Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பு விதை - 13

Advertisement

Dhanuja

Well-known member
Member
அன்பு தோழிகளே

அன்பு விதையின் அடுத்தப் பதிவை கொடுத்து விட்டேன் படித்துப் பார்த்து உங்கள் கருத்தை கூறவும்.அடுத்த இறுதி அத்தியாயம்.



அன்பு விதை – 13


இதோ உறவுகள் அத்தனையும் கூடி ஓர் சுப நிகழிச்சி முந்திய கசப்புகள் அனைத்தும் மறந்து, பிள்ளைகளின் எதிர் காலம் ஒன்றே குறி என்று அளவில் பெற்றோர்கள்.என்று பிள்ளைத் தரித்தோமோ அன்றே நமது ஆசைகள் போய் அவர்கள் நலமே முன் நிறுத்தி இயங்க ஆரம்பித்து விடுவோம்.



அதே போல் இங்கு மூன்று பெரியோர்களும் முடிவு செய்தனர்.பிள்ளைகளின் வழி செல்வோம்,சறுக்கல் வந்தால் கை கொடுத்து எழ செய்வோம் என்ற எண்ணத்துடன்.



பிள்ளைகளும் தங்களது தவறை திருத்தி கொள்ள. இதோ பெரோயோர்களின் வழி காட்டுதலுடன், வாழ்க்கை படகு அழகாகச் சென்றது.பத்து நாள் இடைவெளியில் மூன்று பெண்களுக்கும் தாலி பெருக்கும் வைபவம்.அந்த வகையில் இன்று தனது மருமகள் மீனாவிற்கு.



அனைவரும் கூடத்தில் இருக்க,வீட்டு மருமகளாக லலிதாவுடன் நீலா அனைத்து வேலைகளும். லலிதா சொல்ல சொல்ல ஆசையுடன், புது அனுபவம் ஆர்வம் கொள்ள அழகாகப் பொறுப்பை ஏற்றுச் செய்தாள் பார்த்த சுசீலாவின் கண்கள் நிறைந்தது.



வந்த சொந்தங்கள் அனைத்தும் விடை பெற்றுருக்க எஞ்சியது குடும்ப மக்கள் மட்டுமே.அதிலும் பெரியோர்கள் தனியாகப் பேசி கொண்டு இருக்க,மனோவின் தாய், சுசீலா,லலிதா அனைவரும் தங்களது பிள்ளைகள் மீது கண் வைத்துக் கொண்டே பேச்சு.எந்த வயதானாலும் பெற்றவர்களுக்குப் பிள்ளைகள் குழந்தைதான் அல்லவா.



இளைய ஆண்கள் அனைவரும் வெளியில் செல்ல.இரு பெண்களும் தயங்கியவாறே மீனாவிடம் சென்றனர்.இருவரும் பெண்ணுக்கு இருபுறம் அமர்ந்து அவளது கைகளை பற்றி கொள்ள முழித்தாள் மீனா. நாத்திகளின் தீடீர் தீண்டல் பயத்தைக் கொடுத்தது அப்பெண்ணுக்கு.



என்ன செய்யவேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்?இப்போது சிரிக்க வேண்டுமா? என்று பலவாறு குழம்பி போய் இருக்க.அவர்களே பேசினர் “சாரி அண்ணி உங்கள நான் அப்புடி பேசி இருக்க கூடாது”



“பரவாயில்லை” என்றவள் அதற்க்கு மேல் பேசவில்லை அவர்களும் பேசவில்லை. அவர்கள் பழக சற்று நாள் பிடிக்கும் என்பது திண்ணம்.இரு கைகளை இருபுறம் அமுத்தி பிடித்தவாறே எதுவும் பேசாமல் பெண்கள் மூவரும் அமர்ந்துருக்க,அங்கே வந்த லலிதாவின் கண்களில் அத்தனை நிறைவு.



தன் மகள் இனி அந்த வீட்டில் பிழைத்து கொள்வாள், அதற்காகத் தானே இந்த மாப்பிள்ளையை விடாப்பிடியாக முடித்தார்.அன்பு கொண்ட மனிதர்கள் கிட்டுவது இக்காலத்தில் பெரும் வியப்பே,அந்த அளவிற்குச் சமூகத்தில் சுயநலம் மிகுந்துள்ளது.அதில் இது போல் மக்கள் விதிவிளக்கே.



“அருண் உன்கூடக் கொஞ்சம் பேசணும்,மீனா நீயும் வாம்மா” மகனையும் மருமகளையும் அழைத்து அமர செய்து மெதுவாகத் தனது முடிவினை சொன்னார் திருவேங்கடம்.மகனது மேல் உள்ள சிறு உறுத்தலும் அவனது செயலால் பறந்து போயிற்று.இனி அவன் வழி என்று எண்ணி கொண்டதின் விளைவு தான் இந்த முடிவு.



“ப்பா சொல்லுங்கப்பா”



“அஹ்ஹன்……. மறுக்கமா நான் சொல்லுறத ஏத்துக்கோ” அவனது பதிலை எதிர் பார்க்காமல் மேலும் தொடரந்தார் “கருணை இல்லத்தின் பொறுப்பும், தொழில் பொறுப்பும் நீ முழுமையா ஏத்துக்கோ,உனக்கு துணையா உன் மனைவிய வச்சுக்கோ”



“சரிப்பா”

“அவுங்களுக்கு வேண்டியது எல்லாமே நிறைவா இருக்கணும்”



“கண்டிப்பா இருக்கும்ப்பா”



வேறு என்ன வேண்டும் மகனை விடுத்து மருமகளைப் பார்க்க எப்போதும் போல் தலையைக் குனிந்து அமர்ந்திருந்தாள்



“மீனா” அவர் உரிமையாகத் தனது பெண் போல அழைக்க வியந்து,



“ஹ்ம்ம் சொல்லுங்க மாமா”



“உனக்கு என் முடிவுல எதுவும் நெருடல் இருக்கா”



“அதெல்லாம் இல்ல மாமா” தயங்கி வந்தது வார்த்தை கண்டு கொண்டார் பெரியவர்.



“ஹ்ம்ம் இது உன் வீடு மீனா, இங்க உன் கருத்துகளும் முதன்மை, தனுச்சு இருக்கா கூடாது சரியா”.பூவிதழ் விரித்துச் சிறு புன்னகை புரிந்து தலையைப் பலமாக ஆட்டினாள்.



“சரிப்பா நானும் அம்மாவும் கருணை இல்லம் போறோம். பார்த்துக்கோங்க என்றவர் சுசீலாவை அழைத்துக் கொண்ட கிளம்ப.தனது அறைக்குப் போகப் போன மீனாவை இரு கரம் கொண்டு தூக்கினான் அருண்.அவனது தீடிர் செய்கையில் பயந்து அவனது கழுத்தை கட்டி கொண்டாள்.



“என்னது இது?” வழமை போல் பிள்ளை கோபம் மெல்லிய குரலில் கேட்க.அவளது மெல்லிய குரலில் சொக்கியவன்.



“என்னடி இது கேள்வி அநியாயமா, கல்யாணம் ஆகி ஒரே கலவரம் தான் இப்போதான் எல்லாம் செடில் ஆகியிருக்க,அப்பாடான்னு ரொமான்ஸ் பண்ணா ‘என்னது இதுனு’ கேக்குற”.



என்ன சொல்லுவாள் இதெல்லாம் அவளுக்குப் புதிது கட்டிலில் கிடத்தி அவளது ஒழுங்கற்ற கையை விரித்துப் பிடிக்க முயற்சி செய்ய வலி உயிர் போயிற்று பெண்ணுக்கு.



“வலிக்குதுங்க விடுங்க”

“வலிக்கட்டும் இது பிசியோ” அவன் சொல்லவே அதிர்ந்து பார்த்தாள் மீனா.



“நான் இப்புடி தான் தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணீங்க, அப்புறம் எதுக்கு இதெல்லாம்.இருபது வருசத்துக்கு மேல் பண்ணியாச்சு ஒன்னும் ஆகல இனியும் சரி ஆகாது”.



இயலாமை கொடுத்த கோபத்தைக் கண்டு கொள்ளாமல் “சரியாகி போகுது, போகல ஆனா தினமும் பண்ணுவேன்” அவன் பிடியில் அவன் உரைக்கக் கோபம் பெண்ணுக்கு.



“முடியாது போங்க” தனது மேல் பாரம் கொடுத்து படர்ந்துருந்தவனை விலகச் செய்ய அவள் போராட.அவனது அழுத்தம் சற்று அபாயகரமாக இருந்தது.



முடியாமல் “ப்ளஸ் அருண்”



“நானும் ப்ளீஸ்டி”அவனை பாவமாக மீனா பார்க்க, அவன் கண் அடித்தான்.



நீண்ட நாட்கள் மனதில் உள்ள கேள்வி இப்போதுதான் அதற்கு நேரம் கிட்ட,அவனது கண்களை பார்த்தவரே கேட்டாள் “என்ன கல்யாணம் பண்ண என்ன காரணம்.அழகு ,பணம் இதெல்லாம் சொல்ல வேண்டாம் என்னைவிட உங்க கிட்ட அதிகம்” என்றவளை பார்த்துச் சிரித்தான் அழகாக.



“எனக்கு புரியல பொதுவா எனக்கு வந்த சம்மந்தம் எல்லாமே உடல் ஊனம் பணம் கொடுங்க கல்யாணம் பண்ணிக்கிறோம்,அப்புடியே பணம் கொடுத்தாலும் இந்தப் பொண்ணு வேண்டாம்.குழந்தைக்கு இப்புடி ஆச்சுன்னா பணம் இருந்த போதுமா, இப்புடி நிறையப் பேச்சுக்கள் கேட்டு இருக்கேன்,



சில நேரம் எனக்கு ரொம்பக் கோவம் வரும் எதுக்குக் கல்யாணம் பண்ணனும்.அப்புறம் தான் அம்மாகிட்ட ரொம்பச் சண்டை போட்டு அண்ணாக்கு முடிக்கச் சொன்னேன்.உங்க தங்கச்சின்னு அப்போ தெரியாது எனக்கு.நிச்சியம் அப்போதான் உங்கள பார்த்தேன் கொஞ்சம் பயமா இருந்துச்சு என்ன நடக்குமோனு”





“உங்களுக்கே எங்க அண்ணனை பத்தி… என்ன பத்தி… நல்ல தெரியும் இருந்தும் எப்படி? தனது நெடு நாள் கேள்வியைக் கேட்டவள் அவனது பதிலுக்காகக் காத்திருக்க அவனோ வெகு இலகுவாகப் பேசினான்.



“ஹே என்ன நீ. நீயும் உங்க அண்ணனும் கொலை குத்தம் பண்ணா மாதிரியே பேசுற.அவன் தெரிஞ்சு தப்பு செஞ்சு இருந்தானா சரி,அவனுக்கே தெரியாம நடந்த தப்புக்கு அவன் எப்புடி பொறுப்பாவான் என்ன பேசுற நீ உனக்கு என்ன குறை,



அப்பவே உன் மேல ஒரு சின்ன ஈர்ப்பு எனக்கு.அதுவும் தனியா உங்க அண்ணனை பேஸ் பண்ணா பாத்தியா அதுல நான் டோடல் பிளாட்.என்ன கோபம் கொஞ்சம் நிறைய வருது” தீவிரமாகப் பேசி கொண்டு வந்தவன் அவளிடம் வம்பு செய்ய.



“அதான் சொல்லுறேன் எப்போ எப்புடி பேசுவேன்னு தெரியாது.யார் கூடவும் நெருங்கி பழக என்னால் முடியாது.கொஞ்சம் தள்ளியே தான் இருப்பேன். இப்போ சரினு தோணும் இதுவே தொடர்ந்தா சீ போனு சலிச்சுடும்.கல்யாணத்துக்கு முன்னவே பேசியிருப்பேன் நீங்க தான் என்ன பேசவே விடல”



“பேசவிட்டா நீ இப்புடி தான் பேசுவனு தெரியும் அதான் பேச விடல”.



இங்க பாரு மீனா நான் பார்த்தது உன் மென்மை,அன்பு,அறிவு இதைத்தான் ஒரு பொண்ணுக்கு இது போதும் முக்கியமா சகிப்பு தன்மையும் ,விட்டுக் கொடுக்குறதும் .உனக்கு அது இருக்கு அதுனால் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.நீ இப்புடி தாணு தெரிஞ்சும் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அதுனால நீ கோப பட்டா நான் தனுச்சு போறேன்,முடியலையா நானும் சண்டை போடுறேன் இதெல்லாம் ஒரு பெரிய விஷியமா யோசிக்காத”



என்ன எளிமையாகச் சொல்லிவிட்டான் ஹ்ம்ம்…….. இது சரிவராது வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும் இன்னும் சிலவருடங்கள் சென்று இதே வார்த்தையைக் கூறினால் பார்ப்போம் என்று எண்ணி கொண்டாள் மீனா.



பார்ப்போம் ஆண்டுகள் சென்று……….

**************************************​



அங்குச் சிதம்பரத்தின் அறையில் லலிதா சீதாம்பரத்தின் மடியில் படுத்துக் கொண்டு ஒரே அழுகை “ என்னம்மா…. நீ தான் ரொம்பத் தைரியமா இருப்ப இப்போ நீயே அழுதா எப்படி”



“என்னால் முடியலைங்க எத்தனை நாள் தவுச்சுருப்பேன், இப்புடி ஆண்டவன் எனக்குக் குழந்தையைக் குடுத்துடனே, அதை எப்படிக் கரை சேர்ப்பேன்னு.பாசம் காட்டுன ரொம்ப ஒடுங்கிடுவா நம்ம இப்புடி இருக்குறதுனால தான் நம்மகிட்ட அன்ப இருக்காங்கனு அவ நெனச்சுட கூடாதுனு மனசுக்குள் வச்சுப்பேன்”

“புரியுது லல்லி அழாதே நம்ப மாப்பிள்ளை அவள நல்ல பார்த்துக்குவாரு”

ஹ்ம்ம்….. என்றவர் மேலும் சற்று நேரம் அழுத பிறகே தூங்கினார்.ஒரு தாயாக இது போல் குழந்தை பெற்று அதனை இந்தச் சமூகத்தில் பேர் சொல்லும்படி வளர்ப்பது என்பது எளிதல்ல, எத்தனை பேச்சுக்களைக் கடந்து வந்திருப்பார் அவரும் மனிதன் என்றளவில் உள்ளுக்குள் அழுது மடிந்தார்.



தனது சோகம் தன் பெண்ணுக்கு நம்பிகை இழக்கும் என்ற ஒரே காரணம் கொண்டு மனதை இறுக்கி பிடித்தார்.சற்றுக் கடுமை போல் பெண்ணிடம் காட்டி கொண்டார் அதன் விளைவு தான் மீனாவின் தொழில் மற்றும் திருமண வாழ்க்கை.சாதித்து விட்டாள் பெண் தனது தாயின் துணையோடு அதனை அவள் அறியவிட்டாலும் பிற்காலத்தில் அவள் தாயாகும் போது, காலம் அதற்கு வழிவகுக்கும்.



தாய் என்றாலே சிறப்பு அதிலும் லலிதா இன்னும் சிறப்பானவள்.

***********************************************​

இரவு பதினோரு கடந்த நிலையில் வந்த மனோவை அமர வைத்து கதை பேசி கொண்டு இருந்தாள் அவனது ஆசை மனையாள்.சோர்வுடன் வந்தவனை உணவு கொடுத்துக் கவனியாமல் சிறு பிள்ளை போல் காலேஜில் நடந்தவையைச் சொல்லி கொண்டு இருந்தாள்.



அவனோ சோர்வுடன் அவள் தோளில் படுத்துப் பாதிக் கண்கள் சொருகிய நிலையில் கதை கேட்க.மனோவின் தாய் தலையில் அடித்துக் கொண்டார் மகனை பார்க்க பாவமாக இருந்தது.மருமகளையும் கடிந்து கொள்ள முடியவில்லை. சிறு பிள்ளை போல் கை கால்கள் ஆட்டி கதை சொல்லும் மருமகள் மேல் கோபம் கொள்ள முடியாமல்,மகனையே சாடினார்.



“டேய் எரும மாடு வந்தா முகம் அலம்பிட்டு சாப்புட்டுட்டு மத்த வேலையைப் பார்க்கம்மா,படுத்து கிடக்க எழுந்திரிடா”.



தாய் போட்ட சத்தத்தில் எழுந்தவன் அப்பாடா என்ற பெருமூச்சுடன் “இதோ போறேன்மா” விட்டால் போதும் என்பது போல் ஓட சிரிப்பு தான் வந்தது அவருக்கு.



மாமியார் போட்ட சத்தத்தில் கப் சிப் நமது வேணி.சிறிது நேரம் சென்று தான் அவர் சொன்னதின் அர்த்தம் புரிந்தது.அதற்குள் மனோ அனைத்தையும் முடித்துப் படுக்கையில் புரண்டு கொண்டு இருந்தான்.



அறைக்குள் வந்த வேணி அவனைப் பார்த்து “நான் தான் பேசிகிட்டு இருக்கேன், உங்களுக்கு என்ன? வாயத் திறந்து சொல்ல வேண்டியது தானே”



“இது என்னடி அநியாயம். வேலைக்குப் போயிட்டு வந்த வீட்டுக்காரை வச்சு கதை பேசுறோமே.அவருக்குச் சோர்வ இருக்காதா? எதாவது குடிக்கக் கொடுப்போம்,சாப்பிட கொடுப்போமுனு இல்லாம ஸ்கூல் கதை பேசிகிட்டு இருக்க”



“ஸ்கூல் இல்ல காலேஜ்”



“நீ பண்ணுறதெல்லாம் பார்த்தா ஸ்கூல் படிக்கிறவ மாதிரிதாண்டி தெரியுது”



போங்க என்று கண்ணீர் பொங்க கட்டிலில் குப்புற படுத்து விட்டாள்.அவனும் அவள் மேல் படுத்து “பாப்பா உன்னோட ரொம்பக் கஷ்டம் உன்ன எப்புடி கொண்டு வர போறேன்னு தெரியல போ” போலியாக அலுத்துக்கொள்ள.



“ரொம்பத்தான் போங்க அங்கிள்”.



“அங்கிள் சொல்லதடி கடுப்பாகாது”



ஹாஹாஹா……. அப்போதான் சொல்லுவேன் நல்லா அங்கிள்......... என்றவளை வன்மையாகக் கண்டித்தான் அவனது பாணியில்.அவளது சிறு பிள்ளை தனத்தைக் கருத்தில் கொள்ளாமல் அவளுக்கு ஏற்ற வாறே வளைந்து கொடுத்தான்.இனி வரும் நாளில் அனுபவம் வேணியை மாற்றிவிடும் என்பது திண்ணம். சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல.



விழுந்தால் தான் நடக்க முடியும் நடக்கத் தெரியாது குழந்தையைக் கையைப் பிடித்துக் கூட்டி செல்வது போல அவளது கைகளைப் பற்றி வாழ்க்கையைக் கவனமாகப் பயணிப்பான் மனோ.



*********************************************************************************

வெளி பால்கனி ஊஞ்சலில் ஆடி கொண்டு இருந்தான் விக்னேஸ்வரன் அவனது மடியில் நீலா.சிறு புன்னகை உறைந்த நிலையில் வெட்கம் கொண்டு எழுந்து, எழுந்து செல்ல பார்க்க.இறுக்கி பிடித்து அமர்த்தி கொண்டான் பிள்ளை போல,ஊஞ்சல் ஆடிக்கொண்டே பிள்ளை முத்தம் வேறு.



“விடுங்கப்பா”



“ஏன்?”



“உள்ள போலாம்”

“போய்”



“ஹ்ம்ம் தூங்கலாம்”



“முடியாதே வேற பண்ணலாம்”பெண்ணிடம் வெட்கம் கொண்ட மௌனம் என்ன சொல்லுவது.



“சரிபோ” என்றவனை கோவமோ என்று அவன் முகம் பார்க்க சிரித்து கொண்டு இருந்தான்.அவனது முக காயங்கள் கண்டவள் கண்டாந்தவை நினைவு வர அழுகை பெண்ணுக்கு.



“ப்ச் மறக்கணும் இல்லாட்டி .........” அவன் பேசுவதைத் தடுத்தவள்.



“சும்மா சும்மா போய்டுனு சொல்லாதீங்க”



“வேற என்ன செய்ய நடந்து முடுஞ்சத மாத்த முடியாது.நீ அத நெனச்சு நெனச்சு அழுகுறத பார்க்கவும் முடியாது”.



“அப்போ அப்போ நியாபகம் வருது நானும் என்ன பண்ண”



இருவரும் மௌனமானார்கள் சில விடயத்தைக் கடக்க முடிந்தாலும் மறக்க முடிவதில்லை. காலத்துக்கும் இந்த வலி இருக்கத்தான் செய்யும். சிலருக்கு நடந்தவை ஒரு பொருட்டே இல்லை,சில கோட்பாடு உடையவர்களுக்கு அது கடினமே.அதனால் தான் இருவருக்கும் அதனைக் கடக்க முடியவில்லை.



மீண்டும் அவளை அமரவைத்து இறுக்கமாக இறுக்கி கொண்டான் அவளும் அவனது அணைப்பில் பாந்தமாக.மனம் இப்போது தெளிவாக மாற்றம் ஒன்றே மாறாதது.காலம் இவர்களையும் மாற்றும் என்ற எண்ணத்துடன்.





 
அருமையான பதிவு
அருண் மீனா
அன்பா அறிவா அழகுப்பா
 
Top