Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-5

Advertisement

praveenraj

Well-known member
Member
இண்டக்சன் ஸ்டவ் ஆன் ஆகும் சப்தத்தைக் கேட்டு பெட் ஷீட்டை தூக்கியவன்,"குட் மார்னிங்..." என்ற குரலுக்கு பதிலாய் கண்களைச் சுருக்கிக் கொண்டு கைகளை உயர்த்தி நெட்டி முறித்தவன் திரும்பி மணியைப் பார்க்க செல்லை தேடியவனைப் பார்த்து,"மணி 09 .15 ஆகுது டா..." என்றவளுக்கு,"என்னது 09 .15 தானா? சன்டேனா எப்பவும் 11 .45ல இருந்து 12 .15 க்கு தான் முழிப்பேன்..." என்று சொன்னான்.

"அடப்பாவி? அப்போ பிரேக் பாஸ்ட்?"

"நோ பிரேக் பாஸ்ட். டைரெக்ட்டா லஞ்ச் தான். அதும் பிரியாணி தான்..." என்றவனை ஏக்கத்தோடுப் பார்த்தவள்,"ஆனா என் வயிறு தாளம் போடுதே?" என்று உதடு சுளித்து நின்றவவளைக் கண்டு,"பிரிட்ஜில் பிரட் இருக்கும், எக் இருக்கும், ஜாம் இருக்கும் பட்டர் இருக்கும் இண்டக்சனும் இருக்கு எதாவது சாப்பிடு ஆதி..." என்றவன் மீண்டும் பெட்ஷீட்டை இழுக்கப் போக,

"பிரட் டா? ஐயோ!" என்றவள்,"ஐ ஹேட் பிரட்..." என்ற குரலுக்கு ஏனோ மறுப்பு சொல்ல முடியாமல் எழுந்து அமர்ந்தவன்,"சரி கிவ் மீ 15 மினிட்ஸ். நான் ரெப்பிரேஷ் ஆகிட்டு போய் டிபன் வாங்கிட்டு வரேன்..." என்று செல்ல எத்தனிக்க,

"இல்ல டா செழியா... நாம ரெண்டு பேரும் வெளிய போயே சாப்பிட்டு வரலாம். வரலாம் தான?" என்று கேள்வியாய்ப் பார்க்க,
அவள் அப்படி நிறுத்தி நிதானமாகக் கேட்டு அவன் பதிலுக்காக அவனையே பார்க்கும் போது அவளின் முக நளினங்களைக் கூர்ந்து கவனித்தவன், இதை எல்லாம் மீண்டும் தன் வாழ்வில் காணவே கிடைக்காது என்று நினைத்திருக்க அதை இப்போது மீண்டும் கிடைக்கப் பெற்றவன் இன்னமும் இது கனவா இல்லை நிஜமா என்ற குழப்பத்தில் இருந்தான்.

அவன் பிரஷ், டவல் எடுக்க வேகமாய் அவனின் அறைக்கு நுழைந்தவன் ஏதோ உணர்ந்தவனாய்,"ஆதி நான் என் பிரஷ் எடுத்துக்கறேன்..." என்று அவளிடம் பர்மிசன் கேட்க,

"உன் ரூம்க்கு போகவே உன்னை பர்மிசன் கேட்க வெச்சிட்டேனில்ல?" என்று உச் கொட்டியவள் ஏதோ யோசிக்க,

"ஆதி... ஆதிரா... இங்க பாரு. என்னைப்பாரு. உன் ப்ரோப்லேம் என்னனு எனக்குத் தெரியாது. ஆனா ஒன்னு சொல்றேன் அதை நல்லா மனசுல எதிக்கோ, நீ இங்க இப்போ தங்குறது எனக்கு பாரமில்ல... அது மட்டும் நிச்சயம். உண்மையைச் சொன்னா இட்ஸ் மை ப்ளஸுர் டு ஹாவ் யூ இன் மை லைஃ அகைன் (என் வாழ்வில் உன்னை மீண்டும் கிடைக்கப்பெற்றது என் பாக்கியம்...) சோ நோ ஒற்றீஸ் அட் ஆல். இது உன் வீடு மாதிரி. அண்ட்..." என்று ஏதோ பேச வந்தவன்,'சரி சாப்பிட்டு விட்டுப் பேசலாம்' என்று நினைத்து அவன் ரெப்ஃபிரஸ் ஆகப் போனான்.

அவன் உடைமைகளை எடுத்துக்கொண்டு ஜானின் அறைக்குச் சென்றவன் ஒரு பதினைந்து நிமிடத்தில் ஷார்ட்ஸ் டி - ஷர்ட் உடன் வெளியேறியவனை சற்று புருவத்தை உயர்த்திப் பார்த்தவள்,"இப்படியேவா வெளிய வரப் போற?" என்றதும் தன்னையே மீண்டுமொரு முறை மேலையும் கீழையும் பார்த்துக்கொண்டவன்,"ஆமா. ஏன் இதுக்கென்ன?" என கூறி தன் அறைக்குச் சென்று கண்ணாடி முன்பு தலை சீவி வந்தவன் கார் சாவியைத் தேடி ஹாலை ஒரு அதகளப்படுத்தி இறுதியில் 'யுரேகா யுரேகா...'(கண்டுபிடித்து விட்டேன் என்ற பொருளுடைய கிரேக்க சொல்) என்று ஆர்கிமெடிஸ் போல கத்தி குதிக்க இடுப்பில் கையை வைத்துக்கொண்டு அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் சாரி சாரி முறைத்துக்கொண்டிருந்தாள் ஆதிரா.

"என்ன? ஏன் இப்படி போஸ் கொடுக்கற ஆதி?" என்றவன் அவளின் கண்களைப் பார்த்து அவளின் கோவத்தை உணர்ந்தவனாக,"ஹே நானும் ஜானும் இங்க லோக்கல்ல வெளிய போனா இப்படியே ஷார்ட்ஸ்ல தான்யா போவோம்..." என்றவனுக்கு பதிலேதும் கூறாமல் நின்றவளைப் பார்த்து மீண்டும் புரிந்தவனாய்,"ஒரு நிமிஷம்..." என்று கூறி அறைக்கதவை மூடித் திறந்தவன் ஒரு வேட்டியுடன் காட்சியளித்தான்.

"ஹ்ம்ம் இப்போ வா போலாம்..." என்று கூறி அவன் கையைப் பிடித்தவள்,"பசங்க கூட நீ எப்படிவேணுனாலும் போ. ஆன என்கூட நீ இப்படித் தான் டீசெண்டா டிரஸ் பண்ணனும்.(?)..." என்றவளை வியப்புடன் பார்த்தவன்,"நீயும் மாறவேயில்லை ஆதிரா..." என்று கூறி கார் சாவியை கையில் எடுக்க,"ஹே ஹோட்டல் ரொம்ப தூரமா செழி?"

"அதெல்லாம் இல்லையே... எப்படிச் சொல்ல? ஹ்ம்ம் நம்ம சாந்தி அக்கா வீடு தான் இந்த பிளாட்டுனு வெச்சிக்கிட்டா நம்ம ஊர் முருகன் கோவில் இருக்குள்ள? அவ்வளவு தூரம் தான் வரும்..."

"அவ்வளவு தானா? அப்றோம் எதுக்கு கார்? வா நாம நடந்தே போகலாம்..." என்று அவன் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள் ஆதிரா.

"மூங்கில் தோட்டம்... மூலிகை வாசம்...
நெறஞ்ச மௌனம்... நீ பாடும் கீதம்...
பௌர்ணமி இரவு... பனிவிழும் பொழுது...
ஒத்தையடிப் பாதை... உன்கூடப் பொடிநடை...
இது போதும் எனக்கு... இது போதுமே...
வேறென்ன வேணும்? நீ போதுமே..."என்று


அவனையும் அறியாமல் இந்தப் பாடல் அவன் வாயிலிருந்து வெளிவர,"பார்ரா? உனக்கு பாட்டெல்லாம் கூடப் பாட வருமாடா செழியா?" என்று கண்களைச் சுருக்கி புருவம் உயர்த்தி புட்டு கன்னங்கள் மேலேறி உதடு விரிந்து ஆச்சரியமாய்ச் சிரித்தவளின் பிம்பத்தில் தொலைந்தவன் முடிந்த மட்டுக்கு அவளின் இந்த முகத்தை மனகண்ணில் நிறைத்துக்கொண்டான். பின்னே காணகிடைக்காத காட்சி எக்ஸ்பிரெஷன் அல்லவோ இது? அவன் பார்ப்பதையே பார்த்து புரியாமல் விழித்தவள்,
"என்னடா ஏதோ கடவுள் பார்த்த பக்தன் போல பிரீஸ் ஆகிட்ட? என்ன?" என்று மீண்டும் தலையை ஆட்டவும் அவளின் லூஸ் ஹேர் அவள் முகத்தில் விழ அதை பெரிதும் கவனிக்காமல் அவனிடம் பேசியபடியே ஒதுக்கி,"சொல்லுடா செழி..." என்றவளையே கண்ணிமைக்காமல் பார்த்தான் செழியன்.

நேற்று கூட அவளை இப்படிப் பார்க்கவில்லை. அதாவது அவளை இப்படி ரசித்து பார்த்திடவில்லை. இப்போது ஏனோ அவளை ரசிக்கும் அவன் கண்கள் அதிலிருந்து வெளிவர மறுக்கும் அவன் கண்கள் மூளை இரண்டையும் அவன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மிகவும் சிரமப்படுகிறான் செழியன்.

ஸ்டேர்ஸில் நடந்து வந்தவர்களுக்கு எதிரில் வழுக்கை தலையுடன் வந்தவர் ஏனோ இருவரையும் ஒரு மாதிரி பார்த்தார். அப்போது தான் செழியன் கொஞ்சம் திடுக்கிட்டான். பின்னே அவர் இவன் பிளாட்டின் எதிர் பிளாட் காரர். அவருடன் அவனுக்கு கொஞ்சம் நல்ல பழக்கம் இருக்கிறது. நல்ல ஜாலி டைப் தான். இருந்தும் அவர் ஆதிராவையே கேள்வியாய்ப் பார்க்க, செழியனுக்குth தான் என்னவோ செய்தது. பேசிக்கல்லி ஷை டைப்பானவன் தான் செழியன். இந்த அபார்ட்மெண்ட் என்றில்லை அவன் பணிபுரியும் இடம், வீடு, நட்பு, சுற்றம் என்று எல்லோரிடமும் ஒரு நன்மதிப்பைப் பெற்றவன். சோ எங்கே இப்போது அவன் பெயருக்கு ஒரு களங்கம் வந்துவிடுமோ என்று அவனையும் அறியாமல் ஒரு பயம் எழுந்தது. அவன் எதுவும் பேசாமல் வேகமாய் இறங்க,

"குட் மார்னிங் செழியன்..." என்று குரல் வரவும்

முகத்தை அஷ்டகோணலாக்கி பின் நொடியில் அதை சரிசெய்து,"குட் மார்னிங் சார்..." என்றான்.

"என்ன இது அதிசயமா இருக்கு? காலையிலே எழுந்திருகிங்க செழியன்?"

"இல்ல சார் ப்ரெண்ட் வந்திருக்காங்க. அது தான்..." என்று புன்னகைத்தபடியே பதிலளிக்க தன்னைப் பற்றிய பேச்சு வந்ததால் மரியாதை நிமித்தமாய் அவருக்கு ஒரு ஹலோ சொன்னாள் ஆதிரா.

"எனக்குத் தெரிந்து இத்தனை வருஷத்துல செழியனை ஒரு பொண்ணோட இப்போதான் பார்க்கறேன் மா... இந்தக் காலத்துல எங்க தேடுனாலும் இப்படி ஒருத்தன் கிடைக்காது..." என்றவர் விடைபெற செழியன் தான் சற்று வெடவெடத்து போனான். ஒழுக்கச் சீலர்கள் என்றும் பழிக்கு அஞ்சுவார்களாம். சும்மாவா சொன்னார் வள்ளுவர்? இருக்கலாம்!

அதற்குள்,'உன்னோடு நானும்... போகின்ற பாதை... இது நீ...ளா...தோ... தொடுவானம் போலே...' என்று ஒலித்த செல்லை பார்த்தவன் அம்மா என்றதும் எடுத்து காதில் வைத்து,"சொல்லுமா எப்படி இருக்க?" என்றான்.

"நல்லா இருக்கேன் டா. மாப்பிள்ளை வீட்டுல இருந்து போன் பண்ணாங்க. கல்யாண டேட் முடிவு பண்ணனுமாம். அதுதான் நீ எப்போ வரேன்னு... ஹே இரு இரு, தூங்கிட்டா இருக்க? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா செழி?"

"இல்லம்மா முழிச்சிட்டேன். சாப்பிடப் போறேன்..." என்றவன் ஆதிராவைப் பற்றிக் கூறலாம் என்று நினைக்கும் முன்னே,"டேய் கண்ணா, பழைய நகை எல்லாம் கொடுத்து கொஞ்சம் புது நகையெல்லாம் வாங்கணும் டா கண்ணா. கல்யாண செலவெல்லாம் நிறைய இருக்கு. எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு..." என்றவருக்கு, "அம்மா, பயப்படாதீங்க... அதான் நான் இருக்கேனில்ல? லோன் அப்ளை பண்ணியிருக்கேன். மோரேவேர் அது எல்லாம் என் பிரச்சனை. நான் பார்த்துக்கறேன். நீங்க வீணா அதையெல்லாம் நெனச்சி கவலை படாதீங்க..." என கூறியவாறே அபார்ட்மெண்ட் வாசலை வந்தடைந்தார்கள்.

"ஒத்த பையனா இருந்து நீ ரொம்ப கஷ்டப்படுற டா செழி... உனக்கு ரொம்ப சிரமம் தரேனில்ல?"

"அம்மா சும்மா இரும்மா. நான் தான் இருக்கேனில்ல? பயப்படாத. இனியா கல்யாணம் சூப்பரா நடக்கும். குட்டிபாப்புக்கு நான் செய்யாம யாரு செய்வாங்க சொல்லுங்க?..." என்றவன்,"அப்றோம் ஒரு முக்கியமான விஷயம்..." என்று கூறி அவளை அருகிலிருந்த உணவகத்திற்கு உள்ளே செல்லச் சொல்லி இவன் சற்று தூரம் விலகிச்சென்று,"அம்மா நான் ஆதிராவைப் பார்தேன்ம்மா..." என்றதும்,

"எங்க டா? எப்படி இருக்கா? அவ வெளிநாட்டுல தானே இருக்கா. நீ எப்படி அவளைப் பார்த்த?" என்று அடுக்கடுக்காகக் கேள்விகளை முன்வைக்க,
"அம்மா... அதுவந்து..." என்றவன் நேற்றிரவு நடந்ததை விலாவரியாகக் கூறியதும் சற்று மனம் கலங்கினாலும் தன் பையன் ஒருபோதும் தவறு செய்யமாட்டான் என்னும் நம்பிக்கையில் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார் அவர்.

"இப்போ என்ன பண்றதுனே தெரியிலம்மா. ஜெகநாதன் அங்கிள் ஊர்லயா இருக்காரு? நாங்க அநேகமா இன்னைக்கு ஊருக்கு வரவேண்டி இருக்கும்னு நெனைக்கிறேன். என்னமோ எனக்கு மனசே சரியில்ல. இந்த ஜான் பையன் வேற நேற்று என்னைக் குழப்பிவிட்டுட்டான்..."

"என்ன சொன்னான் ஜான்?"
அதற்குள் ஆதிரா வெளியே வருவதைக் கண்டவன்,"சரிம்மா அவ வேற அப்போவே பசிக்குதுனு சொன்னா அதனால நாங்க சாப்பிட்டதும் கூப்பிடுறேன்..."

"நல்ல பொண்ணுடா அவ. பாவம் என்னாச்சோ? நீ சொன்னதும் எனக்கே நெஞ்சு கருக்குனு இருக்கு. அவ அம்மா இறந்ததுமே அவ வாழ்க்கை ரொம்ப திசை மாறிடுச்சு... கடவுளே அவளுக்கு துணை நில்லு..." என்று கூறி காலை கட் செய்த இவர்களுக்கு இன்னும் சில மணிநேரத்தில் ஒரு மிகப்பெரிய பூகம்பம் அவர்களை நோக்கி வரப்போகிறதென்று தற்போது தெரியாது. (தொடரும்...)
நாளையில் இருந்து பெரிய எபியா தரேன். சாரி.
 
தொடர வேண்டும், என நினைப்பது வேற ஒரு இரவா..?
செழியன் இன்னும் அவளை விருப்பத்தோடு பார்க்கிறான்..
அவனின் விருப்பம், ஆதிரா அறிவாளா...?
சொல்லாதக் காதலா ...அவனுடையது?
 
அம்மாக்கும் தெரிந்து இருக்குன்னா , சிறுவயதில் இருந்தே தெரிந்த குடும்பமா....

இவ்வளவு நேசிப்பை, எப்படி இழந்தான் செழியன்.....

Interesting ud ? ? ?
 
Top