Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-6

Advertisement

praveenraj

Well-known member
Member
மெல்ல உணவருந்திவிட்டு வெளியே வந்தவர்கள் வீடு செல்லலாம் என்று நினைக்க ஆதி தான்,"செழி பால் பாக்கெட் மற்றும் சில பொருட்கள் வாங்கணும்..." என்று சொல்ல, இருவரும் அருகிலிருந்கும் அந்த ஜெனரல் ஸ்டோர்ஸ்கு சென்றனர். அவளை உள்ளே சென்று வாங்குமாறு சொல்லி விட்டு வெளியே நின்றே அடுத்து என்ன செய்வது என்று யோசித்தான். திடீரென ஒரு கை தன்னை பின்னாலிருந்து தோளில் தொடவும் திடுக்கிட்டுத் திரும்பியவன்,"ஹே ரேணு? நீ தானா? பயந்துட்டேன்..." என்றான் செழியன்.
"என்ன சார், ஜானை பேக் பண்ணிட்டு தனியா போர் அடிக்குதா? வேணுனா நான் கம்பெனி தரவா?" என்று சொல்லி அவள் கண்ணடிக்கவும் பதறியவன் ஓரடி பின்னால் போக, அப்போது சரியாக மீண்டும் பின்னாலிருந்து ஒரு கரம் அவனைத் தொட இன்னும் படப்படத்தவன் திரும்ப ஆதி தான் நின்றுக்கொண்டிருந்தாள் . அவனின் முக பதற்றத்தை கண்டு ,, செழியா .. என்ன ஆச்சி ? ஆர் யூ ஒகே பேபி?" என்று சொல்லிச் சிரிக்க இப்போது பின்னால் நின்றுகொண்டிருந்த ரேணுவுக்குத் தான் மேலும் ஆச்சரியம் தொற்றிக்கொண்டது. அவன் பேந்த பேந்த முழிக்க அவன் கையிலிருந்த வேலட்டை பறித்தவள்,"என்ன ஆச்சு டா?" என்று ஆதி கேசுவலாய் விசாரிக்க இப்போது ரேணுகா தான் இது யாராக இருக்கும் என்று கூர்ந்து கவனிக்க ஆரமித்தாள். அப்போது தான் ரேணுகா இருப்பதையே உணர்ந்தவன்,'ஐயோ இவ முன்னாடியா? மாட்டுனேன் போ... ஊருக்கே தண்டோரா போட்டுடுவாளே?' என்று நெளிந்தான்.
இப்போது ஆதிராவைச் சுட்டி,"ரேணு இது ஆதிரா. என் ஃப்ரண்ட். ஊர்ல இருந்து வந்திருக்கா.. ங்க" என்று சொல்ல அவனை மேலும் சந்தேகத்துடன் பார்த்தாள் ரேணு. அதற்குள் ஆதிரா பில் பே செய்ய வேண்டி அவர்களிடம் எக்சிகியூஸ் வாங்கிப் போக அவனை இப்போது கண்சிமிட்டாது பார்த்துக்கொண்டிருந்த ரேணுவிடம்,"பாரு உன் பார்வையே சரி இல்லை? நானே எக்ஸ்பிலைன் பண்றேன்..." என்றதும்,
"போலாம் செழி. எல்லாம் வாங்கியாச்சு..." என்று வந்தவள் அவர்கள் இருவரும் எதுவும் பேசாது நிற்பதால் அவர்கள் இருவரையும் பார்த்தவள் புரியாமல் விழிக்க, நினைவுக்கு வந்தவன்,"ஆதி, மீட் மிஸ் ரேணுகா. ரேணுகா சத்தியபிரகாஷ். மை கொலீக்..." என்று ஆதிக்கு ரேணுவையும்,"ரேணு மீட் மிஸ்... மிஸ்ஸஸ்..." என்று தடுமாறியவனைக் கண்டவள் அவளாகவே தன்னை 'மிஸ் ஆதிரா. ஆதிரை ஜெகநாதன்' என்றவளை அதிர்ச்சியாகவே விழித்தான் செழியன்.
இருவரின் சம்பாஷணைகளைக் கண்டு ஏதோ சரியில்லை என்று உணர்ந்தவள் மேலும் தன்னை இப்படி எதிர்பாராமல் தான் இருவரும் தவிக்கிறார்கள் என்று புரிந்துகொண்ட ரேணுகா அவர்களை மேலும் எம்பரஸ் செய்ய விரும்பாமல் அவர்கள் கையில் இருந்த குரோசேரிஸை (groceries) பார்த்து,"டேய் மதியம் நம்ம முஸ்தபா ட்ரீட் தரான். மறந்துட்டய்யா என்ன? எதுக்கு இப்போ குரோசேரிஸ் எல்லாம் வாங்குற? லஞ்ச்கு வரயில்ல?" என்று கேள்வியாய் வினவ அவனோ திரும்பி ஆதிராவைப் பார்த்தான்.
அவன் பார்வையின் அர்த்தம் விளங்கியவள்,"நீ போயிட்டு வா செழி. எனக்காக எல்லாம் பார்க்காத. நான் ரூம்ல இருக்கேன். நோ ப்ரோப்லேம்..." என்று சொன்னாள்.
"ஹே ஆதிரா ரிலாக்ஸ்... இப் யூ டோன்ட் மைண்ட் நீங்களும் ஜாயின் பண்ணலாமே? இது ஒன்னும் ஆஃபிஸியல் பார்ட்டி இல்ல கேசுவல் தான். பயப்படாம வாங்க. டேய் இளா மறக்காம இவங்களையும் கூட்டிட்டு வா..." என்றதும் அவன் ஆதியைப் பார்க்க, ரேணுவே ஆதியைப் பார்த்து,"இவ்வளவு சொல்றேன் வரமாட்டிங்களா?" என்று கேட்ட ரேணுவின் உரிமை கலந்த அன்பில் நெகிழ்ந்தவள்,"ஓகே ரேணு, நாங்க வரோம்..." என்று சொன்னாள் ஆதிரா. ஹோட்டல் அட்ரஸை செழியனுக்குச் சொல்லிவிட்டு அவன் காதில் மட்டும் கேட்கும் விதமாய்,"வா வா செத்தடி மகனே வா... இன்னைக்கு இருக்கு உனக்கு... இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு பார்த்தா இது புல் பீரே இல்ல அடிக்குது?" என்று சொல்லி கண்ணடித்து விடைபெற அவள் சொன்ன விதத்தில் செழியன் பயந்து நிற்க அதைக் கேட்ட ஆதிரா சிறிய புன்முறுவலைத் தர இருவரும் விடைபெற்றுக்கொண்டு ரூம் நோக்கி வந்தனர்.
மணி 10 .40 என காட்டிய கைக்கடிகாரத்தைச் சற்று வெறித்துப் பார்த்துவிட்டு அவளை அந்த அபார்ட்மெண்டில் இருந்த ஸ்விம்மிங் பூல் அருகே அழைத்துச் சென்று அங்கிருந்த ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்தான் செழியன். அவன் அந்த ஸ்விம்மிங் பூலில் விளையாடும் குழந்தைகளையே ரசித்துக்கொண்டிருந்தான். திடீரென தோன்றியவனாய்,"ஹே நம்ம ஊரு காத்தாயி பாட்டி தோட்டத்து கிணறு ஞாபகமிருக்கா?" என்று கேட்டு சற்று நாஸ்டால்ஜிக் (nostalgic - பழமையான நினைவு) பீலிங்குக்குள் சென்றவனின் தோளை உரசி அமர்ந்தவள்,"அதை எப்படி டா மறக்க முடியும் சொல்லு? நானுட்பட நம்ம வயது பசங்க எல்லோரும் நீச்சல் கத்துக்கிட்டதே அந்தக் கிணத்துல தானே? ஐ ஸ்டில் ரிமெம்பெர் எங்க அப்பா என்னையைத் தூக்கி கிணத்துல போட்டுட்டுப் பிறகு அவரும் குதித்தாரு எனக்கு நீச்சல் கத்துக்குடுக்க. அது மீண்டும் காணக் கிடைக்காத அழகிய கனாக் காலம் செழியா..." அவள் ரசித்தபடியே சொல்லிய அவளின் முகபாவங்களை எல்லாம் பார்த்து மெய்மறந்துப் போனான்.
"ஹே இப்போ எதுக்கு சம்மந்தமே இல்லாம அதைபற்றிக் கேட்ட?" என்றவுடன் அவன் அக்குழந்தைகளைக் கைக்காட்டி,"நாமெல்லாம் கிணத்துல கத்துகிட்ட நீச்சலை இவனுங்க எல்லாம் குட்டைல கத்துக்கிறாங்க. இனிமேல் வரவங்க எங்க கத்துப்பானுங்களோ? தண்ணீ முதல இருக்குமா?" என்று வருத்தப் பட,"பார்ரா சோசியல் கான்செர்ன்னா?" என்று அவனை அவள் சீண்டினாள்.
கொஞ்ச நேரம் இருவரும் அதையே ரசித்துக்கொண்டிருக்க மெல்ல செழியன் பேச்சை ஆரமித்தான்.
"ஆதிரா..." என்றதும் நிமிர்த்து என்ன என்பதைப் போல் புருவம் உயர்த்த பாவம் அவளின் இந்தச் சின்ன சின்ன முக பாவங்களில் அடிக்கடி சிக்குண்டு போனான் அவன். என்ன செய்ய? இது தானே அவனின் பொக்கிஷம்? இதுவெல்லாம் அவன் மனதில் பசுமரத்தாணி போல ஆழப் பதிந்து இருந்தது. அதையே அடிக்கடி மீட்டெடுப்பவனுக்கு இப்போது அவையெல்லாம் நேரிலே மீண்டும் காணக் கிடைத்தால் அவனும் என்ன தான் செய்வான்?
ஒரு சிறு புன்னகையை உதிர்த்து,"அதானே பார்த்தேன்? என்னடா இன்னும் விஷயத்துக்கு வரலையேனு நெனச்சேன்... நேற்றே கேட்பன்னு எதிர்பார்த்தேன். பரவாயில்ல கேளு..." என்று அவன் எதைக் கேட்க வருகிறான் என்று நன்கு உணர்ந்துகொண்டாலும் அதை அவன் வாயாலே கேட்கட்டும் என்றும் அவனாகக் கேட்ட பிறகே பதிலுரைக்கலாம் என்று அவள் காத்திருந்தாள். அவளின் இந்த புத்திசாலித்தனத்தை நினைத்து மெச்சிக்கொண்டவன் ஒரு மௌனத்திற்குப் பிறகு எப்படி ஆரமிக்க என்று யோசிக்க அவனைக் காத்திருக்கச் செய்ய விரும்பாது அவளே தொடர்ந்தாள்...
"கல்யாணம்னா எல்லோருக்கும் ஒரு கனவு இருக்குமில்ல? அதுவும் பெண்களுக்கு கொஞ்சம் அதிகமாவே இருக்கும்..." என்றதும் அவன் அவளை கேள்வியாய்ப் பார்க்க, "ஆமா டா பசங்க நீங்க எல்லாம் உங்களுடைய வாழ்க்கை சூழ்நிலையை அப்படியே தொடரப் போறீங்க. அதே ஊரு, அதே வீடு, அதே மனிதர்கள், அதே வேலை, அதே ஆம்பிஎண்ஸ் (ambience - சுற்றுச்சூழல்) ஆனா பொண்ணுங்களுக்கு அப்படி இல்லையே?புது ஊரு, புது வீடு, புது மனிதர்கள், புது சொந்தம்... இதுக்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன? என்ன தான் கல்யாணத்துக்கு முழு சம்மதம் இல்லைனாலும் அப்பாவோட உடம்பு சரியில்லாதக் காரணத்துனால என் மாமா பார்த்த மாப்பிள்ளையை ஓகே சொன்னேன். ஒரு உண்மையைச் சொல்லட்டா? அவன் us ல இருக்கான், சாப்ட்வேர்ல ஒர்க் பண்றாங்கரத்தைத் தவிர எனக்கு வேற எதுவுமே தெரியாது. 'தாண்டவம்' படத்துல அனுஷ்காவுக்கு எப்படி விக்ரமைப் பற்றி எதுவுமே தெரியாதோ அப்படித் தான் கிட்டத்தட்ட என் நிலைமையும். அந்தப் படம் வந்தப்போ நான் என் ஃப்ரண்ட்ஸ் கூடச் சேர்ந்து அதை எப்படி எல்லாம் கலாச்சேன் தெரியுமா? எப்படிடா இந்தக் காலத்துல ஒருத்தனைப் பற்றி எதுவுமே தெரியாம ஒருத்தி கல்யாணம் பண்ணிப்பா? அதுவும் படிச்சா டாக்டர் பொண்ணுனு? செம்ம ஓட்டு ஓட்டுனேன். ஆனா என்னையை எடுத்துக்கோ ஒரு ஜர்னலிசம் ஸ்டுடென்ட், ஊரு உலகத்தைப் பற்றி எல்லாம் பிங்கர்டிப்ல இருக்கும் எனக்கு நான் கல்யாணம் பண்ணப் போறவனுடைய பெயரைத் தவிர எதுவுமே எனக்கு முழுசா தெரியாது..." என்றவுடன் இவன் அவளைப் பார்க்கவும் புரிந்தவளாக அரவிந்த் என்றாள்.
"அந்த நாயோட பேரு. ச்சே நாயை அசிங்கப்படுத்தக் கூடாது..." என்றவுடன் செழியன் அதிச்சியாக அதற்குள் அந்தக் கூட்டத்தில் இருந்து வந்த," ஐயோ பிரவின் பிரவின் என் பையனை யாராவது காப்பாத்துங்க ப்ளீஸ்" என்ற கூச்சல் சப்தம் அவர்களின் உரையாடல்களைத் தடுத்தது. (இந்த பிரவின்னு பேரு வெச்சவனுங்க எல்லாம் இப்படித்தான் இருப்பானுங்க போல!?) உடனே அங்கு விரைந்தவன் குளத்தில் அவன் தத்தளிப்பதைக் கண்டு சட்டென குதித்தவன் அவனை மீட்டு வந்தான். மயக்க நிலையில் இருந்த அவனைக் கண்ட அவன் தாய்,"ஐயோ கண்ணா..." என அலற இவன் தான் அவரின் கூச்சலில் கடுப்பாகி,"கொஞ்சம் வாயை மூடுறீங்களா? ஒன்னும் ஆகல ப்ளீஸ்..." எனக்கூறி அவனின் வயிற்றை அழுத்தி தண்ணீரை வெளியேற்ற கண்விழித்தான் பிரவின். சுற்றியிருந்த குழந்தைகள் கைத்தட்டி ஆரவாரம் செய்ய அவனைத் தூக்கி கீழே விட்டான்.
உடனே அவன் தாய் அவனிடம் நன்றி சொல்ல உணர்ச்சிவசத்தில் காலில் விழப் போக,"ஐயோ அம்மா என்ன பண்றீங்க? விடுங்க விடுங்க... பையன் கொஞ்சம் பயந்துட்டான். பார்த்துக்கோங்க..." என்று சொல்லி,"கடவுள் மாதிரி காப்பாத்துனீங்க ரொம்ப நன்றி தம்பி. உங்கமேல நான் கம்பளைண்ட் பன்ணதை எதையும் மனசுல வெச்சிக்காம ஹெல்ப் பண்ணியிருக்கிங்க..." என்று சொல்ல,
"ஐயோ பரவாயில்லை விடுங்கம்மா..." என்றவன் மீண்டும் சென்று அந்த பெஞ்சில் அமர அவனின் தலையைத் தொட்டவள்,"வாடா சீக்கிரம் ரூம் போய் தலை துவட்டலாம்..." என்று அவனை அவர்கள் அறைக்கு அழைத்துச் சென்றாள் ஆதிரா.
ரூம் சென்றவன் பாத் ரூம் சென்று டீ ஷர்டை பார்க்க அப்போது தான் அவனின் செல்போன் காணவில்லை என்று உணர்ந்தவன் வெளியே வர சரியாகி காலிங் பெல் அடித்தது. அந்தம்மா தான்,"தம்பி இந்த போன் உங்களுதா?" என்று நீட்ட தண்ணீரில் விழுந்ததால் அது சுவிட்ச் ஆப் ஆக,'ச்சை...' என்று முகம் சுளித்தவன்,"பரவாயில்லை தேங்க்ஸ் மா..." என்று அதைக் கழட்டி காயவைத்தால் சரியாகிவிடும் என்று சொல்லி ஆதிரா என்றவுடன் வெளியே வந்தவள் அந்த போனை பார்த்ததும் தன்னையும் அறியாமல் சிரிக்க அவன் முகம் கடுகடுவென இருப்பதைக் கண்டு,"என்னாச்சு?" என்று கேட்டு கரிசனத்தோடு,"குடு நான் காயவெக்கிறேன்..." என்றதும்
"இது போன் டிரஸ் இல்ல..." என்று கடுப்பாக இவன் சொல்ல வெடித்தச் சிரிப்பைத் தவிர்க்கயியலாது அவள் உதிர்க்க,"டைம் ஆச்சு. நான் போய்க் குளிக்கிறேன். போனை முடிஞ்சா சரிபண்ணி வை..." என்று அவளின் பதில் வேண்டாது சென்றான். அவளும் தன்னால் முடிந்ததைச் செய்தவள் சட்டென ஞாபகம் வந்தவளாய் தன் ட்ரொல்லியில் இருந்து ஹேர் ட்ரையர் எடுத்து போனை காயவைத்துக்கொண்டிருந்தாள். அப்போது யாரோ சொன்னதை ஞாபகப் படுத்தியவள் கிட்சன் சென்று போனை அரிசி பக்கெட்டில் வைத்து மூடினாள். வெளியே வந்தவன் அவள் செய்கையைப் பார்த்து, "என்ன தேறுமா?" என்று கேட்க,"பார்க்கலாம்..." என்றவள் மணி 12ஐ கடந்திருக்க உடனே செழி அவளை சென்று ரெடி ஆகச் சொன்னான்.
"லன்சுக்கு போகணுமில்ல? இங்கேயிருந்து அதுக்கு எப்படியும் ஒரு அரைமணிநேரம் ட்ராவல் இருக்கும்..." என்றதும் அவள் போனை பார்க்க,"விடு ஆதி. எனக்கு யாரு இனி போன் பண்ணுவா? அம்மாகிட்டயும் பேசிட்டேன். உன்கிட்ட போன் இருக்கில்ல?" என்று ஆதியைக் கேட்க,"இருக்கு, ஆனா அதுல பாரின் சிம் தான் இருக்கு..." என்றாள்.
"ஓ, சரி என் சிம்மை உன் போன்ல போட்டுடலாம்..." என்றவன் ஏதோ தோன்றியவனாய்,"ஒரு மூணு மணிநேரம் போன் தொல்லை இல்லாமல் இருக்கலாமே? சரி நீ ரெடி ஆகு கிளம்பலாம்..." என்று சொல்லி டிவி ஆன் செய்து கார்ட்டூன் நெட்ஒர்க் பார்த்துக்கொண்டிருந்தான். இவன் இன்னும் கார்ட்டூன் பார்ப்பதை நினைத்தபடியே சிரித்துக்கொண்டவள் குளிப்பதற்காக அவளும் விடைபெற்றாள். பாவம் இன்னும் சற்று நேரத்தில் தன்னுடைய வாழ்க்கையே தலைகீழாய் மாறப்போவதை உணராத அப்பேதை !!! (தொடரும்)
சாரி மக்களே நேத்து என் ஜியோ டாங்கில் ரிப்பேர் ஆகிடுச்சு. அதான் அப்டேட் கொடுக்க முடியல...
 
ப்ரவீன் இன்னும் எத்தனை கதைகளில் வருவார்...;):p?
என்ன இது? இதுவரை நான் முடித்த எட்டு கதைகளில் ரெண்டில் மட்டும் தான் பிரவீன் வந்துள்ளான். அதும் கேமியோ ரோல் தானே?? இனி எழுதப்போகும் கதைகளிலும் வந்தால் வரலாம்... நன்றி??
 
நான் கூட சாருக்கு பரீட்சை அதனால தான் வரலைனு நெனச்சேன்....

பிரவீன் காணாம போயிருக்காரு, தண்ணிக்குள்ள விழுந்துருக்காரு இன்னும் என்னென்னல்லாம் செஞ்சிருக்காரு இந்த மாதிரி வீர தீர சாகசம் ???
 
என்ன இது? இதுவரை நான் முடித்த எட்டு கதைகளில் ரெண்டில் மட்டும் தான் பிரவீன் வந்துள்ளான். அதும் கேமியோ ரோல் தானே?? இனி எழுதப்போகும் கதைகளிலும் வந்தால் வரலாம்... நன்றி??

யாழியோட ப்ரவீன்,...????
 
நான் கூட சாருக்கு பரீட்சை அதனால தான் வரலைனு நெனச்சேன்....

பிரவீன் காணாம போயிருக்காரு, தண்ணிக்குள்ள விழுந்துருக்காரு இன்னும் என்னென்னல்லாம் செஞ்சிருக்காரு இந்த மாதிரி வீர தீர சாகசம் ???
no exams gotta over... athu innum list neelum...??
 
மிகவும் அருமையான பதிவு,
பிரவீன்ராஜ் தம்பி

அடங்கொன்னியா
ஆனாலும் இந்த பிரவீன் பையன் அநியாயத்துக்கு ரொம்பபபபபபபபபபபவே நல்லவனா ஒண்ணுந்தெரியாத அப்பிராணியா இருக்கானே
ஒண்ணா காணாமல் போயியியியியி போலீஸ்காரன் கண்டுபிடிச்சி கொடுக்குறாரு
இல்லாட்டி நீச்சல் தெரியாட்டியும் நான் நீச்சல் குளத்திலேதான் குளிப்பேன்னு உருண்டு பெறண்டு அழுது அழிச்சாட்டியம் பண்ணி நீச்சல் குளத்தில் விழுறானேஏஏஏஏஏஏ
 
Top