Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 94

Advertisement

SHALU shalu

Well-known member
Member
உணவை உண்டு முடித்து உறங்கி எழுந்ததும் தான், சந்திரதேவ், காஷ்மீரன் மற்றும் மஹாபத்ராவினால் தங்களது கண்களையே திறக்க முடிந்தது.

“அவங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணனுமே?” என்றார் சந்திரதேவ்.

“நான் அவருக்கு மெசேஜ் பண்ணிட்டேன் ப்பா” என்று அவரது மகள் பதிலளிக்கவும்,

“அப்போ சரிம்மா. டேய்! நீ ஆஃபீஸூக்குப் போறியா என்ன?” என்று தன் மகனிடம் வினவினார்.

“ஐயையோ! இல்லை ப்பா. என்னால் இரண்டு நாளைக்கு எழுந்திரிக்கவே முடியாது!” என்று அலறினான் காஷ்மீரன்.

“என்னாலேயும் தான் மாமா!” என்று தானும் அவனுடன் சேர்ந்து கொண்டாள் மஹாபத்ரா.

“அப்போ அப்பா நீங்க?” எனத் தன் தந்தையிடம் கேட்டாள் ருத்ராக்ஷி.

“நான் மட்டும் கிளம்பிப் போய் என்னப் பண்ணப் போறேன்? நானும் இன்னைக்கு ஆஃபீஸூக்கு லீவ் தான்!” என்று அவளிடம் கூறி விட்டார் சந்திரதேவ்.

“சூப்பர்! எனக்குக் கல்யாணம் முடிஞ்சு நான் ஊருக்குப் போகிற வரைக்கும் நீங்க யாரும் ஆஃபீஸூக்குப் போகக் கூடாது! ஓகேவா?” என்று அவர்கள் மூவரையும் பார்த்து வினவினாள்.

“இவங்க ரெண்டு பேருக்கும் ஓகே தான் ம்மா! என் நிலைமையைக் கொஞ்சம் நினைச்சுப் பாரு! நான் பிரைவேட்டில் வொர்க் பண்றேன். அது என்னோட சொந்த ஸ்கூல் இல்லை!” என்று அவளிடம் பாவமாக உரைத்தாள் மஹாபத்ரா.

“உங்களுக்கு மட்டும் இந்தக் கட்டுப்பாட்டு இல்லை அண்ணி” என்றுரைத்தாள் ருத்ராக்ஷி.

“தாங்க்ஸ் ம்மா” என்றவளோ,

“நான் போய் எங்கம்மா கிட்டே பேசிட்டு வர்றேன்” என்று தன் செல்பேசியுடன் சென்று விட்டாள் மஹாபத்ரா.

“இங்கே இருக்கிற வரைக்கும் நீ என்னப் பண்ணப் போற டா?” என்று தங்கையிடம் விசாரித்தான் காஷ்மீரன்.

“நான் மெழுகுவர்த்தி செய்யப் போறேன் ண்ணா. அப்பறம், உங்க ரெண்டு பேரோட ஆஃபீஸூக்கும் வரலாம்னு இருக்கேன்” என்று அவனிடம் கூறினாள் ருத்ராக்ஷி.

“சூப்பர் ஐடியா டா” என்று அதை ஆமோதித்தான் காஷ்மீரன்.

“எஸ் ண்ணா. நானும் ஆஃபீஸூக்கு வர்றது உங்க ரெண்டு பேருக்கும் எந்தப் பிராப்ளமும் இல்லையே?” என்று குறும்புடன் கேட்டவளிடம்,

“ஹேய்! அடி தான் வாங்கப் போற எங்ககிட்ட!” என்று அவளைக் கடிந்து கொண்டான் அவளது அண்ணன்.

அதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டாள் ருத்ராக்ஷி.

அந்தச் சமயத்தில்,

“இயர்லி மார்னிங்யே வந்துட்டோம் மா. சாப்பிட்டுட்டுத் தூங்கியாச்சு. அதான், இப்போ கால் செய்றேன்” என்று தன் தாயிடம் கூறிக் கொண்டு இருந்தாள் மஹாபத்ரா.

“ஓஹ்! நல்லா ரெஸ்ட் எடுத்தாச்சுல்ல?” என்று அவளிடம் அக்கறையுடன் வினவினார் கனகரூபிணி.

“ஆமாம் மா. இன்னும் உடம்பு வலிக்கத் தான் செய்யுது” என்று அவரிடம் சொன்னாள் அவரது மகள்.

“அப்போ இன்னைக்கும் வேலைக்கு மட்டம் போட்டுட்டியா?” என்றார் அவளது அன்னை.

“ஹிஹி” என்று இவள் அசடு வழியவும்,

“உன் கேவலமான சிரிப்பிலேயே புரிஞ்சது டி!” என்று அவளிடம் கூறினார் கனகரூபிணி.

“சரிம்மா. நீங்க ஒரு தடவை வீட்டுக்கு வந்து ருத்ராவைப் பார்த்துட்டுப் போகலாம்ல?” என்று தன் தாயிடம் சொன்னாள் மஹாபத்ரா.

“அதுக்கு என்னடி? நானும், உங்க அப்பாவும், அங்கே தாராளமாக வந்துட்டுப் போறோம்! நீங்க மூனு பேரும் ஃப்ரீயா இருக்கிறப்போ சொல்லுங்க” என்று மகளிடம் வலியுறுத்தவும்,

“சரிம்மா” என்க,

“அவங்க வீட்டில் என்னடி சொன்னாங்க?” என்று அவளிடம் கேட்டார் கனகரூபிணி.

“பூ வைக்கிறதுக்குத் தேதியைப் பார்த்துச் சொல்ல சொன்னாங்க ம்மா” என்று கூறி அவரிடம் அனைத்தையும் சொன்னாள் மஹாபத்ரா.

“ஓஹ் சரிடி. எல்லாம் நல்லபடியாக முடியனும்” என்று வேண்டிக் கொண்டார் அவளது தாய்.

“ஆமாம் மா. ருத்ராக்ஷியோட லைஃப்ல அவ இதுக்கு மேல எந்த மனக் கஷ்டத்தையும் அனுபவிக்கக் கூடாது!” என்று தானும் அவருடன் சேர்ந்து பிரார்த்தித்துக் கொண்டாள் அவரது மகள்.

அதன் பின்னர், அவருடன் சில நிமிடங்கள் பேசி விட்டே இவர்களிடம் வந்தாள் மஹாபத்ரா.

“வந்துட்டியா ம்மா? பூ வைக்கிற ஃபங்க்ஷனுக்கு உங்கப்பா, அம்மாவையும் கண்டிப்பாக வந்து கூப்பிடுவோம்” என்று அவளிடம் உரைத்தார் சந்திரதேவ்.

“ஓகே ங்க மாமா. அவங்ககிட்ட முன்னாடியே சொல்லி வச்சிடறேன்” என்றாள் அவரது மருமகள்.

அவர்கள் நால்வரும் தங்களது அலுவல்களைப் பற்றி அவ்வப்போது சம்பாஷித்துக் கொண்டனர்.

இப்படி இருக்கையில், தனது மெழுகுவர்த்திகள் செய்யும் வேலையையும் தன்னுடைய சொந்த வீட்டில் இருந்து கொண்டு செய்தபடியே தான் இருந்தவளோ,

அவற்றைச் செய்து முடித்ததும், புகைப்படங்களாக எடுத்து ஸ்வரூபன், கவிபாரதி மற்றும் மிருதுளாவிற்கு அனுப்பி வைப்பாள் ருத்ராக்ஷி.

அவள் தங்கி இருந்த ஊரில் அனைவரிடமும் கைப்பேசி இருப்பதால், ஆன்லைன் கிளாஸ் எடுக்க முடிவெடுத்து அதைத் தன் வீட்டாரிடமும், அந்த மூவரிடமும் பகிர்ந்து கொள்ளவும்,

“எல்லார்கிட்டயும் மொபைல் இருக்கான்னுக் கேட்டுக்கிறேன்” என்று அந்தப் பொறுப்பைத் தனதாக்கிக் கொண்டு,

அதைச் செயலாற்றவும் செய்தவரோ,”யார், யார்கிட்ட மொபைல் இருக்கு?” என்று ருத்ராக்ஷயின் வகுப்பிற்கு வருபவர்களிடம் வினவினார் மிருதுளா.

“ஹாங்! எங்ககிட்ட இருக்கு க்கா. ஒரு ரெண்டு, மூனு பேருக்கிட்ட இருக்காதுன்னு நினைக்கிறோம்” என்றார் அங்கேயிருந்த ஒரு பெண்மணி.

“அப்போ எல்லாரும் மொபைலைப் பகிர்ந்துக்கலாமா? ஏன்னா, ருத்ரா பொண்ணு நமக்கு அதிலேயே கிளாஸ் எடுக்கலாமான்னு யோசிக்கிறா” எனவும்,

“என்னது?” என்று ஒரு சில பெண்கள் தங்களது நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு கேட்டனர்.

“உங்க எல்லாருக்கும் என்னாச்சு?” என்று அவர்களிடம் வினவினார் மிருதுளா.

“செல்ஃபோனில் எப்படி ம்மா பாடம் படிக்கிறது?” என்று கேட்கவும்,

“அதெல்லாம் படிக்கலாம் ங்க. உங்கப் பசங்களோட ஆன்லைன் கிளாஸை எல்லாம் பார்த்துருக்கீங்க தானே?” என்றார்.

“ம்ம். அதைப் பாத்துருக்கோம். ஆனால் எங்களுக்குப் புதுசு தானே? நேரில் சொல்லிக் கொடுத்தாலே அதைக் கவனிச்சு செய்யத் தலையால் தண்ணீர் குடிக்கிறா மாதிரி இருக்கும்! இப்போ என்னடான்னா இப்படி கிளாஸ் எடுக்கப் போகிறதா சொல்றாளே! இது சரியா வருமா க்கா?” எனக் கேட்டார்கள் அனைவரும்.

“அது உங்க கையில் தான் ம்மா இருக்கு. நீங்க சொல்றதை வச்சுத் தான் அவ அதை ஓகே பண்ணுவா. இல்லைன்னா, வேணாம் தான்!” என அவர்களிடம் கூறினார் மிருதுளா.

“ம்ஹ்ம்” என்று கூறிக் கொண்டே சிறிது நேரம் யோசித்துப் பார்த்தனர் அந்தப் பெண்மணிகள்.

பின்னர், தங்களுக்குள் கலந்துரையாடிக் கொண்ட பிறகு,”சரி. இதுக்கு நாங்க சம்மதிக்கிறோம். ஏன்னா, இப்படியே விட்டால், அப்பறம் எங்களுக்குப் படிச்சதும் மறந்து போயிரும்” என்று ஒப்புக் கொண்டார்கள்.

அதை ருத்ராக்ஷயிடம் சொல்லி விட்டார் மிருதுளா.

உடனே,”நீங்க வேற லெவல் க்கா! கிளாஸை எப்போ ஆரம்பிக்கலாம்ன்னு கேட்ருங்க. நானும் அதுக்கேத்த மாதிரி தயாராகிடறேன்” என்றுரைத்து விட்டு, அதற்குரிய ஆயத்தங்களைச் செய்து கொண்டாள் ருத்ராக்ஷி.

- தொடரும்
 
Top