Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 87

Advertisement

SHALU shalu

Well-known member
Member
தனது அன்னை இவ்வாறு கேட்டதும், இப்போது முறைப்பது அவரது மகளுடைய முறையாயிற்று.

“ம்மா! அவங்க எப்போ இருந்து, அந்த ஊரிலேயே இருக்காங்கன்னு, நான் உங்ககிட்ட சொல்லி இருக்கேன் தான? அப்படியிருந்தும், உங்களுக்கு ஏன் இந்தச் சந்தேகம்?” என்று அவரிடம் கேட்டாள் மஹாபத்ரா.

“அதை எல்லாத்தையும் ஞாபகம் வச்சிருக்கேன் டி! ஆனாலும், இந்தச் சந்தேகம் எனக்கு வருதே!” என்றார் கனகரூபிணி.

“சரிம்மா. இப்போ நல்லா கேட்டுக்கோங்க. அந்த ஊரில் காலம் பூரா தங்கி இருக்கிறதுல ருத்ராக்ஷிக்கு எந்தக் கஷ்டமும் இருக்காது. ஏன்னா, அவங்க அங்கே இருந்த இவ்வளவு வருஷத்தில், அந்த ஊர் மக்களை நினைச்சு எந்தவொரு சங்கடமோ, பயமோ அவங்களுக்கு ஃபீல் ஆனதே இல்லையாம். அதனாலேயும், அவங்களோட அந்த மெழுகுவர்த்திகள் செய்றதை சொல்லிக் கொடுக்கிற கிளாஸூம் அங்கே இருக்கிறதாலேயும், அவங்களுக்கு அந்த ஊரில் வாழ்றதுல ஒரு குறையும் இருக்காது. அவங்களுக்குக் கிடைக்கப் போறது எல்லாமே, மன நிம்மதியும், சந்தோஷமும் மட்டும் தான் ம்மா” என்று உறுதியாக உரைத்தாள் அவரது மகள்.

“அப்போ சரி டி. பொண்ணு நல்லா இருந்தால் போதும். நான் எதுவும் கெட்ட விதத்தில் இதை உங்கிட்ட கேட்கலை!” என்று அவளிடம் சொல்லவும்,

“நானும் அப்படி எடுத்துக்கலை ம்மா! நீங்க அவங்க மேல இருந்த அக்கறையில் தான் கேட்டீங்கன்னு எனக்குத் தெரியும்” என்று கூறி அவருக்குத் தெளிவுபடுத்தினாள் மஹாபத்ரா.

அதில் தானும் தெளிவடைந்து விட்டார் கனகரூபிணி.

அதற்குப் பிறகு, காஷ்மீரன் மற்றும் சந்திரதேவ்வும் தத்தமது அலுவலகங்களுக்குச் சென்று வருவதும், மஹாபத்ராவும் தான் வேலை பார்க்கும் பள்ளிக்குப் போய் வருவதுமாக நாட்கள் வேகமாகச் சென்று விட,

எனவே, ஆடி மாதமும் சிறப்பாக முடிவடைந்து விட்டிருந்தது.

அன்றைய நன்னாளில், தனது மனையாளைக் காணத் துரிதமாகவே கிளம்பிச் சென்றிருந்தான் காஷ்மீரன்.

அவனை வரவேற்ற மஹாபத்ராவின் பெற்றோரோ, தங்களது மாப்பிள்ளை மற்றும் அவனது தந்தை மற்றும் தங்கையைப் பற்றிய விசாரணையை முடித்து விட்டு,

”அடுத்து உங்கத் தங்கச்சியோட கல்யாணத்துக்கு எங்களைக் கூப்பிட வருவீங்க போலவே மாப்பிள்ளை” என்று அவனிடம் சொல்லிப் புன்னகைத்தனர்.

“ஹாஹா! ஆமாம் அத்தை, மாமா. மஹா, எல்லாத்தையும் சொல்லிட்டாளோ?” என்று அறையிலிருந்து வெளிப்பட்டத் தன் மனைவியை விழி அகலாமல் பார்த்துக் கொண்டே அவர்களிடம் கேட்டான் காஷ்மீரன்.

“அவ தான் சொன்னா மாப்பிள்ளை” என்றுரைத்தார் கனகரூபிணி.

“இப்படி வா” என மஹாபத்ராவைத் தன்னுடன் இருத்திக் கொண்டான் அவளது கணவன்.

“இது நம்ம வீட்டுக் கல்யாணம் ப்பா! எல்லா ஏற்பாடுகளிலும் எங்கப் பங்கு இல்லாமல் இருக்காது! எல்லாரும் சேர்ந்து சூப்பராக ருத்ரா பொண்ணோட நடத்திடலாம்!” என்று அவனிடம் உற்சாகமாக சொன்னார் பிரியரஞ்சன்.

“அப்பறம், நீங்க ரெண்டு பேரும் தானே முன்னே நின்னு நடத்திக் கொடுக்கனும்” என்று கூறிச் சிரித்தான் காஷ்மீரன்.

அவனது தங்கையின் திருமண விஷயத்தைப் பற்றித் தன்னுடைய பெற்றோரிடம் சொன்னதற்காகத் தன்னுடைய கணவன் தன் மேல் கோபப்படாமல் இப்படி பேசிச் சிரிப்பதைக் கண்டு வியந்தவளோ,

அவனுக்கும், தனக்கும் எப்போது திருமணம் நடந்து முடிந்ததோ, அன்றிலிருந்து தன்னை அவனுடைய குடும்பத்தில் ஒருத்தியாக எப்போதோ ஏற்றுக் கொண்டு விட்டான் என்பதை அவள் அடிக்கடி மறந்து போய் விடுவதை எண்ணி அசடு வழிந்தாள் மஹாபத்ரா.

“நீ என்ன இப்படி திருதிருன்னு முழிச்சிட்டு இருக்கிற?” என்று அவளிடம் வினவினார் கனகரூபிணி.

“ஒன்னும் இல்லை ம்மா” என்று அவரிடம் சொல்லி சமாளித்து விட்டாள் அவரது மகள்.

அதன் பின்னர், எப்படி ஆடி ஒன்றின் போது சகல மரியாதைகளுடன் தங்களது மகள் மற்றும் மருமகனை வீட்டிற்கு அழைத்தார்களோ, அதே முறையைச் செய்து வழியனுப்பி வைக்கத் தொடங்கினார்கள் பிரியரஞ்சன் மற்றும் கனகரூபிணி.

இப்போதும் காஷ்மீரன் மற்றும் மஹாபத்ராவிற்குப் புத்தம் புதிய உடைகளைத் தட்டில் வைத்துக் கொடுத்தவர்களோ, தங்களுடைய மகளைப் பிரிவதால் அவர்கள் இருவருக்கும் கண்ணீர் கசிந்தது.

அந்தக் காட்சியோ, புது தம்பதியின் நெஞ்சை உருக்கச் செய்யவும்,”ப்பா! ம்மா!” என்று அவர்களை ஆதூரத்துடனும், நெகிழ்ச்சியுடனும் அணைத்துக் கொண்டு விசும்பினாள் அவர்களது செல்ல மகள்.

இவர்கள் மூவருடைய அழுகையைக் கண்டதும், ஒருவித சங்கடத்தில் நெளிந்தான் காஷ்மீரன்.

அதைப் பார்த்து விட்டப் பிரியரஞ்சனோ,”ம்மா! மாப்பிள்ளைக்குச் சங்கடமாக இருக்குப் போல. அழுகையை நிறுத்துங்க” என்று தன்னுடைய மனைவி மற்றும் மகளிடம் அறிவுறுத்தினார்.

அதனால் தங்களுடைய விழிகளைத் துடைத்துக் கொண்டு,”சந்தோஷமாக இருக்கனும்” மகளிடம் சொல்ல,

அப்பொழுது, காஷ்மீரன் மஹாபத்ராவும் வீட்டிற்குச் செல்லும் நேரம் வந்து விட்டதால், இருவரும் இணைந்து பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கி எழுந்தனர்.

அவர்களைப் புன்னகை முகமாகவே வழியனுப்பி வைத்து விட்டார்கள் பிரியரஞ்சன் மற்றும் கனகரூபிணி.

காஷ்மீரனும், அவனது மனைவி மஹாபத்ராவும், வீட்டிற்குள் நுழைந்ததும், அவர்களைப் பார்த்து,”வாடா, வா ம்மா. நல்லா இருக்கியா?” என்று கனிவாய் வினவினார் சந்திரதேவ்.

“நல்லா இருக்கேன் மாமா. நீங்க எப்படி இருக்கீங்க?” என்றாள் அவருடைய மருமகள்.

“சரிடா ம்மா” என்றவரோ, அவர்களுக்குக் குடிக்கக் காஃபி கொண்டு வரச் சொல்லி விட்ட சந்திரதேவ்விடமும், தனது கணவன் காஷ்மீரனிடமும் தன் வீட்டிலும், தான் வேலை செய்யும் பள்ளியிலும் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டாள் மஹாபத்ரா.

அதன் பின், அவரிடம் விடைபெற்றுக் கொண்டு அவளும், அவளது மணாளனும் தங்களது அறைக்குச் சென்று விட்டார்கள்.

அனைத்தும் சுமூகமாக நடந்து கொண்டிருந்ததால், ருத்ராக்ஷியின் திருமணப் பேச்சு வார்த்தையை நடத்த, எப்போது சொல்லலாம்? என்று மூவரும் ஆகச் சேர்ந்து கலந்துரையாடி முடித்து இருந்தனர்.

அதே மாதிரி, இந்த விஷயத்தை ருத்ராக்ஷிக்குத் தெரிவித்து விட்டு, ஸ்வரூபனின் அன்னையான கவிபாரதியிடம் பேசினார் சந்திரதேவ்.

ஒரு சில சமயங்களில், அவருக்குப் பதிலாக, மஹாபத்ராவே, காஷ்மீரன் மற்றும் சந்திரதேவ்வின் சார்பாக, அவளே எல்லாவற்றையும் பேசி முடித்து விட்டிருந்த படியால், அது அனைவருக்குமே நன்மையாக இருந்தது.

தாங்கள் ஊருக்குச் செல்ல வேண்டிய தினத்தை முடிவு செய்து விட்டு, அதை தனது தந்தை மற்றும் தாயிடம் உரைத்தாள் மஹாபத்ரா.

அவர்களோ,”நீங்க மூனு பேரும் போய் விஷயத்தை நல்லபடியாகப் பேசி முடிச்சிட்டு வாங்க டா” எனத் தங்கள் மகளுக்கு அறிவுரை வழங்கினர் பிரியரஞ்சன் மற்றும் கனகரூபிணி.

ஆகவே, அந்த ஊரில் இருப்பவர்களுக்குப் பரிசுகளை வாங்கிக் கொண்டு சந்திரதேவ், காஷ்மீரன் மற்றும் மஹாபத்ராவும் தங்கள் வீட்டுப் பெண்ணான ருத்ராக்ஷியின் திருமணப் பேச்சு வார்த்தையை நடத்துவதற்காக கிளம்பத் தயாராகி விட்டார்கள்.

- தொடரும்
 
Top