Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-21

Advertisement

praveenraj

Well-known member
Member
இங்கே அனன்யா ஆதிராவிடம் புதிர் போட்டுவிட்டுச் செல்ல ஆதி தான் ஒன்றும் புரியாமல் இருந்தாள். 'செழியன் யாரையாவது காதலிக்கிறானா? இல்லை அவனுக்கு யாரேனும் க்ரஷ் இருக்கிறார்களா?' என்று அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. 'போதாக்குறைக்கு இதை ஏன் என்னிடம் கேட்கிறாள்? எனக்குத் தெரிந்து செழியனின் வாழ்வில் எந்தப் பெண்ணும் இல்லை தான். அன்று கூட சாப்பிட ட்ரீட் சென்ற இடத்தில் ஒரு பெண் செழியனை விரும்புவதாகச் சொன்னாளே? அவள் பார்க்கவும் நன்றாக தானே இருந்தாள்?' ஏனோ ஒருநிமிடம் செழியனை அவளோடு சேர்த்து நினைத்துப் பார்க்கவே அவளுக்கு கசந்தது. அவர்கள் இருவரும் ஆப்டாக (apt - பொருத்தமான) தான் இருப்பார்கள். ஆனால் ஆனால் ஏதோ ஒன்று அவளுக்கு நெருடலாக இருந்தது. அது என்னவென்று தான் அவளுக்கே தெரியவில்லை. என்ன நினைத்தாளோ "வேணாம் செழி... அந்தப் பொண்ணு உனக்கு வேணாம்..." என்று வாய் முணுமுணுத்தது. செழியனுக்குத் தான் அந்தப் பெண்ணின் மீது துளியும் இன்டெரெஸ்ட் இல்லை என்று சொல்லிவிட்டானே? என்று நினைக்கையில் அவளுக்குள் ஒரு இதம் உண்டானது.

எனினும் அவளுக்கு ஏனோ மனமே சரியில்லை. 'அது எப்படி செழியனைப் பற்றி எல்லாமும் எனக்குத் தெரியும். ஆனால் இந்த விஷயத்தைப் பற்றி எனக்கு ஒரு சின்ன கெஸ் கூட இல்லையே? ஏன்? அவனுக்கு க்ரஷே இல்லை என்று சொன்னால் அதை நான் துளியும் நம்ப மாட்டேன். அதெப்படி சாத்தியம்? ஒரு 25, 26 வயசு பையனுக்கு க்ரஷே இல்லாம இருக்க முடியும்? நெவெர். ஒருவேளை அவன் காலேஜ்ல படிச்ச பொண்ணா இருக்குமோ?' என்று தீராமல் யோசித்து குழம்பினாள் ஆதிரா.

*****************

நேற்றும் இன்றும் பர்மிசன் போட்டதால் அவனுக்கு இன்று கொஞ்ச வேலை அதிகம் தான். அவன் உடல் சோர்வாகத் தான் இருந்தது. இருந்தும் இனியா திருமணத்தில் இருந்த சிக்கல் விலகியதால் அவனுக்கு ஒரு உற்சாக உந்துதல் தோன்ற தன் வேலையில் கவனமானான்.

அதற்குள் அந்த நிவேதிதாவே செழியனிடம் பேச நெருங்கினாள். அவள் தன்னை நோக்கி வருவதை உணர்ந்த செழியன்,'ஆஹா என்ன இன்னைக்கு வில்லங்கம் நம்ம நோக்கி வருது...' என்று மனதில் யோசித்தான். அவள் வரவர செழி ரெஸ்ட் ரூம் செல்ல எழ,

"செழியன். கொஞ்சம் இருங்க..." என்று சொல்லி அவனை நோக்கி வந்தாள் நிவே.

'ஐயோ மாட்டுனடா செழியா...' என்று சொல்லிக் கொண்டவன்," என்ன நிவேதிதா சொல்லுங்க..." என்றான் ரொம்ப பார்மலாய்...

"நான் கொஞ்சம் உங்களுடன் பெர்சனலா பேசணும்?"

அவனோ,"இல்ல... இப்போ ஒர்க்..." என்று முடிப்பதற்குள்,

"ஈவினிங் பேசலாம். ரொம்ப அர்ஜென்ட் ப்ளீஸ்..."

அவனுக்கு மறுக்க முடியவில்லை. ஏனோ எப்போதும் இருக்கும் ஒரு எந்து (enthu) அவளிடம் இப்போது இல்லாமல் இருக்கவும் விஷயம் கொஞ்சம் சீரியஸ் தான் போல என்று நினைத்தவன்,"ஓகே ஷார்பா 5'o கிளாக் நாம கேன்டீன்ல மீட் பன்னலாம். ஓகே?"

அவளும் தலை ஆட்டிவிட்டுச் சென்றாள்.

செழியன் தான் கணேஷை (கணேஷ், நிவேதிதா, நந்தினி எல்லோரும் அவன் கொலீக்ஸ். எட்டாவது எபியில் சொல்லியிருப்பேன். ரெபெர் செய்ய வேண்டாம். இனி மேல் அவர்கள் இதில் வரமாட்டார்கள்) அழைத்து,"என்ன டா இன்னைக்கு இந்தப் பொண்ணு இப்படித் தயங்கி தயங்கி பேசுது... என்ன விஷயம்?"

"ஏன் உனக்குத் தெரியாதா?"

முறைத்தவன்,"தயவு செய்து சொல்லுடா... என்ன மேட்டர்?"

"அவ உன்னை விரும்பறானு இந்த ஆபிசுக்கே தெரியும். இதுல நீ என்கிட்டே என்ன விஷயம்னு கேட்குற? உனக்கே இது ஓவரா தெரியில?" என்ற கணேஷிற்கு,

"அதே மாதிரி ரெண்டு வருஷமா நானும் அந்தப் பொண்ண அவாய்ட் மட்டும் தான் பண்ணிட்டு இருக்கேனு உங்க எல்லோருக்கும் தெரியும் தானே டா? இப்போ என்ன புதுசா?"

"டேய் மச்சி, என்னனு தெரியில... நேத்துல இருந்து உன்ன கேட்டுட்டே இருந்தா. இன்னைக்கும் நீ காலையில வரலையா அவ முகமே வாடிடுச்சி டா. பாவம். எஸ் நோ ஏதாவது ஒன்னு சொல்லி அனுப்பிவிட வேண்டியது தானே?"

"நானும் இந்த ரெண்டு வருஷத்துல ரெண்டு மூணு வாட்டி எனக்கு இதுல இன்ட்ரெஸ்ட் இல்லைனு பொலைட்டா மறைமுகமாவே சொல்லிட்டேன். இப்போ என்னை குத்தம் சொன்னா எப்படி?"

"நீ ஸ்ட்ராங்கா சொல்லலைனு செழி. அந்தப் பொண்ணு பாவம் உன் பின்னாடியே அலைஞ்சிட்டு இருக்கு. ஏன் இது உனக்குத் தெரியாதா?"
"எப்படிடா அந்தப் பொண்ணு மூஞ்சைப் பார்த்து எனக்கு உன்ன பிடிக்கலைனு சொல்ல முடியும்? அதுமில்லாம அதுகப்புறோம் எப்படி ஒரே ஆபிஸ்ல ரெண்டு பேரும் ஒன்னா ஒர்க் பண்றது? எப்படியும் என் முகத்தை அந்தப் பெண்ணும் அந்தப் பொண்ணு முகத்தை நானும் பார்த்தே தான் தீரணும். புரியலையா டா உனக்கு?"

"செழியா யாரையும் ஹர்ட் பண்ணக் கூடாதுனு நீ நினைக்கிறது எனக்குப் புரியுது தான். இருந்தும் இது அப்படியில்ல. நீ எதையுமே சொல்லாம இருக்கறது ரொம்ப தப்பு. இதனால அந்தப் பொண்ணு உன்ன இன்னும் விரும்ப தான் செய்யும். மறைமுகமா நீ அவளுக்கு ஹோப் கொடுத்துட்டே தான் இருக்க..."

"இப்போ நான் என்ன செய்யணும்?"

"ஒழுங்கா இன்னைக்கு அந்தப் பொண்ணு கிட்ட நேரா பார்த்து எனக்கு உன்மேல இன்டரெஸ்ட் இல்லைனு சொல்லிடு..."

"டேய் அது ஒரு மாதிரி இன்சல்டிங்கா இருக்காதா?"

"பி பிராக்டிகல் செழி. இன்னைக்கு நீ நோ சொல்லிட்டா என்ன ஒரு வாரமோ ஒரு மாசமோ ஃபீல் பண்ணும். அப்றோம் அதுவே மூவ் ஆன் ஆகிடும். அவ்வளவு தான் நான் சொல்லுவேன்..."

யோசித்தவன்,"ஓகே நான் பார்த்துக்கறேன்..."

"செழி, உன்னோட வீக்நெஷே இதுதான். யாரையும் காயப்படுத்தாம வாழணும்னு நீ நினைக்கிற. அது நல்ல பழக்கம் தான். பட் இது சாத்தியமே இல்ல. எதையும் ஓப்பனா சொல்லிடு. அது மறைச்சு வெக்கறதுக்கும் இல்ல பூசி முழுகுறதைக் காட்டிலும் பெட்டெர்..." என்று அவன் பொதுவாகவே சொன்னாலும் ஏனோ இது செழியனுக்கு ஆதிராவைத் தான் கண் முன்னால் கொண்டு வந்தது. அவன் அன்றைய ஆபிஸ் முடிந்ததும் நேராக நிவேதிதாவைப் பார்க்க கேன்டீன் சென்றான். அவனுக்காக அவனுக்கு முன்னாலே அங்கே வந்து காத்து கொண்டிருந்தாள் அவள்.

அவன் சென்று காபி ஆர்டர் செய்து அவளைப் பார்க்க அவளோ அவனை எப்படிச் சம்மதிக்க வைக்க என்று தீவிரமாக இருந்தாள்.

"சொல்லுங்க நிவேதிதா, என்ன விஷயம்?" என்று செழியன் ஆரமித்ததே அவளுக்கு எரிச்சல் தந்தது. பின்னே பலமுறை அவளை வா போ என்று ஒருமையில் அழைக்குமாறு சொல்லியிருக்கிறாள். இவளென்று இல்லை இருவரைத் தவிர இந்த அலுவலகத்தில் வேறு எந்தப் பெண்ணிடமும் இல்லை யாரிடமும் அவன் ஒருமையில் பேசமாட்டான். ஒன்று நந்தினி, இன்னொன்று ஜெனி. ஆனால் அதிலும் மரியாதை இருக்கத்தான் செய்யும்.

"நேத்து நீங்க ஏன் வரல செழி? இன்னைக்கும் லேட்டா தான் வந்தீங்க?" என்று கரிசனத்துடன் அவள் கேட்கவும்,

"தட்ஸ் நன் ஆப் யுவர் பிசினஸ்..." என்று காட்டமாய் (அவனுக்கு அப்படிச் சொல்ல விருப்பம் இல்லைதான். இருந்தும் வலுக்கட்டாயமாகச் சொன்னான்)

அவனின் இந்தப் பதிலே அவளுக்கு அவனின் நிலையை உரைத்தது.

"ஏன் செழியன் இப்படி வேண்டா வெறுப்பா பேசுறீங்க? உங்களுக்கு நான் எத்தனை முறை என் மனசை சொல்ல முயற்சி பண்ணியிருப்பேன்? நீங்க ஏன் புரிஞ்சிக்கல?" என்று முடிக்கும் முன்னே,

"இங்க பாருங்க நிவேதிதா. நான் இதை முன்னாடியே சொல்லியிருக்கனும். ஐ அம் இன் லவ். இப்பொயில்ல, ரொம்ப வருஷமா..." என்று அவன் சாதரணமாகச் சொல்ல,

"இல்ல நீங்க பொய்ச் சொல்லறீங்க..." என்று அவள் சொல்ல,

"உங்ககிட்ட எனக்குப் பொய்ச் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. அண்ட் பொதுவா எனக்குப் பொய் சொல்றதுல உடன்பாடே இல்ல..."

"யாரு? யார் அந்தப் பொண்ணு?"

"அது உங்களுக்கு சம்மந்தம் இல்லாத விஷயம், சோ ப்ளீஸ்... உங்களுக்குப் புரியும்னு நெனைக்கிறேன்..." என்று அவன் எழ முயற்சிக்க, அவளோ அழுவதைப் போல் ஆகிவிட அவள் கண்களில் இருந்து கண்ணீரே வந்துவிட்டது. அவளைக் காயப்படுத்த அவனுக்கு விருப்பமில்லை தான். இருந்தும் தன்னால் தான் அவள் அழுகிறாள் என்று புரிந்தவன் மீண்டும் அமர்ந்து,

"நிவேதிதா, ப்ளீஸ் அழாதீங்க. உங்களை அவாய்ட் பண்ணவோ இல்ல ஹர்ட் பண்ணவோ எனக்கு விருப்பமில்லை. ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க..." என்று சொல்ல,

"அந்தப் பொண்ணா?" என்றாள் அவள்.

திரும்பிப் பின்னால் பார்த்தவன் யாரையும் காணாது போக,"யாரு? எந்தப் பொண்ணு?"

"அன்னைக்கு முஸ்தப்பா ட்ரீட்க்கு ஒரு பொண்ணைக் கூட்டிட்டு வந்தீங்களே? பேருகூட... ஆம் ஆதிரா. அவங்களா?"

ஆமாம் என்பதைப்போல் அவன் தலை ஆட்ட அவளுக்கோ மேலும் கண்ணீர் வந்தது.

"ஏன் செழியன் நான் அழகா இல்லையா? இல்ல உங்களைத் தேடி தேடி வரதுனால..." என்று முடிக்கும் முன்னே,

"நிவேதிதா... ஓகே, என் பர்சனல் விஷயத்தை நான் யாருகூடவும் ஷேர் பண்ணக் கூடாதுனு தீர்க்கமா இருந்தேன். இப்போ இதை நான் சொன்னால் தான் நீங்க சமாதானம் ஆவீங்கன்னா நான் சொல்றேன். பொறுமையா கேட்பீங்க தானே?" என்றவன் மணியைப் பார்த்து அன்று ஆதிராவை நான்காம் வகுப்பு படிக்கும் போது முதன்முதலில் பார்த்ததைச் சொல்லி அதன் பின் அவளிடம் மன்னிப்பு கேட்டதும் நட்பு ஆனதையும் சொன்னான்.
அவன் சொல்லும் போது எதை நோட் செய்தாளோ இல்லையோ அவனின் முக மாற்றங்களை நன்கு கவனித்தாள் நிவே. இதுவரை செழியனிடம் இருந்த அந்த கடினத் தன்மை விலகி (பொதுவாகவே அவன் ரொம்ப சாப்ட். மிகவும் மென்மையானவன் தான்.) ஆனால் இப்போது இன்னும் இலகுவாகிப் பேசினான். அவளுக்கு அவனின் கண்களிலே எதோ புரிந்தது.

"அப்றோம் எங்க நட்பு மெல்ல மெல்ல வளர்ந்தது. ரெண்டு பேரும் வேறவேற ஸ்கூல் தான். இருந்தாலும் வார விடுமுறை நாட்களில் அந்த ஊர்ல கிணத்துல குளிக்கிறது சைக்கிள் ஓட்டுறது..." என்று சொல்லும் போதே அவன் சிரிக்க,

"என்ன ஆச்சு?"

"எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. அவ எனக்கு சைக்கிள் ஓட்டச் சொல்லித்தரேனு சொல்லி என்னைக் கூட்டிட்டுப் போய் நீ ஓட்டு நான் பிடிச்சிக்குறேனு சொல்லி அவ சொல்ல அவ பேச்சைக் கேட்டு நான் ஓட்ட கொஞ்ச தூரம் போனதும் அவளைக் காணோம். நானோ பயத்துல பேலன்ஸ் தவறி அந்த வழியில வந்த ஒருவர்..." என்று மீண்டும் சிரித்தவன்,"அவரு எங்க டியூசன் வாத்தியார். அவர் மேல மோதி திட்டு அடி வாங்குனதெல்லாம் தனிக்கதை..."

"அச்சச்சோ அப்றோம் என்ன ஆச்சு?" என்று சீரியசாக கேட்ட நிவேக்கு,

"அவள போய்,'ஏன் ஆதி நீ சைக்கிளை பிடிக்கலைனு?' சண்டை போட்டா அவளோ ரொம்ப கூலா,'முதல நீ தைரியமா சைக்கிள் ஓட்டணும் அதுக்காக நான் கையை விட்டேன்னு...' சொன்னா. நானோ,'அதுக்கெதுக்கு வழியில டியூசன் சார் வர அப்போ விட்டனு?' கேட்டதுக்கு 'அப்போதானே நீ அவரு மேல மோதுவ? அன்னைக்கு நான் க்ளாஸ்ல சிரிச்சதுக்கு என் காதைக் கிள்ளிட்டாரு தெரியுமா?' என்று வலியில் சொல்வதைப்போல காதைப் பிடிக்க அதுவரை செழியனுக்கு இருந்த கோவமெல்லாம் அவளின் உதடு சுளிப்பில் பறந்து சென்றுவிட்டது. பார்க்க அமைதியா இருப்பா ஆனா எல்லாத் திருட்டுத் தனமும் பண்ணி அதுல நேக்கா என்னைக் கோர்த்துவிட்டு அவ எஸ் ஆகிடுவா..." என்று நினைத்து பார்த்தவாறே சிரித்தான்.

செழியனின் புன்னகை படர்ந்த முகத்தைக் கண்டவள்,"செழியன் நீங்க இப்படிச் சிரிச்சு எல்லாம் பேசுவீங்களா?" என்று அவள் சந்தேகத்தைக் கேக்க,

"இன்னைக்கு நீங்க பார்க்கற இந்தச் செழியன் உண்மையான செழியன் இல்ல. நான் ரொம்ப ரொம்ப ஷய் (shy - வெட்கம்). ரொம்ப அமைதி. ஆனா என்ன இன்னைக்கு நான் ஓரளவுக்கு போல்டா பேசுறதுக்கும் பழகறதுக்கும் ஆதிரா தான் காரணம். என் கேரக்டரை நிறைய மாற்றின பங்கு அவளுக்குத் தான் இருக்கு. அதும் எனக்கே தெரியாம..." என்று சொன்னவன் நாட்களை பின் நோக்கி அசைபோட்டான்.

"அப்றோம் என்ன ஆச்சு?" (தொடரும் ...)

ஒரு பொது அறிவிப்பு. நாளைக்கு எல்லோரும் மறக்காம அவங்கவங்க ஜனநாயக கடமையை செயுங்க. நான் ஒருத்தன் ஓட்டு போடாததால் என்ன ஆகிடப் போகுதுனு நெனச்சு கடைசியா 'ஹுல்லா பாலு' கதை போல ஆகிடப்போகுது. பிடிச்சா பிடிச்ச வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுங்க இல்லையா நோட்டாக்காச்சும் போடுங்க. நம்முடைய அடுத்த ஐந்தாண்டு காலம் நாளை நம்மால் தான் தீர்மானிக்கப்பட போகிறது. நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவா இதைச் சொல்லல. உங்கள் ஓட்டு உங்கள் உரிமை. அதை வெறும் ஐநூறு ஆயிரத்துக்கு வித்துடாதீங்க. ஆயிரமே கொடுத்தாலும் அது ஒரு நாளைக்கு வெறும் அம்பது பைசா தான். சிந்தித்து வாக்களியுங்கள். மறக்காமல் வாக்களியுங்கள். நம் எதிர்காலம் நம் கையில்... நன்றி!
 
Top