Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பு விதை - 11

Advertisement

Dhanuja

Well-known member
Member
அன்பு தோழிகளே

அன்பு விதையின் அடுத்த அத்தியாயத்தைக் கொடுத்து விட்டேன் படித்துப் பார்த்து கருத்தை கூறவும்.



அன்பு விதை – 11


என்ன நடக்கிறது இங்கே. இதற்குத் தானே திருமணமே வேண்டாமென்று இருந்தேன். என்னால் இது போல் பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியாது. இந்த அமைப்பு மூச்சை முட்ட செய்கிறதே.தாயிடமாவது அண்ணனை பற்றிச் சொல்லி இருக்க வேண்டும். காலம் கடந்த புலம்பலில் மீனா.யோசித்து யோசித்துத் தவறான முடிவை சரியாக எடுத்தாள்.



தனது அன்னைக்கு அழைத்தவள் “ஹலோ அம்மா”



“சொல்லுடா” சோர்ந்து ஒலித்தது அன்னையின் குரல்,வாழ்க்கையில் என்ன சறுக்கல் வந்தாலும் நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும் தாய், இன்று நைந்து பேசுவது மனதை அறுக்க.



“அம்மா சாரிம்மா அண்ணா பாவம்” முழுமையாகச் சொல்ல முடியாமல் தேங்க.



“உங்க சூழ்நிலை புரியுதுடா சொல்ல போனா பெருமையா இருக்கு. ஒத்த ஆள இருந்து உங்க அண்ணனை மீட்டு எடுத்துருக்க என் வளர்ப்பு பொய்த்து போலன்னு பெருமையா இருக்கு. ஆனா எங்ககிட்ட உண்மைய சொல்லி இருக்கலாம்”



“எனக்கு அப்போ ரொம்பப் பயமா இருந்துச்சும்மா அண்ணா வேற ரொம்ப உடைஞ்சு போய்ட்டான்,அவனைச் சமாளிக்க முடியல அதான்”



“ஹ்ம்ம்....... இப்போ பழசை பேசி ஒன்னும் ஆகப்போறதில்லை மீனா”



“அம்மா நான் வேணா அங்க வந்தரவா”



“எதுக்கு மீனா?” பொறுமையாகவே கேட்டார் தாய். அவருக்கு மகளின் எண்ணம் புரிந்தது, கோபம் கூட வந்தது இருந்தும். அவளே சொல்லட்டும் என்று கேட்டு வைத்தார்.



“அவுங்க பொண்ணு இங்க இருக்கே .....”



“அதுனால ?”



“ப்ச்…. எனக்குப் பயமா இருக்கும்மா ஏற்கனவே அண்ணி என்ன நொண்டினு….. “சொல்லும் போதே கண்ணில் நீர் துளிரித்தது.



அங்கே லலிதாவுக்கும் வலித்தது அதனை மறைத்துச் “சொன்னா சொல்லிட்டு போகட்டும் மீனா. அது உன் வீடு,உன் வீட்டுக்காரும்,மாமியாரும் போனு சொன்னா மறுவார்த்தை பேசாம கிளம்பி வந்துடு,வேற யார் பேச்சுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டாம்,



உங்க அண்ணன் வாழ்க்கை, வேற உன் வாழ்க்கை வேற. யார் என்ன பேசுனாலும் இருந்து சமாளி. கோவம் வந்தா நீயும் பேசு உன் பேச்சு நியாமாவும்,மரியாதயாவும் அதே சமையம் உறுதியாகவும் இருக்கணும்” கை தேர்ந்த ஆசானாக லலிதா பாடம் எடுக்க.



“சரிம்மா” அவள் பதிலில் உறுதில்லை என்பதை அறிந்தவர்.



“திரும்பவும் சொல்லுறேன் மீனா உன் வாழ்க்கை வேற, உங்க அண்ணன் வாழ்க்கை வேற. அந்தப் பொண்ணு உங்க அண்ணன் கூட வாழ்ந்தாலும் சரி,வாழடியும் சரி உனக்கு அதான் புகுந்த வீடு அதை மறக்காதே” கண்டிப்பு கலந்த உறுதி அவர் சொல்லில்.



“அப்புறம் மறு வீட்டுக்கு உங்க வீட்டுல பேசிட்டு சொல்லுறேன்” என்றவர் அவளது பதிலை கேட்காமல் வைத்து விட்டார்.



மீனா தவித்து போனாள் காலையில் நடந்த சச்சரவிற்கு பின் அவள் அறையை விட்டு எங்கும் செல்லவில்லை. உணவை கூட அருண் கொண்டு வந்து கொடுத்தான்.



கோழையாக மாறி போனேன் என்ற எண்ணம் வர கத்தி அழுக தோன்றியது அவளுக்கு.அழுதால் தோல்வி என்ற அன்னையின் பாடம் நினைவு வர அழுகையை அடக்கினாள்.



மனதில் பெரும் போராட்டம் என்னதான் பரந்த மனப்பான்மை கொண்ட மனிதர்களாக இருந்தாலும் தன் பிள்ளை என்று வரும் பொது அனைவரும் சுயநலவாதியே. அந்த வகையில் திருவேங்கடம்-சுசீலாவை எதிர் கொள்ளப் பயந்து போனாள் மீனா.



இவை எதுவும் அறியாது தனது போக்கில் சுற்றி திரியும் கணவன் மீது கோபம் கோபமாக வந்தது.அப்போதுதான் அவள் கருத்தில் மதியத்தில் இருந்து அருண் கண்ணில் படாதது உரைத்தது.



சிறிதும் தாமதிக்காமல் அருணுக்கு அழைத்து விட்டாள். மனைவியாக இரண்டாம் நிலையில் மீனா வந்துவிட்டாள்.அங்கு வெகு அலட்சியமாக அவளது கணவன் "சொல்லுடி"



ஒரு நிமிடம் போனை எடுத்து பார்த்தவள் மீண்டும் அதனைக் காதுக்குப் பொருத்தி “எங்க இருக்கீங்க”



“மனோக் கூட தான் இருக்கேன் வர நேரம் ஆகும் வெளில போகப் பயந்துகிட்டு சாப்பிடாம தூங்கவேணாம். எல்லாத்தையும் எதிர் கொள்ளணும் அதான் அருண் பொண்டாடிட்டுக்கு அழகு”



அவளது சங்கடம் புரிந்து தான் அவளுக்கு வேண்டியதை அறைக்கே கொண்டு வந்து உதவி புரிந்தான்.ஆனால் இது தவறான மனநிலை அல்லவா அதான் கண்டிப்பு கலந்த சீண்டல்.



அவனது அலட்சிய பேச்சில் கோபம் கொண்டு “இவனை .... போடா” என்று போனை வைத்துவிட்டாள், அதிகப் பட்ச கோப வார்த்தை அவளுக்கு.



“போடவா......” அதிர்ந்து போனை பார்க்க.



“என்னடா மச்சான்” மனோ குறும்பு சிரிப்புடன் கேட்க



“நேத்துத் தானடா கல்யாணம் ஆச்சு அதுக்குள்ள போடா சொல்லுற”



“மீனா பரவாயில்லடா உன் தங்கச்சி கெட்ட வார்த்தை சொல்லி திட்டுறா”



“வெட்கமே இல்லாம என்கிட்டையே சொல்லுற”



“என்ன பண்றது உங்கிட்ட தான் சொல்ல முடியும். நண்பர்கள் இருவரிடமும் சற்று இளக்கம் பிறக்க சாரலாக ஒரு புன்னகை இருவரிடமும்”.



“என்ன முடிவு பண்ணியிருக்க அருண் நீலா எதுவும் பேசினாளா”



“இப்போ அவ பேசுற நிலைமையில இல்ல, பார்ப்போம் கொஞ்சம் ஆற போடுவோம் பிற்பாடு பார்க்கலாம். அப்பாவும் அதே தான் யோசிக்கிறாருனு நினைக்குறேன்”.



“ஏன் அருண் நீ அப்பாகிட்ட சொல்லல. நான் தான் சொன்னேனே பிரச்சனை வருனு”



“ப்ச் கண்டிப்பா டைம் எடுத்து சொல்லுற மாதிரி சொல்லி இருந்தா பிரச்னை வந்து இருக்காது.விக்னேஸ்வரன் அவரச பட்டுட்டான்டா”



“சரிவிடு இனி நடக்கப் போறத பார்ப்போம் அப்பா கிட்ட பேசு”



“அவர்கிட்ட இன்னும் நான் பேசல அருண் அவரும் பேசல” அருணின் முகத்தில் கவலையின் சாயல்.



“கவலை படாத மச்சான் கண்டிப்பா உன்ன சரியாய் புருஞ்சுப்பாங்க.எந்த அண்ணனும் தங்கச்சி வாழ்க்கை பாழா போகணுமுன்னு யோசிக்க மாட்டாங்க. நீ அவன் நல்லவைகளை மட்டும் பார்த்த, அதுல தப்பில்லை கொஞ்சம் அவகாசம் கொடு. அப்பாவே பேசுவார் ஆறுதல் சொன்ன நண்பனை புண் சிரிப்புடன் பார்த்தவன்.



“நீ வேணியச் சரி பண்ணிடுவியா” ஒரு அண்ணனாக இன்னொரு தங்கை வாழ்க்கையும் பாதித்தால் அவனால் தாங்க முடியாது, வெளியில் அதனைக் காட்டி கொள்ளாவிட்டாலும் உள்ளுக்குள் உருகி தான் போகிறான்.

“அவளைப் பத்தி கவலை வேணாம் நான் பார்த்துகிறேன். நீ மீனாவை பாரு அந்தப் பொண்ணு ரொம்பச் சென்சிடிவ். இன்னக்கி நீலா பேசியது எனக்கே ஒரு மாதிரியா இருந்துச்சு. என்னால இதுல தலையிட முடியாது அதான் அமைதியா இருந்தேன்,



கஷ்டம் தான் கொஞ்சம் பொறுத்து சமாளிட அருண். உன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு”



“ஹ்ம்ம்” என்றவன் சிறிது நேரம் பேசியே விடை பெற்றான்.



காரில் ஏறி அமர்ந்தவனுக்கு மாமியாரிடம் இருந்து போன் அவர் சொன்ன விடயத்தில் அதிர்ந்தவன் வேகமாகக் காரை மருத்துமனைக்குச் செலுத்தினான்.

*****************************************​



அங்கே வெளியில் லலிதாவும் சிதம்பரமும் அமர்ந்து இருந்தனர். இருவர் முகத்திலும் பெரும் வேதனை.பத்து மாதம் பத்தியம் இருந்து. பிடித்தது தவிர்த்து,ஆசை அடக்கி உடலை சோர்வை துச்சமாக எண்ணி பிள்ளையைப் பேணுவது ஒன்றே மதி என்ற நிலையில் பொத்தி பொத்தி பெற்றெடுத்தாள். ஊன் உயிர் கொடுத்தவர்களை மறந்து சுயநலமாக நடந்து கொள்கின்றனர் பெரியவர்கள் கூற்று உண்மை தான் போலும் சும்மாவா சொன்னார்கள் 'பெற்ற மனம் பித்துப் பிள்ளை மனம் கல்லு.



அவர்களை நோக்கி விரைந்த அருண் மாமா என்னாச்சு என்று கேட்க ஒரு பெருமூச்சுடன் சிதம்பரம் நடந்ததைச் சொன்னார்.



“ஒன்னும் சொல்லறதுக்கில்ல மாப்பிள்ளை தற்கொலை முயற்சி இல்ல, ஆனா அதுக்கு நிகரா பண்ணிட்டான். உடம்பு முழுக்கக் காயம் பக்கத்துல கூடப் போக முடியாதபடி, ரொம்ப இறுக்கமா இருக்கான். முரட்டு தனமா நடந்துக்குறான்” சொல்லும் போதே அவருக்குத் தொண்டையை அடைத்தது.



என்ன ஆறுதல் சொல்லுவது என்று புரியவில்லை அருணுக்கு,லலிதாவை பார்க்க எந்த உணர்வும் இல்லாமல் அமர்ந்திருந்தார்.



“மாப்பிள்ளை எனக்கு ஒரு உதவி பண்ணுறீங்களா? பாப்புவை கூட்டிட்டு வரீங்களாக் கொஞ்ச நாள் எங்க கூட இருக்கட்டும்”.



அவர் சொல்லி முடிக்கவில்லை லலிதா “என்னங்கப் பேசுறீங்க அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்” பதறினார்



“அத்தை, மாமா சொல்லுறது சரிதான் நான் மீனாவை கூட்டிட்டு அங்க வந்துடுறேன்” அவர் எதற்காகப் பயந்தார் என்பதைக் கண்டு கொண்டு. அவருக்கு ஏற்றார் போல், இனி நானும் அங்கே என்று நாசுக்காகச் சொல்லிவிட்டான்.



ஆனால் லலிதாவின் மனம் நியாயம் பேசியது. அது எப்படிச் சாத்தியமாகும் தர்மசங்கடமான நிலை அல்லவா வீட்டோடு மாப்பிள்ளை இருப்பது.சுசீலா என்ன நினைப்பார், நாளை மாமியார் மருமகள் உறவு சரியாக இருக்க வேண்டுமே என்று அலசி ஆராய்ந்தது மனம்.



இரு பிள்ளைகளின் வாழும் இப்புடி தத்தளிக்கும் என்று கனவில் கூட எண்ணி இருக்க மாட்டார்.கடவுள் எதையோ உணர்த்த முயற்சிக்கிறார் போலும் பாடம் கறக்க வேண்டியது தான் வேறு வழியில்லை, என்பதை அந்தத் தாய் உள்ளம் அறியவில்லை பாவம்.



தனக்குள் உழன்றவளை “ரொம்ப மனச போட்டு குழப்பிக்காதீங்க அத்தை, அம்மா புருச்சுப்பாங்க” என்றவன் பதிலை எதிர் பார்க்காமல் சென்று விட்டான்.செல்லும் போதே இருவருக்கும் உணவுக்குச் சொல்லிவிட்டு தான் சென்றான்.



இருவரும் கண்டிப்பாக உணவு உண்டு இருக்கமாட்டார்கள் என்பது திண்ணம்.தான் வாங்கித் தந்தால் சங்கடப்படத் தோன்றும் என்பதாலே பணத்தை கொடுத்து உணவை கொடுக்கச் சொல்லிவிட்டு சென்றான்.எவனைப் பொறுப்பில்லை என்று கவலை கொண்டாரோ அவர் மகன் இன்று பொறுப்பான மருமகனாகச் செயல் பாட்டன்.



******************************​



வீட்டினில் நுழைந்த அருண் தனது அறைக்குச் செல்லாமல் நடு கூடத்தில் அமர்ந்து தனது மனையாளை அழைத்தான். என்ன சத்தமாக அழைத்தும் அவள் வரவில்லை,அவளுக்குத் தான் காது கேட்காதே கோபம் கொண்டு மெஷினை தூக்கி தூர எரிந்திருந்தாள்.அது தான் திரும்ப தன்னிடம் எதிர் வினை காட்டாது உயிர் அற்ற பொருள்.



அவன் கத்தலில் அனைவரும் அங்கே கூடினர் மீனாவை தவிர்த்து,அனைவரும் என்ன என்பது போல் பார்க்க மெதுவாக விக்னேஸ்வரனின் நிலையைச் சொன்னான்.மறந்தும் நீலாவின் முகத்தைப் பார்க்கவில்லை.



நீலாவிற்குப் பயம் இருந்தாலும் வெளியில் காட்டி கொள்ளவில்லை.இங்கே நடப்பதை அறியாமல் ஆற அமர குளித்துத் தனது வேலைகளை முடித்துக் கொண்டு கூடத்திற்கு வந்தாள் மீனா.அவளை பார்த்ததும் அப்பட்டமாகத் தனது எரிச்சலை வெளிப்படுத்தினாள் நீலா.



அங்கே அனைவரும் கூடி தன்னைப் பார்க்க ஒருமாதிரியாகத் தான் இருந்தது பெண்ணுக்கு.வந்தவள் ஒரு ஓரமாக நின்று நிலம் பார்க்க அவளை நெருங்கிய அருண் செய்கையால் காதை தொட்டுக்காட்டி மெஷின் எங்கே? என்று கேட்க திருத் திருத்தாள் பெண்.



அங்கு உள்ளவர்களைப் பொருட்படுத்தாமல். அவளது கை பையை எடுத்துக் கொண்டு மறக்காமல் காது மெஷின் பொருத்தி அவளை அழைத்துச் சென்றான்.ஏன் ?எங்கே? என்ற கேள்விகள் இருந்தாலும் அவனது வழிக்கே சென்றாள், செல்லும் முன் பெரியவர்களைப் பார்த்து சிறு தலை அசைப்பு. அவர்கள் தான் ஒரு நிலையில் இல்லையே, அதனால் மருமகள் செய்கைக்கு அங்கே எந்த எதிர் வினையுமில்லை.



இங்கு தான் அன்பு விதையின் முதல் துளிர்…..



 
அருமையான பதிவு
அருண் சமாளிக்க
விக்னேஷ் மனஅழுத்தமா
நீலா கொஞ்சம் பொறுமையா இருந்து
இருந்தா
?
 
அருமையான பதிவு
அருண் சமாளிக்க
விக்னேஷ் மனஅழுத்தமா
நீலா கொஞ்சம் பொறுமையா இருந்து
இருந்தா
?
ATHU THAN PERCHANAI PORUMAI ILLAIYE
 
Top