Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-10

Advertisement

praveenraj

Well-known member
Member
திடீரென அடித்த போன் சப்தத்தால் தன்னிலைக்கு வந்தவள் அருகிலிருந்த போனை அட்டென்ட் செய்தாள். அவன் தான் அழைத்திருந்தான்.

"நான் அரவிந்த் பேசுறேன். உன் வீட்டுல இருந்து போன் பண்ணுவாங்க. அப்போ சும்மா அழுது நாடகம் போடாம ஒழுங்கா பேசு..." என்றவன் ஏதும் சொல்லாது காலை கட் செய்தான். உடனே '+91' என்று அழைப்பு வர தன் வீட்டிலிருந்து தான் என்று அறிந்தவள், "அப்பா..." என்றவளின் குரல் கிட்டத்தட்ட அவள் நிலையை படம்பிடித்துக் காட்டியது. அதை உணர்ந்தவராய்,"என்னாச்சு மா? குரல் ஒருமாதிரி இருக்கு?" என்று பதட்டப்பட அவரைக் கஷ்டப்படுத்தக் கூடாதென்று பொய்யாக ஒரு காரணம் தேடவும் அதற்குள் அவரே,"இங்க பாருடா... இவ்வளவு காலம் நீ நம்ம ஊர்ல இருந்து பழகிட்ட. முதல் தடவை எங்க எல்லாத்தையும் பிரிந்து இப்படி வெளிநாட்டுக்குப் போனது உனக்குக் கஷ்டமா இருக்கலாம். இருக்கலாம் என்ன இருக்கும் தான். அதான் மாப்பிள்ளை இருக்காரே? அவர் பார்த்துப்பாரு..." என்றதும் இவள் எண்ணமோ நடந்ததை நினைத்து, "நல்லா பார்த்துப்பாரு..." என்று கோவமாய் வார்த்தையை உதிர்க்க, "அவர்கிட்ட தான்டா பேசுனேன். ஏதோ முக்கியமான வேலையாம் அதான் உன்கிட்டப் பேசச் சொல்லி நம்பர் கொடுத்தாரு. பயணம் எல்லாம் நல்லா இருந்ததில்ல? மாப்பிள்ளை கொஞ்சம் முன்ன பின்ன தான் இருப்பாரு. அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்..." என்றவர் "அம்மா இருந்திருந்தா எல்லாம் தெளிவா புரியவைத்திருப்பாள்... ஹ்ம்ம் மகராசசிக்குக் கொடுத்து வைக்கவில்லை..." என்றதும் தன்னையும் அறியாமல் கண்ணீர் வடித்தாள் ஆதிரா.
"அதைவிடு... பார்த்து சூதானமா நடந்துக்கணும். சரியா? அப்பா நாளைக்கு உன்னைக் கூப்பிடுறேன்..." என்று அவரே போன் கட் செய்தார்.

பின்னே அவருக்கு மட்டும் எப்படி இருக்கும்? எல்லாமும் எதிர்பாராமல் நடந்த நிகழ்வாச்சே? ஒவ்வொரு விஷயத்தையும் தன் பெண்ணிற்காகப் பார்த்துப்பார்த்து செய்தவராச்சே? இன்று இப்படி ஒரு சூழ்நிலையில் அவளைத் தனியாக அதும் கடல்கடந்து எல்லாம் அவர் அனுப்ப விரும்பவேயில்லை. நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்தார். அவருக்கும் வருத்தமே மிஞ்சியது.

அடுத்தடுத்த நாட்களில் தன் தந்தையிடம் அவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வரிசையாய்ப் பொய்யைச் சொன்னாள். ஆனால் மூன்று நாட்கள் ஆகியும் தன்னை வந்து சந்திக்காதவனை நினைத்து சந்தேகமும் கொண்டாள். மூன்று நாட்களாய் தூங்குவதும் எழுவதும் உண்பதும் கொஞ்சம் சுற்றிப்பார்த்து அவள் அப்பாவிடம் போனில் உரையாடி அப்பப்போ அவன் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு பதில் அளித்து வந்தாள். நான்காம் நாள் காலை எழுந்தவளுக்கு ஒரு அட்ரஸ் மெஸேஜ் வந்தது. அத்துடன் இங்கே போய் இன்டெர்வியூ அட்டென்ட் செய் என்று மட்டும் இருந்தது. ஏனோ இதுவரை அவனின் மீது வராத நம்பிக்கை இப்போது ஆதிக்கு கொஞ்சம் வரத் துவங்கியது. என்ன தான் ஜர்னலிசம் படித்திருந்தாலும் இங்கே உடனே ஜர்னலிஸ்ட் ஆக முடியாது என்பதால் (சில தேர்வுகளை எழுதி பாஸாக வேண்டும்) கிடைத்த வேலையைச் செய்ய ஆயத்தமானாள். அன்று அவளுக்குக் கிடைத்தது என்னவோ தோல்விதான். மறுநாள் அவன் தன்னைச் சந்திக்க வருவதாகக் கூறினான். அவளை ஒரு ரெஸ்டாரெண்டிற்கு டின்னர் அழைத்துச் சென்றவன் சொன்னதெல்லாம் அவளுக்கு பேரிடியாக இருந்தது.

அங்கே அமர்ந்திருந்தவனை காட்டி,"மீட் மிஸ்டர் ஜாக்கி அர்னால்டு. மை பார்ட்னர்..." என்றதும் ஏதோ பிசினஸ் பார்ட்னர் என்று நினைத்தவளுக்கு அடுத்து சொன்னது விளையாட்டோ என்று இருந்தது. "இங்க பாரு ஆதிரா நாங்க ரெண்டு பேரும் ஒன்னா இருக்கோம்." அந்த ஒன்னாவில் ஒரு அழுத்தம். "வி ஆர் லிவிங் இன் ரிலேஷன் ஷிப்" இப்படி 'தன்பாலினர் ' என்று அவன் சொன்னது அவளுக்கு ஒன்றும் ஆச்சரியமாகத் தெரியவில்லை. உலக புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ டிம் குக் (tim cook) உட்பட பலர் தங்களின் அடையாளத்தைத் தயங்காமல் வெளிப்படுத்தியுள்ளார்கள். ஒருமுறை ஒரு பேட்டியில் டிம் குக்," நான் கேவாக (gay - ஓரின சேர்க்கையாளன்) இருப்பதே கடவுள் எனக்குக் கொடுத்த ஆகச்சிறந்த வரமாகக் கருதுகிறேன்" என்று கூறினார். செக்ஸுவல் ஓரியன்டேஷன் (sexual orientation - பாலியல் நோக்குநிலை) என்பது நிச்சயம் அவன் கையில் இல்லை என்று அவளுக்கும் தெரியும். இது ஹார்மோன்களில் வேலை. ஏன் இந்திய உச்சநீதி மன்றமே செக்ஷன் 377 ஐ நீக்கிவிட்டது (செக்சன் 377 - இயற்கைக்கு மாறான உறவு குற்றம் என்பது தான் அந்தச் சட்டம். அது ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்டது. எப்போதோ இங்கிலாந்து கூட அந்தச் சட்டத்தை நீக்கிவிட்டது). பிரச்சனை அதுவில்லை. தன்னைப் பற்றி முழுதாகத் தெரிந்தவன் எப்படி என்னை திருமணம் செய்துகொண்டான் என்று யோசிக்க அதற்கும் மேலாக தான் 'ஏமாற்றப்பட்டுள்ளோம்' என்றும் மேலும் 'மனரீதியாக' தன்னை இவன் அதிகம் காயப்படுத்தியுள்ளான் என்று உணர்ந்தவள் தன்னையும் அறியாமல் வந்த கோவத்தை வெளிக்காட்டி அவனின் முகத்தில் தண்ணீரை ஊற்றி விட ஏனோ அவள் கண்களில் அவளையும் அறியாமல் கண்ணீர் வந்தது. அது அவள் வாழ்க்கை இனி எந்த திசையில் செல்லும் செல்ல அவளுக்கே புரியவில்லை.

அங்கிருந்து புறப்பட்டவள் அங்கிருந்த ஒரு பார்க்கிற்கு சென்றாள். அவளால் இன்னமும் அவன் சொன்னதை நம்பமுடியவில்லை. அவள் உடலைக் காட்டிலும் மனம் அதிகம் சோர்வுக்குள்ளானது. மெல்ல மெல்ல அவனுடனான உரையாடல்கள் எல்லாவற்றையும் திரும்பி அசைப் போட்டாள். 'அவனுக்கும்' ஆரம்பத்திலிருந்தே இந்த கல்யாணத்தில் பெரிய விருப்பமில்லை என்பதை நன்கு அறிந்தவள் தான் அவள். ஆயினும் இப்படியொரு காராணத்திற்காகத் தான் அவன் கல்யாணத்தை விரும்பவில்லை என்று அவள் உணரவில்லை. எவ்வளவோ யோசித்தும் அவளுக்கு ஒன்று மட்டும் தான் நினைவுக்கு வந்தது. 'இனியும் நாம இங்க இருக்கக் கூடாது...' என்று தான் யோசித்தாள். இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. ஊருக்குக் கிளம்பவேண்டியது தான் என்று நினைத்து எல்லாமுமெடுத்து பேக் செய்ய அவளின் தந்தை எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. எடுத்தவள் தந்தைக்கு மெலிதான அட்டாக் என்றும் பயப்பட தேவையிலை என்றும் ஹாஸ்பிடலில் தான் இருக்கிறார் என்றும் தன் மாமன் வாயிலாகத் தெரிந்துகொண்டாள்.

"ரொம்ப யோசிச்சு யோசிச்சு குழம்பியிருக்கிறாரு. அவரு இனி எதையும் யோசிக்கக் கூடாது. அதிர்ச்சியைக் கேட்கக்கூடாது" என்று சொல்லவும் சுக்குநூறாக உடைந்தவள் ஊருக்குச் செல்லும் எண்ணத்தை கைவிட்டு இங்கேயே சிறிதுகாலம் தங்க முடிவு செய்தாள்.
...............................................................
"ஹே ஆதிரா நீ தப்பு பண்ணிட்ட. ஒழுங்கா நீ உன் மாமா கிட்டயாவது சொல்லியிருக்கும் இல்ல? இல்லை குறைந்தபட்சம் அவன் அப்பா அம்மாகிட்டயாவது சொல்லியிருக்கனும்..." என்றான் செழியன்.
வெற்றுப்புன்னகையை உதிர்த்தவள்,"யாருகிட்டச் சொல்லியிருந்தாலும் எப்படியும் கடைசியாக அது என் அப்பாக்கு வந்து சேர்ந்து இருக்கும். சோ கொஞ்சம் பொறுமை காக்க முடிவு பண்ணிட்டேன். அப்றோம் அப்படியே இன்டெர்வியூ அட்டென்ட் பண்ணி ஒரு வேலையில சேர்ந்தேன். என் வாழ்க்கை அப்படியே போச்சு. சொல்லப்போனா அப்போவரைக்கும் கூட எனக்கு அவன் மேல கோவமே வரல. என்னை ஏமாத்திட்டானேனு ஒரு ஆதங்கம் மட்டும் இருந்தது. அது மட்டும் தான். என் வாழ்க்கை அப்படியே போச்சு. வீட்ல அப்பாகிட்டயும் பொய்ச் சொல்லி நடிச்சி அங்கேயும் தனியா கஷ்டப்பட்டு ஒருவழியா எனக்குக் கல்யாணம் ஆனதே நான் மறக்குற அளவுக்கு நானுண்டு என் வேலையுண்டுனு இருந்தேன்...'

"அப்போ என்கூட ஒர்க் பண்ற கொலீக் கூட ஒருநாள் லன்ச் சாப்பிட்டு இருக்கும் போது என்னையைப் பார்த்துட்டு,"பரவாயில்லையே உடனே ஆளைப் புடிச்சிட்ட போல?பொழைக்கத் தெரிஞ்சவ தான்... அப்றோம் இன்னும் எதுக்கு வெய்ட் பண்ற? என்ன டைவர்ஸ் பண்ணிட்டு அவனை கரெக்ட் பண்ணிக்கோன்னு..." சொன்னான் பாரு கோவத்துல எடுக்குற எந்த முடிவும் சரியா இருக்காதுனு சொல்லுவாங்க பாரு... அது என் வாழ்க்கையில சரியாகிடுச்சி. அந்த கோவத்துல அவன் கேட்ட டிவோர்ஸ் பேப்பர்ல சைன் பண்ணிட்டேன். அப்படியே ஒரு ஆறு மாசம் போச்சு. என்கிட்ட வந்து, நீ இந்த நாட்டை விட்டு போற டைம் வந்துடுச்சினு சொன்னான். நான் சிரிச்சிட்டே உன்னைவிட்டு வந்தா நான் இந்த நாட்டை விட்டு போகணுமா என்ன அவசியம்னு கேட்டேன். அப்போதான் அவன் சொன்னான் நீ இங்க டிபெண்டெண்ட் விசால தான் வந்திருக்க . எப்போ நம்ம டிவேர்ஸ் பேப்பர் ப்ரோஸெஸ் ஆச்சோ அப்போவே நீ இந்த நாட்டை விட்டு போற நிலைக்கு வந்துட்டனு சொன்னான் . எனக்கு வந்த கோவத்துக்கு அவனை அடிச்சிட்டேன்..."

அப்போ தான் அவன் அவமானத்துலையும் கோவத்துலையும்,"போனா போகுதுனு பார்த்தா ரொம்பவும் பண்ற... உனக்கு ரொம்பவும் கொழுப்புடி @#$z%^..." என்றான்.

"உன்ன எல்லாம் நாடு கடத்த விடணும். இங்க விசா இல்லாம ஒரு நொடிக்கூட இருக்க முடியாது..." மிரட்டினான். எனக்கு என்ன பண்றதுனே புரியில. எனக்கும் 2 மாசம் நோட்டீஸ் பீரியட் வந்தது. அதுக்குள்ள நான் நாட்டைவிட்டு வெளியேறனும்னு ஆர்டர்."

"அப்றோம்?"

"அப்றோமென்ன? ஒருநாள் நானே மூட்டை முடிச்செல்லாம் கட்டிட்டு இந்தியா புறப்பட்டுட்டேன்.அன்னைக்கு ஏதோ ஒரு தைரியத்துல கிளப்பிட்டேனே ஒழிய எப்படி வீட்டுல சொல்றது இல்ல இப்படி திடீர்னு போய் நின்னா என்ன பண்ணுவாங்கனு எனக்கு ஒண்ணுமே புரியில... அப்போ தான் அங்க ஏர்போர்ட்லேயே உட்கார்ந்துட்டேன். அப்போதான் நீ வந்த... என்னைப் பார்த்து உன்கூட உன் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போன. இப்போ நாம நம்ம ஊருக்குப் போயிட்டு இருக்கோம்..."

"அவனை ஏன் சும்மா விட்ட?" என்ற செழியனுக்கு ஏனோ கோவம் பொத்துக்கிட்டு வந்தது.

சிரித்தவள்,"அவன் ரொம்பவும் பாவம்டா..."

"வாட்? பைத்தியமா நீ?"

"சரி கொஞ்சம் ஃப்ரீயா பேசலாமா?"

அவனோ தயங்கி தலையை ஆட்டினான்.

"ஒருவேளை உங்க வீட்டுல உன்னை ஒரு பையனுக்கு கல்யாணம் பண்ணிவெச்சா நீ என்ன பண்ணுவ?" என்று அவள் கேட்க அதில் திகைத்தவன்,

"வாட்? டிஸ்கஸ்டிங்..." (disgusting - அருவருப்பு ,வெறுப்பு) என்றவனின் முகம் மாற,

"அப்படித்தான்டா அவனுக்கும் இருக்கும். ஐ கேன் ஃபீல் இட்..."

"அப்றோம் எதுக்கு அவனைப் பற்றி காலையில பேசும் போது திட்டுன்ன?"

"அது அவன் பண்ண வேலையில எனக்குக் கோவம் இருக்கு. வீணா என் வாழ்க்கையில விளையாடிட்டானேன்னு ஒரு வெறுப்பு, கோவம், இயலாமை..."

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியில ஆதி..."

"எனக்கு இப்போ இருக்கறதெல்லாம் ஒரே கவலை தான் செழி. இதை அப்பா எப்படி எடுத்துப்பாரோன்னு தான் எனக்கு பயமா இருக்கு. அவருக்கு வேற இவ்வளவு நாளா ஒரு பால்ஸ் ஹோப் கொடுத்துட்டேன். திடீர்னு போய் எல்லாமும் சொன்னா ரொம்பவும் மனசு உடைஞ்சிடுவாரு டா செழியா... பாவம்டா நீ... யாரோ பண்ண தப்புக்கெல்லாம் நீ பிராயச்சித்தம் தேடுற... ஐ பிட்டி ஆன் யூ" (pity -அனுதாபப் படுறேன்).

செழியனுக்குத் தான் இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. 'எப்படி நடந்ததை எல்லாம் இவளிடம் சொல்வது?' என்று குழம்பியவன் வண்டியை ஓரமாய் நிறுத்தினான்.(தொடரும்...)

இங்க ஒருத்தவங்க செக்ஸுவல் ஐடென்டிட்டி (பாலின அடையாளம்) மாறுவதென்பது ரொம்பவும் பெரிய பிரச்சனை. சமூக மாற்றம் நிறைய வரணும். நான் இப்போ ஆதிரா பக்கத்துக்கு நியாயத்தைச் சொன்னேன். அப்போ அரவிந்துக்கும் ஒரு நியாயம் இருக்கும் தானே? அதையும் யோசிங்க. அப்றோம் முடிவெடுங்க. இப்போ எதுக்கு இதைச் சொல்றேன்னா கண்டிப்பா இதைப் படிச்சிட்டு நீங்க அரவிந்தைத் திட்டுவீங்க. அது கூடாது. அப்படிக் கோவம் வந்தால் ஆதிரா செழியனிடம் கேட்ட கேள்வியை நீங்களே உங்களைப் பார்த்து கேட்டுக்கொள்ளுங்கள். அப்போது புரியும். பட் எனிவேஸ் இப்போவரை அரவிந்த் பண்ணது தப்பில்லை. ஆனால் அடுத்த எபியில் அவன் செய்யப்போவது பெரிய தவறு. நான் முன்னாலே சொன்ன மாதிரி இது நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்னால் எழுதியது. அப்போது இருந்த நிலை வேறு. செக்சன் 377 அப்போது நடைமுறையில் இருந்தது. இப்போது தான் அதை நீக்கினார்கள். அதற்காக அவன் செய்ததை நான் நியாயப்படுத்தவில்லை. கதை இதைப் பற்றி இனி அதிகம் பேசாது. நிச்சயம் வேறு கோணத்தில் தான் பயணிக்கும். அதாவது இனி முழுக்க முழுக்க ஆதிரா செழியன் ஆகியோரைச் சுற்றியே நகரும். சோ ஜஸ்ட் லீவ் இட்...
இது தான் இந்தக் கதையை தொடங்கும் போதே நான் சொன்ன ஆட்சேபனை... this was my debut writing...
 
அரவிந்தோட நிலையை குற்றம் சொல்லமுடியாது....ஆனால், அவன்
தன் நிலையை தைரியமா வெளிப்படுத்தி இருக்கணும்...
ஒரு பெண்ணோடவாழ்க்கையோட விளையாடி இருக்கக் கூடாது...
இன்னமும், தான் ஒரு ஆண் என்றே தன் குடும்பத்தினரிடம் காண்பித்துக் கொள்கிறானா..?
 
அரவிந்தை திட்டுவதென்றால் அவன் அப்படி இருப்பதனால் திட்டுவதல்ல...வீணாக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடியதற்காக... சரி அவனின் பக்கமும் ஒரு நியாயம் இருக்குன்னே வச்சுக்கிட்டாலும் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து கொஞ்சம் பொறுமையா அவகிட்ட எடுத்து சொல்லி ஒரு பிரெண்ட்லியாவாவது நடந்துருக்கணும்ல....
 
Aadhira is bold and has done the right decision except hiding it from her family-how long could she have done that?
Aravinth has no right to use Aadhira and spoil her life to hide his sexual orientation.
 
அரவிந்தோட நிலையை குற்றம் சொல்லமுடியாது....ஆனால், அவன்
தன் நிலையை தைரியமா வெளிப்படுத்தி இருக்கணும்...
ஒரு பெண்ணோடவாழ்க்கையோட விளையாடி இருக்கக் கூடாது...
இன்னமும், தான் ஒரு ஆண் என்றே தன் குடும்பத்தினரிடம் காண்பித்துக் கொள்கிறானா..?
some peoples are like this... what to do? tq?
 
Top