Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-24

Advertisement

praveenraj

Well-known member
Member
இருவரும் தங்கள் பிளாட்டிற்குள் நுழைந்து ரெஸ்ட் ரூமில் அடைபட்டுக்கொண்டனர். இருவரும் ஒருவார்த்தையும் பேசிக்கொள்ளவில்லை. ஏன் கீழே பார்த்ததோடு சரி அதன் பின் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கவும் கூட இல்லை. ஏனோ செழியன் மனம் என்னென்னமோ செய்தது. ஒருவேளை அந்தக் குழந்தை மட்டும் கூப்பிடாமல் இருந்திருந்தால் அவன் அவளை நெருங்கியிருப்பான். நெருங்கிய பின் என்ன? அவன் உதடுகள் துடித்துக்கொண்டு இருந்தது. இது தவறு என்று அவன் மூளை சொல்ல, 'அப்போ நிவேதிதாவைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா?' என்று உடனே மனம் அடுத்த கேள்வியைக் கேட்டது. அதற்கு அவனிடம் பதிலில்லை. இருந்தும் இதுவரை கண்ட்ரோல்டாக இருந்தவனின் மனம் இன்று சலனப்பட்டு விட்டது. பின்னே குழந்தையின் கண்ணில் சாக்லேட்டை காட்டிவிட்டு எத்தனை நேரம் தான் அவனைத் தவிக்க விடுவது? இது சரி என்று ஒரு பக்கம்மும் தவறு என்று மறுபக்கமும் அவன் மனம் வாதிட்டுக் கொண்டு இருந்தது. வாதிட்டுக் கொண்டே தான் இருந்ததே ஒழிய பதில் இன்னும் கிடைத்தபாடில்லை. அவனுக்கு ஆதிரா வேண்டும். அதேநேரம் அது இயற்கையாக நடக்க வேண்டும். அவளாக அவன் காதலைப் புரிந்துகொண்டு வரவேண்டும். அது அத்தனை சுலபமா? குளித்தும் முடித்துவிட்டான் ஆனால் இன்னும் முடிவு எட்டப்படாததால் அவன் ஷவரிலே நின்று கொண்டு இருந்தான். கூடவே பயமும் வந்து சென்றது. 'ஒருவேளை என் செய்கையை அவள் தவறாக எடுத்துக்கொண்டு இருந்தால்?' என்று நினைக்கையில் அவன் மனம் படபடவென அடித்துக்கொண்டு இருந்தது.

அங்கே செழியனின் பின்னாலே சென்றவள் அவள் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டு கொண்டது தான் தாமதம், அதற்குள் அனன்யா கேட்ட அந்தக் கேள்வி அவள் மனதில் அசரீரித்துக் கொண்டேயிருந்தது. செழியனின் காதல் யார்? அவன் காதலி யார்? என்று யோசிக்க ஏனோ சட்டென கீழே செழியன் தன்னை நெருங்கியிருந்தது தோன்ற அவன் கண்கள் வழக்கமாய் இல்லாமல் ஏதோ சொல்லத் துடித்ததாகவே அவளுக்குத் தோன்றியது. இருந்தும் அதை யோசிக்கும் நிலையில் அவள் இல்லை. அவன் அவளை நெருங்கிய அந்த நிமிடம் அவன் கரம் அவள் இடையில் தவழ்ந்த அந்தக் கணம் ஆகியவற்றையே மீண்டும் மீண்டும் யோசித்தாள். அதற்கு மேல் அவளுக்கு எதுவும் தோன்ற வில்லை. அவள் அந்நொடியில் அப்படியே ப்ரீஸ் ஆகிவிட்டாள். அவள் மூளை அப்போதே செயலிழந்து காணப்பட்டது. உண்மைக்கும் ப்ரமைக்கும் நடுவில் அவள் சிக்கித் தவித்தாள். இதற்கிடையில் அவன் காதலி யார் என்று அதைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் மலையுச்சியிலிருந்து கீழே எட்டிப் பார்த்தால் மனம் எல்லாம் பதைபதைக்குமே அதே உணர்வு தான் எழுந்தது. அவளால் அதற்கு மேல் அங்கே இருக்க முடியாமல் வெளியேறி உடைமாற்றி விட்டு கதவைத் திறக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டு இருந்தாள்.

'எனக்கென்ன ஆச்சு? நான் ஏன் செழியனை நேரில் பார்க்க அஞ்சுகிறேன்?' என்று யோசிக்க அவளுக்கு விடை கிடைத்தப்பாடில்லை. இப்போது தாழ்ப்பாளில் கையை வைத்து திறக்கலாமா வேண்டாமா என்று தவித்துக்கொண்டு இருந்தாள். வெளியேறியவள் நேராக கிட்சன் புகுந்து காஃபீ போட ஆரமிக்க செழியனும் வெளியே வந்துவிட்டான். அவள் கிட்சனில் இருப்பது புரிந்து நேராக பால்கனி சென்று தூறலை ரசித்துக்கொண்டு இருந்தான். அப்போது வானத்தில் தெரிந்த வானவில்லைப் பார்த்தவன் குதூகலித்து,"ஆதி ஆதி இங்க வாவென்... சீக்கிரம் வா..." என்று ஆர்ப்பரிக்க அவனின் உற்சாகக் குரலில் கையில் காஃபீ மக்குடன் அந்த எட்டாவது மாடியிலிருந்து வானத்தையும் அடிக்கும் சாரலையும் கீழே ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீரையும் பார்த்தவன் அந்த இருட்டியும் இருட்டாத வேளையில் கருமேகங்களால் சூழப்பட்டு எந்த நிமிடம் வேண்டுனாலும் பெருமழை பெய்யும் நிலையில் அடித்த அந்த இதமான காற்று இருவரின் உடல்களிலும் உரசி மயிர் கூச்செரிதலை (goosebumps) ஏற்படுத்த இயற்கையாக இருவரும் நெருங்கி நின்றனர். இன்னும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை.

ஆதிரா செழியன் பார்க்காத நேரம் அவனைப் பார்க்க எண்ணித் திரும்ப செழியனும் திரும்பப் போகிறான் என்று உணர்ந்தவள் வேகமாக தன் தலையை மறுபுறம் திருப்ப அவளின் ஈரக்கூந்தலில் ஒளிந்திருந்த நீர் துளிகள் அவன் முகத்தை வருட சில ஈர முடிகளும் அவன் மீது ஒட்டிக்கொண்டது. இந்த முறை அவனின் வலப்புறம் இருந்தவளின் இடையைப் பிடிக்க நீண்ட கைகள் நிறைய தயக்கத்திற்குப் பிறகு அந்தக் கம்பியைப் பிடித்து அவளை அணைக்கட்டி இருந்தது. அவளுக்கும் ஹார்ட் பீட் அட்ரீனலின் உதவியால் அதிகம் ஆகியிருக்க இந்த அருகாமையை மனம் விரும்பியது. காஃபி மக்கிலிருந்த காஃபீ தீர்ந்தும் அவள் அதைப் பருகுவதைப் போல் பாவனை செய்துகொண்டு இருந்தாள்.

ஏதோ ஒரு உந்துதலில் செழியன் தன் கையை எடுத்து அவளைச் சுற்றி வைத்துவிட்டான் தான். இப்போது அதைத் தொடர்வதா இல்லை எடுப்பதா என்று மனப் போராட்டம் கொண்டவன் இறுதியில் கையை எடுக்கவும் அவனின் அலைபேசி ஒலிக்கவும் சரியாக இருக்க அதை எடுக்க அவன் திரும்ப அவன் கன்னம் மீதிருந்த அவளின் கூந்தல் மெதுவாக விலகிச் சென்றுவிட இதுவரை இழுத்துப் பிடித்திருந்த மூச்சியை ஒருசேர விட்டாள் அவள். இதுவரை அவளுக்கிருந்த அந்தக் குறுகுறுப்பு சிலிர்ப்பு எல்லாம் நினைக்கையில் ஒரு வித சொல்ல முடியாத நிலை உண்டானது. தன் அன்னையிடம் தான் பேசிக்கொண்டு வந்தவனைக் கண்டு அவள் சற்று தள்ளி நிற்க பேசிவிட்டு அலைபேசியை அவளிடம் கொடுத்துவிட்டு அவளைப் பார்க்க ஏனோ அவள் மேனியெல்லாம் சிவந்து வெட்கம் படர்ந்த அவள் கன்னம் மேலும் சிவந்து அவனைப் பார்க்கமுடியாமல் விலகிச் சென்றாள்.

வழக்கமாய் ஒன்றாக அமர்ந்து கதை பேசிக்கொண்டு சாப்பிடும் அவர்கள் இன்றோ மௌனமாய்ச் சாப்பிட்டனர். உறங்கச்செல்லும் முன் எதையாவது பேசிவிட்டு (அன்று அவன் ஆபிசில் நடந்த எதையாவது அவளிடமும் அவள் ஆபிசில் நடந்த எதையாவது அவனிடமும்) குட் நைட் சொல்லி உறங்கச் செல்பவர்கள் ஒன்றும் பேசாமல் ஏன் குட் நைட் கூடச் சொல்லாமல் சென்றனர். இனியும் உறக்கம் வருமா இருவருக்கும்? செழியன் ஏன் அப்படிச் செய்தான் என்று அவளும் அவள் ஏன் இன்று வித்யாசமாக வெட்கம் எல்லாம் கொண்டாள் என்று அவனும் யோசித்தபடியே உறங்கிப் போனார்கள்.

அந்த நாளுக்குப் பிறகு அடுத்த இரண்டு நாட்களுள் அதிக உரையாடல்கள் இல்லாமல் மௌனங்களே ஆட்சி செய்ய நாட்கள் கழிந்தது. அனன்யா தான் அன்று மதியம் சாப்பிடும் போது இரண்டு நாட்களாய் தன் தோழியின் நடவடிக்கைகள் சரியில்லை என்பதை உணர்ந்து,"என்ன ஆச்சு ஆதி? என்ன விஷயம்?" என்றதும்,

தனக்கு இந்த மூன்று நாட்களாய் ஏற்படும் மாற்றங்களை எல்லாம் தன் தோழியிடம் சொல்லலாமா இல்லை வேண்டாமா என்று யோசித்துக்கொண்டு இருந்தாள் ஆதிரா.

"ஹலோ மேடம்? எந்த உலகத்துல இருக்கீங்க நீங்க?" என்று அவளை உலுக்க அவளின் படபடப்பைப் பார்த்து ஏதோ நடந்திருக்கிறது என்று உணர்ந்து கொண்ட அனன்யா,"என்ன ஆதி என்கிட்ட எதையோ மறைக்குற மாதிரி தெரியுதே? என்ன விஷயம்னு நான் தெரிந்துகலாமா?" என்று வினவ, முதலில் தயங்கியவள்

"அது ஒண்ணுமில்ல..." என்று மழுப்ப,

"இப்போல்லாம் என்ன உன் செழியனைப் பத்தி எந்தப் பேச்சும் வருவதில்லையே?என்ன மேட்டரு? கண்டுபிடிச்சியா?" என்று கேட்டதும் தான் அன்று முழுக்க செழியன் யாரைக் காதலிக்கிறானென்று யோசித்து யோசித்து மண்டையைக் குழப்பியவள் அன்று விடை கிடைக்க வேண்டுமென்று காத்திருக்க அன்று நடத்த இன்சிடென்ட்டில் இருந்து அதைப் பற்றியே அவள் மறந்து போனாள். அவளின் முகபாவங்களை வைத்து,"என்ன மேடம் உங்க எக்ஸ்பிரேஷனை பார்த்தால் நீங்க அந்த விஷயத்தை பத்தியே மறந்துட்டீங்க போல?" என்று கிண்டல் செய்தாள் அனன்யா.

அப்போது தான் ஆதிராவுக்கு அழைப்பு வந்தது. எடுத்தவள்,"ஹலோ யாரு?"

"ஆதிரா தானே?"

"ஆமாம் ஆதிரா தான். என்ன விஷயம்? நீங்க யாரு?"

"நான் நிவேதிதா. செழியனோட கொலீக்..." என்று சொல்ல ஒருகணம் செழியனுக்கு என்ன ஆனதோ என்று மனம் தவறாகவே யோசித்து.

"ஏன் செழியனுக்கு என்ன ஆச்சு? என்ன பிராப்லம்?" என்று பதட்டத்தில் ஆதிரா வினவ,

"சில் ஒன்னுமில்ல... அவருக்கு ஒன்னுமில்ல நான் சும்மா தான் உங்ககிட்டப் பேசலாம்னு போன் பண்ணேன்..."

"என்கிட்ட நீங்க என்ன பேசணும் நிவேதிதா?"

"லவ்வை பத்தி தான்..." என்று அவள் சொல்ல அதிர்ந்தாள் ஆதிரா.

"என்ன லவ்?"

"அது... செழியனோட லவ் பத்தி..."

"செழியன் லவ்வைப் பற்றி நீங்க ஏன் பேசணும்?" என்று உடனே குரல் உயர்ந்தது ஆதிராவுக்கு. அதில் சுற்றியிருந்த அனைவரும் அவளைப் பார்க்க அனன்யா தான் ஆதிராவை அழைத்து இதைச் சொல்ல அமைதியாகத் திரும்பி சுற்றத்தை உணர்ந்து அதே கேள்வியை பொறுமையாக வினவினாள்.

"என்ன பேசணும்? இப்போ சொல்லப் போறீங்களா இல்லையா?"

"ஓகே ஆதி... ஏன் இவ்வளவு டென்ஷன் உங்களுக்கு? ரிலேக்ஸ். அது ஒன்னும் பெரிய பிரச்சினையில்ல... நான் ரெண்டு நாளைக்கு முன்னாடி செழியனை ப்ரொபோஸ் பண்ணினேன்..." என்று சொன்னதும் ஏனோ அன்று ஒருவேளை நிவேதிதாவாக இருக்குமோ என்று நினைத்த மனது உடனே அடைந்த கோவத்தைக் காட்டிலும் இப்போது அதிக கோவம் ஆதிரா மனதில் எழ,"அதுக்கு செழியன் என்ன சொன்னான்?" என்று ஸ்பான்டேனியஸாக கேள்வி வந்தது.

"அது வந்து... வந்து..." என்று இழுத்தாள் நிவேதிதா.

"இப்போ சொல்லப் போறீயா இல்லையா?" என்று காட்டமாக வினவினாள் ஆதிரா.

"ஏன் ஆதி நீங்க இவ்வளவு கோவப் படுறீங்க? அதிக கோவம் உடம்புக்கு ஒத்துக்காது. நீங்க வேணுன்னா தினமும் காலையில கொஞ்சம் யோகா செஞ்சு பாருங்க. விஜய் டிவில பாபா ராம்தேவ் செஞ்சு காட்டுவார்..." என்று நிவே சொல்ல,

"என்ன கிண்டலா?"

"நோ ஆதி. சீரியஸ். உண்மையிலே உங்க மேல உள்ள ஒரு அக்கறை..."

"செழி என்ன சொன்னான்?"

"என்ன சொன்னார்? நீங்க எதைப்பற்றிக் கேட்கறீங்க?"

அடக்கப்பட்ட கோபத்துடன்,"நீ அன்னைக்கு செழியனை ப்ரொபோஸ் பண்ணதுக்கு அவன் என்ன பதில் சொன்னான்?"

"ஓ அதுவா? யோசிச்சு சொல்றேன்னு சொன்னாரு. இன்னும் எதையும் சொல்லல... அதுதான் உங்ககிட்ட எதையாவது சொன்னாரான்னு கேட்க தான் போன் பண்ணேன்..." என்று பொறுமையாகவே பதிலுரைத்தாள் நிவேதிதா.

ஆதிராவுக்கு இந்த சிறிய நேரத்தில் ஏறிய பிபி மொத்தமாக இறங்கியது.

"இதை போன் பண்ணதுமே ஒரே வரியில சொல்றதுக்கு என்ன? எதுக்கு இத்தனை இழுவை இழுத்த?" என்று தற்போது காட்டமாகவே ஆதி வினவ,

"என்ன நீங்க எல்லாத்தையும் விலாவாரியாக சொல்லணுமில்ல?"

அமைதியாக நின்று கொண்டு இருந்தாள் ஆதிரா.

"இப்போ எதுக்கு நீ எனக்கு போன் பண்ண?"

"அது நீங்களும் அவரும் ரொம்ப க்ளோஸ் ப்ரெண்ட்ஸாமே? அதுனால நீங்க எனக்கு ஒரு பேவர் பண்ணனும்..." என்று நிறுத்த,

"என்ன பண்ணனும்?" என்று கோவமாய்க் கேட்டவளுக்கு,

"அது நீங்க தான் என்னைப் பற்றி செழியன் கிட்ட எடுத்து..." என்று சொல்லி முடிப்பதற்குள்,"அதுக்கு வேற ஆளை பாரு..." என்று போனை கட் செய்தவள் மீண்டும் அங்கே வந்து அமர்ந்து,"அனன்யா எனக்கு ஜில்லுனு ஒரு ஜூஸ் சொல்லு..." என்று சொல்ல,

"ஏன் என்ன ஆச்சு டி? இப்போதானே சாப்பிட்டோம்? அதுக்குள்ளையா ஜூஸ்?"
ஆதிரா முறைக்க அனன்யா சென்று ஜூஸ் வாங்கி வந்தாள். அதை ஒரே மிடறில் மொத்தமாய்க் குடித்தவள்,"என்னைப் பார்த்தா அவளுக்கு எப்படித் தெரியுதாம்?" என்று கோவமாய் முணுமுணுத்தாள் ஆதிரா.

"என்ன ஆச்சு ஆதி? யாரு போன்ல? என்ன விஷயம்? எதுக்கு இவ்வளவு கோவம் பதட்டம்?" என்று கேட்க,

"அந்த நிவேதிதா பொண்ணுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டயே போன் பண்ணி செழியை லவ் பண்ணச் சொல்ல ரெகமெண்ட் பண்ணச் சொல்லியிருப்பா?" என்று சொல்ல அதைப் புரிந்துகொண்ட அனன்யா,

"ஏன் ஆதி அவ பண்ணதுல என்ன தப்பு? ஒரு உதவி தானே கேட்டா? எஸ் இல்ல நோ எதாவது ஒன்னு சொல்ல வேண்டியது தானே? அதுக்கு ஏன் உனக்கு இவ்வளவு கோவம் வருது?"

அந்த நாளின் நினைவு வர, கோவமாய் ஆதிரா எழுந்து சென்றாள். உடனே அவளுக்கு நிவேதிதாவிடம் இருந்து தான் அழைப்பு வந்தது. லைனில் ஜானும் இருந்தான்.

"என்னத்த பேசுனீங்க நிவே? நீங்க இப்போ அவ மூஞ்சியைப் பார்க்கணுமே கடுகு போட்டிருந்தா பொரிந்திருக்கும்..." என்றதும் நிவேதிதா சிரித்தாள்.

"நல்ல காரியம் பண்ணியிருக்க நிவேதிதா. அப்போ கூடிய சீக்கிரம் பத்த வெச்சிட வேண்டியது தான்..." என்றான் ஜான். அன்று நடந்ததை எல்லாம் செழியன் ஜானிடம் சொல்லிவிட்டு,"எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா ஜான். அவளை என் கிட்ட வெச்சிக்கவும் முடியல... அதே நேரம் அவளை தூரம் துரத்தவும் முடியில..." என்று சொல்லி வருத்தப்பட ஜான் தான் நிவேவிடம் சொல்லி இன்று ஆதிக்கு அழைத்து பேசச் சொன்னான். இவர்களின் முதல் பிளான் சக்சஸ் ஆனது. (தொடரும்...)
 
Top