Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 92

Advertisement

SHALU shalu

Well-known member
Member
ருத்ராக்ஷியின் வீட்டிற்குள் நுழைந்து அவளது உடைமைகளை ஒரு பெட்டியில் அடுக்கி வைத்துக் கொண்டு இருந்தனர்.

“உன் கல்யாணம் முடிஞ்சு இங்கே வர்ற வரைக்கும் கிளாஸ் எடுக்க மாட்டியா?” என்றார் மிருதுளா.

“ஆமாம் க்கா” என்று கூறியவளோ, தான் அங்கு செய்து வைத்திருந்த மெழுகுவர்த்திகள் சிலவற்றை எடுத்து,”இதெல்லாம் உங்களுக்குத் தர்றேன். என்னோட கிஃப்ட்ஸ் ஆக வச்சுக்கோங்க அக்கா” என்று அவரிடம் கொடுத்தாள் ருத்ராக்ஷி.

அதைப் பெற்றுக் கொண்டவரோ,”அப்படியா? தாங்க்ஸ் ம்மா” என்றவாறே, அவற்றை முகர்ந்து பார்த்துக் கொண்டார் மிருதுளா.

“உங்களுக்கும், கவிபாரதி அம்மாவுக்கும் தரனும்னு நினைச்சேன். அதான் க்கா” என்கவும்,

“உங்க மாமியாருக்குன்னு சொல்லு” என்று திருத்திக் கூறியவுடன்,

உடனே புன்னகை சிந்திய ருத்ராக்ஷியோ,”என்னோட வருங்கால மாமியாருக்கு! போதுமா அக்கா?” என்றாள்.

“ம்ம். இது தான் கரெக்ட்” என்று கூறிச் சிரித்தார் மிருதுளா.

இதே நேரம்,”நாங்க ருத்ராக்ஷியைக் கையோட கூட்டிட்டுப் போனா உங்களோட கிளாஸ் பாதிக்குமே?” என்று கவிபாரதியிடம் கேட்டாள் மஹாபத்ரா.

“அதில் எனக்கும், மிருதுளாவுக்கும் ஒன்னும் பிரச்சினை இல்லை ம்மா. நீங்க ஊருக்குப் போன அப்பறம் மத்தவங்க தான் அதைப் பத்தி எங்ககிட்ட சொல்லி வருத்தப்படுவாங்க!” என்று அவளிடம் சொன்னார் ஸ்வரூபனின் அன்னை.

“ஓஹ்ஹோ! அப்போ என்னப் பண்ணுவீங்க?” என்றதற்கு,

“அதுக்கு என்னப் பண்ண முடியும் மா? ருத்ராக்ஷி வர்ற வரைக்கும் காத்திருக்கத் தான் வேணும்னு சொல்ல வேண்டியது தான்!” என்று அவளுக்குப் பதிலளித்தார் கவிபாரதி.

“சரிங்க ம்மா” என்று அவரிடம் கூறி விட்டாள் மஹாபத்ரா.

“இன்னும் லைப்ரரியைப் பார்க்காமலேயே கிளம்புறோம் ப்பா” என்று தன் தந்தைக்கு நினைவூட்டினான் காஷ்மீரன்.

“அங்கே போனாலும் நாம உட்கார்ந்து பேசுறா மாதிரி இருக்கும் ப்பா. அதுக்கு இப்போ நமக்கு நேரமில்லை. அவருக்கு எப்படியும் நம்ம ருத்ரா முன்கூட்டியே இன்ஃபார்ம் பண்ணி இருப்பா. சோ, நிச்சயத்தார்த்தத்துக்கு அழைக்கும் போது போய் நல்லா பொறுமையாகப் பேசிட்டு வந்துடலாம்” என்று மகனிடம் சொல்லி விட்டார் சந்திரதேவ்.

“ஓகே ப்பா” என்று கூறி அதை ஏற்றுக் கொண்டான் அவரது மகன்.

அவர்களே அனைத்தையும் பேசிக் கொண்டு இருக்க, தனது காதல் தேவதையின் தரிசனத்திற்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தான் ஸ்வரூபன்.

சற்று முன்னர் அவளுடைய வீட்டிற்குச் செல்லும் போது கூட, அவள் தன்னைத் திரும்பிப் பார்க்கவில்லை என்பது அவனுடைய இதயத்திற்கு இலேசான வலியைக் கொடுத்தது தான்!

அதையும் பொறுத்துக் கொண்டு தான் அவளது வருகையை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறான் ஸ்வரூபன்.

அவன் எண்ணியதைப் போலவே, அவளும், மிருதுளாவும் அங்கே வந்து சேர்ந்து விட்டார்கள்.

இப்போது தான், தன்னைப் பார்த்துப் புன்னகைத்த ருத்ராக்ஷியைக் காதலுடன் ஏறிட்ட ஸ்வரூபனுடைய பார்வையில், அவளைச் சிறிது நேரம் பிரிந்திருந்த தவிப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.

அதைக் கண்டு கொண்டவளது புருவங்களோ தானாக உயர்ந்தது.

அவனது உதடுகளோ,”மிஸ் யூ!” என அசைத்ததைப் பார்த்தவுடன், அவளுக்கும் அவனைப் பிரியப் போவதை நினைத்துக் கஷ்டமாகப் போய் விட்டது.

“என்னம்மா எல்லாத்தையும் எடுத்துட்டு வந்தாச்சா?” என்று தங்கையிடம் விசாரித்தான் காஷ்மீரன்.

அதில், அவன் புறம் திரும்பியவளோ,”யெஸ் ண்ணா” என அவனிடம் விடையளித்து விட்டுத்,

தான் மிருதுளாவிடம் சொன்னதைப் போலவே, தன்னுடைய வருங்கால மாமியாரிடம் சென்று,”உங்களுக்குத் தான், இந்தப் பரிசு! இந்தாங்க” என்று தன்னிடம் இருந்தவற்றை அவரிடம் சேர்ப்பித்தாள் ருத்ராக்ஷி.

“எனக்கா? இதெல்லாம் ரொம்பவே நல்ல வாசனை கொடுக்கிற மெழுகுவர்த்திகள் ஆச்சே!” என்று அதையெல்லாம் தனது நாசிக்கு அருகில் கொண்டு போனவரோ,

“ஆஹ்ஹா! என்ன வாசம்!” என்று மீண்டுமொரு முறை அதனை முகர்ந்து பார்த்தார் கவிபாரதி.

“ஹேய்! ருத்ரா! நீ எனக்கு எதுவுமே கொடுக்கலை?” என்று அவளிடம் கூறி முறையிட்டாள் மஹாபத்ரா.

“அங்கே வந்து உங்களுக்குச் செஞ்சு தர்றேன் அண்ணி” என்றுரைத்தாள் ருத்ராக்ஷி.

“பிராமிஸ்?” எனக் கேட்டாள் அவளது அண்ணனின் மனைவி.

“காட் பிராமிஸ் அண்ணி” என அவளுக்கு வாக்கு அளித்தாள் காஷ்மீரனின் தங்கை.

“அப்போ தினமும் ஒரு கலர் அண்ட் ஸ்மெல் இருக்கிற மெழுகுவர்த்திகள் செஞ்சுத் தா!” என்று சொல்லிக் கண்ணடித்தாள் மஹாபத்ரா.

“ஹாஹா! ஷ்யூர் அண்ணி. உங்களுக்கு இல்லாததா, அங்கே வந்ததும் என்னோட ஃபுல் டைம் ஜாப் அது மட்டும் தான்!” என அவளிடம் சொன்னாள் ருத்ராக்ஷி.

“சூப்பர்! நானும் உனக்கு ஹெல்ப் பண்ணுவேன்!” என்று தன்னுடைய நாத்தனாருக்கு உறுதி அளித்தாள் அவளுடைய அண்ணி.

ஏனென்றால், அவர்கள் ஊருக்குச் செல்லும் நேரம் வந்து விட்டது.

ஆகவே, ஸ்வரூபனின் மீதான தனது பார்வையை விலக்கிக் கொள்ளவே இல்லை ருத்ராக்ஷி.

அதனாலேயே,”ஏங்க மாப்பிள்ளை! நீங்க உங்களோட மொபைல் நம்பரை இவளுக்குக் கொடுத்தாச்சு தானே?” எனத் தன்னிடம் வினவிய மஹாபத்ராவிடம்,

“ஹாங்! என் நம்பர் அவங்ககிட்ட இருக்கு சிஸ்டர். ஆனால், ஒருத்தருக்கொருத்தர் கால், மெசேஜ் பண்ணிப் பேசினதே இல்லை!” என விளக்கத்துடன் உரைத்தான் ஸ்வரூபன்.

“அச்சோ! இவ்வளவு எக்ஸ்பிளனேஷன் எதுக்கு ங்க? இனிமேல் நீங்க கால் செஞ்சுப் பேசுங்க! அதுக்கு எந்த ரெஸ்ட்ரிக்ஷனும் இல்லை” என்று கூறிச் சிரித்தாள் ருத்ராக்ஷியின் அண்ணி.

அதைக் கேட்டதும், வருங்கால கணவன், மனைவியாகப் போகிறவர்கள் இருவரும் வெட்கத்தில் முகம் சிவக்க,

“மஹா! அவங்களை சீண்டாதே!”என்று தன்னுடைய மனைவியை அதட்டினான் காஷ்மீரன்.

“விடுங்க தம்பி. அந்தப் பொண்ணு தான் நல்லா கலகலப்பாகப் பேசுறா!” என்று அவளுக்காகப் பரிந்து பேசினார் கவிபாரதி.

“பார்த்தீங்களா?” என்பதைப் போலத் தன் கணவனுக்கு வக்கனைக் காண்பித்தாள் மஹாபத்ரா.

“பார்றா! நீ இவங்களுக்கும் ஐஸ் வச்சிட்டியா?” என்று அவளைக் கிண்டல் செய்தான் அவளுடைய கணவன்.

“ஹூம்! ஐஸ் எல்லாம் வைக்கலை ங்க! எனக்கு அவங்க உண்மையாகவே சப்போர்ட் பண்றாங்க” என்று அவனிடம் சடைத்துக் கொண்டாள் காஷ்மீரனின் மனைவி.

“ஸ்வரூபா! நீ என் பொண்ணு கிட்ட ஏதாவது பேசனுமா?” எனத் தனது வருங்கால மருமகனிடம் வினவினார் சந்திரதேவ்.

தன்னவளிடம் பேசுவதற்கு அவனுக்குள்ளும் ஆயிரமாயிரம் விஷயங்கள் இருந்தது. ஆனால், அவளிடம் இப்போது அவற்றையெல்லாம் பகிரும் நோக்கம் அவனுக்கு இல்லை.

எனவே,”இல்லை ங்க!” என்று பட்டென்று போட்டுடைத்து விட்டான் ஸ்வரூபன்.

அவனது பதிலைக் கேட்டவுடன், ‘ஏன்?’ என்ற கேள்வி தனக்குள் எழுந்தாலும், அதை இப்போது கேட்க வேண்டாம் என்று அமைதியாக இருந்து விட்டாள் ருத்ராக்ஷி.

அங்கிருந்த அனைவரும் அவனை வியப்புடன் பார்த்து விட்டு,”அப்போ நாம கிளம்பலாமா?” என்றார் சந்திரதேவ்.

“சரிப்பா” என்றவளோ, எழுந்து சென்று கவிபாரதி மற்றும் மிருதுளாவை அணைத்து விடுவித்து விட்டு,

அப்படியே வித்யாதரனிடமும்,”நாங்க கிளம்புறோம் ண்ணா” எனவும்,

“ஓகே ம்மா. பார்த்துப் போயிட்டு வாங்க” என்று அவரும் அவளிடம் அறிவுறுத்தினார்.

அதன் பின்னர், ஸ்வரூபனிடம் வந்தவளோ,”நான் போயிட்டு வர்றேன் ங்க!” என அவனிடம் தன் கோப முகத்தைக் காட்டிக் கூறினாள் ருத்ராக்ஷி.

அது எதற்காக? என்று அப்போது குழம்பினாலும்,”சரிங்க. பார்த்துப் பத்திரம்!” என்று அவளிடம் இன்முகமாகவே உரைத்தான் அவளவன்.

“நீ இல்லாமல் நல்லாவே இருக்காது தான்! ஆனால் என்னப் பண்றது? நீ உன்னோட குடும்பத்துக் கூடேயும் இருக்கனும்ல? அதனால், சந்தோஷமாகப் போயிட்டு வா டா ம்மா!” என்று ருத்ராக்ஷியிடம் கூறினார் கவிபாரதி.

அதற்குப் பிறகு, மற்றவர்களும் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டார்கள்.

தான் எங்கே, எப்படி இருந்தாலும், மனம் முழுவதும் இங்கேயே தான் இருக்கும் என்பதைப் போன்றதொரு காதல் பார்வையைத் தன்னை நோக்கி வீசி விட்டுச் செல்லும் பெண்ணவளை இமைக்காமல் பார்த்தான் ஸ்வரூபன்.

ஆனால், இந்த தடவையோ, தனது நடையின் வேகத்தைக் குறைத்து விட்டு அவனைத் திரும்பிப் பார்வையால் வருடி விட்டே சென்று காரில் ஏறினாள் ருத்ராக்ஷி.

அவர்கள் சென்றதும், பூ வைக்கும் சடங்கு எப்போது வரும்? என்று இலவு காத்தக் கிளி போலக் காத்துக் கிடப்பது தனது முறை என்பதைப் புரிந்து அந்த தற்காலிக பிரிவை எதிர் கொள்ளத் துணிந்து விட்டான் ஸ்வரூபன்.

- தொடரும்
 
ருத்ராக்ஷியோட பேச ஒன்றும் இல்லையா அடேயப்பா இன்னா மா புழுகுற.
அது என்ன கல்யாணம் நல்ல விசயம் நடக்கும் போது அபசகுனமாக நினைக்கிறப்பா ஸ்வரூபா
 
ருத்ராக்ஷியோட பேச ஒன்றும் இல்லையா அடேயப்பா இன்னா மா புழுகுற.
அது என்ன கல்யாணம் நல்ல விசயம் நடக்கும் போது அபசகுனமாக நினைக்கிறப்பா ஸ்வரூபா
Haha.. adhuku oru reason iruku sis... Adhan adutha ud la solre. Thank you so much ❤️
 
Top