Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 26

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 26

நாட்கள் மிக விரைவாகச் செல்வது போல் இருந்தது அர்ஜுனுக்கு.. அவர்கள் கல்லூரிக்கு வந்து ஒரு மாதம் ஆகி விட்டது. இப்போது வரை அஞ்சலி அவனிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். ம்ஹூம்ம்.. விடாப்பிடியாக அவனிடம் பேசாமலே மௌனம் சாதித்தாள்.

அர்ஜுன் யோசித்து யோசித்து குழம்பினான். உண்மை என்னவென்று தெரியாமல் தவித்தான். அந்த வார விடுமுறையில் அர்ஜூன் மதுவுக்கு போன் செய்த போது, அவன் மிகவும் வருத்தப்பட்டான்.

“ரொம்ப கஷ்டமா இருக்கு மது. அஞ்சலி ஏன் இப்படி பண்றா.? அவ ஏன் என்கிட்ட பேச மாட்டிங்கறா.? நான் என்ன தப்பு பண்ணேன். என்னால முடியல மது. நீ கொஞ்சம் அவ கிட்ட பேசிப் பாரேன்.” என்று அர்ஜூன் கெஞ்சினான்.

“அர்ஜூன். நீ எவ்வளவு பெரிய கஷ்டத்துல இருக்க.? ஆனாலும், நீ அஞ்சலியப் பத்தியே யோசிச்சிட்டு இருக்கியா.? அவ தான் பேச மாட்டிங்கறான்னு தெரிதுல்ல. அப்பறமும் ஏன் அர்ஜூன் நீ தேவையில்லாம அவள எதிர்பார்க்கற.?” என்றாள் மது.

“இல்ல மது. உனக்கு என்னோட ஃபீலிங்ஸ் என்னன்னு தெரியல. எப்படி சொல்றது.? நான், நான் அஞ்சலிய லவ் பண்றேன் மது. அது அவளுக்கும் தெரியும். அதே மாதிரி அவளுக்கும் என்னைப் பிடிச்சிருக்கு. ஆனா, ஏனோ அவ அத சொல்ல மாட்டிங்கறா. என்ன அவாய்ட் பண்ணிட்டே இருக்கா.” என்று தயங்கியபடியே அவளிடம் உண்மையைக் கூறினான் அர்ஜூன்.

இதுவரை அவன் காதலை தன் நண்பர்கள் ரமேஷ் மற்றும் ரவியைத் தவிர வேறொருவரிடம் அவன் சொன்னதே இல்லை. முதன் முறையாக இன்று மதுவிடம் சொல்லியே விட்டான் அர்ஜூன்.

மதுவுக்கு, அர்ஜூனின் மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், அஞ்சலி எந்தப் பிடியும் கொடுப்பதாகத் தெரியவில்லை. அதனால், அவளால் என்ன செய்ய முடியும் என்றே தோன்றியது.

“இது எனக்கு முன்னாடியே தெரியும் அர்ஜூன். நீயும் அஞ்சலியும் ஒருத்தர ஒருத்தர் சொல்லிக்காமயே லவ் பண்ணிட்டிருக்கீங்க. ஆனா, அஞ்சலி இப்போ உன் கிட்ட இருந்து விலகி இருக்கணும்னு முடிவு பண்ணிட்டா. அவ உன்னை முழுசா ஏத்துக்க முடியாம தவிச்சிட்டு இருக்கா. அவ எதையும் வெளிக்காட்டிக்கறது இல்ல. ஆனா, அவ மனசளவுல எவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருக்கான்னு தினம் தினம் அவ கூட இருந்து நான் பார்த்துட்டு தான் இருக்கேன். அதனால, நீ இப்போதைக்கு அவள டிஸ்டர்ப் பண்ணாம இருக்கறது தான் நல்லது. ப்ளீஸ் அர்ஜூன் புரிஞ்சுக்கோ.” என்று மதுவும் சங்கடப்பட்டாள்.

“ஓகே மது. என்ன காரணம்னு நான் தெரிஞ்சுக்கலாமா.? ஸ்டார்டிங்ல நல்லா பேசிட்டிருந்தவ, இப்போ ஏன் என்னை அவாய்ட் பண்ணனும்.? அது தெரியாம தான் நான் பல நாளா கன்ஃப்யூஸ் ஆகிட்டிருக்கேன்.” என்றான் திரும்பவும்.

“அது, அது...” என்று மது யோசித்தவாறே நடந்த அனைத்தையும் அர்ஜூனிடம் கூறி முடித்தாள்.

“மது, அஞ்சலி ஏன் இப்படி இருக்கா.? இப்போ என்ன அவளுக்கு கல்யாணம் நாளைக்கே பண்ணி வைக்கப் போறாங்களா.? லூசு மாதிரி இதுக்குப் போய் என்கிட்ட பேசாம, அவாய்ட் பண்ணிட்டிருக்கா.? அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு தெரியாத இந்த உலகத்துல, எப்பவோ நடக்கப்போற விஷயத்துக்காக, இவ இப்போ கிடைக்கற சந்தோஷத்த இழந்துட்டு நிக்கணுமா.? இதெல்லாம் கூட அவளுக்கு யோசிக்கத் தோணாதா.? எதுவா இருந்தாலும் ஃபேஸ் பண்ணிக்கலாம்னு ஒரு தைரியம் இல்லாத பொண்ணா இருக்காளே மது. நான் என்ன சொல்றது.?” என்று மது அன்று அஞ்சலியிடம் கூறிய விஷயத்தைப் பற்றியே அவனும் சொன்னான்.

“இதெல்லாம் நான் ஏற்கனவே சொல்லிப் பார்த்துட்டேன் அர்ஜூன். ஆனா, அவ அதையெல்லாம் அக்சப்ட் பண்ணிக்க மாட்டிங்கறா.? பேசிப் பேசி வெறுத்துப் போய் தான் விட்டுட்டேன் அர்ஜூன்.” என்றாள் மது சலித்துக் கொண்டே.

“இல்ல மது, நான் எப்படியாவது அவகிட்ட பேசறேன். அதுக்காக அவள அப்படியே விட முடியாது. நீ தான் எப்படியாவது எனக்கு ஹெல்ப் பண்ணனும்.” என்றான் அர்ஜூன்.

“எப்படி நீ பேசுவ.? உன்னைப் பார்த்தாலே அவ எஸ்கேப் ஆயிடறா.? போன் பண்ணாலும் கட் பண்ணிடறா.?” என்றாள் மது.

“சரி. அப்போ, எல்லாரும் நாளைக்கு என்னோட வீட்டுக்கு வந்துடுங்க. எப்படியாவது நான் அவகிட்ட பேசிடறேன். இத விட்டா எனக்கு வேற ஆப்ஷன் இல்ல.” என்றான் அர்ஜூன்.

“ஹூம்ம்.. அஞ்சலிக்காக தான் எங்கள எல்லாரையும் வீட்டுக்கு வர சொல்ற. இல்லன்னா சொல்ல மாட்ட இல்ல.” என்று மது சொல்ல, பதறிய அர்ஜூன்

“ஹே.. மது. நோ. நோ. நீ அப்படி நினைக்காத. ப்ளீஸ். நீ எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட். எனக்கு கேர்ள்ஸ்ல ஃப்ரெண்ட்ஸே இல்ல தெரியுமா.? நீ மட்டும்தான். எல்லாருக்காகவும் தான் நான் சொல்றேன் மது. டோண்ட் மிஸ்டேக் மீ. நீங்க எல்லாரும் வந்தா அம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க. பாவம், அவங்க ஊர்ல இருந்து வந்ததுல இருந்து எங்கயுமே வரமாட்டேன்றாங்க. அட்லீஸ்ட் நீங்க எல்லாரும் வந்துட்டு போனா, கொஞ்சம் அவங்களுக்கு ஒரு சேஞ்சா இருக்கும். சோ, எல்லாரும் கண்டிப்பா வந்துடுங்க. நாளைக்கு லன்ச் எங்க வீட்ல தான். சரியா.?” என்றான் அர்ஜூன்.

“பார்றா.? உங்க லவ்வுக்கு நாங்க ஊறுகாவா.?” என்றாள் மது.

“ஹே.. சீ.. ச்சீ. நிஜமாலுமே தான். நான் அஞ்சலிக்காக மட்டும் சொல்லல. எங்க அம்மாவுக்காகவும் தான்.” என்றான் அர்ஜூன்.

“ஓகே அர்ஜூன். நான் சும்மா உன்கிட்ட விளையாடினேன். மத்தபடி நீ என்ன நினைக்கறன்னு எனக்குத் தெரியும். நான் எல்லாரையும் கண்டிப்பா கூட்டிட்டு வரேன். அஞ்சலியையும் தான்.” என்று கடைசியாக அவள் சொல்லி முடித்த பின் தான் அர்ஜூனுக்கு நிம்மதியாக இருந்தது.

மது அனைவரிடமும் விஷயத்தைக் கூறியபோது, அவர்களும் “சரி போலாம்” என்று கூறினர். ஆனால், அஞ்சலியோ மிகவும் யோசித்த பிறகே, சம்மதம் சொன்னாள். அதுவும் அர்ஜூனின் அம்மா இருக்கிறார் என்ற தைரியத்தினாலேயே சொன்னாள்.

அடுத்த நாள் அர்ஜூனின் வீடு இவர்களால் கலை கட்டியது. அர்ஜூனின் அம்மாவிற்கு, தாள முடியாத சந்தோஷம். யாருமே இந்த ஊரில் தங்களுக்கென்று இல்லை என்ற சோகத்தில் இருந்தவர், இன்று தங்கள் ஊரில் இருப்பதைப் போல் உணர்ந்தார். அந்த சந்தோஷத்திலேயே அவர்களுக்காக விதவிதமாக சமைத்தார்.

அர்ஜூனே ஆச்சர்யப்பட்டான். “மா.. என்ன மா இவ்வளவு செஞ்சிருக்கீங்க.? போதும், ரொம்ப டயர்டாயிடப் போறீங்க.” என்று அர்ஜூன் சொன்னதும்,

“இல்லடா கண்ணா, எனக்கு ஒண்ணும் சிரமம் இல்ல. எனக்கு இதெல்லாம் செய்யறது சந்தோஷம் தான். இன்னைக்கு ஒரு நாள் தானே. நான் டயர்டெல்லாம் ஒண்ணும் ஆகல.” என்றபடியே முறுக்கை எண்ணையில் இருந்து வடித்தெடுத்தார்.

சமையல் வேலைகளை எல்லாம் செய்து விட்டு, இப்போது பலகாரம் செய்ய ஆரம்பித்திருந்தார். அதே போல், இனிப்பையும் தாயாராக செய்து வைத்திருந்தார். பருப்பு வடைக்காக மாவை தயாராக வைத்திருந்தார். அவர்கள் வந்ததும், சூடாக போட்டுத் தர வேண்டும் என்று நினைத்தார்.

அவர் செய்திருந்த பலகாரத்தை சுவை செய்தபடியே, “ஆஹா.. என்ன ருசி. என்ன ருசி.? அம்மா. நீங்க என்ன செஞ்சாலும் ருசி அள்ளுது போங்க. ப்பா.. பேசாம நீங்க ஒரு கடையே வைக்கலாம். அப்படி இருக்கு டேஸ்ட். நம்ம ஊரு ருசியே ருசி தான்.” என்று அளவுக்கு அதிகமாகவே பாராட்டினான், அழையா விருந்தாளியாக வந்திருந்த ரவி.

அவன் அவ்வாறு சொல்வதைக் கேட்ட அர்ஜூன், “ம்மா.. இவன் சொல்றதெல்லாம் நம்பாதீங்க. இப்படி சொல்லியே எல்லாத்தையும் காலி பண்ணிடுவான். அப்பறம் எனக்கு கூட மிச்சம் வைக்க மாட்டான். சரியா.?” என்று சொல்ல, ரவி அவனை செல்லமாக அடித்தான்.

இவர்கள் இருவரும் செய்யும் சேட்டையை ரசித்தவாறே அனைத்தையும் செய்து கொண்டிருந்தார் ஜானகி. அதற்க்குள் அவர்கள் வந்துவிட்டனர். அனைவரையும் அன்போடு வரவேற்றார் ஜானகி.

எல்லாரும் அவரை அன்போடு விசாரித்துக் கொண்டிருக்க, அர்ஜூனின் பார்வையோ அஞ்சலியின் மேலேயே இருந்தது. ஆனால், அவளோ அவனைப் பார்ப்பதைக் கூட தவிர்த்தாள்.

ஜானகி அவர்களுக்கு முதலில் சூடாக வடையை சுட்டுக் கொடுத்தார். சமையலறையில் அவர் செய்யும் போது, மதுவும், அஞ்சலியும் அவரின் கூடவே உதவி செய்தனர். ஷாலினி கூட அங்கே வந்து எட்டிப் பார்த்தாள். ஆனால், ரூபாவோ ஏதோ எஜமானியைப் போல, டிவியின் முன்னே சாரைப் போட்டு உட்கார்ந்தவாறு ரிமோட்டில் சானலை மாற்றிக் கொண்டிருந்தாள்.

“ம்ம்.. அம்மணி என்ன பண்றீங்க. ரொம்ப வேலை செஞ்சு கலைச்சுப் போய் இப்போ டிவி பார்க்கறீங்களாக்கும்.” என்று வேண்டுமென்றே ரவி வம்பிழுத்தான் ரூபாவிடம்.

“எனக்கெல்லாம், சமையல் வேலையே ஒத்து வராது. அதனால தான் டிவி பார்க்கலாம்னு வந்தேன். அதான், அவங்க மூணு பேரும் அவங்களுக்கு ஹெல்ப் பண்றாங்க இல்ல. அப்பறம் என்ன.? நான் போய் அங்க நிக்கணும்னு கட்டாயமா என்ன.? அங்க ரெண்டு பேர் நிக்கறதே பெரிய விஷயம். இதுல, நானும் போய் அந்த இடைஞ்சல்ல நிக்கணுமா.?” என்று நக்கலாகப் பேச, அர்ஜூனுக்கு என்னவோ போல் ஆனது.

அதைக் கேட்ட ரவியோ, “அம்மா, தாயே. உன்னை யாரும் எந்த வேலையும் செய்ய சொல்லல. நீ பெரிய மகாராணி ஆச்சே. நீ எதுவும் பண்ண வேண்டாம். பேசாம டிவியப் பாரு. சாப்ட்டு சாப்ட்டு, நல்லா பெருத்துப் போயிருக்கறதப் பார்த்தாலே தெரியுது, நீ எந்த வேலையும் செய்ய மாட்டேன்னு.” என்று சொன்னான்.

அதைக் கேட்டதும் பொங்கி எழுந்த ரூபா, “ஹலோ. என்ன.? ஓவரா பேசற.?” என்றாள்.

அதற்க்குள் அங்கே வந்த மது, “ரூபா, அவன் உண்மையத் தானே சொன்னான். அதுக்கெதுக்கு நீ கோபப்படற.?” என்று அவளை மேலும் வெறுப்பேற்றினாள்.

அவள் இன்னும் அதைக் கேட்டு கோபம் கொண்டாள். “மது, நீ என்ன அவனுக்கு சப்போர்ட்டா.? நீ என்னோட ஃப்ரெண்ட் ஞாபகம் வைச்சுக்கோ.” என்றாள்.

“அது உனக்கு ஞாபகம் இருந்தா போதும்.” என்று மது சொல்ல, எங்கே சண்டை முற்றிவிடப் போகிறதோ என்று அர்ஜூன் இடையில் வந்து சமாதானம் செய்தான். ஆனால், ரூபாவோ, அதே கோபத்தில் தான் இருந்தாள். சரியாக யாரிடமும் முகம் குடுத்துப் பேசவில்லை.

ஆனால், அனைவரையும் ஜானகி சாப்பிட அழைத்த போது அவள் தான் முதலில் வந்து அமர்ந்தாள். அவளோடு ஷாலினி, அதன் பிறகு ரவியும் அமர்ந்து கொண்டான். அவர்கள் மூன்று பேரும் ஒரே பக்கமாய் அமர்ந்திருக்க, அவர்களுக்கு வலது பக்கம் இரண்டு இலைகளைப் போட்டிருந்தார் ஜானகி. அஞ்சலி முதலில் அமர்ந்து கொள்ள, அவர் பரிமாறுவதற்க்கு முன்,

“மது, நீயும் போய் உட்காரு மா. நானும், அர்ஜூனும் பரிமாறறோம்” என்றார்.

“அய்யோ ஆண்ட்டி எனக்கு வடை சாப்பிட்டதால பசியே எடுக்கல. அர்ஜூன வேணும்னா உட்கார சொல்லுங்க ஆண்ட்டி.” என்றாள் வேண்டுமென்றே.

ஒருகணம் மதுவைப் பார்த்தாள் அஞ்சலி. அவளை முறைத்தாள். அவள் வேண்டுமென்றே செய்வதாகத் தோன்றியது. ஒரு நிமிடம் அர்ஜூனைப் பார்த்த ஜானகி, “சரிடா கண்ணா, நீ தான் போய் உட்காரு.” என்றதும், அம்மாவே சொல்லி விட்டார் என்ற சந்தோஷத்தில் அஞ்சலியின் அருகில் போய் அமர்ந்தான் அர்ஜூன்.

அவன் அமர்ந்த அடுத்த நிமிஷமே அஞ்சலி படாரென்று எழுந்து விட்டாள். அர்ஜூனுக்கு முகமே வாடிப் போனது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

“ஆண்ட்டி. நானும், மதுவும் பரிமாறறோம் நீங்க உட்காருங்க.” என்று அஞ்சலி சொன்னதும், முதலில் ஒப்புக் கொள்ளாதவர், அவள் மிகவும் வற்புறுத்தவே சரி என்று அர்ஜூனுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

இருவரும் அவர்களுக்கு பரிமாற, அர்ஜூன் எதைக் கேட்டாலும், அதை மதுவே பரிமாறும் படி செய்தாள் அஞ்சலி. வேண்டுமென்றே அவள் செய்வதை ஜானகியைத் தவிர அனைவரும் தெரிந்து கொண்டனர்.

அதன் பிறகு, மதுவும் அஞ்சலியும் சாப்பிட்டு முடித்தனர். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அர்ஜுன் எவ்வளவோ முயன்றும் அஞ்சலி பேசவில்லை. ஆனால், ஜானகியிடம் மிக அன்பாகப் பேசினாள், பழகினாள். அவருக்கும் அவளை ரொம்பப் பிடித்துவிட்டது. அவருக்கு அவர்கள் வந்தது ஒரு நிறைவைத் தந்தது. செய்து வைத்த அனைத்து பலகாரங்களையும் அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்.


மிகவும் மறக்க முடியாத நாளாக அமைந்தது ஜானகிக்கு. அஞ்சலியைப் பற்றித்தான் அதிகமாக பேசிக்கொண்டிருந்தார் அர்ஜூனிடம். ஆனால், என்ன பிரயோஜனம்.. ஜானகி அர்ஜுனிடம் கேட்டபோது அவன் அவளைப் பற்றி எதுவும் சொல்லாமல் மழுப்பி விட்டான். அவளிடம் பேச முடியவில்லை என்ற கவலை இன்னும் அதிகமாக தொற்றிக் கொண்டது. இது எங்கே போய் முடியும் என்று தெரியாமல் தவித்தான் அர்ஜூன்...

(தொடரும்...)
 
Neega epi kku navila romba gap kodukuringo adutha epi varum munnae katha maranthu poguthupa.suvarasiyam kurayuthu.
 
Neega epi kku navila romba gap kodukuringo adutha epi varum munnae katha maranthu poguthupa.suvarasiyam kurayuthu.

சரி தான் மேம். நான் இதோடு சேர்த்து இன்னும் 2 கதைகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கணும் இல்லையா. அதனால தான் தொடர்ந்து கொடுக்காமல், வாரம் 2 எபி மட்டும் போஸ்ட் செய்கிறேன். அதோடு மற்ற கடமைகளும் ஆற்ற வேண்டியதாய் உள்ளது. வேறொன்றும் இல்லை. என்னால் முடிந்த அளவு சீக்கிரமா கொடுக்க முயற்சி செய்கிறேன் மா..?? என் கதையை படித்ததற்கு நன்றி..???
 
Top