Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆலம் விழுதாக ஆசைகள் - 5

Advertisement

sharanyaa satyanarayanan

Active member
Member
ஆலம் விழுதாக ஆசைகள் - 5

காலை சலசலபில். மதுரை ரயில் நிலையம் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது, ரயில் நிலையத்தை விட்டு வெளியேறி ஒரு வாடகை டாக்ஸியில் தங்கள் உடமைகளை ஏற்றி கொண்டிருந்தனர் சிவாவும் , ஹரியும். அந்த கவலை தனக்கில்லை என்று டாக்ஸியின் பின் இருக்கையில் ஏரி அமர்ந்து கொண்டான் ஆதி. எல்லாவற்றையும் ஏற்றி கொண்டு கிராமத்தை நோக்கி பயணத்தை தொடர்ந்தனர்.

இவர்கள் காரில் எரிய அதே வேலையில் விஷ்வாவும் , சாந்தினியின் தம்பி கண்ணனும், துர்வா & கோ உடன் புறப்பட்டனர்.

வயல்வெளியோடு தென்னை மரமும், காற்றில் கீதமாய் வரும் குயிலோசையும், மனதை இதமாக்க, முதல் முறையாக ஹரி தான் இங்கு வந்ததை எண்ணி சந்தோசம் கொண்டான்.

இதை ரசிக்கும் மனநிலையில் ஆதி இலைபோல," திருவிழா என்னைக்கு மா? என்ன பண்ணுவாங்க?" என்றவாறு காவிரியுடன் கலகலத்துகொன்டே வந்தான். சிவா ஹரியிடம் தன கிராமத்து நினைவுகளை விவரித்து கொன்டே வந்தான். மொத்தத்தில் இந்த கார் பயணம் மனதிற்கு புத்துணர்ச்சியை கொடுத்தது.

தங்கள் வீட்டை அடைந்த விஷ்வா, காரை நிறுத்துவதற்குள் வெளியே வந்த பெற்றோர்களை பார்த்து புருவம் உயர்த்த, அதை கண்டுகொள்ளாமல் பெற்றோர் கூட்டம் தங்கள் மகள்களிடம் வளவளத்துகொன்டே உள்ளே செல்ல, இதை பார்த்த கண்ணன். என்ன அண்ணனே வந்தாங்க மூணுபேரையும் கூப்பிட்டு உள்ள போய்ட்டாங்க, அப்போ இந்த பையெல்லாம் யார் சுமக்குறது?" என்றவனிடம் " வேற யாரு நாமதான் " என்றவாறு பைகளுடன் உள்ளெ வந்தவனை பார்த்த துர்வா " கை வசம் நல்ல தொழில் இருக்கு போலியே " என்றவளை முறைத்தவாறே தன் அன்னையிடம் " மூணு குரங்கையும் கூப்பிட்டு வரதுக்குள்ள என் உயிரே போச்சு, போய் ஸ்டராங்கா ஒரு காபி போடுங்க பார்ப்போம் " என்றவனை முறைத்த அந்த மூன்று குரங்குகளும் விஷ்வாவை தாக்க தயாராக , விஷ்வாவின் துணைக்கு தயாரானது கண்ணன் மற்றும் ப்ரியாவின் அதிரடிப்படை. " இப்போதான் திருவிழா கலையே நாம வீட்டுக்கு வந்துருக்கு " என்றவர்களின் குரலிலும் மகிழ்ச்சியே நிறைந்திருந்தது .

தங்கள் வீட்டிற்குள் நுழைந்த சிவா , ஐந்து வருடம் கழித்து நுழையும் வீட்டை ஆசையாக பார்த்தான். தான் பிறந்த வீடு, தனக்கு ஏதும் இல்லை என்றபோது தாய் மடியாய் தாங்கிய வீடு, தனக்கு தன்னம்பிக்கையை தத்துக்குடுத்த வீடு. தன் மகிழ்ச்சியையும் வெறுப்பையும் சரிசமமாக பார்த்த வீடு. தாயுடனும் தம்பியுடனும் விடுமுறைக்கு தாத்தா பாட்டி வீட்டிற்கு வரும் நினைவு. தாத்தாவின் கையை பிடித்து உலா வந்த நினைவு. பாட்டியின் மீன்குழம்புக்காக சமையலறை வாயிலிலேயே தவம் கிடந்த நினைவு. தாத்தா பாட்டியை ஒரே நாளில் விபத்துக்கு பறிகொடுத்து கதறி துடித்த நினைவு. கடைசியாய் போக்கிடம் இல்லாமல் தாய், தம்பியுடன் இதே வீட்டிற்குள் வந்த நினைவு. அனைத்தையும் எண்ணியவரே வீட்டை சுற்றி வந்தான் சிவா.

மாடியில் சிவாவின் அறையிலே ஹரியும் ,ஆதியும் பயன்படுத்திக்கொள்ள, காவேரியும் ருத்ரனும் கீழ் தளத்திலே வாசம் செய்த்தனர் .

நன்கு உறங்கி எழுந்தவர்கள் மதிய உணவை உண்டுவிட்டு ஊரை சுற்றி பார்க்க கிளம்பினர் . ருத்ரனும் தனது தோழர்களை தேடி சென்றுவிட,காவேரி தூக்கத்தை தேடி சென்றார்.

" சாப்பிட்டதும் ஊர சுத்தலாம்னு சொன்னவளுக , வீட்டுக்கு போனதும் தூங்கிட்டாளுகளோ ?" என்று புலம்பி கொண்டிருந்த துர்வா , தனது வீட்டின் வாசலுக்கும் முற்றத்திற்கும் நடை பயின்று கொண்டிருந்தாள் துர்வா. அதே சமயம் வெளியே அரவம் கேட்க " வந்துட்டாளுங்க " என்று முனகியபடி வந்தவள், வெளியே நிற்பவனை ஏற இறங்க பார்த்தாள் . அவள் பார்வையில் சங்கடமுற்றவனை , சுவாரஸ்யமாக பார்த்தபடி " என்ன ?" என்று கேட்க அவன் " விஷ்வா " என்று சொல்ல, இவளுக்கு பொழுது போக்க கிடைத்த இந்த பீசை விடக்கூடாதென்ற முடிவுக்கு வந்தவள் " விஷ்வாக்கு என்ன?" என்றவளை என சொல்ல என்று தெரியாமல் " நான் விஷ்வா பிரண்ட் " என்று சொன்னவனை கன்டுகொள்ளமல் " நான் இல்லனு சொல்லலியே " என்றவளை என்னசெய்வது என்று தெரியாமல் நின்றவனை பார்த்த ஹரியும் ஆதியும் சிரிப்பை அடக்க படாதபாடு பட்டு கொண்டிருந்தனர். சரவெடியை வெடித்தவளை பார்த்த ஆதி குதூகலத்துடன் நடப்பதை வேடிக்கை பாத்து கொண்டிருந்தவனின் காதுகளில் " டேய் கருவாயா " என்ற சத்தம் வந்த திசையை பார்க்க , அங்கு விஷ்வா சிவாவை நோக்கி வந்து கொண்டிருந்தான். " வாடா ஈஸ்வரா , பெரிய வியாபார காந்தம் ஆகிட்டியாமே" என்ற சிவாவை அணைத்து கொண்டான் விஷ்வா.

அவர்களின் பாச பரிமாற்றத்தை பார்த்த ஆதியும் , ஹரியும் , ஈஸ்வரன் என்ற விஸ்வேஸ்வரனை அறிமுகம் செய்துகொள்ள , புது நட்பின் தொடக்கம் அங்கே ஆரம்பமானது.

இதை எல்லாம் கண்ணில் சிறு நக்கலுடன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த துர்வா " பயபுள்ள இன்னைக்கு தப்பிச்சுருச்சு, என்னைக்காவது மாட்டாமலா போயிருவான் " என்று யோசித்தவாரே அங்கிருந்து நகர்ந்தாள்.

இன்றோடு ஊருக்கு வந்து மூன்று நாட்கள் முடிவடைந்தது, பொழுது ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது அனைவர்க்கும். இதற்கிடையில் ஊரே திருவிழாவிற்கு தயாராக நம்ம துர்வா & கோவும் வீட்டு வாசலில் அமர்ந்து கலகலத்து கொண்டிருந்தனர்.

இதை பார்த்த சிவகாமி " ஏன் டி துர்வா உள்ள வந்து எனக்கு கொஞ்சம் ஒத்தாசை பண்ணகூடாத ?" என்றவரிடம் " ஏன் உன் புள்ள என்ன காலெக்டருக்கா படிக்குறான் அவனை பண்ண சொல்லு " என்னவளை கண்டுகொள்ளாத சரிவு , சாந்தினியும் " வாங்க மா நாங்க பண்றோம் " என்று சிவகாமியை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல , ' இவளுக அவளோ நல்லவளுகளா?' என்று எண்ணியவளின் எதிரே நிழலாட , நிமிர்ந்து பார்த்தவள், அன்று வந்தவனும் அவனது நண்பர்களும் நிற்பதை பார்த்தவள் " இன்னைக்கு என்ன? " என்றவளை ' இவளிடம் பேசி பயனில்லை ' என்று மௌனத்தை கடை பிடித்தான் சிவா. தன் நண்பனின் உதவிக்கு வந்தவன் நம்ம ஆதியே தான் " ஏங்க பையன் பாவம் அன்னைக்கு அடிச்சதே போதும், அவன் இப்போதைக்கு மறக்கமாட்டான் , இந்த போடபோடுறது?" என்றவனை 'லூசாப்பா நீ' என்று பார்த்து வைக்க, அதை கண்டு மனம் தளர்ந்தால் அவன் ஆதி இல்லையே. " என்னங்க அப்படி பார்க்குறீங்க?" என்றவனிடம் " நீங்க இப்படி பல்ல காட்டிடவே இருக்காதீங்க, நானா இருக்க பொய் சரியாப்போச்சு ,ஊர்ல யாராவது பார்த்தா அருவாலோட தான் பேசுவாங்க , அவங்கள விடுங்க என் ப்ரண்டு பார்த்தா உங்க பல்ல தட்டி கைல குடுத்துருவா " என்றவளை பீதியுடன் பார்த்த ஆதி ' சிட்டி பொண்ணுங்க போல கிராமத்து புள்ளைங்க இல்ல போலயே ' என்று தன் முடிவை மறுபரிசீலனை செய்தான், அதற்குள் சுதாரித்த சிவா " விஷ்வாவை பார்க்கணும், வர சொல்லிருந்தான் " என்று காட்டாமை சொன்ன சிவாவையும் , " இது உனக்கு தேவையா? எதுக்குடா வாய குடுத்து புண்ணாக்கிக்குற ?" என்று ஆதிக்கு அறிவுரை கூறிய ஹரி கூறியதையும் கேட்ட துர்வா, இன்னைக்கு இது போதும் என்ற முடிவுடன் உள்ளே சென்றவள் கத்தியதை கேட்ட மூவரும் அதிர்ந்தனர்.

உள்ளே சென்ற துர்வா " விஷ்வா உன்ன பார்க்க உன் ப்ரண்டு கருவாயனும் அவன் ப்ரண்டு காத்தவராயங்களும் வந்துருக்காங்க " என்று கத்திக்கொன்டே போனவளை மூவரும் அதிர்ந்து பார்த்தனர். இதை கேட்ட சாந்தினியும், சாராவும் " ஏன் டி உன் கொழுப்புக்கு ஒரு அளவே இல்லையா? என்று கேட்க " விடு விடு இனிமேலாவது ஏங்கிட்ட கடுப்புல பேசக்கூடாதுனு அவனுக்கு புரியணும்னு தான் அப்படி பேசுனேன் " என்றவளை பார்க்க மட்டுமே தோழிகளால் முடிந்தது.

வெளியே வந்த விஷ்வா நண்பர்களின் அதிர்ச்சியை கண்டு " விடுங்கடா நானா பிரண்ட்ஸுலேயே கொஞ்சம் டீசெண்டா உங்கள தான் சொல்லிருக்கா , கண்டுக்காத " என்றவனை மூவரும் முறைக்க, இப்படியே கேலியும் கிண்டலுமாய் நேரம் சென்றது அம்மூவருக்கும்.

தொடரும்.....
 
Top