Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 20

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 20

நீண்ட நாள் கழித்து பிரவீனுடன் அதிக நேரம் செலவழித்தனர் பத்மாவும், வெங்கடேசனும். அவர்களின் தனியுரிமையில் தான் இருந்தால் அவ்வளவு நன்றாக இருக்காது என நினைத்த மது, தன் செல்பேசியோடு அவர்களிடமிருந்து விடைபெற்று மேலே அவர்களது அறைக்கு வந்தாள். இதை பிரவீன் கவனிக்காமல் இல்லை.

மாலை வேளை காற்று இதமாக வீசிக்கொண்டிருக்க, பனி வரும் வேளை, இருட்ட ஆரம்பித்தது. நன்றாக தூங்கி எழுந்த பின், பிரவீன் மெல்ல மேலே வந்தான். அப்போது, வராண்டாவில் நின்று மது போன் பேசிக்கொண்டிருந்தாள். அவன் வருவதை கவனித்தவள், மெல்ல எதிர்முனையில் சொல்லிவிட்டு போனை வைத்தவாறு அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

அவனும் பதில் புன்னகை புரிந்தவாறே, “ஏங்க, போன கட் பண்ணிட்டிங்க.? நீங்க பேசுங்க. நான் அப்படியே சும்மா என்னோட பழைய ரூம பாத்துட்டு போலாம்னு வந்தேன். ரொம்ப வருஷம் ஆச்சே. அதான்.” என்று ஒருவாறாக சமாளிக்க.

மது அதைப் புரிந்தவளாக, “ஆங், தாராளமா போய் பாருங்க. உங்க ரூம நாங்க எப்படி வைச்சிருக்கோம்னு செக் பண்ண வந்தீங்க தானே.?” என்றாள் நக்கலாக.

“அய்யய்யோ.!! நீங்க வேற, அப்படியெல்லாம் இல்லீங்க. நிஜமாலுமே சும்மாதான் வந்தேன். நீங்க நினைக்கற மாதிரியெல்லாம் இல்ல.” என்றான் பிரவீன் பதறியவாறு.

“நீங்க என்னங்க, எங்க ஊருல பேசற மாதிரி ஏங்க, வாங்க, போங்கன்னு ரொம்ப மரியாதையா பேசறீங்க. எந்த ஃபார்மாலிட்டிஸும் வேண்டாம். என்ன மதுன்னே கூப்பிடலாம்.” என்றாள் மது.

அவளின் இயல்பான பேச்சை ரசித்தவாறே, “ஓகே, மது. உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ் சொல்லணும். நீங்க நேத்து என்கிட்ட பேசலன்னா, இப்போ இங்க வந்திருப்பனான்னே தெரியல. அம்மா இப்போவே 90% குணமாயிட்ட மாதிரி இருக்காங்க. ரெண்டு பேரும் ரொம்ப ஹேப்பி. அவங்கள வருஷம் கழிச்சு பாத்ததில எனக்கும் ஹேப்பி. ரொம்ப நாளா எதையோ மிஸ் பண்ண மாதிரி இருந்தது. எப்பவும் அந்த வொர்க் டென்ஷன் இருந்துட்டே இருக்கும். இப்போ கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கற மாதிரி இருக்கு.” என்று அவன் சொல்ல, அதைப் பார்த்து சந்தோஷப்பட்டாள் மது.

“இதுக்கு எதுக்கு போய் தேங்க்ஸ் எல்லாம். எனக்கு மனசில பட்டத சொன்னேன். அவ்வளவுதான். ஆனா, அதுக்கு இவ்ளோ மதிப்பு குடுத்து, அவ்ளோ தூரத்தில இருந்து உடனே கிளம்பி வரதெல்லாம் ரொம்பப் பெரிய விஷயம். அதுக்கு உங்களத்தான் பாராட்டணும்.” என்று அவள் சொல்ல, அவன் சிரித்தபடி,

“போதும் மது, நான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்ல, பதிலுக்கு நீங்க என்னப் பாராட்ட, இப்படியே போய்கிட்டே இருக்கு. இதோட ஸ்டாப் பண்ணிக்கலாம்.” என்று சொல்ல, அவளும் சிரித்தவாறே தலையசைத்தாள்.

“ஆங்.. மது, உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும். நீங்க நாளைக்கு கிளம்பறதா அப்பா சொல்லிட்டிருந்தார். அப்படியா.?” என்றான்.

“ஆமா, பிரவீன். இப்போதான் அப்பா சொன்னார். நைட் பதினொரு மணிக்கு பஸ்ல கிளம்பறதா சொல்லிட்டிருந்தார். மார்னிங் வந்திடுவார். அப்பறம் நாங்க மதியம் ட்ரெயின்ல போய்க்குவோம்.” என்றாள் மது.

தான் சொல்லாமலே அவள், அவனது பெயரை உச்சரித்தது அவனுக்குப் பிடித்திருந்தது. அவள் மேல் ஒரு தோழமை உணர்வு வந்தது. எதையோ சொல்லத் தயங்கியவனை ஒருமுறை பார்த்தவள், “பிரவீன், நீங்க ஏதோ சொல்லணும்னு சொன்னீங்க.” என்று கேட்க, எதையோ யோசித்தவன் சொன்னான்.

“இல்ல, நாங்க ஒரு முடிவு பண்ணிருக்கோம். இந்த வீக்க கொஞ்சம் யூஸ்ஃபுல்லா பண்ணனும்னு ஆசைப்படறேன். அதனால, அம்மா, அப்பாவக் கூட்டிட்டு கேரளா சைட் போலாம்னு பிளான். அவங்களுக்கும் கொஞ்சம் சேஞ்சா இருக்கும். எப்பவும் இங்கயே தான் இருக்காங்க. அதுவே, ஒரு மாதிரி இருக்கும்னு நான் தான் அவங்ககிட்ட போலாம்னு சொனேன். அவங்களும் சரின்னு சொல்லிருக்காங்க. நாளைக்கே கிளம்பினா சரியா இருக்கும். அங்க போய் அட்லீஸ்ட் ஒரு மூணு நாளாவது இருக்கணும். அப்போதான் கொஞ்சமாது என்ஜாய் பண்ண முடியும். நிறைய இடத்த சுத்திப் பார்த்த மாதிரி இருக்கும்.” என்றான் பிரவீன்.

“ஓ.. சூப்பர் பிரவீன். ரொம்ப சந்தோஷம். ஊட்டில யாராவது தெரிஞ்சவங்க இருக்காங்களா.? இல்ல ரூம் புக் பண்ணிருக்கிங்களா.?” என்றாள்.

“ஃப்ரெண்ட் வீடு இருக்கு. ஆனா, அவன் இப்போ டெல்லில இருக்கான். அதுவும் இல்லாம அங்க போய் அவங்க ஃபேமிலிய டிஸ்டர்ப் பண்ணிடக் கூடாது இல்ல. அதனால ரூம் தான் பாக்கணும். அதுவுமில்லாம, அங்க போனா ஒரே இடமா இருக்க முடியாது. வெவ்வேற பக்கம் போகணும். அதுதான்.” என்றான்.

“ஓ. ஓகே. எப்படி டிரைவர் பேசிட்டிங்களா.? ஏன்னா அவ்ளோ லாங்க் போகணுமே.” என்றாள் மது.

“நானே ட்ரைவ் பண்ணிடுவேன். அப்பா கொஞ்ச நேரம், நான் கொஞ்ச நேரம்னு அப்படியே போயிடலாம். பேசாம, நாளைக்கு நாம எல்லாரும் ஒண்ணா கிளம்பினா என்ன.? எப்படி இருந்தாலும், கோயம்புத்தூர் போய் தானே கேரளா போகப் போறோம். அதனால தான் கேக்கறேன். அப்பாவ ஏன் சிரமப்படுத்தறீங்க. அவர்கிட்ட எங்க அப்பா பேசறேன்னு சொன்னார். எங்க கூட வரதுக்கு உங்களுக்கு எதுவும் அப்ஜெக்ஸன் இருக்கா மது.?” என்றான் அவளிடம் கேள்வியுடன்.

“ஹையோ!! என்ன பிரவீன் இது, அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல. என்ன, திடீர்னு சொன்னா அப்பா எப்படி ரியாக்ட் பண்ணுவாருன்னு தெரியல. அதுவும் இல்லாம, டிக்கட் எல்லாம் புக் பண்ணிருப்பார். அதனால தான் யோசிக்கறேன்.” என்றாள் யோசனையுடன்.

“சரி, எப்படியாவது சொல்லிப் பாருங்களேன். ஏன்னா, அவருக்கும் தேவையில்லாத அலைச்சல் தானே.” என்று அக்கறையுடன் சொல்ல, அவனைப் பார்த்து புன்னகைத்தவாறே அவள் அப்பா நம்பரை அழுத்தினாள்.

எதிர்முனையில், “ஆங், சொல்லு மா..” என்று அவள் அப்பாவின் குரல் கேட்க, சற்று தயக்கத்துடன், “அப்பா, நீங்க கிளம்ப போறீங்களா.? இங்க, அங்கிளும், ஆன்ட்டியும் அவங்க பையனோட கேரளா போறாங்களாம். அதனால, கார்ல என்னையும் வந்து அப்படியே கோயம்புத்தூட்ல ட்ராப் பண்ணிடறதா சொல்றாங்க. என்னப்பா பண்றது. நீங்க என்ன சொல்றீங்க.?” என்றாள் மது.

அவள் பேசியதில் இருந்து, ஒரு சின்ன விஷயம் என்றால் கூட, அவளது அப்பாவுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்கிறாள் என்பது தெரிந்தது பிரவீனுக்கு. அவள் பேசிக்கொண்டே அந்தப் பக்கமாக நகர்ந்தாள்.

“ஆங்.. ஆமா மா, இப்போதான் வெங்கி எனக்கு போன் பண்ணிக் கேட்டான். அதான் யோசிச்சிட்டு இருக்கேன். உனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லன்னா, நீ அவங்க கூடவே வந்திடு. இல்லன்னா நான் வரதுன்னா வரேன்.” என்றார் அவர் அவளின் பதிலை எதிர்பார்த்தவாறு.

“உங்களுக்கு ஓகேன்னா, நான் அவங்க கூடவே வரேன் பா. எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்ல.” என்றாள் மது.

“அப்போ சரி மா. நீ அப்படியே பண்ணு. நான் டிக்கட்ட போய் கேன்சல் பண்ணிட்டு வந்திடறேன்.” என்றபடி போனை வைத்துவிட்டு கிளம்பினார்.

அந்தப் பக்கமாகப் போய் பேசிக்கொண்டிருந்தவள் திரும்பி வரும் போது என்ன சொல்லப் போகிறாளோ என்ற ஆவலில் இருந்தான் பிரவீன்.

வந்தவள், “அங்கிள் ரொம்ப ஃபாஸ்ட். அதுக்குள்ள எங்க அப்பாகிட்ட பேசிட்டார். அப்பா, என்னைக் கேட்டார். நான் உங்க கூடவே வரதா சொல்லிட்டேன்.” என்று மது சொல்ல, மனதினுள் குதூகலித்தான் பிரவீன்.

பேசிக்கொண்டே கீழே வந்தார்கள். உள்ளே நுழைந்ததும், பத்மா கிட்சனில் இருப்பதைப் பார்த்து வெகு விசையாக அங்கே சென்றாள் மது.

“ஆண்ட்டி நான் கொஞ்ச நேரம் மேலே போய்ட்டு வரதுக்குள்ளே, கிட்சனுக்கு வந்துட்டிங்களா.? போதும் வாங்க, நான் டின்னர் செய்யறேன்.” என்றபடி அவரைப் பிடிக்க,

பத்மாவோ, “இல்ல மது, இப்போ எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்ல. பிரவீன் வந்ததுமே, எனக்கு பழைய தெம்பு வந்துடுச்சு. இதோ இப்போ வேலைக்காரி வந்துடுவா., இருக்கற வேலையெல்லாம் முடிச்சிட சொல்லிட்டேன். நாளைக்கு நாம கிளம்பறோம் இல்ல. அவ வந்தா கொஞ்சம் ஒத்தாசை பண்ணுவா. இன்னைக்கு டின்னர் நான் தான் பண்ணுவேன். ப்ளீஸ் மா, என்ன செய்ய விடேன். அவனுக்கு பிடிச்சத செய்யலாம்னு இருக்கேன். அதனால தான் இப்போவே ஆரம்பிச்சேன். நீ போய் அவன்கிட்ட பேசிட்டு இரு. நான் எல்லாத்தையும் பார்த்துக்கறேன்.” என்று சொல்ல, அவளோ அவரின் புது உற்சாகத்தைப் பார்த்தவாறு வெளியே வர, அங்கே அனைத்தையும் கேட்டவாறு பிரவீன் நின்றிருந்தான். அதைப் பார்த்தவள் அப்படியே நின்றாள்.

“என்ன, மது. எங்க அம்மா உங்கள பேசியே அனுப்பிட்டாங்களா.?” என்றான் கிண்டலாக.

“டேய்.. என்னடா, கிண்டல் பண்றியா.? உனக்காகத் தாண்டா பிடிச்சத செய்யறேன். மதுவும் பாவம் நேத்தில இருந்து எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்கா. அவளுக்கும் கொஞ்சம் ரெஸ்ட் வேணும். அதனால தான், அவகிட்ட சொல்லிட்டு இருந்தேன்.” என்று சொல்லிக்கொண்டிருக்க, வேலைக்காரி வந்துவிட்டாள்.

பத்மா அவளிடம் வேலையை சொல்லிவிட்டு சமைப்பதில் மும்முரமானார். இருவரும் வெளியே வர, “சரி நான் மேலே போய் என்னுடைய ரூம்ல இருந்து லக்கேஜ்ஜெல்லாம் எடுத்துட்டு வந்திடறேன்.” என்று கிளம்பியவளிடம்,

“இருங்க, நானும் வரேன். உங்களுக்கு ஹெல்ப்பா இருக்கும்.” என்று சொல்ல, ஏனோ அவனிடம் மறுப்பு சொல்லத் தோணவில்லை மதுவுக்கு.

அவளோடு சென்ற பிரவீனைப் பார்த்த வெங்கடேசன், “ம்ம்ம்.. ம்ம்ம்..” என்று கண்ணடித்துச் சிரித்தவாறு சைகை காமிக்க, அதைப் பார்த்த பிரவீன், “சும்மா இருங்கப்பா..” என்று அவனும் சைகை காமித்தவாறு சென்றான்.

இருவரும் மேலே ரூமைப் பூட்டிக்கொண்டு லக்கேஜை எல்லாம் எடுத்துக்கொண்டு கீழே வர, சிறிது நேரத்தில் அனைவரும் இரவு உணவை முடித்தனர். சீக்கிரமாகவே படுக்கைக்கு சென்றனர். அடுத்த நாள் கேரளா செல்வதால், அதற்குத் தேவையானவற்றை எடுத்து வைப்பதில் ஆயத்தமாயினர். பத்மாவுக்குத் தேவையானவற்றை எடுத்து வைப்பதில் மதுவும் அவருக்கு உதவி செய்ததால், அவருக்கு வேலை சீக்கிரம் முடிந்தது.

அதிகாலை 5 மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டனர். பிரவீன் ட்ரைவ் செய்ய, முன் சீட்டில் வெங்கடேசனும், பின்னால், மதுவும், பத்மாவும் இருந்தனர். அந்தப் பயணம் மதுவுக்கு புது அனுபவமாக இருந்தது. இதுவரை அவள், சென்னையிலிருந்து, கோயம்புத்தூருக்கு பஸ்ஸிலோ, அல்லது ட்ரெயினிலோ, சென்றிருக்கிறாள். இதுதான் முதன்முறை இதுபோல் காரில் பயணிப்பது.

பிரவீன் அவ்வப்போது மதுவை முன் கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டே இருந்தான். பத்மாவும், மதுவும் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டே வந்ததால், அந்தப் பயணம் நன்றாகவே அமைந்தது. இந்தப் பயணம் எதற்க்காக என்று தெரியாமலேயே மது அவர்களோடு சென்றுகொண்டிருந்தாள்.


(தொடரும்...)
 
Padmaku marumol kidachachu.
Praveen Madhu understanding and good combination.
Ippo katha sudu pidikuthu.nice epi
 

Advertisement

Top