Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 15 2

Advertisement

Admin

Admin
Member

ஹரி புன்னகையுடன் வந்து சாப்பிட அமர்ந்தான். “நீயே சாப்பிடு...” எனத் தட்டை மகளிடம் கொடுத்துவிட்டு மீனா எழுந்து கொண்டாள்.

அடுத்து வந்த வாரம் முழுவதும் இப்படித்தான் சென்றது. ஹரி கிழக்கில் இருந்தால்.... மீனா மேற்கில் இருப்பாள்.

அந்த வார இறுதியில் நடந்த சதுரங்க போட்டிக்கு ஹரியும் அனியும் கிளம்ப… மீனா அவர்களுடன் வர மறுக்க.... ஹரி கோபமாக அனியுடன் கிளம்பி சென்றான்.

மாலை வந்த அனி அவள் விளையாடியதை பற்றி மட்டும் சொன்னாளே தவிர... ஹரியை பற்றி ஒன்றும் சொல்லவில்லை...

உங்க அப்பா விளையாடலையா.... வாய் வரை வந்த கேள்வியைக் கேட்காமல் உள்ளேயே தள்ளினாள். அனி போய் அவனிடம் அப்படியே சொல்வாள்.எதற்கு வம்பு என்று பேசாமல் இருந்தாள்.

மறுநாள் வெளியே சென்ற ஹரியும் அனியும் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வந்தனர். மீனா அவர்களுக்குக் கிண்ணத்தில் வைத்து கொடுத்தாளே தவிர... அவள் எடுத்துக்கொள்ளவில்லை.... மிச்சத்தைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தாள்.

ஹரி பார்த்துக்கொண்டே தான் இருந்தான். இப்போது எல்லாம் அப்படித் தான் செய்கிறாள். பசிக்காக மட்டுமே சாப்பிடுவது. ஹரியும் சாப்பிடாமல் தன்னுடையதை அனிக்கே கொடுத்தான்.

இந்த வீட்டிற்கு அனிக்காக வந்தோம், அவளுக்காக இருக்கிறோம். மற்றபடி இந்த வீட்டில் தனக்கு எந்த உரிமையும் இல்லை... என மீனா நினைத்து அதன் படி நடக்க... அது ஹரியை எந்த அளவு காயபடுத்தும் என அவள் உணரவே இல்லை....

ஹரியும் அவள் கோபம் குறையட்டும் எனப் பொறுமையாகக் காத்திருந்தான். அவன் பொறுமை பறக்கும் நாளும் வந்தது.

தினமுமே காலை மீனா தான் முதலில் எழுந்து கொள்வாள். அவள் கைபேசியில் அலாரம் அடித்தவுடன் ஹரியும் விழித்து விடுவான், ஆனால் உடனே எழுந்து கொள்ளாமல் படுத்திருப்பான்.

அன்றும் அது போல் படுத்திருந்தவன், அலாரம் அடித்து வெகு நேரம் ஆன பின்பும் மீனா எழுந்து கொள்ளாததைப் பார்த்து... அனிக்கு பள்ளி விடுமுறையோ.... என நினைத்துக் கொண்டான்.

ஆனால் மீனா எழுவதும் பின்பு மீண்டும் படுப்பதையும் பார்த்து வேகமாக எழுந்து அவளிடம் சென்றவன் “மீனா....” என அழைக்க... அவளிடம் இருந்து முனங்கள் தான் வந்தது, மெதுவாக நெற்றியில் கைவைத்து பார்க்க.... உடம்பு அனலாகக் கொதித்தது.




ஹரியின் தொடுகையில் மீனா எழுந்துகொள்ள.....

“நீ எழுந்துக்காத படுத்துக்கோ மீனா....” என்றான் ஹரி.

“அனி.... ஸ்கூல்.... அவளுக்கு டெஸ்ட் இருக்கு....” மீனா கஷ்ட்டப்பட்டுப் பேச.....

“நான் பார்த்துகிறேன். நீ அலட்டிக்காத....” என்றவன், எழுந்து சென்று பாலை காய்ச்சி விட்டு வந்து அனியை எழுப்ப.... அவள் எழுவதற்குள் அவனை ஒரு வழியாக்கி விட்டாள்.

எழுந்ததும் தான் அவளுக்கு மீனாவுக்கு உடம்பு முடியவில்லை எனத் தெரியும். அதன் பிறகு சமத்தாகப் பள்ளிக்கு கிளம்பினாள். தோசை ஊற்றி மிளகாய் பொடி வைத்து மகளுக்குக் கொடுத்தவன், மதியத்துக்குத் தயிர் சாதமும் ஊறுகாயும் டப்பாவில் போட்டுக்கொடுத்தான்.

“அம்மாவுக்கு உடம்பு சரி இல்லாததுனால மதியத்துக்குத் தயிர் சாதம் தான் வச்சேன். இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ டா....” என்ற தந்தையைக் கட்டிக்கொண்ட அனி “எனக்குத் தயிர் சாதம் பிடிக்கும் பா....” என்றவள், அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு தன் தாயிடம் சென்றாள்.

“அம்மா நான் ஸ்கூலுக்குக் கிளம்பிட்டேன். அப்பா உங்களைப் பார்த்துப்பாங்க....இல்லப்பா...” எனத் தன் பின்னே வந்த ஹரியை பார்த்து கேட்டவள், அவன் ஆமாம் எனத் தலையசைத்ததும், தன் புத்தகப் பையோடு கிளம்ப... ஹரி அவளோடு சென்று அவளைப் பள்ளி வாகனத்தில் ஏற்றி விட்டு வந்தான்.

திரும்பி வந்த ஹரி மீனாவிடம் “இப்ப எப்படி இருக்கு மீனா? கொஞ்சம் பால் குடிச்சிட்டு தூங்கிரியா....” என எந்தக் கேள்விக்கும் அவள் பதில் சொல்லவில்லை.... உறங்குகிறாள் போலச் சரி சிறிது நேரம் செல்லட்டும் என ஹரி எழுந்து சென்றான்.


சிறிது நேரம் சென்று வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது. யார் என்று ஹரி எட்டி பார்க்க... அதிலிருந்து விஷ்வமும் ரதியும் இறங்கி வந்தனர்.

இவங்க ஏன் இப்ப வராங்க? என யோசித்தவனுக்கு மீனா முகம் கழுவி தயாராகி வந்ததும் புரிந்து விட்டது. இவள் தான் அவர்களை வர சொல்லி இருக்கிறாள் என்று.

தன்னிடம் எந்த உதவியும் பெற பிடிக்காமல்… அவர்களை வர சொல்லி இருக்கிறாள் எனப் புரிந்து கொண்டான்.

விஸ்வமும் ரதியும் மீனாவை அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லவே வந்திருந்தனர். விஸ்வம் மீனாவை தங்களோடு அழைத்துச் சென்று உடம்பு சரி ஆனதும் கொண்டு வந்து விடுவதாகக் கேட்க.... ஹரிக்கு மிகுந்த கோபம் வந்தது.

“முதல்ல எதாவது சாப்பிட சொல்லுங்க.இன்னும் கொஞ்ச நேரத்தில டாக்டர் வீட்டுக்கு வருவாங்க. அவங்க வந்து பார்க்கட்டும் அப்புறம் முடிவு பண்ணலாம்.” என்ற ஹரி அறைக்குள் சென்று விட...

நான் எங்க வீட்டுக்கு போறதுக்குக் கூட இவனோட அனுமதி வேண்டுமா எனக் கொந்தளிப்பில் இருந்த மீனா, ஹரி இருந்த அறைக்குச் சென்றவள், கதவை சாத்தி விட்டு “நீங்க அனிக்கு மட்டும் அப்பாவா இருங்க போதும், எனக்கு யாராவும் இருக்க வேண்டாம்.” என்றாள் அழுத்தம் திருத்தமாக.

“இதை நான் உன் கழுத்தில தாலி கட்றதுக்கு முன்னாடி சொல்லி இருக்கனும். இப்ப சொல்லி ஒன்னும் ஆகப்போறது இல்லை....”

“ஓ..... ரொம்ப விருப்பப்பட்டுக் கல்யாணம் பண்ணிகிட்ட மாதிரி சொல்றீங்க.”

“நீயும் தான் என்னை அனிக்காகக் கல்யாணம் பண்ணி கிட்ட....”

“அது தப்போன்னு இப்ப எனக்குத் தோணுது.”

“ரெண்டு வாரம் முன்னாடி வரை தோணலை போலிருக்கு....”

ஹரியின் கேலி மீனாவை உசுப்பி விட... “அப்பவும் தான் எனக்கு உங்களைப் பிடிக்கலை....” என்றாள் வேண்டுமென்றே....



“எதாவது நம்புற மாதிரி சொல்லு.... எனக்குத் தெரியும் மீனா.... உன் கண்ணே காட்டி கொடுத்துடுச்சு... யாரோ நான் பார்க்காத போது என்னையே பார்த்திட்டு இருப்பாங்க.”

ஹரி முறுவலுடன் சொல்ல... எல்லாம் தெரிந்து தான் தெரியாதது போல் இருந்தானா.... என நினைத்த மீனாவுக்கு ஏற்கனவே காய்ச்சலில் உடம்பு கொதித்தது என்றால் இப்போது மனமும் சேர்ந்து கொதித்தது.

அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த ஹரி “ஏன் மீனா டென்ஷன் ஆகுற? எனக்கும் தான் உன்னைப் பிடிச்சிருக்கு.” என்றான் இலகுவாக.

“ஹரி, ப்ளீஸ்.... என் உணர்வுகளோட விளையாடாதீங்க. ஏற்கனவே திருமணம் என்கிற பேரில் ஒருத்தனோட ஆசையைத் தீர்த்துக்க மட்டும் நான் மனைவியா இருந்திருக்கேன். அது தெரிஞ்ச அப்பவே செத்துடனும் போல இருந்துச்சு.”

“இப்ப நீங்க என் மேல பரிதாப்பட்டு உங்க மனசை மாத்தி இருந்தீங்கன்னா... அதை விட எனக்கு வேற அசிங்கம் இல்லை....”

இதைச் சொல்லும் போதே மீனாவின் குரல் மட்டும் இல்லை.... உடம்பே நடுங்க ஆரம்பித்தது. அவள் விழுவது போல் இருந்தாள்.

சட்டென்று அவள் அருகில் வந்து அவளைத் தாங்கிய ஹரி “சத்தியமா உன் மேல பரிதாபமோ... இரக்கமோ இல்லை.... எனக்கு எப்படின்னு எல்லாம் சொல்லத் தெரியலை.... எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு மீனா....” என்றான் நெகிழ்வாக....

மீனா அவனை விலக்கி விட்டாள். அவளால் அவன் சொல்வதை நம்ப முடியவில்லை... பிடித்திருந்தால் எதற்காக அன்று தன்னைத் தனியே விட்டுச் சென்றான். அவள் அதிலேயே நின்றாள்.

அவள் நின்ற கோலத்தைப் பார்த்த ஹரி, இப்போது சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டாள் என்பதை உணர்ந்து “உனக்குப் பேச கூடத் தெம்பு இல்லை.... இப்ப போய்ச் சாப்பிடு. டாக்டர் வர நேரம் ஆச்சு.” என்றதும், மீனா அறையில் இருந்து வெளியே செல்ல.... ஹரி கிளம்பி ஷோ ரூம் சென்றான்.

ரதி அவளுக்குக் கஞ்சி கொண்டு வந்து கொடுக்க.... அதைக் குடித்த மீனா “நல்லா இருக்கு அண்ணி, வீட்ல இருந்து கொண்டு வந்தீங்களா....” என்றாள்.

“எனக்கு எங்க கஞ்சி வைக்க நேரம் இருந்தது? நீ போன் பண்ணதும் சாப்பாட்டைக் கட்டி உங்க அண்ணனையும் அஸ்வத்தையும் அனுப்பிட்டு வர தான் நேரம் சரியா இருந்தது. ஹரி தான் கஞ்சி வச்சிருந்தார்.”

ரதி சொன்னதைக் கேட்டதும் மீனாவுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அவன் உதவி வேண்டாம் என்று தான் இவர்களை வரவழைத்தாள். ஆனால் இப்போது அவன் வைத்த கஞ்சியைத் தான் குடிக்க வேண்டியது இருந்தது.

ஷோரூம் வந்த ஹரி தனது அறைக்கு வந்ததும் வைஷ்ணவியைச் செல்லில் அழைத்தான்.

“என்ன ஹரி இந்த நேரத்தில போன்? இப்ப என்ன செஞ்சு வச்சிருக்க?”

எதோ பிரச்சனை என்பதால் தான் மகன் அழைக்கிறான் என வைஷ்ணவி புரிந்து கொண்டு கேட்க... ஹரி எதையும் மறைக்கவில்லை.... எல்லாவற்றையும் சொல்ல....

“அந்த ஆகாஷ் மிச்சம் மீதி வச்சிருந்த உயிரையும் நீ வாங்க முடிவு பண்ணிட்டியா ஹரி.... அவளை அப்படித் தனியாவா விட்டுட்டு போவ... நீ பண்ணது ரொம்பத் தப்பு.” வைஷ்ணவி சொன்னதைக் கேட்டதும் ஹரிக்கு மனது ரொம்பவே வலித்தது.

இன்னும் வைஷ்ணவி அவனை நிறையத் திட்டினார். எல்லாவற்றையும் ஹரி அமைதியாக வாங்கிக் கொண்டான்.


 
???

அம்மா தான் ஆலோசகர் ஹரிக்கு......
இப்போ என்ன பண்ணனும்னு சொல்லிக்கொடுங்க உங்க புள்ளைக்கு......
பிருந்தாவை தாண்டியும் வாழ்க்கை இருக்குன்னு சொல்லுங்க.....
பொண்ணு மட்டும் போதுமா இவனுக்கு.....
அவ சரியானாலும் இவன் விடமாட்டான்......
 
Last edited:
Top