Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆலம் விழுதாக ஆசைகள் - 3

Advertisement

sharanyaa satyanarayanan

Active member
Member
ஆலம் விழுதாக ஆசைகள்-3

விடிந்தும் விடியாத காலை பொழுதில் யோகா செய்து கொண்டிருக்கும் தன் மகன் ஆதியை பெருமையாக பார்த்து கொண்டு நின்றார் ஜெயசுதா.

30 வயது நிரம்பும் மகன் 6 அடி உயரத்தில், அரவிந்த் சாமி கலரில் இல்லை என்றாலும் அடலீஸ்ட் ஆனந்த் ராஜ் கலரில், ஹிந்தி ஹீரோ அமீர் கான் போல் 6 பேக் இல்லாட்டியும் ஆர்யா போல் ஒன்னு ரெண்டு பேக் உடன் இருப்பவன் ஆதி என்ற ஆதித்யா.

ஆதித்யா ஜெயசுதா-சுப்ரமணியம் தம்பதியரின் ஒரே புதல்வன் . AHS கன்ஸ்ட்ருக்ஷன்ஸ் பங்குதாரர்களில் இவனும் ஒருவன்.

யோகா முடித்து வந்தவனை கண்ட ஜெயசுதா " ராஜா நேத்து வேலை அதிகமா , சாப்பிடாமலே தூங்கிட்டியே டா " என்ற தாயின் குரலுக்கு ," வேலை கொஞ்சம் அதிகம் தான் மா, ஆனா நான் மேனேஜ் பண்ணிட்டேன் " என்ற மகனை பெருமை பொங்க பார்த்தார்.

தன் மகனின் சத்தம் கேட்டு வந்த சுப்ரமணியம் " என்னப்பா தம்பி வர வர உன்ன பாக்குறதே கஷ்டமா இருக்கு, நிறைய வேலையா ?" என்று கேட்டவர் " தம்பி கீழ வந்து எவ்வளோ நேரம் ஆகுது ,இன்னும் இங்க என்ன வேடிக்கை போய் தம்பிக்கு காபி எடுத்துட்டு வா " என்று மனைவியை ஏவியவர் மகனிடம் வேலை பற்றி விசாரித்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அபிராமி " ஆதி கண்ணா அதுக்குள்ள விழிச்சுட்டியா ? ன் மாடு மாதிரி உழைக்கிற ஆனா சீக்கிரம் எழுந்து சுறுசுறுப்பா இருக்க, அனா பாரு இந்த ஹரியும் சிவாவும் சீக்கிரம் வந்துட்டாங்க, ஆனா இன்னும் தூங்குறாங்க , அவங்களுக்கு வேலை குடுக்க வேண்டியதுதானப்பா , நீயே எவ்வ்ளோ வேலைய பார்ப்ப, அந்த தடிமாடுகள் என்ன வெட்டி முறுக்கிறானுங்கனு சீக்கிரம் வீட்டுக்கு வாரானுங்க ?" என்று அழுத்து கொண்டார் ஹரியின் அன்னை.

" இனி அவனுங்கள நா பார்த்துக்கறேன் மா , don't worry" என்றவனிடம் " உன்ன மாதிரி ஒரு புள்ள கிடைக்க கொடுத்து வெச்சுருக்கணும்,.. ம்ஹ்ம் என்ன பண்றது எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணுமே " என்ற அபிராமியை ஆறுதல் படுத்தினார் ஜெயசுதா.

தாயின் காபியை சுவைத்து கொண்டிருந்தவன் தன நண்பர்களுக்கு அறிவுரை கூற அவர்கள் இருப்பிடம் சென்றான். காலை 7 மணி குப்புற படுத்து தூங்கும் ஹரியை அடித்து எழுப்ப " ஏன்டா இப்டி சோம்பேறி இருக்க? அம்மா சொல்றத கேட்ககூடாதா? நம்ம ஆஃபீஸ்ல நீயும் ஒன் ஆப் தி பார்ட்னர் , இன்னைக்காது ஆஃபீஸ்ல கொஞ்சம் வேலை பாரு டா " என்ற நண்பனை உருத்து விழித்தான் ஹரி.

ஹரி - ஆதியின் உயிர் நண்பன், 6 அடிக்கும் மேலான உயரத்தில், கருப்பு நிறமுடன் இருப்பவன். அபிராமி- செல்வராஜ் தம்பதியரின் சேஷ்ட புத்திரன். இவனுக்கு உடன்பிறந்த தங்கை காவ்யா, திருமணம் முடிந்து வெளிநாட்டில் வசித்து வருகிறாள்.

ஹரியிடம் பேசிய கையோடு சிவாவின் வீடு நோக்கி சென்றான் ஆதித்யா , உள்ளே நுழைந்தவனை நிமிர்ந்து பார்த்த சிவா ஆஜானுபாஹுவாய் அய்யனார் சிலை போல் கருத்த நிறமுடன் இருப்பவன். காவேரி - சிவராமனின் சேஷ்ட புத்திரன் , ருத்ரன் என்ற கல்லூரி இளைஞனுக்கு அண்ணன். பார்த்தவுடன் க்ராமத்துக்காரன் என்று சொல்ல முடியாதவர்கள்,அவனிடம் பேசியவுடன் கனித்துவிடும் அளவுக்கு மதுரை தமிழை அசை போடுபவன். " வாடா என்ன காலைலயே இந்த பக்கம் வந்துருக்க?" என்றவனை " நேத்து சைட்ல செங்கல் வரலன்னு சொன்னியே என அச்சு?" என்ற ஆதியின் கேள்வியில் " நாம செங்கல் வாங்குறவன் காசு அதிகமா வேணும்னு எதிர்பாக்கறாநோ எண்ணவோ தெரில, முன்ன போன முட்டுதான்,பின்ன போன ஒதைக்கான், நேத்து தேதிக்கு வரவேண்டிய செங்கலும் வரல " என்ற சிவாவின் பதிலுக்கு " அவன் டீலர்ஷிப்ப கேன்சல் பண்ணு , நாம வேற டீலர் பாக்கலாம் " என்றவனை யாரோ கீழ தள்ளிவிட.

குப்புற விழுந்தவனின் காதில் " துறைக்கு தூக்கம் கலையலையோ , எந்திரிடா வெண்ண, நானும் ஹரியும் ஆஃபீஸ் கிளம்பிட்டோம் , இங்க வந்து பார்த்தா நாய்யு தூக்கத்துல 'அவன் டீலர்ஷிப்பா கேன்சல் பண்ணிடுன்னு'உளறிக்கிட்டு இருக்க, என்ன எப்பயும் போல கனவா?" என்றவனிடம் " ஜெயா டார்லிங்கும் ,சுப்புவும் என்னை ஒரே புகழ்ச்சில குளிப்பாட்டிட்டாங்கன்னா பாத்துக்கயேன் , எப்படி பட்ட கனவா இருக்கும்னு என்றவனை இடைமறித்தது "siva சாப்பிடவாடா , அந்த சோம்பேறி எழுந்திருச்சுட்டானா இல்லையா?" என்ற ஜெயசுதாவின் சத்தத்தில் வேகமாக குளியலறை புகுந்தான் ஆதி.

ஆதித்யா ,ஹரி, சிவா மூவரின் உழைப்பால் உருவான நிறுவனம் AHS கன்ஸ்ட்ருக்ஷன்ஸ் . அதுமட்டுமில்லாமல் ஒரே இடத்தில் , ஒரே வடிவில் தனி வீடுகளில் வசித்து வருகிறார்கள். AHS காலனி அமைதியான சுற்றுப்புறத்துடன் சிறிய தோட்டம் சேர்ந்து அமைந்த சொர்கம்.

ஹரியும்,ஆதித்யாவும் பள்ளி செல்லும் வயதிலிருந்து ஒன்றாய் சுற்றி வருபவர்கள்.அவர்களின் கல்லூரி வாழ்வில் இணைந்த கிராமத்து நண்பன் சிவா. நன்கு படிக்கும் திரன் இருந்தும் ஆங்கிலத்தில் திணறியவனை ஹரி,ஆதி தங்கள் கூட்டுக்குள் இணைத்து கொண்டனர். படிப்பு முடித்து நல்ல கம்பனியில் வேளைக்கு சேர்ந்து 5 வருடம் வேலை பார்த்தனர் மூவரும். அதில் சேர்த்த பணத்தை கொண்டு தனி நிறுவனம் தொடங்கி இந்த மூன்று வருடமும் போராடி வெற்றி பெற்றனர்.

இதை யோசித்துக்கொண்டு இருந்த சிவா, " ஜெயா பேபி என சமையல்? நீயா சமைச்ச?" என்றபடி வந்த ஆதியிடம் " அம்மா ந தன சமைக்கேன்... ஏன்?" என்ற வாக்கியம் முடியும் முன் "நான் கவி அம்மாட்ட நல்ல சோறு சாப்டுக்கறேன், நீயும் இந்த அய்யனாரும் இது சாப்பிட்டுக்கோங்க " னு தன் நண்பனை விட்டு சென்றவனை பார்த்த சிவா " எனக்கு பொங்கல் வைங்க மா நான் சாப்புடுறேன் "னு சாப்பிட தொடங்கினான்.

ஆதி சாப்பாட்டில் கை வைக்கும்போது புயலென உள்ளே நுழைந்த ஹரியை பார்த்தவன், ஓடி சென்று காவேரிக்கு பின்னால் நின்று கொண்டு "அம்மா ஒரு வாய் சாப்டுக்கறேன், அவன் என்ன சாப்பிடவிடமாட்டான் , please help me" என்று காதில் முணுமுணுத்தவனை " டேய் எரும இன்னும் நீ கிளம்பலய , ஒரு நாள்கொட்டிக்கலேனா ஒன்னும் ஆகாது ஆஃபீஸ்க்கு கிளம்பு " என்ற ஹரியை " நான் வளர புள்ள டா, நல்லா சாப்பிடணும், ஒரு வாயாது சாப்டுக்கறேனே " என்று கெஞ்சியவனை முறைத்த ஹரி ",இதுக்கு மேல வளந்த வீடு தாங்காது " என்றபடி உலகே நுழைந்தான் சிவா " பாவம் தம்பி, கொஞ்சம் சாப்டுகிட்டும் ஐயா " என்ற காவேரியிடம் " ஒரு நாள் சாப்பிடாம வந்தா தான் சீக்கிரமா எழுந்திருக்கணும்னு அறிவு வரும் மா " என்ற ஹரியை முறைத்த ஆதி " நல்லா சாப்பிட்டா தான் என் இலட்சியத்தை அடைய முடியும் " என்றவனை குழப்பத்துடன் பார்த்த சிவா " எங்க சொல்லு உன் மண்ணாங்கட்டி லட்சியத்தை ?" என்ற கேள்விக்கு கேள்விக்கு கபளீகரம் செய்தபடி " கல்யாணம் பண்றது தான் டா என் லட்சியமே " என்றவனை இடைமறித்தன ஒரே நேரத்தில் வந்த இரு கேள்விகள், " சாப்பாட்டுக்கும் கல்யாணத்துக்கும் என்னடா எழவு சம்மந்தமிருக்கு ?" என்ற சிவாவும் , " ஓஹோ உனக்கு கல்யாணம் அகும்ங்குற நினைப்பு வேற இருக்கா ?" என்ற ஹரியின் கேள்வியில் சிவாவின் கேள்வியை காற்றில் விட்டவன் " ஏன்டா நான் தூங்குனா உனக்கு பொறுக்காது, நான் சாப்பிட்ட உனக்கு பொறுக்காது, இப்போ நான் கல்யாணம் பண்றதுமா உனக்கு பிடிக்கல?"என்று சோகமாக கேட்ட ஆதியை ,"உன்ன கல்யாணம் பண்ற பொண்ணு உன்ன அடக்குறவளா வரப்போறா " என்ற சிவாவின் வார்த்தைக்கு ததாஸ்து என்று தேவர்கள் வாழ்த்தினார்கள் போல.

ஒருவழியாய் ஆஃபீசை அடைந்தவர்களை , வேலை ஆக்டோபஸாய் சுருட்டி கொண்டது.

தொடரும்.....
 
Top