Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆலம் விழுதாக ஆசைகள் - 18

Advertisement

sharanyaa satyanarayanan

Active member
Member
ஆலம் விழுதாக ஆசைகள் - 18

மறுநாள் மாலை மதுரையில் தங்கள் அறையிலமர்ந்திருந்த தோழிகள் , தங்கள் அலைபேசியை உத்து பார்த்துக்கொண்டிருந்தனர்.

சாரா," இந்தா லே, என்ன பீலிங்கா ... இது எல்லாம் நேத்து அவுத்து விட்ட பாத்தியா ரீலு, அப்ப இருந்துருக்கணும் ...ஆத்தாடி ஆத்தா பாத்தாலும் பார்த்தேன் உன்ன போல அண்ட புளுகுணி ஆகாச புளுகுணிய நான் பார்த்ததில்ல " என்று பொரிந்து தள்ளி கொண்டிருந்தாள்.

அதை கண்டுகொள்ளாத துர்வா , " என்னவோ எனக்காக பேசுன மாதிரி சொல்ற,அந்தா இருக்காளே , உன் உத்தம நண்பி , உலகமகா வள்ளல்,தியாக தோழி அவ பண்ண அளப்பறைக்கு தான் இவளோ பொய் சொன்னேன் ".

சாந்தினி, " நானா உன்ன போய் பேச சொன்னேன், இல்ல இவளோ பொய்யும் நான் உனக்கு சொல்லி குடுத்தேனா ?" என்று சண்டைக்கு தயாரானாள்.

ஒரு வழியாக சண்டையை நிறுத்திய தோழிகள், அலைபேசியை மீண்டும் பார்க்க தொடங்கினர்.
சாரா," ம்ம்ஹ்ம் இது சரி பட்டுவராது , லே துர்வா நீ கால் போடுறியா இல்ல நான் போடவா?".

துர்வா ," அத தான் நானும் சொல்றேன் நீ போடு ".
என்றதும் அவளை முறைத்த சாரா ," பொய் சொல்ல மட்டும் யோசிக்குறதே இல்ல " என்று கடுப்படித்தாள்.

துர்வாவோ தனக்கு நேற்று ஏன் மூளை அதிக கற்பனைத்திறனை காட்டியது என்ற ஆராய்ச்சியில் இருந்தாள்.

நேற்று ராகேஷ் சரியான காரணத்தை கேட்க , யோசித்த துர்வா சாந்தினியை மாட்டிவிட மனதுவராமல் , தங்கள் மூவருமே விரும்புவதாக தான் சொல்ல தொடங்கினாள், ஆனால் ராக்கியின் ஏளன பார்வையில் அதை மாற்றி ," எங்களுக்கு திருமணம் ஆயிடுச்சு , நாங்க விரும்புனவங்கலையே வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ண வேண்டிய சூழ்நிலை , பிறகு வீட்ல பேசி சம்மதம் வாங்கலாம்னு பார்த்தா , அதுக்குள்ள வில்லனா நீங்க வந்து குதிச்சுடீங்க " என்றவளை விழி தெறிக்க பார்த்து கொண்டிருந்தாள் சாரா.

இவை அனைதையும் கவனித்த ராக்கி " சரி, இந்த காலத்துல இதுலாம் ஒரு விஷயமா?, உங்கள லவ் பண்ணவங்க நிச்சயத்தை நிறுத்த வராதபோதே தெரில அவங்க ஒன்னு உங்கள ஏமாத்திட்டாங்க,இல்ல கோழைங்களா இருப்பாங்க, இதுக்கு ஏன் இவளோ சென்டிமென்ட்ஸ் " என்று சொன்னவனை மூக்கு சிவக்க முறைத்த துர்வா .

" சார் , காது கேக்கலையா எங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு, ஏமாத்துறவங்க ஏன் எங்களை கட்டிக்கணும் ?" என்றவளை இடைமறித்த ராக்கி," ஏமாத்துறதுக்கு தான் கல்யாணம் பண்ணிருக்காங்க, இல்லாட்டி எங்கள்ட்ட நீங்க பேசுறமாதிரி வந்து பேசி இருக்கலாம்ல, இன்னும் உலகம் தெரியாம இருக்குறீங்க , இப்படி எதாவது உளறாம போய் கல்யாணத்துக்கு தயார் ஆகுங்க " என்று சொல்ல.

துர்வா ," யோவ் , ஒரு தடவ சொன்ன புரியாது, எங்களுக்கு நிச்சயம்னு எங்களுக்கே லேட்டா தான் தெரியும், எங்க புருஷனுங்களுக்கு அது எதுவும் தெரியாது , இப்போ நீ கல்யாணத்த நிருத்த முடியுமா முடியாத?" என்றால்.

ராக்கிக்கு தேவையான பதில் கிடைத்துவிட ' சோ இன்னும் அவங்களுக்கு விஷயம் தெரியாது, அதான் நிச்சயம் அன்னைக்கு வரலபோல ' என்று எண்ணியவன் துர்வாவிடம் ," நீங்க சொல்றத எப்படி நம்புறது ?" என்று கேட்டான் .

அதற்கு பிறகு தோழிகள் முன்னே அலைபேசியில் பேசிமுடித்தவனை வாய் மூடாது பார்த்த தங்கள் முட்டாள் தனத்தை எண்ணி வெட்கி கொண்டிருந்த துர்வாவை உலுக்கிய தோழிகளை பரிதாபமாக பார்த்துவைத்தாள் துர்வா .

அதே நேரம் சென்னையில், சரியாக 4 மணிக்கு ராகேஷ் சொன்ன ரெஸ்டாரெண்ட்டை அடைந்த ஹரி & கோ , ராகேஷை தொடர்பு கொள்ள, அவன்," உள்ள தான் இருக்கிறோம் " என்று தங்கள் இருப்பிடத்தை தெரிவித்தான். உள்ளே அவர்கள் சொன்ன இடத்தில் இருவர் அமர்ந்திருக்க , அவர்களை நோக்கி சென்றனர் நண்பர்கள் மூவரும்.

உள்ளே வந்த ஹரி & கோவை பார்த்த ராக்கி ," ஹலோ , ஐ அம் ராகேஷ் அண்ட் திஸ் இஸ் மை பிரதர் இன் ஆல் பட் பிளட் ரிஷிவந், அண்ட் ஒன் ஆப் அவர் பார்ட்னர் , ராம் இப்போ வந்துருவான் " என்று அறிமுகப்படுத்தினான்.

ஹரியும் தன் நண்பர்களை அறிமுக படுத்தி கொள்ள , பொதுவாக தங்கள் கம்பெனி , நட்பை பற்றி பேசியவர்கள் , உணவை ஆர்டர் செய்து சாப்பிட தொடங்கினர்.

ராக்கி ," எங்க குரூப் ஆப் கம்பனிஸ்ல , சிமெண்ட் ஏற்றுமதி முக்கியமான தொழில், உங்க கம்பெனில இருந்து எங்களுக்கு வந்த கோட் சரியா இருந்தது ,அதை பத்தி பேசவே உங்கள வர சொன்னோம் "என்று முடித்தவனை மூவரும் சந்தேகமாக பார்த்தனர்.

ஹரி," சாரி , நாங்க இன்னும் எந்த சிமெண்ட் கம்பெனிக்கும் கோட் அனுப்பல , நாங்களே எந்த கம்பனிக்கு குடுக்கலாம்னு இன்னும் டிஸ்கஸ் தான் பண்ணிட்டு இருக்கிறோம் " .

ரிஷி," இல்ல Mr. ஹரி நாங்க அனுப்புனா கண்டிஷன்ஸ ஏத்துக்கிட்டு , அதுல நீங்க சைன் பண்ணி எங்களுக்கு அனுப்பிருக்கிங்க " என்றவனை அதிர்ச்சியாய் பார்த்தனர் நண்பர்கள் மூவரும்.

ஆதி," டீலிங் பேப்பர்ஸ் எல்லாம் நாங்க டைரக்ட மீட் பண்ணி தான் சைன் பண்ணுவோம் , எனக்கு எண்ணமோ இதுல நீங்க தான் ப்லே பண்றீங்கன்னு தோணுது ".

ராக்கி ஒரு கோப்பை ஹரியிடம் நீட்டி ," இதுல இருக்குறது உங்க கையெழுத்து தான? " என்றதும் ஹரி அதை வாங்கி படித்து அதிர்ச்சியுடன் நண்பர்களை பார்த்தான்.

அதுவரை அமைதியாக இருந்த சிவா," நாங்க இதுல சைன் பண்ணலன்னு எங்களுக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும், ஆனா இது எப்படி நடந்ததுன்னு தான் புரியல ".

"அதற்க்கு பதில் நான் சொல்லவா முதலாளி " என்றவாறு அங்கு வந்தான் ராமவர்தன். அவனை அங்கு எதிர்பாராத மூவரும் புருவம் சுருக்க.

ரிஷி ," இவன் ராம்வர்தன், எங்களின் மூன்றாவது பார்ட்னர் மற்றும் எங்கள் உயிர் நண்பன்" என்று உதட்டில் இகழ்ச்சி புன்னகையுடன் கூறினான்.

இப்போது மூவர்க்கும் , தங்கள் கையெழுத்து எப்படி இந்த டீலிங்கில் வந்தது என்ற சந்தேகம் தீர்ந்தது, ஆனால் ஏன் என்ற குழப்பமே மிஞ்சியது .

ஆதி, " எல்லாம் நல்லா ப்லான் பண்ணி பன்னிருக்கிங்க , ஆனா ஏன்?".

ராக்கி," நாங்களா கேட்ட நீங்க இந்த டீலுக்கு ஒத்துக்க மாட்டீங்க , சவுத்ல எங்க பிசினஸ் பாப்புலர் ஆக்க உங்கள மாதிரி ஒரு எமெர்ஜிங் கம்பெனி தேவை பட்டது " என்றவனை இடைமறித்த ஹரி ," நீங்க சொல்ற காரணம் நம்புற மாதிரியா இருக்கு?".

ரிஷி," நம்புற மாதிரி இல்லைல , பட் எங்க கம்பெனி பேர பார்த்தா உங்களுக்கே புரியும்" என்றவன் மீண்டும் ஒரு கோப்பை சிவாவின் முன் வைக்க , அதை எடுத்து பார்த்த சிவாவின் கண்களில் கனல் ஏற , ரிஷியோ," நான் சொல்றது சரி தான சிவா " என்றான்.

அவனை வெறியோடு பார்த்த சிவாவை, ஏளனமாக பார்த்த ரிஷி ," ரிஷிவந் கபூர் , சேர்மன் ஆப் கபூர் குரூப்ஸ் " என்றவன் சட்டையை பிடித்திருந்தான் சிவா.

அவனை நண்பர்கள் அமைதி படுத்த , இருக்கும் இடம் உணர்ந்து கோவத்தை கட்டுப்படுத்தினான் சிவா .

ராகேஷ் ," இதற்கே கோவப்பட்டா எப்புடி பாஸ், உங்கள் காதலிகளின் நாளைய கணவன் ஆகா போற எங்க மேல கோவப்படலாமா?" என்றதும் தான் மூவருக்கும் தாங்கள் பேச வந்தது ஞாபகத்துக்கே வந்தது.

அதை புரிந்துகொண்ட ராக்கி," ஓஹ் அதை பத்தி பேசத்தான் வந்திங்களோ? ஆனா பாருங்க உங்க காதலிகள் உங்கள விட வேகம்," என்றவன் துர்வா தன்னிடம் பேசிய அனைத்தயும் கூறி ," உங்க மூணு பேருக்கும் கல்யாணமே ஆய்டுச்சுன்னு சொன்னாங்க, ஆனா அவங்களுக்கு தெரிய வாய்ப்பு இல்ல, உங்கள மடக்க தான் அவங்கள நாங்க கல்யாணம் பண்ண சம்மதிச்சதே " என்று கூறி சிரிக்க , அவனுடன் இணைந்து கொண்டனர் ரிஷியும் ராமும்.

இதை கேட்டு கோவத்தில் இருந்த நண்பர்களில் ஹரியே," இப்போ உங்களுக்கு என்ன வேணும் , இந்த காண்ட்ராக்ட் தான? அதை நாங்க உங்களுக்கே தரோம் , ஆனா கல்யாணத்த நிறுத்துங்க "

அதை கேட்ட ராம் ," நீங்க என்ன காண்ட்ராக்ட் எங்களுக்கு கொடுக்குறது, அது எங்ககிட்ட தான் இருக்கே " என்று கோப்பை காட்டியவன் " கல்யாணத்த அவளோ ஈசியா நிறுத்தவா , இவ்வளோ ப்லான் போட்டோம் " என்று கூற.

ஆதி ," நீ எப்புடி இந்த கல்யாணத்த நடத்துரணு பார்ப்போம் டா ".

ராக்கி," சபாஷ் , இத தான் நாங்களும் எதிர் பார்த்தோம், ஆம்பளைன்னு நிரூபிச்சுடீங்க " என்றவன் ," இதான் நம்ம கேம் , இந்த மேரேஜ் நடந்துருச்சுனா நாங்க சொல்றத நீங்க செய்யணும் , ஒரு வேல இந்த மேரேஜ் நீங்க நிறுத்திட்டா , இந்த காண்ட்ராக்ட நாங்களே கேன்சல் பண்ணிறோம் " என்றவன் ரிஷியை பார்க்க,

ரிஷி ," சோ மூணு பேரும் என்ன சொல்றீங்க " என்றவன் வார்த்தை அனைவரையும் குறிக்க,பார்வை சிவாவில் மட்டுமே நிலைத்தது.

அதை உணர்ந்த சிவா ," இப்போ சொல்றேன் கேளு, அந்த கல்யாணத்த நிறுத்தி, இந்த கான்ட்ராக்ட ஒன்னும் இல்லாம ஆக்குறேன், அதோட சேத்து உன் கபூர் குழுமத்தையும் ஒண்ணுமில்லாம ஆக்குறேனா இல்லையானு பாரு " என்ற சொல்லுடன் வெளியேறினான்.

அவனை பின் தொடர்ந்து ஆதி மற்றும் ஹரியும் வெளியேற , அதுவரை சிரித்த முகமாய் இருந்த ரிஷியின் கண்களில் பழிவெறி தோன்றி , கண்கள் பளபளக்க ," பார்க்க தான போறேன்" என்றவன் ராக்கி மற்றும் ராமை பார்த்து," அவர் கேம் ஸ்டார்ட்ஸ் நவ் " என்று கூறி இருக்கும் இடத்தை மறந்து சிரித்தான் .

தொடரும்...,,,
 
Top