Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 99

Advertisement

SHALU shalu

Well-known member
Member
ருத்ராக்ஷிக்குப் பூ வைக்கும் சடங்கு முடிந்ததும், அங்கேயே தங்க சம்மதித்து விட்டதால், தங்களது ஊரில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள விரைந்தனர் நால்வரும்.

அதனால், அதை யாரிடம் கேட்பது என்று யோசிக்க, நூலகத்தின் உரிமையாளர் துரைமுருகனிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று அவருக்கு அழைத்துப் பேசினார் வித்யாதரன்.

முதலில் இருவரும் அவரவர் நலத்தை விசாரித்து முடித்து விட்டு,”அப்பறம் ஃபங்க்ஷன் நல்லபடியாக முடிஞ்சதா சார்?” என்றார் துரைமுருகன்.

“ஆமாம் சார். அங்கே ஊர்ல நிலவரம் எப்படி இருக்கு?” என்று அவரிடம் மேலோட்டமாக விசாரிப்பதைப் போலக் கேட்கவும்,

“எல்லாம் அப்படியே தான் இருக்கு சார். ஆனால், லைப்ரரிக்கு வந்த ஒரு சில பேர் ருத்ராக்ஷியைப் பத்தி விசாரிச்சாங்க. அப்பறம் உங்க வீடெல்லாம் பூட்டி இருக்குது எங்கே போய் இருக்கீங்கன்னுக் கேட்டாங்க” என்று பதிலளித்தார் துரைமுருகன்.

“பார்றா! அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?”

“அவங்களுக்கு ஏதாவது பர்சனல் வேலையாக இருக்கும். அதனால் கிளம்பிப் போயிருப்பாங்க! அதையெல்லாம் எங்கிட்டே வந்து சொல்லிட்டா போவாங்க?’அப்படின்னுக் கேட்டு விட்டுட்டேன் சார்” எனக் கூறிச் சிரித்தார் துரைமுருகன்.

அவருடன் இணைந்து தானும் நகைத்து விட்டு,”சூப்பர்! தாங்க்ஸ் சார்” என்றார் வித்யாதரன்.

“இட்ஸ் ஓகே. நீங்க எப்போ அங்கேயிருந்து கிளம்புறீங்க?” எனக் கேட்க,

“நாளைக்கு இயர்லி மார்னிங் ஆகிடும் சார்” என்ற பதில் வரவும்,

“அப்போ சரி சார்” என்று அவரிடம் சொன்னார் துரைமுருகன்.

அதன் பின்னர், அவருடன் சிலவற்றைப் பேசி முடித்து விட்டு அழைப்பை வைத்து விட்டார்கள் இருவரும்.

இந்த உரையாடலைத் தன்னுடன் இருந்தவர்களிடம் கூறினார் வித்யாதரன்.

“இவங்களுக்கு என்னப் பதில் சொல்லனும்னு முன்னாடியே யோசிச்சிட்டுப் போயிடனும் ப்பா” என்று பொதுவாகச் சொன்னார் மிருதுளா.

“நீ தான் அந்த விஷயத்தில் சாமர்த்தியசாலியாச்சே!” என்று அவளைப் புகழ்ந்தார் கவிபாரதி.

அதைக் கேட்டு அனைவரும் புன்னகைத்துக் கொண்டு, தத்தமது அறைகளுக்குள் சென்று விட்டனர்.

தனது அலங்காரங்களைக் களைந்து, உடையையும் மாற்றிக் கொண்ட ருத்ராக்ஷியோ, தனது தலையிலிருந்தப் பூவை மட்டும் எடுக்காமல் இருந்தாள்.

அதனுடைய நறுமணம் தான், அவளை இப்போதும் உற்சாகமாக வைத்துக் கொண்டு இருந்தது.

அனைத்து ஆரவாரங்களும் முடிந்து அவரவருடைய வேலையில் மூழ்கி இருக்கும் போது, தான் மட்டும் தன்னுடைய அறையிலிருந்து கொண்டு ஸ்வரூபனுக்குக் கால் செய்து,

“ஹலோ” என்றவனிடம்,

“ஹாய் ங்க. என்னப் பண்றீங்க?” என்று கூறி உரையாடலை ஆரம்பித்தாள் ருத்ராக்ஷி.

“இப்போ தான் ரெஃப்ரெஷ் ஆகிட்டு ரூமுக்கு வந்தேன். நீங்க?” என்று அவளிடம் கேட்டான் ஸ்வரூபன்.

“நானும் தான் ங்க. ஆனால் தலையில் வச்சப் பூவை மட்டும் எடுக்கலை” என்று கூறியவளை வெட்கம் பிடுங்கித் தின்றது.

“ஓஹ்! அதை மட்டும் ஏன் விட்டு வச்சிருக்கீங்க?” என்று குறும்பாக வினவவும்,

“என்னன்னுத் தெரியலை. அதை எடுக்கவே தோன மாட்டேங்குது. வாடிப் போனாலும் அதைப் பத்திரப்படுத்தி வச்சுக்குவேன்” என்று கூறியவளின் வார்த்தைகளைக் கேட்டு அவள் மேல் இருந்தக் காதல் அவனுக்குக் கூடிக் கொண்டே போனது.

“அவ்வளவு இஷ்டமா ங்க?” என்று கேட்டதில் இருந்த மறைமுகப் பொருளைக் கண்டு கொண்ட பெண்ணவளுக்கோ, காது மடல் சிவந்து போனது.

“என்னது ங்க?” என்று ஒன்றும் அறியாதவளைப் போலக் கேட்டுக் களளப் புன்னகையை உதிர்த்தாள் ருத்ராக்ஷி.

“அந்தளவுக்கு ஆசையான்னுக் கேட்டேன் ங்க” என்றான் ஸ்வரூபன்.

“எது மேல்?” என்று அவளோ மேலும் பேச்சை வளர்க்கவும்,

“அதை நீங்க தான் சொல்லனும்” என்று அவளிடம் சொல்ல,

“எனக்கு இந்தப் பூ மேலே தான் இஷ்டமுங்க!” என்று கூறி விட்டாள் ருத்ராக்ஷி.

“பூ மேலே மட்டும் தானா?” என அவளது வாயிலிருந்து வார்த்தைகளைப் பிடுங்கப் பார்த்தான் ஸ்வரூபன்.

“அதைப் பத்தி தானே நம்மப் பேச்சுப் போயிட்டு இருக்கு? சோ, அந்தப் பூ மேலே தான், என்னோட ஆசை, விருப்பம், இஷ்டம் எல்லாமே ங்க!” என்று அவனுக்குத் தக்கப் பதில் அளித்தாள் அவனவள்.

“உங்க சொந்த ஊருக்கு வந்ததும், ரொம்ப ரிலாக்ஸாக இருக்கீங்க போலயே?” என அவளிடம் வினவினான்.

“அப்படியா தெரியுது?” என்கவும்,

“ஆமாம் ங்க. ‘சொர்க்கமே என்றாலும் அஃது நம்மூரைப் போல வருமான்றது?’ உங்களைப் பொறுத்தவரைக்கும் சரியாகத் தான் இருக்கு!” என்று கூறிச் சிரித்தான் ஸ்வரூபன்.

“கரெக்ட் தான் ங்க‌. நான் அந்த ஊருக்கு வந்து தங்கினதுக்கு அப்பறம் இங்கே அப்பப்போ வந்தாலும், பழைய மாதிரி அட்டாச் ஆகவே முடியலை! ஆனால், அதை என்னோட ஃபேமிலி கொஞ்சம் கொஞ்சமாக மாத்தி விட்டுட்டாங்க! அதனால் தான், இந்தப் பேச்சுத் திறமை எல்லாம் ஆட்டோமேட்டிக் ஆக வந்திருச்சுன்னு நினைக்கிறேன்” என்று அவனுக்கு விளக்கிக் கூறினாள் ருத்ராக்ஷி.

“ஆஹான்! நீங்க எப்பவும் இந்த மாதிரியே எங்கூட ஜாலியாக வாயாடிக்கிட்டே இருக்கனும்!” என்று அவளிடம் கேட்டுக் கொண்டவனுக்கு,

“அதுக்கென்ன? நீங்களும் என் கூட இப்படி பேசிட்டு இருந்தால் நானும் இதை ஃபாலோவ் பண்றேன்” என்று அவனுக்கு உறுதி அளித்தவளோ,

“நீங்க இந்த ஊருக்கு வந்துட்டுப் போற அப்போ எல்லாம் வேறே எங்கேயும் போயிட்டு வர்றதே இல்லையே? ஏன்?” என அவனிடத்தில் வினவினாள் ருத்ராக்ஷி.

“போகத் தோனலை ங்க. நம்மளோட கல்யாணத்துக்கு அப்பறம் போயிட்டு வரலாம்” என்று அவளுக்கு ஐடியா கொடுத்தான் ஸ்வரூபன்.

“ஷூயர்” என்று கூறி விட்டு அவனுடனான உரையாடலை முடித்த சமயத்தில், அவளது அறைக்குள் நுழைந்து,

“ருத்ரா! நீ இப்போ ஃப்ரீயாக இருந்தால், நாம எடுத்துக்கிட்ட போட்டோஸை எல்லாம் அனுப்பி விட்றியா?” என்றாள் மஹாபத்ரா.

“நான் ஃப்ரீ தான் அண்ணி. இதோ அனுப்புறேன். நீங்களும் அனுப்பி விடுங்க” என்று அவளிடம் சொல்லியவாறே தனது செல்பேசியில் இருந்தப் புகைப்படங்களை அவளது புலனத்திற்கு அனுப்பியவளோ,

அப்படியே அவற்றையெல்லாம் ஸ்வரூபனுக்கும் அனுப்பி வைத்து விட்டு அவனது பிரிவை இப்போதிருந்தே ஜீரணித்துக் கொள்ளத் தொடங்கினாள் ருத்ராக்ஷி.

அந்தப் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டே அன்றிரவு கண்ணயர்ந்து விட்டு, அடுத்த நாள் அதிகாலையில், சந்திரதேவ், காஷ்மீரனிடம் விடைபெற்றுக் கொண்டுத் தனது சொந்தங்களுடன் தன்னுடைய ஊருக்குப் பயணமானான் ஸ்வரூபன்.

அங்கே சென்ற பின்னர், அவ்வூர் மக்கள் சிலரோ, அவர்களிடம் சரமாரியாக கேள்விக் கணைகளைக் கொண்டு அவர்களைத் தாக்கத் தொடங்கினர்.

அதற்கெல்லாம் ஒருவாறு பதிலளித்து விட்டுத் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கப் போய் விட்டார்கள்.

பூ வைக்கும் சடங்கிற்காகத் தன் தலையில் வைத்து விட்டிருந்த மலரை, ஸ்வரூபனிடம் சொன்னதைப் போலவே, தனக்குப் பிரியமான புத்தகம் ஒன்றில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டாள் ருத்ராக்ஷி.

இது ஒரு சிறுபிள்ளைத்தனமான செயல் என்று கூறி மற்றவர்கள் சிரித்தாலும் கூட அவளுக்குக் கவலையில்லை.

இதுநாள் வரையில், மனதளவில் முதிர்ச்சி அடைந்தப், பக்குவமானப் பெண் என்றாலும் கூட, அவளுக்கும் இந்த மாதிரியான ஆசைகள் இருக்கத் தானே செய்யும்? அதைத் தான் நிறைவேற்றிக் கொண்டாள் ருத்ராக்ஷி.

பூ வைத்தப் பிறகு, நிச்சயத்தார்த்தை நடத்துவதற்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் துணிமணிகள்
எடுப்பதாகும். எனவே, அதற்கான திட்டங்களை வகுத்தனர் ருத்ராக்ஷி மற்றும் ஸ்வரூபனின் வீட்டார்.

- தொடரும்
 
Top