Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 6 2

Advertisement

Admin

Admin
Member

“அவர் உண்மையிலேயே அனி மேல பாசம் வச்சிருக்கார். அவரை நீ கல்யாணம் பண்ணிகிட்டா உனக்கும் அனிக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையும், அதோட பாதுகாப்பும் இருக்கும். இன்னும் எத்தனை நாள் ஓடிட்டே இருப்ப... இதோட மூன்னு கம்பெனி மாறிட்ட....”

“நீ இதுதான் காரணம்னு சொல்லலைனாலும் எனக்குத் தெரியும். புருஷனோட வாழற பெண்களையே... இவளை கணக்கு பண்ண முடியுமான்னு பார்க்கிற ஆண்கள் தான் அதிகம். எனக்கே எவ்வளவு தொல்லை இருக்கு தெரியுமா.... தனியா இருக்கிற உன்னைச் சும்மாவா விடுவாங்க.”

“நீயே சொல்லு இதுக்கு முன்னாடி அனியை சாக்கா வச்சு எத்தனை பேர் உன்கிட்ட பேச முயற்சி பண்ணி இருக்காங்க. ஆனா நீ யாரையும் நிமிர்ந்தே பார்க்க மாட்ட... அதனால வேற வழி இல்லாம தான் விலகி போனாங்க. ஆனா ஹரி அப்படியா... அவர் உண்மையாவே அனிக்காகத் தான் வந்தார். அவர் இதுவரை உன்கிட்ட அதிகபடியா ஒரு வார்த்தையாவது பேசி இருப்பாரா...இல்லை ஒரு பார்வையாவது பார்த்திருப்பாரா....”

“அவங்க அம்மாவே வந்து பேசும் போது நீ மறுக்கிறது முட்டாள் தனம். ஆகாஷ் உன்னை விரும்புறேன்னு வந்த போதே... அவன் கண்ணைப் பார்த்தே இவன் சரியில்லைன்னு சொன்னவ நான்னு.... எனக்கு ஹரியை பார்த்தா நல்ல விதமா தான் தோணுது. அதனால தான் அனி அவரோட பழகிறதை பார்த்தும் சும்மா இருந்தேன்.”



“இதுக்கு முன்னாடியே உன் கல்யாணத்தைப் பத்தி நான் யோசிக்காம இல்லை.... ஆனா வர்றவன் அனியை முழு மனசா ஏத்துக்கலைன்னா.... அந்தக் குழந்தை கஷ்ட்டபட்டுடுமேன்னு நினைச்சு தான் அமைதியா இருந்தேன்.”

“ஆனா ஹரி விஷயத்தில அந்தப் பயமே தேவை இல்லை... அவர் அவளைத் தன் சொந்த மகளைப் போல் பார்த்துப்பார்.”

“இப்பவே உன் பொண்ணுக்கு மட்டும் நல்ல சாப்பாடு போட்டுட்டு, நீ சரியா சாப்பிடாம தான் இருக்க.... இன்னும் பெரிய கிளாஸ் போகப் போக... செலவு அதிகமாகும் அதையெல்லாம் தனியா சமாளிச்சிடுவியா...”

“நீ தவறு செய்யாமலே வாழ்க்கையில நிறையக் கஷ்ட்டபட்டுட்ட.... போதும், இனியாவது நிம்மதியா இரு. உனக்கு நல்ல வாழ்க்கை தேடி வரும் போது கண்டதையும் நினைச்சு அதைத் தட்டி விட்டுடாத... நான் அவ்வளவு தான் சொல்வேன்.”

“அனிக்காகவாவது யோசிச்சு நல்ல முடிவா எடு....” என்ற ரதி எழுந்து செல்ல... வெளியே அமர்ந்து இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த விஸ்வமும் எழுந்து மருமகளின் பின்னே சென்றார்.

அவருக்கும் தன் மகள் வாழ்க்கை மலர்ந்து விடாதா என்ற தவிப்பு இருந்தது. ஆனால் முன்பு ஒருமுறை திருமணத்தில் தான் அவசரப்பட்டு எடுத்த முடிவு மீனாவின் வாழ்க்கையைப் பாதித்தால்.... இந்த முறை அவளே யோசிக்கட்டும் என்று அமைதியாக இருந்தார்.

அவர்கள் சென்றதும் மீனா எழுந்து கதவை தாளிட்டவள், சிறிது நேரம் அதிலேயே சாய்ந்து நின்றுவிட்டாள். இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற என்னமோ எதிர்பார்போ இல்லாததால்.... வைஷ்ணவி பேசியது ரதி பேசியதை எல்லாம் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவள் அப்போது இல்லை....

ஐயோ ! திரும்ப ஒரு திருமணமா என்று பயமும் எரிச்சலும் தான் வந்தது. மன குழப்பத்தில் இருந்ததால் சாப்பிட கூடத் தோன்றாமல் அப்படியே உட்கார்ந்து இருந்தாள்.

வைஷ்ணவி வரவே நேரம் ஆனதால் அதன் பிறகு அவர்கள் சாப்பிட்டு அங்கிருந்து கிளம்ப... வெகு நேரம் ஆகிவிட்டது. ஹரியின் வண்டி கிளம்பும் சத்தத்தைக் கேட்ட அனி தூக்கத்தில் இருந்து எழுந்து ஓட... அவளைப் பிடித்து வைப்பதற்கே மீனாவுக்குப் பெரும்பாடாக இருந்தது.


ஹரியின் வண்டி சத்தம் தேய்ந்து மறைந்ததும் தான் அவளை அடக்கி படுக்க வைக்க முடிந்தது. உறக்கத்தில் இருக்கும் போது கூட அவனின் நினைவிலேயே இருப்பவளை என்ன செய்வது? என்று ஒன்றும் புரியாமலே வழக்கமாகச் செய்யும் வேலைகளை முடித்து மீனா மகளுக்கு அருகில் சென்று படுத்தாள்.

அங்கே ஹரியுடன் வீட்டிற்குச் சென்ற வைஷ்ணவி எதோ யோசனையிலேயே இருக்க..... “என்ன யோசிக்றீங்க மா? அவ்வளவு நேரம் அனி வீட்ல அப்படி என்ன செய்தீங்க?” ஹரி புன்னகையுடன் கேட்க....

“அனி மனசை மாத்த முடியும்ன்னு எனக்குத் தோணலை.... அதோட எதுக்கு மாத்தனும் சொல்லு?... உனக்கு அந்தக் குழந்தை மேல பாசம் இருக்கு... அந்தக் குழந்தையும் உன் மேல அன்பா இருக்கு....மீனாவும் நல்ல குணமா தெரியிறா.... பேசாம மீனாவையே கல்யாணம் பண்ணிக்கோ டா.... அந்தக் குழந்தைக்கும் அப்பா கிடைப்பார் உனக்கும் குடும்பம் கிடைக்கும்.”

தன் அன்னையின் பேச்சை கேட்டதும் ஹரியின் முகத்தில் இருந்து புன்னகை துணி கொண்டு துடைத்தது போல் எந்தச் சுவடும் இல்லாமல் மறைந்தது.

“இதைச் சொல்றதுக்குத் தான் ஊரில் இருந்து வந்தீங்களா....”

“ஏன் ஹரி? மீனாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனதுனால யோசிக்கிறியா.... உனக்கு மீனாவை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லையா....”

“எனக்கு இன்னொரு கல்யாணத்திலேயே விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டேன். அப்புறம் என்ன மீனாவை பிடிக்கலையான்னு ஒரு கேள்வி....”

“மீனா மூன்னு மாசம் தான் அவங்க கணவரோட வாழ்ந்திருக்காங்க. அப்படிப் பார்த்தா நான் ஆறு வருஷம் என் மனைவியோட வாழ்ந்திருக்கேன். நான் அதுக்காகச் சொல்லலை....”

“பிருந்தா எவ்வளவு கனவுகளோட என்னோட வாழ்ந்தா... ஆனா அது எதையும் அனுபவிக்காம போய்ட்டா... அப்போ என்னால மட்டும் எப்படி இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா வாழ முடியும்.”

இது என்ன டா பேச்சு? என்பது போல் வைஷ்ணவி மகனை பார்க்க...




“எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி பார்க்கனும்ன்னு உங்களுக்கு ஆசை இருந்தா.... அதை இன்னையோட விட்டிடுங்க. எனக்கு எப்படி அனியை சமாதானம் செய்யணும்ன்னு தெரியும். நான் பார்த்துகிறேன்.”

மகனின் பேச்சில் வைஷ்ணவிக்கு மிகுந்த கோபம் உண்டாக. “உனக்கே எல்லாம் தெரியும் போது... என்னை எதுக்கு டா வர சொன்ன? நீயே பார்த்துக்க வேண்டியது தான....”

“பிருந்தாவுக்கு அப்புறம் எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நினைக்கிறவன், எதுக்கு டா அந்தக் குழந்தை கிட்ட நெருங்கி பழகி மனசுல அப்பா ஆசையை உண்டாக்கின?....”

“நாளைக்கு அந்தக் குழந்தை கஷ்ட்டபட்டா அதுக்குக் காரணம் நீ தான் சொல்லிட்டேன். அது தான் நீயே பார்த்துகிறேன்னு சொல்லிட்டியே இனி நான் இருந்து என்ன பண்ணப்போறேன்? எனக்கு டிக்கெட் போடு...” என்றவர், கோபித்துக்கொண்டு அவர் அறைக்குள் செல்ல... ஹரி அங்கே சோபாவிலேயே சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டான்.

அறைக்குள் சென்றும் வைஷ்ணவி அமைதியாக எல்லாம் இல்லை.... உள்ளே இருந்தபடியே சத்தமாகத் தன் மனக் குமுறல்களைக் கொட்ட தொடங்கினார்.

“அவ இருக்கும் போது உன்னை வேற கல்யாணம் பண்ணிக்கச் சொன்னாத்தான் தப்பு. அவ விதி முடிஞ்சு போச்சு, அதுக்கு என்ன பண்றது?”

“அவன் பொண்டாட்டியோட எல்லாம் போச்சாம். அம்மா நான் இன்னும் உயிரோட தான இருக்கேன். எனக்கு என் மகனை பத்தி அக்கறை இருக்கக் கூடாதா...இல்லாத பொண்டாட்டி பத்தி கவலைப்படுறவன் இருக்கிற அம்மாவை பத்தி யோசிக்கக் கூடாது.”

“யாரும் வேண்டாம்ன்னு நினைக்கிறவன், எதுக்கு அந்தக் குழந்தையை ஆசை காட்டி ஏமாத்தனும்? உன்னைப் போய் அந்தக் குழந்தை நல்லவன்னு நினைச்சிட்டு இருக்கு பாரு.... அதைச் சொல்லணும். சரியான சுயநலவாதிடா நீ...”

வைஷ்ணவி பேசப்பேச... ஹரிக்கு அனியை நினைத்து மனசுக்குள் பெரும் குற்ற உணர்வு ஏற்பட்டது. ஆனால் அதற்காகவெல்லாம் அவன் முடிவை மாற்றிக்கொள்வதாக இல்லை....

ஹரி, இருந்த குழப்பத்தில் மறுநாள் வகுப்பு எடுக்கவே செல்லவில்லை.... அதோடு முழுப் பரிட்ச்சை நேரம் என்பதால்... நிறையப் பேர் வகுப்புக்கும் சரியாக வருவதில்லை... அதனால் மொத்தமாக ஒரு மாதம் விடுமுறை விட்டுவிட்டான். எல்லோருக்கும் செல்லில் மெசேஜ் அனுப்பி விட்டான்.

திடிரென்று ஹரி வரவில்லை என்றதும், அனி தான் தவித்து விட்டாள். இரண்டு நாட்கள் சென்ற பிறகு தான் கவனித்தாள், வேறு மாணவர்கள் யாரும் வகுப்பிற்கு வராததை....

இனி ஹரி வகுப்பு எடுக்க வரவே மாட்டானோ.... அல்லது அவன் அம்மா அவனையும் அழைத்துக்கொண்டு ஊருக்கு சென்று விட்டாரோ... இனிமேல் அவனை எப்படிப் பார்ப்பது? இப்படி எல்லாம் நினைத்து அந்தப் பிஞ்சு மனம் தவித்தது.

“அம்மா, ஏன் சார் கிளாஸ் எடுக்க வரலை?.... கிளாஸ் இல்லையா....அவங்க அம்மாவோட ஊருக்கு போய்ட்டாரோ....” என அனி மீனாவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க....

வைஷ்ணவி ஹரியிடமும் திருமணத்தைப் பற்றிப் பேசி இருப்பார். அதனால் தான் ஹரி இங்கு வருவதைத் தவிர்க்கிறான் என்று மீனாவுக்கு நன்றாகவே புரிந்தது.

இருக்கட்டும் இதுவும் நல்லதிற்குத் தான், மகள் சிறிது நாட்களில் அவனை மறந்து விடுவாள் என்று நினைத்தவள் “தெரியலையே டா... உடம்பு சரி இல்லையோ என்னவோ....அவரே வருவார்.” என்று சொல்லிவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டாள்.

ஹரிக்கும் அனியை பார்க்காமல் இருப்பது கஷ்ட்டமாக இருந்தாலும். வேறு என்ன செய்வது என்று தெரியாத குழப்பத்தில் தான் வராமல் இருந்தான். வைஷ்ணவி வேறு மறுநாள் ஊருக்குச் செல்வதாக இருந்தது. அவர் அவனோடு சரியாகப் பேசுவதும் இல்லை...

தன்னால் எல்லோரும் கஷ்ட்டபடுகிறார்கள் என்று தெரிந்த போதும், எதுவும் செய்ய முடியாத நிலையில் ஹரி இருந்தான். மீனா இப்போது தான் நிம்மதியாக இருந்தாள்.

ஹரிக்கும் மீனாவிற்கும் மறுநாளே அனி அவர்களைக் கலங்கடிக்கப் போவது தெரியவில்லை...
 
:love: :love: :love:

ரதி நிதர்சனத்தை சொல்லிவிட்டாள்.........
அப்பாவுக்கும் ஓகே........
இனி முடிவு மீனா கையில்........

வைஷ்ணவியும் அவங்க பங்குக்கு மண்டையில் கொட்டியாச்சு.....

அனிதா ஹரியை தேட ஆரம்பிச்சாச்சு........
வரலைன்னதும் என்ன பண்ண போறாள்???
 
Last edited:
Top