Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழைப்பாயா ?9?

Advertisement

Rudhra Vikram

Member
Member
" கார்த்தி... எதாச்சுனா என்ன கூப்பிடு... " என்று அவருடன் சென்றான்..
வித்தார்த்...

தனக்காக காத்திருக்கும் ஆபத்தை அறியாமல்...
***

பாழடைந்த பழைய வீடு போல காட்சியளித்த அந்த ஜர்னலிஸ்ட், செந்தில் வீட்டின் முன் நின்றிருந்தனர் இருவரும்...

வெளியே அழகுக்காக வைக்கப்பட்டிருந்த அனைத்து விதமான பொருட்களும் உடைந்து கிடந்தன.

அவரின் வீட்டை ஒட்டி இங்கொன்றும் அங்கொன்றுமாய் மற்ற வீடுகள் இருந்ததால் உதவிக்கு கூட யாரையும் அழைக்க முடியாமல் போனது.

அந்த உடைந்து போனவற்றை கால்களால் அகற்றி அனைத்தையும் அலசியவாறே நடந்தவன்
இவை அனைத்தும் அந்த ஆதாரத்திற்காக தான் என்பது புரிந்தது.

" சார்... எல்லாத்தையும் உடைச்சிப் போட்ருக்காங்க... உங்களுக்கு ஏதாவது தெரியுமா.. அவங்க யாரு? அந்த மாதிரி? " ஒவ்வொன்றாக குறித்து வைத்துக் கொண்டே வினவினான்.

" என்ன தள்ளி விட்டதும் கையும் ஓடல ... காலும் ஓடல தம்பி... இங்க வந்து பாத்தா... இந்த வீடுல நிறைய பேர் எல்லாத்தையும் உடைச்சிப் போட்டுட்டு இந்தாங்க.. அதான் தாமதிக்காம போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தேன்... அதுங்குள்ள.... " என அவர் அழுகையை தன்னுடன் வைத்துக் கொண்டு முன்னேற... வீட்டை புரட்டிப் போட்டது போல ஒன்றை கூட விட்டு வைக்கவில்லை அவர்கள்.

கண்கள் அங்கும் இங்கும் அலைப்பாய... சிதறிக் கிடந்த பொருட்கள் அனைத்தும் வெறும் தாள்கள் தான் என நினைத்து கையில் எடுத்தவன்.... அவை பலரின் வாழ்க்கை சரிதம் என அறிந்து சமைந்து நின்றான்...

" இது வரைக்கும் ஒரு ஜர்னலிஸ்டா உங்கள நிறைய இடத்துல நோடீஸ் பண்ணிருக்கேன் சார்... ஆனா, ஒரு ஜர்னலிஸ்ட் வீட்ல இத்தனை விசயங்களை நோடீஸ் பண்றது இது தான் ஃபர்ஸ்ட் டைம்.... " என அவன் கூறிக் கொண்டே கையில் எடுத்த சில தாள்களை மேசை மீது வைத்து விட்டு அவரைப் பார்த்தான்...

" தம்பி... அவரு யாருனு எனக்கு தெரியாது பா... ஆனா.. அவரு என்கிட்ட குடுத்த ஒரு பொருள்ல கண்டிப்பா இந்த டரக் சம்மந்தமா ஏதாச்சும் இருக்கும்... நா... நா.. நான் அதை ஒரு பத்திரமான இடத்துல தான் வச்சிருக்கேன்... இருங்க தம்பி... " என்றவாறே வீட்டின் பின்புறம் செல்ல....

செந்தில் தன் கைப்பட கடைசியாக எழுதி வைத்து பாதியில் விட்டிருந்த ஒரு ஃபை பேப்பர்ஸ் சிதறிக் கிடக்க... அது வித்தார்தின் கால்களில் தட்டுப்பட்டது.

அதை எடுத்துப் பார்த்தவன் கண்கள் இரண்டிலும் தீப்பொறி தெறிக்குமளவு உடல் சூடேறி கண்கள் சிவந்த இருந்தன.

அவன் உதடுகள் தன்னிச்சையாக அவனின் பெயரைக் கூறியது....

" தக்ஷன்... "

திடீரென.....

"ல... லா... லா... லா...
ல... ல... லா... லா... "

அவனின் அலைபேசி சிணுங்க அதை எடுத்து செவியில் பொருத்தினான்.

" ஹலோ, என்னடா நினைச்சிட்டு இருக்க.... மணி என்ன தெரியுமா... இட்ஸ் ஆல்ரெடி 11.... இவ்ளோ லேட் ஆச்சு. ஏன் இன்னும் வீட்டுக்கு
வரல... "

ரோஷினியின் குரலில் நிகழ்வுக்கு வந்தவன் தன் கோபம் அனைத்தையும் தன் உள்ளங்கையில் நிரப்பி சுவரில் ஓங்கி குத்தினான்...

தன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற மனப் போராட்டம் அவனை சற்று உலுக்கியது. ஆனால், ரோஷினியை விட வேறெதுவும் அவன் கண்களுக்கு புலப்பட மறுக்க... தன் தன்மானத்தையும் விட்டு தர முடிவெடுத்தான்.

" இல்ல மா.. நான் வர லேட் ஆகும்... "

" அடச்சீ... நீ வரலனு எவன் கவல பட்றா... நீ வீடு வந்து சேரலேனா கார்த்தியும் போய்ருக்க மாட்டான்ல அதான்... " அவளை எண்ணி சிரிப்பதா கவலைப்படுவதா என உளன்றவன்...

அலைபேசி திரையில் மிளிர்ந்த கார்த்தியின் பெயரைப் பார்த்ததும்...

" ஐ வில் கால் யூ லேட்டர் ரோஷினி... பை... " என கூறி அணைத்துவிட்டு
அவனின் அழைப்பை ஏற்றான்....

கார்த்தி அந்த குறிப்பிட்ட பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்ததும் அந்த இடத்தை மொத்தமாக அலசி ஆராய... அங்கு எந்த ஒரு தூசித் துகள் கூட இல்லை.

கேசத்தைக் கோதிக் கொடுத்து கொண்டே சுற்றி முற்றிப் பார்த்தவன் அந்த பேருந்து நிலையத்தின் சிசிடிவி கேமிராவைத் தேட... அதுவோ ஏற்கனவே பாதி அறுந்து போன நிலையில் காற்றில் ஊஞ்சல் விளையாடியபடி இருந்தது.

அதைப் பார்த்து கடுப்பாகிப் போனவன் வித்தார்திற்கு அழைப்பு விடுத்திருந்தான்.

" வித்து, இங்க சந்தேகம் படும் படியா எதுமே கிடைக்கல டா... இங்க இருக்க சிசிடிவி கேமிரா கூட உடைஞ்சு போய் கிடக்கு... ஆஆ... என்னடா பண்றது... "

அந்த பேருந்து நிலையம் அவ்வளவு முக்கியமான இடம் இல்லை என்றாலும் ஓரளவு இயங்கி வரும் ஒரு நிலையம் தான்...

" அங்க பக்கத்துல... எதாச்சு பெரிய வீடு... சம்திங் லைக்... கொஞ்சம் பெரிய ஆளுங்க வீடு எதாவது இருக்கா.... "

சிறிது நேரம் யோசித்த கார்த்தி, " ஹா... வெயிட் ஒரு சில பேர் இருக்கலாம்... "

" தென்... அவங்க வீட்ல இருக்க எதாவது சிசிடிவி ஃபுடேஜ்ல ரெக்கார்ட் ஆகிருக்கா பாரு... "

" ஓகே டா.. ஐ வில் செக் இட் நௌ... " என்றவன் அழைப்பைத் துண்டிக்க...
இங்கு வித்தார்த்திடம் ஒரு கருப்பு, வெள்ளை நிற பெட்டியை நீட்டினார் செந்தில்...

சிறிது நேரம் கழித்து....

" ஹம்... சொல்லு கார்த்தி எனி க்ளு.. " வித்தார்த் எதிர்ப்பார்க்காத ஒரு பதில் வந்தது.

" இது நம்ம பேட் லக் டா... இரண்டு வீட்ல சிசிடிவி இருக்கு... ஒரு வீட்ல சும்மா
ஷோக்கு வச்சிருக்கோம்.. ரெக்கார்டிங் ஆப்ஷன் இல்லனுட்டாங்க... இன்னொரு வீட்ல என்னனா வேலை செய்யதுனு சொல்லி டிஸ்டர்ப் பண்ணாதனு அனுப்பிட்டாங்க.... " என்க வித்தார்த் தன் கால்களால் தரையை ஓங்கி மிதித்தான்.

திடீரென மின்னல் வெட்ட..

" டேய்... அந்த சிசிடிவி வொர்க் பண்ணாதுனு சொன்னான்ல அது யாரோட வீடு... " என்க...

" அது... அ... ஆங்...
மிஸ்டர். வாட்சனோட வீடு டா... *** வெட்னரி ஹாஸ்பிடல் ஓனர்... " என்றதும் வித்தார்த் புருவ முடிச்சுடன்...

"ஹி இஸ் எ பர்ஃபக்ஷனிஸ்ட், ரைட்? அவர் வீட்ல வச்சிருக்கிறது வொர்க் பண்ணாதா... நீ எதுக்கும் இன்னொரு தடவை செக் பண்றது பெட்டர் டா.. "

" அது எப்டி உனக்கு தெரியும்..? " கார்த்தி பதிலில் இருந்து வினாவைக் கேட்க...

" ஸ்கூபிக்கிட்ட எத்தனை தடவை கடி வாங்கிருக்கேன்...
எப்படி மறக்கும்... " என நினைத்துக் கொண்டவன்..

" நீ போய் சொன்னத செய் டா.. " என மொபைலை அணைத்து விட்டு
திரும்பியவனின் பார்வை அந்த பெட்டியின் மீது பதிந்தது.

நீண்ட நேரம் கழித்து....

" வா டா... வா... உட்காரு... "
என்றவாறு ஒரு காஃபி கப்புடன் வர... கார்த்தி அங்கிருந்த ஒரு மேசையின் மீது அமர்ந்தான்...

" அந்த வாட்சன் போலீஸ், கேஸ்னு பயந்துட்டு தான் டா அப்டி சொல்லிருக்கான்.... லைட்டா ஜெஸ் இருந்துச்சு... எப்படியோ.... அந்த பெண்ணு இப்ப சேஃப் தானே..." வித்தார்த்தின் குரலில் நிகழ்வுக்கு வந்திருந்தான்.

" ஹம்... ஆனா.. அந்த எவிடென்ஸ்... அத என்ன பண்ண போற... " குரலில் சற்று பதற்றம் தெறிக்க...

" அதை குழி தோண்டி புதைக்க போறேன்... " என்றவனின் குரலில் வேடிக்கை சிறிதளவும் இல்லை.

" வித்து.. பீ சீரியஸ்... " என்றபடி எழுந்தவன்... வயிற்றில் ஏதோ வலி ஏற்பட... பிடித்துக் கொண்டு அமர்ந்தான் அவன்...

வித்தார்த் திரும்பிப் பார்க்க... தன்னை சாதாரணமாக காட்டிக் கொண்டவன்...

" உன்னால முடியாதுனா சொல்லிரு வித்து.. நான் பாத்துக்குறேன்... நீ வித்தார்தானு எனக்கே சந்தேகமா இருக்கு... "
பல்லிடுக்கில் கூறி விட்டு முகத்தை திருப்பிக் கொண்டான் அவன்...

" டேய்ய்ய்... உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா... அவன் ஆளுங்ககிட்ட இருந்து அந்த பொண்ண நீ ஈசியா கூட்டிட்டு வந்திருக்கலாம் "

" ஆனா... அவன்கிட்ட இருந்து.... ம்ஹூம்.... அந்த எவிடென்ஸ் அவன் பிடிக்க
இல்ல... உன்ன நீயே பணயம் வக்கிறதுக்கு சமம்... " கார்த்தி அமர்ந்திருந்த நாற்காலியில் அவனை சிறைபிடித்திருந்தவன் கூறி முடித்தான்.

" அவனுக்கு நான் பயப்பட மாட்டேன் உன்ன மாதிரி...
என்ன... விடிஞ்சா மேரி வீட்ல டிபன், ஈவ்னிங் வந்தா ராம் அங்கிள் வீட்ல சாப்பிட்றப்பறம் அவர் பொண்ணு ரூபி இருக்கா.. கொஞ்ச நேரம் விளையாட்டு, அதுவும் இல்லனா உன் வீடு இருக்கு... நம்ம ர்... "

கட கடவென தன் தன் தினசரி வாழ்வை சுருக்கமாக கூறியவனால்
அந்த ஒற்றை பெயரை கூற முடியவில்லை.

" என்ன நின்னுட்ட... " என்றபடி மேசை அருகே சென்று ரொட்டியில் ஜாமை தடவியவாறு வினவினான்....

" அது.... ஆமா.. ரோஷினி எங்க...? " அவன் சற்று பதட்டமாக வினவ ஒரு அலட்சிய புன்னகை உதிர்த்தான் வித்தார்த்.

" மணி என்ன தெரியுமா?
இட்ஸ் ஒன் ஓ க்ளாக் டா... இந்நேரம் தூங்கிட்டு இருப்பா.. அது இருக்கட்டும்... நீ ஏதோ சொல்ல வந்தியே... " என்றவன் கார்த்தியின் வெளிரிப் போன முகத்தை தான் பார்த்தான்...

" சரி... ஒத்துக்குறேன்... ரோஷினிய தான் சொல்ல வந்தேன்... " தலை குனிந்து கூற...

" எனக்கு அவ முக்கியம் டா... ஆனா அவளுக்கு நீ முக்கியம்... என்னால உங்க இரண்டு பேரையும் பணயம் வைக்க முடியாது.... " என்றவனை குழப்பமாக பார்த்தான் கார்த்தி.

கார்த்தி, " எனக்கு புரியல... " என்றபடி வித்தார்த் கையிலிருந்து ரொட்டியை பறித்து சாப்பிட ஆரம்பித்தான்...

" ஹம்... ரோஷினி உன்கிட்ட ப்ரப்போஸ் பண்ணாளா? "

வித்தார்த்தின் கேள்வி அவனை சற்று நேரம் மௌனத்தில் ஆழ்த்தியது.

" இல்ல... "

ஒற்றை வார்த்தையில் பதில் தேடினான் போலும்...

" நீ சொல்றது உண்மை இல்லனு எனக்கு தெரியும்... அவகிட்ட என்ன சொன்ன...? "

" ஹா...... ஆமா, அவ லவ் சொன்னா... நான் என்னால முடியாதுனு
சொன்னேன்.. இப்ப என்ன? " வித்தார்தின் கண்கள் கார்த்தியை தீயென சுட... அதை எதிர்கொள்ள முடியாமல் போனது.

" கடவுளோட படைப்ப பாத்தியா டா... வாய் பொய் சொன்னாலும் அத கண்ணு காட்டிக் கொடுத்திரும்.. அவ என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா... ஒழுங்கா உண்மைய சொல்லு... "

" என்னனு...? " என்றவனை மேலும் கீழும் பார்த்தான் வித்தார்த்.

" ரோஷினிய பிடிச்சிருக்கா? இல்லயா? "
வித்தார்த் நேரடியாக விசயத்திற்கு வர..

" எனக்கு பிடிக்கல... ரோஷினிய இல்ல... உன்னை... ம்ம்... ரோஷினிய பிடிக்கும் தான்... உன் மேல வச்சிருந்த மதிப்பு, மரியாதைக்காக தான் இவ்வளவு நேரம் எதுவும் பேசாம இருந்தேன்..

ஆனா, இப்ப முடியாது... உனக்கு என்னடா...??

அந்த ஜர்னலிஸ்ட்கிட்ட அவரு பொண்ண ஒப்படைச்சதும் அவர் கண்ல தெரிஞ்சுதே அந்த நிம்மதி, அந்த சந்தோஷம் அதுக்கு முன்னாடி எதுவும் பெருசு கிடையாது...

அதுக்காக என்னையும் தருவேன்... என் லவ்வையும் விட்டு தருவேன்... ஐ அம் சாரி மிஸ்டர். வித்தார்த்...

அவன் பேரு என்ன... ஆங்... தக்ஷன்... அந்த தக்ஷனுக்கு நான் பயப்பட மாட்டேன்... அந்த எவிடென்ஸ் எனக்கு தேவை இல்ல... அது இல்லாமலே என்னால அவன ஒரு வழி பண்ண முடியும்... "

விருவிருவென எழுந்து வித்தார்தின் வீட்டிலிருந்து வெளியே வர...

வித்தார்த் அவனை எத்தனை முறை அழைத்தும் கேட்கவில்லை. வாசல் வரை வந்தவனைப் பார்த்து, " குட் பை... " என்று வண்டியை முறுக்கியவன் ராம்குமாரின் வீட்டில் நின்றான்...

அவன் வயிற்றுப் பகுதியில் கட்டப்பட்டிருந்த கட்டை மீறி, அவன் அணிந்திருந்த சட்டையைத் தாண்டியும் இரத்தம் வழிய...

அதை இறுக்க பிடித்தவன் தேவியைக் காப்பாற்ற சென்றிருந்த சமயம்,
அந்த தக்ஷன் கூறிய சொற்களை நினைவு கூர்ந்தான்....
 
Top