Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயம் கேட்கும் காதல் - எபிலாக்

Advertisement

Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
ஐந்து வருடங்களுக்கு பிறகு..

"மணவறையில ஐயர் கேட்டதெல்லாம் கரெக்ட்டா எடுத்து கொடுத்தாச்சா ஆனந்த்?" என்ற தனது மூத்த மாமன் செழியனின் கேள்விக்கு,

"அதெல்லாம் சரியா கொடுத்தாச்சு மாமா" என்ற ஆனந்திடம்,

"அப்ப போய் வரவேற்புல நில்லு, ஆனந்த். வந்தவங்கள ரிசீவ் பண்ணி.. நல்லபடியா கவனிக்க வேண்டியது, உன்னோட பொறுப்பு சரியா?!" என்ற செழியனிடம்,

"ஓகே மாமா. நான் பார்த்துக்கறேன்" என்ற படி, வேகமாய் மண்டபத்தின் நுழைவாயிலுக்கு சென்றவனின் நடவடிக்கையில் தான் எத்தனை எத்தனை மாற்றம்.

வீட்டுக்கு அடங்காமல்.. பார்க்கும் பெண்களிடம் வம்பு வளர்த்து, கேலி கிண்டலால் தன் அக்கா, தங்கைகளின் மனதை வருத்தி திரிந்தவன், இப்போது அவள் அக்கா நிர்வகிக்கும் அதே மதி கார்மெண்ட்ஸ்ஸில் மேனேஜர் பதிவில் இருப்பது என்பது எவ்வளவு பெருமை..

இடையில் விட்ட கல்வியையும் தொடர்ந்து, தொழிலையும் நன்கு கற்றிருந்தும், தனியாக ஆரம்பிக்காமல், தன் அக்காவிற்கு உதவியாய் அங்கேயே வேலை பார்த்து.. வினிதா ஆசை பட்டது போன்று டாக்டருக்கு படிக்க வைத்து, இப்போது அவளுக்கு திருமணம் செய்யும் வரை வளர்ந்திருப்பதை நினைத்து, பெருமையாய் நின்றிருந்தவனின் அருகே வந்த, தனது நான்கு வயது வாரிசு.. ஆதவனின் தொடுகையில் நிகழ்காலத்திற்கு வர,

"செல்லம். என்னடா நீ மட்டும் வர்ற எங்கே அம்மா?!" என்றதும்..

"அதோ, அங்க இருக்காங்க.. அம்மா " என்று குழந்தை காட்டிய திசையை பார்க்க…

மணமகளின் அக்காவாய்.. மூத்த மகளாய், பொறுப்பாக ஓடியாடி வந்தோரை வரவேற்று, அவர்களை கவனித்து கொண்டிருந்த மனையாளின் மீது, இன்றும் அவனின் காதல் பல்மடங்காய் பெருகி தான் இருக்கிறது.

"அப்பா, சந்துப்பா உங்கள கூப்பிட்டாங்க. அதான் நான் வந்தேன்" என்ற மகனின் பேச்சில் மனைவியிடமிருந்து பார்வையை விலக்கியவன்,

தனது மகனுடன் சந்துரு இருக்கும் இடத்திற்கு செல்ல, அவனோ.. தனது மூன்று வயது பெண், ஆதிராவோடு மல்லு கட்டிக்கொண்டிருந்தான்.

செழியன், "சகல.. எதுக்குடா கூப்பிட்ட???"

"சகல. சத்தியமா முடியலடா. அவள மாதிரியே பொண்ணு வேணுமின்னு ஆசை பட்டதுக்கு, அதே மாதிரியே ஒரு அராத்துவ பெத்து குடுத்துட்டா. நல்லா வச்சு செய்யுது இந்த வாலூ" என தன் நெற்றியில் வழிந்த நீரை துடைத்து கொண்டு நிமிர்ந்தவன் அப்படியே பேந்த பேந்த விழித்தான்.

"என்னாச்சு சகல, ஏன் இப்படி பேயை கண்ட மாதிரி முழிக்கற?" என்ற செழியனுக்கு, தன் கண்களால் அவனின் பின்பக்கம் காட்ட, அங்கே கோபமாய் நின்றிருந்தாள் அபிதா.

அவளின் கோபத்தை பார்த்ததுமே தெரிந்து விட்டது, அவளை பற்றி சந்துரு சொன்னதை கேட்டு விட்டாள் என்பது..

கண்களில் குறும்பு மின்ன, "ஆதிராம்மா, வாடா நம்ம பக்கத்து ரூமுல போய் விளையாடலாம். இங்க உங்க அப்பாக்கு செம கவனிப்பு நடக்க போகுது" என்ற செழியனிடம்,

"ஓகே அப்பா" என தாவி சென்ற மகளை பார்த்தவன் மனமோ, 'அடேய், நல்லா சிக்கி நிக்கற எனக்கு, எப்படியோ தப்பிக்க கிடச்ச துடுப்பா பொண்ணு இருப்பான்னு பார்த்தா, அதுக்கும் சேர்த்து வச்சிட்டையே ஆப்பு. அச்சோ இவ விடற லூக்கு வேற சரியில்லையே!' மரண பிதியில் மனைவியை பார்த்தான்.

அனைவரும் வெளியேறிய பின் கதவை அடைத்த அபி, "எப்படி.. எப்படி.. நான் அராத்தா? அராத்துன்னா எப்படி இருப்பான்னு காட்டவா?!" என்ற படி, புடவை முந்தானையை தூக்கி இடுப்பில் சொருக,

அவளின் செயலில், அவளின் வீக் பாயிண்ட் சட்டென நினைவுக்கு வர, தன்னை தற்காத்து கொள்ள வேண்டி அவளை நெருங்கியவன், அவளின் இடுப்பில் கை வைக்க.. துள்ளி குதித்தவள்,

"சந்துரு வேணாம். தொடாத.. அப்புறம் கத்திடுவேன். மண்டபத்தில நிறைய பேர் இருக்காங்க. மானம் போயிடும்" என அவள் பேச, பேச அவன் மீண்டும் மீண்டும் அவளை தீண்ட, ஒரு கட்டத்தில் அவளின் சத்தம் தேய்ந்து, அவனுடன் அடங்கியிருந்தாள்.

முகூர்த்த நேரம் நெருங்க, மாரியப்பன், மதிவதனி, சந்திரவதனா மூவரும் தங்கள் பேரன் பேத்தியோடு, முன் வரிசையில் இருக்க, மேடையில் செழியன்.. இதழினி.. ஒரு புறமும், சந்துரு அபிதா ஒரு புறமும் நிற்க.. நடுவே ஆனந்த் இருக்க, தான் விரும்பிய வினிதாவின் கழுத்தில், பெரியோர் அனைவரின் சம்மதத்துடன், பொன் தாலியிட்டு, மனைவியாக்கி கொண்டான் டாக்டர். ஷியாம்.

அனைவரின் இதயமும் கேட்ட காதல் கை சேர்ந்த இந்த தருணத்தோடு, பல்லாண்டு காலம் நிறைவோடு வாழ வாழ்த்துக்களோடு நாமும் விடைபெறுவோம்.

சுபம்.


ஹாய் ப்ரண்ட்ஸ்,

இதயம் கேட்கும் காதல்.. என்ற கதையோடு பயணித்த அனைவருக்கும் நன்றி.

கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கும், அளித்த கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. விரைவில் அடுத்த கதையோடு வருகிறேன்.
 
Top