Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பு விதை - 12

Advertisement

Dhanuja

Well-known member
Member
அன்பு தோழிகளே

அன்பு விதையின் அடுத்தப் பதிவை கொடுத்து விட்டேன் படித்துப் பார்த்து உங்கள் கருத்தை கூறவும்.



அன்பு விதை – 12
எந்த விதமான பேச்சுகளும் இல்லாமல் மருத்துமனையில் காரை நிறுத்தியவனைப் புரியாமல் பார்த்தாள் மீனா.உள்ளுக்குள் யாருக்கு என்னவோ? என்ற பயம் இருக்கவே பெண்ணுக்கு உடல் உதறல் எடுத்தது “என்னங்க” என்றவளை.

“உள்ளே போய் பேசிக்கலாம் மீனா, உங்க அம்மாவும் அப்பாவும் ரொம்பச் சோர்ந்து போயி இருக்காங்க, அவுங்கள பாரு” அவன் சொல்லவும் தனது அண்ணனுக்குத் தான் என்று எண்ணியவள் நொடி பொழுது கூடத் தாமதியாமல் விரைந்தாள்.

அங்கே தனது தமையனை கண்டவள் துடித்துப் போனால் இது போல் எதுவும் நடந்து விடக் கூடாதென்று தானே அத்தனை பயந்தாள். அனைத்தும் இப்போது நடந்து முடித்தாயிற்று, அவனைக் காண சகிக்காமல் முகத்தை மூடி கொண்டு கதறி அழுதாள்.

அவளது சத்தத்தில் தான் பெற்றவர்கள் இருவரும் அவளைப் பார்த்தனர்.விக்னேஸ்வரனும் தனது தங்கையைப் பார்த்தான் எத்தனை தூரம் இந்தப் பெண்ணை வதைத்து விட்டேன் என்னுடன் பிறந்ததைத் தவிர்த்து இச்சிறு பெண் என்ன பாவம் செய்தால், எண்ணும் போது தன் மீதே வெறுப்பாக வந்தது விக்னேஸ்வரனுக்கு.

தனது அண்ணனிடம் சென்றவள் அவனைக் கட்டி கொண்டு அழுக அவனுக்கு இன்னும் குற்ற உணர்வாக இருந்தது. தான் செய்த ஒரு தவறு எத்தனை பேரை பாதிக்கின்றது. நீலா அவனை வேண்டாம் என்று கோபம் கொண்டது கூட நியாயம் என்றே தோன்றியது, அதனால் தான் அவன் செய்தவைக்கு எந்த விதமான காரணம் சொல்லாமல் அவளது முடிவு என்பது போல் இருந்துவிட்டால்.

அழுதுக் கொண்டு இருந்த மீனா வேகமாக அருணிடம் வந்து “எல்லாமே உங்களல தான்.இந்த கல்யாணம் வேண்டாம் சொன்னேன் கேட்டீங்களா இப்போ பாருங்க. நீங்க தியாகி ஆகா நான் தான் கிடைச்சேனா போங்க நான் இனி வரமாட்டேன் அங்க, நான் எங்க வீட்டுல தான் இருப்பேன்”

தனது கோப வார்த்தைகளைக் கூட மெல்லமாக மென்மையாகப் பேசிய மனைவியிடம் மயக்கம் தான் வந்தது அருணுக்கு.பொதுவாகவே பெண்மை என்றால் மென்மை அதிலும் தும்பை பூவாக இருந்தாள் மீனா.இந்த மென்மை தானே ஈர்த்தது,அவளது அன்பு தானே ஈர்த்தது.

சத்தியம் செய்வான் அவனது வாழ்வில் எந்தச் சறுக்கல் வந்தாலும் இந்தப் பெண் அன்பு என்னும் ஆயுதம் ஏந்தி தன்னை மீட்டெடுப்பாள் என்று, பொதுவாகவே பெண் பார்க்கும் ஆண்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் அதுவும் இக்காலத்தில் சொல்லவா வேண்டும்.
கனவில் தான் மிதக்கின்றனர் அப்பப்பா எத்தனை எதிர்பார்ப்பு எத்தனை கனவுகள்.பெண் அழகாகக் இருக்க வேண்டும்,படித்து இருக்க வேண்டும், குடும்பத்தை நடத்தும் திறமை வேண்டும், அதாவது பொருளாதார நிலையைச் சரி செய்யும் அளவிற்கு,அது போக வேலைக்குப் போக வேண்டும். இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டாம் என்று ஆயிரத்தெட்டுக் கண்டிஷன்ஸ்.

யாரும் அன்பு செய்யும் பெண் வேண்டும் என்று கேட்பதில்லை, எந்த சூழ்நிலையிலும் தன்னைத் தாங்கி நிற்க வேண்டும் என்று கேட்பதில்லை.ஆனால் நமது அருண் மீனாவிடம் அன்பை மற்றும் எதிர் பார்த்தான் புற தோற்றம் மாயையை என்பதை அறிந்து கொண்ட இக்கால இளைஞன் நாயகனே.

அவளது செயலில் பயந்து போனது சிதம்பரம் மட்டுமே ஐயோ பாவம் என்று தனது மருமகனை மனதுக்குள் மட்டுமே எண்ணி பரிதாப போட்டுக்கொண்டார்.மீனாவின் கோபத்தை அறிந்தவர் அவர். அதனால் வேடிக்கை மட்டும்.வழமை போல் எனக்கு கண்ணே தெரியாது காதும் கேட்காது என்ற நிலையில் லலிதா நின்றுந்தார்.

அருண் மீனாவிடம் நெருங்கி வர வார்தைகள் அற்று பயந்து போய் பின்னே சென்றாள் பெண்.முகத்தில் குறும்பு மின்ன அவளை உரசி கொண்டு வெளியில் சென்றான் அருண்.என்ன மனிதன் இவன் அதிர்ந்து நின்றது மீனா தான்.
அவன் சென்றதும் மனோ -வேணி மற்றும் திருவேங்கடம் - சுசீலா வந்தனர்.என்ன பேசுவது என்றே தெரியாமல் அனைவரும் முழிக்க.மனோ தான் விக்னேஸ்வரனை தீட்டி தீர்த்தான்.

சுசீலா சென்று ஆறுதலாக லலிதாவின் கையை பற்றி கொண்டார். எந்த சாமி புண்ணியமோ இரு பெற்றோர்களும் மனதின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடப்பதால், இங்கு தேவையற்ற பேச்சுகளுக்கு இடமில்லாமல் போய்விட்டது.

****************************************************​
அங்கு நீலாவிற்கு இருப்பு கொள்ளவில்லை என்னதான் இருந்தாலும் அவள் கணவன் அல்லவா.நேற்று ஏற்பட்ட பந்தமாகவே இருந்தாலும் இவ்வுடல் மண்ணை விட்டு மறையும் வரை இருக்கும் ஒரே பந்தம் ஆயிற்றே.

சிறுதும் தாமதியாமல் வேணிக்கு அழைத்தவள் விடயத்தைச் சொல்லி ஓ..வென்று அழுக.அவளும் மனோவிடம் சுருக்கமாகச் சொல்லி அழைத்து வந்துவிட்டாள்.தனது தமக்கையின் அழுகையைப் போக்க.

விக்னேஸ்வரன் மனோவுடன் பேசுவதை பதிவு செய்ய தனது கணவனை பார்த்து அதிர்ந்து விட்டாள் வேணி.எத்தனை கனவுகள்,எத்தனை ஆசைகள் கொண்டு பேசி இருப்பான். அத்தனையும் பொய்த்து போய் படுத்திருக்கும் கணவனை பார்க்க முடியாமல் அழுது கரைந்தாள்.

அனைவரும் விக்னேஸ்வரனை பார்த்துவிட்டு வெளியில் வர மனோ மற்றும் வேணி மட்டும் விடை பெற்று சென்றனர்.

கல்யாணம் ஆகி மூன்று தினம் ஆகிறது, இன்னும் சுமுகமாக இருவரும் பேசி கொள்ளவில்லை. அவனுடன் பேச வேணி ஆசை கொண்டாலும் கண்டு கொள்ளாமல் சென்று விடுவான்.இன்று அவனது முகத்தை பார்த்து கொண்டே ,அவனிடம் பேசிவிட வேண்டும் தன்னை பிடிக்குறதா இல்லையென்று ஒரு முடிவோடு அவள் எண்ணிக்கொள்ள.

அவனோ வீடு வரும்வரை அவள் புறம் திரும்பி கூட பார்க்கவில்லை.தங்களது அறைக்கு வேகமாக போனவனை பின் தொடர்ந்து ஓடியவள் அறைக்குள் நுழைய அலேக்காக தூக்கினான்.

“குடும்பமே கேடி குடும்பம் லைவ் டெலிகாஸ்ட் பண்ணுறியாடி உங்க அக்காக்கு ஹ்ம்ம் ......”

என்றவரே அவளைப் பிடிக்க வர அவளும் பயந்து கட்டிலின் மறுபுறம் சென்றுவிட்டாள் “இல்ல அக்கா பாவம் மனோ”

“ஒய்……… பெயர் சொல்லுற நீ” கோபமாகத் தன்னைக் காட்டி கொண்டு அவள் மீது பாய.

அவனது கோபம் உண்மை போலும் எண்ணியவள் அழுகை வர “இனிமே சொல்லமாட்டேன் ப்ளீஸ்” சொல்லி முடிக்கும் முன்பே கண்ணீர் கரை புரண்டது.

குழந்தை போல் தேம்பி தேம்பி அழுதவளை பார்க்கும் பொது அவனுக்கு பாவம் வரவில்லை தன் மீது தான் பாவம் பாவமாக வந்தது.எத்தனை முறை சொன்னான் அருண் அவள் சிறு பெண் முதிரிவு போதாதென்று கேட்டேனே இதற்குத் தானே ஆசை பட்டாய் பாலா குமார அனுபவி. மனதுக்குள் நொந்து கொண்டான் அவளது சிறு பிள்ளை தனத்தை எண்ணி.

அவளை மாற்றும் பொருட்டு “ஏய் கேடி அழுது நடிக்காத.நான் தாண்டி அழுகணும் சின்னப் பாப்பானு உங்க அண்ணன் சொன்னான், ஆனா நீ என் கல்யாணத்தை நிறுத்தி என்ன கல்யாணம் பண்ணி இருக்க,நீ சின்னப் புள்ளையாடி” பேசியவாறே அவளது கன்னம் தேய்க்க.

அவனது பேச்சில் அழுகை மறந்து கோபம் வந்துவிட்டது “என்ன கல்யாணம் பண்ண கேட்டுட்டு எப்புடி அவளைப் பண்ணலாம்”

“இது என்னடி நியாயம் நீ தானே வேணான்னு சொன்ன”

“அப்புடித்தான் சொல்லுவேன் என் பின்னாடி வந்து கெஞ்சி இருக்கணும்”

“சினிமா நெறைய பரப்பிய நீ லூசு லூசு”

“ஆமா நான் லூசு தான் போடா”

“போடா!........... வா வாடி நீ”

சுமார் இருபது நிமிடம் போக்குக்காட்டியவள் அதற்கு மேல் முடியாது என்ற நிலையில் அவனிடம் சிக்க.அவளது கண்ணைப் பார்த்தவாறே “படிப்பு பாட்டுக்கு இருக்கட்டும்,நம்ப வாழ்க்கைய தொடங்கலாம் ப்ளீஸ் உனக்குப் படிக்கச் நான் உதவி பண்ணுறேன்,

கிட்டத்தட்ட மூனு வருசமா காத்து இருக்கேண்டி இப்போதான் ஹ்ம்ம்……. புரியுதா” அவளது கழுத்தில் முகம் புதைத்து கேட்க.சிறு பெண் மயங்கி தான் போனாள்.எதிர்பார்ப்பே இல்லாமல் அங்கே ஒரு தாமத்தியம் அழகாக மலர்ந்தது.

***********************************************​
இங்கு நீலா ‘நான் அவனுடன் வாழமாட்டேன், அவன் எனக்கு வேண்டாம் அவன் ஒரு குடிகாரன்’ என்று ஏக வசனம் பேசியவள் இப்போது அந்தக் குடிகாரனுக்காக உண்ணா விருத்தமிருந்தாள்.என்னதான் அவள் பக்கமும் நியாயம் இருந்தாலும் பேசிய பேச்சுக்கள் சற்று அதிகம் தான்.

ஆத்திரக்காரனுக்கு அறிவு மட்டு என்ற கூற்றுக்கு ஏற்ப தான் அவளும் நடந்துகொண்டாள்.

தன் கணவன் என்ற உரிமையை வந்து ஒட்டிக்கொள்ள அதற்கு மேல் அவளால் அங்கு இருக்க முடியவில்லை.இரவு ஒன்பதை நெருங்கும் வேளையில் கிளம்பிவிட்டாள் தனது கணவனைப் பார்க்க. இது என்னடா விந்தை சண்டை பேசும் பொதுத் தேடிய உறவுகளை மறந்து செல்வது.

கோபம் அறிவுக்குச் சத்துரு என்று சும்மாவா சொன்னார்கள் பெரியோர்கள்.கோபம் வந்தால் நமது அறிவு சற்றுக் காமியாகத் தான் வேலை செய்யும் அதாவது இருக்கும் உச்ச கட்ட பதட்டத்தில் என்ன செய்கிறோம் என்பதே புரியாத நிலை. அந்த நிலையிலும் பொறுமையாகக் கையாள்பவர் சிலரே. பலர் அதில் மாட்டி கொண்டு பிரியத்தை இழக்கின்றனர்.

மகளின் நிலையை நன்றாக அறிந்து கொண்டால்தான் திருவேங்கடம் அமைதியாக இருந்தார். அவருக்கும் வருத்தமுண்டு உண்மையைச் சொல்லி அவர்கள் பக்க நியாயத்தை எடுத்து சொல்லி இருக்க வேண்டும் திருமணத்திற்கு முன்பே என்ற எண்ணம் வராமல் இல்லை.

ஆனால் அவர்களுக்கே தெரியாத ஒன்றை எப்படிச் சொல்லி இருக்க முடியும்.இது தெரிந்தும் அவர்களிடம் கோபம் கொள்வது அத்தனை உவப்பாகப் படவில்லை.

சிதம்பரம்- லலிதா தம்பதியினரும் சரி திருவேங்கடம்-சுசீலா தம்பதியினரும் சரி மனம் ஒன்றி உணர்வுகளுக்கும்,மனித மனதிற்கும் மரியாதையைச் செய்து அன்புடன் வாழும் தம்பதியினர்.

ஆகவே தான் அங்கு ஓர் தவறு ஏற்கப்பட்டு மன்னிக்கப்பட்டது.உண்மையான நேர்மை கொண்டவர்களால் மட்டுமே இது போல் நடந்து கொள்ள முடியும் அல்லவா. ஆட்டோ பிடித்து வீட்டை நோக்கி சென்றாள் கண்ணில் அருவி பெறுக அதனை துடைக்க கூட மதியற்று கணவன் நினைவில்.

அப்போதுதான் மருத்துவமனையில் இருந்து விக்னேஸ்வரனை அழைத்து வந்து அவனது அறையில் படுக்க வைத்து என்று சில உதவிகளை அருண் செய்து கொண்டு இருந்தான்.சிதம்பரம் ‘வேண்டாம் மாப்பிள்ளை’ என்று தடுத்தும் தனது கடமைகளை அன்பாகவே செய்தான் தனது மனைவியின் அன்புக்காக.

அவர்களை வந்து சில நொடிகளிலேயே அங்கு வந்து விட்டாள் நீலா.தங்கையின் வரவை அதிசயமாகப் பார்த்தவரே "வா நீலா" என்று அழைக்க.

அவள் இடத்தில் அவன் நின்று அழைத்தது குற்ற உணர்வை கொடுத்தது. அவளது மனதை ஒரு அண்ணனாகக் கண்டு கொண்டவன்,அன்பென்னும் சிறகு விரித்து அவளை அழைக்க அழுகை பொங்க பாய்ந்து அனைத்து கொண்டாள்.அவளது சத்தத்தைக் கேட்டு அனைவரும் அங்கே கூடினர்.

பெரியவர்கள் முகத்தில் நிம்மதி என்றால்,சிறுவர்கள் முகத்தில் மகிழ்ச்சி மீனாட்சிக்குச் சந்தோஷத்தில் அழுகையே வந்தது.

பெரியவர்களைப் பார்க்க சங்கடப்பட்டுக் கொண்டு தனது அண்ணனின் நிழலில் ஒளிந்து கொள்ளச் சிரித்து கொண்டே முன் வந்து அவளை இழுத்தார்லலிதா “நீ எனக்கும் பொண்ணு தான் நீலா ,என் மகன் பண்ணது தப்பு, அதுக்கு நீ கொடுத்த எதிர் வினை சரிதான்” என்றவர் வியந்து பார்த்தாள் பெண்.
யார் சொல்லுவார் இப்படி அதுவும் மாமியார்? பொதுவாகத் தன் பிள்ளைகள் தவறே செய்தாலும் அரவணைக்கும் பெற்றோர்களுக்கு இடையில் லலிதா அத்தி பூ தான்.மாமியாரின் வாய் மொழியில் தெளிவு பெற தானாக உறவு வந்தது பெண்ணுக்கு “அவர் எங்க அத்தை”

“அங்க தான்மா இருக்கான் போயி பாரு”

புயலாக உள்ளே நுழைந்தவள் தனது கணவனை பார்க்க அவனது நிலையில் கண்ணீர் மீண்டும் துளிர்த்தது.அவளது வரவை குரல் மூலம் அறிந்தவன் கண் மூடி படுத்திருக்க.

மெதுவாக அவனை நெருங்கி அமர்ந்து அவன் கை தொட்ட நொடி கையை வேகமாக உதறி தள்ளினான்.தன்னை பற்றி பேசிய வார்த்தைகள் கூட விட்டுவிடலாம் ஏனென்றால் தவறு செய்தவன் நான்.ஆனால் என் தங்கை எனக்கு இன்னொரு தாயாக என்னை தாங்கியவளை என்ன பேசிவிட்டாள் இவள் என்ற கோபம்.

“சாரி என்னால உங்க பஸ்டா ஏத்துக்க முடியல”

“நான் ஏத்துக்கச் சொன்னேனா” கடுப்புடன் கேட்டான் விக்னேஸ்வரன்

‘அப்புறம் ஏன் இந்தக் கோபம்’ என்ற எண்ணம் இருந்தாலும் அவள் பேசவில்லை பயம் அவனை அறியும் முன்னே வந்த இடைவெளியை கடக்க முடியவில்லை.

சிறு மௌனத்திற்குப் பின்,அவனே மௌனம் களைந்தான் “என் தங்கச்சிய என்ன சொன்ன யோசுச்சு பாரு”

அவனது கோபத்தின் பொருள் புரிய அமைதியானாள்,ஏனோ மீனாவிடம் ஒட்டவில்லை மனம், எதனால் அதுவும் புரியவில்லை.அண்ணன் மனைவி என்ற உறவு கூடப் பட்டும் படாமலும்.ஆனால் பேசியது தவறு என்று பட.

“தப்புதான் நான் அவுங்கள அப்புடி பேசி இருக்கக் கூடாது.என்னோட சூழ்நிலையும் நீங்க புரிஞ்சுக்கணும், ஏவுளோ ஆசையா வந்தேன் உங்களுக்கே தெரியும்” அதற்கு மேல் பெண்ணுக்கு பேச முடியவில்லை.

அவள் சொல்ல வருவது புரிய மனம் கலங்கியது அவனுக்கு “விடு என்னால பழசை மாத்த முடியாது ஆனா இனி வரும் காலத்துக்கு என்னால உத்தரவாதம் கொடுக்க முடியும்.அப்புறம் உன் இஷ்டம்” கடைசி வார்த்தை அவளை வருந்த செய்ய.

“இல்ல நான் உங்ககூடத் தான்” ஒரே வரியில் உயிர் கொள்ளச் செய்துவிட்டு மீனாவை பார்க்க சென்றாள்.தவறு என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் தப்பு என்றால் தட்டி கேட்க வேண்டும் என்று சொல்லி கொடுத்த திருவேங்கடத்தின் வளர்ப்புச் சோடை போகவில்லை.

இத்தனை இலக்கத்தை எதிர்பார்க்காமல் இன்பமாக அதிர்ந்து போனான் விக்னேஸ்வரன்.அவனது நிலையைக் கருத்தில் கொள்ளாமல் மீனாவை பார்க்க சென்றாள்.

பேச வேண்டுமென்று வந்து விட்டாலும் ஓர் தயக்கம்.மீனாவின் அறையின் வாயிலில் முழித்துக் கொண்டு நின்றவளை. முதுகின் புறம் கை கொடுத்து தள்ளி கொண்டு சென்றான் அருண் “என்ன தயக்கம் உனக்கு”

மீனாவும் அவளது வரவை அதிசயமாகப் பார்க்க தங்கையைக் கட்டிலில் அமர்த்தித் தானும் அவள் புறம் அமர்ந்து கையைப் பற்றினான்.அந்த ஆறுதலே அவனது அன்பை சொல்ல தான் பேசிய வார்த்தைகளை எண்ணி அவனைக் கட்டி கொண்டு கதறினாள் நீலா.
 
யப்பா.. ஒரு வழியா இந்த நிலாப் பொண்ணுக்கு புத்தி வந்துச்சே.. அதே போதும்.. அப்றம் நம்ம வேணி.. சூப்பர்.. மனோ சாதிச்சிட்டான்.. லலிதா இப்பவும் என்னை வியக்க வைக்கும் பெண்மணி.
 
Top