Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழைப்பாயா ?4?

Advertisement

Rudhra Vikram

Member
Member
அவள் இதழின் இடுக்கில் சிக்குண்டு கிடந்த அந்த டாலர் அதிலிருந்து விடைபெற்று... தானே திறந்து கொண்டது. அதில்.....

அதே எழுத்து.... V ....

அந்த மின்னலைப் போலவே அவளின் கழுத்தில் இருந்த அந்த செயினில் மின்னியது அந்த எழுத்து.....

" ப்பா... இப்டி இடி இடிக்குது... வா உள்ள போயிடலாம்... " என்று அவள் அந்த பெட்டியை இழுத்துக் கொண்டே வந்து வாசலில் நின்றாள்.

கதவைத் திறக்க முயற்சிக்க... அந்த ஞாளியோ கொட்டும் மழையை வெறித்தபடி குரைத்துக் கொண்டே இருந்தது. அதை எல்லாம் பொருட்படுத்தாது
அவள் கதவைத் திறந்து உள்ளே சென்று விட்டாள்.

உள்ளே சென்று அந்த பெட்டியை உள்ளிருந்த படுக்கை அறையில் வைத்துவிட்டு வர... அந்த ஞாளியோ இன்னமும் குரைத்துக் கொண்டே இருந்தது.

" ஹேய்... ஷ்ஷ்ஷ்... சத்தம் வரக் கூடாது... வா... " என்றவள் அதனை அழைத்துச் செல்ல அமைதியாக வந்து ஒரு கார்ப்பெட்டில் படுத்துக் கொண்டது.

ஏஞ்சல் உள்ளே சென்று ஒரு கப்பில் காஃபியுடன் வந்து சன்னலோரமாக சாய்ந்து கொண்டாள்.... ஒரு கையில் கப்பை பிடித்து மற்றொரு கையால் இடையை சுற்றிக் கொண்டு சுவரில் சாய்ந்து நின்றவளை கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தது அந்த ஞாளி.

ஒவ்வொரு மடக்காய் குடித்தவள் ஏதோ உறுத்தவும் திரும்பப் பார்த்தாள். புருவத்தை லேசாக சுருக்கி அந்த ஞாளியை ஏறிட்டவள்... மனதினுள்...

" இது பாக்குற பார்வையே சரி இல்லையே... ஒரு வேளை பிடுங்கி சாப்பிட பாக்குதோ... " என்று நினைத்தவள்.... திரும்பி நின்று கொண்டு திருட்டுத்தனமாக குறு குறுவென பார்த்தவாறே காஃபியைப் பருகினாள்.

அது பாவமாக தன் முகத்தை வைத்து தலையை தாழ்த்தி படுத்துக் கொண்டது.

" நாம தானே பிடுங்கி சாப்பிடுவோம்..... இது அப்படி பண்ண வாய்ப்பில்லை... முகத்த பாத்தாலே எவ்ளோ சாந்தமா இருக்கு.... " என்று மெதுவாக அதன் அருகில் சென்றாள்...

அதுவோ இந்த நேரத்திற்காக காத்திருந்தது போலவே அந்த காஃபி கப்பை உற்று பார்த்தவாறே இருக்க...

ஏஞ்சல், " ஒரு வேளை பயபிள்ள ஏதாச்சும் ப்ளான் வச்சிருக்குமோ... " என்று யோசித்தவள் அதற்கு மிக அருகிலேயே சென்று விட்டாள்.

அவள் எதிர்பாராத விதமாக அந்த ஞாளி அவள் மீது தாவ, நிற்க முடியாமல் நிலை தடுமாறி சுவரில் இடித்துக் கொண்டு நின்ற இடத்திலேயே தொப்பென அமர்ந்தாள்.

" அப்பா...." என்றவாறே தலையைத் தேய்த்துக் கொண்டிருந்தவள் அதனைப் பார்த்ததும் முகத்தை சுருக்கிக் கொண்டு அதன் அருகில் சென்றாள்...

அது ஒன்றுமில்லாத காஃபி கப்புக்குள் தன் வாயை விட்டு எதையோ தேட.... அதன் முன் மண்டியிட்டு அமர்ந்த ஏஞ்சல், கன்னத்தில் கை வைத்தபடி,

" என்னாச்சு...??? செல்லக் குட்டி... நீங்க எட்டு அடி பாய்ந்தா நான் பதினாறு அடி பாய்வேன் தங்கமே...
யாருக்கிட்ட... பௌவ்... பௌவ்... " என்று விட்டு அந்த கப்பை அதனிடம் இருந்து வாங்கி மேசையில் வைத்து விட்டு திரும்பினாள்...

அந்த ஞாளி கண்களில் கண்ணீரைக் கடலாக தேக்கி வைத்து கொண்டு ஏதோ இந்த உலகிலேயே தான் தான் நம்பர் ஒன் அப்பாவி என்று கின்னஸ் சாதனை படைத்ததைப் போல ஒரு பார்வை பார்க்க....

" என்னடா இது... வழக்கமா நாம தான் HODகிட்ட மாட்டுனா இப்டி ரியாக்சன் தருவோம்... நமக்கே ஒரு போட்டியா... தப்பாச்சே..." என்று தாடையைத் தேய்த்து யோசித்தவாறே அதன் கண்களைப் பார்த்தாள்...

அதில் அருவியாய் ஊற்றி கொண்டிருந்த துளிகளைப் பார்த்தும் ஏனோ ஒரு மாதிரி ஆகி விட்டது...

" அச்சோ... ஏன் அழற ... என் தங்கம்ல... என் செல்லம்ல... நான் சும்மா விளையாண்டேன்... நல்ல நாய் தானே.... " என்றதும் அது உர்ர்ர்ர் எனப் பார்க்க... திருட்டு
முழி முழித்தவாறே அதனைப் பார்த்தாள்.

" ஏதாச்சும் தப்பா சொல்லிட்டோமா" என்று அவள் யோசிக்க..

" ஓஓஓஓ... உன்னை அப்டி சொல்ல கூடாதா... ? " என்க அதற்கு அது உர்ர்ர்ர் என்று பார்க்க....

" ஹிஹி.. ஓகே.. ஓகே... அப்போ உனக்கு ஒரு பேர் வைக்கலாமா.. " என்று நாடியில் கை வைத்து மீண்டும் யோசனையில் மூழ்கினாள். அதுவும் ஆவலாக அவளின் பதிலுக்குக் காத்திருந்தது.

" ம்ம்ம்... Lucy... நல்லா இருக்குல்ல... உனக்கு பர்ஃபெக்டா இருக்கும்... லூசு...ச்சே... Lucy..." அதற்கும் அது உர்ர்ர்ரென்று பார்க்க...

" ஹிஹி.. அது பொண்ணு பேர் ஆச்சே... " என்றவாறே பல பெயர்களைக் கூற அனைத்திற்கும் முறைத்துக் கொண்டே இருந்தது.

நிமிர்ந்து பார்த்தவள் எதிரில் இருந்த சுவரில் மாட்டப்பட்டிருந்த படத்தைப் பார்த்ததும் சட்டென தோன்ற....

" Jacky... எப்டி இருக்கு... என் தலைவர் பேரு.... "

இதற்கு மட்டும் எதுவும் கூறாமல் எழுந்து நின்று உற்று நோக்கியது.

" அந்த பேருக்கென்ன நல்லா தானே இருக்கு..... " கூறி முடிப்பதற்குள் அவள் மீது ஒரே தாவாக தாவி தரையில் வீழ்த்தி இருந்தது. அதன் எடை தாங்காமல் மீண்டும் தொப்பென்று விழுந்தவள் கண்களை இறுக்க மூடிக் கொண்டாள்..

கன்னத்தைத் துடைத்தபடி எழுந்தவள் அதை முறைத்தபடி," உன் பாசத்தைக் காட்டலாம்... தப்பில்ல... ஆனா... இப்டிலாம் காட்ட கூடாது... " என நொந்தவாறே கையை ஊன்றி எழுந்து நின்றாள்.

" இந்த பேர் தான் பர்ஃபெக்ட்.. ஜாக்கி.... " நிஜமாகவே மகிழ்ந்தாள் அவள்.

" ஹ்ம்ம்... காலைல நியூஸ் பேப்பர் படிக்கவே இல்ல.. வா... படிப்போம்... " என்று செய்தித் தாள் வைக்கப்பட்டு இருந்த மேசை அருகே செல்ல... திடீரென கதவு தட்டும் சத்தம் கேட்டது.

தன் பிரம்மை தான் என்று நினைத்தவள் மீண்டும் அந்த செய்தித் தாளை எடுக்க போக... கதவைத் தட்டும் சத்தம் இன்னும் அதிகமானது.

" ஜாக்கி... " என்றழைத்தவுடன் படுக்கையில் இருந்து எழுந்து ஏஞ்சலின் காலை உரசிக் கொண்டு கதவை வெறித்தவாறே இருந்தது.

திடீரென இடியும் மின்னலும் சேர்ந்து உக்கிரமாக ஒலி எழுப்ப பயத்தில் கையில் எடுத்த செய்தித் தாளைக் கீழே போட்டுவிட்டாள்...

ஜாக்கியும் குரைத்துக் கொண்டே முன்னேறியது. கதவிற்கு அருகில் இருந்த சன்னல் வழி வெளிய தெரிந்த
உருவத்தைப் பார்த்துக் குரைக்க... ஏஞ்சல் மலர் குவளையில் இருந்தவற்றை கீழே கொட்டி விட்டு அந்த குவளையை மட்டும் பிடித்துக் கொண்டு கதவிற்கருகில் வர...

இப்போது அந்த சத்தம் சற்று குறைந்திருந்தது. அவள் மெதுவாக கதவை திறக்க கையை உயர்த்திய சமயம்....

சட்டென அந்த சத்தம் மீண்டும் அதிகமாக.... கதவு லேசாக ஆட துவங்கியது... அந்த அதிர்ச்சியில் அந்த இரண்டு அடி பின்னால் விழுந்தாள்...

ஜாக்கி தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருக்க... ஏஞ்சலின் தைரியம் சற்று ஆட்டம் காண ஆரம்பித்தது.

திரும்ப எழுந்தவள் மெல்ல கதவருகில் வந்தவள்... இனியும் தாமதிக்காமல் கதவைப் பட்டென திறந்து குவளையால் அடிக்க கை ஓங்க....

" ஹே... நான் தான் சித்து... " என்றவன் அவளின் செயலைக் கண்டதும் பயந்தவன் போல தன் இரண்டு கையால் முகத்தை மறைத்துபடி பின்னால் நகர்ந்தான்.

" சித்து... " அவள் சுருங்கிய கண்களுடன் அவனை ஏறிட
அவனோ அப்போது தான் கைகளை விலக்கி அவளைப் பார்த்தான்.

அவள் மாறவே இல்லை. அதே டீ சர்ட், பேண்ட் என எளிமையாக இருந்தவளைப் பார்த்ததும் ஏதோ தோன்ற அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கோபம் கொப்பளிக்க அவளின் கண்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏஞ்சல் அவன் தான் என்று தெரிந்தது குவளையை எடுத்த இடத்தில் வைத்து விட்டு நடையில் கோபத்தைக் காட்டி உள்ளே சென்று விட்டாள்.

" ஹ்ம்ம்... இவகிட்ட மட்டும் நம்ம கோபம் வேலைக்கே ஆகாது போல... நான் தானே இப்டி கோவமா போகனும்... நமக்கு முன்னாடியே பர்பாமன்ஸ்அ ஆரம்பிச்சிருச்சு... Uff... " தன்னை நொந்தவாறே அவன்
உள்ளே காலடி எடுத்து வைக்க... அறையில் இருந்த மின் விளக்குகள் அனைத்தும் மின்னி மின்னி எரிந்தது.

ஜாக்கி அவனைப் பார்த்தும் அமைதியாகி பின்னால் நகர்ந்தபடி ஒரு நாற்காலியின்
பின்னால் ஒளிந்து கொண்டது.

ஹாலின் நடுவில் வந்து நின்றவன் தன் எதிரில் இருந்த ஏஞ்சலை வைத்த கண் வாங்காமல் பார்த்தவாறே இருந்தான். அவளே ஆரம்பிப்பாள் என்று அறிந்திருந்தான் போலும்.

" நீ எப்படி டா என் அப்பாவ அன்னைக்கு அடிக்க வரலாம்... அது தப்பு தானே.. " என்று அவன் எதிர்ப்பார்த்தது போலவே அவள் அதிலிருந்து ஆரம்பிக்க... லேசாக உதிர்த்த புன்னகையை மறைத்துக் கொண்டு அவளை முறைத்தான். அதைப் பார்த்ததும் பயந்ததாலோ என்னவோ...

ஏஞ்சல், "சரி... நான் அடிச்சது தப்பு தான்... அத்தனை பேருக்கு முன்னாடி உன்ன அடிச்சிருக்க கூடாது... " என்றதும் அவனின் வெற்றி புன்னகையைக் கண்டவள்...
கடுப்பாகிப் போக...

" அதுக்குனு நீ பண்ணது ஓன்னும் கரெக்ட்னு சொல்லை... நீ என் அப்பாவ அடிக்க வந்த அதுக்கு நான் உன்ன அடிச்சேன்... கணக்கு சரியாப்போச்சு... இப்பவாச்சு நல்லா சிரி டா.. "

தான் பேசுவதற்கு இடமின்றி அவளே கூறிவிட்டாள்.

"சரி... இரு... நான் போய் காஃபி எடுத்துட்டு வரேன்... ஜாக்கிக்கும் வேணுமாம்... " என்க...

" என்ன ஜாக்கியா... இல்ல... இவன் பேர் ஸ்கூபி... " என்று முந்திக் கொண்டு கூறி விட்டு ஜாக்கியின் அருகில் செல்ல...

அதுவோ மெதுவாக ஊர்ந்தபடி ஏஞ்சலின் பின் ஒளிந்து கொண்டது.

" என்ன ஸ்கூபியா... அப்போ உனக்கு இத முன்னாடியே தெரியுமா... சூப்பர்... " என்க

" ம்ம்... இது என்னோட பெட்... " என்றவனை என்னவோ போல் பார்த்தவள்...

" நம்ப முடியலையே... " என்று நம்பாத பார்வையை வீச

" இப்போ பாரு... ஸ்கூபி.... " அவன் கூப்பிட்டதும் பழக்க தோஷத்தில் சத்தமாக இரண்டு முறை குரைத்தது.

" ஹே.... இதெல்லாம் போங்காட்டம்... என்ன ஜாக்கி அவன பாத்ததும் கட்சி மாறிட்ட... நீ ஜாக்கி தான்.. " என்று அதை பிடித்து வைத்துக் கொண்டாள்.

அவளின் செய்கையில் சிரித்தவன்... ஸ்கூபியை பார்க்க... அதன் கண்களிலும் இவனைப் போலவே கண்ணீர் தேங்கி இருந்தது.

" ஆனா நீ.... உனக்கு பெட் இருக்குனு என்கிட்ட சொன்னதே இல்லையே... சரி.. வச்சிருந்தது தான் வச்சிருந்த நல்ல பேரா வைக்க கூடாது... ஸ்கூபி... அத விட ஜாக்கி எவ்ளோ சூப்பரா இருக்கு.. என்ன ஜாக்கி" என்று அதனைப் பார்க்க.. இரண்டு முறை குரைத்தது விட்டு திரும்பி அவனை ஏறிட்டது.

"உனக்கு நான் வச்ச பேர் பிடிக்கல... அவ வச்சது தான் பிடிச்சிருக்கு இல்ல... ஸ்கூபி... " என்க அதற்கு சத்தமாக குரைத்ததும் எதையோ புரிந்து கொண்டது போல..

" ஹ்ம்ம்... உன்ன ஜாக்கி னு தான் கூப்பிடனுமா... சரி... ஓகே... அப்டி பாக்காத" என்றவன் ஏஞ்சல் உள்ளே சென்றதும்....

அதன் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தான்.

" இப்ப கூட நீ அவளுக்கு தான் சப்போர்ட் பண்ற.... ஹா... உன்ன விட்டுட்டு போய்டேன்னு என்ன மறந்துட்டியா.... " அதன் கண்களில் எதையோ தேடினான் அவன்...

அதை உணர்ந்தாலும் ஏனோ அவனுக்கு வலிப்பது போல இருந்தது. இதை தன்னால் உணர முடிகிறதா ஒன்றும் புரியவில்லை.

சட்டென ஏதோ உரைக்க....

"இவ்வளவு நேரம்... இப்போது.... என்ன நடந்தது.... நான்.... நான்.. எப்படி.... இவளுக்கு..... " அவனால் யோசிக்க கூட முடியவில்லை.

" ஆனா... இது நடக்க வாய்ப்பே இல்ல.... நான்.. எப்டி... அவள்.... "

ம்ஹூம்... ஒன்றும் புரியாமல் குழப்பமான முகத்துடன்
" இது எப்டி சாத்தியம்... அவள் எப்டி என்னை.... " என்று யோசிக்க யோசிக்க ஏதேதோ தோன்றியது.

அவன் யோசனைக்கு தடை போடும் விதமாக அங்கே கீழே விழுந்து கிடந்த செய்தி தாள் இருந்தது.

அதில் இருந்ததை கண்டு கொண்டதும் அதையே வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான்.

அதில்....

அவனின் புகைப்படத்திற்கு கீழே அந்த பெயர் தெள்ளத் தெளிவாக அச்சிடப்பட்டு இருந்தது.

வித்தார்த்....

ஆம், சித்துவின் உருவப் படத்தின் கீழே அந்த பெயர் இருக்க.... கண்களை ஒரு முறை இறுக்க மூடித் திறந்தான்.

தன்னுடைய புகைப்படத்தை வெறித்துப் பார்த்தவன் நினைவுகளில் சில மோசமான சம்பவங்கள் கண் முன்னே கலையாமல் இப்போதும் கூட தெரிந்தது.
 
மிகவும் அருமையான பதிவு,
ருத்ரா விக்ரம் டியர்

என்னாம்மா இது
வந்தவன் பேர் சித்துன்னு சொல்லுறீங்க
ஆனால் அவன் போட்டோக்கு கீழே விதார்த்துன்னு பேர் இருக்கு
அவன் போட்டோ எப்படி பேப்பரில் வந்தது?
அப்போ வந்தவன் இல்லை வந்தது விதார்த்தின் ஆவியா?
 
Last edited:
Top