Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-17

Advertisement

praveenraj

Well-known member
Member
அதற்குள் அந்த அப்பார்ட்மெண்ட் முழுவதும் அந்த விஷயம் அரசல் புலசலாய்த் தெரிய எல்லோரும் தங்களையே ஒரு மாதிரி பார்ப்பதாய் உணர்ந்தான் செழி. ஆதிக்கு ஒன்றும் பெருசாகத் தெரியவில்லை. அன்று மாலை ஆபிஸ் விட்டு வந்தவன் அந்த அபார்ட்மெண்ட் வாசலிலிருந்து நடந்து வர அந்த அபார்ட்மென்டின் துணை செகரெட்டரி விச்சு என்னும் விஸ்வநாதன் செழியனை அழைத்தார். அவருக்கு வயது 65+ இருக்கும். இவனுக்கு அவர் மேல் நல்ல மரியாதை உண்டு. அதே தான் அவருக்கும் இவன் மேல்...

"எப்பா செழியா, கொஞ்சம் இங்க வாங்க..."

"என்ன சார்?"

"குட் ஈவினிங்..."

"குட் ஈவினிங் சார்..."

"உட்காருப்பா..."

"பரவாயில்ல, சொல்லுங்க சார்..."

"அப்போ ஒரு வாக் பண்ணிட்டே பேசலாமா?"

"சூர் சார்..."

"ஆனா நான் கொஞ்சம் மெதுவா தான் நடப்பேன்..." என்று சொல்லி அவர் சிரிக்க, செழியனும் பதிலுக்குச் சிரித்தான்.

"அப்றோம் வேலையெல்லாம் எப்படிப் போகுது? ஐ டி பீல்டு டௌன் அப்படி இப்படினு சொல்றாங்களே உண்மையா?"

"அப்படியெல்லாம் இல்ல சார். பரவாயில்லையா போகுது..."

"குட். உன்கூட இருந்த பையனைக் காணோமே?"

"ஆன் சைட் போயிருக்கான் சார். அமெரிக்காவுக்கு... வர எப்படியும் ஆறு மாசம் ஆகும்..."

"அப்றோம் சொல்லவேயில்லை?" என்று விந்தையாய் அவர் பார்க்க,

"என்ன சார்?" என்று புரியாமல் வினவினான் செழியன்.

"இந்த அபார்ட்மெண்ட்டே உன்னைப் பத்திதான் பேசுது... என்னனு நீ என்னைய கேட்கறயே?"

"நீங்க எதைச் சொல்றிங்கனு எனக்குப் புரியல சார்..."

"இப்போயிருந்தே அமெரிக்கன் கலாச்சாரத்துக்குத் தயாராகுறீங்க போல?"

"சார், எதையும் ஓப்பனா சொன்னா நல்லா இருக்கும்..." என்றவனின் குரலில் சற்று கடுமை கூடியிருந்தது.

"ஓகே, லிவ் இன் ரிலேஷன்ல இருக்கீங்கப் போல?" என்றதும் அவனுக்கு ஒரு மாதிரி தூக்கி வாரிப்போட்டது.

"சார்! அது..." என்று செழியன் தடுமாற,

அவன் முக அதிர்ச்சியைப் பார்த்தவர்,"ஐயோ நான் ஆளு தான் அந்தக் காலத்து டைப். பட் யூ டோன்ட் ஒர்ரி. இன்னைக்கு டெக்னாலஜி வளருவதற்கு இதெல்லாம் ஒன்னும் தப்பில்லை. இதுவும் ஒருவித எவாலூசன் (evolution - பரிணாம வளர்ச்சி) தானே? இன்னும் இருவது முப்பது வருஷத்துல இந்தக் கல்யாணக் கலாச்சாரமே வேல்யூ இல்லாம போயிடும் பாரு..." என்று சொல்லி அவர் சிரிக்க, அவனுக்கோ என்ன சொல்வதென்று புரியவில்லை.

"பட் யூ கைஸ் ஆர் லக்கி யூ நோ? (நீங்க எல்லாம் ரொம்ப அதிர்ஷ்டசாலிங்க தெரியுமா?)..." என்று கேள்வியுடன் நிறுத்த அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை,

"என்ன பார்க்கற? எங்களுக்கெல்லாம் அப்படி ஒரு வாய்ப்பே கிடைக்கல..." என்று சொல்லி அவர் பாட்டிற்குச் சிரிக்க, (ஐயோ இந்த ஆளு வேற நிலைமை தெரியாம காமெடின்னு நெனச்சு சிரிக்கிறாரே? என்று மனதிலே புலம்பினான் செழியன்)

"என்ன செழியன் முழிக்கற? ஓ உன்னைக் கிண்டல் எல்லாம் பண்ணல... எல்லாம் ஜெனெரேசன் (ஏ)மாற்றங்கள்..." என்று சொல்ல இப்போது அவர்கள் தொடங்கிய இடத்திற்கே வந்து நிற்க அவரின் மனைவி அவருக்காக நின்றுகொண்டு இருந்தார்.

"என்ன செழியா? என்ன சொல்றாரு வைஸ் செக்ரெட்டரி?" என்று அவர் மனைவி சிரித்தவாறே வினவ,

'நோ நோ' என்று அவர் கண்களை உருட்ட,'உன்ன எப்படி மாட்டிவிடுறேன் பாரு?' என்று மனதில் நினைத்தவன்,"அதில்ல ஆண்ட்டி அங்கிள்க்கு இந்த ஜெனெரேஷன்ல பொறக்கலைனு ரொம்பவும் வருத்தமாம்..."

"ஏனாம்?"

"அதுவா, அவர் இப்போ பிறந்திருந்தா உங்களைக் கல்யாணம் பண்ணாம லிவ் இன் ரிலெசன்ல ஜாலியா இருந்திருப்பாராம்... அதான் ரொம்ப பீல் பண்றாரு..." என்று கரெக்ட்டாக அவரைக் கோர்த்துவிட்டான் செழியன்.

'அட கிரதகா? இப்படிக் கோர்த்து விட்டுட்டியே டா?' என்று அவர் முழிக்க,

"கரெட்கா தான் சொல்லியிருக்காரு செழியா..." என்று அப்பெண்மணி கூற அவனுக்கு ஆச்சரியம் பிடிபடவில்லை,

"என்ன சொல்றீங்க ஆண்ட்டி?"

"நானும் இவரை எப்பயோ பிரேக் அப் பண்ணிட்டு அக்கடான்னு போயிருப்பேன்... ஹ்ம்ம்... நானும் இந்த ஜெனெரேஷன்ல பொறக்காம போயிட்டேனே? சரி என் விதி இதுதானோ?" அவர் சொல்லிவிட்டு அவர் கண்ணடிக்க,

"சூப்பர் ஆண்ட்டி... ஈகுவாலிட்டி மீன்ஸ் ஈகுவாலிட்டி தான். என்ன அங்கிள் ஆமாம் தானே?" என்ற செழியனை முறைத்தவர்,

'உன்னைக் கூப்பிட்டுப் பேசுனது ஒரு குத்தமா?' என்று அவர் மனதில் நினைக்க,

"இப்போ கூட இந்த டின்டேர் அப்படி இப்படினு நிறைய ஆப்(app) எல்லாம் இருக்காமே செழியா?" என்று அப்பெண்மணி கூறவும்,

"அங்கிள், ஆண்ட்டி உங்களைவிட ரொம்ப பாஸ்டா இருக்காங்க... ஹ்ம்ம் ஹ்ம்ம்... என்ஜாய்..." என்று சொல்லிவிட்டு அவன் எஸ் ஆனான்.

"ஆமா டின்டேர்னா என்ன?" என்று தன் மனைவியைக் கேட்டார் அந்த வைஸ் செக்ரெட்டரி.

"எனக்கான பாய்-ஃப்ரண்ட பிடிக்கக்கூடிய ஆப்..." என்று அவர் மனைவி விளையாட,

"உனக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்?" என்று குழம்பினார் அந்த துணை செகரட்டரி.

ஜாலியாக அவர்களிடம் பேசிவிட்டு வந்தாலும் செழியனுக்கு அந்தக் கேள்வி மனதைத் துளைத்துக்கொண்டே இருந்தது. 'இந்தப் பசங்க கிட்ட சும்மா விளையாட்டுக்குச் சொன்னா இப்படிப் பண்ணிவெச்சு இருக்காங்களே? ஐயோ இதை ஆதி கேட்டா என்ன நினைப்பா?' என்று செழியன் நினைத்துக்கொண்டே உள்ளே வந்தான்.

"குட் ஈவினிங் செழி, என்ன கீழ ரொம்ப நேரமா பேசிட்டு இருந்த?" என்ற ஆதிக்கு,

"அது சும்மா தான். அவரு இந்த அபார்ட்மெண்ட்டோட வைஸ் செகரட்டரி..." என்றதும்,

"ஏன் செழி எதாவது பிரச்சனை?" என்று சீரியஸாகவே ஆதி கேட்டாள்.

எங்கே இவளிடம் அதைச் சொன்னால் தப்பாக எடுத்துக்கொள்வாளோ என்று நினைத்தவன் அதேநேரம் ஒருவேளை இதே கேள்வியை வேறு யாராவது அவளிடமே கேட்டுவிட்டால் என்ன ஆவது என்று யோசித்து,'நோ அதற்கு முன் நாமளே பேசிவிட வேண்டும்' என்று நினைத்தவன்,"ஆதி நான் ப்ரெஷ் ஆகிட்டு வரேன். நாம கொஞ்சம் பேசலாம்..."

"என்ன ஆச்சு செழி? நான் இங்க இருக்கறது..."

"ஹே பேசணுன்னு தானே சொன்னேன்? ஏன் வீணா கற்பனை பண்ணுற? அவ்ளோ பெரிய விஷயமில்லை, ஆனா பெரிய விஷயம் தான்... அதே நேரம் சின்ன விஷயமும் கூட... ஆக்சுவல்லி அது நீ எப்படி எடுத்துக்கரங்கறதுல தான் இருக்கு..." என்று செழியன் உளற,

"என்னடா புதிர் போடுற?"

"சொல்றேன், கொஞ்சம் டீ மட்டும் கிடைக்குமா?" என்று சொல்ல,

"நீ போய்ட்டு வா நான் போடுறேன்..."

"ஹே ஆதி, நீ ஒன்னும் தப்பா எடுத்துக்களையே?"

"என்னது?"

"நான் உன்கிட்ட இந்த மாதிரி ஏதாவது வேலை சொல்லுறதுனால நீ ஒன்னும் அப்பென்ட் (offend) ஆகல இல்ல?" என்று தயக்கத்துடன் செழியன் கேட்க,

"சீ போடா..." என்று அவள் உள்ளே செல்ல அவன் ரெப்ரெஷ் ஆகி வந்தான்.

அவள் கொடுத்த டீயை வாங்கிக்கொண்டே அந்த பால்கனிக்குச் சென்று அங்கிருந்த சேரில் அமர அவளும் வந்தாள்.

"செழி, நாமளும் செடி வாங்கி வளர்க்கலாமா? பாரு பக்கத்துக்கு பிளாட்ல வெச்சிருக்காங்க எதிர் பிளாட்டுளையும் வெச்சியிருக்காங்க மேல் பிளாட்ளையும் இருக்கு..." என்று அவள் சொல்ல அவனையும் அறியாமல் சிரித்தவன்,

"என்னடி அந்த இமான் அண்ணாச்சி மாதிரி சொல்ற? டேபிள் மேட் பக்கத்துக்கு வீட்டுல இருக்கு, எதிர் வீட்டுல இருக்கு, மேல் வீட்ல இருக்கு உங்க வீட்டுல இருக்காங்கற மாதிரி..." என்று அவன் சொல்ல,

"டேய் பிராட், என்னையவே கலாய்க்கிறியா?"
அவளிடம் இவ்வளவு ப்ரீயாகவும் ஜாலியாகவும் பேசி எவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டது என்ற யோசனைக்கு அவன் போக,

"என்னடா ஏதோ பேசணும்னு சொன்ன? வாட் இஸ் தி மேட்டர்?"

"ஆதி நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்கக் கூடாது. நீ என் கொலீக்ஸ் தங்கியிருக்கற ஹாஸ்டலுக்கு ஷிப்ட் ஆகிடுறியா?"

"ஏன் செழி? என்ன ஆச்சு? நான் இங்க இருக்கறதுனால உனக்கு எதாவது?"

"அப்படியெல்லாம் இல்ல ஆதி... அது வந்து..."

"எதுனாலும் ஓப்பனா சொல்லு செழி..."

அவனோ அந்த வைஸ் செகரட்டரியுடன் நடந்த உரையாடல்களை எல்லாம் சொல்ல,

அவளோ அவன் எதிர்பார்த்தத்துக்கு மாறாக விழுந்துச் சிரிக்கவும்,

"ஏன் சிரிக்கிற?"

"பாவம் டா அவரு... அவரைப் போய் அவர் வைப் கிட்ட இப்படிக் கோர்த்து விட்டுட்டியே செழி? நீ இந்த மாதிரி எல்லாம் செய்வியா செழி?" என்று சொல்லி மீண்டும் அவள் சிரிக்க,

"ஆதி, ஏற்கனவே உனக்கு நெறைய பிரச்சனை, கெட்டப்பேரு... இதுல இதுவும்...?"

"செழி, நாம ரெண்டு பேரும் யாரு? நமக்குள்ள என்ன ரிலேஷன்ஷிப் இது நமக்கு மட்டும் தெரிஞ்சா புரிஞ்சா போதும். எல்லோருக்கும் நிரூபிக்கணும்னு அவசியமில்லைனு அன்னைக்கு நீ தானே சொன்ன?"

"ஆனா ஆதி ஒருவேளை இதனால் எல்லோரும் உன்னை?"

"இதுதான் என்னை நீ ஹாஸ்டல்ல சேர்க்கறதுக்கு காரணம்னா நான் இங்கேயே தங்குறதுல எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல செழி..."

"ஆதி நிஜமாவா?"

"டேம் சூர்..." என்று அவர்கள் தேநீர் உறிஞ்ச,

அதற்குள்,"ஓகே கண்மணி... ஹோய் ஓகே கண்மணி, கீழ பாருங்க..." என்று சப்தம் வர கீழே அந்த வளர்ந்தச் சிறுவன் தான் அவளை அழைத்தான்.

இவளும் கையைத் தூக்கிக் காட்டவும்,"கீழ வாங்க விளையாடலாம்..." என்று அழைத்தான்.

அவளும் இதோ வரேன் என்று சொல்லி,"செழி வா கீழ போலாமா?"

அவள் சிரிக்க அவனும் சிரித்தான். இருவரும் கீழே சென்று அவர்களோடு நீண்ட நேரம் விளையாடி கதை பேசி மீண்டும் மேலே வந்தனர். இப்போது அந்த அபார்ட்மெண்ட் முழுவதும் (பெருவாரியானப் பெண்கள்-அந்தக் குழந்தைகளின் அம்மாக்கள்) அவர்கள் இருவரையே பார்க்க செழிக்கு அதற்கான உண்மைக் காரணம் புரிந்தது. ஆனால் அவளுக்குப் புரியவில்லை.

வந்து கதவைத் திறக்கவும் அவளின் போன் அடித்து ஓய்ந்தது. அனன்யா தான் அழைத்திருந்தாள்.

"அனன்யா தான் செழி கூப்பிட்டு இருக்கா" என்ற ஆதியிடம்,

"யாரு?"

"ரிப்போர்ட்டரா ஒர்க் பண்றாளே என் ஃப்ரண்ட்..."

"ஹேய் மெயில் வந்ததா? பார்த்தியா?" - அனன்யா

"இல்ல டி. இரு பார்க்கறேன்..." என்று அவள் பார்க்க அவள் ஜூனியர் ரிப்போர்ட்டராகத் தேர்வாகி இருந்தாள்.

"மெயில் வந்திடுச்சு டி. ஜூனியர் ரிப்போர்ட்டர். தேங்க்ஸ் அனன்யா..."

"கங்கிராட்ஸ் ஆதிரா..." என்றவளுடன் ஆதிரா சிறிது பேச, செழியனுக்கு எல்லாமும் கேட்டது. ஒருபுறம் அவனுக்கு சந்தோசமாகவே இருந்தது. பின்னே அவளுக்கு ஒரு வேலை கிடைத்துவிட்டது. இனி அவள் யாரையும் டிபெண்ட் செய்து இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் அவள் அவனை விட்டு விலகிச் சென்றுவிடுவாளோ என்ற பயம் அவனுக்குப் பிறந்தது.

'எந்த மாதிரி நிலை இது? அவ என்கூடவே இருக்கணும்னு நான் மட்டும் ஆசைப்பட்டா நடக்குமா? அவளும் ஆசைப்படணும் அல்லவா?' என்று அவனுக்கு நிறைய எண்ணங்கள் வந்து போக, ஆதிரா அவனை நோக்கி சந்தோசமாய் வந்தாள்.

"செழி வேலை கிடைசிடுச்சு டா. நீ என் லக்கி சார்ம் டா... அதை மீண்டும் மீண்டும் நிரூபிச்சிட்ட. இந்த என்விரான்மெண்ட் (சூழ்நிலை), இந்த வேலை, இந்த லைப் ஸ்டைல் இந்தப் பசங்க, எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு டா..."

அவள் கண்களில் கண்ட சந்தோசம், உற்சாகம், பொலிவு எல்லாம் அவனுக்கு உண்மையில் மகிழ்ச்சியைத் தந்தது.

"ஆதி வேலை எங்க?"

"இங்க தான் கிண்டில... இங்க இருந்து பக்கம் தானே?"

"ஹாம் பக்கம் தான் ஆதிரா..."

"சரி நான் அம்மாக்கு போன் பண்ணிச் சொல்லிடுறேன்..."

ஏதேதோ எண்ணங்களில் திளைத்திருந்தவன் மீண்டும் அவன் அறைக்குச் சென்று அவன் வேலைகளில் மூழ்கினான்.
உள்ளே வந்தவள்,"செழி ஏன் ஒரு மாதிரி இருக்க?"

"இல்ல ஐ அம் ஓகே... ஆமா எப்போ ஜாயின் பண்ணனும்?"

"மண்டே..."

"ஆதி அப்போ சன்டே வெளிய போலாம். உனக்கு வேணுங்கறதை எல்லாம் பர்ச்சேஸ் பண்ணிடலாம் ஓகேவா?" என்றதும்

அவளுக்கு ஒரு மாதிரி ஆனது. அதை அவள் முகபாவங்களிலே உணர்ந்தவன்,

"ஏன் ஆதி?"

"நானே உன்கிட்ட எப்படிக் கேட்கறதுனு யோசிச்சிட்டு இருந்தேன் செழி..."

"உனக்கு என்ன தோணுனாலும் தைரியமா வெளிப்படியா கேளு ஆதி. நீ என்கிட்ட எல்லாமும் உரிமையா கேட்கலாம்..."

"உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்னு தோணுது செழி... ஆனா எதுக்குனு சொல்லுவேன்? அப்படிச் சொன்னா நான் என் லைப் லாங் சொல்லிட்டே இருக்கனும்..."

"எனக்கு உன் தேங்க்ஸ் எல்லாம் ஒன்னும் வேணாம். முடிஞ்சா நைட் டின்னர் மட்டும் நீயே செஞ்சிடு..." என்று அவன் சிரிக்க,

"அய்யய்யோ?" என்று அவள் சிரிக்க,

"உடனே ஷாக் ஆகாத... நானும் வரேன் போ..." என்று பின்தொடர்ந்தான். (தொடரும்...)
 
இப்படியேவாச்சும் ஸ்மூத்தா அவங்க லைஃப் போக விடுவாங்களா சுத்தி இருக்குறவங்க...
 
இப்படியேவாச்சும் ஸ்மூத்தா அவங்க லைஃப் போக விடுவாங்களா சுத்தி இருக்குறவங்க...
good question... problems will be there in upcmg epis... thank you??
 
Top