Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆலம் விழுதாக ஆசைகள் - 14

Advertisement

sharanyaa satyanarayanan

Active member
Member
ஆலம் விழுதாக ஆசைகள் - 14

ராமவர்தன், மதுரைகாரன் , தாய் தந்தை இருவரும் அரசாங்க உத்யோகம், ரிஷியின் உற்ற தோழன். நண்பனுக்காக எதையும் செய்வான். நல்ல உத்தியோகத்தில் இருந்தவன் , நண்பனின் வார்த்தைக்காக அந்த வேலையை விட்டு நண்பனுக்காக AHS கன்ஸ்ட்ருக்ஷன்னில் வேலை பார்த்து கொண்டிருந்தான். இப்போதும் அதே நண்பனுக்காக தன் காதலை தியாகம் செய்து, இந்த திருமணத்திற்கு சம்மதித்துள்ளான்.

ரிஷி " ராம் நீ சொன்னது சரியான தகவல் தான?" என்று யோசனையுடன் கேட்டான். " ஆமா ரிஷி நானே கேட்டேன்". " பிறகு ஏன் நிச்சயத்தை நிறுத்த எந்த முயற்சியும் செய்யலை ? எனக்கு தெரிஞ்சு மூணு பேரும் அப்படி பட்ட ஆள் இல்லையே " என்றவாறு யோசனையில் ஆழ்ந்தான்.இதை ராகியும் ராமும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.
-----------
ராகவி வெகு நாட்களாக அமைதியாக இருந்ததற்கு மாறாக மிகவும் சந்தோஷமாக வளம் வந்தாள். அவள் குடும்பமோ , விஷ்வாவின் தங்கைகளுக்கு நிச்சயம் முடிந்ததால் ,அவள் திருமணத்திற்கு இனி தடையில்லை என்ற சந்தோஷம் என்று எண்ணி இருந்தனர்.

ஆனால் ரகவியின் மனதில் மூன்று தோழிகள் மேலும் உள்ள வன்மம் வேர்விட்டு வளர தொடங்கி இருந்தது. தன் ஒன்றுவிட்ட தமையன் வரதன் மூலமாக தன் வன்மத்தை தொடங்கி இருந்தாள். தன் தோழிகள் மூலம் ராமவர்தனின் காதலை தெரிந்து கொண்டவள், தன் பெற்றோர், மற்றும் வரதனின் பெற்றோரை தூண்டிவிட்டு வரதனை இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தாள் . இதனால் ராமவர்தன் துர்வாவை வெறுப்பான் என்று எண்ணினாள். விஷ்வா மற்றும் அவர்கள் காதலுக்கு எதிரியாக துர்வா & கோ இருப்பதாக எண்ணி, அவர்கள் வாழ்வை நரகமாக்க திட்டமிட்டு , அதில் முதல் படியை தாண்டியதாக நினைத்து குதூகலித்து கொண்டிருந்தாள் ராகவி.

ஆனால் அவள் அறியாத ஒன்று , ராகவி பெற்றோர் பேசுவதற்கு முன்னரே, ராமவர்தன் தன் நண்பனின் திட்டப்படி இந்த திருமணத்திற்கு தயார் ஆனதும், அதற்கு வழியை ராகவியே அமைத்து கொடுத்ததும்.

---------------------

சிவாவின் அன்னை காவேரி நிச்சயத்திற்கு சென்று, எப்படி திரும்பி வந்தார் என்று கேட்டால் , அவருக்கே தெரியாது. எதை தன் ஞாபக கூட்டில் இருந்து அளித்து விட வேண்டும் என்று எண்ணினாரோ , அவை அனைத்தும் அவர் முன்னாள் வளம் வர தொடங்கியது. தன் சொந்த ஊரில் இருந்து உடனே கிளம்பிவிட மூளை எச்சரித்தது.

அவரை பார்த்த ருத்ரன்," அம்மா என்னாச்சு? நிச்சயத்துக்கு போயிட்டு உடனே வந்துடீங்க? உடம்பு முடியலையா?". ஆனால் அவரிடம் எதற்கும் பத்தி இல்லை, அவர் பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தார்.
------------------

ரிஷியிடம் பேசிவிட்டு, தன் அறையில் அமர்ந்திருந்த ராக்கியின் நினைவுகளும் பின்னோக்கி சென்றிருந்தது. நிச்சய வீட்டில் நுழைந்த காவேரி , அங்கிருந்தவர்களை வெறித்து பார்த்து விட்டு வெளியேறியதை ராக்கி பார்த்தான். அதன் விளைவாய் கண்ணில் நீர்வடிய பழைய நினைவுகளில் மூழ்கினான் ராக்கி.

--------------------

பிறைசூடனோ அனைத்திற்கும் மாறாக கொதித்து கொண்டிருந்தார். எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தும் எண்ணத்துடன் பேசிய வார்த்தைகளை, தன் மகனே தடுத்துவிட்டான் என்று தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.

ஒன்னு இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும், இல்லை என்றால் இதில் தனக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்க வேண்டும் என்று தான் ஒரு பக்கா பிசினஸ் மேன் என்பதை நிரூபித்தார் பிறைசூடன்.

-------------------/-----

தங்களுக்கு எதிராக நடக்கும் சதிகளை அறியாமல் , தங்கள் சிந்தனையிலே மூழ்கி இருந்தனர் தோழிகள் மூவரும். விஷ்வாவோ தங்கள் தங்கைகளின் வாழ்க்கை அவர்களின் ஆசைப்படி நடக்க விருப்பதை நினைத்து சந்தோஷபட்டாலும் , பிறைசூடனை நினைத்து அவன் உள் மனம் உறுத்தவே செய்தது. தந்தை தங்கைகளுக்கு மாப்பிள்ளை பார்த்ததாக கூறவும், தன பங்கிற்கு நன்கு விசாரித்த பின்னே நிச்சயத்திற்க்கு சம்மதித்தான். அவன் அறியாத ஒரு விஷயம், அவன் விசாரித்த அனைவரும், ரிஷிவந்தின் ஆட்கள் தான் என்பது. தங்களை சுற்றி பின்னப்படும் சூழச்சி புரியாமல் அனைவரும் இன்றைய நிகழ்வுகளுடன் கண்ணயர்ந்தனர்.

சென்னையில் நிச்சயம் முடிந்ததை நினைத்து கவலையில் ஆழ்ந்திருந்தான் ஆதி. அவனருகில் அமர்ந்திருந்த ஹரி ," கல்யாணத்த நிறுத்தணும்னு முடிவு பண்ணிட்டு இப்படி வெறிச்சு பார்த்துட்டே இருந்தா எப்படி , எப்படி நிறுத்துறது என்னனு ப்லான் சொல்லுங்கடா?" என்றவனுக்கு சிவா தோள்குலுகளையே பதிலாக கொடுத்தான்.

ஆதி," கல்யாணத்தன்னைக்கு பொண்ண தூக்கிருவோமா ?" என்றவன் தலையில் அடித்தவ ஹரி " மெண்டல், அப்ப பொண்ணு ஓடி போய்டுச்சுன்னுல பேசுவாங்க " என்ற ஹரி சிவாவிடம் " என் மச்சி நாம ஏன் விஷ்வாட்ட பேசிப்பார்க்க கூடாது?" என்றவனை யோசனையாய் பார்த்த சிவா , " இல்லடா , நிச்சயத்துக்கு சொல்ல வந்த அன்னைக்கே சொல்லிருக்கலாம்லன்னு கேட்ட என்ன பண்றது?". இறுதியாக ஆதியே ஒரு முடிவுக்கு வந்து தன திட்டத்தை நண்பர்களிடம் கூறினான். மூவரும் அவரவர் நினைவுகளுடன் தூக்கத்திற்கு சென்றனர்.

அனைவரின் ஆசைகளும் கைகூடுமா? இல்லை ஆசைகள் அழிவிற்கு வழி காட்டுமா??

தொடரும்........
 
Top