ஆகு..." என்று கூறி நேரே அவனின் ரூம் வரை சென்று மீண்டும் திரும்பி,"இன்னும் 10 நிமிஷத்துல கிளம்பனும். ரெண்டு மணிநேரத்துல நாம அங்க இருக்கனும். ரெடி ஆகு..." என்று கூறி அவன் கதவை அடைக்க இருவரும் ஒன்றுமே புரியாமல் திருதிருவென விழித்தனர்.

"என்ன டா விஷயம்?"

"எனக்கு மட்டும் எப்படித் தெரியும்? நானும் உங்ககூடவே தானே இருக்கேன்?" என்றான் பாலாஜி.

"சரி வா அவன் முகமே சரியில்ல... திரும்பி வரதுக்குள்ள ரெடி ஆகலாம்..." என்றாள். 15 நிமிடத்தில் மூவரும் வீட்டைப் பூட்டிவிட்டு கீழே காருக்குள் புகுந்தனர்.

கீழே பார்க்கிங் லாட்டில் வண்டியில் அமர்ந்தவன் இன்னமும் ஏதோ யோசனையில் இருக்க சட்டென திரும்பி அவனருகில் அமர்ந்திருந்த ஆதிராவைப் பார்த்தான். அவளோ எதுவுமே விளங்காது,"என்னாச்சுடா?"

"என்மேல உனக்கு அவ்வளவு நம்பிக்கையாடி? நான் ஊருக்குப் போறோம்னு சொன்னதுமே மறுப்போ எதிர்ப்போ எதுவும் நீ சொல்லாமல் ஏறி அமர்ந்துட்ட?"

"என்னடா மறந்துட்டையா? எப்படியும் இன்னைக்கு சாயுங்காலத்துக்குள்ள வீட்டுக்கு எல்லாம் சொல்லியாகணுமில்ல?" என்றதும்

"பயப்படுறியா ஆதிரா?"

"பயமா? எனக்கெதுக்கு பயம்? நான் தான் எந்த தப்புமே செய்யலையே? அப்படியே பயந்திருந்தா இவ்வளவு நாள் அங்க இருந்திருக்கவே மாட்டேனே? சரி அதைவிடு... என்னாச்சு? ஏதும் பிரச்சனையா? கண்டிப்பா எதோ இருக்கு... சொல்லுடா ப்ளீஸ்..."

"அதை எப்படி உன்கிட்டச் சொல்லப் போறேன்னு தெரியில..." என்றவன் யோசித்து, "சரி வா போகும்போதே சொல்றேன்..." என்றவன் வண்டியைக் கிளப்பினான்.

வண்டி மெல்ல ஸ்டார்ட் ஆகி தரமணியைத் தாண்டியதும் வேகமெடுத்தது. ஆனால் அவன் முகத்தையே அடிக்கடி திரும்பிப் பார்த்தவள் ஏதோ பெரிய பிரச்சனை என்று மட்டும் ஊர்ஜிதபடுத்திக்கொண்டாள்.

வண்டி பூந்தமல்லியைக் கடந்ததும்,"ஆமா உனக்கும் அரவிந்துக்கும் என்ன பிரச்சனை?" என்று அவள் முகத்தையே பார்க்காமல் நேராக ரோட்டைப் பார்த்து வண்டியை ஓடிக்கொண்டே கேட்டான் செழியன். பின்னால் அமர்ந்திருந்த பாலாஜியும் எதுவும் புரியாமல் இவர்கள் பேசுவதையே கேட்டுக்கொண்டிருந்தான்.

"நான் கல்யாணம் பண்ணி அங்க போனவுடனே அவன் என்கிட்டே கேட்ட முதல் கேள்வியென்ன தெரியுமா? அடுத்து என்ன பண்ணப் போற ? எப்போ இந்தியாக்குத் திரும்பிப் போகப்போறன்னு தான் கேட்டான்... நான் கூட ஏதோ விளையாட்டுக்குக் கேட்கறான்னு நினைச்சு சிரிச்சிட்டே, இப்போகூட ரெடினு சொன்னேன். அப்போ பர்ஸ்ட் பிளைட் ஏற்றிவிட்டா உடனே போய்டுவியா? அப்பா எங்க ஏதாவ்து முரண்டு பிடிப்பியோனு பயந்துட்டேன்னு சொன்னான்..." இதைக் கேட்டு ஒருகணம் அதிர்ச்சியில் திரும்பிப் பார்த்தவன் என்ன சொல்வது என்றே புரியாமல் இருந்தான் செழியன். அவளோ எதுவும் முகத்தில் காட்டாமல் வெறும் புன்னகையை உதிர்த்து தலையை ஆட்டினாள்.
"என்ன நேரா எங்க கூட்டிட்டுப் போனான் தெரியுமா? அவன் கூட ஒர்க் பண்ற பொண்ணு வீட்டுக்கு. நான் உடனே நீங்க வீடு எடுத்துத்தானே தங்கியிருக்கீங்கனு சொன்னாங்கனு கேட்டா ஆமா இது தான் நீ தங்கப்போற இடம்னு சொல்ல நான் ஏதும் புரியாம திடுக்கிட்டேன்..."
"என்ன பிராங்க் பண்ணப் போறீங்களானு கேலியாக கேட்டு சிரித்த என்னைப் பார்த்து யூ பெர்வேர்ட்ட் பிட்ச் சொன்னா புரியாதா? என்றதைக் கேட்டு திடுக்கிட்டுப் போனார்கள்..." பாலாஜியும் செழியனும்.

கண்ணீல் நீர் வழிய நின்றவளைப் பார்த்து,"இங்க பாரு ஒழுங்கா நீ எடுத்துட்டு வந்த சர்ட்டிபிகேட் எல்லாம் வெச்சி ஒரு மாசத்துல ஒரு வேலையை ரெடி பண்ற... என்று சில நூறு டாலர்களை அவளின் கையில் திணித்துவிட்டு இந்த மாசத்துக்கு புட், அக்கோமோடேசன் எல்லாம் நான் பே பண்ணிட்டேன். அடுத்த மாசத்துல இருந்து எல்லாம் நீ தான் பார்த்துக்கணும். எவனெவனையோ லவ் பண்ண வேண்டியது அப்றோம் நல்லா பாரின் மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணிக்க வேண்டியது..." என்று சொன்னவன்,"இது என் நம்பர். எதாவது தலைப்போற பிரச்சனைனா மட்டும் எனக்கு போன் பண்ணனும். சும்மா சும்மா போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணக் கூடாது. உன்ன நெக்ஸ்ட் வீக்ல தான் நான் திரும்ப மீட் பண்ணுவேன். இது நியூயார்க். நான் டெக்ஸ்சாஸ்ல இருக்கேன். ரெண்டும் ரொம்ப தூரம். உடனேயெல்லாம் வரமுடியாது..." என்று சொல்லி வெளியேறியவன் பின்பு உள்ளே வந்து, "எனக்கு இந்தக் கல்யாணத்துல சுத்தமா விருப்பமிலைல. அதும் உன்ன போல ஒரு திமிர் பிடிச்ச பொண்ணுகூட சான்ஸ்லெஸ். ஒழுங்கா சீக்கிரம் ஊருக்குப் போற வழியைப் பாரு..." என்றதும் அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. சொல்லப் போனால் அவளுக்கும் இந்தத் திருமணத்தில் துளியும் விருப்பமில்லை தான். அவள் ஏற்கனவே சில நம்பிக்கை துரோகத்தைக் கண்டு மனம் நொந்து தான் இருந்தாள். இருக்கிறாள். இளங்கோ தந்து சென்ற காயங்களே அவள் மனதில் இருந்து இன்னமும் ஆறவில்லை. இதில் 'இப்படி பழக்கமே இல்லாத ஊரில் யாரை நம்மி வந்தேனோ அவனே இப்படி என்னைத் தனியாக விட்டுட்டு வந்துட்டான்...' என்று நினைக்கையில் ஒரு இயலாமை அவளுள் எழுந்தது.

'பிடிக்கவில்லைனா யாரு இவனைக் கல்யாணம் செய்யச் சொன்னா? அங்கேயே சொல்ல வேண்டியது தானே?' என்று புலம்பியவளுக்கு இன்னும் ஜெட்லேகே தீரவில்லை. அதற்குள் இவ்வளவு குழப்பம். 'எப்படி இவ்வளவு சீக்கிரத்தில் அவனும் கல்யாணத்திற்கு ஒற்றுக்கொண்டான்?' என்று நினைக்கையில் அவளுக்கும் இந்த சந்தேகம் இருக்கத்தானே செய்தது. இதை அவன் அங்கேயே சொல்ல வேண்டியது தானே? எவ்வளவு நேரமென்றெல்லாம் தெரியாது ஆனால் அப்படியே அமர்ந்திருந்தாள் ஆதிரா. ( தொடரும்...)
sorry i'm not feeling well... so only small uds...
 
அவன்்டெக்ஸாஸ் ல இருக்கும் போது,
அவளை எப்படி நியூயார்க் அழைத்து வந்து
அங்கையே விட்டுச் செல்ல முடியும்....???
என்ன பசங்களோ...
கல்யாணம் வேணாம்னு சொல்ல தைரியமில்லை..
அழைத்துக் வந்து, அம்போன்னு விட்டுட்டுப் போக மட்டும்
அந்த தைரியம் எங்க இருந்து வந்தது...
 
Top