Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!- 1

Advertisement

praveenraj

Well-known member
Member
இரவில் டிராபிக் அதிகமாக இருந்தது. பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்ட 'கீங் கீங்...' என்னும் ஹாரனின் சப்தங்களுக்கு இடையே ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டிருந்த,' என் வானிலே ஒரே வெண்ணிலா...' என்ற மெலோடியைக் கேட்கும் மனநிலையில் செழியன் இல்லை.

"சாரி ஜான், என்னால தானே இப்போ இவ்வளவு டென்ஷன்? ஜான், ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி சாரி. எனக்குத் தெரியும் இப்போ இதைச் சொல்லுறதுல அர்த்தமே இல்லைனாலும் என்னால தானே லேட். நீ வேற அப்போவே ஆறு மணிக்கெல்லாம் கிளம்பலாம்னு சொன்ன. நான் தான் பெரிய இவனாட்டம், 11 மணி பிலைட்டுக்கு 6 மணிக்கே எந்த மடயனாவது கிளம்புவானானு ஏதேதோ பெனாத்தி (பிதற்றல் வழக்குச் சொல்)... சாரி அகைன்..."

"சில் மச்சி. இப்போ சாரி கேட்டு என்ன ஆகப் போகுது? அடுத்து நடக்கப் போறதைப் பாப்போம் வா..." என்றான் ஜான்.

பிலிவர் பாடலானது தன் செல்லில் ஒலிக்க மேனேஜர் என்று காட்டிய திரையை புன்முறுவலுடன் ஜான் செழியனிடம் காட்ட, செழியோ,"போச்சி சும்மாவே இவன் என் தாலிய அறுப்பான். இப்போ அவ்வளவு தான்..." என்று புலம்ப,
"யா சார். அல்மோஸ்ட் ரீச்ட் ஏர்போர்ட். ஜஸ்ட் காட்டா ஸ்ரக் இன் டிராஃபிக். வில் பி தேர் இன் 15 மினிட்ஸ். ஓகே சூர் சார். ஐ வில் டேக் கேர்..." என்று அழைப்பைத் துண்டித்ததும்,
"அப்பா கிரேட் எஸ்கேப். தேங்க்ஸ் டா ஜான்..." என்றான் செழியன்.

"சீ விடுடா... ஆமாம்டா இளா, அப்படி அந்த மேனேஜருக்கும் உனக்கும் என்னதான் பிரச்சனை? நான் நேத்து உன்கூடப் போறேன்னு சொல்லும் போதே அவன் மூஞ்சியே மாறிடுச்சு. சலித்துகிட்டே சரினு சொன்னான்..."

"அது ஒன்னுமில்லடா, அவன் பேண்டுக்கு உள்ள பட்டாப்பட்டி போடுற விஷயத்தை நான் நம்ம பசங்க கிட்டச் சொல்லிட்டேன். அதுதான் அவனுக்கு காண்டு..."

"ஹா ஹா ஹா... அது எப்படிடா உனக்குத் தெரியும்?" என்று சிரித்தபடியே ஜான் கேட்கும் போதே பச்சை விளக்கு விழ அவசரமாக நியூட்ரலில் இருந்த வண்டியை முதல் கியர் மாற்றி காரை செலுத்தினான் செழியன்.

"அதுவா? ஒரு நாள் நானும் அவனும் மும்பை ப்ரொஜெக்ட்டு விஷயமா போகும் போது ஹோட்டல் ரூம்ல இருந்து திடீர்னு அவன் ரூம் பாத்ரூம் டோர் லாக் ஆகி தொறக்க முடியாம போக அவன் அங்கிருந்த அலாரம் அடிச்சான். நானும் என்னமோ ஏதோனு ரூம் சர்விசோட போய்த் திறந்தா உள்ள நம்மாளு பட்டாப்பட்டியோட இருந்தான்..."

"ஹா ஹா... அப்றோம்?"

"உடனே ஹெல்ப் பண்ணி எல்லாம் வெளிய போன அப்றோம் என்னை தனியா கூப்பிட்டான்..." என்றவன் தங்களுக்கு முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தின் சடன் பிரேகை யூகித்தவனாக லாவகமாக வண்டியைத் திருப்பினான்.

"கூப்பிட்டு... ஐயோ இளா அவனா நீ?" என்று ஜான் ராகம் இழுக்க,

"ச்சீ சொல்ல விடுடா... நான் கூட ஏதோ சீரியஸாக தான் பேசக் கூப்பிடுறானு போய் என்னனு பார்த்தா,"மிஸ்டர் செழியன், தயவு செய்து நான் பேண்டுக்குள்ள பட்டாப்பட்டி போடுற விஷயத்தை யார்கிட்டயும் சொல்லிடாதீங்கனு" சொன்னான் பாரு. சத்தியமா எனக்கே அதுவரை அப்படி ஒரு ஐடியா இல்ல. உடனே அதை நம்ம குரூப்ல போட்டு..." என்று முடிக்கும் முன்னே,

"ஹா ஹா ஹா..." என்று விழுந்து விழுந்து சிரித்தவன்,"பாவம் டா அவன். ஆமா அதெப்படி அவனுக்குத் தெரியும்?"

"அதை ஏன் கேட்குற? அவசரத்துல எக்சிசைட்மெண்ட்ல அதை நம்ம ஆபிஸ் அபிசியல் குரூப்ல போட்டுட்டேன்..." என்று செழியன் அசடு வழிய,

"ஐயோ!..." என்று மீண்டும் வயித்தைப் பிடித்தபடியே சிரித்த ஜான்,"அப்போ அவன் உன்ன கடுப்படிக்கறதுல தப்பே இல்லைடா இளா..."

பேசிக்கொண்டே வர, வண்டியை விமான நிலைய பார்க்கிங்கில் நிறுத்தியவன், ஜானை இறக்கிவிட,

"மச்சான் நீ கிளம்புடா. ஏதும் பிரச்சனை இல்ல. நான் பார்த்துக்கறேன்..." என ஜான் விடைபெற முயல,"டேய் இருடா எனக்கும் எதுவும் வேலையெல்லாம் இல்ல. வீட்டுக்குப் போனா செம்ம போர். உன்னை போர்டு பண்ணிட்டே கிளம்பறேன். நாளைக்கு சன்டே வேறயா நோ ப்ரப்ளேம்..." என்ற செழியனுக்கு,

அவனோ மண்டையைச் சொறிந்தவாறே,"அது ஒன்னுமில்ல மச்சான்... ஜென்னி வரேன்னு சொன்னா... அதுதான்..." என்று ஜான் சிரிக்க,

"அடப்பாவி? ஊருக்குப் போற கேப்புளையுமா? கிடைக்கிற கேப்பில எல்லாம் இப்படி கிடா வெட்டுனா எப்படிடா? எங்களுக்கு கொஞ்சம் விட்டுவெக்கிறது..." என்ற செழியனுக்கு,

"சீ சீ சீ... அது நான் சீரியஸா ட்ரை பண்ற பொண்ணுடா..."

"எது பதினேழாவது சீரியஸ் பொண்ணா?" என்று செழி நக்கல் செய்ய, ஜான் சிரித்தான்.

"சரி சரி வா... உள்ள வரை வந்து லக்கேஜ் வெச்சிட்டு நான் போயிடுறேன். ஆமா மச்சி நீ வர இன்னும் 6 மாசம் ஆகும்ல? அதுவரை அந்த வீட்டுல நான் மட்டும் தான்னு நினைக்கும்போதே பயமா இருக்கு டா..."

"ஹே சில் டா. அதுதான் தங்கைங்களை கரை சேர்த்துட்ட தானே? அம்மாகிட்டச் சொல்லி ஒரு பொண்ணைப் பார்க்கச் சொல்ல வேண்டியது தானே? கேட்க கூச்சமா இருந்தா சொல்லுடா நான் சொல்றேன்... நம்ம அம்மா தான். நான் சொன்னா உடனே கேட்பாங்க..." என்று ஜான் சிரிக்க,

"டேய் போடா... எல்லாம் தெரிஞ்சும் நீயே இப்படிப் பேசலாமா சொல்லு?" என்று சீரியஸாகவே பதிலளித்தவனுக்கு,

"அதுக்குன்னு கடைசி வரை இப்படியே ஒத்தையா ஒண்டிக்கட்டையா இருக்கறதா பிளானா?" என்று வார்த்தையில் இதுவரையில் இருந்த கிண்டல் மறைந்து ஒரு உரிமை கலந்த கோவத்தில் ஜான் குரல் ஒலிக்க,

"ஹை ஜான்! சாரி கொஞ்சம் லேட் ஆகிடுச்சு... ஹே இளா குட் ஈவினிங்..." என்றபடி வந்த குரலின் திசையில் திரும்பிய ஜான்,

"ஹாய் ஜென்னி..." என்றுரைத்து,

"ஒரு நிமிஷம் ஜென்னி, நான் இளா கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் ப்ளீஸ்..." என்றான் ஜான்.

"ஓகே ஓகே கேர்ரி ஆன். பட் டோன்ட் டேக் மச் டைம்... நான் சாப்பிட எதாவது வாங்கிட்டு வரேன்..." என்று ஜெனி திரும்ப,

"கோல்டு காஃபீ..." என்ற ஜானை வாஞ்சையுடன் முறைத்த ஜென்னி இரண்டடி எடுத்து வைக்க,

"டேய் இன்னுமாடா அந்தப் பொண்ண மனசுல நினைச்சிட்டு இருக்க? அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சில்ல?" என்று தன்னுடைய அதிர்ச்சியை அப்படியே வெளிக்காட்டினான் ஜான்.

ஆம் என்று சொல்ல முடியாமல் அதேநேரம் அதை மறுக்கவும் முடியாமல் செழியன் தடுமாற,

ஜான் செழியன் மீது ஒரு இயலாதப் பரிதாபப் பார்வையைப் பார்க்க, அதை உணர்ந்தவன்,

"என்னனு தெரியில டா... 9 வருஷ ஃப்ரண்ட்ஷிப் டா... கடைசியா நான் அவகிட்டப் பேசுன வரை..." என்றான் செழியன்.

"எப்போ டா கடைசியாப் பேசுன?"

"ஐந்து வருசத்துக்கு முன்னாடி..." என்றவனுக்கு என்ன பதிலுரைப்பது என்று தெரியாமல் யோசித்தவன்,

"டேய் அட்லீஸ்ட்...?" என்று தொடங்கும் வேளையில்,

"ஹே இளா இந்தா குவா ஜூஸ் குடிப்பயில்ல? சாரி கேட்காம வாங்கிட்டேன்..." என்றபடியே வந்தாள் ஜென்னி.

"இட்ஸ் ஓகே. பரவாயில்ல..." என்று வாங்கியவனிடம்,

"ஹே இன்னும் மூணு மணிநேரம் தான் இருக்கு இளா... அடுத்த ஆறு மாசத்துக்கு இதுதான் ப்ளீஸ்...' என்று ஜென்னி இளாவிடம் ஒரு கெஞ்சல் பார்வையைச் செலுத்தியவள் கொஞ்சலாக ஜானைப் பார்க்கவும்

"ஓகே புரியுது. நான் யாருக்கும் கரடியா இருக்க மாட்டேன். ஆனா இந்த குவா ஜூஸ்ஸ மனுஷன் குடிப்பானா? ப்பா..." என்று முகம் சுளித்தவன்,"பை மச்சான். டேக் கேர். போயிட்டு எனக்கு போன் பண்ணு..." என்று ஜகா வாங்க,

ஜானோ,"டேய் இளா நில்லுடா...." என கூறும் முன்னே செழியன் விடைபெற்றான். என்ன தான் கிண்டலாக பதினேழாவது கேர்ள் ஃப்ரண்ட் என்று சொன்னாலும் இதுதான் அவனுடைய இரண்டாவது கேர்ள் ஃப்ரண்ட் என்றும் அவன் எவ்வளவு சீரியஸாக இந்த ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறான் என்று அறிந்தவன் மேலும் கொஞ்சம் டிப்ளமேட்டிக்காக அவர்களுக்கான பிரைவஸியை கெடுக்க விரும்பாது வெளியேறினான். ஆனாலும் அவன் கடைசியாகச் சொன்ன,'அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சிடா' என்ற ஜானின் வார்த்தையை ஆமோதித்தப் படியே "ஆம் அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அரௌண்ட் 8 மந்த்ஸ் எகோ... இப்போ எங்க இருக்காளோ?எப்படி இருக்காளோ? சந்தோசமா இருக்கனும் கடவுளே!" என்று சொல்லி திரும்பியவுடன் தூரத்தில் ஒரு உருவம் தனியாக உட்கார்ந்து இருப்பதைக் கண்டு மனம் ஏதோ அது அவளாகத் தான் இருக்குமோ என்று நினைக்க,"ச்சீ... அவ எப்படி இங்க? அதும் இப்போ? பார்க்குமிடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி' என்ற வரி நினைவுக்கு வர ஒரு ஹேப்பி சேட் மொமெண்ட் அவனை ஆட்கொண்டது.

ஆனால் அருகில் செல்ல செல்ல உதடு அவனையும் அறியாமல்,"ஆ... ஆதி... ஆதிரை... இவள் எப்படி இங்க?" என்றவன் அருகில் நின்றதைக்கூட உணராது இருந்தவளிடம், "ஆதி... ஆதிரா..." என பலமுறை அழைத்தும் திரும்பாது இருந்தவளைக் கண்டதும் மனம் ஏனோ பதைபதைத்தது. தன் கரத்தை அவள் தோள்பட்டையில் மீது அழுத்தியதும், ஒரு கணம் நிமிர்ந்து அவனைப் பார்த்து உணர்வெதுமின்றி மீண்டும் தரையை நோக்கினாள் அவள்.

அவளின் அந்த ஒற்றைப் பார்வை ஏனோ அவனிடம் லட்சம்கோடி உணர்வுகளை வெளிக்காட்டியது. 'ஐயோ இதென்ன கோலம்? இவளுக்கு என்ன ஆச்சு? என்னை அடையாளம் தெரியவில்லையா? இல்லை தெரிந்துகொண்டும் என் மீதுள்ள கோவத்தின் காரணமாய் நிராகரிக்கிறாளோ? எதுவாயினும் சரி' என்று யோசித்தவன் இன்னொரு முறை ஆதிரா என்று தோளில் கைவைக்க, திரும்பியவள் ஒரு கணம் யோசித்து ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒருசேரவே கலந்த உணர்வையே மீண்டும் காட்டினாள்.

ஏனோ அவள் பார்வையும் அவள் அமர்ந்திருந்த தொனியும் அவள் கையில் கிடந்த பாஸ்போர்ட்டும் அவளுக்கு ஏதோ தவறாய் நடந்ததையே அவனுக்கு ஆருடமாகியது. தாயைப் பிரிந்த குழந்தையைப் போல திடீரென அவள் அவன் இடையை இறுக்கி அணைக்க, செய்வதறியாது விழித்தான் இளஞ்செழியன்! (தொடரும்...)


இது எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல் கதை. ஏனெனில் நான் முதன்முதலில் எழுத ஆரமித்த கதை இது. என்னதான் கைத்தலம் பற்ற என் முதல் ஸ்க்ரிப்ட்டாக இருப்பினும் இதுவே நான் முதன்முதலில் எழுதிய கதை. அதை துளியும் மாற்றாமல் தருகிறேன். கொஞ்சம் மெலோட்ராமா தான். ஆனால் மிகவும் வலுவான ஒரு கதை. வாழ்க்கையின் பெரிய பெரிய சந்தோசங்கள் எல்லாம் நமக்குப் பிடித்தவரிடம் நாம் செலவழிக்கும் சின்ன சின்ன நிகழ்வுகளில் தான் ஒளிந்திருக்கிறது என்ற கருவை மையமாகக் கொண்ட ஒரு கதை இது. திஸ் ஈஸ் மை க்ளோஸ் டூ ஹார்ட் ஸ்டோரி. ப்ளீஸ் அட்ஜஸ்ட்!
 
Last edited:
செழியன் ஆதிரா... ஓகே குட்???
ஆதிராவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா ???
thank you... and yes she got married... இது கொஞ்சம் காம்ப்ளெக்ஸ் ஆன கதை... ஒன்பது பத்து பதினோராம் அத்தியாயத்தில் எல்லாம் விளங்கும்... இங்க இக்கதையை எப்படி எடுத்துப்பாங்கனு நினைக்கும் போது எனக்கும் சின்ன நெர்வஸ் இருக்கு??? இருந்தாலும் பார்ப்போம்... நம்பிக்கை அதானே எல்லாம்?
 
உங்களுடைய "இந்த இரவு
இப்படியே தொடரட்டுமே"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பிரவீன்ராஜ் தம்பி
 
Last edited:
first , lots of thanks to you...
epi format change panni koduthatharkku...
next.....unkalukku close to heart a irukkum kadhai...
engalukkum irukkum ena nambukiraen..
காம்ப்ளக்ஸ், கதை தான் வேணும்....
நீங்க எப்படி கொடுக்கப் போறீங்கன்னு , ஆவலோடு வேயிட்டீங்..
வாழ்த்துக்கள் ப்ரவீன்... :giggle:
 
Top