Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-8

Advertisement

praveenraj

Well-known member
Member
ஹோட்டல் உள்ளே சென்று மூன்று தளம் இருக்கக் கண்டவன் அங்கிருந்த வெயிட்டரை அழைத்து,"முஸ்தபா பார்ட்டி டைனிங் எந்த பிலோர்ல நடக்குது?" என்று கேட்டுக்கொண்டிருக்க அப்போது சரியாக உள்ளே வந்த கேஷவ் அவன் தோளைத் தட்டி,"டேய் செழி செகண்ட் பிலோர் டா..." என்று உரைக்க அதை வெயிட்டரும் ஆமோதித்தார்.

"தேங்க்ஸ்" என்று சொல்லி மூவரும் லிப்ட் ஏறினர். செழியனோடு வந்த ஆதிராவையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்தவன், 'யாரு?' என்று சைகை செய்து,"இன்றோ குடுடா..." என்று கேட்டான்.

"உனக்கெல்லாம் சத்தியமா இன்றோ கொடுக்கவே மாட்டேன். நீயெல்லாம் பெரிய பிராட் ஆச்சே..." என்று சொல்லிக் கண்ணடிக்க,

"மச்சான் நான் ஒன்னாம் நம்பர் டம்மி பீஸ்டா. நீ என்னை தைரியமா நம்பலாம்..." என்று சொல்ல அங்கே இவர்களின் சம்பாஷணைகளைக் கேட்டுக்கொண்டிருந்த ஆதிரா அவளாகவே,"ஹாய் நான் ஆதிரை ஜெகநாதன். செழியோட நெடுநாள் தோழி. ஆனா நானே நெடுநாள் கழித்து இப்போதான் செழியனைப் பார்த்தேன்..." என்று சொல்லவும் அவன் அவளுக்கு கையைக் கொடுக்க எத்தனிக்க லிப்ட் நின்று கதவு திறந்தது.

"ஒரு பொண்ணுக்கிட்ட கைக் கொடுக்கிறதுக்கு இந்த லிப்ட்கே பொறுக்கல பாருங்க?" என்று கேஷவ் சொல்ல மூவரும் இப்போது சிரித்துக்கொண்டே நடந்தனர்.

இவர்களைக் கண்டதுமே,"ஹே நம்ம tl (டீம் லீடர்) வராரு டி..." என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் ஒலிக்க,
"கூட யாரு வரது? அனுவா? இல்லையே யாரோ புதுசா வராங்க... போச்சு நிவேதிதா உனக்குப் போட்டிக்கு ஆளு வராங்க. ஹெவி காம்பிடிசன் போல..." என்று சுகந்தி சொல்ல நிவேதிதாவின் கண்கள் சிவந்தது. அதற்குள் வந்தவர்களை அவர்கள் வரவேற்றனர்.

16 முதல் 18 பேர் அமரும் வண்ணம் வரிசையாக சேர் போடப்பட்டிருக்க செழியன் அமரவும் அவனின் வலதுபுறம் அமர்ந்தாள் ஆதிரா. இடதுபுறமாக கேஷவ் அமர நிவேதிதா தான் கேஷவ் ஆதிரா இருவரையும் முறைத்தாள். அப்போது தான் ரேணு சரியாக,"ஹே நான் சொல்லல ஒரு சர்ப்ரைஸ் பெர்சன் நம்ம கூட லஞ்ச் வருவாங்கனு அவங்க தான் இது. மிஸ் ஆதிரா. நம்ம tl ஓட..." என்று கோர்வையாய் இழுத்து நிறுத்த, அனைவரும் இப்போது அவளுக்கு கோரஸ் போடும் விதமாய்,"நம்ம tl ஓட?" என்று அவளைப்போலவே இழுத்து நிறுத்த, "ஃப்ரண்ட்..." என்று ரேணு சொன்னதும் ஏனோ எல்லோருக்கும் சப்பென்று ஆனது. ஒரு வெறுமை எல்லோருடைய முகத்திலும் தென்பட மாறாக ஒருவர் முகத்தில் மட்டும் இப்பொது தான் புன்னகை பரவியது.

"யா. ஐ யம் யுவர் tl 'ஸ் ஃப்ரண்ட் எ லாங் லாஸ்ட் ஃப்ரண்ட், ஹூ ஹாஸ் ஜஸ்ட் ரிஜாய்ன்ட்..." (நான் உங்கள் டீம் லீடரின் நட்பு. அதும் இப்போது தான் புதுபிக்கப்பட்ட தொலைந்த நட்பு.) என்றவுடன் எல்லோரும் மீண்டும் ஓ போட அந்த இடமே கொஞ்சம் ரம்மியமாய் இருந்தது.

"செழியன் பொண்ணுங்க கூடவெல்லாம் ஃப்ரண்ட்லியா பேசுவாரா?" என்று நிவேதிதா கொஞ்சம் ஆற்றாமை நிறைய எதிர்பார்ப்புடன் கேட்க,

"ஆமா நிவேதிதா. சும்மா இல்ல என்ன ஒரு 8 வருஷ ஃப்ரண்ட்ஷிப்பா டா செழியா?" என்று புன்னகையுடன் அவனைப் பார்த்துக் கேட்ட ஆதிராவுக்கு,

"9 வருஷம் கடைசியா நான் உன்னைப் பார்த்தவரைக்கும். லாஸ்ட் 5 இயர்ஷா கான்டேட் இல்ல..." என்று சொல்ல எல்லோரும் மேலும் ஆச்சரியப்பட்டனர்.

"இப்படியே பேசிட்டே இருக்கறதா உத்தேசமா என்ன? எப்போ தான் புவ்வா போடுவீங்க?" என்று கேட்ட கணேஷை,

"எப்போப்பாரு சாப்பாட்டுலே குறியா இரு..." என்ற ஆர்த்திக்கு பதிலாய்,"சாப்பிட தானே வந்தோம்?" என்று நந்தினி கணேஷுக்கு ஆதரவுக்கரம் நீட்ட,"ஓ ஓ கதை அப்படிப் போகுதா?" என்று மகேஷ் அவளை வரவும் என்றதும் மீண்டும் ஒரு கோரஸ் எழுந்து அடங்கியது.

அதற்குள் பேரர் வந்துவிட முஸ்தபா தான்,"கைஸ் யாருக்கு என்னவேணுமோ கூச்சப்படாம ஆர்டர் பண்ணுங்க..." என்று முடிக்கும் முன்னே,

அதற்குள்,"ஆமா ஆமா பில்லை பத்தியெல்லாம் யாரும் கவலையே படவேணாம். எல்லாம் முஸ்தபா பார்த்துப்பான்..." என்ற கேசவுக்கு தோதாய்,"முஸ்தபா முஸ்தபா டோன்ட் ஒர்ரி முஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா. டே பை டே டே பை டே வாழ்க்கைப் பயணம் டே பை டே முழுக்காத ஷிப்பே பிரென்ட்ஷிப் தான்..." என்று பாடி எல்லோரும் தங்கள் தண்ணீர் கோப்பையை மேலே தூக்கி மெழுகுவர்த்திபோல காட்ட அந்த ஹோட்டலே இப்போது இவர்களைத் தான் பார்த்துக்கொண்டிருந்தது.

"இத்தனை வருஷம் நட்புன்னு சொல்றீங்க, ஆனா உங்களைப் பற்றி எதுவுமே செழியன் சொன்னதே இல்லையே?" என்று நிவே தான் மெதுவாக ஆரமித்தாள். அதற்குள் கூட்டத்தில் இருந்தவர்கள் சிலர்,"ஆமா ஆமா அவ கஷ்டம் அவளுக்கு..." என்ற குரல் ஒலிக்க,

"சும்மா இருங்கடா டேய்..." என்றவள் ஆவலோடு ஆதிராவிடம் பதிலை எதிர்பார்த்தாள்.

எல்லோரும் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த ஆதிரா செழியனை ஓரக்கண்ணால் பார்த்தபடியே,"அப்படியா! ஆனா உங்களைப் பற்றி நிறையவே செழி என்கிட்டே சொல்லியிருக்கான்..." என்று சொல்லி செழியைப் பார்த்துக் கண்ணடித்தாள் ஆதிரா. அதற்குள் அவனுக்கு புரையே எடுத்துக்கொண்டது. அவன் திரும்பி ஆதிராவை முறைத்து அவளின் காதில்,"ஹே உளறாத ஆதி... உங்கிட்ட நான் எப்போ சொன்னேன்?" என்று சற்று கோவம்... கோவம் என்பதைக் காட்டிலும் எரிச்சலுடன் கேட்க,"அடப்பாவி இப்போக் கூட கார்ல வரும்போது சொன்னியே? ஒரு அழகானப் பொண்ணு என்னை நூல்விடுறா... ..."அவ ரொம்பவும் நல்ல டைப் அப்படி இப்படினு என்று கொஞ்சம் உரக்கவே ஆதி சொல்ல,

"நிஜமாலுமா?" என்று கண்களில் ஆவல் பொங்க நிவேதிதா கேட்கவும்,
அதைக் கண்டவன் மீண்டும் ஆதிராவின் காதோரத்தில்,"ஆதி நீ வேற நிலைமை புரியாம என்னைக் கோர்த்துவிடாத..." என்று முணுமுணுத்தான்.

"பாருங்க, இதையெல்லாம் இப்போ போய்ச் சொல்லுவியான்னு கோவிச்சுக்கறான்..." என்று மேலும் செழியைக் கொஞ்சம் சீண்டிப் பார்த்தாள் ஆதிரா.

உண்மையிலே கடுப்பானவன் கோவமாய் எழுந்து அங்கிருந்து செல்ல முற்பட, உடனே பதறியவள் அவனின் கையைப் பற்றிக்கொண்டு,"சும்மா டா ஒரு ஃபன்க்கு (fun)..." என்று சொன்னவளை இப்போது வெறுப்புடன் பார்த்தாள் நிவேதிதா.

"ஹே சாரி போக்ஸ். சும்மா விளையாண்டேன். ஹே நிவேதிதா, ஐ அம் ஜஸ்ட் கிட்டிங்... சோ ப்ளீஸ் ஃபர்கிவ் மீ..." என்றதும் வெய்ட்டர் வர ஆளாளுக்கு வேண்டுமென்பதை ஆர்டர் தந்தனர். சூப்பில் ஆரமித்து சில பல குதூகல உரையாடலுடன் லன்ச் ட்ரீட் சூப்பராக நிறைவடைந்தது. சாப்பிட்டு முடித்து கைக்கழுவி வந்த செழியன் ஏதோ தோன்றியவனாய்,"ஆமா ஜென்னி எங்க காணோம்?"

"அடப்பாவி இப்போதான் கேட்பியா?" என்ற நந்தினி,"அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லையாம்..." என்றதும் மோகன்,"எப்படி நல்லா இருப்பா? கண்ணாளனைக் காணாது கண்மணி கலங்கி இருப்பாள்..." என்று சொன்ன மோகனை எல்லோரும் கவிதை கவிதை என்று சொல்லி வாழ்த்தினர்.

"ஆமா ஜான் எங்க us போயிருப்பானா?" என்று கேட்க,"தெரியில ரீச் ஆகியிருப்பான்..." என்று சொல்லி சிறிது உரையாடி அங்கிருந்து ஆதிராவும் செழியனும் இனிதாய் விடைபெற்றனர்.

வரும் முன் எல்லோரிடமும்,"ஹே கைஸ் ரொம்ப நாளுக்கு அப்றோம் நல்லா என்ஜோய் பண்ணேன். ஐ பர்கெட் மைசெல்ஃ கம்ப்ளீட்லி அண்ட் ஐ பீல் லைக் ஜஸ்ட் ஜம்பெட் இன்டூ எ நியூ வேர்ல்ட்... தேங்க யூ ஆல்..." என்றாள். (நான் எல்லாம் மறந்து புது உலகத்தில் லயித்ததைப்போல் உணர்ந்தேன்...)

எல்லோரிடமும் ஓரளவுக்கு ஒட்டிக்கொண்டாள் ஆதிரா. இது தான் ஆதிராவின் சுபாவம். அவளிருக்கும் இடம் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. நேற்றிலிருந்து வித்தியாசமாகவே இருந்தவளிடமிருந்து அப்படிப்பட்ட ஆதிராவை மீண்டும் கண்டத்தில் செழியனுக்கு பேரானந்தமாய் இருந்தது.

வண்டியில் ஏறி அமர்ந்தவர்கள் fm ஆன் செய்ய,"நேயர்களே நீங்கள் இப்போ கேட்டுக் கொண்டிருப்பது ரேடியோ சிட்டி 91 .1 rj நான்சி. நேரம் சரியாக 03 .17..." என்றதும் தங்களையும் அறியாது இருவரும் தங்கள் வாட்சை பார்த்துக்கொண்டனர்.

"ஹே கிட்டத்தட்ட ரெண்டரை மணிநேரம் போனதே தெரியில?" என்று ஆதிரா சொல்ல செழியனும் ஆமோதித்து வண்டியைக் கிளப்பிக்கொண்டிருந்தான்.

"நாம கிளம்பும் போது நீ என் கையைப் பிடிச்சு இழுத்தத்தைப் பார்த்த நிவேதிதா ரொம்ப வருத்தப்பட்டிருப்பா..." என்று சொன்னவள்,"என்னமோ என்னால தான் நீ அவளை அவொய்ட் பண்ற மாதிரி தோணுது..." எனவும்,'ஆமாம் நீ சொல்றது தான் கரெக்ட் ஆதி. நீ தான் இதுக்கெல்லாம் காரணம்...' என்று மனதில் நினைக்க, "பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்..." என்னும் பாடலை அதோடு சேர்ந்து பாடிக்கொண்டே வண்டியைச் செலுத்தியவன்,
"கைகள் இடைதனில் நெளிகையில்,
இடைவெளி குறைகையில்,
எரியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும்..."

என்று பாட்டோடு சேர்ந்து உற்சாகமாய்ப் பாடிக்கொண்டிருந்தான். ஏனோ இப்படி வித்தியாசமாய் பாடும் இவனையே வியப்பாக பார்த்துக்கொண்டிருந்தாள் ஆதிரா.

"இந்தப் பாட்டு ரொம்ப பிடிக்குமோ?"

"பின்ன ரொம்ப பிடிச்ச பாட்டை நமக்கு ரொம்ப பிடிச்ச பெண்ணோடு ட்ராவல் பண்ணும்போது கேட்கறதே சுகம்..." என்று தன்னையும் மீறி தன் மனதின் ஆசையைச் சொன்னவன் எங்கே தான் உளறியதைக் கேட்டுவிட்டாளோ என்று திரும்பி ஆதிராவைப் பார்க்க,

அவளோ,"அவ்வளவு பிடிக்குமாடா என்னை?" என்று சாதாரணமாய்த் தான் கேட்டாள். அவள் கேட்டதில் எந்த உள்ளர்த்தமும் இல்லை என்றாலும் அவனுக்கு தற்போது என்ன எதிர் வினையாற்றுவது என்று தெரியாமல் திருதிருவென விழித்தான்.

"அப்போ எங்க டா போன இந்த 4 வருஷமா?" என்று உரிமையாய் வினவியவளைப் பார்த்தவன்,"நீ இன்னொருவனை நேசிக்கிறாய் என்பதை முதன்முதலில் என்னிடம் சொல்லும் போது அந்த வலி... அந்த நிலை அதன் பின் உன்னுடன் சகஜமாய் பழக முடியாமல் அதே நேரம் உன்னை விட்டு ஒதுங்கவும் முடியாமல் நான் பட்ட அவஸ்தை?" என்று வாய் வரை வந்ததை எப்படிச் சொல்வதென்று தெரியாமல் அதைச் சொல்லாமல் அவன் மனதிலே தவித்து,"அதான் சொன்னேனே... பேமிலி இஸ்ஸுஸ்... சில கடமைகள்... சமயங்களில் வாழ்க்கை நம்மை அதுபோக்குல இழுத்துட்டு போயிடும் ஆதி..." என்று நிறுத்த, அவள் எதுவும் பேசாமல் அப்படியே அந்த சீட்டில் மீண்டும் கண்ணயர்ந்தாள். (தொடரும்...)
 
Nice update.
ஆதி க்கு என்னப்பா பிரச்சினை....

அவள் love பண்ணி தானே கல்யாணம் செய்து இருக்கா....

பெரிய எபி தரேன்னு சொன்ன writer ji எங்கே.... :unsure: :unsure:
 
Top