Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழைப்பாயா ?2?

Advertisement

Rudhra Vikram

Member
Member
" இதென்ன V .... " வாய் விட்டே கூறியவளின் எண்ணத்தை அந்த ஒற்றை எழுத்து வியாபித்து இருந்தது. திரும்பி பார்த்தவள் அங்கு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த அந்த குட்டியின் பார்த்தாள்.

அது எந்த வித சலனமும் இன்றி அழகாக உறங்கிக் கொண்டிருந்தது..

" கித்னா சுந்தர்ர்.... " என்று அதற்கு நெட்டி முறித்து விட்டு கையில் இருந்த காரட்டை ஒரு கடி கடித்து விட்டு திரும்பினாள் ஏஞ்சல்...

அங்கோ கொல்லி வாய் பிசாசு கூந்தலை விரித்து போட்டது போல வந்து நின்ற மேரியை.... விழி பிதுங்க பார்த்தாள் அவள்....

" அடச்சே... இவ தானா... ஒரு நிமிசம் பக்குனு ஆகிருச்சு... " என மனதினுள் நினைத்துக் கொண்டாள்.

மேரி, " யாரு டி அந்த சுந்தர்...? " என இடுப்பில் கை வைத்து கேட்க அவளைக் குழப்பமாக பார்த்தாள் ஏஞ்சல்.

" எந்த சுந்தர்...??? யார சொல்ற நீ... "
ஒன்றும் புரியாமல் இருக்க கையில் இருந்த காரட்டை உள்ளே தள்ளி விட்டு மேரியை ஏறிட்டாள்...

மேரி, " அதான் இப்ப சொன்னியே.. எவனோ சுந்தர்னு... " கோபமாக வினவினாள் அவள்...

" அடிப்பாவி... அது ஹிந்தில சொன்னேன் பக்கி.... " என்று அவள் தலையைத் தட்டினாள் அவள்..

" ஹே... ஏமாத்தாத.. எனக்கு தெரியும்... அந்த மல்லிகை கடைல வேலை பாக்குறானே அந்த சுந்தர் தானே.... " என்று அவள் முடிவே செய்து விட வெட்டவா குத்தவா என்ற ரேன்ஜில் பார்த்தாள் ஏஞ்சல்.

" அடியேய்ய்... அவன் எவன்னே எனக்கு தெரியாது .... " என்க அதையெல்லாம் நம்பும் மன நிலையில் மேரி இல்லை.

" ஹே... எனக்கு தெரியும்.... "

" அடியேய்ய்.. எனக்கு ஒன்னுமே தெரியாது பக்கி... அப்பா சத்தியமா தெரியாது.... நம்பு மா... " என காலில் விழாத குறையாய் கெஞ்ச...

" அப்போ பக்கத்து தெருல... பஞ்சு மிட்டாய் விற்பானே.. அந்த அழகு சுந்தரமா... " என்று லிஸ்டை அடுக்கிக் கொண்டே போனவளின் வாயைப் பொத்தினாள் ஏஞ்சல்....

" அட மக்கு சாம்பிராணி... சுந்தர்னா அழகுனு அர்த்தம்.. அங்க பாரு... அந்த நாய்க்குட்டிய ஒரு நிமிஷம் பாரு... " என்று அவள் முகத்தை திருப்பி காட்ட...

அது உறங்கும் அழகை ரசித்தவள்..
" எவ்ளோ க்யூட்டா இருக்கு... " என்று அதற்கு ஒரு பறக்கும் முத்தத்தைத் தந்தாள் மேரி...

" இத விட கொஞ்சம் டீசன்டா தானே நான் பண்ணேன்... " என அவள் மைன்ட் வாய்ஸ்சில் பேசிக் கொண்டாள்.

" மாம்ஸ்... மேரிய பாருங்க... நம்ம எதிர் வீட்டு சுந்தர ராமசாமிக்கு ஃப்லையிங் கிஸ் குடுக்குறா... என்னனு கவனிங்க.... " என்று போட்டு கொடுக்க கையில் வாட்சை
கட்டியவாறே வந்த ஜோசஃப் ஏஞ்சலைப் பார்த்து முறைத்தான்...

" ஹிஹி... மாம்ஸ்... நீங்க முறைச்சா கூட அழகு தான்... " என கூறி கண்ணடிக்க.... மேரிக்கு மூக்கின் மேல் கோபம் வந்து ஒட்டி கொள்ள ஏஞ்சலைத் துரத்த ஆரம்பித்தாள்...

" ஏய்ய்... மேரி.... நோ..... மாம்ஸ்... காப்பாத்துங்க. இந்த நாய் என்ன துரத்துது.... " என்று அவரை ஒரு வழி செய்து விட்டு தான் அமைதியானாள் ஏஞ்சல்.

ஜோசஃப், " ம்ம்ம்..... ஏஞ்சல்.... " என்றழைக்க...

" எஸ்ஸ்ஸ்ஸ்.... வந்துட்டேன்.... " என்று ஓடி வந்து அவர் முன் நின்றாள் அவள்....

" கழுத.. கழுத... ஓடுறத நிறுத்து முதல்ல... " என்று அவளை ஒரு இடத்தில் நிற்க வைக்க பெரும்பாடு
பட்டார் ஜோசஃப்.

" இங்க பாரு.... உன் ஃபேவிரட் சைக்கிளோட சாவி இந்தா... இனிமே அத எடுத்துட்டு சுத்து போ... இப்ப ஓடு.... " என துரத்தி விட...

" என்ன எல்லாரும் துரத்தி விட்டுட்டே இருங்க... ஒரு நாள் நானே எங்கையாவது போக போறேன் பாருங்க.... " என கூறிக் கொண்டே நகர்ந்தாள் ஏஞ்சல்..

வெளிய வந்து சுற்றி முற்றி பார்த்த பின்பு தான் அதை உணர்ந்தவள் மீண்டும் உள்ளே சென்றாள்.

" மேரிஇஇஇஇஇஇஇ.... " வீடே அதிரும் அளவு கத்திய பின் தான் மேரி எட்டிப் பார்த்தாள்....

" எதுக்குடி இப்படி வீட்ட இரண்டாக்கிட்டு இருக்க... என்னனு சொல்லி தொலை.... " என்றபடி கிளம்பி வந்தாள் மேரி.

" சைக்கிளோட சாவிய குடுத்திங்க சரி.... அந்த சைக்கிள் எங்க?? " என ஏஞ்சல் புருவம் உயர்த்தி கேள்வி கேட்க....

" ஹிஹி... அது தான்... ஒரு வீர ஆவேசத்துல உன்ன இங்க கூட்டிட்டு வந்துட்டேன்.... உன் சைக்கிள் ஆசிரமத்தில தான் இருக்கு.... " என்றதும் அவளை முறைத்தபடி வெளியேறினாள் ஏஞ்சல்....

" இப்ப என்ன ஏழ்ரைய இழுக்க போறாளோ தெரியலையே... " என புவம்பியபடி மேரியும் சென்று விட்டாள்...

ஏஞ்சல் நடந்து சென்று கொண்டிருக்க... யாரோ அவளுடன் வருவது போல இருந்தது. ( பேய்லாம் இல்ல பதறாதீங்க பா.. பயமா இருக்கு...)

ஏதோ டிங்.. டிங்... என்ற ஒலி வரவும் பின்னரே தன் கையில் இருந்த அந்த கழுத்துப் பட்டையை கூடவே எடுத்து வந்ததை உணர்ந்தாள்...

" அடச்சே... இது ஏன் இப்டி சத்தம் போடுது... ஆனா... நல்லா தான் இருக்குல்ல.. " என அதை காதிற்கு அருகில் வைத்து ஆட்டிக் கொண்டே வர... அவள் காலைச் சுற்றி சுற்றி ஏதோ வருவது போல இருந்தது. திரும்பி பார்த்ததும் பயந்து போனாள் அவள்...

" அப்பாஆஆஆஆஆஆ.... " என்று அலறியவள் பயந்து போய் தப்பிப்பதற்காக யோசிக்க அருகில் ஒரு காம்பௌன்டைப் பார்த்ததும் தலைக்கு மேலே குண்டு பல்ப் எறிந்தது. அருகில் இருந்த ஒரு பழைய மரப்பலகையின் மீது காலை வைத்து அந்த காம்பௌண்ட் மேல் ஏறி நின்று கொண்டாள் அவள்...

எறி நின்றவளால் வாயை வைத்துக் கொண்டு பேசாமல் இருக்க முடியவில்லை. அந்த ஞாளியைப் பார்த்து பலிப்பு காட்டி விட்டு...

" என்ன உர்ர்ர்னு பாக்குற... உனக்கு கடிக்க தெரியும் னா... பவ்வ்வ்.. பவ்வ்வ்... எனக்கு தப்பிக்க தெரியும்.... பவ்வ்வ்.. பவ்வ்வ்... " என்று அதனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

ஆனால், அதுவோ அவள் கையில் இருந்த அந்த கழுத்துப்பட்டையின் மேலேயே கண்ணாக இருந்தது.

" ஆமா.. நீ தூங்கிட்டு தானே இருந்த எப்டி என் பின்னால வந்த... " என்று நாடியில் கை வைத்து யோசித்துக் கொண்டே வினவ...

அதுவோ அவள் கையில் இருந்ததை பார்த்து குரைக்கத் தொடங்கியது...

" இது வேணுமா... " என்று அவள் அதை ஆட்டிக் காட்ட... அதுவும் பதிலுக்கு இரண்டு முறை குரைத்தது.

" சரி.. சரி... தர்ரேன்... ஆனா என்ன கடிக்க கூடாது... டீலா... " கட்டை விரலை உயர்த்தி கேட்க அது மீண்டும் இரண்டு முறை குரைத்தது.

" பரவாயில்லையே... கப்புனு புடிச்சிகிட்ட... குட் டாகி... " என்று கீழே குதிக்க... அவள் வித்தை காட்டுகிறாள் போலும் என்று நினைத்துக் கொண்ட ஒரு சிறுவன்
ஒரு ரூபாய் நாணயத்தை வந்து அவளிடம் நீட்டினான்.

" என்ன டா தம்பி.. சாக்லேட் வேணுமா.. அதோஓஓஓ... அங்க இருக்கு பாரு.. அந்த கடைல என் பேர்அ சொல்லி வாங்கிக்க.. ஃப்ரீயாவே தருவாங்க...ம்ம்... ஓகேயா... " என்று அவன் கன்னத்தில் தட்டி கொடுத்து அந்த தெருவோர கடையைக் காட்டினாள் அவள்.

" இல்ல... நீங்க வித்தை காட்டுனீங்கல்ல அதுக்கு தான்... "
என்றவன் ஓடி விட...

" டாங் க்யூ டா தம்பி... " என்று கூறிவிட்டு சிரித்தவள்.. அப்படியே நிறுத்தி விட்டு அவனைப் பார்த்தாள். அவனோ எப்போதோ ஓட்டம் எடுத்திருந்தான்.

" டேய்ய்ய்... நில்லுடா.. தடிகாத்தவராயா.... பாரேன்... உன்ன ஜாக்கி சான் கிட்டையே சொல்லி வைப்பேன்... என் தலைவர் வருவாரு டா... " என்று வராத கண்ணீருடன் மல்லுக்கட்டி சூளுரைத்தாள் அவள்...

இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஞாளி அவளைப் பரிதாபமாக பார்த்தது.

" என்ன பாக்குற...?? " என்பதை போல புருவம் உயர்த்த...

அது கொடுத்த ரியாக்ஷன் கடினப்பட்டு சிரிப்பை கட்டுப்படுத்துவது போல இருந்தது.

" சரி.. சரி... இந்த மேட்டர் நமக்குள்ளையே இருக்கனும் சரியா.. வெளில சொன்ன அப்பறம் உனக்கு டாகி பிஸ்கட் கிடையாது... " என்றபடியே அவள் அந்த கழுத்துப்பட்டையை அணிவித்து விட... அதற்கும் இரண்டு முறை குரைத்தது அது.

" நல்லா தான் பேசுற.... இந்த இரண்டு டைம் பவ்வ்வ்.. பவ்வ்வ்.. கூட நல்லா தான் இருக்கு.. அதையே கன்டினியூ பண்ணு... என்ன ஓகே வா... " என்க

அதுவும் ஒத்து கொள்வதை போல குரைத்தது... அதனை போல அவளும், " பவ்வ்வ்.... பவ்வ்வ்... " என்று செய்து காட்டி விட்டு நடக்க
ஒரு முறை உடலைக் குலுக்கி விட்டு அதுவும் அவளுடன் சென்றது.

ஆசிரமத்தின் வாசலை நெருங்கி இருக்க... அவள் கண்ட காட்சி அவள் இதயத்தை சுக்குநூறாக உடைத்தது. கண்கள் கண்ணீரை வார்க்க அதை பார்த்துக் கொண்டிருந்தாள் ஏஞ்சல்.

அவளது விருப்பமான மிதிவண்டி அங்கங்கே ஒடிந்து போய் ஓட்டுவதற்கு தகுதியே இல்லாத ஒன்றாய் மாறி இருந்தது. அவள் சுதந்திரப் பறவையாய் பறந்து திரிந்த அதன் உயிர்க்குயிரான மிதிவண்டி அது.

வாசலில் நின்று கொண்டு அவள் பொருட்கள் சிவவற்றை சில நபர்கள் வெளியே தூக்கி எறிந்தனர். அதைச் சுற்றி நான்கு குழந்தைகள் கன்னத்தில் கை வைத்தபடி கண்ணீருடன் அவள் வருகைக்காக காத்திருந்தனர்.

அங்கு தூக்கி எறியப்பட்டதில் அவள் ஆசை ஆசையாய் தன் ஆசிரமத்திற்காக ஜெயித்து சேர்த்து வைத்திருந்த கோப்பைகள், அவள் மிகவும் மதிக்கும் ஒன்றான கராத்தேவில் அவள் வாங்கிய ப்ளாக் பெல்ட் என எல்லாம் அனாதையாக கிடக்க... ஓடி சென்று அதை கையில் எடுத்தாள் அவள்...

பின் ஒருவன் ஒரு வெள்ளை நிற பெட்டியைக் கொண்டு வந்து போட அது கீழே விழுந்த வேகத்தில் உடைந்து உள்ளே இருந்த சில காகிதங்கள் சிதறியது.

அது என்னவென மிஸ். சைலஜா எடுத்து பார்க்க... அதில் இருந்ததை வாசித்தவர்... ஒரு வித ஏளனத்துடன் ஏஞ்சலை ஏறிட்டார்.

" ஓஓஓஓ... அப்போ இவனுக்காக தான் நேத்து போனியா... இரண்டு பேரும் சேர்ந்து என்ன என்ன பண்ணிங்களோ.... கடவுளுக்கு தான் வெளிச்சம்... " என்று அதை அவள் கையில் திணித்து விட்டு செல்ல...

" இங்க பாருங்க மேம்.. என்ன எவ்ளோ வேணா பேசுங்க... அவனைப் பத்தி ஒரு வார்த்தை பேசுனிங்க... அவ்ளோ தான்.. " என்று எப்போதுமே கோபம் கொள்ளாதவள் அவர் கூறியதில் ஆத்திரமடைந்து கத்த... அந்த நான்கு குழந்தைகளும் பயந்து போயினர்.

அதில் ஒருவள் ஏஞ்சலின் காலைக் கட்டிக் கொண்டாள். அவளை விலக்கி அவள் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்தவள், " இல்ல குட்டி மா.. அக்கா இனி கோபப்பட மாட்டேன்.. சாரி.... " என்று காதைப் பிடித்து தலையை சாய்த்து மன்னிப்பு கேட்டாள் அவள்...

அவளும் கையை கீழே இறக்கி விடு என்பதை போல சைகை செய்து ஏஞ்சலை அணைத்துக் கொண்டாள்.

அவளிடம் விடைப் பெற்ற ஏஞ்சல் நால்வரையும் உள்ளே செல்ல கூறி விட்டு.... அவரிடம் வந்தாள்

"சின்ன பசங்க இருக்க இடத்துல இந்த மாதிரி வார்த்தைய அள்ளி வீசாதிங்க.. மீஸ். சைலஜா... " என்றுவிட்டு ஏற்கனவே அவள் பொருட்களை எடுக்க வந்த மேரி அனுப்பிய ஆட்கள் அதையெல்லாம் எடுத்து வைத்திருந்தனர்.

" எல்லாத்தையும் கொடுத்துட்டீங்கல்ல... அப்போ போய் வேலைய பாருங்க.." என்று அவர் உத்தரவிட அனைவரும் தத்தம் வேலையைப் பார்க்க சென்றனர்...

ஏஞ்சல் அந்த காகிதத்தில் அவள் மனதிற்கு தோன்றியதை எல்லாம் எழுதி வைத்திருந்தாள்... அதில் இருந்த அந்த பெயரை தன் பிஞ்சு விரல்களால் வருடினாள்..

அந்த வார்த்தையைப் பார்க்கும் போதே அவள் இதழின் ஓரம் புன்னகை ஒட்டிக் கொள்ள வாய் திறந்து அதை உச்சரித்தாள் அவள்..

" வித்தார்த்... " ஒரு விதமான உற்சாகத்துடன் அந்த பெயரை
உச்சரித்தாள் அவள்....

அவள் உச்சரித்த வார்த்தையை உள்வாங்கியதாலோ என்னவோ அந்த ஞாளி தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்தது. அது என்னவோ கூற வருவது போல இருந்தது.
 
Top