Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 14

Advertisement

Admin

Admin
Member

பகுதி – 14

ஹரி சென்ற பிறகு கூட மீனா யோசனையுடனே இருந்தாள். அந்தப் புகைப்படம் அவளுக்குத் தெள்ளத் தெளிவாக உண்மையைப் புரிய வைத்து விட்டது. அனிக்காக அவள் ஒன்றும் ஹரியை கவனிக்க வில்லை.... அவளுக்கே அவனைப் பிடித்திருக்கிறது. அதோடு அவனைக் கணவன் என்று தன் மனம் ஏற்றுக் கொண்டதும் விளங்கியது.

அவளுக்கு அதில் ஒன்றும் வருத்தம் எல்லாம் இல்லை.... ஏன் சந்தோஷமாகக் கூட இருந்தது. திருமணம் ஆகி மூன்று மாதங்கள் தான் ஆகி இருந்தது. அதற்குள் எப்படி இந்த மாற்றம் என ஒருபுறம் ஆச்சர்யமாக இருந்தாலும், ஹரியை யாருக்கு தான் பிடிக்காது.

கண்ணியமான பார்வை, நடத்தை. அவன் அனி மீது காட்டும் அன்பு. தன் மீது காட்டும் அக்கறை. மனைவி இருக்கும் போதே... அவள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஆண்கள் இருக்கும் உலகத்தில்... இல்லாது போன மனைவியின் மீது இன்னமும் அவன் வைத்திருக்கும் நேசம். என எல்லாமே அவனிடம் பிடித்தது.

அன்று சந்தோஷமாகவே வளைய வந்தாள். மதியம் ஹரிக்குப் பிடித்தது எல்லாம் சமைத்து வைத்தவள், ஹரி வந்த போது எப்போதும் போலவே ஒதுங்கி இருந்து கொண்டாள்.

அவளின் நேசத்தை அவனிடம் காட்ட வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை.... தனக்குப் பிடித்தால்... அவனுக்கும் பிடிக்க வேண்டும் என்பது இல்லையே.... அவன் விருப்பம் போலவே இருந்து கொள்ளட்டும் என நினைத்தாள்.

ஹரியும் அனியும் அந்த வார இறுதியில் சதுரங்க போட்டிக்கு செல்ல கிளம்பினர். ஹரியும் போட்டியில் பங்கெடுப்பதால்.... அனிக்கு துணைக்கு மீனாவும் சென்றாள்.

பெரிய ஹாலில் நுற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஐந்திலிருந்து எழுபது வயது வரை போட்டியாளர்கள் இருந்தனர். சின்னப் பிள்ளைகளுடன் பெரியவர்கள் விளையாடுவது பார்க்க மீனாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

போட்டி நடக்கும் போது பார்வையாளர்கள் வெளியே வந்து விட வேண்டும். அதனால் மீனா வெளியே அவர்களுக்காகக் காத்திருப்பாள்.

முதல் இரண்டு போட்டியில் அனி தோற்றிருக்க ஹரி வென்றிருந்தான். மீனா அவனுக்காக மிகவும் சந்தோஷபட்டாள். அவளின் மகிழ்ச்சி வெளிப்படையாகத் தெரிந்தது. எப்போதுமே தன் உணர்வுகளை மீனா அதிகம் காட்டி இருக்காததால்.... ஹரிக்கு வித்தியாசம் நன்றாகவே தெரிந்தது.

அவன் எதுவும் காட்டிக்கொள்ளாமல்.... தோற்றதால் சோகமாக இருந்த மகளைத் தேற்றிக்கொண்டு இருந்தான்.

“அப்பா கூட முதல் தடவை விளையாடும் போது ஜெயிக்கலை.... போகப் போகத்தான் ஜெயித்தேன். அதனால் டென்ஷன் ஆகாம விளையாடு....” என மகளைச் சமாதனம் செய்து அழைத்துச் சென்றான்.
இந்த முறை அனி ஹரி இருவருமே ஜெயித்து விட.... இரட்டிப்புச் சந்தோஷத்தில் இருந்தனர். அனியை கையில் பிடிக்க முடியவில்லை.... அவள் செய்த அலும்பு தாங்காமல்.... “போதும் டி கொஞ்சம் அடங்கு...” என்றாள் மீனா.

அன்றைய போட்டிகளின் முடிவில் ஹரி எல்லாவற்றிலும் வென்றிருக்க.... அனி இரண்டில் வென்றிருந்தாள். ஹரிக்கு பரிசு பணமாகவும், அனிக்கு இள வயது போட்டியாளர் எனப் பதக்கமும் வழங்கப்பட்டது.

அனி வயதுக்கு அவள் இரண்டு போட்டிகளில் வென்றதே பெரிய விஷயம் என்பதால்.... அதைக் கொண்டாட அடுத்த ஞாயிறு முழு நாளும் வெளியே சென்றனர்.

காலை குழந்தைகள் படத்துக்குச் சென்றவர்கள், மதியம் ஒரு ஹோட்டலில் உணவு முடித்தது விட்டு, ஒரு மாலில் சுற்றிக்கொண்டு இருந்தனர்.

மீனா மாலில் ஒரே மாதிரி இருந்த டாப்பை தனக்கும் மகளுக்கும் எடுத்தவள், பணம் கொடுக்கச் செல்ல... ஹரி அவளைக் கொடுக்க விடவில்லை... அவனே கொடுத்தான்.

மறுவாரம் சனிக்கிழமை தேவ்வின் மகன் ஆதித்யாவின் பிறந்தநாளுக்குச் செல்ல கிளம்பி கொண்டு இருந்தனர். மீனா அன்று மாலில் தனக்கும் அனிக்கும் ஒரே மாதிரி வாங்கி இருந்த டாப்பை எடுத்து அணிந்து கொண்டவள், மகளுக்கும் அதை அணிவித்து அழகாக ஒப்பனை செய்து விட்டாள்.

மகளுக்கு லிப்ஸ்டிக் போட்டுவிட்டவள் “நானும் போட்டுக்கட்டுமா அனி...” என்றதும், தன் அம்மாவை ஆச்சர்யமாகப் பார்த்த அனி “போட்டுக்கோங்க மா இன்னும் அழகா இருப்பீங்க.” என்றதும் லிப்ஸ்டிக் கண்மை எல்லாம் மிதமான அளவில் போட்டுக்கொண்டாள்.

மீனா கண்ணாடி முன்பு நின்று பார்த்துக் கொண்டு இருந்த போது “நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி டிரஸ் போட்டிருக்கோம். அப்பாவும் சேம் கலர் போட்டா நல்லா இருக்கும் இல்ல மா....” அனி கேட்க....

மீனாவுக்கும் அதே ஆசை இருந்தது. ஆனால் ஆமாம் இல்லை என்று எல்லாம் சொல்லாமல்..... “அப்பா கிட்ட இந்தக் கலர்ல ஷர்ட் இருக்கு....” என மட்டும் தான் சொன்னாள்.

அது போதாதா அனிக்கு. ஹரியிடம் சென்றவள், அவனை வற்புறுத்தி அந்தச் சட்டையை அணிய வைத்து இருந்தாள்.

மீனா அறையில் இருந்து வெளியே வந்த போது... அங்கே தந்தையும் மகளும் அவளுக்காகக் காத்திருந்தார்கள்.

“அப்பா, அம்மா அழகா இருக்காங்க இல்லப்பா...” என வேறு அனி ஹரியிடம் கேட்டு... அவன் ஆமாம் என்று சொல்லும் வரை அவனை விடவில்லை. மீனாவுக்கு முகம் சிவந்து தர்மசங்கடமாகி விட்டது.

“இன்னைக்கு அம்மாவும் பொண்ணும் தான் அங்க ஹைலைட்.... வாங்க...” எனக் கேலி செய்தபடி அவர்களை ஹரி அழைத்துச் சென்றான்.

இவர்கள் சென்று சேர்ந்த போது.... அங்கே விழா தொடங்கும் நேரம் ஆகிவிட்டது. இவர்கள் காரில் இருந்து இறங்கும் போது... வாயுளுக்கே வந்து தேவ்வும் தீப்தியும் வரவேற்றனர்.

“வாவ்.... மூன்னு பேரும் ஒரே மாதிரி டிரஸ் பண்ணி இருக்கீங்க... சேம் பின்ச்.” எனத் தீப்தி மூவரையும் கிள்ளி வைக்க....

“பிசாசு.... ஏன் டி கிள்ளுற....” ஹரி அனியின் கன்னத்தைத் தடவி விட்டபடி முறைக்க..... “ஹீ... ஹீ.... சும்மா...” எனத் தீப்தி சிரித்தாள்.

நிறையப் பேரை அழைத்துச் சிறப்பாகப் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர். தீப்தியே நிகழ்ச்சி மேலாண்மை துறையில் இருப்பதால்.... விருந்தினருக்கு நிறைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

முதலில் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் நடத்தப்பட்டது. அனி, தேவ்வின் பிள்ளைகள் மற்றும் வந்திருந்த மற்ற நண்பர்களின் குழந்தைகள் என அனைவரும் ஆர்வமாகப் பங்கேற்றனர்.

அடுத்து பெற்றோரும் குழந்தைகளும் சேர்ந்து பங்கேற்கும் விளையாட்டு நிகழ்ச்சி. அதில் அனியோடு ஹரியும் மீனாவும் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு கார்டிலும் ஒவ்வொரு குறிப்பு இருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்குப் படித்துக் காட்டுவார்கள் அதன்படி பிள்ளைகள் செய்ய வேண்டும். கடைசியில் ஒரு இடத்தில் புதையல் இருக்கும் அதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

பரிசு பெறா விட்டாலும் இம்மாதிரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதே மனதுக்குச் சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் தரும்.

கடைசியாகத் தம்பதிகளுக்கு விளையாட்டு போட்டி வைத்தனர். அனியின் ஆசைக்காக ஹரியும் மீனாவும் சென்றனர். ஒரு பலூனை இருவருக்கும் நடுவில் வைப்பார்கள். பாட்டு முடியும் வரை பலூன் விழாமல் மற்றும் உடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமான ஒன்று சும்மா நிற்க கூடாது நடனம் ஆட வேண்டும்.

விளையாட்டைப் பற்றித் தெரிந்ததும், மீனா மெதுவாக அங்கிருந்து நழுவி விட.... ஹரியும் எஸ்கேப். அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த தீப்தி அனியிடம் சென்று “பாரு உங்க அம்மா அப்பா மட்டும் தான் வரலை....” என ஏத்தி விட.... அவள் நேராகத் தன் பெற்றோரிடம் சென்றாள்.

“ஏன் நீங்க போகலை?”

“அம்மாவுக்கு டான்ஸ் ஆட தெரியாது டா....”

“இதுக்கு டான்ஸ் எல்லாம் தெரிய வேண்டாம். அதுவும் ஹரிக்கு தெரியும். ஒருத்தருக்குத் தெரிஞ்சா போதும்...” அனியின் பின்னே வந்த தீப்தி சொல்ல... ஹரி அவளை முறைத்தான்.

“அங்க பாருங்க வயசானவங்க கூட எவ்வளவு ஆர்வமா வராங்க. இதெல்லாம் ஒரு ஸ்வீட் மெமொரீஸ் தான். மிஸ் பண்ணாதீங்க... வாங்க.” தீப்தி மீனாவை பிடித்து இழுக்க....

“ரொம்பப் பண்ணாம வாடா.... நாங்களும் தான் ஆடறோம்.” எனத் தேவ் ஹரியை அழைக்க....

“போங்க... போங்க...” என அனி அவர்களைத் தள்ளி விட... வேறு வழியில்லாமல் இருவரும் சென்றனர்.

நடுவில் பெரிய பலூனாக வைப்பார்கள் என்று பார்த்தால்.... சின்னப் பலூன். அதனால் இருவருக்கும் இடையில் மிகக் குறைந்த இடைவெளியே.... இருவரின் நெற்றிக்கும் நடுவில் பலூன் இருந்தது. ஹரி குனிந்து நின்றிருந்தான்.

இப்படியெல்லாம் கஷ்ட்டப்பட வேண்டுமா என்று இருந்தது மீனாவுக்கு..... பாடல் ஒலிக்க ஆரம்பித்ததும். மற்றவர்கள் ஆட.... இவர்கள் இருவரும் அப்படியே இருந்தனர்.

அவர்கள் ஆடாமல் நிற்பதை பார்த்து அனி டென்ஷன் ஆகி “அம்மா, அப்பா ஆடுங்க.” எனச் சத்தமிட்டாள்.
“மீனா...” ஹரி சத்தமாக அழைக்க... அவள் திடுக்கிட்டு போய் அவனைப் பார்க்க... இருவர் நெற்றில் இருந்த பலூன் நழுவிவிட.... ஹரி மீனாவை அருகில் இழுத்து பலூன் கீழே விழாமல் தடுத்து நிறுத்தினான்.

இப்போது இருவரின் மத்திய பகுதியில் பலூன் இருந்தது. நெருக்கமாக நிற்க வேண்டிய நிலை.... மீனா மற்றவர்கள் ஆடுவதை வேடிக்கை பார்த்தாள். எல்லோருமே பலூன் நழுவாமல் இருக்க மெதுவாக அசைந்தபடி இருந்தனர் அவ்வளவு தான்.

ஹரி மீனாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு மெதுவாக நடனமிட... மீனா அவன் இழுத்த இழுப்பிற்குச் சென்றாள். அப்போதே நிறையப் பேரின் பலூன் விழுந்திருந்தது. அதனால் நான்கு தம்பதிகள் மட்டும் தான் இருந்தனர். தேவ்வும் தீப்தியும் அழகாக ஆடினார்கள்.

மீனா பலூன் விழாமல் இருப்பதில் தான் கவனமாக இருந்தாளே தவிர..... அவள் ஹரியை பார்கவே இல்லை....

“ஹப்பாடா... நிறையப் பேர் அவுட் ஆகிட்டாங்க. இப்ப அவுட் ஆனா கூடப் பரவாயில்லை....” என நினைத்தபடி மீனா ஹரியை பார்க்க... அவன் அவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்தப் பார்வை உடலுக்குள் ஊடுருவி செல்ல.... நொடியில் மீனாவின் உடல் சில்லிட தொடங்கியது. அந்தப் பார்வையைத் தாங்க முடியாமல் இமையைத் தாழ்த்திக் கொண்டவள், பிறகு மீண்டும் அவனைப் பார்க்க.... அதற்குள் அவன் பார்வை மாறி இருந்தது.

இப்போது மேலும் இரண்டு ஜோடிகள் போட்டியில் இருந்து வெளியேறி இருந்தனர். ஹரி மீனா , தேவ் தீப்தி ஜோடிகள் மட்டும் தான் இருந்தனர்.

பாடல் முடிந்து தேவ் தீப்தி ஜோடிக்கு முதல் பரிசும் இவர்களுக்கு இரண்டாம் பரிசும் வழங்கப்பட்டது. அனிக்குச் சந்தோஷம் தாங்கவில்லை.... அவள் எல்லோரிடமும் அவங்க என்னோட அம்மா அப்பா எனப் பெருமை பேசிக்கொண்டு இருந்தாள்.

ஆதித்யா கேக் வெட்டி முடித்ததும், தேவ்வும் தீப்தியும் விருந்தினர்களை உணவுண்ண அழைத்துச் சென்றனர். செல்வதற்கு முன் தீப்தி மீனாவிடம் கேக்கை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கச் சொல்லிவிட்டு சென்றாள்.

மீனா கேக்கை துண்டு போட.... ஹரி அவளுடனே இருந்தான். அனி தேவ்வின் இரண்டாவது மகனை தூக்கி வைத்தபடி திரிந்தாள்.

ஹரி பக்கத்தில் இருந்தது ஏனோ மீனாவுக்குப் பதட்டமாக இருந்தது. அவள் கேக்கைக் தீவிரமாக வெட்டுவது போல் குனிந்து கொண்டாள்.

“அப்புறம் டான்ஸ் நல்லா இருந்துச்சா...” ஹரியே பேச்சை ஆரம்பிக்க....

“ஐயோ ! ரொம்பப் பயமா இருந்தது. ஆமாம் நம்ம பலூனும் உடையலை தான.... அப்புறம் எதுக்கு நமக்கு மட்டும் ரெண்டாவது பரிசு தான் குடுத்தாங்க.?....” மீனா கேட்க....

“ம்ம்.... அவங்க ஒழுங்கா ஆடினாங்க. நாம எங்க ஆடினோம். அதனால தான்.” ஹரி புன்னகைக்க... மீனா அசடு வழிந்தாள்.

தேவ் தீப்தியோடு சாப்பிடலாம் என இவர்கள் காத்திருந்த நேரத்தில் மீனாவையும் அனியையும் சேர்த்து நிற்க வைத்து ஹரி புகைப்படங்கள் எடுக்க....

“அப்பா, நாம மூன்னு பேரும் சேர்ந்து எடுத்துக்கலாம்.” அனி சொன்னதும், ஹரி செல்பி எடுத்தான்.

மூன்று பேரும் சேர்ந்து எடுக்கும் முதல் புகைப்படம் நன்றாக வந்திருந்தது. அதனால் திரும்பச் சில படங்கள் எடுத்தனர். எதற்காகவோ இவர்களைத் திரும்பி பார்த்த தீப்தி தேவ்விடம் இவர்களைக் காட்டி மகிழ்ந்தாள்.

மீனா உணவு எடுத்து வந்து மற்றவர்களோடு உட்கார்ந்து பேசியபடி மகளுக்கு அதைக் கொடுக்க... ஹரி சென்று தேவ்வுக்கு உதவி செய்தான். விருந்தினர் சென்றதும் இவர்கள் நால்வரும் சாப்பிட அமர்ந்தனர். பிள்ளைகள் உள்ளறையில் விளையாடிக் கொண்டு இருந்தனர்.

மூவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்தது. ஹரியும், மீனாவும் போட்டியில் கலந்து கொண்டது, சாதாரணமாகப் பேசிக்கொள்வது எல்லாவற்றையும் பார்த்து... இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளி நீங்கி விட்டதாகவே தேவ்வும் தீப்தியும் நினைத்தனர். அதனால் இருவரையும் கிண்டல் செய்து ஓட்டினார்கள்.

ஹரி முன்பு போல் கோபப்படாமல் அமைதியாக இருந்தது வேறு அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. தேவ்வின் இரண்டாவது மகன் மோனிஷை தூக்கிக்கொண்டு வந்த அனி “அம்மா, எனக்கும் விளையாட இது மாதிரி ஒரு தம்பி பாப்பா வேணும்.” என்றதும்,

“ம்கும் ம்கும்...” எனத் தேவ் இரும... தீப்தி வாய்விட்டு சிரிக்க.... மீனா மகள் சொன்னது காதில் விழாதது போல் “அனி உனக்குத் தூக்கம் வரலையா.... வீட்டுக்கு போகலாமா....” எனக் கேட்க.... ஹரியும் உடனே எழுந்து விட்டான்.

அப்போது தான் மீனா ஹரியின் முகத்தைப் பார்த்தாள். இதுவரை புன்னகை முகமாக இருந்தவனின் முகம் இருண்டு இருந்தது. எதுவோ சரியில்லை என அவளுக்குப் புரிந்தது.

அனிக்கு மோனிஷை விட்டு கிளம்பவே மனம் இல்லை.... அதை உணர்ந்த தீப்தி “நாளைக்கு லீவ் தான அவ இங்க இருக்கட்டுமே....” என்றதற்கு, மீனா ஹரியை பார்க்க... அவன் அனியிடம் அவளுக்கு இருக்கச் சம்மதமா எனக் கேட்க... அவள் சரி என்றாள்.

அனிக்கு முன்பே அவர்களை நன்றாக தெரியும். அதோடு இந்த முன்று மாதத்தில் அடிக்கடி இரு குடும்பங்களும் சந்தித்து கொண்டதால்.... அவளுக்கு அவர்களை அன்னியமாக தெரியவில்லை.... அதனால் இருந்து கொள்கிறேன் என்றாள்.

மீனா எப்போது வெளியில் சென்றாலும், அனிக்கு ஒரு சாதாரண உடையைத் தோல்பையில் வைத்திருப்பாள். அது காரில் இருந்ததால்.... அதைச் சென்று எடுத்து வந்து மகளுக்கு உடை மாற்றி விட்டு கிளம்பினாள்.

“சமத்தா இரு.... தொந்தரவு பண்ணாத.... நடு ராத்திரி எழுந்திட்டு அம்மா கிட்ட போகணும் அப்பா கிட்ட போகணும்னு சொல்லக்கூடாது. காலையில அப்பா கூப்பிட வருவாங்க. சரியா...”

“சரி மா... சமத்தா இருக்கேன். பாய் அப்பா.... பாய் மா....”

ஹரியோடு வெளியே வந்த தேவ் “இன்னைக்கு நைட் மஜாவா.... அனி வேற இல்லை.... என்ஜாய்.” அவன் இருக்கும் நிலை அறியாமல்.... நண்பனை வாழ்த்தி வழி அனுப்பினான்.

வரும் போது கார் விட இடம் இல்லாததால்... ஹரி தள்ளி காரை நிறுத்தி இருந்தான்.

“சரி டா... நாங்க போய்க்கிறோம், நீ போ....” எனத் தேவ்வை அனுப்பிவிட்டு ஹரியும் மீனாவும் சென்றனர். மீனா வழக்கம் போலவே காரில் பின்புறம் அமர்ந்து கொண்டாள். ஹரியும் எதுவும் சொல்லவில்லை.... அவன் செல்லும் வழியில் மீனாவோடு பேசக் கூட இல்லை.... எதையோ நினைத்தபடியே வந்தான்.

வீட்டிற்கு வந்ததும் மீனா காரில் இருந்து இறங்கி உள்ளே செல்ல.... ஹரி அவளோடு வரவில்லை.... அவன் வராததைக் கவனித்து மீனா நின்று திரும்பி அவனைப் பார்க்க....

“நான் கொஞ்சம் வெளிய போறேன்.” என்றவன், மீனா உள்ளே சென்று கதவை சாத்தியதும், காரை கிளம்பிக் கொண்டு சென்றே விட்டான்.

:love::love::love:

மீனாவுக்காக...

மேனிக்குள் காற்று வந்து
மெல்லத் தான் ஆடக் கண்டேன்
மங்கைக்குள் காதல் வெள்ளம்
கங்கை போல் ஓடக் கண்டேன்
இன்பத்தின் எல்லையோ
இல்லையே இல்லையே
அந்தியும் வந்ததால்
தொல்லையே தொல்லையே
காலம் தோறும் ம்ம்..
கேட்க வேண்டும் ம்ம்..
காலம் தோறும் ம்ம்..
கேட்க வேண்டும் ம்ம்..
பருவம் என்னும் கீர்த்தனம்
பாட பாடப் பாட பாட

சின்னச் சின்ன வண்ணக் குயில்
கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா
 
Last edited:

Super sis, Eagerly Waiting For Next Epi.....
 
???

அடடா ஹரி எஸ்ஸாகிட்டானே......
இந்த தேவ் சும்மா இருந்தவனை கிளப்பிவிட்டுட்டான்.....
எவ்ளோ நாள் தான் ஓடி ஒளிய முடியும் ஹரி.......
அவ சரியாகிட்டாள்.....
நீ மீனாவை எப்போ ஏத்துக்கப்போற???
 
Last edited:
Top