Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயம் கேட்கும் காதல் 13

Advertisement

Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
இதயம் கேட்கும் காதல்….

பகுதி 13

கல்யாண நாள் நெருங்க நெருங்க, இதழினிக்கோ, தன் மனதில் எழும் பதட்டமும், தவிப்பும் செழியனின் மீதான நேசத்தை அறிய வைக்க, இத்தகைய சூழலில் தான் அறிந்து கொண்ட நேசத்தை வெளிப்படுத்தவும் முடியாது, அதன் தாக்கத்தை தாங்கவும் இயலாது இருந்தவள், தன் வீட்டில் உள்ளவரிடமிருந்தும் ஒதுங்கி, எதிலும் அக்கரை இல்லாது தவித்தாள்.

கல்யாண பத்திரிக்கை முதல் ஜவுளி வரை எல்லாவற்றையும் தேர்ந்தெடுக்கவென அழைத்த மதுவின் அழைப்பை இயல்பான கூச்சமாய் காட்டி மறுத்தவளை மேலும் வற்புறுத்தாமல், அனைத்தும் செழியனின் ஆசைபடி தேர்ந்தெடுக்கப்பட்டது.

மது வேறு, தங்கள் வீட்டு மருமகள் இனியும் மதி கார்மெண்ட்ஸ்ஸில் வேலைக்காரியாய் வருவது பிடிக்காமல், திருமணம் முடிந்து அந்த கம்பெனி முதலாளியாய் அங்கு வந்தால் போதும் என வந்து சொல்லி சென்று விட, வேலைக்கும் செல்லாததால் வீட்டிலேயே அடைந்து, தனக்கு தானே குழப்பி தவித்தாள் இதழினி..

இதழினியின் முகத்தில் திருமணத்திற்கான எந்த கனவும், ஆசையும் இல்லாது வெறுமாய் இருப்பதை கவனித்த அபிதா, 'செழியன் மாமா தான் மாப்பிள்ளைன்னு தெரியாததால அக்கா இப்படி இருக்கா? இல்ல நம்மள விட்டு பிரிய போறோமின்னு கவலைல இப்படி இருக்கா?' என்று யோசித்தவள்,

முதல் கேள்விக்கு விடையாய், செழியனின் சொல்லை மீறாது, அவன் தான் மாப்பிள்ளை என்பதை காட்டி கொடுக்கும் விதமாய், திருமண அழைப்பிதழை இதழினியிடம் கொடுத்தவள், "அக்கா, இந்த பத்திரிக்கையில, உன் போட்டோவும், மாமா போட்டோவும் போட்டிருக்காங்க. உங்க ஃபேரை இதுல பார்க்கும் போதே சும்மா அள்ளுது.. நேருல நீங்க ஒண்ணா நிக்கும் போது எப்படி இருக்கும் தெரியுமா?" என்றிட, தனது கவலையை, மனதை மறைத்து, மெல்லிய சிரிப்பை பரிசாக்கிய இதழினி,

"நீ சொன்னா சரியா தான்டா இருக்கும்" என்று அதை பெற்றுக்கொண்டு சொன்னவளுக்கு, அதனை பார்க்க மட்டும் மனமே வரவில்லை.


பத்திரிக்கையை கொடுத்த மறுநாளும் இதழினி முகம் தெளியாது இருக்க, தங்களை நினைத்து தான், அவளின் கவலை என்று உறுதியாய் நினைத்தவள், 'திருமணம் முடிந்தால் எல்லாம் சரியாகிவிடும்' என்ற நம்பிக்கையில் தனது வேலையை பார்க்க சென்றாள். அனுபவம் இல்லா பிள்ளையாயிற்றே அவளும்..

நாளும் குறைவாக இருக்க, அடுத்து அடுத்து வேலையும் இருக்க, யாராலும் எதையும் நின்று நிதானமாய் செய்ய முடியவில்லை.

இதில் அபிதாவிற்கும், வினிதாவிற்கும் பரிச்சை திருமணத்தை தொடர்ந்தே இருக்க, அவர்களுக்கு படிப்பும், வீட்டில் சில வேலைகளை முடிக்கவுமே சரியாக இருந்தது நேரம்.

அதனால், முதன் முதலாய் ஆனந்த் மாரியப்பனுக்கு உதவியாய் வேலைகளை பகிர்ந்து கொண்டான். ஆனாலும் அவனின் செயல்களில், சிறு விலகல் இருந்து கொண்டே தான் இருந்தது.

அந்த விலகலும் திருமணத்திற்கு ஒருநாள் முன்பு வரையே நீடித்தது. அவனுக்கும் குடும்பம், உறவு என்பதையெல்லாம் உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம் வந்தது விதி வசத்தால்...

ஆனந்த் வேலை செய்த இடத்தில் இருந்த ஒரு பெண் தற்கொலைக்கு முயல, அதை தொடர்ந்து அந்த பெண்ணின் உறவினர்கள் விசாரித்த வரையில், அங்கு ஆனந்தால் மட்டுமே சில சிக்கல்கள் பெண்களுக்கு வந்ததாய், ஏற்கனவே மாலதி உள்பட இதழினியிடம் சொன்ன சிலர், அவர்களிடமும் சொல்ல, அதையே காரணமென கருதியவர்கள், நேராக போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க, விசாரனை கைதியாய் அடுத்த ஒரு மணி நேரத்தில் காவல் நிலையத்தில் இருந்தான் ஆனந்த்.

கல்யாண வேலையாய் வெளியே வந்தவனை, அங்கிருந்தே அழைத்து சென்றதால் ஆனந்தால் வீட்டிற்கு அழைத்து தகவல் தரஇயலாது போக, தன்னந்தனி ஆளாய் அங்கு இருப்பவர்களுக்கு நடுவே பயத்தால் நடுங்கி போய் நின்றிருந்தான்.

அந்த பெண்ணின் உறவினர்கள் வேறு, நன்கு பணம் கொண்டு அங்கே கவனித்திருக்க, அவர்கள் குற்றவாளியாய் அவனை முடிவே செய்து விட்டு, அடுத்து விசாரணையை அதன் போக்கில் ஆரம்பித்தனர். அவன் ஒத்துக்கொண்டதும் FIR போடும் எண்ணத்தில்...

அவர்கள் கேட்ட அடுக்கடுக்கான கேள்வியில் பாதி கேள்விக்கு அர்த்தமே புரியாது விழித்தவனை, அவன் நடிப்பதாக நினைத்து, "இங்க பாருடா தம்பி.. ஒழுங்கா அந்த பொண்ணு மருந்து குடிக்க காரணம், நீ தான்னு ஒத்துக்கோ, இல்லாட்டி நிறைய ரேப் கேஸ் பெண்டிங்ல இருக்கு, அதோட போதை மருந்து கடத்தல் கேஸையும் சேர்த்து போட்டோமின்னு வைய்யி, உன் ஆயுசுக்கும் வெளிய வரவே முடியாது. எப்படி வசதி?" என்றிட சகலமும் பதறி போனது அவனுக்கு...

"சார், சத்தியமா சொல்றேன். தப்பான எந்த எண்ணத்தோட அங்க யார் கூடவும் நான் பேசினதே இல்ல. எனக்கும் அக்கா, தங்கை ன்னு கூட பிறந்த பெண்கள் இருக்காங்க" என்ற ஆனந்தின் பேச்சையும், கண்ணீரையும் கண்டு கொள்ள தான் யாருமில்லை.
 
புகார் அளித்தவர்களோ, "சார், என்ன சார் உக்கார வச்சு விசாரிச்சிட்டு இருக்கீங்க. அங்க எங்க பொண்ணு சாகற அளவுக்கு துணிஞ்சிருக்குன்னா, இவன் எப்படிபட்ட காரியத்தை செஞ்சிருக்கனும். நல்லா நாலு வெளுத்து விடுங்க சார்" என்று கத்தி கலாட்டா செய்ய, ஆனந்தோ பீதியில் உறைந்து போனான்.

"அதும் சரி தான். ஏட்டு, அந்த பையன கொண்டு போய் லாக்கப்ல தள்ளி, ட்ரஸ்ஸ கழட்டுய்யா.." என்றதும்,

"சார், ப்ளீஸ் சார்.. வேணாம் சார்... நா எந்த தப்பும் செய்யல சார்.. இன்னும் ரெண்டு நாள்ல என் அக்காக்கு கல்யாணம் சார்.. நான் தப்பானவன் இல்ல சார்.." என்ற ஆனந்தின் கதறல்களை தூசாக தட்டிவிட்டு, அவனை இழுத்து செல்ல, அவன் மீது கைவைத்த நொடி..

"எக்ஸ்கூயூஸ் மீ" என்ற படி உள்ளே நுழைந்தனர், வக்கீலோடு செழியனும், சந்துருவும்.. செழியனை பார்த்த நொடி, "மாமா..." என்றபடி ஓடி வந்தவனை தாங்கி பிடித்தவன், "ஒன்னுமில்லடா, பயப்படாத. நான் வந்துட்டேனே. காம் டவுன்" என்று அணைத்து, அவன் முதுகை தடவி ஆசுவாசபடுத்தினான், செழியன்.

அதற்குள் அவர்களோடு வந்திருந்த வக்கீல், "இன்ஸ்பெக்டரிடம், சார் சூசைட் அட்டன் பண்ண பொண்ணுக்கு நினைவு திரும்பிடுச்சு. அது தற்கொலை செய்ய முயற்சி செய்ய காரணம், அவங்க வீட்டுல கல்யாண ஏற்பாடு செஞ்சதால தான். அவளுக்கு அவங்க மாமாவ கட்டிக்க ஆசை. அவங்க குடும்ப பிரச்சனையால அதை வெளிய சொல்ல முடியாம இப்படி செஞ்சிருக்கு. அதுக்குள்ள இப்படி அப்பாவி ஒருத்தன அரஸ்ட் பண்ணதும் இல்லாம, அரகென்ட்டா பிகேவ் பண்ண பார்த்திருக்கீங்க. இதுல FIR. போடமலேயே... நாங்க இப்ப கேஸ் மாத்தி கொடுத்தா என்ன ஆகும் தெரியுமில்ல?! உங்க கடமையை பணம் பார்த்து இல்ல சார், மனுஷங்கள பார்த்து செய்ங்க.." என்ற படி ஆனந்தோடு வெளியேறினர்.

தன் வாழ்க்கையில் இது போன்ற நிகழ்வை, இதுவரை சந்தித்தே இராத ஆனந்திற்கு வெளியே வந்தும், பதட்டம் குறைவதாய் இல்லை. அவனின் நடுக்கத்தையும், பதட்டத்தையும் கண்ட செழியன், இப்படியே இவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தால், நடந்த நிகழ்வை அறிந்து இதழினி தவித்து போவாள் என்று நினைத்தவன்,

"ஆனந்த், நீ இப்ப உன் வீட்டுக்கு போக வேணாம். நான் மாமாகிட்ட பேசிடுறேன். நீ போய் நம்ம கார்ல ஏறு" என்றிட, மாமா சொன்ன சொல்லிற்கு மறு சொல் இல்லாது அதனை செய்தான் ஆனந்த்.

மாரியப்பனிடம், தனக்கு உதவியாக ஆனந்தை அழைத்து செல்வதாய் செழியன் கேட்க, மாப்பிள்ளையின் தீவிர விசிறியா, மாட்டேன்... என்றிட போகிறார்.

அடுத்து ஆனந்தோடு அவர்களுக்கு இருக்கும் மற்றொரு பங்களாவிற்கு அழைத்து சென்ற செழியன், சிறிது நேரம் அவன் ஆசுவாச பட வைத்து, அதன் பின்பு மெல்ல பேச்சு கொடுக்க, மனதில் இத்தனை நாளாய் இருந்த ஏக்கமும் தவிப்பும் வெளிவந்தது ஆனந்திடமிருந்து....

ஆனந்த் சிறுவயதிலிருந்தே தாயின் மீது அதித பாசத்தோடு இருந்தவன், அவரின் உடல்நலக்குறைவால் சரியாக அவரிடம் தனது மனது பற்றி பேச முடியாது போனது. அபியும், வினியும் பெண்களாய் இருக்க, அவர்கள் இதழினியின் கட்டுக்குள்ள எளிதில் புகுந்திருந்தனர்.

தாயின் இயலாமையை மனதில் கொண்டு தவித்தவனுக்கு, கொஞ்சம் கொஞ்சமாய் படிப்பில் கவனகுறைவு ஏற்பட துவங்கியது. தாய் இறந்த சமயத்திலாவது தனது அக்கா தனக்கென பார்ப்பாளா?! என்று ஏங்கி நின்ற போது சரியாக வினிதா பெரிய பெண்ணாகி போக, இதழினியின் கவனம் முழுதும் அவள் வசமாகி போனது.

தன்னை நேசிக்கவும், தனக்கென பார்க்கவும் யாருமில்லை என்ற எண்ணத்தில் குடும்பத்தை விட்டு விலக துவங்கியவன், கிடைத்த நட்பில் சுகம் காண துவங்கினான். கம்பெனியில் அவன் விளையாட்டாய் ஒரு நாள் செய்த செயல் இதழினிக்கு கஷ்டத்தை கொடுப்பது தெரிந்ததும், அதனை பிடித்துக்கொண்டு தொடர்ந்துவிட்டான்.

அவனின் நிலையை கவனமாய் கேட்டுக் கொண்டிருந்த செழியன், "ஆனந்த், நீ சின்ன பையன் இல்ல. இத்தனை நாள் உன் மனசுல இருக்கறத இறக்கி வச்சதுக்கு அப்புறம், இப்ப தெளிவா யோசிக்க முடியும் உன்னால.. சோ, நான் சொல்றது நல்லா புரியுமின்னு நினைக்கிறேன்.

உங்க அம்மா படுக்கையில விழுகிற வரைக்கும், அவங்க உன்னை பார்த்துக்கிட்டாங்கன்னு சொன்னையே, அப்ப, அந்த நேரத்துல உங்க அக்காவ, தங்கச்சிங்கள யார் பார்த்துக்கிட்டா.. உங்க அப்பாவா..? என்றதும்,

"இல்ல மாமா, அப்ப அக்கா தான் அவங்கள பார்த்துக்கிட்டா.." என்று சொல்லும் போதே, செழியன் சொல்ல வரும் விசயம் புரிய துவங்க, செழியன் வேலை சுலபமானது.

"சோ, உங்க அம்மா இருந்த போதும், இறந்த போதும் தங்களை பார்த்துக்கிட்ட அக்காகிட்ட அவங்க ஒட்டிக்கிட்டதும், இதுவரையிலும் பார்த்துகிட்டவ அவங்கள ஆதரிச்சதும் தப்பா ஆனந்த்?!" என்றதும், வார்த்தையால் பதில் சொல்லாது, மறுப்பாய் தலையசைத்தான் ஆனந்த்.
 
"எல்லா நேரத்திலையும் உங்க அக்கா, உங்க எல்லாருக்கும் தாயா உங்க கஷ்ட நஷ்டத்துல கூட நின்னிருக்கா. ஆனா அவளுக்கு ஆதரவா, ஆறுதலா நீங்க யாராச்சும் கூட இருந்திருக்கீங்களா?! அப்படிபட்டவ மனசு வேதனைபட்டத பார்த்து சந்தோஷப்பட்டது சரிங்கறையா ஆனந்த்.." என்ற செழியனின் கேள்வி சாட்டையாய் மாறி ஆனந்த் பதம் பார்க்க,

"தப்பு தான் மாமா. அக்காவோட குணம் தெருஞ்சும், வீட்டோட சூழ்நிலை புருஞ்சும் அவங்களுக்கு துணை நிக்காம அவங்கள கஷ்டப்படுத்தி பார்த்தது ரொம்ப தப்பு மாமா.. நா செஞ்ச தப்பை உணர்ந்திட்டேன், மாமா. அக்கா என்னை மன்னிச்சிடுவா தானே மாமா...." என்று சிறு பிள்ளையாய் மாறி, அழுகையோடு கேட்பவனின் நிலை நன்கு புரிந்த செழியன்,

"ஆனந்த், உங்க அக்கா அன்னை தெரசா மாதிரி... எல்லாக்கும் நல்லது செய்யணுமின்னு மட்டுமே நினைக்கற ஆள். அதனால, நீ போய் அக்கான்னு கூப்பிட்ட கூட வேணாம், அவ பக்கம் போய் நின்னா போதும், அவளே உன் மனச புருஞ்சுப்பா.. மனச போட்டு வருத்திக்காம, சாப்பிட்டு போய் ரூம்ல தூங்கு.. காலைல வீட்டுக்கு போலாம்" என்று சொன்னபடி, அவனைசாப்பிட வைத்து, தூங்க அனுப்பும் வரை, அங்கே சந்துரு என்ற ஜீவன் இருப்பதே தெரியாது இருந்த செழியன்,

"டேய் மச்சி, நீ இன்னும் இங்க தான் இருக்கியா. வீட்டுக்கு போகல?!" என்றதும்,

"ஏன்டா எரும... மச்சினன் மாட்டியிருக்கற விசயத்தை, கம்பெனியில அவங்க விசாரிச்சத வச்சு தெருஞ்சு, சொல்லி உன்னை வரவச்சு, உங்க கூடவே சுத்திட்டு இருக்கேன். இவ்வளவு நேரம் அவனுக்கு நீ கொடுத்த அட்வைஸ் மழையால, என் காதுல வந்த ரத்ததை துடைச்சிட்டு உக்காந்திருந்தா, இதுவும் கேட்ப, இன்னுமும் கேட்படா.." என்று செழியனை அடிக்க வர,

"டேய், வேணா டா, ரெண்டு நாள்ல கல்யாண செய்துக்கு போற மாப்பிள்ளை. ஏதாவது ஏடாகூடமா அடிச்சிட போற.." என்று சிரிப்போடு ஓடிட,

அவனை துறத்தும் சாக்கில் ஓடினாலும், செழியனின் விளையாட்டு தனத்தை மட்டுமே கண்டிருந்த சந்துருவிற்கு, இந்த அளவு பொறுப்போடு நடந்து கொள்பவனை நினைத்து பெருமையும் உண்டானது மறுக்க இயலா உண்மை...
 
Top