Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆலம் விழுதாக ஆசைகள் - 8

Advertisement

sharanyaa satyanarayanan

Active member
Member
ஆலம் விழுதாக ஆசைகள் - 8

விடிந்து பல மணி நேரம் ஆகியும் , படுக்கையை விட்டு எழாமல் யோசனையிலே இருந்தாள் துர்வா .
' நடக்கும் பிரெச்சனையை எப்படி தீர்ப்பது' என்ற கேள்வியே அவளை வண்டாய் குடைந்து கொண்டிருந்தது. பிரெச்சனையை தீர்க்க இவளின் சம்மதம் போதும். ஆனால் அது எப்படி தன்னால் முடியும் என்றவாறு இரண்டு நாட்கள் முன் தன் வீட்டில் நடந்ததை நினைத்து பார்க்க தொடங்கினாள்.

" எனக்கு இப்போ கல்யாணம் வேணாம் , அப்படி ராகவிக்கு இந்த வருடமே கல்யாணம் பண்ணனும்னா , நீங்க வேற மாப்பிள்ளை பாருங்க " என்றவனிடம் சிவகாமி " கல்யாணம் வேண்டாம்னு நிறுத்துறது மட்டும் தான் உன் உரிமை, அவங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்குறத பத்தி நீ பேசாத, உனக்கு வேணும்னா கட்டுறதுக்கும் வேண்டாம்னா விளக்குறடுக்கும், பொண்ணுங்க மனசு என்ன பொம்மையா ?,பொம்பளப்புள்ள சாபம் நல்லது இல்லடா , நம்ம வீட்லையும் ஒரு பொண்ணு இருக்கு நினைவு வச்சுக்க " என்றவரின் கேள்விக்கு "நம்ம வீட்ல பொண்ணு இருக்குற நினைப்பு இருக்குறதால தான், இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்றேன் " என்றவனை புரியாத பார்வை பார்த்தார்கள்.

சக்ரவர்தியோ " விஷ்வா பொண்ணு கல்யாணம் எடுத்தோம் கவிழ்த்தோம்னு பண்ண முடியாது, உனக்கும் ராகவிக்கும் முடியட்டும் , அப்படியே துர்வாக்கும் வரன் பார்க்க ஆரம்பிக்கலாம்."

இதை கேட்ட துர்வா அதிர்ச்சியில் உறைய, அதை களைத்தான் விஷ்வா " இல்ல ப்பா, துர்வாக்கு கல்யாணம் முடிஞ்ச அடுத்த முஹுர்த்தத்துல , நான் ராகவி கழுத்துல தாலி கட்டுறேன்", என்றவனை புரியாமல் பார்த்தாள் துர்வா.

விஷ்வாவோ தனிமையில் சக்ரவர்த்தியிடம் ," இப்போ நாம துர்வா கல்யாணத்த பண்ணலேன்னா, பின்னால அவளை சம்மதிக்க வைக்குறது கஷ்டம் , துர்வாக்கு மட்டும் இல்ல சாரா , சாந்தினியும் சேத்து தான் சொல்றேன் " என்றவனை அதிர்ச்சியை பார்த்தனர் பெற்றவர்கள்.

இதை கேட்ட சிவகாமியும் சக்கரவர்த்தியும் , உடனடியாக சாந்தினி மற்றும் சாரா குடும்பத்தினருடன் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டினார் .

விஷ்வா தங்களிடம் கூறியதை மற்றவர்க்கு கூறிய சக்ரவர்த்தி , மேற்கொண்டு செய்ய வேண்டியதை ஆலோசிக்க தொடங்கினார் . இறுதியில் விஷ்வாவின் வழியில் சென்று மூவரையும் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கவும், அதற்கு தகுந்த வரன்களை பார்க்க ஆரம்பிப்பதாகவும் முடிவெடுத்தனர்.

அன்று விஷ்வா திருமணத்திற்கு மறுத்த பின் , தன்னிடம் யாரும் அதைபற்றி பேசவில்லை என்பதை உணர்ந்த துர்வா , இதற்கு சீக்கிரம் முடிவுகட்ட வேண்டும் என்றவாறு விஷ்வாவின் அறையை நோக்கி சென்றால்.

தன் அறையினுள்ளே நுழைந்தவளை பார்த்த விஷ்வா எதுவும் பேசாமல் துர்வவையே பார்த்து கொண்டிருந்தான். அவன் பேசப்போவதில்லை என்பதை உணர்ந்தவள் " ஏன் விஷ்வா அப்படி சொன்ன?"
" எப்படி சொன்னேன்?" , விஷ்வா.
" அதான் சொன்னியே எனக்கு கல்யாணம் முடிஞ்சு தான் நீ ராகவிய கட்டிப்பேனு, அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம், ராகவியும் நீயும் லவ் பண்றீங்க தான , அப்ப நீ கல்யாணம் பண்றதுல உனக்கென்ன ப்ரொப்லெம் ?" . இரண்டு நாளாய் மனதை குடைந்த கேள்விகளை விஷ்வாவிடம் கேட்டுவிட்டாள் .

அவளை பார்த்த விஷ்வா " நான் தப்பா ஏதும் சொல்லலையே ,எல்லார் வீட்லயும் நடக்குற மாதிரி தங்கைக்கு கல்யாணம் ஆனாதும் பண்ணிக்கறேன்னு தான சொன்னேன்".
துர்வா " எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் ".
" சரி, நீ எப்போ பண்றியோ , அதுக்கப்பறம் நான் பண்ணிக்கறேன் " என்றான் விஷ்வா.
" இல்ல நீ இப்போ பண்ணிக்க, அப்பறம் நான் கண்டிப்பா கல்யாணம் செஞ்சுக்கறேன் " என்றவளிடம் விஷ்வா," நீ மெதுவா பண்ணிக்கோ நானும் வெயிட் பண்றேன் " என்றான் . " ஹே லூசு ராகவி வீட்ல அது வர வெயிட் பண்ணமாட்டாங்க, ஒழுங்கா மேரேச்சுக்கு ஒகே சொல்லு " என்றவளுக்கு பதிலாய் " வெயிட் பண்ணாட்டி வேற மாப்ள பார்க்கட்டும் " இலகுவாக முடித்தான் விஷ்வா.
" ராகவி பாவம் விஷ்வா, அவளுக்காக நீ மேரேச் பண்ணிக்க,நான் கண்டிப்பா ஒரு வருஷத்துக்குள்ள மேரேச் பண்ணிக்கறேன் " என்று சொன்னவளை ஆழமாய் பார்த்தான் விஷ்வா.
" உக்காரு துர்வா " என்றான் விஸ்வா .
விஷ்வாவின் படுக்கையில் அமர்ந்தவளிடம் , " உனக்கு ஏன் கல்யாணம் வேண்டாம்?" என்று கேட்டான்.
" நா எப்போ டா வேண்டாம்னு சொன்னேன், இப்போ வேண்டாம்னு தான சொல்றேன் " என்றவளிடம் " அதான் ஏன் வேணாம் , நீ சின்ன புள்ள இல்ல 26 வயசு,மேரேச்க்கு கரெக்ட் ஏஜ் ". என்றவனுக்கு பதில் சொல்ல முடியாமல் முழித்தாள் துர்வா . விஷ்வாவே பதிலும் சொன்னான்," சாந்தினி, சாரா கல்யாணத்துக்கு சம்மதிச்சா உனக்கு ஓகே வா?". " அவங்க சம்மதிக்க மாட்டாங்க " எனறாவளிடம் " நான் உனக்கு மட்டும் இல்ல சாந்தினியும் சாராவையும் சேத்து தான் சொன்னேன், உங்க மூணு பேருக்கும் கல்யாணம் பண்ண அடுத்த முஹுர்த்தத்துல கல்யாணம் பண்ணிக்கறேன் ". என்றவனை முறைத்து பார்த்தாள் துர்வா .

" சாராவையும் சாந்தினியையும் வர சொல்லு நான் பேசணும் ". என்றவன் கையில் இருக்கும் கணக்குகளை கணினியில் பதிந்துகொன்டே மற்ற இருவருக்கும் காத்திருக்க ஆரம்பித்தான் .

அங்கே சாந்தினியும் சாராவும் வீட்டில் தங்களுக்கு தெரியாமல் எதுவோ நடப்பதுபோலவே தோன்ற , விஷ்வா மற்றும் துர்வாவின் அழைப்பிற்காக காத்துக்கொண்டிருந்தனர். அவர்களின் நினைப்ப பொய் ஆக்காமல் இருவரையும் துர்வா விஷ்வாவின் அறைக்கு அழைத்திருந்தாள் .

விஷ்வாவின் அறைக்கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்த சாராவை படுக்கையில் அமர்ந்திருந்த துர்வா , சாந்தினியோடு அவர்கள் எதிரில் அமர்ந்திருந்த விஷ்வாவும் தலையசைப்புடன் வரவேற்றனர். அனைவரின் அமைதியும் விஷயம் பெரியது என்று ஊகித்த சாரா சாந்தினியை பார்க்க அவள் தனக்கு தெரியாது என்பதுபோல் தோலை குலுக்கினாள்.

மூவரையும் பார்த்த விஷ்வா வீட்டில்நடக்கும் விஷயத்தை சொல்லிவிட்டு " உங்க மூணு பேருக்கும் கல்யாணம் பண்றதுல என்ன பிரச்சனை " நேரடியாக கேட்டான் .
" மூணு பேருக்கும் ஒண்ணா மாப்ள பார்த்து , ஒரே மேடையில் கல்யாணம் பண்ணிக்கறேங்களா?" என்றவனின் வார்த்தையில் திகைத்து பார்த்தனர் தோழிகள்.

இதை கேட்டுக்கொண்டிருந்த துர்வா " சரி நாங்க கல்யாணம் பண்ணிக்கறோம், ஆனா எங்கள்ட சில கண்டிஷன்ஸ் இருக்கு , அதுக்கு நீ ஒகே சொன்னா கல்யாணத்துக்கு சம்மதிக்கறோம் ". என்றவளை அதிர்ச்சியாய் பார்த்தனர் சாந்தினியும் சாராவும் .

ஒரு முடிவுக்கு வந்த விஷ்வா ஆமோதிப்பாய் தலை அசைத்தான். துர்வா தங்கள் நிபந்தனைகளை சொல்ல தொடங்கினாள், அவளை தடுக்கும் வழி தெரியாமல் தவித்தாள் சாந்தினி, அதையே அமைதியுடன் கவனித்து வந்தாள் சாரா.

தனது தங்கையின் நிபந்தனைகளை கேட்ட விஷ்வாவிற்கு கவலையில் தலைவலி வின் வின் என்று தெறிக்க தொடங்கியது.

துர்வாவின் நிபந்தனை என்னவாக இருக்கும்?

தொடரும்.....
 
Top