Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் – Episode 5

Advertisement

Aathirai

Well-known member
Member
1979

(Episode-5)

அன்று ஞாயிற்றுக்கிழமை, வீடே கலகலப்பாக இருந்தது.. அனைவரின் முகத்திலும் ஒரு சந்தோஷம்.. அதிலும் வருணும், பூஜாவும் தான் ஜாலியாக இருந்தனர்.. பின்னே, வெளியே பிக்னிக் செல்வதென்றால் வீட்டில் பிள்ளைகளை விட அதிகமாக சந்தோஷப்படுபவர் யாரேனும் உண்டோ..?

மகேஷ் தான் இதற்க்கு ஏற்பாடு செய்திருந்தார்.. அவர் முக்கியமாக அஞ்சலிக்காகத் தான் இதைச் செய்திருந்தார்.. அன்று ஒரு நாள் தான், அவர் தன் குடும்பத்தோடு செலவிடும் தினம்.. பிருந்தாவன் கார்டனுக்கு செல்வதாக திட்டம்.. மேலும், அது அஞ்சலிக்கு மிகவும் பிடித்த இடம் வேறு.. அதனால் தான் அவர் அங்கு செல்ல திட்டமிட்டிருந்தார்...

தேவையானவற்றை எடுத்துக்கொண்டனர்.. காலை உணவை முடித்துக் கொண்டு கிளம்பினர்.. முதலில் சாமுண்டீஸ்வரி கோயிலுக்குச் சென்றனர்.. மகேஷின் இஷ்ட தெய்வம்.. மாதம் ஒரு முறை கண்டிப்பாக வந்து விடுவார்.. இன்று இவர்களையும் அழைத்து வந்து விட்டார்.. கடவுளை வழிபட்டு வெளியே வந்து ஒரு ஹோட்டலில் மதிய உணவை முடித்துக் கொண்டனர்...

அடுத்து பிருந்தாவன் கார்டனுக்கு பயணித்தனர்... காரில் செல்லும் போது, ஏதோ ஒரு ரம்மியமான உணர்வை உணர்ந்தாள் அஞ்சலி... அது, தன்னை இதமாக வருடிச் செல்லும் காற்றா, இல்லை மாமா காரில் ஒலிக்க விட்ட இசையா என்று தெரியவில்லை..

இது போல் எத்தனையோ முறை காரில் இவர்களுடன் சென்றிருக்கிறாள்.. அப்பொழுதும் மாமா இப்படித்தான் காதல் பாடல்களாக ஒலிக்க விடுவார்.. சைடு கேப்பில் அவர் அருகில் இருக்கும் அத்தையைப் பார்த்து கண் சிமிட்டுவார்.. இதை, அவர்கள் அறியாமல் அஞ்சலி ரசிப்பாள்..

ஆனால், இன்று தன்னுள் உண்டான உணர்வு புதியது... அது என்னவென்று புரியவில்லை.. ஜன்னல் வழியே இயற்கையை ரசித்துக் கொண்டு, பாடல்களை முணுமுணுத்தபடி வந்தாள்.. அப்படியே வந்ததில், பிருந்தாவன் கார்டன் வந்து விட்டது... மாலை 5 மணி ஆகியிருந்தது...

வெளியே ஒரு நிமிடம் நின்று இயற்கைக் காற்றை சுவாசித்தபடியே பார்த்தாள்.. சென்ற செமஸ்டர் லீவில் தன் தோழிகளோடு வந்ததை நினைவு கூர்ந்தாள்.. அந்த இனிமையான நாட்களை அவளால் மறக்கவே முடியாது...

திடீரென அவள் தோழிகளின் நினைவு வர, அவர்களுடன் திரும்பவும் 2 வருடங்கள் ஒன்றாக இருக்கும் வாய்ப்பு தனக்கு கிட்டுமா என்று ஏங்கினாள்.. யோசனையில் மூழ்கி இருந்தவளின் தோளில் தட்டினார் மகேஷ்...

“அஞ்சலி, ரொம்ப யோசனையா இருக்கையா..?? என்னாச்சு டா...??” என்றார்..

“ஒண்ணும் இல்ல மாமா.. செமஸ்டர் லீவ்ல பிரண்ட்ஸ் எல்லாத்தையும் கூட்டிட்டு வந்தேனே அத நெனச்சு பாத்துட்டு இருந்தேன்..” என்றாள் சிரித்தபடி...

“ஓ... அந்த வாலுகளா...” என்று அவரும் நினைத்து சிரித்தார்.. அதற்குள் பூஜா வந்தாள்...

“அக்கா... நீ இங்க என்ன பண்ற..?? வா, நாம அந்த பக்கமா போலாம்.. அவங்கல்லாம் ஓல்ட்ஸ்... ஒரு ஓரமா உட்கார்ந்து பேசிட்டு இருப்பாங்க.. நீ ஏன் அவங்க கூட சேந்துட்டு இருக்க...” என்றாள் செல்லமாக... மகேஷ் அவளை செல்லமாக அடிக்க வந்தார்... பூஜா, அஞ்சலியை இழுத்துக் கொண்டு ஓடியே விட்டாள்..

“டேய் பாத்து போய் விளையாடுங்க.. நாங்க, இங்கயே இருக்கோம்... எதுன்னாலும் போன் பண்ணுங்க...” என்று கத்தினார் மகேஷ்.. அவர்கள் இருவரும் தூரத்தில் சென்ற படியே தலையை ஆட்டினர்...

பூஜா, அஞ்சலியை சில்ட்ரன்ஸ் பார்க்குக்கு அழைத்துச் சென்றாள்.. அங்கே ஏற்கனவே வருண் சர்கஸில் விளையாடிக் கொண்டிருந்தான்.. பூஜாவும் போய் அவனோடு விளையாடத் துவங்கினாள்.. அஞ்சலியைக் கூப்பிட்டாள்... ஆனால், அவளோ “ம்ஹும்ம்ம்....” என்ற படியே ஒரு இடத்தில் அமர்ந்து அவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்...

அவள் அமர்ந்திருந்த இடத்தின் பின்புறம் பெரிய சத்தமாக இருந்தது.. அங்கே போகிறவர், வருகிறவர்களின் பார்வை அந்த இடத்தில் பதியாமல் செல்லவில்லை... தமிழ் பேசும் இளைஞர்களின் சத்தமாக இருக்க அதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் அஞ்சலி..

அவர்கள் அமர்ந்து கொண்டே, பல்வேறு விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருந்தனர்.. அதே சமயம் வேறு எவரையும் தொந்தரவு செய்யவில்லை... அவர்களின் சிரிப்பு, சத்தம் அனைத்தும் அவளுக்கு அவள் தோழிகளை நினைவுபடுத்தியது...

இதே போல தான் அவர்களும் போன முறை வந்திருந்த போது, அனைவர் பார்வையும் அவர்கள் மேலே பதிந்திருந்தது... அதை நினைத்துக் கொண்டிருந்தவள் அவள் மாமா போன் செய்ய பேசினாள்.. பத்திரமாக இருக்குமாறு சொன்னார்... சரி என்று கேட்டுக் கொண்டவள், பூஜாவையும், வருணையும் அழைத்துக் கொண்டு வேறு பக்கமாக சென்றாள்..

“அக்கா, இன்னும் கொஞ்ச நேரத்துல வாட்டர் டான்ஸ் ஆரம்பிச்சுடுவாங்க... நாம போய் பாக்கலாம் கா..” என்றான் வருண்..

“அதுக்கு தான் டா இங்க உங்கள கூட்டிட்டு வந்தேன்.. அது என்னோட பேவரைட் ஆச்சே... அதான்..” என்றாள் அஞ்சலி...

சிறிது நேரத்தில் இருட்டியதும் வாட்டர் டான்ஸ் ஆரம்பித்து விட்டது... அந்த இடத்தைச் சுற்றி ஏகப்பட்ட கூட்டம்... கூட்டத்தில் சிலர் ஏதாவது செய்யக் கூடும் என்று அவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் கையைப் பிடித்து நின்று கொண்டிருந்தனர்...

அவள் மாமா திரும்பவும் போன் செய்து, அவர்களும் அங்கே வந்து கொண்டிருப்பதாக சொன்னார்.. சரியென்று அவள் போனை வைக்கவும், திடீரென்று கரண்ட் கட் ஆனது...

எங்கும் இருள் பரவியிருக்க, அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை... பூஜா கத்தியே விட்டாள்... இறுக கைகளைப் பற்றிக்கொண்டு நின்றனர்... அஞ்சலி தைரியம் சொன்னாள்... திரும்பவும் மகேஷ் போன் செய்தார்...

அதற்குள் யாரோ காலுக்குள் ஏதோ ஊர்வதைப் போல் இருக்க, “பாம்பு.. பாம்பு...” என்று கத்த... அனைவரும் முட்டி மோதிக்கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடினர்.. அவர்கள் சற்று ஓரமாக கைகளைப் பிடித்தபடியே நின்றனர்.. மகேஷின் போனைக் கூட அவள் பொருட்படுத்தவில்லை...

“டேய்.. கைய்ய கெட்டியா புடிச்சுக்கோங்க டா... எங்கயாவது ஓடிராதிங்க... வருண், விட்றாதடா நல்லா புடிச்சுக்கோ டா...” என்றபடி கண்களை மூடி கைகளை இறுகப் பற்றினாள்...

“அக்கா, நான் பூஜா கைய்ய கெட்டியா புடிச்சுட்டேன்... நீ எங்க நிக்கற...??” என்றான்.. அதிர்ந்தவள், அப்போது தான் அவள் பற்றியிருக்கும் கை யாருடையது என்று நினைத்தாள்...

அப்போது கரன்ட் திரும்ப வந்து விட்டது... மறுகணம் நிமிர்ந்தாள்... அங்கே அந்த இளைஞனும் அவளையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.. இருவர் விழிகளும் ஒன்றை ஒன்று பரிமாறிக்கொண்டன... இருவரும் சிலை போல் நின்றனர்.. கைகளை அப்பொழுதும் விடவில்லை...

“டேய்... அர்ஜுன்... உன்ன எங்க எல்லாம் தேடறது... நீ இங்க எப்படி வந்த...??” என்றபடி நண்பன் ஒருவன் குரல் கொடுத்துக்கொண்டு வந்தான்...

ஆம்... அது அர்ஜுன்... அவனே தான்... நண்பன் அவனை இழுத்துக்கொண்டு சென்றான்... அவளை, திரும்பிப் பார்த்த படியே சென்றான் அர்ஜுன்... அதற்குள் வருணும், பூஜாவும் அவளிடம் வந்தனர்.. மகேஷும் எப்படியோ அவர்களை கண்டுபிடித்து வந்து விட்டார்.. உடனே, கூட்டிக்கொண்டு கிளம்பினார்.. அஞ்சலி இன்னும் அந்த நினைவிலிருந்து மீளவில்லை...
 
மிகவும் அருமையான பதிவு,
ஆதிரை டியர்

அச்சோ
அர்ஜுனின் கையை அஞ்சலி பிடித்து விட்டாளா?
இதுதான் இவர்களுடைய first மீட்டிங்கா?
அப்டேட் ரொம்பவே சின்னதாக இருக்கே
கொஞ்சம் பெரிய அப்டேட்டா கொடுங்க, ஆதிரை டியர்
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
ஆதிரை டியர்

அச்சோ
அர்ஜுனின் கையை அஞ்சலி பிடித்து விட்டாளா?
இதுதான் இவர்களுடைய first மீட்டிங்கா?
அப்டேட் ரொம்பவே சின்னதாக இருக்கே
கொஞ்சம் பெரிய அப்டேட்டா கொடுங்க, ஆதிரை டியர்
ஆமா மேம். கொஞ்சம் சின்னது தான். ஆனால், எதிர்பாரா சம்பவம்.
 
Top