Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழைப்பாயா ?6?

Advertisement

Rudhra Vikram

Member
Member
" தயவுசெய்து இங்கிருந்து போய்ரு... உன்ன நான் பாக்கவே விரும்பல.... I don't want to see you again... நீ சித்துவே இல்ல.... " என்றவள் அப்படியே மயங்கி சரிந்தாள்...

அப்படி கீழே விழும் சமயம் அவள் கழுத்தில் இருந்த அந்த செயின் அறுந்தது....

எங்கும் கருமை நிறமே சூழ்ந்திருக்க மெல்ல விழிகளைத் திறக்க முயற்சித்தாள் ஏஞ்சல். இமை இரண்டும் பிரிய மறுக்க கண்களில் வழிந்த கண்ணீர் அவை பிரிவதை உணர்த்தியது.

விழிகளைத் திறந்தாலும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. இரவு பொழிந்த மழையில் அதிகாலை பொழுது கூட நடுநிசி போல் தான் காட்சியளித்தது.

தட்டுத் தடுமாறி எழ முயற்சிக்க அப்போது தான் அவள் மடியிலேயே உறங்கி இருந்த ஜாக்கியை கவனித்தாள்.

ஏஞ்சல்: ஜாக்கி.... ஜாக்கி...
மெல்ல அதன் காதில் மட்டும் விழும்படி கூறியதும் அதனிடம் சிறு அசைவு தெரிய மெல்ல அருகில் இருந்த மேசையைப் பிடித்துக் கொண்டு எழுந்தாள்.

அந்த வீடே இப்போது மயானம் போல அமைதியாக இருந்தது.
ஏஞ்சலுக்கு பலமாக தலை வழி எடுக்க துவங்க... தலையைப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்தாள்...

கண்களை முடியதும் நேற்று நடந்தவை எல்லாம்
காட்சியாக ஓட.... சட்டென கண்களைத் திறந்தாள். ஒரு வேலை கெட்ட கனவாக இருக்கும் என நினைத்தவளின் எண்ணம் மாறத் துவங்கியது.

அறையைச் சுற்றி நோட்டமிட்டவளுக்கு நேற்று கிடந்தவை எல்லாம் அப்படியே இருப்பது உரைக்க.... பின்பு தான் நடந்தவை கனவு அல்ல... என நேற்று நடந்த உரையாடல்கள் அனைத்தும் காதில் ரீங்காரமாய் மீண்டும் மீண்டும் ஒலித்தன...

சிறிது நேரத்திற்குப் பின்...

மேலறையில் முகத்தை கழுவி விட்டு கிளம்பி படியிறங்கி வந்தவள்... மேசையின் மீது ரெடியாகி வைக்கப்பட்டிருந்த உணவைப் பார்த்ததும் புருவ முடிச்சுடன் அந்த இடத்தை அலசினாள்...

அவள் எதிர்ப்பார்த்தது போல மேரி தான் புன்னகையோடு நின்றுக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் உதட்டோரம் புன்னகை ஒட்டிக் கொள்ள....

" மேரி... நீ எப்போ வந்த... " என வினவ அவளை முறைத்துப் பார்த்தாள் அவள்.

" என்ன பாத்தோனே ஓடி வந்து கட்டிபிடிப்பனு பாத்தா எப்போ வந்தேன்னு கேக்குற... அது இருக்கட்டும்... ஏன் கண்ணெல்லா சிவந்திருக்கு... நைட் சரியா தூங்கலையா..."

அவள் அக்கறையுடன் வினவினாலும் அவளிடம்
உண்மையைக் கூறினால் நம்பவும் மாட்டாள், அப்படியே நம்பினாலும் அதனால் அவள் தான் வருத்தப்படுவாள் என மனதினுள் நினைத்தாள்.

" இல்ல மேரி... அதான் ஈவ்னிங் ஒரு ஷோ இருக்கு... அதுக்கு தான் பாத்துட்டு இருந்தேன்... அப்டியே தூங்கிட்டேன் போல... " என அவள் பேசுவதை எல்லாம் நம்பியும் நம்பாமல் நின்றவளின் முகம் திடீரென மாறியது...

ஏஞ்சல் கழுத்தில் இருந்த செயின் பாதி அறுந்த நிலையில் அவள் கழுத்திலேயே ஊஞ்சல் ஆடிய படி இருக்க...

" ஏஞ்சல்... இந்த செயின் எப்டி அறுந்துச்சு.. இத நீ இன்னுமா ஓப்பன் பண்ணிப் பாக்கல... " என்க அதன் பின்னரே அந்த செயின் அறுந்திருப்பதை உணர்ந்தாள் ஏஞ்சல்.

" இருக்குற நிலைமைல இத ஓப்பன் பண்றது அவசியமா... " என முகத்தைச் சுழித்துவிட்டு மேரியிடம்,

" தெரியல... நேத்து நைட் ஏதும் அறுந்திருக்கும் மேரி... நீ ஏன் டென்சன் ஆகுற... நான் சாப்டுட்டு சரி பண்ணிட்றேன்... "

ஏஞ்சல் அவ்வாறு கூறினாலும் மேரிக்கு மனம் ஒவ்வவில்லை.
அவளுக்கு தெரியாததா... வித்தார்த் ஏஞ்சலிடம் தந்துவிடும் படி கூறியிருந்தது. அவள் மனதில் இன்றும் நின்றது,
அவன் கண்களில் தெரிந்த காதல் இப்போது ஏஞ்சலின் இடத்தில் அவளால் கண்டு கொள்ள முடியவில்லை போலும்.

" ஏஞ்சல்... அது லக்கி செயின்... அத உன்கிட்டையே பத்திரமா வச்சிக்க... எனக்கு டைமாச்சு நான் போறேன்... " வார்த்தையால் கூறினாலும் அவளுக்கும் ஏஞ்சலுடன் இருக்க வேண்டும் போல தான் இருந்தது.

வழக்கமாக ஏஞ்சலிடம் இருக்கும் குறும்புத்தனம் இப்போது இல்லாதது அவளுள் ஏதோ தவறாக நடக்கிறது என்று உணர்த்தியது.

மேரியைக் கட்டி அணைத்தவள் அவளின் முக மாற்றத்திலேயே தன்னைப் பற்றி தான் மேரி கவலைப்படுகிறாள் என பழைய நிலைக்குத் திரும்ப முயற்சித்தாள்.

" ஆமா மேரி... மாம்ஸ் எங்க...? ஆள காணோம்.. "
என எட்டிப் பார்க்க... அவள்
தலையிலேயே தட்டிய மேரி...

" ஏன்டி.. உன்ன பாக்க நான் அவசர அவசரமா கிளம்பி வந்தா... உனக்கு உன் மாமன் தான் வேணுமா... " என்று முகத்தை தூக்கி வைத்துக்
கொண்டு நிற்க...

அவளைப் பார்த்து ஏஞ்சலுக்கு சிரிப்பு தான் வந்தது.

" பாத்தியா.. நான் தான் சொன்னேன்ல... ஏஞ்சலுக்கு என்ன பாக்காமா நாளே விடியாது... பாரு... அதான் சோகமா இருக்கா... " என்றவாறே வந்த ஜோசஃபை இடை வெட்டினாள் ஏஞ்சல்.

" அப்டிலா ஒன்னும் இல்லையே மாம்ஸ்... என்ன பாக்காம தான் உங்களால இருக்க முடியல.. அதான் இங்க தேடி வந்துட்டிங்க... " என்க
ஜோசப்பின் முகம் சூம்பிப் போன கத்தரிக்காய் போலாகி விட்டது.

அவரைப் பார்த்து இருவரும் சிரிக்க... சமாளிப்பதற்காய்,

" நான் உன்ன பாக்கலா வரல... என் ஆருயிர் தம்பி வி.. ச்சே.. சித்தார்த்த பாக்க வந்தேன்... " என்று ஒருவாறு சமாளித்துக் கூற ஏஞ்சலின் கைகள் தானாக நடுங்க தொடங்கின. ஆம், இது அவனின் இல்லம் தான்...

மேரி அவரைத் தோளில் இடித்து முறைக்க... அவரும் இளித்து சமாளித்து விட்டு மேரியுடன் கிளம்பினார்.

வெளியே வந்ததும்...

மேரி, " டேய்.... " என மரியாதையாக அழைக்க..
ஜோசப் தன் விதியை நொந்து கொண்டு...

" என்ன மேரி மா..? " என்க

" உன் வாயை ஒரு நாள் உடைக்க போறேன் பாரு... வித்தார்தே வந்து அவகிட்ட பேசிப்பான் நீயே சொதப்பீருவ போல... " என செல்லமாக அடிக்கிறேன் என்று சற்று வேகமாக அவன் கன்னத்தில் அடித்தாள்.

" அம்மாஆஆஆ... " கன்னத்தைத் தேய்த்துக் கொண்டவர் பேச முற்பட...

" கேட்டா உடன் பிறவா சகோதரன்... இணைப் பிரியா தோஸ்துனு கதைய ஆரம்பிக்க போற... வேண்டா... பல தடவை கேட்டு அலுத்துருச்சு... வா... " என்று அவனை இழுத்துச் செல்லாத குறையாக அங்கிருந்து கிளம்பினாள்.

இங்கு ஏஞ்சலுக்கோ நேரம் நகர மறுத்தது. கடிகாரம் இன்று மட்டும் மெதுவாக சுற்றுவது போல இருந்தது. அவள் அருகிலேயே அமர்ந்திருந்த ஜாக்கி அவள் சாப்பிடவில்லை என்பதால் தன் முன்னே இருக்கும் சாப்பாட்டைக் நுகர்ந்து கூட பார்க்காமல் அவள் காலடியிலேயே அமர்ந்திருந்தது.

சிறிது நேரம் தன் கவனத்தை வேறெங்காவது திசைத் திருப்ப நினைத்தவளுக்கு அப்போது தான் அந்த செயினின் நினைவு வர... அதையாவது சரி செய்வோம் என அதை எடுத்துப் பார்த்தாள்.

வழக்கத்தை விட சற்று வித்தியாசமாக தான் இருந்தது. ஏற்கனவே வீட்டில் இருந்த சில கருவிகளை வைத்து அறுந்து போன அந்த செயினை ஒன்று சேர்க்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். ஆனால், அதை ஒன்று சேர்க்கவே முடியவில்லை.

தன்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லையே என சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு அமர
அவள் முன் வந்து நின்றது ஜாக்கி...

அதன் பிறகே இருவரின் வயிரும் சத்தமிடுவது அவள் செவியை எட்டியது.

ஏஞ்சல், " பசிக்கிதுல வா சோறு தான் முக்கியம்.. " என்று சாப்பிட்டு விட்டு அமர்ந்தனர். எதிர்பாராமல் அவள் கை தவறி கீழே விழுந்தது அந்த செயின்...

அதன் டாலர் தானாக திறந்து கொள்ள அதிலிருந்த அந்த எழுத்தை அப்போதே கவனித்தாள் அவள்...

அதே எழுத்து.... V.....

அதை ஏனோ அப்போது அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவள் அதை எடுத்து சரி செய்து கழுத்தில் அணிவித்துக் கொள்ள ஜாக்கி குரைத்துக் கொண்டே இருந்தது.

அப்போதே கடிகாரத்தைப் பார்த்தவளுக்கு தன் வேலை நியாபகம் வந்தது.

இதையெல்லாம் தூரமாக ஒரு மரத்தின் மீது கண்களை மூடிப் படுத்திருந்த சித்து பார்த்துக் கொண்டிருக்க...

அவளுக்கு உண்மை தெரிய கூடாது என்பதில் மட்டும் கண்ணும் கருத்தாய் இருந்தான்.

அந்த செயினை சரி செய்ய விடாமல் தொந்தரவு செய்த பின்னர் அதை தூக்கி எறிவாள் என்று நினைத்தவன் தன்னையும் மீறி ஒரு உந்துதலில் அதில் சிறிது தடுமாற அதற்கிடையில் அவள் சரியாக அந்த செயினை சரிசெய்து இருந்தாள்.

*****

மாலை நேரம் சூரியன் மறையத் துவங்கியது. பகலும் இல்லாத இரவும் இல்லாத அந்த மாலைப் பொழுதில் ஜாக்கியை அழைத்துக் கொண்டு நடந்தே சென்றாள் ஏஞ்சல். ஜாக்கியை ஒரு இடத்தில் விட்டு விட்டு சென்றாள்.

அந்த லோக்கல் எஃப் எம்
நிலையத்திற்கு வந்தவள் சிறிது நேரம் அந்த வேலையில் மூழ்க... அப்போது தான் அங்கிருந்த ஒரு ஃபைலைக் கண்டாள்.

அதில்...

" Crime Time " என்னும் தலைப்பில் இருந்த ஒரு ப்ரோக்ராமை கண்டதும் தானாக அவள் கரம் அதை எடுத்து திறக்க முற்பட...

எங்கிருந்தோ வந்த ஒரு கரம் அவளைத் தடுத்தது.

அவள்," மிஸ்... உங்க ஷோ
இது இல்ல... Actually It's my show... " என்க...

" ஓஓ.. சாரி மேம்... நான் ஏதோ ஒரு கியூரியோசிட்டில எடுத்துட்டேன்... " என்று மெதுவாக பதிலளித்தாள் ஏஞ்சல்.

" அட... இந்த மேம், மிஸ்லாம் வேணாமே...
பை த பை... ஐ அம் ஷாலினி..." என சிநோகமாக கை நீட்ட ஏஞ்சலும் சிரித்தவாறே,

" ஐ அம் ஏஞ்சல்... " பதிலுக்குக் கைக் குலுக்கினாள்.

ஏதோ இரைச்சல் சத்தமாக இருக்க.. அது சற்று தொந்தரவாக தான் இருந்தது.

" ஏஞ்சல்... நான் போய் என்னனு பாத்துட்டு வரேன்... இதெல்லாம் சும்மா பாரு... க்ரைம்ஸ் செக்ஷன்... கண்டிப்பா இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்" என்று அந்த ஃபைலை அவளிடமே தந்துவிட்டு சென்றாள் ஷாலினி.

ஏனென்றே தெரியாமல் அவள் இதயத்துடிப்பின் சத்தம் அவளுக்கே கேட்டது. ஏனோ ஒரு இனம் புரியாத உணர்வு அவளுக்குள்.

அந்த ஃபைலை திறந்து பார்த்த சமயம் திடீரென அங்கிருந்த மின்விளக்கு மின்னி மின்னி எரித்தது.

அதை கண்டு கொள்ளும் மன நிலையில் ஏஞ்சல் இல்லை. அந்த ஃபைலைத் திறந்து பார்த்ததும் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தாள் அவள்...

அதில்... அதில்... அவனே தான்... வித்தார்த்தின் பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது... அதிலிருந்து மெல்ல தன் பார்வையை விலக்கி அதை முழுவதுமாக படிக்கத் துவங்க... கொஞ்சம் கொஞ்சமாக ஏதோ புரிவது போல இருந்தது.

அடுத்த பக்கத்தை திருப்ப அது மற்றொரு தாளுடன்
ஒட்டிக் கொண்டு பிரிய மறுக்க... கடினப்பட்டு அதை பிரித்துப் பார்த்தவளுக்கு இதயமே நின்று விட்டது போல் இருந்தது.

வித்தார்த் என்ற பெயருக்கு மேல் இருந்த அந்த புகைப்படம் அவள் இமைகளுக்கு இடையில் நின்றிருந்தது.

ஆம்... அதில் இருந்தது சித்தார்த் அவன் எப்படி இங்கே...??? முடிச்சிட்ட புருவத்துடன் அதை பார்த்தபடி இருந்தாள் ஏஞ்சல்.

அவள் தோள் மீது பாரத்தை உணர்ந்தவள் திரும்பிப் பார்க்க ஷாலினி தான் நின்றிருந்தாள்.

ஷாலினி, " சில டெக்னிகல் பிராப்ளம் போல... அத நைட் சரி பண்ணிட்டு காலைல தான் ஷோ.. மழை வேற வந்திருச்சு... இப்போ கிளம்பினா தான் இல்லனா இங்கயே மாட்டிக்குவோம்... " அவள் பேசுவதை எல்லாம் காதில் வாங்காமல் அந்த ஃபைலையே வெறித்த வண்ணம் இருக்க... ஷாலினி அவளை குழப்பமாக பார்த்தாள்.

ஏஞ்சல் அவனின் புகைப்படத்தைக் காட்டி,
" இ... இது... இது... " என ஏதோ கூற வர...

" ஹே... இவர் தான் பா.. வித்தார்த்... ஏன் உனக்கு தெரியாதா...? வித்தியாசமா பாக்குற... பொண்ணுங்களோட ட்ரீம் பாய் மா இவரு... அவரோட போட்டோவ காட்டி யாருனு வேற கேக்குறியா நீ... " என்று நங்கென ஒரு கொட்டு வைக்க...

அதிர்ச்சி மாறாமல் வினவினாள் அவள்..

" இவன் எப்டி இங்க...?? ப்ளீஸ் சொல்லு ஷாலினி... " என்று அவள் கையைப் பிடித்து உலுக்கி... அவளின் இந்த பதற்றம் எதற்காக என பாதி புரிந்து பாதி புரியாதவளாக கூறத் தொடங்கினாள்.

" ஹம்ம்.. அவர் தலைமறைவாகிட்டாருனு கேஸ்அ முடிச்சிட்டாங்க.. கொலை கூட பண்ணி அத இப்டி மாத்திருக்கலாம்.. சொல்ல முடியாது இதுக்கு பின்னாடி இருக்கவனுங்க
அப்படி.. கஷ்டமா தான் இருக்கு... நமக்கெதுக்கு இந்த பேச்சு.. வா கிளம்புவோம்... " அவள் பாட்டிற்கு கிளம்பி ஏஞ்சலைக் கையோடு இழுத்து வந்து வாசலில் விட்டு விட்டு சென்று விட்டாள்...

ஏஞ்சலுக்கு இப்போது தான் புரியத் தொடங்கியது. சித்து தான் வித்தார்த் எனில்... இத்தனை நாட்கள் நடந்தவை எல்லாம்..?? சித்து இறந்து விட்டான் எனில் வி.. வித்தார்தும்..

நினைக்கும் போதே அருவியாக கண்ணீர் பெருக்கெடுக்க... அப்போது தான் தன் கழுத்தில் இருந்த அந்த டாலரை திறந்து பார்த்தாள்.

அதில்...
ஆம்.. ஸ்கூபியுடன் அதாவது ஜாக்கியுடன் வித்தார்த் இருப்பதாக இருந்த அந்த புகைப்படத்தைப் பார்த்தாள்.. சிறிது சிறிதாக இப்போது தான் எல்லாம் விளங்கியது...

எல்லா நினைவுகளையும் நினைத்துப் பார்த்தவளுக்கு கண்கள் இரத்த சிவப்பாகி இருந்தது.

ஏஞ்சல், " ஜாக்கி... என்ன
ராம் அங்கிள் வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியுமா உன்னால... " என கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தவள் அதைப் பின் தொடர்ந்தாள்...
*****

கைகள் நடுங்க குற்ற உணர்ச்சியின் பிடியில் சிக்கி மூச்சு விட திணறிய ராம்குமார் தண்ணீரைக் குடித்து சிறிது நேரம் கழித்து தான் தன்னிலை பெற்றார்.

கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு வெளியே சரிந்து கிடந்த மரத்தை வெறித்தவாறு நின்றவளை மெதுவாக அழைத்தார் அவர்.

" வித்தார்த் தம்பி ரொம்ப நல்லவன் மா... சித்தார்த்னு நான் பொய் சொல்லிருக்க கூடாது. ஆமா மா.. சித்து வேற யாரும் இல்ல நீ உயிருக்குயிரா நேசிச்ச வித்தார்த் தான்... "

அவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் உடைந்து போனவள் உள்ளுக்குள்ளே கதற...

" வேணா மா... தயவு செய்து கத்தி அழு... இப்டி இருக்காத ஏஞ்சல்... என்னால பார்க்க
முடியல.. " என்றவரைத் திரும்பிப் பார்த்தவள்...

" என்ன நடந்துச்சு? " இரண்டே வார்த்தையில் அவரை அடக்கி இருந்தாள்...

அவளின் சிவந்திருந்த கண்களில் தென்பட்ட அதே கோபத்தீயை வித்தார்தின் கண்களில் கடைசியாக பார்த்தது நினைவில் ஆடியது அவருக்கு.
 
மிகவும் அருமையான பதிவு,
ருத்ரா விக்ரம் டியர்

சித்து சித்தார்த் விதார்த் ஒரே ஆளா?
பாவம் இவன் இறந்து விட்டானா?
சித்துவின் இறப்புக்கும் ராம்குமாருக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கோ?
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
ருத்ரா விக்ரம் டியர்

சித்து சித்தார்த் விதார்த் ஒரே ஆளா?
பாவம் இவன் இறந்து விட்டானா?
சித்துவின் இறப்புக்கும் ராம்குமாருக்கும் சம்பந்தம் இருக்கோ?
ஹாஹா.... ஆமா அக்கா இரண்டு பேரும் ஒன்னு தான்... ராம்குமாருக்கும் அவனுக்கும் சம்மந்தம் இருக்குமோ...?? ???
 
Top