Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 6 1

Advertisement

Admin

Admin
Member




பகுதி – 6

ஹரி வகுப்பு முடிந்து வந்ததும் வைஷ்ணவி மீனாவை பார்க்க சென்றார். ஹரி அவன் அத்தையின் வீட்டிலேயே இருந்து கொண்டான்.

மீனா வேலை விட்டு வந்ததுமே அனி வைஷ்ணவி வருவதைப் பத்தி சொல்லி இருந்தாள். அவங்க எதுக்கு இங்க வராங்க? என்று யோசித்தபடியே மீனா வேலை பார்த்துக்கொண்டிருந்தாள்.

எழு மணி போல் வீட்டிற்குள் நுழைந்த வைஷ்ணவியை மீனா வரவேற்க.... அவரும் புன்னகையோடு வந்து அமர்ந்தார். இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் எடை போட்டது.

அழகான காட்டன் சேலையில் பாந்தமாக இருந்த வைஷ்ணவியை ஹரியின் அம்மா என்று ஒத்துக்கொள்ளச் சற்றுச் சிரமாகத்தான் இருந்தது. அவரைப் பார்த்தால் நாற்பது வயதுக்கு மேல் சொல்ல முடியாது.

அதே இந்தப் பக்கம் தூசி படிந்த ஓவியம் போல் இருந்தாள் மீனா. அளவிற்கு மீறிய உழைப்பின் களைப்பு அவள் முகத்தில் தெரிந்தது.



மீனாவை பார்த்ததும் வைஷ்ணவி எதையோ நினைத்துச் சிரித்துக் கொண்டார். என்னவென்று கேள்வியாகப் பார்த்த மீனாவிடம் “அனி அப்படியே உன்னை மாதிரி...” என்று வேறு எதையோ சொல்லி சமாளித்தார்.

அனி அவர்கள் இருவரையும் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. வைஷ்ணவி அனியை அழைத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டவர், பார்வையைச் சுழல விட.... அந்த ஒற்றை அறை வீட்டையும் மீனா நேர்த்தியாக வைத்திருந்தது அவரை வியக்கவே வைத்தது.

மீனா அவருக்குக் காபி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள். அதோடு நறுக்கிய பழங்களையும் கொண்டு வந்து வைத்தாள்.

“எங்களுக்குக் கல்யாணம் ஆகி முப்பது வருஷமா இந்த ஊர்ல தான் இருந்தோம். இப்ப ஊட்டியில இருக்கோம். ஹரி அனிதாவை பத்தி சொன்னான். அது தான் பார்க்க வந்தேன். நான் வந்தது உனக்கு ஒன்னும் சிரமம் இல்லையே....”

“இல்லையில்லை... அதெல்லாம் எதுவும் இல்லை...” என மறுத்த மீனா எழுந்து சென்று சாதம் வைத்து விட்டு வந்தாள்.
அனி இருந்ததால் பொதுவான விஷயங்களையே தேடி பிடித்து வைஷ்ணவி பேசிக்கொண்டு இருந்தார். எட்டு மணி ஆனதும் மகளுக்குச் சாதத்தில் வெண்டைக்காய்ப் கறி போட்டு பிசைந்து மீனா ஊட்டிவிட அனியும் சமத்தாகச் சாப்பிட்டாள்.

“தினமும் நைட் சாதமா...”

“ஆமாம் ஆன்டி, மதியம் ஸ்கூலுக்குச் சாதம் வச்சா ஒழுங்காவே சாப்பிட மாட்டா... அதனால டிபன் தான். நைட் தான் சாதம் வச்சு வயிற் நிறையத் திணிச்சு விட்டுடுவேன். எனக்கும் காலையில ஆபீஸ் கிளம்புற அவரசத்துல காய் எல்லாம் செய்ய நேரமும் இருக்கிறது இல்லை....”

“சரி தான் சின்னக் குழந்தை தானே ஊட்டி விட்டா தான் ஒழுங்கா சாப்பிடுங்க.” என்றவர்,

“எனக்கு என்ன ஆச்சர்யம்னா ஹரி எப்படி அனியோட இவ்வளுவு ஒட்டிகிட்டான்னு தான். அவன் தங்கச்சி பசங்ககிட்ட கூட அனி கிட்ட இருக்கிற மாதிரி ஒட்டுதல் இல்லை.... எனக்கே பார்த்தா இது நம்ம பையனான்னு ஆச்சர்யமா இருக்கு....”

“இவளும் தான் வேற யார்கிட்டயும் போக மாட்டா... இப்ப ஹரி சார்ன்னு பைத்தியமா இருக்கா....” என்ற மீனாவின் முகம் வேதனையைக் காட்ட....

“எனக்குத் தெரியும் மீனா ஹரி சொன்னான். அவனுக்குமே சின்னக் குழந்தையோட மனசுல ஆசையை வளர்த்துட்டுமேன்னு கஷ்ட்டமாத்தான் இருக்கு.”

“ஆனா எல்லார் கிட்டயும் எல்லா உணர்வுகளும் வருவதில்லை.... ஹரியை அனி அப்பாவா பார்கிறான்னா.. கண்டிப்பா அந்தக் குழந்தை அவன்கிட்ட அதை உணர்ந்திருக்கான்னு தான் அர்த்தம்.”

வைஷ்ணவி சொன்னதைக் கேட்ட மீனா மகளைப் பார்க்க அவள் உறங்கி இருந்தாள். நல்ல வேளை உறங்கி விட்டாள் என்று நினைத்தவள் “நீங்க ஹரி சார் கூட வந்து இருக்கலாமே... அவர் தனிமையா உணர்கிறாரோ என்னவோ.....” என்றாள்.



மீனா சொல்ல வருவது வைஷ்ணவிக்கு நன்றாகவே புரிந்தது. தனிமையில் இருப்பதால் தான், ஹரி அனியின் அருகாமையை விரும்புகிறான் என்று நினைத்தாள், அது உண்மையும் கூடத்தான்.

“ஹரிக்கு முப்பத்தி நாலு வயசு தான் மீனா. நான் இங்க வந்து இருந்தா அவன் இன்னொரு கல்யாணம் பத்தி நினைச்சு பார்க்கவே மாட்டான். எங்களோடவே இருந்து காலத்தைக் கழிச்சிடலாம்ன்னு தான் நினைப்பான்.”

“அதை எப்படி என்னால பார்த்திட்டு இருக்க முடியும் சொல்லு.... கொஞ்ச நாள்ல தனிமையை வெறுத்து போய் அவனே இன்னொரு திருமணத்துக்குச் சம்மதிப்பான்னு நினைச்சேன்.”

“பிருந்தா இறந்தும் ரெண்டு வருஷம் ஆச்சு... ஆனா ஹரி மனசு மாறவே இல்லை.... ஒரு தாய்யா என் மகனும் குடும்பத்தோட வாழனும்ன்னு நினைக்கிற என்னோட ஆசை தப்பா....”

அவர் பேசப்பேச மீனா அவரையே வருத்தத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தாள். அதைக் கவனித்த வைஷ்ணவி சரி அவன் கதையை விடு... உன் கதைக்கு வருவோம் “நீ ஏன் மா இப்படியே இருந்திட்ட?”

“முதல் கல்யாணம் தோத்து போன எத்தனையோ பேர் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறது இல்லையா.... நீயும் உனக்கு ஒரு துணையைத் தேடி இருந்தா அனிக்கும் அப்பா கிடைச்சிருப்பாரே....”

வைஷ்ணவி சொன்னதுக்கு மீனா எந்தப் பதிலும் சொல்லாமல் மெளனமாக இருக்க... “நான் யாரு இதெல்லாம் பேசன்னு நினைக்கிறியா....” வைஷ்ணவி கேட்டதும்,

“ச்ச.... ச்ச... அப்படி இல்லை ஆன்டி. நான் எனக்கு முன்னாடி நடந்ததைக் கல்யாணமாவே நினைக்கலை.... ஆகஷ்க்கு விளையாட ஒரு பொம்மை வாங்கிக் குடுக்கிற மாதிரி தான் அவனோட அம்மா அப்பா எங்களுக்குக் கல்யாணம் செஞ்சு வச்சாங்க. குழந்தை எப்படிப் பொம்மை அலுத்துப் போனதும் தூக்கி போட்டுடுமோ... அது மாதிரி ஆகாஷும் என்னைத் துக்கி போட்டுட்டார்.”

“இது கூடத் தெரியாம மூன்னு மாசம் அதுதான் சொர்கமுன்னு நினைச்சு வாழ்ந்திருகேனே... எனக்கே என்னை நினைச்சா கேவலமா இருக்கு.... அதோட எனக்கு உள்ள இருந்த உணர்வுகள் எல்லாம் செத்து போச்சு... அனி மட்டும் இல்லைன்னா என்ன ஆகி இருப்பேனோ....”

“அவளால தான் எனக்கு வாழ்க்கையில ஒரு பிடிப்பு வந்துச்சு... எனக்கு இதே போதும் நான் சந்தோஷமா தான் இருக்கேன்.” என்றாள் மீனா நிறைவாக.

“இப்படித் தான் ஹரியும் இருக்கான். உணர்வுகள் எல்லாம் சாகாது மீனா.... அது நமக்குள்ள தான் இருக்கு... நாம தான் அதை எழும்ப விடாம அடி ஆழத்திலேயே புதைச்சு வச்சிடுறோம். உனக்கும் ஹரிக்கும் அப்படிப் புதைச்சிட்டு வாழ வயசும் இல்லை அதற்கான அவசியமும் இல்லை....”

“நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத.... நான் இன்னும் ஹரி கிட்ட கூட இதைப் பத்தி பேசலை.... நீங்க ரெண்டு பேரும் ஆளுக்கொரு பக்கம் எப்படியோ இருந்தீங்க... இப்ப அனியால நீங்க ஒரே குடும்பமா ஆனாத்தான் என்ன?”

அவர் சொன்னதற்கு மீனா எதோ மறுத்து சொல்ல வர.... “இரு நான் முழுசா சொல்லி முடிச்சிடுறேன்.” என்ற வைஷ்ணவி மேலும் தொடர்ந்தார்.

“கடவுளோட விருப்பம் இது தான் போல... இல்லைன்னா எங்கையோ இருந்த ஹரி, இங்க ஏன் வரணும்? அவனை ஏன் அனி பார்க்கணும்? அவங்க ரெண்டு பேருக்குள்ள ஏன் இப்படி ஒரு பாசம் உருவாகனும். எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்.” என்றார்.

“நீங்க சொல்றது கேட்க நல்லா தான் இருக்கு... ஆனா நான் இன்னொரு திருமணத்தைப் பத்தி யோசிச்சது கூட இல்லை... எனக்கு இன்னொரு கல்யாணம் எல்லாம் ஒத்து வராது ஆன்டி. நீங்க ஹரி சாருக்கு வேற பொண்ணு பார்த்துக் கல்யாணம் பண்ணி வைங்க. நான் அனி அவரைத் தொந்தரவு பண்ணாம பார்த்துகிறேன்.”

ஹரியை திருமணம் செய்ய மீனா உடனே ஒத்துக்கொள்வாள் என வைஷ்ணவியும் எதிர்பார்க்கவில்லை.... அவள் திருமணமாகாத சின்னப் பெண்ணா என்ன? ஆறு வயது குழந்தையின் தாய். அவள் யோசித்தே முடிவெடுக்கட்டும் என்று நினைத்தார்.

“நீ நல்லா யோசி மீனா.... இந்தத் திருமணம் உனக்கு, ஹரிக்கு, அனிக்கு நல்ல எதிர்காலத்தையே கொடுக்கும்.” என்றவர், விடைபெற்று சென்றார்.

அவர் அந்தப் பக்கம் சென்றதும் ரதி மீனாவை பார்க்க வந்தாள். அவளும் அலுவலகம் சென்று விட்டு வருவதால்.... வார நாட்களில் இருவரும் சந்திப்பது முடியாது. வார இறுதியில் தான் சந்தித்துக் கொள்வார்கள். ஆனால் இன்று மீனாவுடன் ஏதோ பேச நினைத்தே ரதி வந்திருக்கிறாள் என்று மீனாவுக்கும் புரிந்தது.

“அவங்க ஹரி சாரோட அம்மா தான... அவங்க எதுக்கு இங்க வந்தாங்க?”
“சும்மா தான் வந்தாங்க.” என்ற மீனாவின் கலங்கிய முகத்தைப் பார்த்த ரதி “அவங்க எதாவது பேசினாங்களா....” எனத் தூண்டி துருவி விசாரிக்க...

இதற்கு முன்பு எல்லாம் ரதி இப்படிப் பேசுபவள் அல்ல... அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று தான் இருப்பாள். அதனால் அவளிடம் எதையும் மறைக்காமல் வைஷ்ணவி பேசியதை சொல்ல....

“இந்த உலகத்தில ஆகாஷ் மாதிரி தறுதலைகள் சில பேர் இருந்தாலும், ஹரி மாதிரி நல்லவங்களும் இருக்காங்க.”

 
:love::love::love:

வைஷ்ணவி விளக்கம் அருமை........ பையனோட வாழ்க்கை முன்னால் வேறெதுவும் இல்லை......
இப்போ பளிச்சுனு கேட்டுட்டாங்க.........
அண்ணியும் ஆமோதிக்கிறாங்க......
மீனா முடிவு என்னவோ????
 
Last edited:
Top