Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-20

Advertisement

praveenraj

Well-known member
Member
மனமெல்லாம் அவனுக்கு சந்தோசம் பொங்கி வழிந்தது. அவன் எதிர்பார்த்தைக் காட்டிலும் விஷயம் ரொம்பவும் சுலபமாய் முடிந்துவிட்டது. அவனுக்கு இதை நினைத்து நேற்று முழுவதும் உறக்கமே வரவில்லை. அவன் சந்தோசமாக இதை யாரிடமாவது சொல்லலாம் என்று நினைத்து யோசிக்க அப்போது தான் அவனுக்கு ஆதிராவின் நிலை நினைவுக்கு வந்தது. அவன் முகத்தில் இருந்த ஒரு வருத்தம் அவளின் தலையணை ஈரமாக இருந்தது முதல் காலையில் அவளிடம் இருந்த சோர்வு இரவு உண்ணாது இருந்தது எல்லாமும் தோன்ற அவனுக்கு இப்போது ஆதிராவின் நிலையை எண்ணி கவலைக் கொண்டான். அதற்குள் ஜானிடமிருந்து அவனுக்கு அழைப்பு வர,

"சொல்லு டா அமெரிக்கன் கை..."

"மெதுவா சொல்லுடா ஒருவேளை இது டிரம்ப் காதுல விழுந்தது என்னைய நைட்டோட நைட்டா நாடு கடத்திடுவாரு..."

"ஹா ஹா ஹா... ஏன்டா நீ தானே சொன்ன நான் இனிமேல் அமெரிக்கன் சிட்டிசன் அப்படி இப்படினு?"

"தப்பு தான்டா. என் தாய்நாடு இந்தியா தான்..." என்று சொல்ல,

"ஏன் மச்சி எனி ப்ரோப்லேம்?"

"சும்மா சொன்னேன். சரி நீ சொல்லு என்ன பிரச்சனை?"

"என்ன பிரச்சனை?"

"டேய் செலி (ஜானுக்கு ழகரம் வராது) என்கிட்ட மறைக்காத... ஏன் ரெண்டு நாளா பர்மிசன் போட்டு இருக்கியாம்?"

"டேய் அதுக்குள்ள விஷயம் அமெரிக்கா வரை வந்திடுச்சா?"

"பேச்சை மாத்தாத..."

செழியனும் எல்லாமும் சொன்னான். அன்று முதல் இன்று பிரச்சனை முடிந்தது வரை ஆதிராவின் மாமா தான் இதற்கெல்லாம் காரணம் என்று வரை முடிக்க,

"என்ன மனுஷன் டா அவன்? இப்படியா அவங்க குடும்பத்து பெண்ணைப் பழிவாங்க வேண்டி செய்வாங்க? பாஸ்டர்ட்ஸ். அவனுங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனச்சாட்சி, பாசம் எதுவுமே இல்லையா?" என்று ஜான் ஆவேசப்பட,

"விடுடா அதுதான் எல்லாம் சரி ஆகிடுச்சியில்ல?"

"எங்க டா சரியாச்சு? இன்னைக்கு இதைப் பண்ணவன் நாளைக்கு வேற பிரச்சனை பண்ண மாட்டானு என்ன நிச்சயம்? அவனைச் சும்மா விடவே கூடாது டா. ஏதாவது பண்ணனும்..."

"மச்சி அப்படினா நீ சில விஷயம் எனக்கு உடனே பண்ணனும்..."

"என்ன டா சொல்லு?"

"நான் அந்த அரவிந்த் பத்தின டீடெய்ல்ஸ் எல்லாம் நீ வரும்போது கொண்டுவர சொன்னேன் இல்ல?"

"ஆமா?"

"இப்போ அதுல கொஞ்சம் சேஞ்... எனக்கு இன்னும் ஒரு மாசத்துல எல்லாம் தெரியணும்..."

"டேய் என்ன விளையாடுறியா? இனியாவுடைய கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு மாசம் கூட இல்ல... முதல நீ அந்த வேலையெல்லாம் பாரு. இதை அப்றோம்..."

"இல்ல ஜான். உன்கிட்ட நான் சில விஷயம் மறைச்சிட்டேன். ஆதிரா நைட்டெல்லாம் அழுதிருக்கா... ஏன் எதுக்குன்னு எனக்குத் தெரியில. யோசிச்சுப் பாரு அவ என்கூட இப்படியே ரொம்ப நாள் இருக்கறது சரி வராது..."

"டேய் என்ன உளறுற?"

"நான் உளறல. இங்க வேற சில கூத்தெல்லாம் நடந்திடுச்சி. அந்தப் பசங்க எல்லோரும் நானும் ஆதிராவும் லிவ் இன் ரிலேஷன்ல இருக்கோம்னு நெனச்சி மொத்த அபார்ட்மெண்டுக்கும் சொல்லிடுச்சிங்க. இப்போ அபார்ட்மெண்டே எங்களைப் பத்தித் தான் பேசுது..."

"டேய் இது ஆதிராவுக்கு?"

"தெரியும். அவ ஜாலியா தான் எடுத்திருக்கா... ஆனா நாளைக்கு யாராச்சும் அவ காதுபட ஏதாவது சொல்லிட்டா பாவம் டா அவ..."

"டேய் அப்படியெல்லாம் ஒன்னுமில்ல டா. ஆதிரா ரொம்ப ப்ராக்டிகலான பொண்ணு. அப்படியெல்லாம் நினைக்க மாட்டா..."

"நம்ம வைஸ் செக்ரெட்டரி வேற அன்னைக்குக் கூப்பிட்டு..." என்றவன் நடந்ததைச் சொல்ல,

"பாரேன் அந்தக் கிழவனுக்கு ஆசையை? டேய் மச்சான் அந்தாளுக்கு கூட அவ்வளவு ஆசையிருக்கு உனக்கில்லையாடா?"

"...................."

"செலி... ஏன்டா அமைதியா இருக்க? எப்படிடா உன்னால அவ கூட ஒரே வீட்டுல இருந்துட்டு வெறும் ப்ரெண்டா மட்டும் இருக்க முடியுது? உன்னால முடியலைன்னா சொல்லு நான் சொல்றேன்டா. ஆதிரா கிட்ட நான் பேசுறேன்..."

"மூடிட்டு இருக்கியா கொஞ்சம்... ஒருவேளை இதெல்லாம் தெரிஞ்சு நான் இதுக்காகத் தான் அவளுக்கு ஹெல்ப் பன்றேன்னு அவ நெனச்சிட்டா? வேணாம் டா. லவ் ஒரு ஃபீல் அது தானா வரணும். அவ என்ன ப்ரெண்டா தான் நினைக்கிறா. அவ நம்பிக்கையை நான் கெடுக்க விரும்பல..."

"முட்டாள் உன் மூஞ்சில எதாவது ரொமான்ஸ் வருமா வராதா டா? அப்படியேதாவது வந்து அவ கண்டுபிடிச்சா என்ன பண்ணுவ?"

"அதுக்குத் தான் சொல்றேன், சீக்கிரம் அவ மேல எந்த தப்பும் இல்லைனு சொல்லி புரியவெச்சிட்டு அவளை அவ அப்பா கூடச் சேர்த்துவெச்சிடனும்..."

"டேய் நீ என்ன முட்டாளா? இல்ல தியாகியா? இல்ல தத்தியா? அவ குடும்பத்துல தான் ஏத்துக்கலையே? இப்போ அவ அப்பா கிட்ட அனுப்புறேன்னு சொல்ற?"

"உனக்கு ஆதிரா அப்பா பத்தி எதுவும் தெரியாது. அவரு ரொம்ப கண்டிப்பானவர் தான். கோவக்காரர் தான். ஆனா அவருக்கு ஆதிரானா ரொம்பவும் இஷ்டம் டா. உனக்குத் தெரியாது, அவளுக்காக... அவர் செல்லப் பெண்ணுக்காக அவர் அவருடைய கொள்கையில இருந்து வெளிய வந்து வேற ஜாதி பையனை அவர் மருமகனா ஏற்றுக்க முன்வந்தார் டா. எனக்கு நம்பிக்கை இருக்கு அவரை அவ மாமா தப்பா மிஸ்கைட் பண்றான். கூடவே அந்த அரவிந்த் வேற நல்லவன் மாதிரி நாடகமாடுறான். ரெண்டு பேருடைய குட்டையும் வெளிய கொண்டு வந்தா அவரு தன்னால ஆதிராவைப் புரிஞ்சிப்பாரு... உனக்குப் புரியாது. நான் சொன்னதை சீக்கிரம் செய்..."

"இரு இரு இப்போ என்ன சொன்ன? வேற ஜாதி பையனை மருமகனா ஏற்றுக்க முன் வந்தாரா? என்ன சொல்ற?"

"இளங்கோ... ஆதிரா அவ வாழ்க்கையில பண்ண முதல் தப்பு..."

"எனக்குப் புரியில. தெளிவாச் சொல்லு..."

"நாளைக்குப் பேசலாம். நான் இன்னைக்கு ஆபிஸ் போகணும். நைட் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும். காலையில சொல்றேன்..."

"டேய், எனக்கு இப்படி சஸ்பென்ஸ் பாதில விட்டா பிடிக்காதே? ப்ளீஸ் சொல்லுடா..."

"அப்படியா மச்சி? அப்போ எனக்கும் சஸ்பென்ஸை முழுசா சொல்றது பிடிக்காதே மச்சி... பை நாளைக்குப் பார்ப்போம்..."

"டேய் டேய் செலி செலி?" என்பதற்குள் அழைப்பு துண்டிக்கப் பட்டுவிட்டது.

அவனுக்கு அவன் எண்ணமெல்லாம் ஜான் சொன்னதிலே தான் இருந்தது. "மிஸ் பண்ணிடாத டா..." என்று அவன் சொல்ல இவனுக்கோ இந்த ஒரு வாரக்காலத்தில் ஒருமுறைக் கூட ஆதிராவிடம் நட்பைத் தாண்டி எதையும் அவள் பேச்சிலும் செயலிலும் பார்த்ததே இல்லையே... நான் என்ன செய்வேன்? என்று யோசித்தபடியே ஆபிஸ் சென்றான்.

*************
காலையில் எழுந்து ரெப்ரெஷ் ஆகி வேலைக்குச் சென்றவள் இன்று கொஞ்ச செழியனின் நினைவு வந்து அவளை டிஸ்டர்ப் செய்ய இருந்தும் முழுமூச்சுடன் வேலையில் மூழ்கினாள். உணவு இடைவேளையில் ஆதிராவை அழைத்த அனன்யா அவளின் முகவாட்டத்தைக் கண்டு,"என்ன ஆச்சு ஆதி? என்ன பிரச்சனை?" என்று வினவ,

அவளும் நேற்று அனன்யாவின் வீட்டிலிருந்து செல்லும் போது இளங்கோவைப் பார்த்ததும் பிறகு இரவு உண்ணாமல் உறங்கியதும் காலை செழியனின் முகத்தில் இருந்த படபடப்பு வரை எல்லாம் சொல்ல,

"ஏன் ஆதி டூ யூ ஸ்டில் லவ் இளங்கோ?" என்று தன்னுடைய ஐயத்தை அனன்யா வெளிப்படுத்த,

"ச்சி... நான் அவ்வளவு தரம் தாழல அனு..."

"அப்போ என்ன பிரச்சனை?"

"நம்ம லைப்ல எந்தச் சூழ்நிலையிலும் சிலர் முன்னாடியெல்லாம் சோர்ந்து போகாம கெத்தா வாழ்ந்து காட்டணும்னு நெனைப்போமில்ல? அப்படிப்பட்டவன் முன்னால நாம கூனிக்குறுகி நிற்கக்கூடிய சூழ்நிலையில இருந்துட்டேனேனு ஒரு வருத்தம் இயலாமை... அண்ட் இப்போ நான் அதை நெனச்சி ஃபீல் பண்ணல..."

"அப்போ?"

"செழியனை நெனச்சி தான் வருத்தப்படுறேன்..."

"ஏன் செழியனுக்கு என்ன?"

"தெரியில அனன்யா. நேத்து என்கிட்ட நான் அர்ஜென்ட் வேலைனு வெளியில போறேன்னு சொல்லும் போதே அவன் குரல் சரியில்ல... எதையோ என்கிட்ட இருந்து மறைக்கிறானு நெனச்சேன். ஆனா இன்னைக்கு காலையிலும் அவன் முகம் சரியாவே இல்ல. என்ன நேரா பார்க்கவே கொஞ்சம் தயங்கினான். இதுல ஏதோ இருக்கு..."

"பார்ரா செழியன் மூஞ்சை வெச்சே அவரு என்ன நெனைக்கிறாருனு நீ கண்டுபிடிச்சிடுவியா என்ன?"

"ஏன் என்னால முடியாதா என்ன? எனக்கு அவனை ஒன்பது வயசுல இருந்து தெரியும்... என் கூடவே இருந்திருக்கான். நடுவுல கொஞ்சம் தள்ளிப்போனாலும் நான் அவ்வளவு முட்டாளில்லை..."

"ஓ? அப்போ ஒன்ன நீ கண்டுபிடிக்கணுமே? பார்ப்போம் நீ எவ்வளவு ஷார்ப்புனு?"

"என்னனு சொல்லு?"

"அவரு யாரையாவது காதலிக்கறாரா இல்ல க்ரஷ் ஏதாவது இருக்கானு கண்டு பிடிச்சு எனக்குச் சொல்லு..."

"ஏன்? நீ அவனை நேர்லயே பார்த்தில்ல? அவன் எப்படி இருக்கானு கூட உனக்குத் தெரியாது. இதுல நீ எதுக்கு இதெல்லாம் கேக்குற?" என்ற ஆதிக்கு,

"ஓ! எனக்குத் தெரியாது தான்... அப்போ உனக்கு எல்லாம் தெரியுமா?"

"கண்டிப்பா. அவன் பேவோரைட் கலர், சாப்பாடு டிரஸ், கார்ட்டூன் கேரக்டர், ஹீரோ எல்லாம் எனக்குத் தெரியும்..." என்றவள் குரலில் அவளையும் அறியாமல் ஒரு பொசெசிவ் தென்பட்டது.

"அப்போ சரி, இதையும் கொஞ்சம் கண்டுபிடிச்சு சொல்லு..."

"சொல்லிட்டா?"

"ஒரு டையலாக் சொல்லுவாங்க தெரியுமா? ஒரே வார்த்தை ஓஹோன்னு வாழ்க்கைனு அதுமாதிரி தான் இதுவும் கண்டுபிடி..."

"குழப்பாத அனன்யா..."

"நீ முதல்ல குழப்பத்துல இருந்து வெளியே வந்து எல்லாத்தையும் கொஞ்சம் தெளிவா பாரு. அட்லீஸ்ட் ட்ரை பண்ணு..."

"புதிர் போடாத அனன்யா..."

"ஓகே ஒரு பெட். உனக்கு ரெண்டு மாசம் டைம் தரேன். இந்த ரெண்டுமாசத்துல நீ செழியன் யாரையாவது லவ் பண்றாரா, அப்படின்னா யாரந்தப் பொண்ணு இதெல்லாம் கண்டுபிடி. அண்ட் இந்த ரெண்டு மாசத்துல உன் லைஃபை நீ நிறைய ரியலைஸ் பண்ணனும். அன்னைக்கு நீ சொன்னயில்ல நீயும் அவரும் எப்படி ஃப்ரெண்ட்ஸ் ஆனீங்க அண்ட் நீங்க சேர்ந்து செஞ்ச அந்த தேர் பொம்மை வரைக்கும் இன்னும் வெச்சியிருக்காருனு?"

"ஆமா சொன்னேன். அதுக்கென்ன இப்போ?"

"போ ரெண்டு மாசத்துல நான் கேட்ட கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்கற வழியைப் பாரு..." என்று சொல்லி அவள் எஸ்கெப் ஆனாள்.
ஆதிராவுக்கு இடையில் நடந்த எதுவும் தெரியாது. அன்று அவளுக்கு வேலை கிடைத்துவிட்டது என்றதுமே மறுநாள் அனன்யாவுக்கு ஒரு அழைப்பு வந்தது. அது செழியனிடமிருந்து தான் வந்தது. அவளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன் அந்த 10 நிமிட உரையாடல் முழுவதும் ஆதிராவைப் பற்றியும் அவளின் வேலையைப் பற்றியும் அவளின் பாதுகாப்பைப் பற்றியும் தான் அவன் பேசினான்.

இடையில் அவன் பேச்சை நிறுத்திய அனன்யா,"செழியன் நான் ஒன்னு கேட்கலாமா?" என்று கேட்க,

"கேளுங்க..." என்றவனுக்கு,

"நீங்க ஆதிராவை லவ் பண்றீங்களா?" என்று கேட்க முதலில் தடுமாறியவன் பின்பு ஒரு ஜர்னலிஸ்ட்டாக அவள் கிறுக்குப்பிடி கேள்விகளைத் தொடுக்கவும் அதில் எல்லாமும் சொன்னான்.

ஏனோ அதைக் கேட்டவள் உடனே அவனை வீடியோ கால் செய்து அவன் முகத்தைப் பார்த்து விட்டு கொஞ்சம் பேசிவிட்டு அவன் கேள்விக்கெல்லாம் பதிலையும் சொன்னவள்,"செழியன் நீங்க ஏன் உங்க காதலை இன்னும் அவளிடம் சொல்லல?" என்று கேட்க அவனும் சிரித்துவிட்டு,"அவளுக்கு நான் ஒரு பெஸ்ட் ஃப்ரண்ட் மட்டும் தான்..." என்று சொல்ல அதன் பின் சாதரணமாய்ப் பேசிவிட்டு வைத்துவிட அன்றே அனைத்தையும் ஊர்ஜிதப்படுத்திக்கொண்டவள் பின்பு தான் ஆதிராவிடம் செழியனைப் பற்றி நிறைய கேட்டு தெரிந்துக்கொண்டாள். தன் தோழியின் வாழ்க்கையும் அவளுக்கு நன்றாகத் தெரியுமே? அவளிடம் பேசிய வரையில் அவளுக்கு செழியன் என்று சொன்னாலே ஒரு வித உற்சாகம் வந்து விடுகிறது தான். ஆனால் அது ஏன் என்று இன்றுவரை யோசிக்காத தன் தோழியை நினைக்கையில் அவளுக்கு ஆத்திரம் பொங்கி வந்தது. (தொடரும்...)
 
ஹப்பாடா பூனைக்கு யார் மணி கட்டுறதுங்கிற மாதிரி அனன்யா கொஞ்சம் குட்டைய குழப்பி விட்ருக்கா... பாப்போம் தெளியுதான்னு ???
 
Top